Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
மருதமலை முருகன் கோயிலில் திட்ட வடிவ வரைபட மாற்றத்தால் ‘லிஃப்ட்’ கட்டுமானப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
டி.ஜி.ரகுபதி
கோவை
2024-02-03 06:13:00
கோவை: கோவை மருதமலை முருகன் கோயிலில் ‘லிஃப்ட்’ அமைக்கும் பணிகள், திட்ட வரைபட மாற்றத்தால் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டு பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். மலையின் மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து 150 படிக்கட்டுகளை கடந்து 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, முதியவர்களும், பெண்களும் எளிதாக கோயிலுக்கு வந்து செல்ல ஏதுவாக மலையின் மேல் பகுதியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வகையில் ‘லிஃப்ட்’ (மின்தூக்கி) அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி, வாகன நிறுத்தகம் அருகே 2 லிஃப்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ‘லிஃப்ட்’டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லலாம். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு ‘லிஃப்ட்’ மேலே செல்லும். பின்னர் அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டுப் பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, அடுத்த ‘லிஃப்ட்’டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோயிலுக்கு செல்லலாம். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் மருதமலையில் ரூ.5.20 கோடி மதிப்பில் ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி, கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது. சில மாதங்கள் பணி மேற்கொள்ளப்பட்ட சூழலில், கடந்த 3 மாதங்களாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘‘மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணியை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ராஜகோபுரத்தை ஒட்டிய பகுதியில் ‘லிஃப்ட்’ அமைக்க திட்டமிட்ட இடத்தில் இருந்த கற்களை அகற்றி ‘லிஃப்ட்’ அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை 6.15 மீட்டர் உயரத்துக்கு கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. முதலில் இருந்த திட்ட வரைபடத்தின்படி 21.75 மீட்டர் உயரத்துக்கு மொத்தமாக ‘லிஃப்ட்’ தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது மேற்கொண்ட அளவைக்கும், டிஜிட்டல் மீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளவைக்கும் இடையே சில வேறுபாடுகள் இருந்தன. இதனால் திட்ட வரைபடத்தில் உயரம் மொத்தம் 23.10 மீட்டராக இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. கீழ்தளத்தில் உள்ள முதலிரண்டு ‘லிஃப்ட்’க்கு தளங்கள் வழக்கம்போல இருக்கும். அங்கிருந்து சில மீட்டர் நடந்து அடுத்த ‘லிஃப்ட்’க்கு செல்லும் இடத்தில், லிஃப்ட் அமைக்கும் இடம் சற்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி, 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.
திருவள்ளூர் | அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் பதவி நீக்கம்
செய்திப்பிரிவு
திருவள்ளூர்
2024-02-03 06:11:00
திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் பி.சுனிதா. இவர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் விதிகளை மீறி பல்வேறு தலைப்புகளின் கீழ் பெறப்படவேண்டிய வரி வருவாய் இனங்களை ஊராட்சிக்கு முறையாக ஈட்டாமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் செலவினம் மேற்கொண்டுள்ளார். அதன் மூலம், பி.சுனிதா ஊராட்சி நிதிக்கு ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171 இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இந்த காரணங்களுக்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பி.சுனிதாவை 31.01.2024 முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அதே போல், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் து. கீதா. இவர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளை மீறி கட்டிட வரைப்பட அனுமதி வழங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார். மேலும், து.கீதா முறையாக ஊராட்சி கூட்டங்களை கூட்டாமல், முறையற்ற வகையில் தீர்மானம் இயற்றியுள்ளார். ஊராட்சி கணக்குக்கு வரவேண்டிய தொகையை காலதாமதமாக செலுத்தியுள்ளார். இந்த காரணங்களுக்காக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் து.கீதாவை 31.01.2024 முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.சுனிதா பாமகவை சேர்ந்தவர் என்பதும், து.கீதா அதிமுகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பணியைத் தொடங்கியது பாஜக: தூத்துக்குடியில் தேர்தல் அலுவலகம் திறப்பு
செய்திப்பிரிவு
தூத்துக்குடி
2024-02-03 06:10:00
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தேர்தலுக்கான குழுக்கள் அமைப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று பாஜக தேர்தலைச் சந்தித்தது. இந்த முறை அந்த கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியுள்ளது. இதனால் மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வரும் வேளையில், திருநெல்வேலியில் கட்சி அலுவலகத்தை முதலாவதாக பாஜக திறந்தது. அதேபோல், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளை பாஜகவினர் உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர். பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகளை ஏற்கெனவே முடித்துள்ள பாஜக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை தூத்துக்குடி மச்சாது நகரில் தொடங்கியுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா அதனைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பாஜக மாவட்டத் தலைவர்கள் சித்ராங்கதன், வெங்கடேசன் சென்னகேசவன், தொகுதி துணை பொறுப்பாளர் விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்த முறையும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 06:08:00
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டிடம், மகளிருக்கான உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். பொதுப்பணித் துறையில் முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகமும், சென்னை மண் டல தலைமைப் பொறியாளர் அலு வலகமும் ஒரே கட்டிடத்தில் செயல் பட்டு வந்தது. இதில், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டது. ரூ.23 கோடியில் கட்டிடம்: இதையடுத்து, புதிய அலுவல கக் கட்டிடம் ரூ.23.05 கோடியில், 3 தளங்களுடன் 1,04,049 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தலைமைப் பொறியாளர் அறை மற்றும் அலுவலகங்கள், கோட்டப் பொறியாளர் அலுவல கங்களும், 2-ம் தளத்தில் தலைமை கட்டிடக் கலைஞர் அறை மற்றும் அலுவலகங்கள், நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம், மூன்றாம் தளத் தில் கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) அறை மற்றும் அலுவலகங்கள், கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டிட கட்டுமான உப கோட்ட அலுவலகங்கள் அமைந் துள்ளன. இந்தக் கட்டிடத்தை நேற்று, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். மேலும், பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப் பட்டுள்ள, மகளிருக்கான உணவுக் கூடத்தையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். இதுதவிர, இந்த வளாகத்தில் புதிதாக 10.5 அடிக்கு, 6.5 அடி அளவிலான மின்னணு திரையையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். இந்த மின்னணு திரை மூலம் பொதுப்பணித் துறை யால் மேற்கொள்ளப்படும் அலு வலகக் கட்டிடங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசுப் பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், நினை வகங்கள் போன்ற அரசு கட்டிட பணிகள் குறித்தவிவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும். ரூ.6.80 கோடியில் உபகரணங்கள்: தொடர்ந்து, சென்னை தரமணி பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலையும் அமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். துறையின் தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களுக்கு 20 வகையான ஆய்வக உபகரணங்கள், 20 வகையான கள ஆய்வு உபகரணங்கள் என 40 வகையான சிவில் உபகரணங் கள் மற்றும் 8 வகையான மின் உப கரணங்கள் ரூ.6.80 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களின் 45 வகையான பண்புகளை கண்டறிந்து, தரத்தை உறுதி செய்ய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் பயன்பாட்டுக்காக ஆய்வக உபகரணங்களை, தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்களிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறைச் செயலர் பி.சந்திர மோகன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு இராஜசேகரன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நான்காம் கட்ட யுவசங்கம் திட்டத்தில் ஐஐடி உட்பட 22 நிறுவனங்கள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழு தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 06:06:00
சென்னை: யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்தியாவின் பல்வேறு மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே கலாச்சார பிணைப்புகளை வளர்ப்பதற்கும், தேசிய ஒருங்கிணைப்பை ஊக்கு விப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட யுவ சங்கம் சுற்றுலாக்கள் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவசங்கம் திட்டத்தின் மூலம் இதுவரை 3 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், 69 கலாச்சார சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் யுவசங்கம் 4-ம் கட்டத்துக்குள் தற்போது நுழைந்திருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 22 உயர்கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்துதிருச்சி ஐஐஐடி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்கள் தங்களதுமாணவர்களையும், அந்தந்தப்பகுதியில் உள்ள இளைஞர் களையும் https://ebsb. aicte.india. org/ என்ற யுவசங்கத்தின் இணைய தளம் மூலம் கலாச்சார மற்றும் கல்வி சுற்றுலாக்களில் பங்கேற்கு மாறு ஊக்குவிக்க வேண்டும். https://drive.google.com/drive/u/0/folders/18fgAfxVSsfJdZX9MQiJ28LfYSSfJZCIo இணையதளத்தில் வழிகாட்டுதல்களை ஆராய்ந்து சுற்றுப் பயணங்களை திட்டமிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பேருந்து பயணிகளுக்கு பரிசு: குலுக்கல் முறையில் 3 பேரை தேர்ந்தெடுத்தார் அமைச்சர்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 06:00:00
சென்னை: தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க, tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்து வார நாட்களில் (பண்டிகை நாட்கள், வெள்ளி,சனி, ஞாயிறு நீங்கலாக) பயணிப்பவர்களில் 3 பேரை தேர்வு செய்து, தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வார நாட்களில் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில்,வார நாட்களில் விரைவு பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 3 பேரை கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தேர்ந்தெடுத்தார். அதன்படி, இசக்கி முருகன், சீதா,ஆரிப் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அமைச்சர், ‘‘அரசு விரைவு பேருந்து சேவையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். தேர்வானவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்ற ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம்: அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 05:33:00
சென்னை: புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக ‘அன்மாஸ்க் கேன்சர்’ ((புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குதல்) திட்டத்தை சென்னை தரமணி யில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனையின் மார்பகம், தலை, கழுத்துபிரிவு இயக்குநர் சப்னா நாங்கியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகவும், சமூகத்துக்குள் புற்றுநோயாளிகள் மீது புரிதலை வளர்ப்பதற்காகவும், புற்றுநோயாளிகள் மனரீதியாக பாதிக்கப் படுவதைத் தவிர்க்கவும் ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தங்களது வாழ்க்கை முறை, குடும்பத்தின் ஆதரவு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், புற்று நோயில் இருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகு பாடு, உதாசீனம், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை நீக்கி, மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தில் கவனம் செலுத்த, இத்திட்டம் பெரிதும் உதவும். இதற்காக, https://www.apollohospitals.com/cancer-treatment-centres/unmask-cancer/ என்ற இணையதளத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்ணா நினைவு நாள் இன்று: மரியாதை செலுத்த புதிய ஏற்பாடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 05:30:00
சென்னை: அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடம் இடையில் உள்ள பகுதியில்அண்ணாவின் நினைவு தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இன்று (பிப்.3) நடைபெறவுள்ள அண்ணாவின் 55-வது நினைவு நாளைமுன்னிட்டு, அண்ணா மற்றும் எம்ஜிஆரின் நினைவிடத்துக்கு இடையில் அமைந்துள்ளபகுதியில் அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், அண்ணாவுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தும்படி அரசியல் கட்சிகள், அரசியல்தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழநியில் தொல்லியல் ஆய்வாளர்களால் 14-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
செய்திப்பிரிவு
பழநி
2024-02-03 05:27:00
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 14-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த செப்பேட்டை பழநியைச் சேர்ந்த திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம், அவரது முன்னோர் பாதுகாத்து வந்துள்ளனர். ஏறத்தாழ 3 கிலோ எடையும், 49 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் உடைய இச்செப்பேடு, ஆயிர வைசியர்சமூகம், தம் குடிகளின் கெதி மோட்சத்துக்காக பழநிமலை முருகனுக்கு திருமஞ்சனம், வில்வ அர்ச்சனை, தினசரி பூஜை செய்ய வேண்டி, பழநியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த திருமஞ்சனக் கட்டளையை விரிவாகக் கூறுகிறது. இந்த செப்பேடு கி.பி.14-ம்நூற்றாண்டில் (1,363-ம் ஆண்டு) தை மாதம் 25-ம்தேதி, தைப்பூச நாளில் பெரியநாயகியம்மன் சந்நிதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது. பழநி ஸ்தானீகம், சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக் கவுண்டன் ஆகிய நபர்களை சாட்சிகளாக வைத்து எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டில் 518 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி, முருகன், செவ்வந்தி பண்டாரம் மற்றும் ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. அதில் ஆயிர வைசியரின் பிறப்பும், பெயர் காரணமும் புராண கதையுடன் சொல்லப்படுகிறது. மேலும், செவ்வந்தி பண்டாரத்துக்கு அளிக்க வேண்டிய திருமஞ்சனக் கட்டளைக்கு, திருமணம், காதுகுத்து, சீமந்தம், காசு கடை, ஜவுளிக் கடை, எண்ணெய் கடை செக்கு ஆகியவை மூலம் வசூல் செய்ய வேண்டிய வரிப் பணத்தின் அளவுபற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது. மொத்தம் 239 வரிகளில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.
சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம்; குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை நடவடிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 05:16:00
சென்னை: சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் குவாரி அதிபர்களின் ரூ.130.60 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உள்ளிட்ட34 இடங்களில் அமலாக்கத் துறைகடந்த 12-ம் தேதி சோதனை நடத்தியது. குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் தொடங்கி, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் அமலாக்கத் துறை விரிவான ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், மாநில அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட மணல் அளவைக் காட்டிலும், அதிக அளவு மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குவாரிகளில் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ரூ.128.34 கோடி மதிப்பிலான 209 இயந்திரங்கள், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோரது 35 வங்கிக் கணக்குகளில் ரூ.2.25 கோடி என மொத்தம் ரூ.130.60 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி இருப்பதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆஜராக அவகாசம்: உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ உத்தரவாதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 05:12:00
சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு பிறப்பித்த சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிப்.5-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகஅவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ: துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்நிலையில், என்ஐஏ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளரான இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின்செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், நாம் தமிழர் கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்க கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால், இதற்கு உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, சட்டம் ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்தவொரு தேச விரோத, சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எனவே, என்ஐஏ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆகியோர் ஆஜராகி முறையீடு செய்தனர். அப்போது, ‘‘வெளியூரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியுள்ளனர். சில இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளனர். எனவே இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரினர். அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மனுதாரர் தனதுமனுவில் வரும் பிப்.5-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியுள்ளார். தற்போதையசூழலில் மனுதாரரை விசாரணைக்குத்தான் அழைத்துள்ளோம், கைது செய்யும் நோக்கம் இல்லை. அவர் பிப்.5-ல் விசாரணைக்கு ஆஜராகலாம். மனுதாரருக்கு எதிராக சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உத்தரவாதம் அளித்தார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 05:07:00
சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகன் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற இச்சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், இருசக்கர வாகனத்தில் வந்த சேலம்செவ்வாய்பேட்டையை சேர்ந்த பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்களிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இருவரையும்கைது செய்தனர். மேலும், அவர்களது கூட்டாளி அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி ’க்யூ’ பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தேச விரோதச் செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு (தேசியபுலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், இந்த வழக்குத் தொடர்பாக சிறையில் இருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை 7 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், இருவரும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு இணையான ஒரு அமைப்பை நிறுவி ஆயுதப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதும் என்ஐஏ விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் தமிழகத்துக்கு சட்ட விரோதமாக நிதி வந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இச்சோதனை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பாலாஜி (33), திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பிரபல யூ-டியூபர் சாட்டை முருகன்வீடு, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு, கோயம்புத்தூர் காளப்பட்டி அருகே உள்ள சரஸ்வதி கார்டன் பகுதியைச் சேர்ந்த முருகன் வீடு, தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சேர்ந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வீடு,சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் விஷ்ணு ஆகியோர் வீடுகளில் அதிகாலை 4 மணி தொடங்கி பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்ட விரோதமான புத்தகங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாட்டை முருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், விஷ்ணு ஆகியோர் விசாரணைக்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். இதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் சம்மன் வழங்கினர். நானே ஆஜராகிறேன்: இந்நிலையில், என்ஐஏ சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியபோது, ‘‘தேர்தல் நேரம் என்பதால் அச்சுறுத்தி பார்க்கின்றனர். பார்க்கப்போனால், என்னிடம்தான் என்ஐஏ விசாரணை நடத்தியிருக்க வேண்டும். 5-ம் தேதி நானே ஆஜராகிறேன். மொத்தமாக என்னிடம் விசாரிக்கட்டும்’’ என்றார்.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கார்கே பிப்.13-ல் சென்னை வருகை: ஸ்டாலினை சந்திக்கிறார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 04:57:00
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்.13-ம்தேதி சென்னை வருகிறார். அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை முதன்மையாக கொண்டு ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தொகுதி உடன்பாடு தொடர்பாக பேசி இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இண்டியா கூட்டணியில் தமிழகத்தை பொருத்தவரை, திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்துள்ளன. திமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன், கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 9-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் 13 தொகுதிகள் வரைகேட்பதாக கூறப்படுகிறது. இந்த முறை மநீம கட்சியை கூட்டணியில் சேர்ப்பதாலும், கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாலும் தமிழகத்தில் 7, புதுச்சேரியில் 1என 8 தொகுதிகளை தருவதாக திமுக தெரிவித்துள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே 13-ம் தேதிதமிழகம் வருகிறார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், தொடர்ந்து, முதல்வர்ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, போட்டியிடும் தொகுதிகள் பேசி முடிவெடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்: 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 04:50:00
சென்னை: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 25-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், விஜய் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், கட்சித் தலைவராக அவரே செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று பதிவு செய்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்சியின் தலைவர் என்ற முறையில்,நடிகர் விஜய் தனது முதல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம்என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. என்னால் முடிந்த வரை, தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பது எனது நீண்டகால எண்ணம். ‘எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படியே, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் எனது தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவை தேர்தல்முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும். இடைப்பட்ட காலத்தில், கட்சி தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். கடந்த 25-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவர், தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முறைப்படி ஒப்புதல்வழங்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் நாம் போட்டியிடுவது இல்லை என்றும், இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் நம் ஆதரவுஇல்லை என்றும் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார். விஜய் புதிய கட்சி தொடங்கியதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நாளை முக்கிய ஆலோசனை: புதிய கட்சி உதயமானதை தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுடன் சென்னையில் விஜய் நாளை (பிப்.4) ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் நகர்வுகளை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. சினிமாவில் இருந்து விலக முடிவு: 'அரசியல் எனது பொழுதுபோக்கு அல்ல. அது என் வேட்கை. கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்' என்று விஜய் தெரிவித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியல்: தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1992-ல் வெளியான 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய். பல வெற்றி படங்களில் நடித்த அவர், அவ்வப்போது தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். பின்னர், நற்பணி மன்றத்தை இயக்கமாக மாற்றினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, 2011-ல் நாகப்பட்டினத்தில் பொதுக் கூட்டம் கூட்டினார் விஜய். இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டது, திரையுலகில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் களைகட்டிய மஞ்சு விரட்டு: பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்
என்.கணேஷ்ராஜ்
மூணாறு
2024-02-02 21:38:00
மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தமிழர்கள் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். கேரளாவைப் பொறுத்தளவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் அம்மாநில பாரம்பரியப்படி படகுப்போட்டி, கதகளி, களரி மோகினியாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் தமிழர்கள் தங்கள் பகுதியில் தங்களின் பூர்வீக நிகழ்வுகளை முக்கிய தினங்களில் கொண்டாடி வருகின்றனர். இதன்படி தமிழக கேரள எல்லையான மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காளைகளின் கொம்புகளை அலங்கரித்து ஒவ்வொன்றாக திடலுக்குள் அனுப்பினர். பலரும் காளைகளை தழுவி கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு டோக்கன்களை எடுக்க முயன்றனர். இந்த முயற்சியில் சிலர் வெற்றியும், தோல்வியும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர்.தொடர்ந்து ஒவ்வொரு காளையாக திடலுக்குள் அனுப்பப்பட்டது. வீடுகளின் மேல்தளத்தில் இருந்து ஏராளமானோர் இதனை கண்டு ரசித்தனர்.வட்டவடை மட்டுமல்லாது கோவிலூர், கோட்டாகம்பூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த தமிழர்கள் கூறுகையில், “பல தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இதுபோன்ற பூர்வீக வீரவிளையாட்டு, வழிபாடு, திருவிழாக்களையும் கொண்டாடி வருகிறோம். கேரளாமாநிலத்தில் இங்கு மட்டுமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அருகில் உள்ள தமிழர்கள் பலரும் இதை காண ஆர்வமுடன் வருகிறார்கள்” என்றனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை: என்ஐஏ தகவல் @ உயர் நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-02 21:33:00
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்துக்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியது. அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்நிலையில், என்ஐஏ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முடக்கும் வகையிலும், கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. என்ஐஏ-வின் விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். எனவே, அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்த தேசவிரோத, சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எனவே, என்ஐஏ அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெஃலிக்ஸ் ஆகியோர், "கட்சி நிர்வாகிகளுக்கு காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அனுப்பிவிட்டு சென்னையில் வந்து இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறுகின்றனர். இது சட்ட விதி மீறல். சில இடங்களில் என்ஐஏ சோதனையும் நடத்தியுள்ளனர். எனவே, சம்மன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டனர். அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “மனுதாரர் திங்கள்கிழமை 5-ம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், கைது நடவடிக்கை எதுவும் இருக்காது. சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
நடிகர் விஜய்யின் ‘2026’ இலக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் பார்வையும்
செய்திப்பிரிவு
வரவேற்பு
2024-02-02 21:12:00
‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எனது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எனது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசியல் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதையொட்டிய அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய். அத்துடன், ‘என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள, எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே, அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலக்கு 2026: மேலும் அவர், ‘வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் எமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான எம் அரசியல் பயணம் தொடங்கும் இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று தனது இலக்கு ‘2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்’தான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் நடிகர் விஜய். அண்ணாமலை வரவேற்பு: “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி: "மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உதயநிதி பாராட்டு: “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முற்போக்கு சிந்தனை: திருமாவளவன் - “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் கருத்து: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழல், மதவாதம் பற்றி விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். விஜய் கோட்பாடு என்ன? - சீமான்: “கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. முதலில் என்ன கோட்பாட்டை விஜய் முன்னிறுத்த போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகர் தனது ரசிகர்களின் வாக்கை மட்டும் பெற்று அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும். விஜய், மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல ஒரே ஆண்டில் முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டி வரும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஆளுநர் தமிழிசை: “தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நிறைய தலைவர்கள் வரவேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
“மக்களை பிளவுப்படுத்தும் அரசியலுக்கு எதிரான விஜய்யின் கருத்தால் மகிழ்ச்சி” - கே.எஸ்.அழகிரி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 20:50:00
சென்னை: “மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திரைப்படத் துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
“நாம் தமிழர் கட்சியினரை அச்சுறுத்தவே என்ஐஏ சோதனை” - சீமான் சாடல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 20:41:00
சென்னை: "சட்டத்துக்கு எதிராகவோ, சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. உளவுத் துறை, காவல்துறை, அதற்கு மேல் "ரா" அமைப்பு இருக்கிறது. இதெல்லாம் வைத்து கண்காணித்துவிட்டு, இப்போது திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் அச்சுறுத்திப் பார்ப்பது போன்றதுதான்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் என்ஐஏ சோதனை நடத்தியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, மக்கள் பாதையில், ஜனநாயக வழியில் மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் பேரியக்கம். தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அவர்களிடமே சின்னம் ஒதுக்கக் கோரி போராடி வருகிறோம். மக்களுடன் நின்று தேர்தலை எதிர்கொண்டு வருகிறோம். இரண்டாவதாக, கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே, அரசு மற்றும் காவல் துறையின் ஒப்புதல் பெற்றுத்தான் நடத்தப்படுகிறது. சட்டத்துக்கு எதிராகவோ, சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் வகையிலான செயல்பாடுகள் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். உளவுத்துறை, காவல் துறை, அதற்கு மேல் "ரா" அமைப்பு இருக்கிறது. இதெல்லாம் வைத்து கண்காணித்துவிட்டு, இப்போது திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் அச்சுறுத்திப் பார்ப்பது போன்றதுதான். எல்டிடிஇ அமைப்புக்கு பணம் அனுப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெகு நாட்களாக அனைவரும் , எல்டிடிஇ அமைப்பிடம் இருந்து எனக்கு பணம் வருவதாக கூறிவந்தனர். ஆனால், இப்போது இவ்வாறு நாங்கள் பணம் கொடுக்கிறோமா என்று கேட்கின்றனர். எல்டிடிஇ எங்கே இருக்கிறது? எல்டிடிஇ-ஐ அழித்துவிட்டதாக நீங்கள்தான் ஊர் ஊராகச் சென்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். யூடியூப் வைத்து நிதி திரட்டி ஒரு இயக்கத்துக்கு காசு கொடுத்துவிட முடியுமா என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நியாயமாக அழைப்பாணை கொடுத்து என்னிடம்தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். எனக்கு தெரியாமல் என்னுடைய கட்சியில் என்ன நடக்கும்? கட்சியை வழிநடத்தி செல்வதும், கட்சிக்கு முழு பொறுப்பும் நான்தான். துரைமுருகனாவது ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார். இரண்டு, மூன்று முறை சிறைக்கு சென்றுவிட்டார். சிறியவர்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திப் பார்த்துள்ளனர். எனவே, நானே விசாரணைக்கு செல்ல இருக்கிறேன். காரணம் இவர்கள் அனைவருக்கும் பொறுப்பு நான்தான். எனவே, என்ஐஏ சோதனை அவசியமற்றது. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும். வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒன்றுதான். அவர்கள் என்னை விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, இது இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் பேசிய காணொளி இருக்கிறது. எனவே, அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால், என்னை தூக்குவார்கள்" என்று சீமான் கூறினார்.
“விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஏனெனில்...” - ஆளுநர் தமிழிசை
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-02 19:59:00
புதுச்சேரி: “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால், விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “மத்திய இடைக்கால பட்ஜெட் இது. நல்ல பட்ஜெட். இதை முழு பட்ஜெட் போல் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். பெண்களுக்கு பல நல்லத் திட்டங்கள் தந்துள்ளனர். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மக்களுக்கு நல்லது செய்யும் பட்ஜெட். ஆட்சி முடிவதால் அச்சமான நிலையில் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளதை கேட்கிறீர்கள். ஸ்டாலினை பொறுத்தவரை, பிரதமர் மோடி வெளிநாடு போனபோது குறைச்சொன்னார்கள். மாநிலத்தை சேர்ந்தவரே வெளிநாட்டுக்கு இத்தனை முறை செல்லவேண்டியுள்ளது. எல்லா மாநிலத்துக்கும் முதலீடு ஈர்க்க பிரதமர் எத்தனை முறை வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். அந்த நல் உறவுகளால்தான் இந்தியாவுக்கு பல நாடுகளின் நல் உறவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்துள்ள சில விஷயங்களால் அச்சத்துடன் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பில் மதம், சாதி இல்லாத சூழலை உருவாக்குவதாக கூறியுள்ளதை கேட்கிறீர்கள். யாரும் மதம், சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. அதிகமானோர் அரசியலுக்கு வரவேண்டும். நான் கல்லூரிக்கு சென்றாலும், படிப்பவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என தெளிவாக சொல்வேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நிறைய தலைவர்கள் வரவேண்டும். திமுக வெல்லும்போது வாக்கு இயந்திரம் வைத்துதான் வென்றார்களா? அதன்பிறகு வாக்குசீட்டா? வாக்கு இயந்திரமா? வாரிசுக்கோ, குடும்பத்துக்கு மட்டுமோ பாஜகவில் வாய்ப்பு தருவதில்லை” என்றார். நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, “முடிவு செய்து விட்டு சொல்கிறேன். ஆளுநர் பதவி தொடர்வதா தேர்தலா என்று முடிவு செய்து சொல்கிறேன்” என்றார்.
ஐகோர்ட் விதிக்கும் அபராத தொகையில் சட்டப் புத்தகங்கள் - மதுரை கலைஞர் நூலகத்தில் தனிப் பிரிவு!
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-02 18:56:00
மதுரை: உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்கும் வழக்குகளில் பெறப்படும் தொகையில் கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசியாவிலே பல்துறை புத்தகங்கள் நிறைந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை மதுரை நத்தம் சாலையில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் காட்டிலும் பிரமாண்டமாகவும், புத்தகங்களும் அதிகமாக உள்ள இந்த நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த நூலகத்திற்கு வந்து சென்றுள்ளனர். ஆரம்பத்தில் கலைஞர் நூலகம் கட்டிடத்தையும், அதன் செயல்பாடுகளையும் சுற்றிப் பார்க்கும் கூட்டம் அதிகமாக வந்தது. தற்போது புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிக்கும் உண்மையான வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டுமே நூலகத்திற்கு அன்றாடம் வந்து செல்கிறார்கள். புத்தகத்தை எடுத்து வாசிப்பது, ஒப்படைப்பது வரை கலைஞர் நூலகம், நவீன தகவல் தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, நூலகத்திற்கு படிக்க வரும் வாசகர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், எந்த நூலகத்திலும் இல்லாத ஒரு புதுமையாக, மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் தீர்ப்பு வழங்கப்படும் அபராத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையில் கலைஞர் நூலகத்திற்கு தேவையான சட்டப் புத்தங்கள் வாங்கி கொடுக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காகவே, கலைஞர் நூலகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கிளைப் பிரிவு நூலகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நூலகப் பிரிவில் நீதிமன்றம் அபராத தொகையில் வாங்கப்படும் சட்டப் புத்தங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது ஒரளவு சட்டப் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் பெறப்படும் தொகையில் படிபடியாக புத்தகங்கள் புதிதாக வாங்கி வைக்கப்பட உள்ளது. இந்த புத்தகங்களை படிப்பதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமில்லாது வழக்கமாக கலைஞர் நூலகத்திற்கு வரும் அன்றாட வாசகர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில், ''உயர்நீதிமன்றம் கிளை நூலகப் பிரிவுக்கு மற்ற பிரிவுகளை போல் வரவேற்பு இல்லை. ஆனால், நாளடைவில் சட்டப் புத்தகங்கள், முக்கிய தீர்ப்பு சம்பந்தமான நூல்கள் வாங்கி வைக்கும்போது வழக்கறிஞர்கள், சட்டப் படிப்பு மாணவர்கள் அதிகளவு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.
முரசொலி நில விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை பிப்.12-க்கு ஒத்திவைப்பு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-02 18:32:00
சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், மூத்த வழக்கறிஞர் ஆஜராகும் வகையில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
சதுப்பு நிலங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-02 18:02:00
சென்னை: சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒது்ககிய வருவாய்த் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை மீட்டு பராமரிக்கவும், சதுப்பு நிலங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை, சதுப்பு நிலம் என வருவாய்த் துறை வகைப்படுத்தியது. அதில் 8 ஏக்கர் அளவுக்கு, தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்றம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மே 16-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பக்கிங்ஹாம் கல்வாயில் இருந்து வரும் உபரி நீர், துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் சதுப்பு நிலப் பகுதியை, பாதுகாக்க வேண்டிய அரசே, அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்துக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வருவாய்த் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.மேலும், அந்த நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும். சதுப்பு நிலத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
ப்ரீமியம் விஜய்யின் கட்சி அறிவிப்பும் ரியாக்‌ஷன்களும் | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.2, 2024
செய்திப்பிரிவு
நன்மைகள்
2024-02-02 17:57:00
அரசியல் கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!: தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவும் அளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் தமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்: தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள் தடையற்ற வாசிப்பனுபவம் உங்களின் உறுதுணைக்கு நன்றி !
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் துரோகம் நிகழ்த்தும் திமுக - காங். கூட்டணி: இபிஎஸ் கண்டனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 17:46:00
சென்னை: "திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. விவாதப் பட்டியலில், மேகேதாட்டுவை சேர்க்காமல் விட்டிருந்தாலோ, ஆட்சேபனை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தமிழக அரசு வெளிநடப்பு செய்திருந்தாலோ, பிப்.1 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேகேதாட்டுப் பிரச்சினை நீர்வளக் கமிஷனின் பார்வைக்குச் சென்றிருக்காது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்படும் ஜீவாதாரமாக விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பைப் வழங்கியது.மத்திய அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த காலம் தாழ்த்தியதால், 2018-ம் ஆண்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால், உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. பல போராட்டங்களின் விளைவாக, 1.6.2018 அன்று மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம், அணைகளில் உள்ள நீரின் கொள்ளளவு, மழை அளவு, நான்கு மாநிலங்களின் தண்ணீர் தேவை போன்ற விஷயங்களை விவாதித்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடுவது என்பது குறித்து, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், மத்திய அரசின் காவிரி மேலாண்மை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் மேகேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கவோ, அதுபற்றி விவாதப் பொருளில் கொண்டுவரவோ அனுமதித்ததில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது, மேகேதாட்டு அணை விவகாரம், கூட்டத்தின் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதுகுறித்துப் பேசவேண்டும் என்று கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே விவாதப் பொருள் பட்டியலில், மேகேதாட்டு அணை குறித்து இருப்பதை அறிந்த திமுக அரசும், கலந்துகொண்ட அதிகாரிகளும் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை? விதிகளுக்குப் புறம்பாக மேகேதாட்டு பிரச்சினை குறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் பிரச்சினை எழுப்பியபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்துகொண்டது ஏன்? விவாதப் பட்டியலில், மேகேதாட்டுவை சேர்க்காமல் விட்டிருந்தாலோ, ஆட்சேபனை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தாலோ, 1.2.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது பிரச்சினை நீர்வளக் கமிஷனின் பார்வைக்குச் சென்றிருக்காது. திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சினையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. திமுக-காங்கிரஸ் திரை மறைவு நாடகத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டு, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று இந்த திமுக அரசை கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்” - அமைச்சர் உதயநிதி வரவேற்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 17:43:00
சென்னை: “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறும்போது, “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.
“கட்சி தொடங்குவது எளிது... தொடர்வதுதான் கடினம்!” - சீமான் @ விஜய் அரசியல் என்ட்ரி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 16:46:00
சென்னை: "கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம்" என்று நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து நடிகர் சீமான் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து மற்றக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. முதலில் என்ன கோட்பாட்டை விஜய் முன்னிறுத்த போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகர் தனது ரசிகர்களின் வாக்கை மட்டும் பெற்று அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும். விஜய், மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல ஒரே ஆண்டில் முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டி வரும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
“புதிய கட்சி தொடங்கிய விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி” - அண்ணாமலை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 16:42:00
சென்னை: "சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். "தமிழக வெற்றி கழகம்" என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து மற்ற கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, கட்சி தொடர்பான அறிவிப்பில் நடிகர் விஜய், "முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்" என்று விஜய் தெரிவித்திருந்தார்.
“கட்சி தொடங்கிய நடிகர் விஜய் விமர்சித்தது திமுக, பாஜகவைதான்” - ஜெயக்குமார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 16:38:00
சென்னை: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நகர்வு, தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்கள்தான் இறுதி எஜமானர்கள் அவர்கள் அதை முடிவு செய்வார்கள். ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாத என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும். அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது. நான் நடிகர் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இனிமேல் எம்ஜிஆர் போல ஒருவர் பிறக்க முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி சித்தரித்துவிட்டால் அவர்களுக்குதான் அது வீழ்ச்சி. திமுக என்பது ஒரு தீய சக்தி. அந்த திமுக தமிழகத்தை கபளீகரம் செய்துவிட்டது. தமிழகத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்க ஒரு கட்சி தேவை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்தும், தற்போதும் ஓர் எழுச்சியுடன் இருக்கிறது. அவர் போட்ட விதைதான் இன்று ஆலமரமாக பல்வேறு நபர்களுக்கு நிழல் கொடுத்திருக்கிறது. எங்களுடைய இயக்கத்தை மற்ற எந்த இயக்கத்துடனும் ஒப்பிட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்” என்றார் ஜெயக்குமார்.
