Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
ஆ.ராசாவை கண்டித்து பிப்.9-ல் அவிநாசியில் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 17:55:00
சென்னை: "மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுக சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி, தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும்; ‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது’ என்பது போலவும்; தான் வகித்த அமைச்சர் பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி, பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற, தற்குறி புத்திகொண்ட ‘ஆ.ராசா’ என்ற நாலாந்தரப் பேர்வழி, தமிழக மக்களின், அதிமுகவின் காவல் தெய்வம் ‘பாரத் ரத்னா’மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி குக்கல் குரலில் குரைத்திருக்கிறது.‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி இந்த 2ஜி புகழ் பிறவி உணராததில் ஆச்சரியம் இல்லை. இன்றைக்கு பதவிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கட்சி, 1967-ல் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு எம்ஜிஆர் செய்த தியாகம்தான் காரணம் என்பதை இவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அன்றைக்கு இந்த ஜென்மம் 4 வயதில் அரைக்கால் சட்டை கூட இல்லாமல் அலைந்திருக்கும்.இந்த நபர், தலைவராக ஏற்றுக்கொண்ட கருணாநிதியும், அவரது குடும்பமும் கடன் தொல்லையால் தவித்த போது, அவரது மருமகன் முரசொலி மாறன் பெயரில் தயாரிக்கப்பட்ட ‘எங்கள் தங்கம்’ என்ற திரைப்படத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்து, அந்த குடும்பத்தையே வாழவைத்த தெய்வங்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் என்பது இந்த அறிவிலிக்கு தெரிந்திருக்காது. இந்த உண்மையை படத்தின் நூறாவது நாள் விழாவில் கருனாநிதியும், அவரது அன்பிற்கினிய மாறனும் பேசியதாக அன்றைய முரசொலியில் வெளிவந்ததை இவர் படித்திருக்கமாட்டார்.ஆ.ராசா 1963-ம் ஆண்டு பிறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சிக்கு வரும்போது அவரது வயது 4. எனவே, எம்ஜிஆரின் அருமை, பெருமைகளை அறிய வாய்ப்பில்லை. திமுக 1967-லும், தொடர்ந்து 1971-லும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு எம்ஜிஆர் எப்படி சுற்றிச் சுழன்று பணியாற்றினார் என்பது இவருக்குத் துளியளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ``என்னை வாழ வைத்த தெய்வம் எம்ஜிஆர்’’ என்று சொன்னபோது, ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என்று கேட்டுத் தெரிந்திருந்தால், இந்த ஆ.ராசா, புத்தி பேதலித்துப் போய் உளறியிருக்கமாட்டார். 2ஜி அலைக்கற்றையில் ஊழல் செய்து லட்சம் கோடிகளை சம்பாதித்து சிக்காமல் தப்பிவிட்டோம் என்ற இருமாப்பில், யாரைப் பற்றி விமர்சிக்கிறோம் என்பதைக்கூட உணராமல் பிதற்றி இருக்கும் ஆ.ராசா மீது, 2 கோடிக்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் பக்தர்களும், அவரைக் கடவுளாக பூஜிக்கும் கோடானு கோடி தமிழக மக்களும் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். ஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனைக் கடிக்கும் புத்திகொண்ட ஆ.ராசாவுக்குத் தக்க பாடம் புகட்டும் வரை, அதிமுக ஓயாது. ``யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’’என்ற திருக்குறளை நினைவுபடுத்தி அவரை எச்சரிக்கிறேன். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுகவின் சார்பில், பிப்.9ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணியளவில், எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், எம்ஜிஆரின் பக்தர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
‘‘இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பாவம்’’ - ஓபிஎஸ் உருக்கம் @ மதுரை
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-05 16:56:00
மதுரை: ‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, நான் செய்த பாவம்’’ என்று மதுரையில் நடந்த தனது அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கத்துடன் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் மாவட்டங்கள் தோறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். மதுரை தெப்பக்குளத்தில் மதுரை மாவட்ட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடந்தது. மாநகர மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன், எம்எல்ஏ ஐய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: "அதிமுகவை எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு உருவாக்கியபோது பல சட்ட விதிகளை உருவாக்கினார். அதில் ஒரே ஒரு விதியை மட்டும் காலத்துக்கும் மாற்றமுடியாத வகையில் உருவாக்கினார். அது என்னவென்றால், தொண்டர்கள் மூலமாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கே.பழனிசாமி சர்வாதிகாரி போல் எம்ஜிஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய எந்த காலத்திலும் மாற்றமுடியாத சட்டவிதியை காலில் போட்டு மிதித்து மாறிவிட்டார். மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி இந்த திருத்தத்தை அவர் செய்துள்ளார். ஆனால், அவரால் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்காக அவரை அதிமுகவில் இருந்து மட்டுமில்லாது அரசியலில் இருந்தே ஓட ஓட விரட்டியடிப்பேன். ஜெயலலிதா என்னை இரண்டு முறை முதலமைச்சராக நியமித்தார். நானும், எப்படி அந்த பொறுப்பை கொடுத்தாரோ அப்படி அவரது காலில் விழுந்து ஆசீ பெற்று மீண்டும் ஒப்படைத்துவிட்டேன். அதுபோல், சசிகலா, கே.பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தார். ஆனால், இவர் திருப்பி கொடுத்தாரா? அது கூட பரவாயில்லை. அரசியல் நாகரிகம் இல்லாமல் கீழ்தரமாக சசிகலாவை விமர்ச்சிக்கிறார். அவரை கட்சியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என கூறுகிறார். கே.பழனிசாமி பல தியாகங்களை செய்தாக கூறுகிறார். முதல்வர் ஆகுவதற்கு முன் இவரை யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கே.பழனிசாமியிடம் இணைந்தேன். அவரை கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுதான் நான் செய்த பாவம். இவரது தலைமையில் 8 முறை அதிமுக தேர்தலை சந்தித்துள்ளது. ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருவதால் தற்போது மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். ஆனால், ஒரு கட்சி கூட அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஜெயலலிதா இருந்தபோது தேசிய தலைவர்கள் அவரது வீட்டுக்கு கூட்டணிக்காக தவம் கிடந்தார்கள். ஆனால், அப்படியிருந்த கட்சியின் கம்பீரத்தை கே.பழனிசாமி கபளீகரம் செய்து மதிப்பில்லாத கட்சியாக்கி வருகிறார். ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டனாக இருந்தபடியால் 12 ஆண்டுகள் அதிமுகவின் பொருளாளராக அவர் எனக்கு பொறுப்பு வழங்கினார். கே.பழனிசாமியின் தவறான வழிகாட்டுதல், குளறுபடிகளால் அதிமுகவை பல பிரிவுகளாக பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை அழிக்கப்பார்க்கிறார். தோல்விகளுக்கு பொறுப்பேற்று கே.பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் உங்களை தூக்கி எறிவார்கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை" என்று ஓபிஎஸ் பேசினார்.
‘திரும்பவுமா?’ - தஞ்சாவூர் சுதர்சன சபா இடத்தை மீண்டும் தனியாரிடம் வழங்க எதிர்ப்பு
வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
2024-02-05 16:42:00
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நீண்ட காலமாக தனியார் வசம் இருந்து மீட்கப்பட்ட பல கோடி ரூபாய்மதிப்புள்ள சுதர்சன சபா இடத்தை, இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்ற மீண்டும்தனியாரிடம் வழங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடம், 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு 1927-ல் வழங்கப்பட்டது. அங்கு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் கட்டப்பட்டது. இதில், நாடகம், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன. முதலில் ராமநாதன் செட்டியார் என்பவரால் இந்த சபா நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் 1994 முதல் இந்த சபாவின் செயலாளராக திமுகவைச் சேர்ந்த ஆர்.கே.ராமநாதன் என்பவர்பொறுப்பேற்றார். அதன்பின், அங்கு உரிய அனுமதியின்றி கடைகள் கட்டி உள்வாடகைக்கு விடப்பட்டன. இதனிடையே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.19.14 கோடிதொகையை செலுத்தாமலும், குத்தகை ஒப்பந்தத்தின்படி செயல்படாமலும் இருந்ததால், அங்கிருந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் 2021-ம் ஆண்டு சீல் வைத்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின், 2022 பிப்.15-ம்தேதி சுதர்சன சபாவில் இருந்த நாடக மேடைதவிர மற்ற கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு பொதுக்கூட்டங்கள், வணிக நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள நாள் வாடகைக்கு விடப்பட்டது. இந்நிலையில், இந்த இடத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகின்றன. தனியாரிடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட மாநகராட்சி நிர்வாகம், அந்த இடத்தை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலரும், பாஜகவின் பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவருமான என்.கோவிந்தராஜ் கூறியது: தஞ்சாவூரின் வரலாற்று பதிவுகளில் ஒன்றாக இருந்த சுதர்சன சபா, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகன நிறுத்தத்துக்காக மீண்டும் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை கைப்பற்றியதோ, அந்த நோக்கம் சிதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த இடத்தில் மீண்டும் பொதுக்கூட்டங்கள், நாடகங்கள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் கேட்டபோது, ‘‘தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காலி இடத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு எதிராக போலீஸில் இபிஎஸ் தரப்பு புகார்
என்.சன்னாசி
மதுரை
2024-02-05 16:38:00
மதுரை: மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் மீது இபிஎஸ் வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்தனர். மதுரை மாநகர மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை இன்று கொடுத்தனர். அதில், 'மதுரை காமராசர் சாலையிலுள்ள அருணாசலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் அதிமுகவில் இருந்து சட்டபூர்வமாக நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையொட்டி, அதிமுக கட்சி கொடியின் நிறங்களை குறிக்கும் வகையிலான சுவரோட்டி, பேனர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஏற்கெனவே,சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கட்சியில் இருந்து (அதிமுக) நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சி கொடி, இரட்டை இலை சின்னம், அதிமுக என்ற கட்சியின் பெயரையும், கழக ஒருங்கிணைப்பாளர் எனும் பொறுப்பையும் அவரோ, அவரை சார்ந்தவர்களோ பயன்படுத்தக் கூடாது என, தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவிலும் உயர், உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரும், கட்சி கொடியை குறிக்கும் வகையில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட எழுத்துகளையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தி உள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட ஓபிஎஸ் தரப்பினர் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் நேரத்தில், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘530 ஏக்கர் மைதானம், 5 லட்சம் இருக்கைகள், 10 லட்சம் மக்கள்...’ - அண்ணாமலை தகவல் @ பல்லடம் மாநாடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 16:29:00
சென்னை: “2024 தேர்தல் என்பது பிரதமர் மோடியின் களம். பிரதமரின் ஊழல் இல்லாத அரசுக்காக, வலிமையான அரசுக்காக மக்கள் அவருக்கு ஓட்டு போட தயாராகிவிட்டனர், தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. திமுக அரசு கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கும் தெரியும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது “‘என் மண் என் மக்கள்’ 183 தொகுதிகளை கடந்துவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்து சென்றுள்ளோம். வரும் பிப்ரவரி 11-ஆம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். 200-வது தொகுதியாக பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறோம். 234-வது தொகுதியாக பல்லடத்தில் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 25-ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார். தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள். 530 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய மைதானத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை அங்கே நடக்கவிருக்கிறது. 5 லட்சம் இருக்கைகள், 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இது மிகப் பெரிய எழுச்சியான மாநாடாக நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிரதமர் சென்னைக்கு மூன்று முறை வந்திருக்கிறார். திருச்சிக்கு ஒருமுறை வந்திருக்கிறார். திண்டுக்கல் பகுதிக்கும் வந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தென்தமிழகம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், கோவைக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் வரவில்லை. அரசியல் நிகழ்ச்சியும் எதுவும் நடைபெறவில்லை. சென்னைக்கு பிரதமர் மோடி மூன்று முறை வந்திருப்பதால், பிரதமர் செல்லாத ஒரு புதிய பகுதிக்கு அவரை அழைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை கடினமான விஷயம், எளிதாக முடிக்க முடியாது. கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார். மேலிடம் என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன், கட்சிப் பணியை பார்க்க சொன்னால் அதை செய்வேன். எல்லாருக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது, எனவே, சொல்லும் வேலையை செய்வோம். தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. இந்தியாவில் ஆன்மிகம் வந்துவிட்டது. திமுக கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கு தெரியும். திருவண்ணாமலை மக்கள் பாஜகவுக்கு எம்பியை கொடுத்தால் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் நாங்கள் கோயிலை சுற்றுலா தளமாக மாற்றுவோம். 39 தொகுதியிலும் முதல் இடம் பெறவே உழைத்து வருகிறோம். 2024 தேர்தலுக்கு எது முக்கியமோ அதை மட்டும் தற்போது செய்து கொண்டிருக்கிறோம். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக பல இடங்களில் முதலில் இருக்கும். சில இடங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பங்காளிகள் எங்களை பகையாளியாக நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. 2024 தேர்தல் என்பது மோடியின் களம். மோடியின் ஊழல் இல்லாத அரசுக்காக, வலிமையான அரசுக்காக மக்கள் அவருக்கு ஓட்டு போட தயாராகி விட்டனர். தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. ஜி.கே.வாசன் எங்களிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறார். பரஸ்பர நட்புக்காக பல கட்சிகளுடன் பேசி வருகிறார். யாரையும் நாம் தடுக்க முடியாது. ஆறு மாதத்துக்கு முன்பு திருமாவளவன், சனாதான தர்மத்தை ஏன் எதிர்க்கிறோம் என்றால் பிராமணர்கள் மட்டும்தான் கடவுளிடம் செல்கிறார்கள், கர்ப்பகத்துக்குள் இருக்கிறார்கள், அதனால் சமாதான தர்மத்தை எதிர்க்கிறோம் என்றார். ஆறு மாதம் கழித்து பிராமணர் அல்லாத பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்யும்போது, இதையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். இதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பிரதமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு என்பது 142 கோடி இந்தியர்களின் நிகழ்வு” என்றார் அண்ணாமலை/
சூமோட்டோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
செய்திப்பிரிவு
புதுடெல்லி
2024-02-05 16:18:00
புதுடெல்லி: ‘தாமாக முன்வந்து பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்’ என்று அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்தக் காலக்கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதனை எதிர்த்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், ‘இந்த வழக்கு உயர் நீதிமன்ற விதிகளுக்கு எதிராக, தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் தனி நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபப்ட்டது. அதில், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை. ஆனால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கின் கோப்புகளை தலைமை நீதிபதி பார்த்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “உயர் நீதிமன்ற பதிவாளரின் அறிக்கையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை என கூறப்பட்டுள்ளதால், தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர். அப்போது பதிவாளர் தரப்பில், “விசாரணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை தவறாக புரிந்துகொண்டு இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. ஏற்கெனவே, இதே போன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது” என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். இந்த வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிடலாம். அதேநேரம் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கின் உத்தரவு, அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை எந்த அமர்வில் விசாரித்தாலும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘அய்யா... கொஞ்சம் உட்கார இருக்கை கொடுங்க, ப்ளீஸ்!’ - கெஞ்சும் வழக்காடிகள்... கண்டுகொள்ளாத நீதித்துறை!
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-05 15:37:00
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் ஆயிரத்து 266 கீழமை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு வழக்கு நிமித்தமாக அன்றாடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நீதித்துறையில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் தவிர விசாரணை கைதிகள், சாட்சிகள், போலீஸார், அரசு தரப்பு அதிகாரிகள், வழக்காடிகளும் அன்றாடம் நீதிமன்றங்களுக்கு வந்து செல்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பெருநகர உரிமையியல் அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நல தீர்ப்பாயம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமரச இசைவு தீர்ப்பாயங்கள் என 80-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகமான ம.சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அதன் அருகிலேயே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இயங்கி வருகிறது. மேலும் எழும்பூர், அல்லிக்குளம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லியிலும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் ‘பாஸ்-ஓவர்’ செய்து முன்னுரிமை அடிப்படையில் வழக்குகளை மாறி, மாறி விசாரிப்பதால் உயர் நீதிமன்றம்போல எந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இதனால் வழக்கு விசாரணைக்காக காலை முதல் மாலை வரை பொதுமக்களின் கூட்டம் நீதிமன்றங்களில் நிரம்பி வழிகிறது. அதுவே, குற்றவியல் நீதிமன்றங்கள் என்றால் தினந்தோறும் ஆஜர்படுத்தப்படும் விசாரணை கைதிகளால் திரும்பும் திசையெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டு கூட்டம் இன்னும் அதிகரித்து விடுகிறது. இந்த நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்காடிகள், சாட்சிகள், விசாரணை கைதிகள், குடும்ப நல வழக்குகளுக்காக ஆஜராகும் பெண்கள், அவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ காத்திருப்பதற்கு சரியான இருக்கை வசதிகளோ, மின் விசிறிகளோ கிடையாது. இதனால் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் வரை நீதிமன்ற அறையின் வெளியே மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துக்கிடக்கும் அவலம் உள்ளது. சில நீதிமன்ற அறைகளின் உள்ளே பெஞ்சுகள் போடப்பட்டு இருந்தாலும் வழக்காடிகள் அமருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அந்த இருக்கைகளை போலீஸாரும், வழக்கறிஞர்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால் வழக்காடிகள் நீதிமன்ற அறையின் வெளியே தரையில் அமரும் அவலம் உள்ளது. சில நேரங்களில் தரையில் அமருவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வருவது... நாம எப்போது இங்கிருந்து செல்வது என மனதுக்குள்ளேயே பரிதவிக்க வேண்டியுள்ளது. சில நீதிமன்றங்களில் நீதிமன்றத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் அமர வசதியாக நீதிமன்றத்தின் வெளியே பெஞ்சுகள் போடப்பட்டு இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை. மியூசிக் சேர் போட்டிபோல அதில் அமர்ந்து இருக்கும் நபர் எப்போது எழுந்து செல்வார்... எப்போது அந்த இடம் நமக்கு கிடைக்கும் என்ற ரீதியில் மணிக்கணக்கில் காத்திருந்து இடம் பிடிக்க வேண்டிய நிலைமை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவே வழக்கு விசாரணைக்கு ஒரு விஐபி ஆஜரானால் நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞர்களும் போட்டி போட்டு இருக்கை வசதியை செய்து கொடுக்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்களிலேயே இந்த நிலை உள்ளது வேதனைக்குரியது. இதைவிட கொடுமையான விஷயம், விசாரணை கைதிகளை அன்றாடம் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் பெண் போலீஸாருக்குத்தான் நிகழ்கிறது. துப்பாக்கி ஏந்திய கையுடன் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் தப்பாத வண்ணம் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படும் போலீஸார் நீதிமன்றங்களில் மணிக்கணக்கில் நிற்க நேரிடுகிறது. இதனால் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க வழியின்றி பெண் போலீஸாரும் கால்கடுக்க நின்று கொண்டே தர்ம அவஸ்தையுடன் பணியாற்ற நேரிடுகிறது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.ரவி கூறும்போது, ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பொதுமக்கள், வழக்காடிகள், அரசு அலுவலர்கள், போலீஸார் அமருவதற்கு என தனியாக இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற கீழமை நீதிமன்றங்களில் இந்த வசதிகள் கிடையாது. இதற்கு ஒருசில நீதிமன்றங்கள் விதிவிலக்கு. நீதிமன்றத்துக்கு வருகை தரும் வழக்காடிகள், வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. நாள் முழுவதும் அவர்களை நீதிமன்றத்தின் வெளியே நிற்க விடுவதும் ஒருவகையில் தண்டனை வழங்குவது போலத்தான். அதுமட்டுமல்ல, கண்ணிய குறைபாடும் கூட. வழக்கு விசாரணைக்காக ஆஜராகும் நபர்கள் வெகுநேரமாக நீதிமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்ற விஷயம் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும் என்றாலும் அவர்களும் அதை கண்டுகொள்வது கிடையாது. பல நீதிமன்றங்களில் குடிக்க சரியான குடிநீர் வசதியோ அல்லது சுத்தமான கழிப்பறை வசதியோ இல்லை. இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றாலே துர்நாற்றம்தான் வீசுகிறது. எனவே நீதித்துறை உயர் அதிகாரிகள், அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் அன்றாடம் நீதிமன்றங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் நிம்மதியாக அமர தேவையான இருக்கை, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்டுகொள்ளுமா நீதித்துறை..!.
