Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
“தேமுதிக தனித்துப் போட்டி (அ) 14 சீட், 1 மாநிலங்களவை இடம் தருவோர் உடன் கூட்டணி” - பிரேமலதா
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 16:18:00
சென்னை: “மக்களவைத் தேர்தலில் தனித்து களம் போட்டியிடுவது அல்லது 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விரும்புகின்றனர்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், தேமுதிக இந்த முறை தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். காரணம், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இது. விஜயகாந்த்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் குற்ற உணர்வுடன் கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கிறேன். எனவே, விஜயகாந்தின் மரணத்துக்கு வந்தது ஏதோ அனுதாப அலை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இது அனுதாப வாக்குகளாக மாறும், இதை அனுதாபம் என்று நினைத்துவிடாதீர்கள். எனவே, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களின் கருத்து. ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி, பிறகு பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது என மொத்தம் 4 வழிகள்தான். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கருத்து தனித்துப் போட்டியிடுவது. அல்லது, மீதமுள்ள 3 கூட்டணிகளில் யார் தேமுதிகவுக்கு அதிகமான இடங்களை, அதாவது 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்" என்று பிரேமலதா தெரிவித்தார். நடப்பது என்ன? - கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி விஜயகாந்த் மறைந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளை தேமுதிகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, தேமுதிக தலைமை நிர்வாகிகளிடம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, போட்டியிட விரும்பும் மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் தேமுதிக தரப்பில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரம், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திமுக தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தேமுதிக தலைமையைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய முதல் உரையில், “2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக எம்.பி.-க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முதலிலேயே எழுதித் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டில் தேமுதிக தலைமை உறுதியாக இருப்பதாகவும், தொண்டர்களின் விருப்பப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவோருடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் தற்போது பிரேமலதா கூட்டணிக்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்தக் கூட இடமில்லை: தொடரும் ‘பார்க்கிங்’ பிரச்சினை
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-07 15:49:00
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் விடுவதற்கு கூட வழியில்லாமல் ‘பார்க்கிங்' பிரச்சினை தீராத தலைவலியாக உருவெடுத்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர பட்ட மேற்படிப்பு, சிறப்பு பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். 15 ஆயிரம் வெளிநோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான மருத்துவமனையில் முறையான பார்க்கிங் வசதி இல்லாதது தீராத குறையாகவே நீடிக்கிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பனகல் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதில் அவ்வப்போது வாகனங்கள் திருடு போவதாகவும் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு விபத்து, மகப்பேறு அவசரகால சிகிச்சைக்கு நோயாளிகளை ஏற்றிவர 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றை நிறுத்தக் கூட இட வசதியில்லை. மேலும், கோரிப்பாளையம் அவசர சிகிச்சைப் பிரிவு முன் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி திருப்புவதற்கு கூட இடமில்லை. மருத்துவர்கள் வழக்கமாக கார்களை நிறுத்தும் மருத்துவமனை வளாக இடங்களில், மற்ற பணியாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த காவலாளிகள் அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மருத்துவமனை சந்துகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் ஸ்ட்ரெச்சர்களை கூட கொண்டு செல்ல முடியவில்லை. மருத்துவர்களின் வாகனங்களை நிறுத்த மட்டும் அக்கறை காட்டும் மருத்துவமனை நிர்வாகம் பிற நோயாளிகள், பணியாளர்கள் வாக னங்களை பற்றி கண்டுகொள்வதில்லை. தற்போது கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக 7 மாடி டவர் பிளாக் கட்டிடம் பார்க்கிங் வசதியில்லாமல் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட வரைபடம் தயாராகும்போதே இப்பிரச்சினை எழுந்தது. ஆனால் அப்போதைய டீனிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் கட்டிடத்தை கட்டி முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மருத்துவமனைக்கு வரும்போது மட்டும் அவர்களது வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மற்ற சாமானியர்கள் படும் சிரமம் தெரிவதில்லை. அப்படியே உள்ளூர் அமைச்சர்களிடம் பார்க்கிங் பிரச்சினையை அரசு மருத்துவர்கள் கொண்டு சென்றாலும், அது சுகாதார அமைச்சர் துறை என நழுவி விடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால், அவரும் இதை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தத்தில் மருத்துவமனை பார்க்கிங் விவகாரத்துக்கு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் யாரும் தீர்வுகாண முன்வராததால் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளின் சிரமம் தொடர்கிறது.
பொங்கல் தொகுப்பு வேட்டி, புடவையில் 78% பாலியஸ்டர், 22% பருத்தி: அண்ணாமலை குற்றச்சாட்டு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 15:44:00
சென்னை: “பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நேற்றைய தினம், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி "என் மண் என் மக்கள்" பயணத்தின்போது, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தியின் விஞ்ஞானப்பூர்வமான புதிய ஊழல் ஒன்றை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினோம்.அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது. வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ரூ.160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர். பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் கோவை ஜவுளி ஆராய்ச்சி மைய சோதனை முடிவுகளையும் இணைத்துள்ளார்.
ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ‘பரிதவிக்கும்’ உள்நோயாளிகள்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-07 15:42:00
ஓசூர்: ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், உள்நோயாளிகள் சிரமத்தைச் சந்திக்கும் நிலையுள்ளது. மேலும், ஓட்டுநர் இல்லாததால், ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த வருவாயில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவச் சிகிச்சை பெற மூக்காண்டப்பள்ளியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஓசூர் பகுதியில் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இதனால், பல நாட்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பெற இடவசதியின்றி தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையுள்ளது. இதுபோல, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையுள்ளது. எனவே, இம்மருத்துவமனையை மேம்படுத்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் சிலர் கூறியதாவது: இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓட்டுநர் இல்லாததால் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மின் விளக்கு வசதியில்லாததால், மருத்துவமனை வளாகத்துக்குள் இரவு நேரங்களில் சிலர் மது அருந்தும் நிலையுள்ளது. எனவே, கூடுதல் மருத்துவர்களை நியமித்து உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 33 ஆண்டுகளாக மேம்பாடு இல்லை மருத்துவமனை ஊழியர்கள் வேதனை: இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: இம்மருத்துவமனை கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கியபோது உள்நோயாளிகள் சிகிச்சை பெற 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது, மருத்துவமனையைப் பயன்படுத்தும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது, 3 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 5 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். மருத்துவமனை தொடங்கப்பட்டபோது இருந்த வசதிகள் தான் இன்று வரை தொடர்கிறது. கட்டிடங்கள் கட்டி 33 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கட்டிடங்கள் சேதமாகி உள்ளன. நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் இல்லை. மருத்துவமனை முன்புள்ள சாலையில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையின் உயரம் உயர்ந்து, மருத்துவமனை தாழ்வான பகுதியாக மாறியுள்ளது. மேலும், போதிய கால்வாய் வசதியில்லாததால், மழை நேரங்களில் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மழை நீர் சூழ்ந்து விடுகிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டி, மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
“புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு என்.ஆர்.காங்கிரஸார் பணியாற்ற வேண்டும்” - ரங்கசாமி
அ.முன்னடியான்
புதுச்சேரி
2024-02-07 15:37:00
புதுச்சேரி: “மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி அறிவுறுத்தினார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க விழா, புதுச்சேரியில் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள சத்குரு அப்பா பைத்தியம் சாமிகள் உருவப் படத்துக்கும், காந்தி, காமராஜர் படங்களுக்கும் முதல்வர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு லட்டு வழங்கி அவர் பேசியது: "புதுச்சேரி மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இந்த எண்ணத்தை ஏற்கெனவே நாம் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம். தற்போது மீண்டும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வாக்கு கேட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளோம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. நிர்வாகமும் சீர்கெட்டு புதுச்சேரியின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜனநாயக ரீதியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி ஆசியோடும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகத்தை சிறப்பாக செய்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்தி வருகிறோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளோம். நிர்வாகத்தை சீரமைத்து புதிய உத்வேகத்தோடு செயல்படுத்துகிறோம். காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசோடு நல்ல உறவு இல்லாத நிலையில் இருந்தது. இதனால்தான் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால், நாம் பொறுப்பேற்றவுடன் உள் கட்டமைப்பை மேம்படுத்த அதிக அக்கறை எடுத்துள்ளோம். நிறுத்தப்பட்ட லேப் டாப் திட்டம் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவோடு மாலை சிற்றுண்டி தருவோம் என கூறியிருந்தோம். விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் என பல புதிய திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். இதுவரை 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது. அறிவித்தபடி மீதமுள்ள 20 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும். கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து பெறுவதுதான். மத்திய அரசு கண்டிப்பாக தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்காகத்தான் பிரதமரை சந்திக்கும் போதும், கடிதம் மூலமும் மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு பணியிடங்கள் அனைத்தும் காலியாக இருந்தது. இதனால் துறைகளே செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது எந்த முறைகேடுகளும் இன்றி, யாரும் குறைசொல்ல முடியாத வகையில் எல்டிசி, யூடிசி, காவல், வருவாய், சுகாதாரத் துறை என அரசு துறை காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். இன்னும் பல பணியிடங்களை நிரப்ப உள்ளோம். என்றார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி என்.ஆர்.காங்கிரஸார் தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சியில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவுக்கு ஆலோசனை கூற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். கட்சியில் அமைப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் மலர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ரங்கசாமி. இவ்விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் செயலாளர் ஜெய பால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி: அரசு தகவல் @ ஐகோர்ட்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-07 15:19:00
சென்னை: சென்னை நகரின் சூரப்பட்டு, போரூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 -ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தனியார் பேருந்துகள், சென்னை நகரில் சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அப்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் தான் கேரேஜ்கள் உள்ளன. எனவே, கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்துகள் நிரம்பி விடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும். எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு அதற்கான வரைபடத்தை தாக்கல் செய்ய வெண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பாஜகவில் இணைந்ததாக அண்ணாமலை தகவல்
செய்திப்பிரிவு
புதுடெல்லி
2024-02-07 15:11:00
புதுடெல்லி: முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்தத் தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் அவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர். இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: “பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தமிழகத்தின் மாற்றுக் கட்சிகளிலிருந்து அரசியல் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதிகள், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் விவரம்: இவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த நேர்மையான தேசியக் கண்ணோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவரையும் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் பாஜகவில் இணைந்த, சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ.வெங்கடாசலம், கன்னியாகுமரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அனைவரின் மேலான உழைப்பையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்" என்று அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உதகை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தினகரன் இரங்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 14:56:00
சென்னை: உதகை அருகே நிகழ்ந்த கட்டுமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உதகை அருகே கட்டுமான பணியின்போது தடுப்புச் சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.
உதகை | கட்டுமான பணியின்போது கழிப்பிடம் இடிந்து விபத்து - மண்ணில் புதைந்து 6 பெண்கள் உயிரிழப்பு
ஆர்.டி.சிவசங்கர்
உதகை
2024-02-07 14:04:00
உதகை: உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது, அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்தது. இதில், மண்ணில் புதைந்து 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தையொட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது. இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர். தொழிலாளர்கள் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனடியாக ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உதகை காந்திநகரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
“மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி” - விஜய்யின் அரசியல் பிரவேசம்; முதல்வர் ஸ்டாலின் கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 13:48:00
சென்னை: ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்துவிட்டு புதன்கிழமை சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’ எனத் தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு முக்கியமாக, ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாத என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது அதிமுக, தற்போது ஆட்சியில் இருப்பது திமுக. மேலும் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாஜகதான். விஜய்யின் அறிக்கை யாரை விமர்சிக்கும் விதமாக இருந்தது என இணையதள வாசிகளும், அரசியல் கட்சி தலைவர்களுமே குழம்பி போயினர். இதனிடையே, “கட்சி தொடங்கிய நடிகர் விஜய் விமர்சித்தது திமுக, பாஜகவைதான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் விளக்கமளித்து விட்டார். இந்நிலையில், ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு புதன் கிழமை சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின் . அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். கேள்வி: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா? முதல்வர்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும். கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா? முதல்வர்: பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. கேள்வி: மேலும், பிரதம மந்திரி பேசும்போது நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து? முதல்வர்: மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. கேள்வி: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்? முதல்வர்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.
“எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அமித் ஷா சொல்லவில்லை” - கூட்டணி பேச்சுக்கு அண்ணாமலை விளக்கம்
செய்திப்பிரிவு
புதுடெல்லி
2024-02-07 13:30:00
புதுடெல்லி: “மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை” என்று அமித் ஷாவின் கூட்டணி பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அமித் ஷா சொன்னபடி கூட்டணி கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது. ஏன், திமுக கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம். எத்தனையோ கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கூட்டணிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம். எனவே, அமித் ஷா பேசியதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம். 2024 தேர்தல் களம் வித்தியாசமானது. இதற்கு முன்பு இது போல் தேர்தல் களம் கிடையாது. 2024 தேர்தலில் அனைத்தும் மாறும். கூட்டணியை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல்படி, கடைசி நேரத்தில் கூட கூட்டணி அமையலாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெளிவான முடிவு கிடைக்கும். மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கப்போவதில்லை. மோடி மற்றும் பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். " என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்றுவருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் பட்டுப்போய்விடவில்லை என்பதை உணர்த்துவதுபோல் இருப்பதாக கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன. அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய நல்ல மனதைக் காட்டுகிறது. பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்” என்றார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்.7) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, “அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதேபோல் அதிமுக - பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட இங்கே யாருமில்லை” என்றார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவு. பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது. முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை” என்று கூறினார். இவ்வாறாக அமித் ஷாவின் ஒரு கருத்து பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இன்னும் பார்க்கவில்லை.. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமித் ஷா தெரிவித்த கருத்துகளை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தால் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையும் படிக்க... > “கதவு திறந்தே இருக்கிறது” - அமித் ஷா கருத்தும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்வினையும்
“தேவநேயப் பாவாணரைப் போற்றி தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்போம்” - முதல்வர் ஸ்டாலின்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 12:47:00
சென்னை: “தேவநேயப் பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” என தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். அவருடைய பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில், தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று. ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார். பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க பிரேமலதாவுக்கே அதிகாரம்: தேமுதிக தீர்மானம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 12:34:00
சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களை வழங்கியும், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும், அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இன்று (பிப்.7) நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு; தீர்மானம்: 1 தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் அதன் மூலம் ஒரு நல்லாட்சியை தர வேண்டும் என்று உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றைக்கும் அனைத்து நெஞ்சத்தில் வாழ்கின்ற தேமுதிக நிறுவனத்தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் மறைவு வாழ்வில் ஈடு செய்ய முடியாதது. கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தீர்மானம்: 2 மறைந்த உலகத் தமிழ் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பிரதமருக்கும்., மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்: 3 சாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த கேப்டனின் மறைவிற்கு சாதி, மத, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேமுதிக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம்: 4 மீலாத்துயரிலும், துக்கத்திலும் மனம் தளராமல் அவர் விட்டுச் சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா என்றென்றும் எதற்கும் அஞ்சாமல் துணை நின்று வெற்றி படைப்போம் என்று மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்போம் என்று தேமுதிக பறைசாற்றுகிறது. தீர்மானம்: 5 தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டனின் உறைவிடத்தை கேப்டன் கோயிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு கழக பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது. தீர்மானம்: 6 பசியோடு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு படைத்து அவர்களின் பசியாற செய்து அந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து மறைந்த பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டனின் சன்னதியில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கிய கேப்டன் குடும்பத்தினருக்கு இந்த கூட்டம் நன்றி செலுத்துகிறது. நீண்ட நாட்களாக நீங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கழகத்தை சேர்ந்த அனைவரின் குடும்பங்களில் நிகழும் பிறந்தநாள் திருமணநாள், சுப நிகழ்ச்சிகள், குடும்பத்தாரின் நினைவு நாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கேப்டன் கோயிலில் அன்னதானமாகவோ, நலத்திட்ட உதவிகளாகவோ தலைமை கழகத்திடம் முன் அனுமதி பெற்று தங்களின் உதவிகளை செய்யலாம் என்று தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது. தீர்மானம்: 7 பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டனுக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க முடிவு எடுப்பதாக இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தீர்மானம்: 8 வருகின்ற பிப்ரவரி 12 கொடி நாள் அன்று அனைத்து கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றிடவும், தீவிர கட்சி உறுப்பினர் சேர்க்கை சேர்க்கவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தீர்மானம்: 9 தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் கேப்டன் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் கேப்டன் அவர்களின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டனின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது. தீர்மானம்: 10 தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரபூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
கடலூர் தொகுதியில் களமிறங்க தயக்கம் காட்டும் அதிமுக - பின்னணி என்ன?
செய்திப்பிரிவு
விருத்தாசலம்
2024-02-07 11:55:00
விருத்தாசலம்: தமிழக அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகள் தற்போதும் இடம் பெற்றிருக்கும் சூழலில், அக்கூட்டணியில் தொகுதி பங்கீட்டுக்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிக ளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன. மறுபுறம் அதிமுக கூட்டணி அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ள போதிலும், எந்தக் கட்சியும் இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. அதேபோல் பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, புதியநீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டக் கட்சிகள் அக்கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் சூழலே நிலவுகிறது. அமமுக, ஓபிஸ் அணியினரும் தொடர் சுற்றுப் பயணத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர், குறிஞ்சிப் பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி என சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதேபோன்று பாமக, பாஜக, தேமுதிக, தமாக கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருவர் களமிறங்குவது உறுதி என்ற நிலையில், பிரதான எதிர்க் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டாததால், அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான திமுகவில் கடலூர் எம்எல்ஏ மகன் பிரவீன் போட்டியிட விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளான மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபனும், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரியும், வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திர சேகரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாமக சார்பில் அதன் தலைவர் அன்புமணியும், பாஜக சார்பில் வினோத் பி.செல் வம் மற்றும் ஓபிசி பிரிவு தலைவர் சுரேஷ் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமாகவும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நெடுஞ்செழியனை களமிறக்க விரும்புவதாக தெரிகிறது. பிரதானக் கட்சியான அதிமுகவில் கூட்டணி இறுதியாகாத நிலை யில் அக்கட்சியினர் களமிறங்க போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகனை களமிறக்க தலைமை கேட்டுக்கொண்ட போதும் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சத்யா பன்னீர் செல்வமும் மறுத்து விட்ட நிலையில், பலமானவர்களே தயக்கம் காட்டும் போது மற்றவர்கள் மட்டும் எப்படி துணிந்து களமிறங்குவார்கள் என்கிறது கடலூர் அதிமுக வட்டாரங்கள். எம்.சி.சம்பத் மகனை களமிறக்க தலைமை கேட்டுக்கொண்டது.