“ஜனநாயக சக்திகளை மிரட்டுவது ஒன்றுதான் பாஜக அரசின் 10 ஆண்டு கால சாதனை” - முதல்வர் ஸ்டாலின்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 16:31:00
சென்னை: "இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்" என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன், தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக. ஜனவரி 27-ம் தேதி சென்னையிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படும் நிலையில், ஊடகத்தினரிடம் பேசும்போது, “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைவதற்கு கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த ஆண்டு ஸ்பெய்ன் நாட்டிற்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தேன். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தின் விளைவாக கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கவுள்ள தொழில்கள், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இவற்றையும், ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியையும் சுட்டிக்காட்டினேன். இதோ, இங்கே ஸ்பெயின் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கானத் தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான். நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெய்ன் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெய்ன் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன. நம்முடைய தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெய்ன் நாட்டிலும் எருது ஓடும் போட்டி உண்டு. நம் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, அந்நாட்டு மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிஷ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிஷ் பெற்றிருக்கிறது. ஸ்பெயினில் எல்லா இடங்களிலும் ஸ்பானிஷ் மொழியே முதன்மை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டிற்குச் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் நிலையை இருநாடுகளிலும் கண்டபோது, நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கை நினைவுக்கு வந்தது. அந்த அண்ணனுக்கு பிப்ரவரி 3 அன்று நினைவு நாள். அண்ணா நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது. கலைஞர் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. “எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது” என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு. கலைஞர் தலைமையில், பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, உங்களுடன் பேரணி வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். உலக நாடுகளின் வரலாற்றை பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தன் தம்பியருக்கு எடுத்துரைத்து அரசியல் தெளிவு தந்த அறிவுலக மேதை அவர். திமுக பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக்கி, உலக வரலாறுகள் பற்றிய வகுப்பெடுத்தவர்கள் அண்ணாவும் கலைஞரும். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திமுக. பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது திமுக. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன. தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழமைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன. சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக் கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திமுக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள். தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் திமுகவினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது திமுக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன். குடியரசு நாளான ஜனவரி 26 அன்று, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது. இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே கலைஞரின் செயல்திட்டம். மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம். நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இண்டியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் அகஸ்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
க.ராதாகிருஷ்ணன்
கரூர்
2024-02-02 15:35:00
கரூர்: 1000 ஆண்டுகள் தொன்மையான திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் ரூ.5 கோடியில் புனரமைப்பு பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெறும் எனக் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் ரூ.5 கோடியில் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையில் கோயில் வளாகத்தில் இன்று ( ஜன. 2ம் தேதி ) நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அடிக்கல் நாட்டி புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். கரூர் எம்.பி. செ.ஜோதி மணி, எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் ( குளித்தலை ), க.சிவகாமசுந்தரி ( கிருஷ்ண ராயபுரம் ), இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர் சி.குமர துரை, கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் உத்தரவுகள் மற்றும் உற்சாகத்தின் காரணமாக இந்து சமய அறநிலைத் துறை புது பொலிவுடன் வீறு நடைபோடுகிறது. அந்த வகையில் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு திரு பணிகள் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக கடந்த இரு நிதியாண்டுகளில் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கியுள்ளது. உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 கோயில்களில் ரூ.304.84 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுப் பெற்றுள்ளது. 13 கோயில்களுக்கு குடமுழுக்குக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் திருக்கோயில்களின் பணிகள் உயர்வு பெற்றது என்று சொல்வார்கள். அதேபோல் ராஜ ராஜ சோழனுக்குப் பிறகு இந்த ஆட்சியில் தான் சிதிலமடைந்த திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு திரும்ப கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அகஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.5 கோடியில் 11 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கோயிலுக்கு எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற குறிப்பு இல்லை. ஆனால் இந்த கோயிலில் உள்ள மணி முத்தீஸ்வரர் சந்நதிக்கு கடந்த 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடந் ததற்கான கல்வெட்டு உள்ளது. ஆனால் மூலவரான அகஸ்தீஸ்வரருக்கு எப்பொழுது குடமுழுக்கு நடந்தது என்ற குறிப்புகள் இல்லை. இது போன்ற குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை ஒவ்வொன்றாக கணக்கில் எடுத்து புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் குடமுழுக்கு நடைபெறாத கோயில்களுக்கு எல்லாம் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. 1,339 கோயில்களுக்கு நேற்று வரை குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. நேற்று மட்டும் 13 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த திருப்பணிகளை விரைவாக முடித்தால் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெறும்” என்றார். இந்நிகழ்வில் துணை மேயர் ப.சரவணன், இந்து சமய அறநிலையத் துறை தக்காரும், உதவி ஆணையருமான பி.ஜெயதேவி, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான நா.நந்தகுமார், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கு.பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“பாஜக அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்துகிறது” - விசிக மா.செ. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 14:57:00
சென்னை: சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு; # 26.1. 2024 அன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இது போன்ற மாநாடு நடத்தப்பட்டது இல்லை என்ற சாதனையைப் படைத்துள்ளனர். இதற்குக் காரணமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும், நமது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து சனநாயக சக்திகளுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது # 2024 ம்க்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்றும், கூட்டணியைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் நிறுவனர்- தலைவர் தொல்.திருமாவளவனிடம் அளிப்பது என்றும் கூட்டம் தீர்மானிக்கிறது. # ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி முடக்கி வருகிறது. ஜார்கண்ட் மாநில முதலமைச்சர், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஹேமந்த் சோரன் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவரைக் கைது செய்து இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. # மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான சந்தேகங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டிருப்பது பொதுத் தேர்தலை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, ஒப்புகை சீட்டுடன் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களையும் இணைக்க வேண்டும் ஒப்புகைச் சீட்டுகளை முழுவதுமாக எண்ணி அதன் அடிப்படையில்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. # தமிழக அரசுப் பணிகளில் பணிபுரியும் எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான 200 பாயின்ட் ரோஸ்டர் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ் சி, எஸ் டி பிரிவினரை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எஸ்சி , எஸ்டி ஊழியர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது போல அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 ( 4 ) A இன் படி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும், அதுவரை பதவி இறக்கம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது # தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதிநிலை அறிக்கை எஸ்சி எஸ்டி துணைத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும், அதற்கு ஏற்ப சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. # இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில்களில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்'என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்து இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் மேற்கோள் காட்டி அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 24 ( 4 ) கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படுகிறவர்கள் செல்வதற்கு வழிவகை செய்கிறது. அப்படிச் செல்லும்போது யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்ற ஆணையைப் பெற்று சப் இன்ஸ்பெக்டர் தகுதிக்குக் குறையாத காவல்துறை அதிகாரியின் உதவியோடு செல்லலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரிகள் கோயில் கருவறைக்குள்ளே சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு சொல்கிறது. அத்துடன் இந்து அல்லாதவர்கள் யாரும் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி அதிகாரிகள் செல்வதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு 24 (4 ) இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கின்ற காரணத்தினால் இந்து அல்லாத காவல்துறை அதிகாரிகளும் கோயிலுக்குள் நுழைய முடியாது என்று ஆகிறது. இது காவல்துறையினரை மத ரீதியில் பாகுபடுத்துவதாக உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 24 (4) இல் உரிய திருத்தம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 14:13:00
சென்னை: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப் படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா / தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450-லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்த பட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய் வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது. மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும் கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன. தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்துக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது. நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக் கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும். ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப் படுத்த தமிழ்நாடு அரசு இதுவரை தும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது. அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் விற்க அரசு முன்வர வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் அரசியல், திரைத் துறையைக் கையாளப்போவது எப்படி? - நடிகர் விஜய் விளக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 13:46:00
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள முழு அறிக்கையில், "அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும். இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன். நன்றி" இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் பாதுகாக்கவும்: அன்புமணி வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 13:34:00
சென்னை: தமிழகத்துன் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று உலக சதுப்பு நில நாள் ( #WorldWetlandsDay ). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம், கடலோர சதுப்பு நிலக் காடுகள், காயல் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழு அளவில் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களை காப்பதற்கான உலகளாவிய உடன்படிக்கை ( Convention on Wetlands ), ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971 பிப்ரவரி 2ம் நாள் எட்டப்பட்டது. அதுவே உலக சதுப்பு நில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சதுப்பு நிலங்களும் மனித நலவாழ்வும்’ ( Wetlands and Human Wellbeing ) என்பது இந்த ஆண்டுக்கான உலக சதுப்பு நில நாள் முழக்கமாகும். இவ்வாண்டின் உலக சதுப்புநில நாள் கொண்டாடப்படும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 இடங்கள் பன்னாட்டு ராம்சார் சதுப்பு நிலங்கள் பட்டியலில் ( Ramsar List ) புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். உலக வங்கியின் ரூ. 2000 கோடி நிதியுதவியுடன் கடலோர மீளுருவாக்க திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகள் உண்மையாகவே சுற்றுச்சூழலை காப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் அதையொட்டியுள்ள பகுதியை வலசை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். மேலும், எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துன் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என உலக சதுப்பு நில நாளில் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 13:24:00
சென்னை: டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையே அவ்வப்போது கட்சிக்கான அணிகளும் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஜன. 26ம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். வழக்கமாக கட்சி தொடங்கலாமா? மக்களிடையே நமது செல்வாக்கு எவ்வாறு உள்ளது? என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்துகளைக் கேட்டறிவார். ஆனால் ஜன.26-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சியைத் தொடங்க வேண்டும் என உறுதியான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் பொருட்டு புஸ்ஸி ஆனந்த் தேர்தல் ஆணையத்துக்கு சென்றார் என்று தகவல் வெளியானது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும், கட்சி தொடங்குவதையும் இதுவரை வெளிப்படையாக எங்கும் அறிவிக்கவில்லை. முதல்முறையாக, தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
“வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மறுப்பதா?” - திமுக அரசைக் கண்டித்து இபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 12:25:00
சென்னை: வெள்ளாற்றின் குறுக்கே பு. ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட மறுக்கும் பொம்மை முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயணித்து கூடலையாத்தூரில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. வெள்ளாற்றின் மொத்த நீளம் சுமார் 205 கிலோ மீட்டர் ஆகும். வெள்ளாற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பில் அமையப்பெற்ற அணைக்கட்டில் இருந்து வெள்ளாறு வளைந்து நெளிந்து வங்கக் கடலைச் சென்றடைகிறது. கடல் நீர் இந்த ஆற்றின் வழியாக உட்புகுவதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால், சிதம்பரம் வட்டங்களில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விளைநிலங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் தண்ணீர் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயனற்றதாக மாறிவிட்டது. இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை தடுக்கக் கோரி பல்வேறு கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 16.8.2017 அன்று கடலூரில் நடைபெற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கடல் நீர் வெள்ளாற்றில் உட்புகுவதைத் தடுக்க, வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டேன். அதன்படி, 92.58 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆதிவராகநல்லூர், ஆயிபுரம், கீழ்புவனகிரி, மேல்மூங்கிலக்குடி, கீழ்மூங்கிலக்குடி ஆகிய கிராமங்களில் இதற்குத் தேவையான நிலம் தேர்வு செய்யப்பட்டு, அளவிடும் பணியும் முடிக்கப்பட்டு, மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விடியா திமுக அரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டதால், புவனகிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கடிதங்கள் வாயிலாகவும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் முதல் பணியாகவும் இதைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்ததோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டுமுறை தடுப்பணை கட்டுவது குறித்து கழக சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். மேலும், 13.9.2023 அன்று தமிழ் நாடு சட்டமன்ற விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தார். இருப்பினும், அதிமுக கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் இத்திட்டத்தை விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் சிதம்பரம் வட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவது தடுக்கப்படும்; விவசாயம் மேலும் செழிப்படையும். விவசாயம் பாதுகாக்கப்படவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும், வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசின் பொம்மை முதல்வரை கண்டித்தும், பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், அதிமுக கழக கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 7.2.2024 - புதன் கிழமை காலை 9.30 மணியளவில், புவனகிரியில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்மொழிதேவன், எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலனை முன்வைத்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் என்ஐஏ சோதனை: மொபைல், புத்தகங்கள் பறிமுதல்
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-02 11:02:00
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக நடத்திவந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. சோதனையின் முடிவில் மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றிச் சென்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்று கூறப்படும் நிலையில், இவர் தென்னகம் என்ற யூடியூப் சேனலை கடந்த 2020 டிசம்பர் 27 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். தனது யூடியூப் சேனலில் 279 வீடியோ பதிவுகளை பதிவிட்டுள்ள இவர், நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் குறித்து பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இவரது வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனை காலை 10 மணி அளவில் நிறைவுபெற்றது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளனவா என 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவருக்கு இலங்கைத் தமிழர்கள் உட்பட வேறு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா, வெளிநாட்டிலிருந்து பணம் ஏதும் பெற்றுள்ளாரா என்பன குறித்து விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி அளவில் நிறைவுற்ற இச்சோதனையில் ஒரு மொபைல் போன் மற்றும் பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய நான்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்ஐஏ சோதனையால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
டி.ஜி.ரகுபதி
கோவை
2024-02-02 09:52:00
கோவை: கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை ஆலாந்துறையில் உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்ற ரஞ்சித் குமார். கோவை காளப்பட்டியில் உள்ள சரஸ்வதி கார்டனைச் சேர்ந்தவர் முருகன். இவர்கள் நாம் தமிழர் கட்சியில் முன்னாள் நிர்வாகிகள் ஆவார். இவர்களது வீடுகளுக்கு இன்று (பிப்.2) அதிகாலை 4 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இரண்டு வாகனங்களில் வந்தனர். தொடர்ந்து அவர்களது வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தத் தொடங்கினர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினர். வீட்டில் சந்தேகத்துக்குரிய பொருட்கள், ஆவணங்கள் உள்ளதா என இந்த சோதனை நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை நடத்திய சோதனையில் கைதுப்பாக்கி, வெடி மருந்து, முகமூடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கோவையில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடனான பண விவகாரம் காரணமாகவும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முருகன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ரஞ்சித் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை உள்பட பல இடங்களில் என்ஐஏ சோதனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 09:06:00
சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி என பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (பிப்.2) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தமிழகத்தில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது, திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பதுங்கி இருக்கும் நபர்களைத் தேடும் பணியில் என்ஐஏ ஈடுபட்டது. மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ, சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தலைநகர் சென்னை தொடங்கி தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, சிவகங்கை, தென்காசி உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ஆலாந்தூர், காளப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் ஒருவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரதாப் (27). இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகாமை சோதனை நடத்தி வருகின்றனர். விஷ்ணு பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சில கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. பரவலாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள், தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் என்பவரை நேரில் ஆஜராகும்படி வாட்ஸ் அப் மூலம் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அதற்கு தான் வெளியூரில் இருப்பதால் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராவதாக கார்த்தி பதில் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி
செய்திப்பிரிவு
திருவண்ணாமலை
2024-02-02 06:54:00
திருவண்ணாமலை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மத்திய பாஜக அரசு தெரிவித்தது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுவோம் என்றனர். கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். இவற்றில் எதுவுமே நிறைவேறவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று பிரதமரோ அல்லது பாஜக தலைவர் அண்ணாமலையோ கூற முடியுமா? இந்திய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதைப் பாராட்டி ஐநா சபை சான்றிதழ் வழங்கியது. ஆனால், தற்போதைய நிலை என்ன? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக உள்ளது. ஆனால், அதிக விலைக்குபெட்ரோல், டீசலை விற்பது ஏன்?உலக அளவில் பெட்ரோல், டீசலைஅதிக விலைக்கு விற்பனை செய்வது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதை மறைக்கவே ராமர் கோயிலை கையில் எடுத்துள்ளனர். தேர்தலை முன்வைத்தே, அரசியல் ஆதாயத்துக்காக ராமருக்கு கோயில் கட்டியுள்ளனர். கட்டுமானம் முழுமை பெறாமல் குடமுழுக்கு நடத்துவது தவறு என்றுசங்கராச்சாரியார்கள், ஆன்மிகவாதிகள் கூறினர். இதையும் அவர்கள் ஏற்கவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இண்டியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. எனவே, கூட்டணியின் ஒற்றுமைபற்றி யாரும் கவலைப்படத் தேவைஇல்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
லஞ்ச வழக்கில் வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது
செய்திப்பிரிவு
ராமநாதபுரம்
2024-02-02 06:49:00
ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனிசாமி, முன்னாள் அரசு வாகன ஓட்டுநரான இவர், தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தவணை முறையில் வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கினார். 2018-ல் பழனிச்சாமி இறந்ததையடுத்து, வீட்டுவசதி வாரியத்துக்கான பாக்கித்தொகை முழுவதையும் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தில் அவரது மகன் பிரவீன்குமார் செலுத்தினார். பின்னர், அந்தஇடத்தை தனது தாயார் பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி பிரவீன்குமார் மனு செய்தார். இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் பாண்டியராஜன், பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரை பிரவீன்குமார் பலமுறை அணுகினார். அப்போது இடத்தின் அளவு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த இடத்தை அளப்பதற்கான செலவு உட்பட ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.10 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன்குமார், இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவு ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை செயற் பொறியாளரிடம் பிரவீன்குமார் கொடுக்கச் சென்றார். பணத்தை ஒப்பந்தப் பணியாளர் பாலாமணியிடம் கொடுக்குமாறு செயற் பொறியாளர் கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.10 ஆயிரத்தை பாலாமணியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸார், பாலாமணியை (65) கைது செய்தனர். மேலும், லஞ்சம்வாங்குமாறு கூறிய செயற் பொறியாளர் பாண்டியராஜன்(57), பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் (57)ஆகியோரையும் கைது செய்தனர்.தொடர்ந்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