தமிழக மீனவர்கள் கைது நிகழ்வு தொடர்வது ஏன்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-05 15:21:00
சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில், ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே, இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, "கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்" என வாதிட்டார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அனைத்தையும் 12 பெட்டி ரயில்களாக மாற்ற வேண்டும்: சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
மு.வேல்சங்கர்
சென்னை
2024-02-05 15:16:00
சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில், கூட்ட நெரிசலை தவிர்க்க 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்களுக்கு பதிலாக, 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும்" என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறநகர் ரயில் சேவை சென்னையில் பொது போக்குவரத்தின் இதயமாக புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மூர் மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப் பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 670-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயங்குகின்றன. இதில், சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தடத்தில் 350-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் முன்பு, 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, 2 ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக மாற்றப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அரக்கோணம், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அலுவலக நேரங்களில் (பீக் அவர்ஸில்) 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களும், 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களும்தான் அடிக்கடி இயக்கப்படுகின்றன. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் 8 அல்லது 9 பெட்டி ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இடப்பற்றாக்குறையால் பயணிகள் சிலர் படியில் தொங்கி, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். சிலர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனனர். இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கே.பாஸ்கர் கூறியது: தினசரி காலை, மாலை நேரங்களில் (பீக் அவர்ஸில்) ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில், 8 பெட்டிகளைக் கொண்ட மெமு அல்லது 9 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, புட்லூர், நெமிலிச்சேரி, இந்துக்கல்லூரி, அண்ணனூர், திருமுல்லைவாயில், பட்டரவாக்கம், கொரட்டூர் உட்பட பல ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதி போதிய அளவு இல்லாததால், வருவது 8 பெட்டிகளைக் கொண்ட ரயிலா அல்லது 12 பெட்டிகளைக் கொண்ட ரயிலா என்று பயணிகள் அறிய முடிவதில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். புறநகர் ரயில் வழித்தடத்தில் குறுகலான நுழைவாயில் மற்றும் அகலம் குறைவான 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், ஒரு மெமு ரயில், நிலையத்தில் நின்று செல்லும் 30 நொடியில் ஏறி இறங்குவதற்குள் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. அதுபோல, சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மார்க்கத்திலும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்டவையாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொன்னேரி ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பிரதாப் கூறும்போது, "சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸில்) 8 பெட்டிகள், 9 பெட்டிகள், 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. அனைத்தையும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால கோரிக்கை. இதை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்" என்றார் இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பல ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளம் சிறியதாக இருந்தது.12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும்போது, நடைமேடையை கடந்து வெளியே நிற்கும். அதன்பிறகு, இந்த மார்க்கங்களில் ஒரு சில ரயில் நிலையங்களை தவிர அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளில் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் நிறுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, 9 பெட்டிகள் கொண்ட ரயில், 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. படிப்படியாக 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகரிக்கப்படும். 12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் உதயநிதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 15:01:00
சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: "வேகமாக நகரமயமாகும் மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை இன்றைக்கு விரிவடைந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், சென்னையின் மக்கள்தொகையும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கேற்ப சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேம்பாலப் பணிகள் திராவிட மாடல் ஆட்சியில் முழு வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கான திட்டங்களை தமிழக முதல்வர் பார்த்துபார்த்து செய்து கொண்டிருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் அண்மையில் ஏற்பட்டதைப் போல ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அந்த சமயத்தில், கிட்டத்தட்ட பத்து, பதினைந்து நாட்கள் சென்னை முடங்கிப் போனது. ஆனால், இந்தமுறை பெய்த மழையில் இருந்து இரண்டே நாட்களில் நாம் மீண்டுவர சென்னை மாநகராட்சி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மாநகராட்சிப் பணியாளர்களின் பங்குதான் மிக முக்கிய காரணமாக இருந்தது." இவ்வாறு உதயநிதி பேசினார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து பாம்பனில் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 14:32:00
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ம் தேதி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 சதவிகித கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் காலம் காலமாக வசித்துக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆம் தேதி இராமேஸ்வரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய இரண்டு நவீன மீன்படி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். மேலும் பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. ஒவ்வொரு மீன்பிடி படகின் விலை ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை இருப்பதால் பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இதுவரை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 150 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய பாஜக அரசுக்கு பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். நடப்பு 2024 ஆம் ஆண்டில் இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டதோடு, கடந்த ஆண்டும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014 முதல் இத்தகைய கைது நடவடிக்கைகளும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவதும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி நிகழ்த்தப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. சிலநேரங்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், 45 மீனவர்கள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக மீனவர்கள் காலம் காலமாக எந்த கடல் பகுதியில் மீன்பிடித்தார்களோ, அந்த உரிமையை பாதுகாத்து மீட்டெடுக்காமல், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி செய்வதாகவும், நீல புரட்சி திட்டத்தை ஒன்றிய பாஜக அறிவித்திருப்பதனாலும் மீனவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. கடலில் மீன்பிடிக்கிற போது, இந்திய - இலங்கை கடல் பகுதி என்பது மிக குறுகலாக இருப்பதால், எங்கே சர்வதேச கடல் எல்லை இருக்கிறது என்பதை துல்லியமாக நிர்ணயிக்க முடிவதில்லை. இத்தகைய பிரச்சினைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து கூட்டு பணிக்குழுவை ஏற்படுத்தின. இந்த கூட்டு பணிக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடுவதோடு, இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை 5 முறை மட்டுமே கூடிய கூட்டு பணிக்குழு, கடந்த 2022-க்கு பிறகு கூடவே இல்லை. இதற்கான முயற்சிகளை ஒன்றிய பாஜக அரசு எடுக்காததன் விளைவாக மீனவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து கைதுகளும், படகுகள் பறிமுதலும், சிறை காவல்களும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 110 மீன்பிடி படகுகளை மீட்பதற்கு ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு - பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடித் தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என அறிவித்து, 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றாத பாஜக, அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதையும், கண்டிக்கிற வகையில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், வருகிற 10.2.2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் இராமேஸ்வரம், அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் உள்ள பாம்பன் பேருந்து நிலையத்தின் முன்பு, மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
“தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” - ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 13:43:00
சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்களின் தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். அதோடு, பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேற்று (4-02-2024) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள், செய்யப் போகிறீர்கள், செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அயல்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும் - உதவி புரிய வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கருணாநிதி வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்து கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம். உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான். பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்றார். இந்நிகழ்வில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வரின் செயலாளர் பு. உமாநாத்., ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு முதலிடம் - விழிப்புணர்வு நிகழ்வில் மருத்துவர் தகவல்
எஸ்.கோவிந்தராஜ்
ஈரோடு
2024-02-05 12:45:00
ஈரோடு: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தில் உள்ளதாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, ஈரோடு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சுதா மருத்துவமனை சர்பில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலிருந்து எஸ்பி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர், ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார், செல்வா சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவன தலைவர் பாரதி, நந்தா நர்சிங் கல்லூரி தாளாளர் நந்த குமார், பிரதீப் நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன், இந்தியாவில் புற்றுநோய்கள் அதிகம் பாதித்த மக்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் புற்றுநோய் அதிகம் கொண்ட மாவட்டமாக முதலிடத்தில் உள்ளது. புகையிலை, மது, சரியான உடற்பயிற்சி இன்மை, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தற்போது 20 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. அதில் 50 முதல் 60 சதவீத மக்கள் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை எட்டிய பின், காலதாமதமாகத்தான் புற்றுநோய் பாதிப்பை அறிகிறார்கள். முற்றிய நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே புற்று நோயை கண்டறிவது அவசியம்" என தெரிவித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 10:43:00
சென்னை: "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது இந்த பேருந்து முனையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் இங்கு புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு இன்று (பிப்.5) அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இம்முனையத்தில் வெளியூர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் பேருந்துகள் (MTC) நிற்கும் இடத்திற்கும் இடையில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களில் இரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இம்முனையத்தின் எதிர்புறம் உள்ள GST சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் (Sky Walk) ஜன.31 அன்று டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் முகப்பு வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும். இப்பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் (Idle Parking for Omni Buses) நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மார்ச் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்பேருந்து முனையத்தில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மலிவு விலை உணவகங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். ஏடிஎம் மையங்களும் திறக்கப்படும். குறிப்பாக, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பேருந்து முனையம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது." என்று தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் கைது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 10:13:00
ராமேசுவரம்/சென்னை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 23 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 492 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து, அதிலிருந்த 23 மீனவர்களைக் கைது செய்தனர்.அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று வேலைநிறுத்தம்: இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மீன்பிடி இறங்குதளத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று (பிப். 5) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தரவேண்டும். இல்லையேல், வரும் மக்களவைத் தேர்தலை மீனவர்கள் புறக்கணித்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டையைமாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தலைவர்கள் கண்டனம்: தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கை கடற்படையினரால் கடந்த மாதத்தில் மட்டும் 40-க்கும்மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள்இலங்கை கடல் கொளையர்களாலும், இலங்கை கடற்படையினராலும் பாதிக்கப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இலங்கை கடல்கொள்ளையர்களாலும், கடற்படையினராலும் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு, வேடிக்கைப் பார்த்து வருகிறது. இனியாவது தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் கார்த்தி எம்.பி.க்கு எதிராக மாறியது எப்படி?
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-05 10:08:00
சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் அவரது மகன் கார்த்திக்கு சீட் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999-ம் ஆண்டு தேர்தலில் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். மீண்டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் இணைந்ததை அடுத்து 2004-ம் ஆண்டு தேர்தலில் இ.எம்.சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் மறுக்கப்பட்டது. அப்போது ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அதேநேரம் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மாநிலங்களவை உறுப்பினராகி, மத்திய இணை அமைச்சரானார். அப்போதிருந்தே இருவரும் எதிரும், புதிருமாகச் செயல்பட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி தூக்கினார். அவரது எதிர்ப்பையும் மீறி சீட் வாங்கி கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் கார்த்திக்கு சீட் கொடுக்கக் கூடாது என இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தி வருகிறார். அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக ப.சிதம்பரம் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆன பின்பு, ப.சிதம்பரத்திடம் நெருக்கமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரத்துக்கு, முக்கியத்துவம் குறைந்தது. தற்போது காரைக்குடி எம்எல்ஏவாக உள்ள மாங்குடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாங்குடி மனைவி தேவிக்கு எதிராக சுந்தரம் வேலை செய்தார். இதனால் சுந்தரத்தை ஓரம் கட்டினர். அதேபோல் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமாக இருந்த கே.ஆர்.ராமசாமி, 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளரான வேலுச்சாமியை காரைக்குடி தொகுதியில் நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், கார்த்தி தனது ஆதரவாளரான மாங்குடிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். அப்போதே கார்த்தி தரப்புக்கும், கே.ஆர்.ராமசாமி தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் ப.சிதம்பரம் ஆதரவாளராக இருந்த அப்போதைய மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற கார்த்தி முடிவு செய்தார். இதனால் அவரும் கார்த்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார். இதையடுத்து சத்தியமூர்த்தியை நீக்கவிட்டு, தனது ஆதரவாளரான சஞ்சய் காந்தியை மாவட்டத் தலைவராக நியமிக்க கார்த்தி நடவடிக்கை எடுத்தார். தற்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். ஆனாலும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக, அதிமுக சார்பில் மக்களிடம் கருத்துகேட்பு பணி இன்று தொடக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 10:00:00
சென்னை: திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் மண்டல வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்பை இன்று தொடங்குகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில், டிகே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், எம்பிக்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மண்டலவாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று தூத்துக்குடியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வை தொடங்க உள்ளனர். இதேபோல் அதிமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு சார்பில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, மண்டலவாரியாக சென்று பொதுக்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணி இன்று தொடங்கி, 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்படி இன்று சென்னை மண்டல கருத்து கேட்பு கூட்டம் வேலப்பன்சாவடியில் நடைபெறுகிறது. தொடர்ந்து வேலூர் மண்டலத்தில் வேலூர், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலத்திலும் கூட்டம் நடைபெறும்.
பிப்.12-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து முதல்வர் ஆலோசனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 09:49:00
சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதையடுத்து, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய விவரங்கள், தமிழக பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து ஸ்பெயினில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக, ஸ்பெயின் சென்றுள்ளார். இதற்காக கடந்த ஜன.27-ம் தேதி சென்னையில் இருந்து ஸ்பெயின் சென்ற அவர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் வரும் பிப்.12-ம் தேதி தொடங்குகிறது. அன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இதையடுத்து, வரும் பிப்.19-ம் தேதி தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த இரு நிகழ்வுகளும் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரை தொடர்பாகவும், பட்ஜெட் தொடர்பாகவும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று ஸ்பெயினில் இருந்த படியே முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து காணொலி வாயிலாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வரின் முதல்நிலை செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நிதித்துறை செயலர் உதயச்சந்திரனிடம் பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி குறித்தும், ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைமை, முக்கியமான அம்சங்கள் குறித்தும் விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநர் உரையானது இறுதி செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, வரும் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியால் சட்டப்பேரவையில் வாசிக்கப்படும். அமைச்சர் ஆலோசனை இந்த சூழலில், பொது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துறை செயலர் அபூர்வா, சர்க்கரைத் துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் ஆணையர் ஜி.பிரகாஷ், சிறப்பு செயலாளர் பொ.சங்கர், இணை ஆணையர் த.அன்பழகன், வேளாண் இயக்குநர் பி.முருகேஷ், தோட்டக்கலை துறை இயக்குநர் பி.ஞானவேல் பாண்டியன் பங்கேற்றனர். ஏற்கெனவே, விவசாய அமைப்புகள், வணிகர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சைதை துரைசாமியின் மகன் மாயம்: இமாச்சலில் அவர் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து
செய்திப்பிரிவு
நாலா
2024-02-05 09:13:00
கஷங் நாலா: முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயம். அவர் பயணித்த கார் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் அவர் பயணித்த கார் கவிழ்ந்துள்ளது. இதில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமி மாயமாகி உள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சைதை துரைசாமியின் குடும்பத்தின் இமாச்சல் விரைந்துள்ளனர். வெற்றி துரைசாமி புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இன்ஸ்டா பதிவுகள் முழுவதும் இயற்கையின் அழகு நிறைந்துள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இன்று முதல் இடமாற்றம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 07:04:00
சென்னை: எழும்பூரில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி இன்று முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.734 கோடி செலவிடப்படுகிறது. மறுசீரமைப்பு பணியில் ரயில்நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் காந்தி இர்வின் சாலையிலும், பின்புற நுழைவுவாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது. மேலும், ரயில்நிலைய கட்டிடங்கள், காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடைமேம்பாலம் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் பகுதி உள்ளது. தற்போது இந்தப்பகுதியில் நடைபெற்றுவரும் ரயில்வே மறுசீரமைப்பு பணிகளால், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி இன்று (பிப்.5) முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்துபயணிகளும் திங்கள்கிழமை (ஜன.5) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாஜக அல்லாத பிற கட்சிகளை அதிமுக கூட்டணியில் வாசன் இணைத்தால் வரவேற்போம்: டி.ஜெயக்குமார் கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:30:00
சென்னை: பாஜக அல்லாத பிற கட்சிகளை அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைத்தால் அதை வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். நாங்கள், எங்கள் தலைமையில் பாஜக அல்லாத கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். யார் என்ன முயற்சி எடுத்து, பாஜகவோடு எங்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வீணான செயலாகும். இந்த விவகாரத்தில் அதிமுக எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை. 2021-ம்ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தவிர்த்து நாங்கள் யாருடன் எல்லாம் கூட்டணி வைத்தோமோ, அவர்கள் மீண்டும் கூட்டணியில் வருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஜி.கே.வாசன், பாஜக அல்லாத பிற கட்சிகளை கொண்டு வந்து, எங்கள் கூட்டணியோடு இணைத்தால் வரவேற்க தகுந்த விஷயமாக இருக்கும். பாஜகவை எதிர்த்துவிட்டு, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. திமுகவினரை சிறையில் தள்ளி மிதித்தவர்தான் இந்திராகாந்தி. பின்னர் நேருவின் மகளே வருகே என கருணாநதி வரவேற்றார். கூடா நட்பு என்று கூறி திமுக- காங்கிரஸ் பிரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸை எப்போதுமே பிடிக்காது. பாஜக, திமுக எதிரிகள்: அதிமுகவின் அரசியல் எதிரிகள் பாஜகவும், திமுகவும்தான். மற்ற யாரும் எங்களுக்கு எதிரி இல்லை. அரசியலில் 24 மணி நேரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். பெரிய கட்சிகள் பல அதிமுகவுடன் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
வாயுக்கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை: ரூ.5.92 கோடி இழப்பீடு வசூலிக்க தமிழக அரசு உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:25:00
சென்னை: சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5.92 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: எண்ணூர் கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பி.எம்.பூர்ணிமா, ஐஐடி பேராசிரியர் சங்கர் நரசிம்மன், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி எஸ்.வி.சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அரசு அமைத்தது. இத்தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் நகர்ந்ததால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது. 'சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும் கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரையில், "தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருக்கட்டும்: திருமாவளவன் கருத்து
செய்திப்பிரிவு
நகர்
2024-02-05 06:23:00
மறைமலை நகர்: மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இணையதள உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் தங்களை விசிகவில் இணைத்துக்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியது: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர் அத்வானி. மேலும், ஓபிசி மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என வன்முறையைத் தூண்டியவர். ரதயாத்திரை என்ற பெயரால் ‘ரத்த யாத்திரை’ நடத்தியவர், பாபர் மசூதி இடிப்பதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர். இந்தியாவில் வெறுப்பு அரசியல் தீவிரமாக வளர்வதற்கு மூலக் காரணமாக இருந்தவர். இந்தியா முழுவதும் இவற்றை பரவச் செய்து அரசியல் ஆதாயம் தேடியவர். மோடி, அமித்ஷா கோலோச்சுவதற்கு அடிக்காரணமாக இருந்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை, ஜனநாயக சக்திகளால் ஏற்க முடியாது. இந்தியாவில் மதச்சார்பின்மை கொள்கைக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தியவர். அதற்கு எதிரான உளவியலைக் கட்டமைத்தவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ‘சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியாகச் செயல்படுவோம்’ என விஜய் அறிவித்தது குறித்து, கருத்து தெரிவித்த திருமாவளவன், ‘விஜய் களத்துக்கு வந்து இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பணிபுரியட்டும்’ எனக் கூறி வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், மக்களவை தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவிலிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை, விரைவில் அழைப்பு வரும், மக்களவை கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத் தொடருக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவித்தார்.