“கதவு திறந்தே இருக்கிறது” - அமித் ஷா கருத்தும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்வினையும்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 11:16:00
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்றுவருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் பட்டுப்போய்விடவில்லை என்பதை உணர்த்துவதாக இருப்பதாக கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன. அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய நல்ல மனதைக் காட்டுகிறது. பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்” என்றார். ஓபிஎஸ் தரப்பு, பாஜக, டிடிவி தினகரன், சசிகலா இணைந்து ஓரணியில் போட்டியிடலாம் என்ற பார்வைகளும் நிலவுகின்றன. ஓபிஎஸ்ஸின் கருத்து அரசியல் விவாதத்தை கிளப்பாமல் மையமாகச் சென்றுவிட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்.7) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, “அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதேபோல் அதிமுக - பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட இங்கே யாருமில்லை” என்றார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவு. பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது. முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை” என்று கூறினார். இவ்வாறாக அமித் ஷாவின் ஒரு கருத்து பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இன்னும் பார்க்கவில்லை.. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமித் ஷா தெரிவித்த கருத்துகளை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தால் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார். கூட்டணி முறிவும் விமர்சனங்களும்.. முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் பேச்சுகள், சர்ச்சைப் பேட்டிகள் காரணமாக அமைந்தன. அதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அவ்வப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிவந்தார். இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி பூசல் வெறும் நாடகம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்றார். அதன்பின்னரும் கூட விமர்சனங்கள் அடங்காத சூழலில், பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்ற பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவின் பேச்சு மீண்டும் அதிமுக - பாஜக மறைமுக உறவு என்ற விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது சாரிகள் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் எதிரணி தரப்பில் இன்னும் கூட்டணி குறித்தே இழுபறி நீடிப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதால், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் அதிமுக தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘மக்களவை தேர்தலை முன்னிட்டு, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்’ என்று அறிவித்த பாமக, இதுதொடர்பாக அதிமுக, பாஜகவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு கூட்டணிப் பேச்சுக்களே நிறைவு பெறாத சூழலில் அமித் ஷாவின் கருத்து பல்வேறு வாதவிவாதங்களைத் தூண்டியிருக்கிறது.
மதுரையில் குடிநீருக்கு அலைமோதும் மக்கள் - செயற்கை பற்றாக்குறையால் லாரிகளில் விநியோகம்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-07 10:18:00
மதுரை: கோடைகாலம் தொடங்கிய நிலையில், மதுரை குடியிருப்பு களில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வது அதிகரித்துள்ளது. செயற்கை குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் குடிநீருக்கு அலைமோதும் நிலை உள்ளது. மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. வாரம் ஒரு முறையும், சில வார்டுகளில் சீராகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சமீப காலமாக வாரம் ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ததால் மக்கள் வீட்டு உபயோகத்துக்குக் கூட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர். ஆனால், அதன் பிறகு சீராக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. வைகை அணையிலும் ஓரளவு தண்ணீர் இருந்ததால் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது வைகை அணையில் தண்ணீர் இருந்தும் ஏராளமான வார்டுகளில் வாரத்துக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீர் விநியோகம் செய்வதற்கு பெரிய குழாய், போதுமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இல்லாததால் இந்த விநியோக குறைபாடு பல வார்டுகளில் இருந்தது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவு இருந்ததால் குடிநீர் பற்றாக்குறை வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால், தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பல வார்டுகளில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைப்பணி, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதால் குடிநீர் குழாய் உடைந்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க பல வாரம் ஆகிவிடுகிறது. மாநகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து வார்டுகளிலும் 2 நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் போட்டி போட்டு பைக்கில் ‘பறந்து’ சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்
என்.சன்னாசி
மதுரை
2024-02-07 09:50:00
மதுரை: மதுரை - நத்தம் மேம்பாலத்தில் போட்டி போட்டு வேகமாக சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இளைஞர்கள், பெண்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. மதுரை - நத்தம் செல் லும் சாலை யில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலம் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைக்க இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில், இந்த பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பாலத்தை இளைஞர்கள் ஜாலி ரெய்டுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். இதைத் தடுக்கவும், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கண்காணிக்கவும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளன. இதன் மூலம் போலீஸார் கண்காணித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் திருவிழா, பண்டிகை காலங்களில் இந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. ஆனாலும், பைக் ரேஸ் பிரியர்களின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் மற்றபொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். பைக் ரேசர்களால் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் பாலத்தில் செல்லவே தயங்குகின்றனர். இந்நிலையில், நேற்று நத்தம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் 2 பெண்கள் சிறிது வேகமாக சென்றனர். அவர்கள் பின்னால் வந்த 2 இளைஞர்களும் வேகமாக சென்றனர். `நீ முந்து, நான் முந்து' என இரு மோட்டார் சைக்கிள்களும் பாலத்தில் வேகமாக செல்லவே ஒரு கட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேரும் காயமடைந்தனர். இக்காட்சிகளை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து வைரலாக்கினார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல ரேஸ் பைக்குகளில் வேகமாக செல்வோர் அக்காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். இவர்களது செயலால் சாலையில் செல்லும் பொது மக்கள் மரண பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இது போன்று உயர்ரக பைக்குகளில் வேகமாக செல்வோரை கண்காணித்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர். இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேசர்களை தடுக்க போலீஸாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்றனர்.