முறைகேடு செய்ததாக புகார் எதிரொலி: அரசு கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
செய்திப்பிரிவு
திருவாரூர்
2024-02-02 06:39:00
திருவாரூர்: முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திரு.வி.க. கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்தவர் கீதா.இவர் கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு நேற்றுவந்த தஞ்சை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் தனராஜன், முதல்வர் பதவியிலிருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை கல்லூரியின் மூத்தபேராசிரியரிடம் ஒப்படைக்குமாறும் கூறி, உயர் கல்வித் துறைமுதன்மைச் செயலாளர் உத்தரவிட்ட கடிதத்தை வழங்கினார். மாணவர்கள் போராட்டம்: இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் கீதா, உத்தரவு நகலை வாங்க மறுத்தார். இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி மாணவர்கள், முதல்வர் பணியிடை நீக்க நடவடிக்கையைக் கண்டித்து, கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குவந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். பணியிடை நீக்கம் ஏன்?- கல்லூரி முதல்வர் பொறுப்புடன், கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் இருந்து வந்த கீதா மீதுபல்வேறு முறைகேடு புகார்கள்வந்ததாகவும், அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதலை மீறியூடியூப் சேனல் நடத்தி வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே கல்லூரிக் கல்வி இயக்குநர் பணியிலிருந்து விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கீதா கூறும்போது, "நான் யாருக்கும் பணம் கொடுத்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்புக்கு செல்லவில்லை. நீதிமன்றத்தின் வாயிலாகவே அந்த பொறுப்புக்குச் சென்றேன். மேலும், எனக்குயார் என்றே தெரியாத, தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல், ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். எனது கல்லூரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க யூடியூப் சேனல் நடத்தினேன். அதில் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் தகவல்களைத் தவிர, வேறு எதையும் வெளியிடவில்லை. அதன் மூலம் எந்த வருமானத்தையும் நான் பெறவில்லை" என்றார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: நீதிமன்றத்தில் தானே வாதாடினார் முன்னாள் சிறப்பு டிஜிபி
செய்திப்பிரிவு
விழுப்புரம்
2024-02-02 06:36:00
விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டில் பெண்எஸ்.பி.க்கு முன்னாள் சிறப்புடிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல்தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்துநிறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்துதீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, முன்னாள் சிறப்புடிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்கறிஞர் ஆதிசங்கர் ஆஜராகி, விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கான உத்தரவு வரும் வரைதங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கலா ஆட்சேபம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபிராஜேஷ்தாஸ் ஆஜராகி, ‘இந்த வழக்கில் நானே வாதாட அனுமதிஅளிக்க வேண்டும்’ என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி பூர்ணிமா ஏற்றுக்கொண்டதையடுத்து, ராஜேஷ்தாஸ் ஒரு மணி நேரம் வாதாடி, தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்தார். இதையடுத்து, வரும்7-ம் தேதி வரை வாதாட ராஜேஷ்தாஸுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 84.63 லட்சம் பேர் பயணம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:25:00
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதத்தில் (ஜனவரியில்) மட்டும் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக ஜன.12-ம் தேதி 3 லட்சத்து 64 ஆயிரத்து 521 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37 லட்சத்து 43 ஆயிரத்து 885 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 92 ஆயிரத்து 912 பேர், டோக்கன்களை பயன்படுத்தி 15, 456 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 8,792 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9 லட்சத்து 2 ஆயிரத்து 336 பேரும் மெட்ரோரயில்களில் பயணம் செய்துள்ளனர். மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் - நல்லூர் சுங்கச்சாவடி வரையிலான விரைவான போக்குவரத்து அமைப்பின் (எம்ஆர்டிஎஸ்) சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அல்மோன்ட்ஸ் குளோபல் இன்ஃப்ரா-கன்சல்டன்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜாமீன் கேட்டு மீண்டும் அமலாக்கத் துறை அதிகாரி மனு தாக்கல்
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-02 06:21:00
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றவழக்கில் கைதான மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, கடந்த 2 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டிச.1-ம் தேதி லஞ்ச ஒழிப்புபோலீஸாரால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, டிச. 4-ம் தேதி ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடியானது. இந்நிலையில், இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்த பரிசீலனை: தலைமை நீதிபதி அமர்வு தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:17:00
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமுல்லைவாயிலை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனு: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நெட்வொர்க் பிரச்சினை இருப்பதால், செல்போன், இணைய தள சேவையை தடையின்றி பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக, காணொலி காட்சி விசாரணையின்போது தடை ஏற்படுகிறது. அதேபோல, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் காணொலி காட்சியில் மற்றொரு நீதிமன்றத்தில் குறித்த நேரத்துக்கு ஆஜராக முடிவதில்லை. காஸ் லிஸ்ட், வழக்குகளின் தன்மை, தினமும் பதிவேற்றம் செய்யப்படும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றை பார்க்க முடியவில்லை. உயர் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் பயன்பாடு முன்பைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டதால், அதற்கேற்ப தனியார் நெட்வொர்க் திறனை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடந்த 2023 ஜூலை, செப்டம்பரில் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது ‘‘இந்த கோரிக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு புத்துயிரூட்டும்: பாஜக, தமாகா, அமமுக வரவேற்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:15:00
சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டும் பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக பாஜக, தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் ஒருவளர்ந்த தேசத்துக்கான உறுதியான அடித்தளத்தின் மீதான இந்தியாவின் பாதைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முழுமையான அணுகுமுறையை இடைக்கால பட்ஜெட் உயர்த்திக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்குஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம், சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் எரிசக்தித் துறைகளில் பொருளாதார வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மாநில அரசுகளை ஆதரிப்பதற்காக 50 ஆண்டுகால வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு,2019-20-ம் ஆண்டு மாநிலங்களுக் கான மொத்த பரிமாற்றங்கள் ரூ.11.45 லட்சம் கோடியிலிருந்து ரூ.22.75 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது ஆகியவை கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்துவதில் மத்திய அரசின் அர்ப்பணிப் புக்கான சான்றுகளாகும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய இடைக்கால பட்ஜெட், நாட்டின் மக்களுக்கான, பொருளாதார வளர்ச்சிக்கான, பாதுகாப்புக்கான புத்துயிரூட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் மக்கள் பாதுகாப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சில மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால்அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வர மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும்முக்கியத்துவம் அளித்திருப்பது மகிழ்ச்சியையும், மனநிறைவை யும் தருகிறது. அதேபோல சிறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 1,000 விமானங்கள் கொள்முதல், வந்தேபாரத் ரயில்களின் சேவை அதிகரிப்பு, கூடுதல் பேட்டரி சார்ஜ்நிலையங்கள் என போக்குவரத்துவளர்ச்சி தொடர்பான அறிவிப்பு களும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
நகைக் கடையின் ரூ.34.11 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:12:00
சென்னை: லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ரூ.34.11 கோடிசொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.65 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சென்னை, கோவையில் உள்ளலாவண்யா கோல்டு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.இதில் பல்வேறு முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனம், வெளிநாடுகளில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதுதெரியவந்தது. பழங்கால நகைகள், தங்க நகைகளைதயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கி, அந்ததொகையை லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், தங்க கட்டிகள்,நகைகளை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து, கிரிப்டோ கணக்குகள் மூலம் வருமானத்தை காட்டியிருப்பதும், அந்த வருமானத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருப்பதாக கணக்குகள் காட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ், இந்நிறுவனத்துக்குசொந்தமான ரூ.34.11 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகள் அளவிலான விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:10:00
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, பள்ளிமாணவ, மாணவியரின் அணிவகுப்பை பார்வையிட்டு, ஒலிம்பிக் சுடரை ஏற்றி, பலூன்களை பறக்கவிட்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியின் கீழ் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஏற்கெனவே தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 940 மாணவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏற்கெனவே மாநிலஅளவில் மற்றும் தேசிய அளவில்நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள் த.விஸ்வநாதன் (கல்வி), கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு மற்றும்நிதி), கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் விரைவில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:06:00
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்த இணைப்பு பணி பிப்ரவரிக்குள்ளும், ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் மார்ச் மாதத்துக்குள்ளும் முடிக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ வெளி யிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சிஎம்டிஏ சார்பில், இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிச.30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த பேருந்து முனையத்தை நகரத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப்பேருந்துகள் மூலம் 498 வழக்கமானபேருந்துகள் தவிர நெரிசல் மிகுந்தநேரங்களில் 200 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பேருந்து முனைய கட்டிடத்துக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து முனையத்துக்கும் இடையே 4 மினிபேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் கேட்டுக்கு இங்கிருந்து 2 மினி பேருந்துகள் கட்டண இணைப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும்கோயம்பேடு இடையே 5 நிமிடத்துக்கு ஒருமுறை சென்னை மாநகரப்போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இம்முனையத்திலி ருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இம்முனையத்தில் முன்பணம் செலுத்தப்பட்ட ஆட்டோ, வாடகை கார்கள் சேவையும் உள்ளது. மேலும்இந்த முனையத்தில் இருந்து ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் 1.5 கி.மீ தொலைவிலும், வண்டலூர் 2.1 கி.மீ தொலைவிலும் மற்றும் புதிதாக அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 500 மீட்டர் தொலைவிலும் உள்ளது. கூடுதல் பணிகள் தீவிரம்: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில்நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே, பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலப் பணிகளுக்கு கடந்தஜன.31-ம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மெட்ரோ ரயில் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைய வுள்ளது. இதுதவிர, பேருந்து முனையத்துக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்துக்கும் இடையே சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பிப்ரவரி மாதத்துக்குள் முடியும். வண்டலூர் மற்றும் அயனஞ்சேரி சந்திப்பை மேம்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறை மூலம்மேற்கொள்ளப்பட்ட 3 சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையத்துக்கு பிப்.5-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அணுகல் தன்மை தணிக்கைக் குழு அளித்த அறிக்கையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்து நிலையம்: கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமானப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிடம், குடிநீர், உணவகங்கள் மற்றும் கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தேவை யான அனைத்து வசதிகளும் செய் யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் முன்பு திமுக சார்பில் போராட்டம்; தமிழகத்தை புறக்கணிக்கும் ‘இல்லாநிலை' பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:03:00
சென்னை: மத்திய அரசின் பட்ஜெட், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை பட்ஜெட்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக 2-வது முறையாக பதவியேற்று, 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும், சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தச் சாதனையையும் செய்யவில்லை. இந்நிலையில், எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். கடந்தகால சாதனை அறிக்கையாகவோ, நிகழ்கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவோ, எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவோ இது இல்லை. ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பல சலுகைகளை, குறிப்பாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் பரிசளித்துள்ளது. வருமான உச்சவரம்பில் மாற்றத்தையும் வழங்கவில்லை, எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு, சலுகைகள் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந் துள்ளது. இந்திய பொருளாதாரம் வளரவில்லை; பணவீக்கம் குறையவில்லை; வறுமை ஒழியவில்லை; வேலையில்லா திண்டாட்டம் நீங்கவில்லை. ஆனால், இவற்றைசெய்து காட்டிவிட்டதாக பொய்அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கி விட்டதாக தோளைத் தட்டிக் கொள்கிறார்கள். ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு: ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பதாக அமைச்சர் பெருமைப்படும் நிலையில், மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இதனால் இந்தாண்டு தமிழகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.7.5 லட்சம் கோடி வரியை தொடர்ந்து வசூலித்து வரும் மத்திய அரசு, மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை தொடர்ந்து பறித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனால், 2015 பட்ஜெட்டில் அறிவித்து, 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடக்காததற்கு என்ன காரணம். தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்தஓரவஞ்சனை? பாஜகவுக்கு தமிழகத்தில் ஓட்டில்லை என்பதுதான் காரணமா? தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, தென்மாவட்ட பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அதுகுறித்தும், ரூ.31 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த மூன்றாண்டு காலமாகசென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். இந்த இடைக்கால பட்ஜெட்டில்,ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள் ஆகிய 4பிரிவினரை 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. சமூகநீதிக்குப் புறம்பானது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறி, பட்ஜெட்டை அரசியல் பேராசை அறிக்கையாக நிதியமைச்சர் ஆக்கியிருக்கிறார். வரும் 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதியமைச்சர் சொல்லியுள்ளார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது. புதிய இந்தியாவை ‘இண்டியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும். இந்த பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன்கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 06:02:00
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் மீதான விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிப்.1-ம் தேதி முதல் சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானம் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்படும் என்றும், உயர்ரக வகை மதுப்பானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.40, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80 மற்றும் அனைத்து பீர் வகைகளும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், நேற்றுமுதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் புதிய விலை பட்டியல் அமலுக்கு வந்தது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை குவார்ட்டர் பாட்டில் முன்பு ரு.130 மற்றும் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுதல் ரூ.140, ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, உயர்ரக மதுபான குவார்ட்டர் பட்டில்கள் ரூ.190, ரூ.240 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முதல் ரூ.20 கூடுதலாக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. ஏற்கெனவே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த விலையேற்றம் மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய விலையேற்றத்தால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும்போது, புலம்பிக் கொண்டே சென்றனர். சில பகுதிகளில், ‘டாஸ்மாக் நிர்வாகம் மதுபாட்டில்கள் விலையை ஏற்றியிருக்கிறது. அதேசமயம், நீங்களும் கூடுதலாக ரூ.10 வாங்கினால் என்ன நியாயம்?’ என ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். எனவே, டாஸ்மாக் கடைகளில், ஊழியர்கள் கூடுதலாக ரூ.10 வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இதனை டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,331 கோடி நிதி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:57:00
சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு 15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு நாளைக்கு 15 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5,200 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,500 கி.மீ. நீளத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தற்போது பெரிய அளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 2009-14-ம் ஆண்டில் ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இன்றைய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-14-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7 மடங்கு உயர்வாகும். தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுபோல, கேரளத்தில்100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது. ‘அம்ரித் நிலையம்' மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் 213 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளம், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் வகையில், 2,100 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாளம் மேம்படுத்தப்படும். அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளன. மேலும், அதிக வந்தே பாரத் ரயில்கள் வரும் ஆண்டுகளில் இயக்கப்பட உள்ளன. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை சில மாதங்களில் வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 4-வது ரயில் முனையம்: பின்னர் சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் 4-வது ரயில் முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை உருவாக்க ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். 4 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் புதிய பாதை, அகலப் பாதை, இரட்டை பாதை உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
‘சாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வழங்க வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:56:00
சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், சாதி, மதம் அற்றவர் என தனக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இந்த வழக்குவிசாரணை நடந்தது. அப்போதுதமிழக அரசு தரப்பில், ‘எந்தமதமும், சாதியும் அற்றவர் எனசான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. வட்டாட்சியரால் என்னென்ன சான்றிதழ் வழங்க முடியும் என பட்டியலில் உள்ளதோ, அந்தசான்றிதழ்களை மட்டுமே வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: ‘எந்த மதமும், சாதியும்அற்றவர்’ என தனக்கு சான்றிதழ்வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. அதேநேரம், இதுபோலசான்றிதழ் வழங்கினால், அதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சொத்து உரிமை, வாரிசு உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு போன்றவற்றில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். கேள்வி கேட்க முடியாது: தவிர, ஏற்கெனவே உள்ள அரசாணைகளின்படி, கல்வி நிலையங்களில் உள்ள விண்ணப்பங்களில் ‘எந்த மதமும், சாதியும் சாராதவர்’ என்று தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. விண்ணப்பங்களில், சாதி, மதம் தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். அதை அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாது. எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கவருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. அப்படி இருக்க, அந்த சான்றிதழை வழங்குமாறு வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட முடியாது. வட்டாட்சியரும் தன் விருப்பம்போல சான்றிதழ் வழங்க முடியாது. இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடவடிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:53:00
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தேதி, பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, வெளிப்படையாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தும் வகையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான துறைகளின் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் கடந்த ஒரு மாதமாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்களான வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையிலும் இதுபோன்ற பணியிடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 68 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், உதவி இயக்குநர்கள் 164 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக காவல் துறையில் 100 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இப்போதைக்கு தனித்து போட்டி இல்லை; மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: ராமதாஸ் @ பாமக பொதுக்குழு கூட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:52:00
சென்னை: இப்போதைக்கு தனித்துப் போட்டி இல்லை, மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 24 தீர்மானங்கள்: தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்.என்.எல்.சி சுரங்கங்கள், சிப்காட் உருவாக்கம் மற்றும் விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்குவதாகவும் பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ராமதாஸ் பேசியதாவது: கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டாலும் கூட, குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், தனித்து போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. பாமக அடையாளம் கண்டுள்ள 12 மக்களவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. கூட்டணி இல்லாமல், அப்போதே தனித்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்தில் இன்று பாமக ஆட்சியில் அமர்ந்திருக்கும். வரும் பேரவை தேர்தலில் இது சாத்தியமாகும். ‘பாரத ரத்னா’ உள்பட எந்த விருதை எனக்கு மத்திய அரசு கொடுத்தாலும், அதை நான் வாங்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, “2026 நம்முடைய ஆண்டு. அதற்கு முன்னோட்டம்தான் 2024 மக்களவைத் தேர்தல். இதில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
ஹபக் லாய்டு நிறுவனத்துடன் சரக்கு முனையம் அமைப்பு: ரூ.2500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:49:00
சென்னை: ஸ்பெயினின் ஹபக் லாய்டு நிறுவனத்துடன், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்க ரூ.2500 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலையளிக்கும் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக கடந்த ஜன. 27-ம் தேதி ஸ்பெயின் சென்றார். அங்கு பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தை திறமையாக கையாள்வது மிகவும்அவசியமானதாகும். அந்த வகையில்,சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப், இயக்குநர் ஆல்பர்ட் லாரன்ட் ஆகியோர் ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கடந்த ஜன.31-ம் தேதி சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், ரூ.2500 கோடி முதலீட்டில், தூத்துக்குடிமற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்கஇந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீடு மூலம்1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தமிழகத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவன தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ முதல்வர் ஸ்டாலினைசந்தித்து பேசினார் இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழகத்தில் உள்ளதுஎன்பதையும், தொழில் வளர்ச்சியைஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்திய முதல்வர், அபர்ட்டிஸ் நிறுவனம்தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்புகளின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு பங்கேற்றனர்.