லால்குடி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 23 பேர் காயம்
செய்திப்பிரிவு
திருச்சி
2024-02-05 06:20:00
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். லால்குடி மகா மாரியம்மன் கோயில் 59-ம் ஆண்டு பூச்சொரிதல்விழாவை முன்னிட்டு நேற்று லால்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். இதில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளில், கால்நடை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு 520 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 259 வீரர்கள் களமிறங்கினர். காளைகள் முட்டியதில் 8 வீரர்கள், 13 காளை உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், பீரோ,சைக்கிள், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று, அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தது. வடமாடு மஞ்சுவிரட்டு: மணப்பாறை பெஸ்டோ நகர்மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் களமிறங்கின. ஒவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, காளையை அடக்க9 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவீரர்கள் மற்றும் காளைகளுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது. இதில், காளையை அடக்க முயன்ற11 பேர் காயமடைந்தனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: கூடுதல் இடங்களை கோரும் மதிமுக, மார்க்சிஸ்ட்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:15:00
சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு கடிதம் அளித்துள்ளன. இதுதவிர, பிப்.12-ம் தேதி விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் திமுக தேர்தல் குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து பேசினர். இந்நிலையில், நேற்று மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மதிமுக சார்பில் அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆர்.அந்தரிதாஸ், தேர்தல் பணிச்செயலாளர் வி.சேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளின் பட்டியல் மதிமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பு முடிவில், அர்ஜூன்ராஜ் கூறும்போது, ``பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நாங்கள் 2 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளோம். இம்முறை மதிமுக கட்சி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சி: இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத், மத்திய செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுரை, கோவை தவிர்த்து கூடுதலாக தங்களுக்கு தென்காசி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் தொகுதிகளையும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டமுடிவில் பி.சம்பத் கூறும்போது,“கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். கடந்த முறை ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் மட்டுமே தரப்பட்டால் தேவையான முடிவு எடுக்கப்படும்” என்றார். வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. ம.நீ.ம. கட்சி: இந்நிலையில், திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது,” மக்கள் நீதி மய்யம் கட்சியை அழைப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் பிப்.12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
முதல்வரின் அறிவிப்புடன் நிற்கும் மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ - மதுரைக்கு பிறகு அறிவிக்கப்பட்ட திருச்சியில் பணிகள் மும்முரம்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-05 06:12:00
மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் ‘டைடல் பார்க்’அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, இதுவரைநிறைவேறவில்லை. அதேநேரத்தில், மதுரைக்குப் பிறகு திருச்சியில்அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் மும்முரமாகியுள்ளன. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூர், புனே,இந்தூர், காந்திநகர், டெல்லி போன்ற நகரங்களில் அதிக அளவில்மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் ஓரளவு மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தென் மாவட்டங்களில் மதுரையில் ஹெச்.சி.எல்., ஹனிவெல், டிவிஎஸ் போன்ற சில மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே கிளை அலுவலகங்களை கொண்டுள்ளன. எனினும், பெருநகரங்களைப்போல இங்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், மற்ற மாவட்டங்களில் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லை. நெல்லை மாவட்டத்தில் ஜோஹோ நிறுவனக் கிளை இயங்கி வருகிறது. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு தேடி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இந்நிலையில், மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மென்பொருள் நிறுவனங்கள் தொடங்க ஏதுவாக மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் டைடல் பார்க் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் 10.5 ஏக்கர் பரப்பில், எல்காட் உதவியுடன் மிகப் பெரிய டைடல்பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவேகத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. எல்காட் அதிகாரிகள், அப்போதைய ஆட்சியர் அனீஸ்சேகருடன் கலந்தாலோசித்து, மாநகராட்சிக்கு சொந்தமான, மாட்டுத்தாவணியில் உள்ள நிலத்தில் முதல்கட்டமாக 5.5 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த நிலத்தை எல்காட் வசம் ஒப்படைக்க, நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், தற்போது வரை நகராட்சி நிர்வாகத் துறை ஒப்புதல் வழங்கவில்லை. இன்னும் இந்த திட்டத்துக்கு நிலம் ஒதுக்கப்படாத நிலையில், டைடல் பார்க் திட்டத்துக்கான ‘கன்சல்டன்ட்’ நிறுவனம், மாட்டுத்தாவணியில் மண் பரிசோதனை செய்யும் பணியைத் தொடங்கியது. பின்னர், டைடல் பார்க் நிறுவனத்தின் வரைபடமும் தயாரானது. ஆனால், இந்த வடிவமைப்பு ஒத்துவராததால், மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கும் முடிவை தமிழக அரசு தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுரைக்குப் பிறகு திருச்சியில் அறிவிக்கப்பட்ட டைடல்பார்க்-ஐ, ரூ.600 கோடியில் அமைக்கதமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், புதிய டைடல் பார்க் அமைகிறது. ஆனால், மதுரையில் எய்ம்ஸ்போலவே, டைடல் பார்க் திட்டமும்அறிவிப்போடு நிற்பதால், தென் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க்கில் மாநகராட்சியின் பங்களிப்பு 51 சதவீதம், தனியார் பங்களிப்பு 49 சதவீதம் இருக்கும்படியான வடிவமைப்பில், சில குறைபாடுகள்உள்ளன. அதை சரி செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. முதல்கட்டமாக ரூ.600 கோடி திட்ட மதிப்பில்,5 ஏக்கரில் டைடல்பார்க் அமைக்கப்படும், 2-ம் கட்டத்தில், மேலும் 5ஏக்கரில் விரிவாக்கப்படும். இந்த டைடல் பார்க் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்" என்றார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:10:00
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் நடந்த ‘கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாட்டில், மூக்கு, காது வழியாக மூளைக்கு கீழ் இருக்கும் கட்டிகளை அகற்றுவது குறித்து, நிபுணர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கபால அடித்தள அதிநவீன அறுவை சிகிச்சைக்கான ஒருநாள் பயிற்சி மற்றும் மாநாடு நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் பாலாஜி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார். தொடர்ந்து, மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரனுக்கு ‘செவிச் செம்மல்’ விருது வழங்கி கவுரவித்த அமைச்சர், CL Bald மேத்தா மருந்தாளுநர் கல்லூரித் தாளாளர் எஸ்.ரமேஷ் நிதியுதவியால் புனரமைக்கப்பட்ட கருத்தரங்கு கூடத்தை திறந்துவைத்தார். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் நடைபெற்ற மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அறுவை கிச்சை வல்லுநர்கள், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டில் கபால அடித்தள அறுவைசிகிச்சை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டீன் பாலாஜி கூறியதாவது: நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பல நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், மூளையின் அடிப்பாகத்தில் ஏற்படும் சாதாரண மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கட்டிகளை அகற்ற, கபாலத்தை திறந்து அறுவைசிகிச்சை செய்தனர். இப்பகுதியில் பல முக்கியமான நரம்புகளும், ரத்தக் குழாய்களும் செல்வதால் அறுவைசிகிச்சை செய்வது சவாலானது. நவீனத் தொழில்நுட்பம் மூலமாக தற்போது இந்த அறுவைசிகிச்சை மூக்கு மற்றும் செவி வழியாக என்டோஸ்கோபி மற்றும் மைக்ரோஸ்கோபி மூலமாக மேற்கொள்ளப்பட்டு, புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. இதன்மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகின்றன. நரம்பு சார்ந்த பின்விளைவுகளும், இறப்பு விகிதங்களும் குறைகிறது. இந்த சிகிச்சை முறைகள் குறித்து, மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ வல்லுநர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இது மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த மாநாட்டில் நேவிகேஷன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப முறையும் எடுத்துரைக்கப்பட்டது. உடல் உறுப்பு மாற்று பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட காக்லியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.
மயிலை கோயிலில் இளைஞர்கள் நடனமாடும் வீடியோ வைரல்: பக்தர்கள் எதிர்ப்பு; சைபர் க்ரைமில் புகார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:08:00
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் இளைஞர்கள் நடனமாடுவதுபோல் வெளியான வீடியோ குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோஎடுத்து வருகின்றனர். பக்தி காரணமாக சிலர் இவ்வாறு செய்வதை பெரும்பாலும் யாரும் தடுப்பது இல்லை. சினிமா பாட்டுக்கு நடனம்: இந்நிலையில், கபாலீஸ்வரர் கோயிலில் 2 இளைஞர்கள் சினிமாபாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. புனிதமான இடமாக கருதப்படும் கோயில் வளாகத்துக்குள் இளைஞர்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டுள்ள வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் இணைகிறதா அதிமுக, பாமக, தேமுதிக? - ஒருங்கிணைக்கும் பணியில் ஜி.கே.வாசன் தீவிரம்
சி.கண்ணன்
சென்னை
2024-02-05 06:06:00
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தீவிரமாக களமிறங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை மேற்குவங்கம், பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், முக்கிய தலைவராக கருதப்பட்ட நிதிஷ் குமாரும் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் சேர்ந்து பிஹாரில் ஆட்சி அமைத்துள்ளார். இந்த தொடர் நிகழ்வுகள், இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெற கூடாது என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க, அவர்களை தோழமையுடன் அனுசரித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது. இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைக்கவும், கூடுதலாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்து வந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை என்றுகுற்றம்சாட்டிவிட்டு, தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து முக்கியகட்சியான அதிமுக வெளியேறியது. ஏற்கெனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக வெளியேறிய நிலையில், அதிமுகவும் வெளியே சென்றது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுவதுமாக அதிமுக வெளியே வந்துவிட்டது. பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை’’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்து திட்டவட்டமாக கூறிவருகிறார். மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் கவலையில்லை. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவை தோல்வி அடைய செய்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேவந்த கையோடு, மதுரையில் நடைபெற்றஎஸ்டிபிஐ மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பழனிசாமி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட கூடாது என்பதில் அவர்உறுதியாக உள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அக்கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர். அதேநேரம், பாமக, தேமுதிகவுடன், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் தங்கள் பக்கம்கொண்டு வந்து, அதிமுக கூட்டணியை பலப்படுத்தவும் பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணியில் கேட்டதொகுதிகள் கிடைக்காத நிலையில், சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பாஜக ஆதரவுநிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியேறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை பாஜக களமிறக்கியுள்ளது. இதையொட்டி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தஜி.கே.வாசன், கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிவழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக நட்டா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார். பின்னர், அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமியையும் சந்தித்து ஜி.கே.வாசன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் பாமக தலைவர் அன்புமணியை வாசன் இன்று (பிப்.5) சந்தித்து, பாஜக கூட்டணியில் பாமகவை இடம்பெறச் செய்வது குறித்து பேச்சு நடத்த உள்ளார். மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் கணிசமான இடங்களை பெற பாஜக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா வரும் 11-ம்தேதி சென்னை வருகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ம் தேதிதமிழகம் வர உள்ளார். அதற்குள், பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என கூறப்படுகிறது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மறு கட்டுமான திட்டம்: 25000 பயனாளிகளின் ரூ.594 கோடி பங்களிப்பை அரசே ஏற்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 06:04:00
சென்னை: தமிழகத்தில் 24,766 மறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையான ரூ.594.54 கோடியை தமிழக அரசேஏற்றுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட நந்தனம் வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம், ஜோகித் தோட்டம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.146.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1,046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதி 1970-ம் ஆண்டு 270 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 568 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 410 சதுரஅடி கொண்ட வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 3கட்டிடங்கள், தூண் மற்றும் 11 தளங்களுடன் ஒரு கட்டிடம் என 630 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.87.53 கோடியில் கட்டப்பட்டுள்ளன. ஜோகித் தோட்டம் திட்டப்பகுதி 1982-ம் ஆண்டு 230 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 256 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.58.66 கோடி மதிப்பில் 417 சதுர அடி கொண்டதாக, தூண் மற்றும் 13 தளங்களுடன் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது திறக்கப்பட்ட திட்டபகுதிகளில் ஒரு பல்நோக்கு அறை,படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 72 திட்டப்பகுதிகளில் ரூ.2,544.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 23,259 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சம் முதல் 6 லட்சமாக இருந்தது. பயனாளிகளின் சிரமத்தை அறிந்த முதல்வர், பங்களிப்பு தொகையை குறைக்கும் நோக்கில், சாலை வசதிகள்,மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பொது வசதி கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் செலவுகளை அரசே ஏற்கும்என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால், பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ.4 லட்சம்குறைக்கப்பட்டு, தற்போது ரூ.1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2.5 ஆண்டுகளில் 24,766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.594.54 கோடியை அரசே ஏற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், துறை செயலர் சி.சமயமூர்த்தி, வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர்,இணை மேலாண் இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி: சோதனை முறையில் பயன்படுத்த ஒப்புதல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 05:57:00
சென்னை: மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது. 7 சேவைகள்: இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும். இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இந்த செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏபிகே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கு இருக்கை கொள்முதல் ஆய்வு செய்ய உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 05:52:00
சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 372 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட 1,881 கூடுதல்வகுப்பறைகளுக்கு 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள், டான்சி நிறுவனத்தின் மூலம் கொள்முதல்செய்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, டான்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுபொருட்கள் அனைத்தும் தரத்துடனும், உரிய எண்ணிக்கையிலும் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். வல்லுநர் குழுவில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், துறை சார்ந்த வல்லுநர் இடம்பெற வேண்டும். பொருட்களின் தரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிஆய்வை முடிக்க வேண்டும்.ஆய்வுக்கு பின்பு சமர்பிக்கப்படும் அறிக்கையுடன் புகைப்படம் உட்பட ஆவணங்கள் இணைக்கப்படுவது அவசியமாகும்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்: புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
செய்திப்பிரிவு
புதுச்சேரி
2024-02-05 05:46:00
புதுச்சேரி: அரசியல் கட்சி தொடங்கிய பிறகு புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. புதுச்சேரியின் முக்கிய பஞ்சாலையாக விளங்கிய ஏஎஃப்டி மில்,புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ளது. ஆலை மூடப்பட்டதால், இந்த வளாகத்தில் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், ‘லால் சலாம்’ படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இங்கு வந்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்' திரைப்படத்துக்காக ஏஎஃப்டி மில் வளாகத்தில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, நடிகர் விஜய் நேற்று மதியம் வந்தார். அலைமோதிய கூட்டம்: ‘தமிழக வெற்றி கழகம்' என்றஅரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜய் படப்பிடிப்புக்காக வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் ஏஎஃப்டி மில் வளாகம் முன்பு குவிந்தனர். நேரம் ஆக ஆக,ரசிகர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. போலீஸாரும் போதிய அளவில் இல்லாததால், சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள், தொண்டர்கள் அமைதி காக்குமாறு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டார். ஆனாலும், விஜய்யை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதற்கிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் வாகனங்கள் அந்த வழியில் செல்ல முடியாமல் திரும்பிச்செல்லத் தொடங்கின. பலரும் விஜய்யைபார்க்க சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரசிகர்கள் உற்சாகம்: பின்னர், ஏஎஃப்டி மில் வளாகம் முன்பு பெரிய வேன் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில், அங்கு வந்த விஜய், வேன்மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். விஜய்யை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிடத் தொடங்கினர். மலர்களையும், பூ மாலைகளையும் அவரை நோக்கி வீசினர். அந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு விஜய், நன்றி தெரிவித்தார். பின்னர் அந்த மாலைகளை ரசிகர்களை நோக்கி வீசினார். முத்தங்களையும் பறக்கவிட்டார். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பினார். விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திப்பதாக தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 05:38:00
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப். 12-ம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். ஏற்கெனவே தமிழக அரசு -ஆளுநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாததாலும், இந்த ஆண்டு கூட்டத்துக்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்தும், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வந்தார். எனினும்,சட்டப்பேரவை கூட்டத்தொடரை சமீபத்தில் முடித்து வைத்து ஆளுநர் உத்தரவிட்டார். தொடர்ந்து, பேரவையின் இந்த ஆண்டு கூட்டத் தொடரைதொடங்கவும், அதில் உரையாற்றவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பிப்.12-ம்தேதி காலை 10 மணிக்குதமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். 2023 ஜனவரி மாதம் நடந்தஆண்டின் முதல் கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை நீக்கியும், சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக அவர் இருக்கும்போதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு, அரசு அளித்த உரையே பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆளுநர் உரைதயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில், ஆளுநர் ரவிநேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரது பயணம் திட்டமிட்டது. சொந்த விஷயமாக செல்கிறார் என்று கூறப்பட்டாலும், 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருப்பார் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷாஉள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக ஆலோசனை: விவரங்களை கேட்டறிந்தார் ஸ்டாலின்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-05 05:34:00
சென்னை: திமுகவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஸ்பெயினில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், நேற்று காலை திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆரணி தொகுதி எம்.பி.யான காங்கிரஸைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் செயல்பாட்டில் திமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆரணி தொகுதியைத் தரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாலையில், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயினில் இருந்தபடியே, தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் தற்போதைய நிலவரம் மற்றும் கட்சியினர் தெரிவிக்கும் விவரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவை மீட்டெடுக்காமல் விட மாட்டோம்: டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-05 04:04:00
திண்டுக்கல்: அதிமுகவை மீட்டெடுக்காமல் விட மாட்டோம் என அமமுக மாநில பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட அமமுக பூத் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்டச் செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வ பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக மட்டும் தான் இருந்தது. ஆனால், அமமுக-வுக்கு எதிராக பல எதிரிகளும், துரோகிகளும் இருக்கின்றனர். நமக்கு நண்பர்களாக இருந்தவர்கள், பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு பழனிசாமியுடன் கைகோத்து இருக்கின்றனர். துரோகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுக தற்போது துரோகிகளின் கைகளில் உள்ளது. அதனை மீட்டெடுக்காமல் விட மாட்டோம். திமுக திருந்தி விட்டது என மக்கள் நினைத்து அவர்களுக்கு வாக்களித்து ஆட்சிப் பொறுப்பை கொடுத்தனர். ஆனால், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாகப் பேசியதால் அந்த கூட்டணியில் இருந்து விலகியதாக பழனிசாமி தெரிவித்தார். 4 ஆண்டுகள் அவர்களின் ஆட்சியை காப்பாற்றியது யார் என்று சிறு குழந்தையை கேட்டால் கூட கூறிவிடும். ‘இண்டியா’ கூட்டணி தற்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, என்றார்.