“சாதனைப் பயணம்; ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 08:52:00
சென்னை: “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்பெயினில் இருந்து இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது பயணத்தைப் பற்றி விவரித்தார். இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “ உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சென்றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள். · ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் · ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் · இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக் கூடிய உகந்த சூழல் பற்றி அங்கே எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் நாட்டில் செயல்படுகின்ற முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 1. காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சியானா நிறுவனம் 2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம் 3. கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம் 4. சர்வதேசத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம் 5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம் 6. இரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ நிறுவனம் 7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற எடிபான் நிறுவனம் 8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனம் - ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை எல்லாம் நான் சந்தித்தேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள். இந்த முயற்சிகளின் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1. ஹபக் லாய்டு நிறுவனம் – 2500 கோடி ரூபாய் முதலீடு. 2. எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு. 3. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.” எனக் கூறிச் சென்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பான கேள்விக்கு, “ஆம். அந்த உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறினார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஜன.27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயினில் கடந்த ஜன.28-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்ய தமிழகம் வரும்படி முதல்வர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதுகுறித்து, முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. மேப்ட்ரீ நிறுவனத்துடன் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பிய முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு நல்கினர்.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 08:31:00
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் கைதான பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தங்களது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கடந்த ஜன.25 அன்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த பிப்.2 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆண்டோ மதிவாணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அந்த பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக மனுதாரர்கள் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்ற ஒரே காரணத்துக்காக சமூக ஊடகங்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீஸார் அவசர கதியில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர் என வாதிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் வாதிட்டதாவது: வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள இந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை ஆய்வாளர் தான் விசாரித்து வருகிறார். இருவரையும் போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் உள்ளநிலையில் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அரசியல் பின்புலமிக்கவர்கள். பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால் போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த வழக்கின் தீர்ப்பை பிப்.6-க்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை பதியாவிட்டால் ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும்: கடை ஊழியர்கள் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 08:24:00
சென்னை: குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாவிட்டால், பொருட்கள் குறைக்கப்படும் என்று கடை ஊழியர்கள் தெரிவித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமைபெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உணவுப்பொருள் வழங்கல் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாலும், கைரேகைப் பதிவின் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதாலும், யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. பதிவு செய்யவில்லை: இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே இதனை மேற்கொண்டனர். மற்றவர்கள் யாரும் பதிவு செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது, குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொருட்கள் அளவு குறைக்கப்படும். பெயர் நீக்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, கடை ஊழியர்களிடம் கேட்டபோது,” கடந்த 6 மாதங்கள் முன் இதுபோன்ற உத்தரவு வந்தது. அப்போதே பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானவர்கள் பதிவு செய்யவில்லை. தற்போது மீண்டும் உத்தரவு வந்துள்ளது. இதைதான் நாங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தெரிவித்துள்ளோம்” என்றனர். இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “மத்திய அரசு முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் விவரங்களை ஆண்டுதோறும் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களையும் சரிபார்க்கும் வகையில், இந்த பதிவு நடைபெறுகிறது. யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் அவர்கள் வராவிட்டால் வீட்டுக்கே சென்று விரல் ரேகை பதிவை பெறவும், தேவைப்பட்டால் முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மின் வாரியத்தை பிரித்து தனியாருக்கு தாரை வார்ப்பதா? - பழனிசாமி கடும் கண்டனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 08:16:00
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக – திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோது 2003-ம் ஆண்டு மின்சார சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்தொடர்ச்சியாக மீண்டும் திமுக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் லிமிடெட் என மூன்று நிறுவனங்களாகப் பிரித்தது. இதன்படி, சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில், தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த மின்துறை, கடந்த 1957-ல் பொதுத்துறை நிறுவன அந்தஸ்துடன், வாரியமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2024-ம் ஆண்டு வாரியம் பிரிக்கப்பட்டு, தனியாருக்கு தாரை வார்க்க திமுக அரசு வழிவகுத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மின்வாரியம் தனியார் மயமானால், இலவச மின்சாரம், சலுகைக் கட்டண மின்சாரத் திட்டங்களை நிறுத்தும் அபாயம் உள்ளது. மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியால் மீண்டும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில்தான் விடியும்.தற்போது மின்வாரியத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இமாச்சல பிரதேச விபத்தில் மாயமான மகன் பற்றி தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்: சைதை துரைசாமி அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 08:09:00
சென்னை: இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்ததில் மாயமான மகன் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. அவரது மகன் வெற்றி (45) சமீபத்தில் இமாச்சல பிரதேசத்துக்கு நண்பர் கோபிநாத் என்பவருடன் சுற்றுலா சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் அம்மாநில போலீஸார், பேரிடர் மீட்பு படையினர், பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து இமாச்சல பிரதேசம் சென்றுள்ள சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களை சந்தித்து மகனை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை | ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி காயம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 07:38:00
சென்னை: ஓடிக் கொண்டிருந்த மாநகர பேருந்தின்பலகை உடைந்ததில் கீழே விழுந்து பெண் பயணி காயமடைந்தார். சென்னை, வள்ளலார் நகரிலிருந்து 59 வழித்தட எண் கொண்ட பேருந்து திருவேற்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அமைந்தகரையில் உள்ள வணிக வளாகம் அருகே வந்தபோது, பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஷானாஸ் என்ற பெண் பயணி, அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்துள்ளார். அப்போது, திடீரென பேருந்தின் தளத்தில் உள்ள பலகை உடைந்தது. அதில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஷானாஸ் விழுந்தார். அவர் ஜன்னல்கம்பியை இறுக்கமாக பற்றிக் கொண்டநிலையில், கால் பகுதி முழுவதும் பேருந்தின் கீழே அந்தரத்தில் தொங்கசிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டைக்குள் சிக்கியவரை உடனடியாக மீட்டு ஆசுவாசப்படுத்தினர். லேசான காயம் ஏற்பட்ட அந்த பயணிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆத்திரமடைந்த பயணிகள் பலகை சேதமடைந்ததை கவனிக்காமல் ஏன்பேருந்தை எடுத்து வந்தீர்கள் என மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் பேருந்தை ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டிச் சென்றதால் அமைந்தகரை போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் ஓட்டை விழுந்த இச்சம்பவம் குறித்து விசாரித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,சம்பந்தப்பட்ட பேருந்தின் பணிமனைமேலாளர், தொழில்நுட்ப பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ``நேற்று முன்தினம் இரவு தூய்மைப் பணி மேற்கொண்ட அந்த ஊழியர்களுக்கு இந்தபஸ்ஸில் உள்ள குறைபாடு தெரியவந்திருக்கும். எனவே, அலட்சியமாக இருந்த ஒப்பந்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். பழைய பேருந்துகளை கழித்து விரைவில் புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்'' என்றனர்.
கூட்டணிக்கு 3 கட்சிகள் அழைப்பு: மாநிலங்களவை உறுப்பினர் பதவியே நிபந்தனை? - பிரேமலதா இன்று ஆலோசனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 07:23:00
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி விஜயகாந்த் மறைந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளை தேமுதிகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, தேமுதிக தலைமை நிர்வாகிகளிடம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, போட்டியிட விரும்பும் மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் தேமுதிக தரப்பில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரம், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திமுக தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தேமுதிக தலைமையைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய முதல் உரையில், “2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக எம்.பி.-க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முதலிலேயே எழுதித் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டில் தேமுதிக தலைமை உறுதியாக இருப்பதாகவும், தொண்டர்களின் விருப்பப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவோருடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இன்றைய தினம் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது” என்றார்.