ஆவடி ரயில் நிலையத்தை 4-வது முனையமாக தரம் உயர்த்த வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு வரதராஜபுரம் நல மன்றங்களின் கூட்டமைப்பு கடிதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:46:00
சென்னை: ஆவடி ரயில் நிலையத்தை 4-வது முனையமாக தரம் உயர்த்தி,அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரதராஜ புரம் நலமன்றங்களின் கூட்ட மைப்பு சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் வெ.ராஜசேகரன், பொதுச் செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர்தெற்கு ரயில்வே பொது மேலா ளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்கள் உள்ளடங்கிய ஆந்திரா, தெலங் கானா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து விரைவு ரயில்கள் (எக்ஸ்பிரஸ்) மற்றும் அதிவிரைவு ரயில்கள் (சூப்பர் ஃபாஸ்ட்) சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றன. காலவிரயம், பணம் செலவு: தாம்பரம், செங்கல்பட்டு மற்றும்ஆவடியைச் சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த மக்கள் மேற்கண்ட ரயில்களை பிடிக்க சென்ட்ரல் செல்ல வேண்டி உள்ளது. இதற்காக, குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இதனால், கால விரயமும், கூடுதல் பணம் செலவும் ஏற்படுகிறது. தற்போது, ஆவடியில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம், பூந்த மல்லி மற்றும் பெரும்புதூருக்கு செல்ல மாநகர பேருந்து வசதி உள்ளது. எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி வழியாக வெளி யூர்களுக்குச் செல்லும் ரயில்களும், வெளியூர்களில் இருந்து ஆவடி வழியாக சென்னை செல்லும் ரயில்களும் ஆவடியில் நின்று செல்ல வேண்டும். சென்ட்ரலில் நெரிசல் குறையும்: அவ்வாறு நின்று சென்றால் ஆவடி, அம்பத்தூர், பெரும் புதூர், தாம்பரம், வேளச்சேரி, வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அத் துடன், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏற்படும் நெரிசலும் குறையும். ஏற்கெனவே, பெரம்பூர் ரயில் நிலையத்தில் 90 சதவீதம் ரயில்கள் நின்று சென்னைக்கு செல்கின்றன. அதேபோல், ஆவடி ரயில் நிலையத்திலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆவடி ரயில் நிலையத்தை 4-வது முனையமாக தரம் உயர்த்தி, அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆளுநர் உரையுடன் பிப்.12-ல் சட்டப்பேரவை தொடங்குகிறது; பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:43:00
சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குவதாகவும், பிப்.19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் பிப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் கூட்டிஉள்ளார். அன்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்.19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பிப்.20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், பிப்.21-ம் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான இறுதி மானிய கோரிக்கையையும் தாக்கல் செய்கிறார். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்பது வேறு. ஆனால், சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என்பதற்கான முழு உரிமையும் பேரவைத் தலைவருக்குத்தான் உண்டு. இதை நான் மட்டுமல்ல, முன்னாள் பேரவைத் தலைவர் பி.தனபாலும் சட்டப் பேரவையிலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக, மறைந்த முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட முடியாது என்று தெரிவித்திருந்தது. தற்போது அந்த வழக்கில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தன்னையும் இணைத்துக் கொண்டு முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றபின், முழுமையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட வேண்டும் என்பதுதான் திட்டமாக உள்ளது. அதை நோக்கிதான் தற்போது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கேள்வி-பதில்கள் முழுமையாகவும், முக்கிய கவன ஈர்ப்பு மற்றும் அரசு தீர்மானங்களும் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டில் பல மாநிலங்களில் நம்மைப்போன்று சட்டப்பேரவை நிகழ்வுகளை காட்டுவதில்லை. அடுத்ததாக பேரவையில் நடைபெறும் விவாதத்தையும் முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. கடந்த 1921-ல் இருந்து இன்று வரை உள்ள சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஆன்லைனில் பார்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது சட்டப்பேரவைக்கு உள்ளே நடைபெறுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் முந்தைய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வழக்கை திரும்பப் பெறுவது என முடிவு எடுத்தால் அரசு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? - முன்னாள் எம்.பி.க்கு நீதிமன்றம் கேள்வி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 05:25:00
சென்னை: வழக்கை திரும்பப் பெறுவது என முடிவு எடுத்தால் அதற்காக அரசு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தனுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணாசாலையை ஒட்டியுள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம்பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தனிநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆணையத்தை கலைத்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, முந்தைய அதிமுகஆட்சியில் இது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்துமுந்தைய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற தற்போதைய அரசுமுடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் தன்னையும் இடையீட்டு மனுதாரராக இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா, நிராகரிப்பதா என்பது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அரசியல் உள்நோக்கம்: அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவது எனஅரசு ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டது. கடைசி நேரத்தில் இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என இடையீட்டு மனுதாரர் கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதற்கு முன்பாகவே அவர் கோரியிருக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அரசுக்கு முழு உரிமை உள்ளது’’ என வாதிட்டார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக முடிவு செய்துவிட்டால் அதற்கு எதிர்மனுதாரர்கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. இங்கே மூன்றாவது நபர் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. முந்தைய அதிமுக ஆட்சியிலும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வாக்கி - டாக்கி கொள்முதல் தொடர்பாகவும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில், அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது’’ என்றார். ஜெயவர்தன் தரப்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘பொதுநலன் தொடர்பான இந்தவழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? தற்போது இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவதற்கு அரசு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் இந்த வழக்கில் எங்களையும் இணைக்கக் கோருகிறோம்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவது என அரசு முடிவு செய்துவிட்டால் அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? என ஜெயவர்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயவர்தன் தரப்பில், இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும், 2023 ஜூலையில்தான் இந்த வழக்கை வாபஸ் பெறுவது என அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு முன்பாக வாபஸ் பெறும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதால் இந்த வழக்கில்தங்களை இணைக்கக் கோரவில்லை என்றும் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் முறிந்து விழுந்து 2 தொழிலாளிகள் காயம்
செய்திப்பிரிவு
ராமேசுவரம்
2024-02-02 04:06:00
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் பாக் நீரிணை கடலில் புதிய ரயில்வே பாலத்தின் மத்தியில் தூக்குப் பாலத்துக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இந்த தூண் அமைக்கும் பணிக்காக 32 டன் எடையுள்ள கோபுரப் பகுதியை கிரேன் மூலம் தூக்க முற்பட்ட போது இயந்திரக் கோளாறு காரணமாக கிரேன் முறிந்து விழுந்ததில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளான மாரியப்பன், கிறிஸ்டி ஆகிய இருவர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாம்பன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் கூலித் தொழிலாளி மனைவி - ஓராண்டுக்கும் மேலாக தொடரும் அவலம் @ அரும்பட்டு
செய்திப்பிரிவு
விழுப்புரம்
2024-02-02 04:04:00
விழுப்புரம்: திருவெண்ணை நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மயில் முருகன் என்பவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது: என் மனைவிக்கு இதயம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. தற்போது உயர் சிகிச்சை அளித்து மருத்துவம் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். என், மனைவிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் தரப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் பார்வைக்கு இக்கோரிக்கை வைக்கப்பட்டு, என் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என் மனைவியைக் காப்பாற்ற மாதம் ரூ.30 ஆயிரம் செலவாகிறது. என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் வாழ்வின் கடைசி விளிம்பில் உள்ள எனக்கு, முதல்வரின் நிவாரணத் தொகை வழங்கிட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயர் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல் வரை கேட்டுக்கொண்டார். மேலும் சிறிது நிதி உதவியும் அளித்து, அரசு சார்பில் மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என மனுதாரர் மயில் முருகனுக்கு நம்பிக்கையூட்டினார். இது குறித்து மயில் முருகனிடம் கேட்டபோது, “நான் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். கடந்தாண்டு ஜனவரி மாதம் என் மனைவி சிவகலா மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். அங்கு, ‘நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை இல்லை’ என்று கூறிவிட்டனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலமே அவர் சுவாசிக்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவச் செலவுகள் மாதம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுப்பதாக கூறியுள்ளனர். எங்களுக்கு ப்ளஸ் டூ படிக்கும் சுபாஷிணி ( 18 ), ப்ளஸ் ஒன் படிக்கும் அனுஹாசினி ( 16 ), 9-ம் வகுப்பு படிக்கும் தேவிபிரியா ( 13 ), 6-ம் வகுப்பு படிக்கும் ரியாசினி ( 11 ) ஆகிய பெண் பிள்ளைகள் உள்ளனர். என் மனைவியை உடன் இருந்து கவனித்து கொள்வதால், நான் வேலைக்கு செல்வதில்லை. தமிழக அரசு நிவாரண உதவி அளித்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரி வித்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை இல்லை என்று கூறிவிட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரியில் மழை
செய்திப்பிரிவு
நாகர்கோவில்
2024-02-02 04:02:00
தூத்துக்குடி / கோவில்பட்டி / திருநெல்வேலி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் நேற்று மிதமான மழை பதிவாகியுள்ளது. இரு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு பதிவான மழையளவு ( மி.மீட்டரில் ): பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி - 7.40, கருப்பாநதி - 24.50, அடவிநயினார், சிவகிரி - தலா 1, தென்காசி - 4.20, கடையநல்லூர் - 27, சங்கரன்கோவில் - 5. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 135.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 273 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 804 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.48 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 132 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 465 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 20.30 அடியாக இருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 78.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் 95 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 79.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்தது. 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் தூத்துக்குடி பகுதியில் தொடங்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான பணிகள் நிறுத்தப்பட்டன. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்ட தால் குளிர்ச்சி நிலவியது. கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் லேசான தூறல் விழுந்தது. காலை 8.15 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. 8.45 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. காலை 11.30 மணி வரை மழை தொடர்ந்தது. மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த வாறு பள்ளிகளுக்கு சென்றனர். மேலும், கோவில்பட்டி நகரச் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இளையரசனேந்தல் சாலை, கிருஷ்ணா நகர், லட்சுமி மில் ரயில்வே கேட் அருகே உள்ள சுரங்கப்பாதைகளில் சிறிதளவு தண்ணீர் தேங்கியது. கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பகல் 11 மணியளவில் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுங்கான்கடை, பேயன்குழி, குலசேகரம், பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 18 மி.மீ., மழை பெய்தது. பேச்சிப் பாறை, புத்தன் அமையில் தலா 14 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 10 மி.மீ., மழை பதிவானது.
“இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்” - அமைச்சர் உதயநிதி @ இடைக்கால பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-02 00:22:00
சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்த தனது கருத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. “ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி” என தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக்…
“பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட்” - திருமாவளவன் @ இடைக்கால பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 23:18:00
சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘இடைக்கால பட்ஜெட்’ முழுக்க முழுக்க பொய்களைக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது. 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் முதல் பகுதி முழுவதும் கடந்த ஐந்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் எனப் பலவற்றை அவர் பட்டியலிட்டார். 4 பக்கங்கள் மட்டுமே கொண்ட பட்ஜெட்டின் இரண்டாம் பகுதியில்தான் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பற்றியும் பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பழைய வரிகளே தொடரும், புதிய வரி எதுவும் இல்லை, வரி விலக்கும் இல்லை என்பதைத்தான் அந்தப் பகுதியில் நிதியமைச்சர் கூறியிருந்தார். தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதால் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் இதில் செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை. மோடி அரசின் பொருளாதார நிலை கவர்ச்சிகரமான அறிவிப்புகள் செய்யும் அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை, அது கடுமையான சிக்கலில் இருக்கிறது என்பதைத்தான் இதன் மூலம் அறியமுடிகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கான வேலை அட்டையோடு ஆதாரை இணைக்கவில்லை என்ற காரணத்தினால் சுமார் 11 கோடி பேரின் வேலை அட்டைகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி அட்டைகளை ரத்து செய்யும் நடவடிக்கையின் மூலமாக அரசாங்கத்துக்கு 2.7 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது என்று பட்ஜெட்டில் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று குடியரசுத் தலைவர் உரையில் 4 கோடியே 10 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த பட்ஜெட் உரையிலோ மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை அடையப் போவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு புள்ளி விவரங்களில் எது உண்மை என்பதை நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும். வீடுகளின் கூரைகளில் ‘சோலார் பேனல்களை’ பொருத்துவதன் மூலம் 300 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பெற முடியும் என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் மின்சார வாகனங்களுக்கு இதில் ‘சார்ஜ்’ செய்ய முடியும் என்றும், ஏராளமான இளைஞர்கள் இதனால் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 100 ஜிகாவாட் எரிசக்தி கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 7.40 ஜிகாவாட் மட்டுமே அப்படி உற்பத்தி செய்யப்பட்டது என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைச்சகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாதது முக்கியமான ஒரு காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்துவோம் என்று சொல்லி இருப்பது முன்பு சொல்லப்பட்டது போல வெற்று அறிவிப்புதானே தவிர வேறு அல்ல. மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த விமான நிறுவனமும் விற்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருப்பதாக பட்ஜெட்டில் பெருமைபட்டிருப்பது நகைப்புக்குரியதாகும். மாநிலங்களில் வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக 50 ஆண்டு காலத்துக்கு வட்டி இல்லாத கடன்களை கொடுப்பதற்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. 16-வது நிதிக் குழுவில் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு நீதியை உறுதிசெய்தாலே மாநிலங்கள் தடையின்றி வளர்ச்சி கண்டுவிடும். அதைச் செய்யாமல் செஸ், சர்சார்ஜ் என கூடுதல் வரிகளை விதித்து மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு கடன் கொடுக்கிறோம் எனச் சொல்வது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வகுப்பதற்கு உயர் அதிகாரக் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது தொகுதி மறு சீரமைப்பைத்தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறதா எனத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பி.எம் கிஸான் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்படவில்லை. தொகையும் உயர்த்தப்படவில்லை. அது போல மகளிருக்கு எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எந்த உயர்வும் அறிவிக்கப்படவில்லை. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 72 சதவீதம் பேர் வேலையின்மை ஒரு தீவிரமான பிரச்சினை என்று கூறியுள்ளனர். 56 சதவீதம் பேர் இது ‘மிகத் தீவிரமான பிரச்சினை’ எனக் கூறியுள்ளனர். 62 சதவீதம் பேர் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அன்றாட செலவுகளை நிர்வகிப்பதே இப்போது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும்தான் பயனடைந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது ஏதோ நாட்டில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடுவதுபோல பட்ஜெட்டில் கதையளந்திருப்பது அப்பட்டமான மோசடியாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் பரந்து பட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாத, பொய்யான புள்ளி விவரங்களையும், ஏமாற்றும் வாக்குறுதிகளையும் கோர்த்துக் கட்டப்பட்ட பட்ஜெட்டே இது. மோடி அரசின் இந்த மோசடி பட்ஜெட்டை மக்கள் நிராகரிப்பது உறுதி” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் | தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-01 21:27:00
சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24-ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளாம்பாக்கத்துக்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. மேலும், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் அங்கு இல்லை. கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த தயாராக இருப்பதாக" தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசை பாராட்ட வேண்டுமென கூறிய நீதிபதி, எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.
“சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல பொய்யுரை” - கே.பாலகிருஷ்ணன் @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 20:06:00
சென்னை: "இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இந்தியா முழுக்க சமூக நீதிக்கான குரல்களும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் தாங்களும் சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல ஒரு பொய்யுரையை நிதியமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள், கல்வி, சுகாதாரம், பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாக செலவழித்துவிட்டு அதன் காரணமாகவே நிதி பற்றாக்குறை குறைந்திருப்பதை பெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். இதைப் போல அனைத்து மக்களுக்குமான மானியங்களாக வழங்கும் உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள். வேலையின்மை கடந்த அக்டோபர், டிசம்பர் மாதத்தில் 20-24 வயதுக்கு உட்பட்டவருக்கு 44.5 சதவிகிதமாகவும், 25-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு 14.33 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் அறிவிப்பில் இல்லை. எந்த கணக்கீடும், தரவுகளுமின்றி 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பொய்யுரைத்திருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் மட்டும் மூன்றில் ஒருவர் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 26-ல் வாழ்க்கையை நடத்துவதற்கும், நகர்புறத்தில் ரூ. 32-ல் வாழ்க்கை நடத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில் இது எத்தனை மோசடி என்பது விளங்கும். இந்த நிலையிலும் வறுமை ஒழிப்புக்கு உருப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இருப்பதை மறைப்பதற்காகவே 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக அறிவித்துக் கொள்கிறார்கள். இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவாடல்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் போலவே இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், விவசாயத்துக்கும், பெண்களுக்கும் எதிரான பட்ஜெட்டாகும். புதிதாக எந்த முன்வைப்புகளும், திட்டங்களும் இல்லாத நிலையில் கடந்த காலத்தைப் போலவே பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள். மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் புதிய வரி விதிப்புக்கான வாய்ப்புகளும், மாநில அரசுகளிடமிருந்து ஜிஎஸ்டி வந்த பிறகு பறிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. சரியாகச் சொல்வது என்றால் மத்திய அரசு தான் வாங்கியுள்ள கடனுக்கு கட்டும் வட்டி அளவுக்குத் தான் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். 200 லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இந்தியா முழுக்க சமூக நீதிக்கான குரல்களும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் தாங்களும் சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல ஒரு பொய்யுரையை நிதியமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட யுஜிசி, உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள பட்டியலினத்தவர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களை பொதுப் பணியிடங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வந்ததும், இதற்கு முன்பும் இதுபோல நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டு, அரசு பணிகளுக்கும் ஆள் எடுக்காமல் இருக்கும் நிலையில் சமூக அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதியினருக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும். ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர். எனவே, வழக்கம் போல முழுமையான பட்ஜெட்டை போலவே இந்த பட்ஜெட்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாகவும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடையதாகவுமே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழகம் திட்டமிட்டு புறக்கணிப்பு” - முதல்வர் ஸ்டாலின் @ இடைக்கால பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 19:06:00
சென்னை: "தமிழக மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக் குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள். மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழக மக்கள் இளித்தவாயர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா? காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும். மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை. மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் மத்திய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை மத்திய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்? இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ("four major castes") என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது. "சமூகநீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பாஜக பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பாஜக அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; ஜூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள். 2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி, பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இண்டியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும். தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சேதமான மண்டபம் எப்போது சீரமைக்கப்படும்? - உயர் நீதிமன்றம்
கி.மகாராஜன்
மதுரை
2024-02-01 18:23:00
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபம் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்த ராயர் மண்டபம் சேதம் அடைந்தது. இந்த மண்டபம் மிகவும் பழமையானது. ஏராளமான கலை சிற்பங்கள் இருந்தன. எனவே தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபத்தை பழமை மாறாமல் புனரமைக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கை தொடர்பாக மேலும் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி தெடர்ந்து நடைபெற்று வருகிறது. மண்டபத்தில் இருந்த பழைய கற்கள் போலவே புதிய தூண்கள் வடிவமைக்கப்படுகிறது. இந்த கல் தூண்களுக்காக நாமக்கல் மாவட்டம் குவாரிகளில் இருந்து கற்கள், மதுரை செங்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தூண்கள் வடிவமைக்கப்படுகிறது'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், ''தீ விபத்து நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணியில் தற்போதையை நிலை என்ன? இன்னும் எவ்வளவு நாட்களில் இந்தப் பணிகள் முடியும் என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சட்டப்பேரவையில் பிப்.12-ல் ஆளுநர் உரை; பிப்.19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 18:00:00
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174/1-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தினை, வரும் பிப்.12-ம் தேதி, காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176/1-ன் கீழ், அந்த கூட்டத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உரை நிகழ்த்துகிறார். மேலும், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதியன்று தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து, பிப்.20ம் தேதி, 2024-25ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையினையும், வரும் 21-ம் தேதி 2023-24 ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்யவுள்ளார், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நீதிமன்றம் சட்டப்பேரவை, சட்டப்பேரவைத் தலைவரை கட்டுப்படுத்தாது. அவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ, அது வேறு விஷயம். ஆனால், சட்டப்பேரவைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும், சட்டப்பேரவைத் தலைவருக்குத்தான் உண்டு என, நானும் கூறுகிறேன். இதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலும், சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
“34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை” - அன்புமணி ஆதங்கம் @ பாமக சிறப்பு பொதுக்குழு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 17:49:00
சென்னை: "திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள்.வருகிறார். ஆனால், பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். சென்னையில் இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது "ஒரு கட்சியினுடைய வெற்றியை எப்படி நிர்ணயம் செய்வது? எப்படி எடை போடுவது? சிறந்த கொள்கை, அதிகமான இளைஞர்களைக் கொண்டது, அதிகமான போராட்டங்களைச் செய்த கட்சி, தொலைநோக்கு திட்டங்கள் அதிகமாக கொண்டு கட்சி என்றால் அது பாமகதான். ஆனால், ஒரு கட்சியினுடைய வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. அக்கட்சியில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை வைத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்காகத்தான், நாம் அரசியல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்கள் மனதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், ஆட்சியதிகாரம் வந்தால்தான், மக்களும், ஊடகங்களும் அப்போதுதான் முதன்மையான கட்சி என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் 56 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகின்றன. அவர்களை விட அதிக தகுதியும், திறமையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கட்சி பாமக. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 44 ஆண்டு காலமாக, அடித்தள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உழைப்பை இந்தியாவில் உள்ள வேறு எந்த தலைவர்களும் செய்தது கிடையாது. சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு விருதுகளை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்தபிறகு, எனக்கு மிகப்பெரிய ஒரு வருத்தம் இருந்தது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் போன்ற விருதுகளை எல்லாம் வழங்கினார்கள். அதிலும், பாரத ரத்னா இந்தியாவின் முதன்மை விருது அதுதான். அதை சமூக போராளி, மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு வழங்கினார்கள். தகுதியானவர், நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும். ஆனால், எனக்கு பெரிய வருத்தம். 85 வயதில், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அந்த விருதை ஏன் வழங்கவில்லை என்ற ஓர் ஆதங்கமும் வருத்தமும் எனக்கு இருந்தது. அது நியாயமான வருத்தம்தான். கர்பூரி தாக்கூர் பிஹாரின் முன்னாள் முதல்வர், முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர். பிஹாரில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர். அதனால், அவருக்கு கொடுத்துள்ளனர், அதை பாராட்டுகிறோம். முதல்வராக இருந்து சாதனைகள் செய்வது பெரிய காரியமே கிடையாது. ஆனால், தனக்கு பதவியும், பொறுப்பும் வேண்டாம். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எனது கால்கள் படாது எனக்கூறி, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் சாதனை செய்வதுதான், அதுதான் உயர்ந்த சாதனை. இந்தியாவிலேயே 6 இடஒதுக்கீடுகளைப் பெற்று தந்தவர் நம்முடைய தலைவர் ராமதாஸ்தான். திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 1949-ல் கட்சியைத் தொடங்கி, 1967-ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 72-ல் தொடங்கி, 1977-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனால், பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?. மக்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது, அதை அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும்" என்று அவர் பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விரைவில், நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம். எங்களது பல இலக்குகளில், தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் ஒன்று. அதன் அடிப்படையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதற்கேற்ப வியூகங்களை நாங்கள் அமைப்போம். அந்த முடிவுகளை விரைவில் நாங்கள் அறிவிப்போம்" என்றார்.
உருவப்படத்தைக் கிழித்து ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் @ உதகை
ஆர்.டி.சிவசங்கர்
உதகை
2024-02-01 17:39:00
உதகை: உதகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் படத்தை அதிமுகவினர் காலணிகளால் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆ ராசா. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். சமீப காலமாக ஆ.ராசா பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி ஆ.ராசா பேசியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவை சேர்ந்தவர்கள் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில், உதகையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக நகர செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சியினர், திடீரென ஆ.ராசாவின் உருவப்படத்தை எடுத்து வந்து, அதைக் கிழித்தும், கீழே போட்டு மிதித்தும், காலணிகளால் அடித்தும் அவமதிப்பு செய்தனர். மேலும், ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாரிசுப் பணி கேட்டு தேவநேய பாவாணரின் கொள்ளுப் பேத்தி ஓராண்டாக போராட்டம்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-01 17:34:00
மதுரை: தனது தாய் இறந்துவிட்டதால் அவர் பார்த்து வந்த பணியை தனக்கு வழங்குமாறு தேவநேய பாவாணரின் கொள்ளுபேத்தி கடந்த ஓராண்டாக போராடி வருகிறார். தமிழ் மொழிக்காக வாழ்ந்து மறைந்த 'மொழி ஞாயிறு' தேவநேய பாவாணர் நினைவு மணி மண்டபம், மதுரை கே.கே.நகரில் 80 அடி சாலையில் உள்ளது. இந்த மணி மண்டபத்தில் தேவநேய பாவணரின் திருவுருவச்சிலை உள்ளது. 2007ம் ஆண்டு இந்த மணிமண்டபத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில் பாவாணரின் பேத்தியான ஏ.எம்.டி.பரிபூரணத்தையே பொறுப்பாளராக நியமனம் செய்து, அரசு பணி வழங்கினார். பேத்தியையே மணி மண்டபம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அரசு பணியாளராக மட்டுமில்லாது அந்த மணி மண்டபத்தை கோவில் போல் உருக்கமாக பராமரித்து வந்தார். தன்னுடைய தாத்தாவின் வரலாறு, குடும்ப வரலாறு அறிந்த அவர், தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பெருமைகளை மணிமண்டபத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எடுத்து கூறி வந்தார். கடந்த 2022ம் ஆண்டில் ஏ.எம்.டி.பரிபூரணம் உடல்நலகுறைவால் இறந்துவிட்டார். அதன்பிறகு 7 மாதமாக மணி மண்டபம் பொறுப்பாளர் இல்லாமலே இயங்கி வந்தது. அது சர்ச்சையானதால் அதன்பிறகு ஒரு ஊழியரை போட்டு, தற்போது மணி மண்டபம் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாவணர் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம் இறந்த வாரிசு வேலையை அவரது மகள் மனோசாந்தி (தேவநேய பாவாணரின் கொள்ளுப்பேத்தி) தனக்கு வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதைதொடர்ந்து, மனோசாந்தி வாரிசுப் பணியை பரிசிலிக்க அரசு கூறியது. ஆனால், அவரது மனுவை பரிசிலனை செய்து அதிகாரிகள், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால், தற்போது வரை, தனது தாத்தாவின் மணிமண்டபத்தில் தனது தாயை போல் பணிபுரிய முடியாமல் கவலையடைந்துள்ளார். இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ''எனது பூட்டன் மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் அர்ப்பணிப்புமிக்க தமிழ் பணியையும், அவரது வரலாற்றையும் மணிமண்டபத்திற்கு வரும் அனைத்து மக்களுக்கு எடுத்துக்கூற பாவாணரின் மரபு வழி பேத்தியான எனக்கு வாரிசு பணி வழங்க விண்ணப்பித்து ஒரு ஆண்டாகிவிட்டது. நான் பி.காம்.சிஏ படித்துள்ளேன். துறை சார்ந்த அதிகாகளிடம் கேட்டபோது எனது தாயாரின் பணி முதல்வரால் வழங்கப்ட்டதால் தற்போதும் உங்களுக்கான வாரிசுப் பணியும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஒப்புதலின் பேரில்தான் வழங்க முடியும் என்கிறார்கள். அதன் அடிப்படையில் தாங்கள் எனது பூட்டன் தேவநேய பாவாணரின் மணிமண்பத்தில் எனது தாயை போல் சிறப்பாக பணிபுரிய வாய்ப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
‘பொங்கல் போனஸ்’ அறிவித்தும் இதுவரை கிடைக்காத கலைஞர் நூலகத்தின் நூலகர்கள்!
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-01 17:14:00
மதுரை: கடந்த ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்தது. தமிழக அரசில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இந்த பொங்கல் போனஸ் வழங்கியது. பொங்கல் பண்டிகையை கொண்டாவதற்கு செலவிடவே, அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு அவர்கள் குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில், மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலே செயல்படும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உதித்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து மதுரை கலைஞர் நூலகம் பணிபுரியும் நூலகர்கள் கூறுகையில், "கலைஞர் நூலகத்தில் 30 நிரந்தர பணி நூலகர்கள் பணிபுரிகிறார்கள். அனைவரும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இடமாறுதலாகி வந்தவர்கள். ஆரம்பத்தில் சில மாதமும், இந்த இடமாறுதலால் ஊதியமே வழங்கப்படவில்லை. முன்பணம் பெற்று வங்கி தவனைகளை சமாளித்து வந்தோம். அதன் பிறகு தற்போது கடந்த 2 மாதமாகதான் ஊதியமும் ஒழுங்காக வருகிறது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் போனஸ் எங்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது. கலைஞர் நூலகத்தில் மொத்த முள்ள 30 நூலகர்களில் 3 பேர் மாவட்ட நூலகர் அளவில் ஊதியம் பெறக்கூடிய அதிகாரிகள். இவர்கள் 54,500 அடிப்படை ஊதியம் பெறக் கூடியவர்கள். இவர்களுக்கு பொங்கல் போனஸ் கிடையாது. அடிப்டை ஊதியம் 9,300 பெறும் 11 நூலகர்களுக்கும் பொங்கல் போனஸ் கிடையாது. ஆனால், அடிப்படை ஊதியம் 5,200 பெறும் "சி" பிரிவு 16 நூலகர்களுக்கு முதல்வர் பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் பொங்கல் போனஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதற்கு, கலைஞர் நூலகத்தில் இன்னும் நிர்வாகத் துறைக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்படாததே முக்கிய காரணம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு மதுரை கலைஞர் நூலகம் இயக்கப்படுகிறது. இந்த நூலகத்திற்கு இதுவரை தனி தலைமை நூலகர் மற்றும் தகவல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. கண்காணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. நூலர்களிலே ஒருவரே நிர்வாகப் பொறுப்பை கவனிக்கிறார். பொது நூலகத்துறைக்கு தனி ஐஏஎஸ் அதிகாரி இயக்குனராக நியமிக்கப்பட வில்லை. கல்வித் துறையை சேர்ந்த இணை இயக்குனர் ஒருவரே தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அதிகாரியாக உள்ளார். அவரே, கலைஞர் நூற்றாண்டு நூலகப் பொறுப்பையும் சென்னையில் இருந்து கொண்டே கண்காணிக் கிறார். கல்வித் துறை பொறுப்பை பார்த்துக் கொண்டு அவரால் நூலகப் பணி நிர்வாகத்தையும் கவனிக்க முடியவில்லை. ஆனால், கல்வித் துறை அதிகாரிகள், பொது நூலக நிர்வாகப் பொறுப்புகள் தங்கள் கையை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காகவே கல்வித் துறை அதிகாரியையே கூடுதல் பொறுப்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகப் பொறுப்புகளையும் கவனிக்க கூறியுள்ளனர். பொது நூலகத் துறைக்கு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமித்தால் மட்டுமே நூலகங்களுக்கும், அதில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்வாதாரமும் உயரும். தற்போது பொங்கல் போனஸ் வழங்குவதற்கு கலைஞர் நூலகர்களுக்கு அரசு நிதி ஒதுக்கி விட்டது. ஆனால், அதை நூலகர்களுக்கு உரிய காலத்தில் வழங்க முடியாமல் போவதற்கு கல்வித் துறை அதிகாரிகளுடைய கூடுதல் பணிபழுவும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து கலைஞர் நூலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நிதி வந்துவிட்டது, ஒரிரு நாளில் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டுவிடும்" என்றார்.
‘தமிழகத்தில் 14% மருத்துவர்கள் பற்றாக்குறையால் புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்’
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-01 16:16:00
மதுரை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 சதவீத மருத் துவர்கள் பற்றாக்குறையால் புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த காலத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில், தமிழகத்தில் ஆய்வுக்கு வரும்போது மருத்துவக் கல்லூரிகளின் விவரம் முன்கூட்டியே தெரியவரும். அதனால், அதற்கு தகுந்தாற்போல மருத்துவக்கல்லூரி இயக்குநரகம், போதுமான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி இருப்பர். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேசிய மருத்துவக் கவுன்சில் நிர்வாகம், ஒரே நேரத்தில் எந்த மருத்துவக் கல்லூரிக்கு வேண்டுமென்றாலும் ஆய்வுக்கு செல்வோம் என எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் அடுத்த மாதம் முதல் தேசிய மருத்துவக் கவுன்சில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்த உள்ளனர். தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், அதிமுக ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது அவை போதுமான கட்டமைப்புகளுடன் இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், அக்கல்லூரிகளில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் போதுமான அளவு நிரப்பப்படவில்லை. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், தேசிய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக்கு வர உள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிகள், அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டாமல் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதற்கான ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கையால் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமில்லாது, பல பழைய அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கே சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: தேசிய மருத்துவக் கவுன்சில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டை கட்டாயமாக்கி உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராத வகையில் உள்ளன. பயோ மெட்ரிக் நடைமுறை வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறவில்லை. வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு ரகசிய ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் கொண்டு வந்தால், நிதிப் பாதுகாப்பு நடைமுறைகளில் சிக்கல் ஏற்படலாம். ஆதார் அடிப்படையில்லாமல் சாதாரண பயோமெட்ரிக் நடைமுறையை கொண்டு வரலாம் என நீதிமன்றம் மூலம் அணுகுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், பணியாட்களே நியமிக்காமல் கல்லூரிகளை இயக்குவர் எனக் கூறப்படுவதால், அதை தடுக்கவே இந்த பயோ மெட்ரிக் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அப்படி இல்லை. அதனால், ஓர் இடத்தில் தவறு நடந்ததை வைத்து ஒட்டுமொத்த மருத்துவர்களையும் குறை கூறக்கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள் சில நேரங்களில் சரியான காரணங்களுடன் 20 நிமிடம் தாமதமாக வரலாம். ஆனால், 5 நிமிடம் தாமதம் என்றாலும் ஆப்சென்ட் என குறிப்பிடுகின்றனர். அரசு, நேரக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல், மருத்துவக்கல்லூரிகள் அங்கீ காரத்தை தக்க வைக்க முடியாது. பயோமெட்ரிக் வருகை பதிவேடு, அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள பணியிடங்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண மருத்துவக் கல்வி இயக்குநரகம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து இந்த குழுவை நியமிக்க வேண்டும். தேசிய மருத்துவ கவுன்சில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தவிர பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் ஆய்வு செய்யலாம். தமிழகத்தில் தற்போது 18 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தற்போது 3,500 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் அளவில் 800 முதல் 900 பணியிடங்கள் உள்ளன. நோயாளிகள் வருகைக்கு தகுந்தாற்போல், புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு அடிப்படையில் மருத்துவர்கள் பணி நியமனமும் செய்யப்படவில்லை. இந்த பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் நிலையில் தேசிய மருத்துவக் கவுன்சில் ஒரே நேரத்தில் எந்த கல்லூரியில் ஆய்வுக்கு சென்றாலும் சிக்கல் ஏற்படலாம். தேசிய மருத்துவக் கவுன்சில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையை மட்டுமே அனுமதிக்கும். 14 சதவீதம் காலி பணியிடம் இருந்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகும். இதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். ஆகவே 14 சதவீத பணியிட பற்றாக்குறையை 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 16:14:00
சென்னை: மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில் நடந்த பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் இன்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருந்த 5 பொருட்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது இது தற்காலிக நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் அரைநூற்றாண்டு ஆகப்போகும் நிலையில் இன்றுவரை அந்த 5 பொருட்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும். இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் பா.ம.க-வுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததில் முதன்மை காரணமாக இருந்தது பா.ம.க.வுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான். மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரத்தை வழங்குகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல்” - ஸ்டாலின் கண்டனம் @ ஹேமந்த் சோரன் கைது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 16:12:00
சென்னை: ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. இந்தச் செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரமான செயல்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் செயல்களுக்கு தலைவணங்காமல் உறுதியோடு நின்று இன்னல்களை எதிர்கொள்ளும் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது. அவரது உறுதிப்பாடு பாஜகளின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் உத்வேகம்” எனத் தெரிவித்துள்ளார்.
“நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்” - ஓபிஎஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 16:07:00
சென்னை: “எம்ஜிஆரை ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக திமுக ஆட்சி தமிழகத்தில் காலூன்றுவதற்கு முழுக் காரணமாக விளங்கியவர் எம்ஜிஆர். "முகத்தை காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் கிடைக்கும்" என்று அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். கட்சிக் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கி “பால் குடித்த வீட்டிற்கு பாதகம்” செய்த தீய சக்திகளை அகற்றி, அஇஅதிமுக ஆட்சியை தமிழகத்துல் அமைத்து, மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேற்றியதன் விளைவு, அவர் உயிரோடு இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. இதற்குக் காரணம் மக்கள் அவர்மீது வைத்திருந்த அளவற்ற அன்புதான். “தங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுப்பார்கள். இப்போது மண்ணை தோண்டி தங்கத்தைப் புதைக்கிறார்கள்” என்று எம்ஜிஆர் மறைவின் போது வருணனை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு, மக்களை ஈர்க்கும் காந்த சக்தியை படைத்ததால்தான், மண்ணைவிட்டு மறைந்து பல ஆண்டுகள் கடந்தும், மக்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் எம்ஜிஆர். தன்னலத்தை ஒதுக்கி மக்கள் நலனுக்காக எம்ஜிஆர் பாடுபட்டதால்தான் மத்திய அரசு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்தது. மக்களின் மனங்களில் இன்றளவிலும் குடிகொண்டு இருப்பவரும், கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரரும், மக்கள் நலத்திற்காக மகத்தான திட்டங்களைத் தீட்டியவருமான எம்ஜிஆரை குடும்பக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பேசியுள்ளது தி.மு.க.வுக்கும், ஆ.ராசாவுக்கும் தான் இழுக்கே தவிர எம்ஜிஆருக்கு அல்ல. இருப்பினும், இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக் கொள்ள வேண்டும். நாவடக்கம் இல்லாமல் பேசும் ஆ.ராசாவுக்கு, ‘நாவை அடக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்’ என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக் காட்டுவதோடு, வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், ஆ.ராசாவும் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மல்லப்பாடி - மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே ரூ.2.34 கோடியில் பாலம் கட்டும் பணி தொடக்கம்: கிராம மக்கள் மகிழ்ச்சி
எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி
2024-02-01 16:00:00
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மல்லப்பாடி-மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே ரூ.2.34 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லபாடி கிராமத்திலிருந்து மரிமானப்பள்ளி, காவேரி நகர், வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜூநாயுடு கெட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டிகானூர், மஸ்திகானூர் ஆகிய கிராமங்களுக்கு அப்பகுதியில் உள்ள பாம்பாற்றை கடந்து செல்லும் நிலையுள்ளது. மழைக் காலங்களில் பாம்பாற்றில் தண்ணீர் செல்லும் போது ஆற்றைக் கடந்து செல்வதில் மக்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இச்சிரமத்தைப் போக்க ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இப்பிரச்சினை தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 2023 செப்டம்பர் மாதம் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மல்லப்பாடி-மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நபார்டு திட்டத்தின் (2023-24) கீழ் ரூ.2 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்குத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், பாலம் கட்டும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். ஆட்சியர் கே.எம்.சரயு, செல்லகுமார் எம்பி, எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுதொடர்பாக காவேரி நகரைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் உள்ளிட்ட சிலர் கூறியதாவது: எங்கள் ஊரிலிருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிக்கு மழைக் காலங்களில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது ஆற்றைக் கடந்து செல்வதில் சிரமம் இருந்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் சிப்காட், அச்சமங்கலம் கூட்டுரோடு வழியாக அல்லது கப்பல்வாடி, சிகரலப்பள்ளி, சக்கில்நத்தம், மல்லபாடி வழியாக பர்கூருக்கு சுமார் 10 முதல் 15 கிமீ சுற்றிச் செல்ல வேண்டி நிலை உள்ளது. தற்போது, உயர்மட்ட பாலம் கட்டப்படுவதால், சிரமமின்றி ஆற்றைக் கடந்து செல்ல வழி கிடைக்கும் என்பதால், மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். விழாவில், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், பர்கூர் பேரூராட்சித் தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை” - இரா.முத்தரசன் @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 15:55:00
சென்னை: "நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை ராமர் கோயிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது. கானல் நீர் காட்டி தாகம் தீர்க்கும் தண்ணீர் இருப்பதாக கூறும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கானல் நீர் காட்டி தாகம் தீர்க்க முயலும் நிதிநிலை அறிக்கை. நாட்டின் பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-க்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு வழங்கிய சில உதவித் திட்டங்களை தொகுத்துக் கூறியுள்ள நிதியமைச்சர் நாடு 2027-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடாக உயரும் எனக் கூறுகிறார். கரோனா நோய் பெருந்தொற்று தீவிரமாக பரவிய நிலையிலும் விவசாயிகளின் சாகுபடி நிலங்களை பறித்து, பெரும் குழும நிறுவனங்களுக்கு வழங்கும் வேளாண் வணிக சட்டங்களையும், மின்சார சட்ட திருத்த மசோதாவையும் எதிர்த்தும், விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க, சிதைக்க, சிதறடிக்க மத்திய அரசும், பாஜகவும் சகல முயற்சிகளையும் மேற்கொண்டு தோற்றுப் போனது. இறுதியில் விவசாயிகளுக்கு உறுதிமொழி அளித்து வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெற்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதியை மறந்து, விவசாயிகளை வஞ்சித்து வருவதை நிதிநிலை அறிக்கையும் வெளிப்படுத்துகிறது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், மத்திய தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும் அதன் கோரிக்கைகளை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளாத நிதி நிலை அறிக்கை மத்திய அரசின் ஏதேச்சதிகார கார்ப்ரேட்டு ஆதரவுக் கொள்கையை உயர்த்தி பிடிக்கிறது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 நிர்ணயித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நேரடி வரி செலுத்தும் பிரிவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி குறைத்து, மேலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பதாக முழங்கும் நிதி நிலை அறிக்கை ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டிருப்பது குறித்து மவுனமாகிவிட்டது. நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை ராமர் கோவிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது. கானல் நீர் காட்டி தாகம் தீர்க்கும் தண்ணீர் இருப்பதாக கூறும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
“நாட்டின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்ட பட்ஜெட்” - ஜி.கே.வாசன் கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 15:53:00
சென்னை: "பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுகிறது, செயல்படுத்தப்படும்" என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் பாராட்டுக்குரியது. காரணம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி செய்ய இருக்கும் மத்திய அரசுக்கு முன்னேற்பாடான, பயனுள்ள பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுகிறது, செயல்படுத்தப்படும். கல்வியில் சீர்திருத்தத்தை புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்திய பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வும் கட்டுக்குள் உள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிக்க தனிக்குழு அமைக்கப்படும். அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். வீடுகளில் (சோலார்) சூரிய மேற்கூரை அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். புதிய விமான நிலைய விரிவாக்கம் தொடரும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்துக்கு உயர்த்தப்படும். பாதுகாப்பு துறைக்கு நிதி 11,11,111 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படும். சரக்கு ரயிலுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். மக்களின் வருவாய் 50 % உயர்ந்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 5.8 % ஆக இருக்கும் என்பதையும், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்கு 30.80 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது குறுகிய சில மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால் அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கம் நிறைவேற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் ஆகியவை மத்திய அரசின் தாரக மந்திரம் என்பதால் அதனை உறுதி செய்யும் வகையில் ஆட்சி செய்து வளமான மாநிலங்கள், வலிமையான பாரதம் அமைய இந்த இடைக்கால பட்ஜெட் பயன் தரட்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 6-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததையும், பட்ஜெட்டில் உள்ள முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டால் அவரது பொருளாதார நிபுணத்துவம், மக்கள் மீதும், நாட்டின் மீதும் கொண்டுள்ள அக்கறை ஆகியவை வெளிப்படுகிறது என்பதால் மத்திய நிதியமைச்சரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 2024 -2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கான பட்ஜெட்டாக, 2027-ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும் பட்ஜெட்டாக அடுத்து அமைய இருக்கும் மத்திய அரசுக்கு முன்னேற்பாடான, பயனுள்ள பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று கூறி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“10 ஆண்டு கால பாஜக அரசு தோல்வியின் பிரதிபலிப்பு” - வைகோ @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 15:50:00
சென்னை: "பத்தாண்டுகளில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், தமிழ்நாட்டில் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மூச்சு விடவில்லை. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு- செலவு திட்ட அறிக்கையில் , பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா காலகட்டத்துக்கு பின்பு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி என்பது 7 விழுக்காடு அளவை தொடவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த கடன் 14.13 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும்போது மேலும் பொது சந்தையில் 11.75 லட்சம் கோடி நிதி கடனாக திரட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் குறையவில்லை. 2023 நவம்பரில் சில்லறை பண வீக்கம் 5.55 விழுக்காடு ஆக இருந்தது டிசம்பர் மாதம் 5.69 விழுக்காடு அளவாக உயர்ந்திருக்கிறது. இதனால் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருகிறது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை இந்திய அரசு குறைக்கவில்லை. இதுவும் விலைவாசி ஏற்றத்துக்கு அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசின் வாக்குறுதி படி ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டவில்லை. 2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3.2 விழுக்காடு அளவாக இருந்தாலும், வேலை வாய்ப்பைப் பெறுவதில் நாடு முழுவதும் சமமற்ற தன்மையை நீடிக்கிறது. உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அரசு கூறினாலும், அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மைத் துறையின் பங்கு குறைந்து வருகிறது. வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விவசாயிகளின் வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கப் படும் என்ற கடந்த கால அறிவிப்புகள் கானல் நீரானது என்பதே உண்மை ஆகும். 2014-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆதார் இணைப்பு இல்லை என்று 11 கோடி ஏழை மக்களை பயனாளிகள் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு நீக்கி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஏழை நடுத்தர மக்களுக்கு சென்றடையவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பலன் அடைந்திருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையிலும் கார்ப்பரேட் வரி 22 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி தொழில் துறை வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்த உற்பத்தியில் 49 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்றன. ஆனால் அவை சந்திக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மத்திய பாஜக அரசு முன் வரவில்லை. ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு உரிய விகிதாச்சார நிதிப் பகிர்வு அளிக்கப்படாமல், மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை தான் ஏற்படுத்தும். பத்தாண்டுகளில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், தமிழ்நாட்டில் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மூச்சு விடவில்லை. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை போல தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயர்வதை மறைமுகமாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். புத்தாக்க ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு, பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு அமைக்கும் குடியிருப்புகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கவையாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
“வறுமையை ஒழிக்க எந்த அறிவிப்பும் இல்லை” - கே.எஸ்.அழகிரி @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 15:47:00
சென்னை: "மோடி ஆட்சியினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயனடையவில்லை. குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகள், அதுவும் அதானி, அம்பானி போன்றவர்கள் சொத்துகளை குவிப்பதற்கு உதவியாக இருந்ததே தவிர, ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்தகைய ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் பாஜகவுக்கு புகட்டப்படும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசின் 10 ஆண்டு ஆட்சியில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசு நிர்வாக செலவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இருக்குமேயொழிய பெரிய திட்டங்களை அறிவிப்பது மரபாக இருந்ததில்லை. ஆனால், அந்த மரபுகளை மீறுகிற வகையில் மக்களவை தேர்தலை மனதில் கொண்டு சில கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. | முழுமையாக வாசிக்க > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள் 2014 -ல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத மத்திய பாஜக அரசு சாதனைகள் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று சொன்னார்கள். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி 20-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 44.5 சதவிகிதம் பேர் கடந்த நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அதேபோல, 25 முதல் 29 வயதானவர்களில் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 14.33 சதவிகிதத்தினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் 10 ஆண்டுகளில் 20 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய மத்திய பாஜக அரசு அதற்கு மாறாக வேலையில்லா திண்டாட்டத்தை தான் அதிகரித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சராசரி நிதி பற்றாக்குறை 4.36 சதவிகிதமாக இருந்தது. அது 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டு மோடி ஆட்சியில் 5.13 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 80 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான 100 சதவிகித கடனுள்ள நாடாக 2027-ல் மாறிவிடும் என சர்வதேச நிதி நிறுவனம் எச்சரித்திருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மானியங்கள் 2.27 சதவிகிதமாக இருந்தது. அது கடந்த நிதியாண்டில் 1.34 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், விவசாயிகளின் உரமானியம், உணவு மானியம், பெட்ரோல் - டீசல், எரிவாயு மானியம் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு உற்பத்தி துறையை பெருக்குவதற்கு தொழில் வளர்ச்சிக்கான எந்த கொள்கையும் இல்லை. டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இணையாக கடந்த 10 ஆண்டுகளில் எந்த சீர்திருத்தமும் மோடி அரசால் கொண்டு வரப்படவில்லை. அப்பொழுது வரி சீர்திருத்தங்கள் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முதலீடுகள் பெருகியது. தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. வேலை வாய்ப்பும் உயர்ந்தது. அத்தகைய தொலைநோக்கு கொள்கைகள் எதுவும் மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்டதில்லை. பொதுவாக மத்திய அரசின் புள்ளியியல் நிறுவனம் நாட்டின் வளர்ச்சி குறித்து அறிவிப்புகளை செய்து வந்தது. ஆனால், பாஜக அரசு அதில் தலையிட்டு அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையை மாற்றி, தவறான புள்ளி விவரங்களை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிக்கான புள்ளி விவரங்கள் குறைக்கப்பட்டு, மோடி ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டதாக தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது. சுயேட்சையாக செயல்பட்ட மத்திய அரசின் புள்ளியியல் நிறுவனம் தற்போது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்திருக்கிறது. அதேபோல, நிதி ஆயோக் தனித்தன்மையுடன் செயல்பட முடியாமல் பாஜக அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசில் டாக்டர் மன்மோகன்சிங்குக்கு இணையான தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் எவரும் இல்லை. 1991-ல் நிதியமைச்சராகவும், 2004-ல் பிரதமராகவும் பொறுப்பேற்று 10 ஆண்டு கால ஆட்சியில் அவரால் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றது. அதற்கு துணையாக அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்ளிட்ட பல திறமைமிக்க அமைச்சர்களும், பொருளாதார அறிவு நிரம்பிய அதிகாரிகளும் இருந்தார்கள். ஆனால், இப்போது சர்வதேச அங்கீகாரம் கொண்ட எந்த பொருளாதார நிபுணர்களும் மத்திய பாஜக அரசில் இல்லை. அதற்கு காரணம், சுயேட்சையான சிந்தனை உள்ளவர்கள் எவரும் மோடி ஆட்சியில் செயல்பட முடியாது என்பதே காரணமாகும். சமீபத்தில் பிரதமர் மோடி பேசும் போது 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக கூறியிருக்கிறார். 2023 உலக பசிக் குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 107-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை 60-வது இடத்திலும், பாகிஸ்தான் 102-வது இடத்திலும் இருக்கும் போது இந்தியா 111-வது இடத்தில் இருப்பதைப் போல வேறு என்ன அவலம் இருக்க முடியும் ? சமீபத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்குகிற திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதே நாட்டில் வறுமை ஒழியவில்லை என்பதற்கு சரியான சான்றாகும். 2023-24 இல் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவேன் என்று சூளுரை மேற்கொண்டார் பிரதமர் மோடி. அந்த இலக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. அது இப்போது 2027-28க்கு தள்ளி போடப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், பொருளாதார வல்லரசாக மாற்றுவேன் என்று கூறுகிற பிரதமர் மோடி இந்தியாவின் தனிநபர் வருமான வரிசையில் உலக நாடுகளில் 143-வது இடத்தில் இருப்பதை அவரால் மறுக்க முடியாது. மோடி ஆட்சியினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயனடையவில்லை. குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகள், அதுவும் அதானி, அம்பானி போன்றவர்கள் சொத்துகளை குவிப்பதற்கு உதவியாக இருந்ததே தவிர, ஏழைஎளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்தகைய ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் பாஜகவுக்கு புகட்டப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
”ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” - சு.வெங்கடேசன் எம்.பி கருத்து @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 14:36:00
சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் "ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்" என்று கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் "கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ்: பிரதமர் மோடி ஜனவரி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டேகால் வருடங்கள் கழித்துதான், கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மதுரை எம்.பி,யான சு.வெங்கடசேன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் தொடர்பான மேற்கோள்களுக்கு இவ்வாறாக பதில் கொடுத்துள்ளார்.
“பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை” - குடியரசுத் தலைவர் உரை குறித்து திருமாவளவன் விமர்சனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 14:07:00
சென்னை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன் கிழமை (நேற்று) குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது என குடியரசுத் தலைவர் உரை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சனம் செய்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது. பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்! ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் பட்ஜெட்டுக்கு முன்பாக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபு. அந்த உரை ஆளும் அரசால் தான் தயாரித்துத் தரப்படுகிறது என்றாலும், குடியரசுத் தலைவர் என்ற பதவியின் மாண்பையும் கண்ணியத்தையும் காப்பதாகவே அந்த உரை அமைக்கப்படும். ஆனால் அந்த மரபுக்கு மாறாக தேர்தல் கூட்டங்களில் தாங்கள் முன்வைக்கும் பொய்களை எல்லாம் கலந்து ஒரு பரப்புரையாகக் குடியரசுத் தலைவர் உரை பாஜக அரசால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது குடியரசுத் தலைவர் என்ற பதவியை அவமதிக்கும் செயலாகும். பாஜக அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உண்மைக்கு மாறான தகவல்களாக இருக்கின்றன. நாலு கோடியே 10 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் தகவலே அதற்குச் சான்று. வளர்ச்சி பெற்ற இந்தியாவின் நான்கு தூண்களாக இளைஞர் சக்தி, மகளிர் சக்தி, விவசாயிகள், ஏழை மக்கள் ஆகியோர் விளங்குகிறார்கள் என்றும், அவர்களை அதிகாரப்படுத்துவதற்காக ஓய்வின்றி இந்த அரசு உழைக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஆட்சியில் தான் இளைஞர்கள் அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்படுகின்றனர். 2014 இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபோது வேலையின்மை சதவீதம் 5.4% ஆக இருந்தது. 2023 அக்டோபரில் அது 10.5% ஆக உயர்ந்துவிட்டது என ஃபோர்ப்ஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 4.45 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு மணி நேரத்தில் 51 முதல் தகவல் அறிக்கைகள் என்ற அளவில் இந்தக் குற்றங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை கூறுகிறது. விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்ததும், அதை எதிர்த்துப் போராடி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ததும், அதன் பிறகே அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை. ‘விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அதற்காக சட்டம் இயற்றுவேன்’ என்று தேர்தல் வாக்குறுதி தந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே மோடி அரசு 5 ஆண்டுகளை முடித்து விட்டது. வறுமை குறியீட்டில் முன்பு இருந்ததை விட இந்த ஆட்சியில் இந்தியா முன்னேறிவிட்டதாக இந்த அரசு சுய தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், 125 நாடுகளைக் கொண்ட பசியால் வாடுவோரின் அட்டவணையில் ( global hunger index) இந்தியா முன்பு இருந்ததைவிடக் கீழே இறங்கி 111 ஆவது இடத்தில் இருக்கிறது. அருகாமையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளைவிடக் கீழே இந்தியா சென்றிருக்கிறது என்பது தலைகுனியச் செய்கிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க ‘இந்த நான்கு தூண்களையும் அதிகாரப் படுத்துவதற்காக பாடுபடுகிறேன்’ என்று இந்த பாஜக அரசு சொல்வது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். இப்படியான அப்பட்டமான பொய்களை உரையாகத் தயாரித்து அதைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்வது இந்த அரசு குடியரசுத் தலைவரை மதிக்கிறது என்பதன் அடையாளமா? அல்லது, அவமதிக்கிறது என்பதன் அடையாளமா? ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. குடியரசுத் தலைவரை அவமதிக்கும் உரை. இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பழநி கோயில் வழிபாடு | மனிதர்களை மதம் சார்ந்து பிளவு படுத்தும் தீர்ப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 13:31:00
சென்னை: இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழநி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், இது மனிதர்களை மதம் சார்ந்து பிளவு படுத்தும் தீர்ப்பு என்றும் உடனடியாக இதை மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நேற்று முன்தினம் (30.01.2024) இந்து சமய கோயில்களில் இந்து சமயம் சாராதவர்களை அனுமதிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சமய எல்லைகள் கடந்து அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாக கருதியும், மதித்தும் வருகிற நல்லிணக்க பண்புக்கு எதிரானது. நாகூர் தர்க்காவிலும், அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், பழநி திருக்கோயிலுக்கும், அனைத்து சமய நம்பிக்கை உள்ளவர்களும் சென்று வருவது வழிவழியான பழக்கமாக உள்ளது. இதன் மூலம் சமய வழிகள் வேறுபட்டாலும் எல்லா சமயங்களும் அன்பு, கருணை, இரக்கம் சகிப்புத் தன்மை என நல்லிணக்க உணர்வை தான் போதிக்கிறது என வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த சுவாமி விவேகானந்தர், வள்ளலார், ராமானுஜர் போன்ற சமய சான்றோர்கள் போதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளனர். இந்த ஆன்மிக வரலாற்று மரபுகளை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு சமூகத்தில் பகைமை வளர்க்கும் பிளவு சக்திகளை ஊக்கப்படுத்தும் பேராபத்தானது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மறுபரிசீலனை செய்து தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதுடன் இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
ரூ.2500 கோடி முதலீடு; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்பெயின் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 12:59:00
சென்னை: சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரும் துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஹபக் லாய்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Mr. Jesper Kanstrup மற்றும் இயக்குநர் Mr. Albert Lorente ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் முதலீடு செய்வது தொடர்பாக அபர்ட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாகியுடன் சந்திப்பு- அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் Laura Berjano, International and Institutional Relations Head, தமிழ்நாடு முதல்வரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
லாங்வுட் சோலை, கரைவெட்டி சரணாலயத்துக்கு ‘ராம்சர்' அங்கீகாரம்
செய்திப்பிரிவு
அரியலூர்
2024-02-01 06:57:00
உதகை/அரியலூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்உள்ள லாங்வுட் சோலை மற்றும்அரியலூர் மாவட்டம் கரைவெட்டிபறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளதை, இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். 1971-ல் ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி, உலகெங்கும் உள்ள சதுப்பு நிலங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ராம்சர் தலங்கள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 75 ராம்சர் தலங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 14 தலங்கள் உள்ளன. இந்நிலையில், மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெற தமிழ்நாடு ஈரநில ஆணையம் திட்டமிட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளை வனத்துறை மேற்கொண்டது. இதையொட்டி, லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த பசுமை மாறாக் காடுகளில் ஒன்றான லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டிருப்பது, இயற்கை ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழு செயலர் கே.ஜே.ராஜு கூறும்போது, "லாங்வுட் சோலை கண்காணிப்புக் குழு கடந்த 25 ஆண்டுகளாக வனத் துறையுடன் இணைந்துவனத்தைப் பாதுகாத்து வருகிறது. மேலும், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை முகாம்களை நடத்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, லாங்வுட் சோலையை சுற்றுச் சூழல் கல்வி மையமாக மாற்றியுள்ளது. இந்த உலக அளவிலான அங்கீகாரம், பாதுகாப்புக் குழுவினரின் அர்ப்பணிப்புக்கும், தியாகத்துக்கும் கிடைத்த பரிசாகும்" என்றார். கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் 250 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள லாங்வுட் சோலைக்கு, 2022-ல் இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பறவைகள் சரணாலயம்: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் காவிரி ஆற்றின்கிளை வாய்க்காலான புள்ளம்பாடி வாய்க்காலின் வழித்தடத்தில், 453.71 ஹெக்டேர் பரப்பிலான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு நவம்பர் முதல்பிப்ரவரி வரை ரஷ்யா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மங்கோலியா, கஜகஸ்தான், நைஜீரியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கூழக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, வண்ணநாரை, நாமக்கோழி, நீர் காகம், வரித்தலை வாத்து, பெரிய நாரை, புள்ளிமூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துதங்கி, இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன. இந்த ஏரியை 1999-ல் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, அங்கு படகு வசதி, பார்வையாளர் மாடம்உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுஉள்ளது அரியலூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன் கூறும்போது, "கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு, ராம்சர் தளம் மற்றும் தனியார் முகவர்கள் வாயிலாக கிடைக்கப்பெறும் நிதியுதவியைக் கொண்டு, கூடுதல் வசதிகள்ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கரைவெட்டி ஏரியில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் வாழ்வாதாரமும் உயரும். மேலும், சரணாலயம் சார்ந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரவும் வாய்ப்புள்ளது" என்றார். முதல்வர் மகிழ்ச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: லாங்வுட்சோலை மற்றும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 2022-ம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:48:00
சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக, 9 நாட்கள் சிங்கப்பூர் - ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் ரூ.3,233 கோடி என்று அதிகரித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதன்மூலம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கெனவேமேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன, எத்தனைபேருக்குவேலை கிடைத்தது என்ற விவரம் இதுவரை சொல்லப்படவில்லை. ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் திமுக அரசு உண்மையிலேயே தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போவது எப்போது, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது? உண்மையில் முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் தொழில் செய்துகொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடவேறு மாநிலங்களுக்கு செல்வது குறித்து யோசித்து வருகின்றன. வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு, செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன, இரண்டரை ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்தவை எத்தனை, இந்த புதிய முதலீடுகளால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர், என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுபோலவே அரசு செலவில் இதுவரை சென்று வந்த வெளிநாட்டு பயணங்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் விவரங்களையும் வெளியிட வேண்டும். ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் தற்போது எந்த அளவில் உள்ளன என்ற விவரத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை அட்டை அணிந்துப் பணிக்கு வந்த எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:37:00
சென்னை: பணிநிரந்தரம் கேட்டு எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர். இதன்படி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 6,500 ஒப்பந்த செவிலியர்களும், அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர செவிலியர்களும் பங்கேற்றனர். இதுதொடர்பாக செவிலியர்கள் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டித்தேர்வு மூலமாக 2015-ம் ஆண்டில் 8,500 செவிலியர்களும், 2019-ம் ஆண்டில் 3,500 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்டனர். பணியில் சேரும்போது இரண்டு ஆண்டில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை 5,500 செவிலியர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சுகாதாரத் துறையில் ஒப்பந்தமுறை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர், அமைச்சர், செயலாளருக்கு மனு அனுப்பினோம். ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் கோரிக்கைகள் அடங்கி அட்டை அணிந்து பணியாற்றுகிறோம். வரும் 3-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்க இருக்கிறோம். வரும் 21-ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ராமர் கோயில் கட்ட விரும்பினார் ஜெயலலிதா: டிடிவி.தினகரன்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-01 06:36:00
மதுரை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உறுதியான பிறகு, கூட்டணி குறித்த விவரங்களை வெளியிடுவோம். தேர்தல் வெற்றி, தோல்விகளைத்தாண்டி ஓ.பன்னீர்செல்வத்துடன் அரசியல் ரீதியாக சேர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். திமுககூட்டணியை பலமாக அமைத்தாலும், மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை, மதங்களைத் தாண்டி அனைவரும் வரவேற்றுள்ளனர். இது மகிழ்ச்சியான விஷயம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பினார். இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு: உதயநிதியுடன் அறிமுக நிகழ்வாக மாறும் ஆலோசனை கூட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:31:00
சென்னை: திமுக தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டமானது, அமைச்சர் உதயநிதியை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் மாறி வருகிறது. வாரிசு அரசியல் கட்சி என்று திமுக மீது விமர்சனங்கள் தொடர்ந்தாலும்,அவற்றை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினை கட்சியினர் ஏற்றுக்கொண்டதைப்போல், அவரது மகன் உதயநிதிக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதில், சீனியர் முதல் ஜூனியர் வரை யாரும் விதிவிலக்கல்ல. உதயநிதியும் கட்சியில் தனக்கான இடத்தை உயர்த்தும் வகையில், கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், நாட்டு நிகழ்வுகளில் பெரும் பாலானவற்றில் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.கட்சியினர் மத்தியிலும் இதன் மூலம் பிரபலமடைந்து வருகிறார். இதையே சமீபத்தில் ‘திமுகவில் அடுத்தடுத்து தளபதிகள் உருவாகுவதாக’ அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் சமீபத்தில், கட்சியின் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தியதாக உதயநிதியை முதல்வர் பாராட்டினார். இதையடுத்து தற்போது நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளதால் திமுக சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் சீனியர் அமைச்சர்களுடன் ஜூனியரான உதயநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, திமுகவுக்கு சாதகமற்ற கோவை மாவட்டம் அடங்கிய மேற்கு மண்டலம் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே, திமுக தலைமை அவருக்கு வைக்கும் தேர்வு என்கின்றனர் நிர்வாகிகள். அத்துடன் இந்த தேர்தலில், திமுக வேட்பாளர்கள் தேர்விலும் உதயநிதியின் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, அவர் தனக்கு நெருக்கமானவர்கள், இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது தேர்தல் பணிக்குழு சார்பில், தேர்தல் பணிகள் தொடர்பாக நடைபெற்று வரும் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி தவறாமல் பங்கேற்கிறார். சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இருந்தாலும், உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அத்துடன், வரும் நிர்வாகிகளும் உதயநிதி இருந்தால் அவரிடம் நேரடியாக அறிமுகமாவதுடன், கட்சியில் நிர்வாகிகள் மத்தியில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளையும் கூறி, அவற்றை நிவர்த்தி செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞரணி செயலாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகிறார்.ஆனால், பொறுப்பு அமைச்சர்கள்,மாவட்டசெயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட சிலநிர்வாகிகள் மட்டுமே அவரைநேரடியாக சந்தித்து பேசும் நிலை இருக்கும். ஆனால், இந்த கூட்டம் அப்படியல்ல; இரண்டு மாவட்டங்களின் நிர்வாகிகள் என்பதால், நேரடியாக அவரை சந்தித்து பேச முடிகிறது.எங்களின் பிரச்சினைகளை தெரிவிக்கும்போது, அவரும் தேர்தல் நேரத்தில் பிரச்சினைகளை மறந்துவிட்டு பணியாற்றுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். எங்களிடம் தேவையான தகவல்களையும் கேட்டுப் பெறுகிறார். எங்கள் மண்டலத்துக்கான தேர்தல் பணி பொறுப்பாளருடய கருத்துக்களையும் அவர் கேட்டு செயல்படுகிறார். இந்த தேர்தல் பணிக்குழு கூட்டம் என்பது நேரடி அறிமுககூட்டம் போன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுதவிர, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் உள்ளார். அவர் வரும் பிப்.7ம் தேதி தமிழகம் திரும்புகிறார். அவர் வருவதற்கு முன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை பெரும்பாலும் முடித்துவிட்டு, இறுதியாக பிப்.9-ம் தேதி காங்கிரஸுடன்தொகுதிகளை இறுதி செய்துவிரைவில் அறிவிக்கவும் திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் இடங்களைமுடிவு செய்வதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் அமைச்சர் உதயநிதியின் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று, நாளை லேசான மழை வாய்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:28:00
சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (பிப். 1, 2) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். ஜன. 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி உதகையில் 7 டிகிரி. கொடைக்கானலில் 10 டிகிரி, குன்னூர் மற்றும் ஏற்காட்டில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியோமேக்ஸ் சொத்துகளை முடக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-01 06:27:00
மதுரை: மதுரையைச் சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோரிடம் ரூ.5,000 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக, மதுரை, திருச்சி மாவட்டங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன், கபில்ஆகியோர் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். ரூ.78 கோடி சொத்துகள்: இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் நம்பிசெல்வன் வாதிடும்போது, "நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு மதுரை,சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 51 லட்சம் சதுர அடி நிலம் உள்ளது. இதுதவிர, ரூ.78 கோடி மதிப்பிலான வேறு சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தசொத்துகளை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இதையடுத்து நீதிபதி தண்டபாணி, நியோ மேக்ஸ்நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி, அரசிதழில் வெளியிட எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
போலி பாஸ்போர்ட் விவகாரம் | டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக ஆதாரமில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:23:00
சென்னை: மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக எந்த ஆதாரமுமில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாநகர போலீஸ் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலகட்டத்தில் அவருடைய மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாக 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து க்யூ பிரிவு போலீஸார் 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், போலீஸ் ஆணையருக்கு எதிரான வழக்கு என்பதால் க்யூ பிரிவு போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக விசாரணை நடத்தவும், அந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 41 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 5 காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். 21 அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், “ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாகவே 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றார். அதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் உரிய தகவல் கிடைக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாமே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனும்போது அவருக்கு எதிராக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்” எனக் கூறி விசாரணையை மார்ச் 4-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
8 வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவையை நீட்டித்து அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:20:00
சென்னை: சென்னை - கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் உள்பட 8 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06035), கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் (06036) ஆகிய 2 ரயில்களின் சேவை பிப்.6 முதல் பிப்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் தலா 4 சேவைகள் வழங்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் புவனேஸ்வருக்கு திங்கள்கிழமை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06073) சேவை பிப்.5 முதல் ஏப் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06074) சேவை பிப்.6 முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் தலா 13 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு புதன்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06037) சேவை பிப்.7 முதல் மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மைசூர் - சென்னை சென்ட்ரலுக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06038) சேவை பிப்.7 முதல் மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சேவை பிப்.1 முதல் மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறை சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்
செய்திப்பிரிவு
திருச்சி
2024-02-01 06:18:00
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தன்னை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல்வருக்கு கடிதம்: இதேபோல ராபர்ட் பயஸூம்,தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு இருவரும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதையொட்டி, சிறப்பு முகாமில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் புயல், அதிகனமழை எதிரொலி: நெல் உற்பத்தி குறைவால் அரிசி விலை உயர்வு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:16:00
சென்னை: தமிழகத்தில் வழக்கமாக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அரிசி விலை குறைந்திருக்கும். அதன் பிறகு ஏறத்தொடங்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் அறுவடை மற்றும் நெல்வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் அதன்பிறகு வரும் மாதங்களில் விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி மாதமும் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் டி.துளசிங்கம் கூறியதாவது: டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயலால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்து, நெல் விலை உயர்ந்துள்ளது. அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு அரிசி விலை 26 கிலோ மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை உயர்ந்து,தரத்துக்கு ஏற்ப மூட்டை ரூ.1,080 முதல் ரூ.1,600 ஆக விற்பனையாகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்: கோட்டை காவல் நிலையத்தில் புகார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-01 06:15:00
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணாமல் போனதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியான சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சத்யபிரத சாஹுவின் அலுவலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையைப் புதுப்பிப்பதற்காக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பசத்யபிரத சாஹு முடிவு செய்தார். அடையாள அட்டையை தபாலில் அனுப்புவதற்காக தனதுஉதவியாளர் சரவணன் (44) என்பவரிடம் கடந்த 22-ம் தேதி கொடுத்து அனுப்பினார். சரவணன் தபால் நிலையத்துக்கு சென்றபோது அடையாள அட்டை காணாமல் போயுள்ளது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சரவணன் 29-ம்தேதி புகார் அளித்தார். புகாரைப்பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த தேர்தல் துறை பிரதிநிதிகள் சிலர் தேர்தல் பணிகளைப் பார்வையிட இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகளை அளிப்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.