விஜய் கட்சியால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் அர.சக்கரபாணி கருத்து
செய்திப்பிரிவு
பழநி
2024-02-05 04:02:00
பழநி: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் அர.சக்கர பாணி கூறினார். பழநியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ‘மாஸ்டன் பிளான்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திட்டப் பணிகள் நிறைவு அடைந்தவுடன் திருப்பதிக்கு நிகராக பழநி முருகன் கோயிலில் எல்லா வசதிகளும் இருக்கும். பழநி வரும் பக்தர்களுக்காக புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு உள்ளது. விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படும் போது, எதற்கு மலிவு விலை அரிசி. தமிழகத்தில் அரிசி ஆலைகள் 700 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளன. அங்கு 12 லட்சம் டன் நெல் அரைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தேனி உள்ளிட்ட இடங்களில் அரிசி ஆலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.400 கோடியில் ‘செமி குடோன்' அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உணவுப் பொருள் விலை உயர்வை கட்டுப் படுத்த எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் திமுக-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழைய கொடிமரங்கள் மாயம்
அ.கோபால கிருஷ்ணன்
ஶ்ரீவில்லிபுத்தூர்
2024-02-05 01:38:00
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேக பணியின் போது அகற்றப்பட்ட இரு பழைய கொடிமரங்கள் மாயமானது குறித்து பிரசாத கடை ஒப்பந்தம் எடுத்த ராமர் என்பவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கடந்த 29-ம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ' ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்த போது ஆண்டாள் சந்நிதி, வடபத்ரசயனர் சந்நிதி, பெரியாழ்வார் சந்நிதி முன் இருந்த கொடிமரங்கள் அகற்றப்பட்டு, புதிதாக 3 கொடிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அகற்றப்பட்ட பழைய கொடிமரங்களில் தற்போது 1 மட்டுமே கோயிலில் உள்ளது. மற்ற 2 கொடிமரங்களும் கோயிலில் இருந்து சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்டு உள்ளது. அந்த கொடிமரங்களில் பழமையான செப்பு தகடுகள் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. மாயமான கொடிமரங்கள் குறித்து விசாரணை நடத்தியதில், கோயிலில் பெயிண்டிங் அடிக்கும் ஒப்பந்ததாரர் கோமதிநாயகம் என்பவர் இரண்டு கொடிமரங்களையும் கோயிலில் பிரசாத கடை ஏலம் எடுத்து நடத்தி வரும் ரமேஷ் (எ) ராமர், அவரது சகோதரர் மாரிமுத்து உள்ளிட்டோர் லாரி மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தார். பிரசாத கடை ராமர் என்பவரை விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு புகார் மனுவில், ஆண்டாள் கோயில் கல்யாண மண்டபத்தில் மணமேடையில் படிகளின் இருபுறமும் இருந்த கல்லால் ஆன ஒரு யானை சிலைகள் கடந்த 2008 - 2009 காலத்தில் சட்டவிரோதமாக அகற்றப்பட்டு உள்ளது. அந்த சிலைகள் யாரால் அகற்றப்பட்டது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆண்டாள் கோயிலில் ஆய்வு செய்து விட்டு சென்றனர். கோயிலில் இருந்த பழமையான கொடி மரங்கள் மற்றும் சிலைகள் மாயமானது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை; நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்” - அமைச்சர் துரைமுருகன்
ந. சரவணன்
காட்பாடி
2024-02-04 21:23:00
காட்பாடி: எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து பாலாறு வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் ரூ.6 கோடியே 32 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்து கால்வாய் சீரமைப்புப்பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது, ‘‘ பாண்டியன் மடுவு பாலாற்றில் இணையும் வரை 12.70 கி.மீ நீளத்துக்கு கால்வாய் அகலப்படுத்தி தூர்வாருவது, கால்வாயின் இருபுறங்களிலும் எல்லை கற்கள் பதிக்கும் பணிகள், காங்கேயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், கார்ணாம்பட்டு, அம்முண்டி ஆகிய கிராமங்களில் பாண்டியன் மடுவு கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்துள்ள 5 பாலங்களை புனரமைக்கும் பணிகள் மற்றும் 5 நேரடி பாசன கால்வாய்கள் 10.60 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகள் முடிந்தால் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் கால்வாயில் தங்கு தடையின்றி செல்வதுடன், அருகில் இருக்கும் விளைநிலங்களுக்கு தண்ணீர் புகாமல் இருக்கும். இந்த பணிகள் முடிவுற்றால் காங்கேயநல்லூர் கிராமம் முதல் அம்முண்டி வரை கால்வாயில் இருபுறமும் 6 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது தவிர குடிநீர் வசதி மற்றும் 901.55 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல, காவனூர் ஏரி நிரம்பும் போது அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதற்காக தனியாரிடமிருந்து நிலம் பெறப்பட்டு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் தூர்வாரப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொன்னை பகுதியில் மட்டும் பொன்னையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பரமசாத்து அருகில் தடுப்பணை, மேல்பாடியில் தரைமட்ட பாலம், குயைநல்லூரில் ஒரு தடுப்பணை என பொன்னை பகுதியில் மட்டும் 4 பெரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலாற்றிலும் நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் பாலாற்றில் தேங்கி நிற்கும். மேலும் அருகில் உள்ள கிராமங்களின் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். காட்பாடி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மகிமண்டலத்தில் இந்த ஆண்டு சிப்காட் தொடங்கப்பட உள்ளது. காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தொடர்ந்து நிறைவேற்றப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, துணை மேயர் சுனில்குமார், மேல் பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு:
90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 19:17:00
சென்னை: "திமுக அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அழுத்தத்தை தர வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் காவிரியிலிருந்து மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நெல் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. அரசு, நெல் குவின்டாலுக்கு ரூ.2,310 என்று நிர்ணயித்திருந்த நிலையில், வியாபாரிகள் நெல் குவின்டாலுக்கு ரூ.3000-க்கு மேல் வழங்குவதால், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சென்றபோது, அப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் கருகி இருந்ததை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட திமுக அரசை வலியுறுத்தினேன். பிப்.3-ம் தேதி நிலவரப்படி, 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் சுமார் 70 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதாவது, சுமார் 33 டி.எம்.சி. அளவு தண்ணீர் உள்ளது. இதுவே, கர்நாடக அணைகளில் 124 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92 அடியும்; 65 அடி உயரமுள்ள கபினியில் 54 அடியும்; 129 அடி உயரமுள்ள ஹேரங்கி அணையில் 102 அடியும் தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு, கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்காக வழங்க வேண்டிய நீரில் சுமார் 90 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனது அரசியல் கூட்டாளியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் நமக்குரிய பங்கை வலியுறுத்திப் பெற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்ட திமுக, காவிரியில் நமக்குரிய பங்கினைப் பெறுவதற்கு இதுவரை எந்தவிதமான முனைப்போ, நடவடிக்கையோ எடுக்கவில்லை. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நமது தண்ணீர் பற்றாக்குறையை எடுத்துக்கூறி நமது பங்கு நீரைப் பெற இந்த அரசு எந்தவொரு கடுமையான அழுத்தத்தையும் தரவில்லை. ஆனால், திரைமறைவில் திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் இணைந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தில் மேகேதாட்டு பிரச்சனையை ஓட்டெடுப்பு மூலம் நீர்வளக் கமிஷனின் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது. இதை கண்டித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு இதுவரை திமுக அரசிடமிருந்து எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை. இச்சூழ்நிலையில் நேற்று (பிப்.3) டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூரில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க திமுக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் தற்போது சுமார் 33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடகா நமக்குத் தர வேண்டிய நிலுவை பங்கு சுமார் 90 டி.எம்.சி-ஆக உள்ளது. எனவே, திமுக அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அழுத்தத்தை தர நிர்வாகத் திறனற்ற திமுகவின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
ராஜ் சத்யன் vs சரவணன் | செலவு செய்ய தயங்கும் முக்கிய நிர்வாகிகள் - மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார்?
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-04 18:25:00
மதுரை: எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி காலத்தில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் கூட அதிமுக ஆட்சியை இழந்தாலும், மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. மற்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு சவாலான வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது. அதனால், திமுக ஆளும் கட்சியாகவே இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் அக்கட்சிக்கு இணையாக அதிமுக வலுவாகவே உள்ளது. தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்தியனுக்குதான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திடீரென்று சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த டாக்டர் சரவணனுக்கு ‘சீட்’ கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவில் இருந்த டாக்டர் சரவணன், கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கொடுக்காததால் அதிருப்தியடைந்து, திடீரென்று பாஜக பக்கம் தாவினார். பாஜகவில் சேர்ந்த மறுநாளே அவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டு மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு கணிசமான வாக்குபெற்றாலும் திமுக வேட்பாளர் தளபதியிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜக மாவட்டத் தலைவராகி, அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாகவும், செல்வாக்காகவும் இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் மோதல் ஏற்படவே, அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திமுகவிற்கு செல்வதற்கு அமைச்சர் பழனிவேல் ராஜனிடம் தஞ்சம் புகுந்தார். அவரும் டாக்டர் சரவணனை திமுகவில் சேர்க்க பெரும் முயற்சி செய்தார். ஆனால், அவரை திமுகவில் சேர்க்க உள்ளூர் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்சித் தலைமை சரவணனை மீண்டும் கட்சியில் சேர்க்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், வேறுவழியில்லாமல் அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்தார். பண பலமிக்க அவர் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி வருவதால் அவர் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அக்கட்சியினர் அவர் நிலையாக கட்சியில் தொடர்வார் என்று நம்பகத்தன்மை வைத்திருப்பதில்லை. தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து வெற்றிப்பெற தேர்தல் செலவுகளுக்கு, அக்கட்சி சார்பில் போட்டியிடும் பணபலமிக்க வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கட்சித் தலைமை குறிப்பிட்ட தொகையை நிர்ணம் செய்து, இந்த பணத்தை செலவு செய்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் ‘சீட்’ என கறாராக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்குமா? என்பதை உறுதியாக கூற முடியாத நிலையில் அந்த பணத்தை செலவு செய்வதற்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் தயாராகவில்லை. ஆனால், அந்த பணத்தை செலவு செய்வதற்கு டாக்டர் சரவணன், கட்சித் தலைமையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதனால், தற்போது மதுரை வேட்பாளர் பந்தயத்தில் டாக்டர் சரவணன் முந்துகிறார். ராஜன் செல்லப்பா, கட்சித் தலைமை கூறும் தொகையை செலவு செய்வதற்கு தயாரானால், அவரது மகன் ராஜ் சத்யன் மீண்டும் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் உள்கட்சியினர் உள்குத்து வேலையாள் ராஜ் சத்யன் தோல்வியடைந்தாலும், அரசியலில் துவண்டு ஒதுக்கிவிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் நிழலாக முன்பைவிட தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தந்தை ராஜன் செல்லப்பா மாவட்ட அளவிலேயே அரசியல் செய்து வந்தநிலையில் அவரது மகன், ராஜ் சத்யன், அதிமுக ‘ஐடி விங்’ பிரிவை கையில் எடுத்துக் கொண்டு கே.பழனிசாமி மனதறிந்து செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது உள்ளூர் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் இல்ல விழாக்களிலும் பங்கெடுத்து வருகிறார். இற்கிடையில், ராஜன் செல்லப்பா, தனது மகன் மீண்டும் மதுரையில் போட்டியிட்டால் சொந்த கட்சியினர் உள்குத்து வேலையை சமாளிக்க முடியாது என்பதால் தான் எம்எல்ஏ ஆக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு ‘சீட்’ கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அம்மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி ராஜன் செல்லப்பாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார். அவர், ஆதரவு நிர்வாகி சிவகாசியை சேர்ந்த ஒருவரை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், கட்சித் தலைமையோ ராஜ் சத்யன் அல்லது முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜனை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மகனுக்கு ராஜ்சத்யனுக்கு கொடுக்க கே.பழனிசாமி விருப்பப்படும்நிலையில் தேர்தல் செலவுகளை அவர் ஒத்துக்கொள்ளும்பட்சத்திலேயே அவர் மதுரை அல்லது விருதுநகர் வேட்பாளராக முடியும். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் இந்த முறை டாக்டர் சரவணனுக்கு ‘சீட்’ வழங்க ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுவதால் ராஜ் சத்யனா? டாக்டர் சரவணனா? என்ற விவாதமும், எதிர்பார்ப்பும், மதுரை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | மலை கிராமங்களில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் @ ஓசூர்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-04 18:07:00
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள மலைகிராமங்களில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. தற்போது நிலவும் சீதோசன நிலை மாற்றத்தால் தேன்கனிக்கோட்டை அடுத்த பேவநத்தம், காடுலக்கசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் அம்மை தாக்கி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல், இயற்கை வைத்தியம் மூலம் அம்மை நோய்க்கு சிகிச்சை அளித்துக்கொள்கின்றனர். இப்பகுதிகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். மேலும் அம்மை நோய் குறையாத குழந்தைகளுக்கு மருந்தகங்களிலும் மற்றும் மருத்துவம் படிக்காக போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இப்பகுதிகளில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கடந்த 2–ம் தேதி இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காடுலக்கசந்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அம்மை பரவலை தடுக்க மருத்துவ முகாம் நடந்தது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை இளைஞர்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-04 17:50:00
மதுரை: கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களை பாதுகாக்க, தண்ணீர், தானியம் வைக்க பொதுமக்கள் தூக்கி வீசும் நெகிழி குடுவைகள் தயார் செய்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறார் இளைஞர் ஒருவர். குளிர்காலம் முடிந்து மதுரை மட்டுமில்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள், சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படுகின்றன. மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய நெகிழிக்குடுவைகள் மண்ணிற்குள் சென்று மக்காத நிலை ஏற்படும் முன் அவற்றினை சேகரித்து, அவற்றில் தானியங்கள், மற்றும் தண்ணீர் நிரப்பி நாம் தினமும் செல்லக்கூடிய பகுதிகளில் மரங்களில் வைத்து வரும் பணியை மதுரை பகுதியில் பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் செய்து வருகிறார். அவர், இப்பணியை பள்ளி மாணவர்களிடம் எடுத்து சென்று அவர்கள் முன்னிலையில் நெகிழி பைகளை சேகரித்து, அதை எப்படி பல்லுயிர்களை பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வை செய்து வருகிறார். நேற்று அவர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் மாணவர்களுக்கு நெகிழி குறித்து எடுத்துரைத்து இந்த பசுமை பணியை மேற்கொண்டார். ''இப்பசுமைப் பணியின் மூலமாக பல்லுயிர்களும் பயன்பெறும் இயற்கையினை பாதுகாக்க முடியும்'' என ஜி.அசோக்குமார் கூறி வருகிறார்.
“கண்டா வரச் சொல்லுங்க!” - போஸ்டர் ஒட்டி மாறி மாறி கலாய்க்கும் திமுக - அதிமுக @ மதுரை
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-04 17:27:00
மதுரை: மக்களவைத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் 'கண்டா வரச் சொல்லுங்க' என்று திமுகவும், அதிமுகவும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. அக்கட்சிகளின் 39 எம்பிக்களின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளையும், அவர்கள் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு மட்டுமில்லாது, பொதுமக்கள் அதிகம் உள்ள முக்கிய இடங்களில், சாலைகளில், தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி புதிய தேர்தல் வியூகத்தை கையில் எடுத்தனர். அந்த போஸ்டரில் அதிமுக என்று போடாததால் முதல் நாள், அந்த போஸ்டரை யார் ஒட்டினார்கள் என்பது தெரியாமல் பொதுமக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் குழப்பமடைந்தனர். அடுத்தடுத்த நாளில் மீண்டும் அதே தலைப்பில் போஸ்டர் ஓட்டி சில வாசகங்களை குறிப்பிட்டிருந்தனர். அதில், ''ஸ்டாலின் படத்தைப்போட்டு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து போட்டோ ஷூட் தவிர வேறெங்குமே தென்படாத விடியா திமுக குடும்பத்தை கண்டா வரச் சொல்லுங்க என்றும் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டை மூழ்கடித்தவர்களை கண்டா வரச் சொல்லுங்க, தமிழக எம்பிகள் 39 பேரை கண்டா வரச் சொல்லுங்க,'' என குறிப்பிட்டு திமுகவை கலாய்த்து இருந்தனர். அதன்பிறகு அதன்பின்னணியில் அதிமுக ஐடி விங் பிரிவுதான் இந்த போஸ்டர் பிரச்சாரம் செய்தது என்பது தெரிய வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது திமுக கட்சி, அதே அதிமுகவின் அதே 'கண்டா வரச்சொல்லுங்க' ஐடியாவை கையில் எடுத்து போஸ்டர் ஓட்டி, அதில், கண்டா வரச்சால்லுங்க என தலைப்பிட்டு "நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை" என்று கூறி அதில், "பாஜகவை எதிர்ப்பது போல் நடிக்க தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை, கட்சியில் பத்து பேரோ, ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும், குறிப்பாக சுயமரியாதை, சூடு, சொரணை இருக்கவே கூடாது, முக்கியமாக நாங்கதான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும்", என கூறி அதிமுக தலைமை அலுவலக முகவரியையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, தற்போது திமுகவும் பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையிலே, திமுக, அதிமுக கட்சிகளின் தலைமைகள், தங்கள் கூட்டணிகளுடன் 'சீட்' பேச்சுவார்த்தை நடத்தி வரும்நிலையில், இரு கட்சி நிர்வாகிகள் இதுபோல் சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையாக மாறமாறி கலாய்த்து கொண்டிருப்பது, தமிழக தேர்தல் களத்தை தற்போதே பரபரப்பாக்கியுள்ளது.
“தேர்தல் நேரத்தில் தவறு செய்தால் கட்சியில் இருந்து நீக்கம்” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
2024-02-04 17:17:00
தூத்துக்குடி: தேர்தல் நேரத்தில் தவறு செய்யும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களான அனிதா ஆர்.ஆனந்த மகேஸ்வரன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: "மக்களவை தேர்தலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் இண்டியா கூட்டணி என்ற வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. அடுத்த ஆட்சி இண்டியா கூட்டணியின் கூட்டாட்சி தான் அமையும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில், ஏழை, எளிய மக்களை நேசிக்க கூடிய, மழை, வெயில் எந்நேரமும் மக்களை பற்றி சிந்திக்க கூடிய கனிமொழி எம்பி தான் மீண்டும் வேட்பாளராக நிற்பார். அவரை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக சட்டப்பேரவை தொகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஒன்றிய அளவிலான குழுவை தேர்வு செய்ய வேண்டும். இந்த குழுவில் அனைவரையும் ஒருங்கிணைத்து பொருத்தமானவர்களை தேர்வு செய்து ஒன்றியக்குழுவை அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை மாவட்ட கழகத்தில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளியூரில் வசிப்பவர்கள், இறந்தவர்கள் விவரங்களை 10 நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட செயலாளர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கட்சி தலைமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். எந்தவித கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது குறிக்கோள். அது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்" என்றார் அமைச்சர். கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ஆர்.சுதானந்தம், மாநில திமுக வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்களான முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம்: தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ பேசுகையில், "நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நமது வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்ற சட்டப்பேரவை தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி விளங்க வேண்டும். அந்த வகையில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றியக்குழு அமைத்து பணியாற்ற வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து தகவல்களை தெரிவித்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை குழு வருகிறது. அந்த குழுவிடம் நம் பகுதிக்கு தேவையானவற்றை மனுக்களாக கொடுக்கலாம்" என்றார் அவர்.கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆர்.சுதானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தொடக்கம் @ ஓசூர்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-04 17:14:00
ஓசூர்: அஞ்செட்டி வனப்பகுதியில் கோடை சீசன் தொடங்கும் முன்பு தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கியது. ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் கர்நாடக மாநில வனப்பகுதிகளான கோடிஹள்ளி, ஹாரஹள்ளி, ஆனேக்கல் உள்ளிட்ட காப்புக்காடுகளையொட்டி ஜவளகிரி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. கோடைக்காலங்களில் இங்கிருந்து வனவிலங்குகள் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்நிலையில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் கோடைக்காலங்களில் வனவிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயரும் என்பதால், தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் மற்றும் தீவனப்புல்கள் வளர்க்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள 3 பெரிய தண்ணீர் தொட்டிகளில் வனசரகர் முருகேசன் தலைமையில் வன ஊழியர்கள் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல் சோளர் மற்றும் ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, "ஜவளகிரியையொட்டி உள்ள கர்நாடக மாநில வனப்பகுதிகளில் உள்ள யானை, மான். சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கோடைக்காலங்களில் தண்ணீர் குடிக்க அஞ்செட்டி வனப்பகுதி வழியாக செல்லும் காவிரி ஆற்றுப் படுகைக்காக வருகிறது. அப்போது வனப்பகுதியில் வனவிலங்குகள் சுற்றும் போது தண்ணீர் தேவைப்படும் என தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். மேலும்சோளார் மின் தடுப்பு வேலிகளையும் பராமரித்து வருகிறோம். தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குறைய குறைய தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணியை கோடை காலம் முழுவதும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோடைகாலம் முழுவதும் வனத்தில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் குடிநீர் நிரப்பப்படும். இதன் மூலமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக்காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. அதேபோல் வனப்பகுதிகளிகளையொட்டி கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விரைந்து அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்" என்றனர்.
வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீர்: மவுனம் காக்கும் மதுரை மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-04 16:04:00
மதுரை: விவசாய பம்பு செட் மோட்டாரில் விழும் தண்ணீர் போல், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைகை ஆறு மதுரையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. நகர்பகுதியில் இந்த ஆறு 12 கி.மீ., தொலைவிற்கு ஓடுகிறது. கடந்த காலங்களில் ஆண்டு முழுவதுமே வற்றாத ஜீவநதி போல், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலப்போக்கில் காலநிலை மாற்றத்தால் மழைநீர் பொழிவு குறைவு, கிளை நதிகள் திசைமாற்றம், மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு போன்வற்றால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது. மற்ற நாட்களில் மழை பெய்யும்போது சிற்றோடை போல் ஒரு ஓரமாக தண்ணீர் செல்கிறது. அதோடு, மாநகராட்சி பகுதிகளில் திறந்துவிடப்படும் கழிவுநீர், ரசாயன கழிவுநீர் போன்றவையும் சேர்ந்து வைகை ஆறு, மதுரை நகர் பகுதியில் கழிவு நீரோடையாக நகர்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க, கடந்த 25 ஆண்டாக மதுரை மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாநகராட்சியிடம் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆற்றை பாதுகாக்க வேண்டிய மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி ஆகியோர் இணைந்தே ஆற்றின் அழிவதற்கு காரணமாகி வருகிறார்கள். கடந்த சில நாளாக மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலை அருகே உள்ள மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து குழாய் மூலம் பகிரங்கமாக ஆற்றில் கழிவு நீர்திறந்துவிடப்படுகிறது. அதனால், அப்பகுதியில் வைகை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பகுதியில் கடும் தூர்நாற்றம் ஏற்படுகிறது. இதுபோல் விளாங்குடி அருகேயும் மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கழிவுநீர் திறந்துவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாலை நேரங்களில் விவசாய பம்பு செட் மோட்டார் குழாயில் விழும் தண்ணீரைப் போல் அதிகமாகவும், மற்ற நேரங்களில் சீராகவும் கழிவு நீர் தொடர்ச்சியாக வைகை ஆற்றில் திறந்து விடப்படுவதால் மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றின் வளம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ''கடந்த அதிமுக ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' போர்வையில் மாநகராட்சி ஆற்றை சுருக்கி, அதன் இரு கரைகளிலும் பிரமாண்ட நான்கு வழிச்சாலைகளை அமைத்துவிட்டனர். ஆனால், அந்த சாலைப்பணி தற்போது வரை நிறைவு பெறாததால் இந்த திட்டத்திற்கு மாநகராட்சி சார்பில் செலவு செய்த ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத்துறை செலவு செய்த ரூ.300 கோடியும் விரயமானதுதான் மிச்சம். தற்போது நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை இந்த சாலை எந்த வகையிலும் குறைக்கவில்லை. தற்போது ஆற்றில் மாநகராட்சியே திறந்துவிடும் கழிவு நீரை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை போன்ற அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், தனியார் ஆக்கிரமிப்பாகவும் மாறி வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு, சங்கிலி தொடராக அதன் வழித்தடங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி கடைசியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. ஆற்றை காப்பாற்ற வேண்டிய தமிழக அரசும் தொடர்ந்து மவுனம் காப்பது, காலப்போக்கில் இந்த வழித்தடமும் அழிந்தாலும் ஆச்சரியம் இல்லை,'' என்றார். இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி குணசேகரிடம் கேட்டபோ, ''நான் பொறுப்பிற்கு வந்தபிறகு தற்போதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
27 ஆண்டுகளில் ஒரு பதவி உயர்வு மட்டுமே - பயிற்சி முடித்த ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்குமா?