ஸ்பெயினில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை: பலனளிக்கும் முடிவுகளுடன் சென்னை புறப்பட்ட முதல்வர் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 07:18:00
சென்னை: ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், பலனளிக்கும் முடிவுகளுடன் அங்கிருந்து புறப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஜன.27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயினில் கடந்த ஜன.28-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்ய தமிழகம் வரும்படி முதல்வர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவன தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா என்ற நிறுவனமும் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் (பிப்.5-ம்) தேதி ஸ்பெயின் மேட்ரிட் நகரில் உள்ள கெஸ்டாம்ப், எடிபன் நிறுவனம், டால்கோ நிறுவனம், மேப்ட்ரீ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தின் முதலீட்டு சூழல்களை எடுத்து கூறி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. மேப்ட்ரீ நிறுவனத்துடன் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்து சேர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை | டி.வி நடிகைக்கு கொலை மிரட்டல்: கார் ஓட்டுநர் நண்பருடன் கைது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 06:45:00
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வசிப்பவர் கவுரி ஜனார்த்தன். இவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனது சகோதரி ஷெரின் சாம் (38), தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கார் ஓட்டுநராக கார்த்திக் என்பவர் பணிபுரிந்தார். கடந்த ஜனவரி 7-ம் தேதி இரவு ஷெரின் வீட்டில் தனியாக இருக்கும்போது, மதுபோதையில் வந்த கார்த்திக்கும், அவரது கூட்டாளிகளும் அத்து மீறி நுழைய முயன்று தகராறு செய்துள்ளனர். பின்னர் ஷெரினை வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு, ஜனவரி 7-ம் தேதி இரவு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், காரத்திக்கையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர். இந்நிலையில், கார்த்திக், அவரது கூட்டாளி இளையராஜா ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கனிம நிறுவன ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: ரூ.14,000 முதல் ரூ.50,000 வரை இழப்பால் வேதனை
செய்திப்பிரிவு
சிவகங்கை
2024-02-07 06:20:00
சிவகங்கை: தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்)ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்தில் ரூ.14,000 முதல் ரூ.50,000 வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர். தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், மாநிலம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட கிரானைட், கிராபைட், சுண்ணாம்புக் கல், சிலிகா மணல், வெள்ளை தீ களிமண் குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும், 10-க்கும் மேற்பட்ட குவாரிகள் விரைவில் செயல்பட உள்ளன. இவற்றில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 2020 நவம்பரில் இருந்து 2021 மார்ச் வரை ஊழியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமேவழங்கப்பட்டது. அதேபோல, 2017அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து 7 சதவீத அகவிலைப்படி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மாத ஊதியத்தில்.. ஆறு ஆண்டுகளுக்கு மேலாகஅகவிலைப்படி உயர்வு இல்லாததால், ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியத்தில் ரூ.14,000 முதல்ரூ.50,000 வரை இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கனிம நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: குவாரிகள் அனைத்தும் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. எனவே, ஏற்கெனவே 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பாதி ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். அதேபோல, அரசு ஊழியர்களை போல எங்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு மேலாகஅகவிலைப்படி உயர்வு இல்லை. இதனால் சிலர் விருப்ப ஓய்வுபெற்று வருகின்றனர். இதையடுத்து, எர்ணாவூரில் கனிம நிறுவனத்துக்கு சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தை விற்க 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உடனடியாக விற்று, ஊழியர்களின் ஊதியம், நிர்வாகச் செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து ஊழியர்கள் சார்பில், தமிழ்நாடு கனிம நிறுவனத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கனிம நிறுவன ஊழியர்கள் கூறினர்.
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் மாற்றம்: மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிவு
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-07 06:15:00
சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துகோயம்பேடுக்கு மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் 6,000 பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பாதுகாப்பான, விரைவான பயணம் மேற்கொள்ள வசதியாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கிடையே, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு படிப்படியாக மாற்றப்பட்டன. தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளும் கடந்த ஜன.24-ம் தேதி முதல் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டன. இதன்காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரில் 6 ஆயிரம் பேர் வரை சரிந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோ ரயில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 84.63 லட்சமாக இருந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாத பயணிகளின் எண்ணிக்கை 6,000 குறைந்துள்ளது. "நாங்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காணவில்லை. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் செல்ல எந்த வசதியும் இல்லை. இதை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1,000 அரசு பேருந்துகளும், 600 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்துக்கு சென்னையில் இருந்து செல்ல போதிய இணைப்பு வாகன வசதி இல்லை. மேலும், மெட்ரோ ரயில்களில் செல்ல இன்னும் இணைப்பு ஏற்படுத்தவிடவில்லை. இதற்கு முக்கியக்காரணம் சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் செல்லும் வசதி கிடைக்கும். எனவே, விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
செங்குன்றம் | 6 வழிச்சாலை பணி நிறைவடையாமல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் கட்சியினர் 130 பேர் கைது
செய்திப்பிரிவு
செங்குன்றம்
2024-02-07 06:13:00
செங்குன்றம்: சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், 6 வழிச்சாலை பணி முழுமை பெறாமல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னையில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்ல கூடிய முக்கிய சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இச்சாலை, சென்னை - மாதவரம், திருவள்ளூர் மாவட்டம் - செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. மாதவரம் முதல் ஆந்திர மாநிலம்- தடா வரையில் சுமார் 43 கி.மீ. தூரத்துக்கு புனரமைத்து இச்சாலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, இந்தசாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் செங்குன்றம் அருகே நல்லூர் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 2009-ம் ஆண்டு மாதவரம் முதல் தடா வரை 6 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அச்சாலை பணி முழுமை பெறாமல் நல்லூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சூழலில், 6 வழிச்சாலை பணி முழுமை பெறாமல் கட்டணம்வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச் சாவடி முற்றுகை போராட்டம் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், இ.மோகனா, சி.பெருமாள், ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சுங்கச் சாவடியை முற்றுகையிட்டனர். அதுமட்டுமல்லாமல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 130 பேரை சோழவரம் போலீஸார் கைது செய்து, காரனோடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனர்.
அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 06:12:00
சென்னை: தமிழகத்தில் `என் மண், என்மக்கள்' யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரக்கோணத்தில் நேற்று நடைபயணத்தில்ஈடுபட்டார். ஏற்ெகனவே திட்டமிட்டபடி, ஓய்வெடுப்பதற்காக நடைபயணம் இன்று ஒருநாள்ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தேசிய தலைவர்களை சந்தித்து, தேமுதிக, பாமகவுடன் நீடிக்கும்கூட்டணி இழுபறி, அதிமுகவைகூட்டணியில் இணைப்பதற்கான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தமிழகத்தில்பாஜக சார்பில் போட்டியிட தேர்வு செய்துள்ளோரின் பட்டியலைதலைமையிடம் கொடுத்து, ஆலோசனை பெறவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு: அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி நிறைவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 06:10:00
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. ஒரு நூற்றாண்டு கடந்த இந்த நிலையத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பிறகு, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், இந்தப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, இங்கு அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 100 சதவீதமும், அடித்தளம் அமைக்கும் பணி 80 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 85 சதவீதமும், அடித்தளப் பணி 33 சதவீதமும் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை பக்கத்தில் பார்சல் அலுவலகம் அமைக்கும் பணியில், 75 சதவீத அடிக்கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காந்தி இர்வின் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.பார்சல் அலுவலகத்தை புதிய இடத்துக்கு மாற்றும் பணியும் நடைபெறுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி - இர்வின் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் அமைக்கும்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பூமிக்கு அடியில் பல அடிஆழத்தில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. எழும்பூர் காந்தி இர்வின் சாலையை ஒட்டி, எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வடபழனி சாலையில் தனியாக கழன்று ஓடிய ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர்: ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் காயம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 06:06:00
சென்னை: ஆம்னி பேருந்தின் டயர் சாலையில் கழன்று தனியாக ஓடி ஆட்டோ மீது மோதியதில் அதன் ஓட்டுநர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தஞ்சாவூரிலிருந்து கோயம்பேடு நோக்கி ஆம்னி பேருந்துஒன்று சென்றது. இந்த பேருந்தை தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் கென்னடி (57) என்பவர் ஓட்டினார். வடபழனி 100 அடி சாலை அம்பிகா எம்பயர் ஓட்டல் அருகே சென்றபோது, ஆம்னி பேருந்தில் பின்னால் உள்ள இடது பக்கஆக்சில் உடைந்து டயர் தனியாகக் கழன்று சாலையில் ஓடி, அங்கிருந்த ஆட்டோ மீது மோதியது. சினிமா பாணியில் நடைபெற்ற, இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வடபழனி பக்தவச்சலம் காலனி 1-வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (52) என்பவரது இரு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டது. மேலும், ஆட்டோவின் இடது பக்கம் முழுவதும் சேதமடைந்தது. சாலை நடுவே ஆம்னி பேருந்து நின்றுவிட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார்சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த ராஜேந்திரனை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சாலையில் நின்றபேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றினர். இந்த சம்பவத்தால் வடபழனி 100 அடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 06:04:00
சென்னை: அவுட்சோர்சிங் நடைமுறையை விடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் நேற்று போராட்டம் நடத்தியது. அவுட்சோர்சிங் நடைமுறையை கைவிட வேண்டும். அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று சைதாப்பேட்டையில், ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமைதாங்கினார். தமிழ்நாடு வளர்ச்சி பணிஅலுவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கென்னடி பூபாலராயன்போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பாரி, பொருளாளர் கே.பாஸ்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ராதா நகர் சுரங்கப்பாதை மே மாதம் பயன்பாட்டுக்கு வரும்: பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தகவல்
செய்திப்பிரிவு
குரோம்பேட்டை
2024-02-07 06:02:00
குரோம்பேட்டை: குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்ததையடுத்து கடந்த 2007-ல் சுரங்கப்பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில்ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 2019-ம்ஆண்டு ஜூன் மாதத்தில், ரூ. 15.47 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடங்கின. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. சுரங்கப்பாதை மையப்பகுதியில் நடைமேம்பாலத்தில் துாண்கள் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. மேற்கு பகுதியில்20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள், இப்பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். இந்த சுரங்கப்பாதை இருவழிப்பாதை கொண்டது. இதற்கு ஏற்றார் போல் வரைப்படம்தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பணிகளை வேகப்படுத்தி மே மாதம் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் முடிந்தவுடன் வைஷ்ணவா ரயில்வே கேட்டில் ரூ.30 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக முதல்வர், அமைச்சருக்கு எதிரான வழக்கை வாபஸ் கோரும் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 05:45:00
சென்னை: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரை முருகனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோரும் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி அது தொடர்பான அரசின்உத்தரவை ஏற்கெனவே ரத்துசெய்து உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிராக உள்ள இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை. முறைகேடு புகார் தொடர்பாக வெளிப்படையான புலன் விசாரணை நடத்தி அதில் முடிவு காண அனுமதிக்க வேண்டுமேயன்றி, விசாரணையை கைவிட முடியாது. எனவே தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒரு வழக்கை திரும்பப் பெறுவது என்பது அரசின் முடிவு. இதில் தலையீடு செய்ய முடியாது. இடையீட்டு மனுதாரருக்கு வேறு மாற்று நிவாரண வழிகள் உள்ளன என்றார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் ஜெயவர்தன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை ஏற்கக்கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
அதிமுக உள்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 05:40:00
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தசூரியமூர்த்தி, கடந்த 2021-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சி விதிகளின்படி அனைத்து அடிப்படைஉறுப்பினர்களும் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், உள்கட்சி தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, அதிமுகவில் உள்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி, ‘‘அதிமுகவில் உள்கட்சி தேர்தல் முறையாகநடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் தேர்தல் நடைபெற்றதால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்’’ என்றார். சின்னம் குறித்து தலையிடலாம்: தேர்தல் ஆணையம் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன்ராஜகோபாலன், ‘‘அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் தேர்தல்ஆணையம் தலையிட முடியாது. சின்னம் தொடர்பான விவகாரத்தில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும்’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை. மேலும், உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் இதில் தலையிட்டு மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடலாம்’’ என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டி மனுவை வாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது: உயர் நீதிமன்றம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 05:20:00