என்.சன்னாசி
மதுரை
2024-02-04 15:54:00
மதுரை: தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு குறிப்பிட்ட காலத்தில் படிப்படியாக பதவி உயர்வு என்பது அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 1997-ம் ஆண்டு நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 80-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2008 முதல் தொடர்ந்து 16 ஆண்டாக காவல் ஆய்வாளர்களாகவே பணிபுரிகின்றனர். இவர்களுக்கான டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியல் ஓராண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்பட்டியலிலுள்ள ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிக்கான பயிற்சியும் சென்னையில் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முடிந்து ஓராண்டை தாண்டியும் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். பயிற்சிக்கு பிறகு உரிய நேரத்தில் பதவி உயர்வை பெற முடியாமலும், அதற்கான ஊதிய உயர்வு, டிஎஸ்பி சீருடை அணிய முடியாமல் பணியாற்றுகின்றனர். 1997 தங்களுடன் பயிற்சி பெற்ற நேரடி டிஎஸ்பிக்கள் 5 கட்ட பதவி உயர்வை பெற்று, கூடுதல் டிஜிபி வரை உயர்ந்துவிட்டனர். ஆனால், நாங்கள் மட்டும் ஒரு பதவி உயர்வுடன் ஆய்வாளர்களாகவே பணிபுரியும் நிலையில் இருப்பதாகவும் புலம்பு கின்றனர். டிஜிபி அலுவலகத்தில் கிடப்பில் கிடக்கம் எங்களுக்கான பதவி உயர்வு பட்டியல் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சில ஆய்வாளர்கள் கூறுகையில், “எங்களது பேட்ஜில் தேர்வான சிலர் வயது முதிர்வாலும், உரிய நேரத்தில் பதவி உயர்வு இன்றி காவல் ஆய்வாளராகவே ஓய்வு பெற்றனர். எஞ்சியவர்களுக்கும் அதே நிலை உருவாகுமோ என, அச்சம் உள்ளது. பணியில் சேர்ந்து சுமார் 27 ஆண்டாக ஒரே பதவி உயர்வு ( ஆய்வாளர் ) மட்டுமே பெற்றுள்ளோம். எங்களுடன் காவல் துறை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற குரூப்- 1 டிஎஸ்பிக்கள் ஐஜி, ஏடிஜிபி வரை பதவி உயர்வு பெற்றுவிட்டனர். அவர்களுக்கு மட்டும் அந்தந்த காலத்தில் உரிய பதவி உயர்வு அளிக்கும் காவல் துறை உயரதிகாரிகள், அரசு எங்களை வஞ்சிக்கிறதா?. இருப்பினும், டிஎஸ்பி பதவி உயர்வுக்கான பயிற்சி முடித்தும் ஓராண்டுக்கு மேலாகியும் சுமார் 80 பேர் ஆய்வாளர்களாக தொடரும் நிலையில் உள்ளோம். மக்களவை தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்படலாம். அதற்குள் எங்களுக்கான பதவி உயர்வு உத்தரவு கிடைக்காவிடின் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துவிடும். அடுத்த 6 மாதத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்படும். எனவே, விரைவில் பதவி உயர்வுக்கான உத்தரவை வழங்க தமிழக அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகரரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக பங்கேற்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 15:22:00
சென்னை: திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடங்களைக் கேட்டுள்ளதாக மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், " திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இருதரப்பிலும் மனம்திறந்து எங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு கட்சிக்குமே கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விரும்பும். நாங்களும் கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிடுவது தொடர்பான எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. கட்டாயமாக, இருதரப்பிலும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தனர். இதேபோல், மதிமுக தரப்பிலும் இன்று திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஸ் கூறியதாவது: "பேச்சுவார்த்தை சுமூகமாக, மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டிருக்கிறோம். வெளிநாடு பயணம் முடித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்பியபிறகு, இறுதி முடிவு தெரியவரும். தொகுதிகள் எதுவும் தற்போது முடிவு செய்யவில்லை. இனிமேல்தான் அதை முடிவு செய்வோம். இந்தமுறை எங்களுடைய கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கட்சியின் நிலைப்பாடு, தனி சின்னத்தில், அதாவது எங்களுடைய கட்சியின் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் சிறந்த கோயில் யானை - கும்பகோணம் மங்களம் தேர்வு!
சி.எஸ். ஆறுமுகம்
கும்பகோணம்
2024-02-04 15:08:00
கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திற்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதானது லோக்தந்த்ரா அவுர் ஜந்தா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திற்கு (ஆன் ஆக்டிவ் எலிபென்ட்) சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, புதுடெல்லியைச் சேர்ந்த லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது. கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோயிலாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலுக்கு, கடந்த 1982-ம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர், இந்த மங்களம் யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் யானை மங்களத்திற்கு இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் அதன் ஆரோக்கியத்திற்காகவும், வைட்டமின் சத்துக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடன், அதனை பராமரிக்கும் யானைப் பாகன் அசோக்கிடம் சேர்ந்து, செல்போன் பார்ப்பது, குறும்புத்தனம் செய்வது போன்ற வீடியோ வலைத்தளங்களில் புகழ்பெற்றதாகும். இதனால் கும்பகோணத்திற்கு வருபவர்கள், யானை மங்களத்தைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு பெற்ற யானை மங்களத்திற்கு, சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் நேற்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மற்றும் யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியது, "தமிழகத்தில் உள்ள யானைகளை ஆண்டுதோறும் முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்று வந்தன. ஆனால் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த முகாமிற்கு யானைகள் செல்லவில்லை. இதனையொட்டி, அந்த யானைகளின் பராமரிப்பு, சுற்றுப்புறச்சூழல், யானையை கவனிப்பது உள்ளிட்ட அதற்கு தேவையான அனைத்தையும் முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் உள்ள 34 யானைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தைச் சிறப்பாக பராமரிப்பதும், தூய்மையான சுற்றுப்புறச்சூழல், யானையை முறையாக, கருத்தாக கவனிப்பது உள்ளிட்டவைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால், இந்த யானைக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற யானைகளை சிறப்பாக பராமரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
"டெக்னீஷியன்" என பதிவு செய்ய எதிர்ப்பு - தமிழகத்தில் பிசியோதெரபி துறை நசுக்கப்படுகிறதா?
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-04 14:12:00
மதுரை: பிசியோ தெரபிஸ்ட்கள், லேப் டெக்னீஷியன்கள், ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் என 10 துறைகளை உள்ளடக்கி மாநிலத் தொடர்புடைய மற்றும் சுகாதாரத் தொழில்கள் ( State Allied And Healthcare professions ) கவுன்சில் அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக 2023-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டது. 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போன்றே பிசியோ தெரபி ஸ்ட்களை கலந்து ஆலோசிக்காமல் பிசியோதெரபி துறை சம்பந்தப்பட்ட விதிமுறைகளை தற் போதும் மாநில அரசு அறிமுகப் படுத்தி உள்ளது. நான்கரை ஆண்டு பட்டப்படிப்பு படித்த பிசியோ தெரபிஸ்ட்டுக்கு டெக்னீஷியன் என பதிவுச் சான்றிதழ் வழங்க இருப்பதாக இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலில் உறுப்பினராக பிசியோ தெரபிஸ்ட்கள் பதிவு செய்ய அலோபதி மருத்து வரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிசியோ தெரபிஸ்ட்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோ தெரபிஸ்ட்கள் தமிழ்நாடு கிளைத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: பிசியோ தெரபி துறையின் வளர்ச்சி மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை யென்றால் தமிழகத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்து அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத சில விதிமுறைகளை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். தேசிய அளவில் உள்ள இதே அலைய்டு அண்டு ஹெல்த்கேர் புரபொஷன்ஸ் கவுன்சில் சட்டத்தில் பிசியோதெரபிஸ்ட் ஆக பதிவு செய்ய B. P. T ( பிசியோ தெரபி பட்ட படிப்பு ) குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட விதி முறைகளில் Diploma in Physiotherapy கல்வித் தகுதியும் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக நீக்க வேண்டும். மக்களின் உடல்நலப் பாதுகாப்புக்கு கவுன்சிலின் சட்ட திட்டங்கள் மிகவும் அவசியம் என்பதை சிந்தித்துப் பார்க்க தமிழக சுகாதார துறை முன் வர வேண் டும். நோயாளிகளுக்கு தங்களது உடல் நலப் பிரச்சினைகளுக்குத் தேவையான மருத்துவ முறை களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தடை செய்யும் வகையில் இதில் இடம் பெற்றுள்ள சரத்துகள் அர்த்தப்படுத்துகின்றன. மருந்துகள் மற்றும் அலோபதி மருத்துவர்களைச் சார்ந்து மட்டுமே ஒட்டுமொத்த மருத்துவத் துறை முடங்கி விடக் கூடாது என்றும் பிசியோதெரபி போன்ற உடல்நலப் பாதுகாப்புத் துறைகளின் பங்களிப்பை மக்களுக்கான பொது மருத்துவ சேவை வழங்கலில் அதிகப்படுத்த ஹெல்த் கேர் என்ற உரிய அங்கீகாரம் வழங்கி 2012-ம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கொள்கை முடிவை எடுத் தது. டெக்னீஷியன், பாராமெடிக்கல் என்ற வார்த்தைப் பயன்பாட்டை தடை செய்து `ஹெல்த் கேர்' என்ற தகுதி நிலைக்கு உயர்த்தி பிசியோதெரபி துறைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப் படையில் பிசியோதெரபி உட்பட 56 துறைகளை உள்ளடக்கி தேசிய அளவில் நேஷனல் கமிஷன் ஃபார் அலைய்டு அண்டு ஹெல்த் கேர் புரபொஷன்ஸ் ( NCAHP Act 2021 ) சட்டம் இயற்றப்பட்டது. பிசியோ தெரபி துறையில் உள்ள நவீன வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சியைச் சார்ந்து நேஷனல் கமிஷன் ஃபார் அலைய்டு அண்டு ஹெல்த்கேர் புரபொஷன்ஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிசியோதெரபி துறைக்கான விளக்கத்தை ஏற்றுக்கொண்டு உரிய திருத்தங்களை தமிழக அரசின் விதி முறைகளில் கொண்டு வர வேண்டும். பிசியோ தெரபி பிரதிநிதிகளை அழைத்து கலந்து ஆலோசித்து பிசியோ தெரபிஸ்ட்கள் சம்பந்தப் பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். கவுன்சில் குறித்தும் பிசியோ தெரபி துறை சந்திக்கும் பல்வேறு கொள்கை சார்ந்த சவால்களையும் முறையான வழியில் அரசுத் தரப்புக்குத் தொடர்ந்து தெரிவித்து கொண்டிருந்தும் அரசுத் தரப்பில் எவ்வித செவிசாய்ப்பும் இல்லா மல் பிசியோதெரபி துறை தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வருகிறது. அரசின் இந்த மெத்தனப் போக்கின் நீட்சியாகவே இந்த கவுன்சிலில் தெரிவித்துள்ள விதி முறைகள் வெளி வந்துள்ளன. தமிழ்நாடு மருத்துவ நிறு வனங்கள் ஒழுங்கு முறைச் சட்டத்தில் பிசியோ தெரபி கிளினிக் பதிவதில் உள்ள முரண்பாடுகள், தனித்த பிசியோ தெர பிஸ்ட்களின் பதிவுக்காக தற்போது அறிமுகப்படுத்தியுள்ள விதிமுறைகள் என தமிழகத்தில் பிசியோ தெரபி துறை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்தச் செயல்பாடுகள் பிசியோ தெரபி மருத்துவர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய பிசியோ தெரபி மருத்துவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை தமிழக அரசு உடனடியாகச் சரி செய்யத் தவறும் பட்சத்தில் சான்றிதழ் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் அருகே 4 கி.மீ. நடந்து சென்று ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் பெண்கள்
செய்திப்பிரிவு
திருப்பத்தூர்
2024-02-04 13:58:00
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 4 கி.மீ. வனப்பகுதியில் நடந்து சென்று ஆற்றில் ஊற்று தோண்டி கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால், அதை குடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் விளைநிலங்கள், வனப்பகுதி பகுதியில் 4 கி.மீ. நடந்து சென்று மணிமுத் தாற்றில் ஊற்றுத் தோண்டி குடிநீர் எடுக்கின்றனர். சிறிது, சிறிதாக கிண்ணத்தில் அள்ளுவதால் ஒரு குடம் பிடிக்க அரை மணி நேரம் காத்திருக்கின்றனர். கோடை காலங்களில் மேலும் சில மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுக்கின்றனர். மேலும் வனப் பகுதியில் செல்ல அச்சமாக இருப்பதால் காலை, மாலை இருவேளை மட்டும் ஒரே சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் ‘‘தினமும் குடிநீர் எடுத்து வரவே பல மணி நேரம் ஆவதால் எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. சில நேரம் எங்களை குழந்தைகளை அனுப்புகிறோம். இதனால் அவர்கள் படிப்பும் பாதிக் கப்படுகிறது. எங்கள் பகுதி குடிநீர் பிரச்சினையை அமைச்சர் தீர்க்க வேண்டும். வசதியானவர்கள் ஒரு குடம் நீர் ரூ. 15 கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் காட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 13:52:00
சென்னை: "கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்துக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தேச விரோத செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டதை என்ஐஏ சோதனை காட்டுகிறது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-04 13:42:00
கோவை: தேசத்துக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சோதனை காட்டுகிறது. தமிழக காவல்துறைக்கூட அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சியினரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து என்ஐஏ நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது மிகப்பெரிய கவலைக்குரிய விசயம். அதாவது தேசத்துக்கு எதிரான ஒற்றுமை அல்லது தேசத்துக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சோதனை காட்டுகிறது. தமிழக காவல்துறைக்கூட அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தபிறகு, அவர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களை செய்ததை உறுதிப்படுத்திய பிறகு, என்ஐஏ அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அவர்களை கைது செய்ய உள்ளனர். அந்தவகையில், என்ஐஏ அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் சென்று கேள்வி கேட்கும்போது, அவர்கள் தங்களை மிரட்டுவதாகவும், தங்களை காப்பாற்றுங்கள் எனக்கூறும் அலறல் சத்தத்தை நாம் கேட்டிருப்போம். அப்படியான அலறலைத்தான் தவறு செய்தவர்கள் இந்த விவகாரத்தில் செய்து கொண்டுள்ளனர்.
மூன்று நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 13:20:00
சென்னை: மூன்றுநாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று (பிப்.4) டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து 'விஸ்தாரா' பயணிகள் விமானத்தில் ஆளுநர் டெல்லி சென்றார். ஆளுநர் உடன், அவரது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். இந்த மூன்று நாள் பயணத்தில், டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணம் முடிந்து வரும் பிப்.6ம் தேதி இரவு ஆளுநர் சென்னை திரும்ப உள்ளார். முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாலக்கோடு அடுத்த ஜோதி அள்ளி கிராமத்தில் ரயில்வே பாலம் கட்டும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு
செய்திப்பிரிவு
தருமபுரி
2024-02-04 12:43:00
தருமபுரி: வந்தே பாரத் ரயில் ஓசையின்றி சீறிப்பாயும் சூழலில் ரயில் பாதைக்கு கீழாக பாலம் அமைத்துத் தரும் வரை தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாக தருமபுரி மாவட்டம் ஜோதி அள்ளி கிராம மக்கள் அறிவிப்புப் பலகை அமைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பி.செட்டி அள்ளி அருகே உள்ளது ஜோதி அள்ளி கிராமம். சுமார் 1,500 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பாலக்கோடு நகரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சேலம் - பெங்களூரு ரயில் பாதையைக் கடந்தே செல்லும் நிலை உள்ளது. அருகில் பாலம் எதுவும் இல்லாததால் ரயில் பாதைக்கு கீழாக பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பலமுறை அரசிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு அளித்து விட்டனர். இருப்பினும், இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது, ‘ரயில் பாதைக்கு கீழாக ஜோதி அள்ளி கிராமத்துக்கு பாலம் அமைத்துத் தரும் வரை, வரவிருக்கும் மக்களவை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கிறோம்’ என்ற தகவல் அடங்கிய அறிவிப்புப் பலகையை ஊர் முகப்பில் நிறுவியுள்ளனர். இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியது: கடந்த ஓராண்டுக்கு முன்புவரை இந்த வழித் தடம் மின் மயமாக்கப்படாமல் இருந்தது. எனவே, அப்போது ரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டதால், தொலைதூரத்தில் ரயில் வரும் போதே அதன் ஓசை தெளிவாகக் கேட்கும். எனவே, தண்டவாளத்தை கடந்து செல்லும் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. ஆனால், தற்போது இந்த ரயில் பாதை மின்மயமாகி விட்டதால் இவ்வழியே இயக்கப்படும் ரயில்கள் ஓசையின்றி வருவதால் ஆபத்தான சூழலில் ரயில் பாதையை கடந்து செல்கிறோம். அதேபோல, அண்மையில் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் துளியும் ஓசையின்றி சீறிப்பாய்ந்து செல்கிறது. எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். ஜோதி அள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் சிரமங்களை உணர்ந்து இப்பகுதியில் ரயில் பாதைக்கு கீழாக விரைந்து பாலம் அமைத்துத் தர வேண்டும். அதுவரை எந்த தேர்தலிலும் நாங்கள் வாக்கு செலுத்தப் போவதில்லை. இவ்வாறு கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வட்டாட்சியர் ஜோதி அள்ளி கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாலக்கோடு அருகிலுள்ள வாழைத் தோட்டம் கிராம மக்களும் இதைப் போலவே ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம முகப்பில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரு வேறு இடங்களில் கார் விபத்து - மூவர் உயிரிழப்பு
கே.சுரேஷ்
புதுக்கோட்டை
2024-02-04 11:38:00
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று (ஜன.4) காரும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் தாய், தந்தை உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கோவிந்தன்(60). இவரது மனைவி உமா மகேஸ்வரி(50). மகன் பிரவீன் சுந்தர். இவர்கள் 3 பேரும் திருச்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் சுந்தர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியில் சென்றபோது, காரும் எதிரே வந்த கனரக ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில், கோவிந்தன், உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரவீன் சுந்தர், சத்தியமங்கலம் நெடுஞ்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எஸ்.கவுதம்(20) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் அருகே விபத்து: இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆம்பூரில் இருந்து ஏலகிரி மலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கார், தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிஏசிஎல் மோசடி | மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை தேவை - அன்புமணி கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 11:26:00
சென்னை: ரூ.60,000 கோடி பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ.60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீட்டுத் தர உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 8 ஆண்டுகள் ஆகியும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது. அப்பாவி மக்களின் முதலீட்டை மீட்டுத் தருவதில் மத்திய, மாநில அரசுகளின் செயலாக்க அமைப்புகள் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல்சிங் பாங்கு என்பவரால் கடந்த 1983ம் ஆண்டில் பேர்ல்ஸ் கிரீன் ஃபாரஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் 1996ம் ஆண்டு அதன் பெயரை பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.ஏ.சி.எல்) என்றும், தலைமையிடத்தை டெல்லிக்கும் மாற்றிக் கொண்டது. நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்தது. அதை நம்பி, நாடு முழுவதும் 5.85 கோடி மக்கள், ரூ.49,100 கோடி முதலீடு செய்தனர். பின்னர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6 கோடியாகவும், முதலீட்டின் அளவு ரூ.60,000 கோடியாகவும் அதிகரித்தது. பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்டவிரோதமாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிஏசிஎல் நிறுவனம் செயல்பட தடை விதித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் செபி அமைப்புக்கு ஆணையிட்ட உச்ச நீதிமன்றம், நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தைத் திருப்பித் தர உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைத்தது. ஆனால், அதன்பின் 8 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரூ.10,000க்கும் குறைவாக முதலீடு செய்த 12 லட்சம் பேருக்கு மட்டும் தான் ரூ.429.13 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. இது மோசடி செய்யப்பட்ட பணத்தில் 1%க்கும் குறைவான தொகையாகும். மீதமுள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தை மீட்டுத் தருவதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பி.ஏ.சி.எல் நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் மொத்தம் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. இவை தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பனை செய்தால், அந்தப் பணத்தைக் கொண்டு, முதலீட்டாளர்களின் பணத்தை முழுமையாக திருப்பித் தர முடியும். அதற்கான முயற்சியில் லோதா குழு ஈடுபட்டிருந்தாலும் கூட, பல இடங்களில் பிஏசிஎல் நிறுவனத்தில் சொத்துகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 8198 சொத்துகள் உள்ளன. அவற்றில் 5300 ஏக்கர் பரப்பளவிலான 237 சொத்துகள் சட்டவிரோதமான விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பல மாநிலங்களிலும் நடந்திருப்பது பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் ஆகும். பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி பேரில் சுமார் 1 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறைந்த அளவு ரூ.2500 முதல் ரூ.10 லட்சம் வரை அவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். அவர்களில் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் முதலீடு செய்தவர்கள் ஆவர். முதலீடு செய்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் திருமணம், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். முதலீட்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் சட்ட செயலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட்டால் தான் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தர முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டின் 1 கோடி குடும்பங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 6 கோடி குடும்பங்களை பொருளாதார சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 10:35:00
சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் இரட்டை அடுக்கு மேம்பாலம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் மொத்தம் 265 தூண்களில் இதுவரை 106 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப் படுகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன. மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப் படுகின்றன. மொத்தம் 265 தூண்கள்: இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 265 தூண்களில் இதுவரை 106 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலத்தை தாங்கும் தூண்கள் அதாவது தூண்களில் தொப்பி வடிவிலான கட்டுமானம் ( பியர் கேப்கள் ) அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, சில இடங்களில் தூண்கள் மீது இரும்பு பாலத்தை எடுத்து வைக்கும் பணியும் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2 அடுக்குகளிலும் வெவ்வேறு வழித் தடங்களுக்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதற்காக, பிரம்மாண்டமான தூண்கள் அமைக்கப் படுகின்றன. இதற்கு பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 4-வது வழித்தடத்தில் நடைமேடை பூமியில் இருந்து 13.9 மீட்டர் உயரத்திலும், 5-வது வழித் தடத்தில் நடைமேடை பூமியில் இருந்து 21.5 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படும். இந்த பாதையில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 106 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. சுமார் 2 ஆண்டுகளில் இரட்டை அடுக்கு மேம்பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலி கிராமம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 09:32:00
சென்னை: மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதைத் தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க, முன் மற்றும் பின் பக்கங்களில் படி கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு நிரந்தரமாகக் கண்ணாடி பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, பேருந்து நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன்னர், ஓட்டுநர் கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடிவந்து ஏற முயற்சிக் கின்றனரா என கவனித்தும், படிக்கட்டில் ஏற முயல்பவர்களை நடத்துநர் கண்காணித்தும் பயணிகளை ஏற்றிய பிறகு பேருந்தை இயக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அவர்களுக்கு நடத்துநர் தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து பேருந்துக்கு உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்து உள்ளே வந்த பிறகு இயக்க வேண்டும். மீண்டும் அதே முறையில் பயணம் செய்பவர் மீது அருகில் உள்ள போக்கு வரத்து காவலர் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 06:20:00
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அடல் டிங்கரிங் ஆய்வகம் (மத்திய அரசின் நிதியுதவி), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம் சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. திறனை மேம்படுத்துதல்: இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனைமேம்படுத்துவதற்கு உந்துதலாகஅமையும். இத்தகைய பள்ளிஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும்அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படையில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனுடன் ஆய்வக பராமரிப்புபணிகளில் முழுக் கவனம் செலுத்திடும் வகையில் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறைச் செயலரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பிற பணிகள் கூடாது: இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறையில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வகப் பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த உத்தரவைபள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க மறுப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 06:15:00
சென்னை: தமிழகத்தில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவு எடுக்க முடியும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜன.7-ல் நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்.4-க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள்பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமேபிரதான தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கட்டாயத் தமிழ்தகுதித்தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கடந்த 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதிபெற்று தமிழ் மொழியில் தகுதிபெற்றிருக்காவிட்டால், பணி நியமனத்துக்குப் பின் 2 ஆண்டுகளில் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்விலேயே தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையினர் அரசு பணியை பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவேமொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும், என கோரப்பட்டிருந்தது. ஓராண்டு அவகாசம் வேண்டும்: இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.இளங்கோ, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதன் அடிப்படையில்தான் இந்தபோட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று விலக்கு அளிக்க முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியோர் வரும் மார்ச் 7-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-04 06:11:00
மதுரை: தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருத்தொண்டர் சபை அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம்1984-ல் பூம்புகார் கப்பல் கழகத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. தற்போது வரை ரூ.3 கோடிவாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வாடகை பாக்கியை வசூலிக்குமாறு 2022-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை வாடகை பாக்கி வசூலிக்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது,நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் சுப்புராஜ் வாதிடும்போது, "பூம்புகார் கப்பல் கழகம் ரூ.80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அவகாசம் வழங்கினால், வாடகை பாக்கி வசூலிக்கப்படும்" என்றார். பின்னர் நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: ரூ.3 கோடிவாடகை பாக்கி வைக்கும் வரைஅறநிலையத் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா? அறநிலையத் துறை கட்டிடத்துக்கு சாதாரண ஏழை வியாபாரிகள் வாடகை வழங்க மறுத்தால், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் கழகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்றம் உத்தரவிட்டும் வாடகை பாக்கியை வசூலிக்கவில்லை. கோயில் சொத்துகளின் வருமானங்களை இப்படியே விட்டுவிடலாமா? தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்கள் வேலைகளை செய்கிறார்களா? இல்லையா? அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அரசு நல்ல ஊதியம்தானே வழங்குகிறது. குறைவாக சம்பளம் வழங்கவில்லையே? அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்: திமுக தலைமை அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 06:06:00
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: வரும் மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழக மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது. தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது[email protected] என மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 என்ற ஒரு சிறப்புஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரலாம்: இந்த தொலைபேசி எண்தொடர்பு மூலம் திமுக தேர்தல்அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ள தயாராக உள்ளது. #DMKManifesto2024 என்றஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளைபேஸ்புக் பக்கம் - DMKManifesto2024அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். வரவிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின்பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம். உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ம் தேதி வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் 55-வது நினைவுநாள் அனுசரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 06:00:00
சென்னை: திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாவின்55-வது நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது படத்துக்கு முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக, அறிவு மன்னனாக வழிகாட்டிய அண்ணா நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கட்சியினர், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைத்துமாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கள்,எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின்அனைத்து பிரிவு நிர்வாகிகள்,தொண்டர்கள் அமைதிப்பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா,நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாரின் தலைமகன், திராவிடர் அரசியலை, கொள்கையை முன்வைத்து புத்துரு செய்த வகையில் 56ஆண்டுகளுக்கு முன்பு புதுமையான ஆட்சியை அமைத்து தந்தவர் என புகழாரம் சூட்டினார். டெல்லி நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மு.தம்பிதுரை எம்.பி., மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோஉள்ளிட்டோர் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், கூட்டாட்சித்தத்துவத்துக்கும், அரசியல் மாண்புக்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சமபந்தி போஜனம் நடந்தது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிப்.12-ல் நடைபெறும் பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: ஜி.கே.வாசன் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 05:59:00
சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் வரும்12-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உடனான சந்திப்பு நட்பு ரீதியானது. இதேபோல, நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசினேன். இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தேன். நாளை மறுதினம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச இருக்கிறேன். 2021 தேர்தலின்போது இணைந்து செயல்பட்டவர்களிடம் இதுவரை நட்பு ரீதியாக செயல்பட்டு வருகிறோம். தமாகா எந்த கூட்டணியில் இருந்தாலும், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் கட்சியாகத்தான் இருக்கும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக இருக்கும். தமாகா பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் எழும்பூரில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விவாதித்து, மக்களவைத் தேர்தலில் தமாகாயாருடன் கூட்டணி வைக்கிறதுஎன்பது குறித்து ஆலோசிக்கப்படும். பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனதுமனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்ததுபோல, நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்தான் திமுக ஆட்சியில் நிலவி வருகிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும் பாலானவற்றை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதி கேட்பு: மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் இன்று பேச்சு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 05:55:00
சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கூடுதல்தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜி.பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது, 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கொடுத்ததாகவும், திமுக தரப்பில் ஒரு மக்களவை தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கொடுப்பதாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த இரண்டு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. திமுகவுடனான தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை குறித்து கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவுடனான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம் மிகவும் நன்றாக இருந்தது. கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டு பட்டியலை கொடுத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதல்வர் சென்னை திரும்பிய பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார். இதற்கிடையே, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இன்று (பிப்.4) சென்னை அண்ணா அறிவாலயம் வருமாறு கூட்டணி கட்சியான மதிமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 05:49:00
சென்னை: சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவை வீழ்த்த எல்லா வேலைகளையும் செய்வேன் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, மரியாதை செலுத்துவதற்காக நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்திருந்தனர். அப்போது சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டனர். இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாக பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி" என்றார். பின்னர் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் எப்போதுமே மக்களை நம்பி இருப்பவர்கள். நிச்சயம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான். எங்கள் கட்சியினரை எதிரில் வரும்போது பார்த்து பேசினேன். திமுகவை சேர்ந்த, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா எம்ஜிஆரை தரக்குறைவாக பேசியதை நான் கண்டிக்கிறேன். பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில், திமுக எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் எம்எல்ஏக்களுக்கு பயம் வரும். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை. மக்கள் குறையைதீர்க்காமல், தேர்தல் வேலையை திமுகவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். இதற்கு மக்கள்சரியான பாடத்தை புகட்டுவார்கள். இந்த கட்சியை வீழ்த்த என்னென்னவேலைகளை செய்ய முடியுமோ, அவை அத்தனையையும் நான் செய்வேன். மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு தேவையானதை கேட்டும்பெறும் திறமையுள்ள ஆட்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையானதை ஜெயலலிதா கேட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிப்.11-ம் தேதி சென்னை வருகை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 05:47:00
சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிப்.11-ம் தேதி சென்னை வருகிறார். அப்போர் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஜெ.பி.நட்டா பங்கேற்று, நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னிலையில் பேசுகிறார். பொதுக்கூட்டம் நடத்துவதற்காக, ஒய்எம்சிஏ மைதானம் உட்பட 3 இடங்களை பாஜக மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்து வைத்துள்ளனர். விரைவில் அதில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பொதுக்கூட்டத்துக்கான பணிகளை தொடங்க இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை அனுமதிக்க வேண்டும்: அரசுடனான பேச்சுவார்த்தையில் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 05:43:00
சென்னை: சென்னை நகரப் பகுதிகளுக்குள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் வேண்டுமென உரிமையாளர்கள் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜனவரி 24-ம் தேதி முதல் நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் அ.சண்முகசுந்தரம் ஆகியோர் உத்தரவிட்டனர். மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மேலும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடர்ந்தது. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அ.அன்பழகன், டி.கே.திருஞானம், ஏ.அப்சல், டி.மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரிமையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: சங்க உறுப்பினர்கள் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருக்கக்கூடிய அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்துகளை பராமரித்து, பின் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நகர் பகுதிகள் வழியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்றவாறு கோயம்பேட்டில் உள்ளது போல தரைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் தர வேண்டும். ஆம்னி பேருந்துகளுக்கு நடைமேடை டிராவல்ஸ் நிறுவனங்கள் வாரியாக ஒதுக்காமல் பயணிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக அரசு பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர்வாரியாக ஒதுக்க வேண்டும். தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் வரும்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சென்னை நகர் பகுதிகள் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு அனுமதிக்க வேண்டும். ஜன.24-ம் தேதிக்கு முன் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்கள், சென்னை நகர் பகுதிகளில் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதித்தது போல் தற்போதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும் சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தோம். 2 நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்’’என்றனர்.
தமிழக மின்வாரியத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி ஸ்டிரைக் நோட்டீஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 04:06:00
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக மின் வாரியத்திடம் சிஐடியு, ஏஐடியுசி, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன. மத்திய அரசைக் கண்டித்து பிப்.16-ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதையொட்டி, தமிழக மின் வாரியத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி, தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்கங்கள் வழங்கிய ஸ்டிரைக் நோட்டீஸில், ‘காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அண்மையில் நடைபெற்ற மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், ‘மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிப்.13-ம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மின் வாரிய தலைவரிடம் கோரிக்கை கடிதம் அளித்து பேசுவது’ என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குமரி, கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 04:04:00
சென்னை: பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. எழும்பூரில் இருந்து பிப்.5-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் ( 06042 ) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். கன்னியாகுமரியில் இருந்து பிப். 4-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் ( 06041 ) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை - கோவை: கோவையில் இருந்து பிப்.4-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதி விரைவு ரயில் ( 06043 ) புறப்பட்டு, மறு நாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். சென்ட்ரலில் இருந்து பிப்.5- ம் தேதி காலை 10.20 மணிக்கு சிறப்பு ரயில் ( 06044 ) புறப்பட்டு, அதே நாள் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் ரூ.14.30 கோடியில் புதிய காவல் நிலையம்
செய்திப்பிரிவு
கிளாம்பாக்கம்
2024-02-04 04:02:00
கிளாம்பாக்கம்: வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் டிச. 30-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் காவல் நிலையம் திறக்க ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. காவல் நிலையமும் தொடக்கப்பட்டு விட்டது. இந்த காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என 71 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அனைவரும் பணியில் சேர்ந்து விட்டனர். காவல் நிலையத்துக்கு 2 ஜீப், 7 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும். அதே போல மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.3,27,800, ஸ்கேனர், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.5,85,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஜீப், மோட்டார் சைக்கிள், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் போன்றவை எதுவும் வழங்கப்படவில்லை. காவல் நிலையமும் கட்டப்படவில்லை. புற காவல் நிலையத்தில் தான் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. போலீஸாருக்கு அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு பிப். 5-ம் தேதி ( நாளை ) அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு பணிகளை தொடங்கி வைக்க உள்ளனர்.
டிட்டோ ஜாக் கூட்டமைப்பு பிப்ரவரி 19-ல் உண்ணாவிரதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-04 04:00:00
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 19-ம் தேதி உண்ணா விரதம் நடத்தவுள்ளதாக டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜாக் ) பொதுக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் டிட்டோ ஜாக் அமைப்புடன் கடந்த அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட 12 நிதி சாராத கோரிக்கைகள் மீது உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும். பதவி உயர்வை கேள்விக் குறியாக்கும் அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான பிப்ரவரி 19-ம் தேதி கூட்டமைப்பு சார்பில் உண்ணா விரத உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ ஜாக் பேரமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு @ மானாமதுரை
இ.ஜெகநாதன்
மானாமதுரை
2024-02-03 22:51:00
மானாமதுரை: மானாமதுரை அருகே 13 -ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊருணி பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஊருணி பகுதியில் 13-ம் நூற்றாண்டு சமணப் பள்ளி நிலதானக் கல்வெட்டை கண்டெடுத்தனர். இதுகுறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கல்வெட்டில் 4 பக்கங்களிலும் எழுத்துக்கள் உள்ளன. அதில் மூன்று பக்கங்களில் முழுமையாகவும், ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு, அதன் கீழே எழுத்துக்கள் உள்ளன. இந்த கல்வெட்டு இரண்டே முக்கால் அடி உயரம் கொண்டது. இதில் விக்கிரமராம வளநாடு என்ற புதிய சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் இடம்பெற்ற நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி, பள்ளிச் சந்தம் சொற்கள் மூலம் இக்கல்வெட்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியனை குறிப்பதை அறியலாம். அவரது காலம் கிபி 1268 முதல் 1281 வரை. அதில் கருங்குடி நாட்டு பெரும்பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என உள்ளது. இதன்மூலம் இங்கு சமணப்பள்ளி இருந்ததை அறிய முடிகிறது. அப்பள்ளிக்கு தானம் கொடுத்த நிலத்தில் நான்கு எல்லைகளிலும் எல்லைக் கல்கள் நாட்டி, வரிகளை பிரித்து பூஜைகள் நடத்தவும், அது சூரியன், சந்திரன் உள்ளவரை செல்லுபடியாகும் எனவும் அரசு அலுவலர்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளன. இப்பகுதி மக்கள் கல்வெட்டில் உள்ள திரிசூலத்தை முனியசாமி தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
டெல்டாவில் சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறப்பு
த.சக்திவேல்
மேட்டூர்
2024-02-03 22:05:00
மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர் இன்று மாலை முதல் திறந்து விடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்ததாலும், பருவமழையை எதிர்பார்த்தும், உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாகவும், நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை 90 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 71 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், நீர் பற்றாகுறையாலும், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைத்து, 298 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு அறிக்கையின் படி, திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கர் என 22,774 ஏக்கர் சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு இன்று காலை 107 கன அடியாகவும், நீர் மட்டம் 70.42 அடியாகவும், நீர் இருப்பு 33 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல, காலதாமதமாக தண்ணீர் திறந்தாலும், கால நீட்டிப்பு செய்யப்படும். ஆனால், டெல்டா பாசன காலம் முடிந்த பிறகு, மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், பிப்ரவரி மாதத்தில் தண்ணீர் திறப்பதும் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை: அப்பாவு
அ.அருள்தாசன்
திருநெல்வேலி
2024-02-03 21:19:00
திருநெல்வேலி: “தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை” என்று சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியிலுள்ள பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதையே தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதுமையின் காரணமாக வீல் சேரில் அமருவது தொடர்பாக முன்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்ய கேட்டபோது, அப்போதைய சட்டப் பேரவை தலைவர் தனபால், இப்போது உள்ள இடமே அவர்களுக்கு போதுமானது என்று கூறினார். கருணாநிதிக்கு 2-ம் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டது. முதல் வரிசையில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டார். தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுக்கு இந்த இருக்கைகள் வேண்டும் என்று எழுதி கையொப்பம் இட்டு கேட்டதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. இப்போது அவர்களுக்குள் பிரச்சினை. அவர்கள் பிரிவார்கள், பின்னால் சேர்வார்கள். அதில் சட்டப் பேரவை தலையிடாது. நான் விதிப்படி, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளேன். ஓ.பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக தனபால் என்னிடம் கேட்டபோது, நான் அவரிடம், பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை அரசியலமைப்பு சட்டப்படி நீங்கள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை நீங்கள் செய்தீர்களா என்று கேட்டேன். அவர்கள் எதிர்கட்சி துணை தலைவராக உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள். அதன்படி அவரைத்தான் எதிர்கட்சி துணைத் தலைவராக அறிவித்துள்ளோம். சட்டப் பேரவை உறுப்பினர்கள் எந்த சின்னத்தில் வெற்றி பெற்றார்களோ, அந்த சின்னத்தின் அடிப்படையில்தான் சட்டப் பேரவையில் கருதப்படுவார்கள். அதே சின்னம் தான் கணக்கீடு செய்யப்படும். எனவே நான், பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு சட்டப் பேரவையையோ, சட்டப் பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது” என்று தெரிவித்தார்.
சென்னையில் 5 விளையாட்டு அரங்குகளை மேம்படுத்த ரூ.25 கோடி வழங்கல்: தமிழக அரசு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 21:01:00
சென்னை: சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: “தமிழக இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஆண்டு ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்கள். அதனைத் தொடர்ந்து, 2021-ல் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.அதற்கு ஏற்ப இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தமிழகத்தின் விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு மத்திய அரசின் ஒப்புதலோடு பிரதமர் மோடியை அழைத்து 2022ஆம் ஆண்டில் 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் அண்மையில், கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள், நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் இந்திய பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ 5,000-த்துக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழக பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்திட மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் 4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் சீட் தரக் கூடாது’ - காங். நிரவாகிகள் கூட்டத்தில் தீர்மானம் @ சிவகங்கை
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-03 20:35:00
சிவகங்கை: “கார்த்தி சிதம்பரத்துக்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது” என சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தலைமையிலான காங்கிரஸார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் எம்பி போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி வந்தனர். அதற்கு எதிர்ப்பாக இ.எம்.சுதர்சதன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் காரைக்குடி மானகிரியில் தனியாக பூத் கமிட்டி கூட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து பேசி வந்தனர். இந்நிலையில், அத்தரப்பினர் இன்று மாலை ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கையில் கூட்டம் நடத்தினர். இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். மேலும், ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை என்ற விதத்தில் கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் அவருக்கு காங்கிரஸில் சீட் கொடுக்க கூடாது என 3 தீர்மானஙகளை நிறைவேற்றினர். மேலும் இந்த தீர்மானஙகளை தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார். இதனிடையே, கார்த்தி சிதம்பரம் ஆதாரவாளர்கள் தனியாக கூட்டம் நடத்தினர். இதில் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அருள்பெத்தையா, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரமே போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். ஏற்கெனவே சிவகங்கை தொகுதியை திமுக கேட்டு வரும்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸில் ஒருத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது மேலும் சிக்கல் ஏற்படுத்தியது.
சிறுவர் பைக் ஓட்டியதற்காக பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் @ காரைக்குடி
இ.ஜெகநாதன்
காரைக்குடி
2024-02-03 20:24:00
காரைக்குடி: காரைக்குடியில் சிறுவர் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிய மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவரின் பெற்றோர் மீது காரைக்குடி போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறுவரின் பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் விதித்ததோடு, சிறுவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இது குறித்து மாவட்ட எஸ்பி அரவிந்த் கூறுகையில், "சிறுவர்களிடம் வாகனங்கள் வழங்கினால் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 -Aன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’... யாருக்கு கலக்கம்? - ஒரு விரைவுப் பார்வை
நிவேதா தனிமொழி
ஒற்றுமை
2024-02-03 19:20:00
திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு காரணம் என்ன? அவரது வாக்கு வங்கி எது? அவரது கட்சி யாருக்கு மாற்று? தமிழக அரசியலில் விஜய்யின் ‘வெற்றி கழகம்’ ஏற்படுத்த இருக்கும் அதிர்வுகள் என்னென்ன? கடந்த 1993-ம் ஆண்டு, நடிகர் விஜய்க்கு அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அதை சில ஆண்டுகளில், ‘விஜய் நற்பணி மன்றமாக’ விரிவுபடுத்தினார். பின் அதை, 2009-ம் ஆண்டு, ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆக மாற்றினார். அந்த இயக்கம் சார்பாக, பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், விஜய்யும் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கினார். ‘நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் அமைக்கவே மக்கள் பணிகளில் ஈடுபடுகிறார்’ என அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றிப் பரவலாகவும் பேசப்பட்டது. இதனால், ‘நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். பின், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கினார். அப்போது, “பொறுப்பு கூடியதாக உணர்கிறேன்’’ என விஜய் பேசியது, அவரின் அரசியல் பிரவேசத்தை மேலும் உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த கனமழை, புயலால் பாதிப்புக்கு உள்ளான 400 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகார்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். அன்று மறுப்பு... இன்று அறிவிப்பு! - கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருக்கிக் கொண்டிருந்த வேளையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மேற்கொண்டார். அவர், ‘அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரிலான கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயன்றார். இது குறித்த தகவல்கள் பரவியதும், ‘விஜய்க்கும் இந்தக் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என விஜய்யின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக அறிவித்தார். இதுகுறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘‘அரசியல் கட்சிக்கு நான்தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளேன். இது என்னுடைய முயற்சி மட்டுமே’’ என விளக்கமளித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். “அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும், நமது இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது’’ என தன் ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார் விஜய். அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு வெறும் மூன்றே ஆண்டுகளில் தற்போது, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அன்றைக்கு ஏன் மறுத்தார்; இன்று ஏன் கட்சி ஆரம்பித்தார். இந்த மூன்றாண்டு இடைவெளியில் புதைந்திருக்கும் மர்மம் என்ன? களமிறங்கிய ரசிகர்கள்! - 2021–ம் ஆண்டு, தனது தந்தையால், தன் பெயரில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியில், யாரும் சேர வேண்டாம்’ என்ற கட்டளையை விஜய் பிறப்பித்தாலும், அவரது ரசிகர்கள் அரசியலில் களமிறங்க முயற்சித்தனர். குறிப்பாக, 2022-ம் ஆண்டு நடந்த, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். அதில் பலர் வெற்றியும் பெற்றனர். பல இடங்களில், பிரதான திராவிடக் கட்சி வேட்பாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘டஃப்’ கொடுத்ததும் குறிப்பிடதக்கது. இது விஜய்க்குப் புதிய கட்சியைத் தொடங்கும் மனநிலையை வலுப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில், கட்சி தொடங்கியுள்ள விஜய், அந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் தன் ‘டார்கெட்’ என தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை இந்தத் தேர்தலை அவரது கட்சி சந்தித்தால் மிகப் பெரிய சறுக்கலைச் சந்தித்திருக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு களத்தில் இறங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்பதால் நிதானமாக களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார் விஜய். விஜய் - விஜய்காந்த் ஒற்றுமை: விஜய் மற்றும் விஜய்காந்த் இருவரும் நெருங்கிய உறவு கொண்டவர்கள். விஜய்யின் வளர்ச்சிக்காக அவரின் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த். விஜய்யின் சினிமா பயணத்தில் தவிர்க்க முடியாத நபராக இருந்தவர் விஜயகாந்த். சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு இறுதி மரியாதையை நேரில் செலுத்தினார். தமிழகத்தை 70-களில் ஆட்சி செய்யத் தொடங்கி திராவிட கட்சிகள் வரலாறு நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகள் கடந்து ஒரு மாற்று அரசியலை, கட்சியைத் தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தனர். அப்போது, அரசியலுக்கு வந்தார் விஜயகாந்த். கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், அவரது எம்எல்ஏக்கள் அவரை கைவிட்டனர். இதனால் மக்கள் எதிர்ப்பார்த்த மாற்று அரசியலை அவரால் கொடுக்க இயலவில்லை. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது சரியான அரசியல் நகர்வு என சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்தவர் விஜயகாந்த். அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டாலே விஜய்க்கு வெற்றி உறுதியாகலாம் என்னும் கருத்தும் அரசியல் வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாக்கு வங்கி யார்? - தமிழகத்தில் அதிமுக வாக்கு வங்கியை பாஜக கைப்பற்ற வியூகங்கள் வகுக்கிறது. எனவே, திமுக மீதான அதிருப்தியில் அதிமுகவிடம் செல்வதற்குப் பதிலாக, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஊழல், மதவாதம், வெறுப்பரசியல் இவற்றை விரும்பாத நடுநிலையாளர்கள் பலருக்கும் விஜய்யின் வருகை ஒரு நம்பிக்கையைத் தரும். மேலும், விஜய்யை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பைப் பாதியில் கைவிட்ட இளைஞர்களாக உள்ளனர். இம்மாதியானவர்கள்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற சினிமா கவர்ச்சியில் மயங்கி அவர்கள் பின்னால் சென்றவர்கள். இவர்களைப் பல ஆண்டுகளாக, மிக நுண் நகர்வுகளால் தங்கள் வசம் மடைமாற்றம் செய்ய பாஜக, டிஜிட்டல் தளங்களைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. அதை அடித்து நொறுக்கி, அந்த வாக்குகளைத் தன் சினிமா கவர்ச்சியால் கட்டியிழுக்க விஜய்க்கு வாய்ப்புள்ளது. இந்த வாக்கு வங்கியையும் அரசியல் சூழலையும், விஜய் எப்படி பயன்படுத்துவார் என்னும் அடிப்படையில்தான், அவர் கட்சிப் பெயரில் இருக்கும் ‘வெற்றி’ அவருக்குக் கிடைக்குமா எனச் சொல்லமுடியும். விஜய்யின் அரசியல் வருகை, பாஜகவுக்கு தடையா? - தவிர, தேசிய காங்கிரஸை வீழ்த்தி உதித்த திமுகவுக்கு எதிரான துருவ அரசியலில், அதிமுக உருவானதால் தான், இத்தனை ஆண்டுகளாக, தமிழகத்தில் தேசியக் கட்சிகள் மீண்டும் எழ முடியவில்லை. அதிமுக இல்லாவிடில் தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக இருந்திருக்கும். அந்த இடத்தைக் காலி செய்து விட்டு, பாஜக இடத்தைப் பிடித்திருக்கவும் முடியும். தற்போது, உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்டு அதிமுக பலம் இழந்துள்ளது. இதை சாதகமாக்கி, தமிழகத்தில் பாஜக பலமடைய வாயப்புள்ளது. இதைத் தடுப்பதற்கு ஒரு தடையாக, அவர்களிடம் செல்லும் வாக்குகளைத் திசை மாற்றி விடும் மடையாக, விஜய்யின் கட்சி இருக்கும் என்னும் கருத்துகளையும் புறம்தள்ள முடியாது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா,விஜயகாந்த், சரத்குமார்,கார்த்தி, கமல் என தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களின் ’லிஸ்ட்’ எடுத்தால் நீண்டுகொண்டே போகும். ஆனால், அதில் அதிகாரமிக்கப் பதவிகளை எட்டிப் பிடித்தவர்கள் வெகு சிலரே. களத்தில் கவனமாகக் காய் நகர்த்தி அந்த சிறப்பு லிஸ்டில் விஜய் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
‘‘சட்டம் பயிலும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வரவேண்டும்’’ - ப.சிதம்பரம் பேச்சு @ காரைக்குடி
இ.ஜெகநாதன்
காரைக்குடி
2024-02-03 17:36:00
காரைக்குடி: ‘‘சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும்’’ என காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி பூமிபூஜையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2 ஆண்டுகளுக்கு முன் அரசு சட்டக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.42 கோடியில் 19.2 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி, கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் ரகுபதி பேசியது: “அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அதிகளவில் மாணவிகள் படித்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான படிப்பு சட்டம் என முடிவெடுத்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை சட்டக் கல்லூரிகளில் சேர்க்கின்றனர். அரசு சட்டக் கல்லூரிகளில் பயின்றவர்கள் சோடை போவது கிடையாது. சிறந்த வீரர், வீராங்கனைகளாக வெளியே வருகின்றனர். வாதத்தை முன் வைப்பது, மறுப்பது, தீர்ப்பு சொல்வது என 3 விஷயங்களும் ஒருசேர உள்ள படிப்பு சட்டப்படிப்பு மட்டும் தான். மக்கள் நம்புவது நீதிமன்றத்தைத் தான். நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது” என்று அவர் பேசினார். ப.சிதம்பரம் பேசும்போது, “எந்த துறையையும் சட்ட அறிவில்லாமல் நடத்த முடியாது. சட்ட அறிவு இல்லாமல் பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது. சட்டம் படித்தால் அனைத்து துறைகளுக்கும் செல்லலாம். முதல் பெண் வழக்கறிஞர் 'மகாபாரதம் பாஞ்சாலி' தான். அதற்கு அடுத்த வழக்கறிஞர் கண்ணகி. சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி வந்தது. அதேபோல் தற்போது வேளாண்மை, சட்டக் கல்லூரி வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒன்றும் வரவில்லை. காரைக்குடி செட்டிநாடு பகுதியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முயற்சி எடுக்க வேண்டும். புதிய சட்டக் கல்லூரி கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும். கடந்த 1857-ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், தற்போதும் உறுதியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட கல்லணையும் உறுதியாக உள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் திருவள்ளூர் வட்டம் பட்டறைப்பெரும்புதூரில் சட்டக் கல்லூரி கட்டி உள்ளனர். மிக மோசமாக உள்ளது. அரசு கட்டிடம் என்பது 20 முதல் 25 ஆண்டுகள் தான் இருக்கும் என்பது போல் நமக்கு பழகிவிட்டது. அது தவறு. அரசு கட்டிடம் தனியாரை போன்று 100 முதல் 150 ஆண்டுகள் வரை நிலைத்திருக்க வேண்டும். முறையான பராமரிப்பு இருந்தால் நிற்கும். எங்கள் பகுதியில் சிமென்ட் இல்லாமல் சாந்து கலவை மூலம் கட்டிய வீடுகள் 120 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக அழகாக நிற்கிறது. கோயிலுக்கு ஈடானது பள்ளிக்கூடம், அதுபோன்று கல்லூரியும் கோயில்தான். ஒப்பந்ததாரர் கல்லூரி கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும்" என்று அவர் பேசினார்.
பிரதமர் மோடி பிப்.25-ல் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு: தமிழக பாஜக தகவல்
இரா.கார்த்திகேயன்
திருப்பூர்
2024-02-03 16:49:00
திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் திருப்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “பல்லடம் அருகே மாதப்பூரில் 25-ம் தேதி பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணமான ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளோம். 400 ஏக்கர் பரப்பளவில், அனைத்து அரசியல் கட்சிகளும் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்ட உள்ளோம். முன்னதாக 24-ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாநகராட்சி தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை மேற்கொள்கிறார். 25-ம் தேதி மதியத்துக்கு மேல் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டின் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேசியத் தலைவர்களும் பங்கேற்பார்கள். தமிழகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் மோடி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அமைப்பு ரீதியாக மாற்றம் ஏற்படும். அடுத்த தேர்தலுக்காக பாஜக இல்லை. அடுத்த தலைமுறைக்கு தான் பாஜக. முதல்முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு செலவு செய்யும் தொகை குறைந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு அந்த தொகை செலவிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர்கல்விக்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவை கேள்வி கேட்கும் முதல்நிலை கட்சியாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பொய்யை, அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தில் சொல்லி வருகிறார். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக திமுக உள்ளது. சட்டப்பேரவைத் தொகுதி வாரிய சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய். ஹேமந்த் சோரன் குற்றம் செய்தததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெவ்வேறு திசைகளில் உள்ளன. காவல் துறை மீது பயம் இல்லாததால் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். அவர் அறிவாலயத்தை தான் குற்றம் சாட்டி உள்ளார். பாஜகவின் ஹெச்.ராஜா ’ஜோசப் விஜய்’ என்று சொன்னது, அன்றைய காலகட்டத்தை வைத்து சொன்னது. பாஜக லட்சியத்துக்காக சென்று கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் அங்கீகாரம் குறைந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக உதயநிதியை நிறுத்த பார்க்கிறார். அண்ணாமலைக்கு ஈடுகொடுக்க முடியுமா என்றுதான் நகர்கிறார்கள். அனைவரும் சேர்ந்து தான் அரசியல் நகர்வை நகர்த்த முடியும். அதனை செய்ய விஜய் உட்பட அப்படிப்பட்ட யாராக இருந்தாலும் வரவேற்கிறோம். பாஜகவுக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தை வரும் 25-ம் தேதி பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில் பார்ப்பீர்கள்" என்று அவர் கூறினார்.
“தம்பி விஜய் ஓர் இளைஞர், தமிழர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால்..” - செல்லூர் ராஜூ
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-03 15:44:00
மதுரை: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், “தம்பி விஜய் ஒரு இளைஞர், தமிழர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் கட்சி குறித்து எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “கமல்ஹாசன் மதுரையில்தான் கட்சி தொடங்கினார். கமல்ஹாசன் உலக நாயகன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு தொகுதிக்கு தன்னுடைய வாயை வாடகைக்கு விட்டுவிட்டார். அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது. விக்ரம் படத்திலிருந்து கமலுக்கும் திமுகவுக்கும் போடாத ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது. விஜய் இப்போதுதான் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய கொள்கை என்ன என்பது குறித்து இப்போதுதான் சிலவற்றை கோடிட்டு காட்டியிருக்கிறார். தம்பி விஜய் ஓர் இளைஞர், தமிழர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் கட்சி குறித்து எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எங்களுடையதில் எம்ஜிஆர் மன்றம்தான் அடிப்படை. ஆனால் எம்ஜிஆர் மன்றம் மட்டும் காரணம் கிடையாது. மக்கள் அனைவரும் புரட்சித் தலைவரை விரும்பினார்கள். அவர் வருகையை ஒட்டி, மக்கள் 12 மணி நேரம் காத்து கிடந்தனர். அப்படிப்பட்ட வரலாற்றை நாம் இனிமேல் காண முடியாது. அதிமுக என்பது வேறு, மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பது வேறு” என்றார்.
“புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை” - திமுக எம்.பி.க்கள் வரும் 8 ஆம் தேதி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 13:34:00
சென்னை: மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு புறக்கணிப்பு; சென்ற 1.2.2024 அன்று, வரும் நிதியாண்டு 2024-25-க்கான இந்திய மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், அண்மையில் 2023 டிசம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத புயல் மழை வெள்ள சேதங்களை சரிசெய்யவும் நிவாரண உதவியாகவும் 37000 கோடி ரூபாய் தந்து உதவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. அதைப் போல, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஓதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடு திரட்டும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் பயணம் மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வன்மையாக கண்டித்ததுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார். அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னதாக கடந்த 31.1.2024 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். குடியரசு‌த் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று (2.2.2024) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி. ஆர்.பாலு மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து தனது கடும் கண்டனங்களை வெளியிட்டார். அதில், “குடியரசு‌த் தலைவர் தனது உரையில் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தான் எடுத்துக் கூறி உள்ளார். தனது சொந்த கருத்துக்கள் எதையும் சொல்ல வில்லை. அவரது உரை அரசு தயாரித்த உரை. அதனை குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அச்சு பிறழாமல் கடைசி வார்த்தை வரை அப்படியே பேசி உள்ளார். அதுதான் மரபு. அதற்காக முர்மு அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அதற்காக அவரது உரையில் பிரதிபலிக்கப்பட்டுள்ள, திமுகவின் கொள்கை கோட்பாடுகட்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தையும் திமுக ஏற்பதாக பொருள் அல்ல. குடியரசுத் தலைவரைப் போல் அல்லாமல் பல ஆளுநர்கள் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசு கொடுத்த உரையில் இல்லாத விஷயங்களைப் பேசினார். சில ஆளுநர்கள் மாநில அரசு தங்கள் அரசு என்பதை மறந்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் போட்டி போடும் வகையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். பிரிட்டிஷ் கால ஆளுநர்கள் போல தாங்கள் தான் அனைத்தம் அறிந்தவர்கள் என்ற போக்கில் செயல்படுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கோடிக் கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்காமல் மக்கள் தீர்ட்பை காலடியில் போட்டு மிதிக்கும் விதத்தில் செயல் படுகிறகர்கள். அத்தகைய ஆளுநர்களை கண்டித்து அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின படி பணியற்ற வைக்க குடியரசுத் தலைவர் முன்வர வேண்டு்ம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
எஸ்.கல்யாணசுந்தரம்
திருச்சி
2024-02-03 11:26:00
திருச்சி: “தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பன்னாட்டு கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர். அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன். மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போதும் அன்பொழுக பேசக்கூடியவர்தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். ‘திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது’ குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், “கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும். தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்” என்றார்.
உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? - ராமதாஸ் கேள்வி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 11:11:00
சென்னை: உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுக்காமல், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில் ஊழல் சதி இருக்குமோ? என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு 682 உதவிப் பொறியாளர்கள், 24 இளநிலைப் பொறியாளர்கள், 257 தொழில்நுட்ப உதவியாளர்கள், 367 பணி ஆய்வாளர்கள், 244 துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1933 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகளின் இயக்குனர், குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுகள் அகற்றும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தப் பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு நேர்காணல் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் பணியாளர்கள் கடந்த ஆண்டு வரையிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தான் போட்டித் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பணியாளர் தேர்வாணையத்தை புறக்கணித்து விட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க எந்தத் தேவையும் இல்லை. நகராட்சி நிர்வாகத்துறைக்கு 1933 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு எந்த பணிச் சுமையும் இல்லை. தேர்வாணையத்தை ஒதுக்கி விட்டு, இந்த பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கட்டமைப்பும் நகராட்சி நிர்வாகத் துறையிடம் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்கான கல்வி நிறுவனம் மட்டுமே. அதற்குத் தேவையான மனிதவளமும், கட்டமைப்புமே அதனிடம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை மூலம் நடத்தப்படும் பருவத் தேர்வுகளின் மதிப்பீடுகள் குறித்தே பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அத்துறை நடத்தும் போட்டித் தேர்வுகளின் மதிப்பீடுகள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. துறை சார்ந்த உயரதிகாரிகளைக் கொண்டு நடத்தப்படும் நேர்காணல் என்பதே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக செய்யப்படும் ஏற்பாடு தான் என்பதை புரிந்து கொள்வதற்கு சிறப்பு ஞானம் எதுவும் தேவையில்லை. நகராட்சி நிர்வாகத்துறைக்கான பொறியாளர்களை அந்தத் துறையே போட்டித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்ட போதே அதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஊழலுக்கு வழிவகுக்கும் இந்த முறையை கைவிட்டு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 16.11.2023ம் நாள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன்பிறகும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத நகராட்சி நிர்வாகத்துறை இப்போது ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டிருப்பதிலிருந்தே அதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். நகராட்சி நிர்வாகத்துறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்கவும், தங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு பணி வழங்கவும் தான் அந்தத் துறையே நேரடியாக ஆள்தேர்வு நடத்துகிறது என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது. ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழக அரசுத் துறைகளுக்கு 1933 பேர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை நேர்மையாக நடைபெற்றால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அதனால் அவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றப்படும்; அவர்களின் வறுமை தீரும். இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட இந்த பணி நியமனங்களில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. எனவே, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 1933 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க அத்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விதிமீறல்களில் ஈடுபட்டதாக 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 09:23:00
சென்னை: தமிழகத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின் மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 381 மருந்து விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களின் 21 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி வருங்காலங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.7-ல் தேமுதிக மாவட்ட செயலர்கள் ஆலோசனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 09:09:00
சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 09:04:00
சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம ஊராட்சி பணியாளர்களின் கேப்ஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நேற்று சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நடைபெற்றது. இதற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, வேன் மூலம் வந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் ரூ.250 மாத ஊதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தால், நேற்று காலை கிண்டி, சைதாப்பேட்டை, சர்தார் படேல் சாலை, வேளச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ரசிகர்கள் கொண்டாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 09:00:00
கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இதையொட்டி, பல்வேறு கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மதம், சாதி இல்லாத சூழலை உருவாக்கப் போவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். யாரும் மதம், சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. அதிகமானோர் அரசியலுக்குவர வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே பேசும்போது, ‘அரசியலுக்கு வாருங்கள்’ என்று தான் சொல்கிறேன். தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது. நடிகர் விஜய்க்கு எனது பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்யை வாழ்த்தி, வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள். சவால்களை சமாளித்து அவர் தமிழக அரசியலில் வலம் வருவார் என நம்புகிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். இதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு, மூழ்கிப் போனவர்களும் உண்டு. நடிகர் விஜய் நீந்தி கரை சேருவாரா அல்லது மூழ்கிப் போவாரா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குடன் கலைப்பணி ஆற்றும் விஜய், அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விசிக தலைவர் திருமாவளவன்: ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம். அந்தவகையில் நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளது வரவேற்புக்குரியது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதாக நம்புகிறேன். அதை வரவேற்கிறேன். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகர் விஜய் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயர், நல்ல பெயராக அமைந்திருக்கிறது. கட்சியின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தை இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி. மாநில கட்சி மாநிலத் தேர்தலில்தான் கவனம் செலுத்த வேண்டும். சமக தலைவர் ரா.சரத்குமார்: நடிகர் விஜய் கலந்தாலோசித்து, தீர்க்கமான முடிவு எடுத்த பிறகுதான் அரசியலில் இறங்கி இருக்கிறார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள். அமைதிக்குப் பின் அரசியல் புரட்சி - ‘வாகை சூடு விஜய்’ மகனுக்கு ஷோபா சந்திரசேகர் வாழ்த்து சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த அவரது தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய்யின் அமைதிக்கு பின் அரசியல் புரட்சி இருக்கும். ‘வாகை சூடு விஜய்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விஜய் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை இயல்பாக பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு அம்மாவாக மட்டுமின்றி சமூக பொறுப்புள்ள ஒரு பெண்மணியாகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு என்பது இருக்கிறது. அந்தவகையில் அனைத்து குடிமக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் மாதிரியான ஆளுமைக்கு அரசியலில் நுழைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, விஜய்யின் அமைதிக்குப் பின் ஒரு அரசியல் புரட்சி நிச்சயம் இருக்கும். தமிழக வெற்றி கழகம் எனும் பெயருக்கு ஏற்ப தமிழகத்தில் அவருடைய கட்சி வெற்றி பெறும். விஜய்க்கு மதம், சாதி போன்றவற்றில் விருப்பம் இல்லை. அவருக்கு பின்னாடி நிற்கும் அனைவரும் வாழ்வில் முன்னாடி வரவேண்டும் என்று நினைப்பவர். அதன்படி இன்று அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறியுள்ளனர். விரைவில் தலைவர்களாகவும் மாறப் போகின்றனர். மகனுக்கு ஓட்டு போடவிருக்கும் அம்மாவாக எனக்கென தனி சந்தோஷம் இதில் இருக்கிறது. வாகை சூடு விஜய். வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்... நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: சின்னத்துரை (திருநெல்வேலி - காவலாளி) - தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்தால் அதை வரவேற்போம். நடிகராக இருந்துகட்சி ஆரம்பித்து அதில், எம்.ஜி.ஆரை தவிரயாரும் வெற்றி அடையவில்லை. விஜய் என்ன கொள்கைகளை முன்னெடுத்து வருகிறார் என்பதை பார்த்து தான், விஜய் ஆட்சிக்கு வர வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். கார்த்திகா சுவர்ண இலக்கியா (தூத்துக்குடி, குடும்பத்தலைவி): இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது, இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும் என நினைக் கிறேன். மக்களுக்கு விஜய் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழக அரசியலில் இரு கட்சிகளுக்கே நாம் வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறோம். ரஜினி போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி இறுதியில் பின் வாங்கிய நிலையில், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். நித்யா (நாமக்கல், செவிலியர்) - விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். ஆனால், விஜயகாந்த் செய்த தவறை விஜய் செய்யக்கூடாது. அதாவது, எப்போதும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தமிழகத்தில் விஜய் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுப்பதை தவிர்த்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக மக்களைச் சந்தித்து, ஆதரவை பெற வேண்டும். பிரியங்கா (மதுரை, கல்லூரி மாணவி) - நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்க முடிவாகும். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது இந்த முடிவை அவர் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. மறுபுறம் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் வலுவானதாக இல்லை. அவர்களும் நேர்மையான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்லை. எனவே, சிறந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதே எண்ணோட்டத்துடன் விஜய்யும் அரசியலுக்கு வருவதை அவரின் அறிவிப்பில் உணர முடிகிறது. அவர்தனது முடிவில் பின்வாங்கமாட்டார் என்று நம்புகிறேன். அவரது அறிவிப்பில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் உள்ளன. எனினும், கட்சியின் முழுமையான கொள்கைகளை தெரிவித்தால் மட்டுமே விஜய்யை ஆதரிப்பது குறித்து கூறமுடியும். எஸ்.முருகேசன் (சென்னை, ஆட்டோ ஓட்டுநர்) - ரசிகர்களின் விருப்பத்தின்படியே கட்சி தொடங்கியிருக்கிறார். ஆனால், தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் மறைந்து ஒரு மாதமே ஆன நிலையில், விஜய் எடுத்த முடிவு சற்று அதிருப்தி அளிக்கிறது. இப்போது அனைவரும் வாழ்த்து சொல்வார்கள். ஆனால் காலம் கடந்து போகும் போதுதான் மனதில் இருப்பவை எல்லாம் வெளியில் வரும். அதேநேரம், கட்சியில் அவரைத் தவிர யாரையும் மக்களுக்குத் தெரியாது. பெரும் கட்சிகளுக்கு இடையே படிப்படியாக வளர்ச்சி இருக்கக் கூடும்.
வெளி சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும் ரேசன் கடைகளில் போதிய அளவு அரிசி இருப்பு உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 08:48:00
சென்னை: வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வால் ரேசன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்படாது. போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி மறைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியான 26 பேருக்கு பணிநியமனை ஆணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.13,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்ட நலையில், இந்த நிதியாண்டில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் கடந்த இரண்டாண்டுகளில் 9 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி விலை வெளிச்சந்தையில் உயர்வால் ரேசன் விலைக் கடைகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை. போதிய அரிசி இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரிசி விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 08:37:00
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்னொருபுறம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, அதை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத்தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலைமையில் விலை கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. அரிசி விலை உயர்வுக்கான காரணம், அதன் பற்றாக்குறைதான் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் விற்க அரசு முன்வர வேண்டும்.
எம்ஜிஆரை தரக்குறைவாக விமர்சித்த ராசாவுக்கு கண்டனம்; முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - ஜெ. பேரவை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 08:33:00
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதால் முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்தும், மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியில் ஊழல் ஆறாக ஓடுகிறது. இப்படி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின், முதல்வர் பதவியில் நீடிக்க தார்மிக உரிமை இல்லை. முதல்வர் பதவியை அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். பொய் புகார்: குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பொய் புகார் பதிவு செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.இனி வரும் காலங்களில் ஜனநாயக மாண்புகளை கடைபிடிக்கும் வகையில் சட்டப்பேரவை தலைவர் செயல்பட வேண்டும். பொங்கல் பரிசு வழங்குவதில் வரலாற்று சாதனை படைத்தது மற்றும் 5 புயல்கள், கனமழை, வறட்சி என அனைத்து பேரிடர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மனிதநேயத்துடன் சமாளித்ததற்காக பழனிசாமிக்கு பாராட்டு, வாழ்த்து, நன்றி தெரிவிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் புதிய வெற்றி சரித்திரம் படைக்க உழைக்க வேண்டும். பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்ஜிஆரை தரக்குறைவாக விமர்சித்த திமுக எம்.பி.யான ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுகவும் பாஜகவும் அவதூறு பரப்பி எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-03 08:21:00
சென்னை: அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவையல்ல என்றும் பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே, கருணாநிதி வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதலானது. அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் திமுக இருக்கிறது. பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்ட வேண்டிய உறுதியுடன் உள்ளோம். மாநில உரிமைகளை கட்டிக்காக்க தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, தேர்தல் பணிகளை முன்கூட்டியே முன்னெடுத்துள்ளது திமுக. நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, தேர்தல் அறிக்கைகுழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை பணிகளை உடனடியாக தொடங்கிவிட்டன. இதில், டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினர் காங்கிரஸுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்து, மற்ற தோழமை கட்சிகளுடன் ஆலோசனையில் உள்ளனர். சொன்னதை செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவோம், ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், விவசாயிகள் வருவாயை மும்மடங்காக்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றும் பாஜக போலவோ, அதன் கூட்டணியான அதிமுக போலவோ திமுகவின் வாக்குறுதிகள் இருக்காது இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பில் திமுக இருக்கும். தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கே.என்.நேரு தலைமையிலான குழவினர், தினசரி 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமாவளவன் முன்னெடுத்து நடத்திய வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நான் கூறியதைப்போல், தமிழகத்தில் பாஜக பூஜ்யம்தான். பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவு படுத்துங்கள். கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவையல்ல. திமுகவை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரப்புரை இருக்கும். எதற்கும் திமுக அஞ்சாது என்பதை களப்பணிகள் மூலம் புரியவைப்போம். பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. முழுமையான பட்ஜெட் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இண்டியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு
செய்திப்பிரிவு
திருச்சி
2024-02-03 06:31:00
திருச்சி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள சர்வரில் இருந்து செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று சேகரித்தனர். நீலகிரி மாவட்டம் கோடநாடுஎஸ்டேட்டில் 2017-ல் காவலாளிஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு (தெற்கு மண்டல தகவல் சேகரிப்புமையம்) சிபிசிஐடி எஸ்.பி.மாதவன் தலைமையில் 7 அதிகாரிகள் மற்றும் குஜராத்தை சேர்ந்த 2 தடயவியல் நிபுணர்கள் என 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர். அங்கு, வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்களை அவர்கள் சேகரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீட்கப்பட்ட 8 செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட படங்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இவற்றை கோவை மண்டல தடயவியல் ஆய்வகம் 8 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையாக தயாரித்து, ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் மழை இல்லாத நிலையிலும் ஊற்றுகளால் மூல வைகையில் நீர்வரத்து
என்.கணேஷ்ராஜ்
தேனி
2024-02-03 06:30:00
தேனி: சில வாரங்களாக மழை இல்லாத நிலையிலும் ஊற்றுகளால் மூல வைகையில் நீர்வரத்து காணப் படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் நிலைகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி, அரண்மனைப்புதூர், வீர பாண்டி, பெரியகுளம், மஞ்சளாறு, கூடலூர், போடி உள்ளிட்ட 13 இடங்களில் மழைமாணிகள் அமைக்கப்பட்டு மழையின் அளவு கணக்கெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.20-ம் தேதி உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா ஒரு மிமீ. மழையும், சோத்துப்பாறை, போடியில் தலா 2 மி.மீ. மழையும் பெய்தது. அதன் பிறகு மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை. இதனால் வைகையின் துணை ஆறுகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதி ஊற்று களால் மூல வைகையில் குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு மழை இருப்பதில்லை. இதனால் அப்போது மூல வைகை வறண்டு காணப்படும். அதேநேரம், கடந்த மாதங்களில் பெய்த மழையால் வனப்பகுதியில் ஊற்றுகளும், நீர்தேக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் மூல வைகையில் தற்போதும் நீரோட்டம் உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நிலைகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும் குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான உள் ளாட்சிகள் மூல வைகையைச் சார்ந்துள்ளன. இந்த நீர்வரத்தால் தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்படவில்லை. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,380 கன அடியும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,769 கன அடியாகவும் உள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி நீர்மட்டம் 71 அடியாக இருந்த நிலையில், குறைவான நீர்வரத்து, பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் உச்ச அளவில் இருந்து நீர்மட்டம் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. பெரியாறு அணையைப் பொருத்த அளவில் நீர்மட்டம் 135.15 அடியாகவும், நீர்வரத்து 493 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கனஅடியாகவும் உள்ளது.
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் கடனுதவி வழங்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
செய்திப்பிரிவு
ஈரோடு
2024-02-03 06:29:00
ஈரோடு: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர்ப் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. இதில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர்விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வியாபாரிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. வணிகர்களின் நலன், மேம்பாட்டுக்காக எந்த அறிவிப்பும் இல்லை. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டியில் மாற்றங்கள் உள்ளிட்ட வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாதத்தில் அகற்றுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். ஆனால், இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோலார் பயன்படுத்துவோருக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும், ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால், யாருக்குத் தரப்போகிறார்கள் என்றுதெரியவில்லை. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான வியாபாரிகள், வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில், பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான அரசு அல்ல: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்
செய்திப்பிரிவு
வாணியம்பாடி
2024-02-03 06:25:00
வாணியம்பாடி: பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு அல்ல என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணா மலை தெரிவித்தார். ‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை பாஜக தொடங்கி பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. இதில், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து நடைபயணமாக வந்த அண்ணா மலைக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, வாணி யம்பாடி பேருந்து நிலையம் வழியாக சி.எல்.சாலையில் நடந்து சென்று அங்குள்ள வாரச்சந்தையில் பொதுமக்கள் முன்னிலையில் அண்ணாமலை பேசும்போது, ‘‘வாணியம்பாடி பகுதி வளர்ச்சி பெறாமல் உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும், நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லை. அங்குள்ள மக்கள் அவசர தேவைக்கு டோலி கட்டி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறாமல் இருக்க தமிழக ஆட்சியாளர்களே காரணம். அதேபோல, நியூடவுன் ரயில்வே ‘கேட்' பிரச்சினையும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக அரசு பாலம் கட்ட இடத்தை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள கிராமப்புற சாலைகளை சீரமைக்க மத்திய அரசு 5,886 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் எந்த சாலையும் சீரமைக் கப்படவில்லை. தோல் தொழிற்சாலைகளால் பாலாறு மாசடைந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் போனால் பாலாறு இருக்காது. தமிழகத்தில் பாலாறு போல 6 நதிகள் மாசு டைந்து காணப்படுகிறது. அதில், முதலிடத்தில் பாலாறு உள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது. பாலாற்றை பாது காக்க வேண்டும். பாலாறு மட்டும் அல்ல சுற்றுச்சூழல், நீர்நிலை களையும் பாதுகாக்க வேண்டும். அதை பாஜக அரசு செய்யும். வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக் கின்றனர். பாஜக அரசு சிறுபான் மையினருக்கு எதிரான அரசு அல்ல. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வேலைவாய்ப்பில் நான் கரை சதவீதமாக இருந்த சிறு பான்மையினர் 2024-ல் 10.5 சதவீதமாக மாறியுள்ளனர். இப் போது சொல்லுங்கள் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசா? சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு என்றும் துணை நிற்கும். இந்த தொகுதி யின் எம்.பி.யாக உள்ள கதிர்ஆனந்த் இதுவரை என்ன செய்துள்ளார். அவர் நடத்தும் கல்வி நிறு வனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளை மாண வர்களுக்கு கற்றுக் கொடுக் கின்றனர். ஆனால், வெளியே இரு மொழி கொள்கை என பேசு கின்றனர். திமுகவினர் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் பெற்றுக் கொண்டு 3 மொழிகளை கற்றுக் கொடுக்கின்றனர். அரசு பள்ளி களில் இரு மொழி மட்டுமே உள்ளது. ஏன்? அரசு பள்ளிகளில் 3 மொழிகள் கொண்டு வர மறுக் கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 மொழிகள் கற்பிக் கப்படும்’’ என்றார்.
காங்கிரஸுக்கு அதிக இடங்களை கேட்போம்: கே.எஸ்.அழகிரி உறுதி
செய்திப்பிரிவு
மயிலாடுதுறை
2024-02-03 06:15:00
மயிலாடுதுறை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்போம். மயிலாடுதுறை தொகுதியையும் கேட்போம். நாட்டில் 25 கோடி மக்களைவறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பட்ஜெட்டில் கூறியுள்ளனர். இதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ராமர் கோயில் கட்டியதால் மட்டுமே மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.