சென்னை: ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டிவாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர் மீது நடவடிக்கை எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதுதாமாக முன்வந்து வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார். சென்னை ஆவடி சிறப்பு காவல்படை பட்டாலியனில் சார்புஆய்வாளராக பணிபுரியும் எஸ்.ராஜா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழக காவல்துறையில் 2002-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலராக பணியில் சேர்ந்தேன். 6-வதுஊதியக்குழு பரிந்துரையின் பேரில் எனக்கு கூடுதலாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ரூ.56,363-ஐ பிடித்தம்செய்ய 13-வது பட்டாலியன் கமாண்டன்ட் உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னுடன் பணியில்சேர்ந்த பிரகாசம் என்ற போலீஸ்காரருக்கு அதே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, ஊதியத்தை பிடித்தம் செய்ய கமாண்டன்ட் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவேவிசாரித்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத், 2 பேருக்கு 2 விதமான ஊதியம் நிர்ணயித்தது எப்படி என்பதை கமாண்டன்ட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘‘வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனுதாரரை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். எனவே, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்’’ எனகோரிக்கை விடுத்தார். அப்போதுஆவடி சிறப்பு காவல் படைகமாண்டன்ட் அய்யாசாமியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அதையடுத்து நீதிபதி, ‘‘ஒரேநேரத்தில் பணியில் சேர்ந்த 2போலீஸ்காரர்களுக்கு எப்படிவெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. எதற்காக மனுதாரரின்ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை விளக்கத்தான் கமாண்டன்ட் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்காக வழக்கு தொடர்ந்தவரை மிரட்டிவழக்கை வாபஸ் பெற வைப்பதா? ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடரஅவருக்கு உரிமை இல்லையா?2012 முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திடீரென இந்தவழக்கை வாபஸ் பெறுகிறேன் என மனுதாரர் தரப்பில் கூறினால்என்ன அர்த்தம். இது துரதிருஷ்டவசமானது’’ என கருத்து தெரிவித்தார். அப்போது கமாண்டன்ட் தரப்பில், யாரையும் மிரட்டவில்லை என பதில் அளிக்கப்பட்டது, அதையேற்காத நீதிபதி, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு இடையூறு செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குதொடரப்படும் என எச்சரித்தார். மேலும், மனுதாரரும் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என கூறிவழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-07 04:51:00
சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல், வருமான வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாரியாக ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ, முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். பகல் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த அவர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து பேசினர். தொடர்ந்து, தேர்தல் துறையின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிற்பகல் 2.30 மணி அளவில் தேர்தல் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். இதில், தமிழக காவல் துறை சார்பில், தேர்தலுக்கான பொறுப்பு அதிகாரிகள், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன், ஐ.ஜி.க்கள் ரூபேஷ்குமார் மீனா (விரிவாக்கம்), செந்தில்குமார் (பொது), போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் அரவிந்த், தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர். வருமான வரி, வருவாய் புலனாய்வு, சுங்கத் துறை, மத்திய ரிசர்வ் படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பங்கேற்றனர். தேர்தல் நேரத்தில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் கடத்தல், பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டம் 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காலை முதல் மாலை வரை, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். இதில் சத்யபிரத சாஹு உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மதுரை பனகல் சாலைக்கே விமோசனம் இல்லையா? - ஓராண்டாக உருக்குலைந்து காணப்படுவதால் திண்டாட்டம்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-07 04:10:00
மதுரை: மதுரையில் ஆட்சியர், முதல் அமைச்சர்கள் வரை தினமும் சென்று வரும் கோரிப்பாளையம் பனகல் சாலை கடந்த ஓராண்டாக உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் நோயாளிகள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் அவதி தொடர்கிறது. மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடைப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இதனால் அனைத்து சாலை களும் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மாற்று சாலையை பயன்படுத்தக்கூட வழியின்றி நகர்வாசிகள் திணறி வரு கின்றனர். கிட்டத்தட்ட நகரின் அனைத்து சாலைகளின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலை இதற்கு சிறந்த உதாரணம். ஆட்சியர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அன்றாடம் பயணிக்கும் இந்த சாலையே இவ்வளவு மோசமாக இருக்கும் எனில் மற்ற சாலைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதிகாரிகள் நினைத்தால் ஒரேநாளில் சாலையை சீரமைத்து விடலாம். தமிழகத்தில் வேறு எங்கும் ஆட்சியர் அலுவலகம் அருகே முக்கியமான சாலை இவ்வளவு மோசமாக இருப்பதை பார்க்க முடியாது. கண்கண்ட சாட்சியாக உருக்குலைந்து காணப்படும் பனகல் சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏன் உத்தரவிடவில்லை. இவர்கள் எப்படி நகரில் சேதமடைந்துள்ள மற்ற சாலைகளை சீரமைப்பர் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அலுவலக கோப்புகளில் கையெழுத்தி டுவது, அரசு ஆலோசனைக் கூட்டங்கள், அரசு விழாக்களில் பங்கேற்பதோடு மட்டும் ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கடமை முடிந்து விடுவதில்லை. மக்களின் அன்றாட பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தீர்வுகாண முயற்சிப்பதே அவர்களின் முக்கிய கடமையாகும். இந்த பனகல் சாலை கோரிப்பாளையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலக சந்திப்பு வரை மாநகராட்சி சாலையாக உள்ளது. ஆட்சியர் அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையும் மிக மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் நோயாளிகள் படும் சிரமம் சொல்லி மாளாது. சில நேரங்களில் முன்னால் செல்லும் வாகனங்கள் திடீர் பிரேக் போடும் போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்துகளில் காயமடைந்து ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படும் நோயாளிகளையும் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மருத்துவமனையில் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர், பணியாளர்கள் பனகல் சாலை போக்குவரத்து நெரிசலை கடந்து சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியவில்லை. அதனால் இந்த சாலையில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ஆய்வு
செய்திப்பிரிவு
புதுக்கோட்டை
2024-02-07 04:08:00
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழக இயக்குநர் எஸ்.ரவிவர்மன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேங்கை வயல் விவகாரம் தொடர்பான வழக்கின் போக்கு திசை மாறியுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர். ஒரு குவளை தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தால் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்துவது எளிது. ஆனால், 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைக் கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சேகரிக்கப் பட்ட மாதிரியானது, டிஎன்ஏ சோதனைக்கு உகந்தது அல்ல. எனவே, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது சரியான நடவடிக்கையாக இருக்கும். அதே சமயம், பட்டியலின மக்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளும் தமிழக போலீஸாரை குற்றம் சுமத்த முடியாது. வாக்கு வங்கி அரசியலின் தலையீடு இருக்கும் என்றும் கூற முடியாது. இது போன்ற தீண்டாமை சம்பவம் நடைபெறாமல் இருக்க சட்டத்தின் மூலமாக ஓரளவு தான் நடவடிக்கைகளை எடுக்கலாம். மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணிக்காக பேரம் பேசும் அரசியல் அனைத்து பக்கமும் நடக்கிறது: மார்க்சிஸ்ட் விமர்சனம்
செய்திப்பிரிவு
விழுப்புரம்
2024-02-07 04:06:00
விழுப்புரம்: சுதந்திர போராட்ட வீரரும், கம்யூ னிஸ்ட் இயக்கத் தலைவருமான சங்கரய்யா படத்திறப்பு விழா விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு படத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் பணியை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி முறியடிக்கும். பிரதமர் மோடி மக்களவையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதைப் போல் பேசியிருக்கிறார். ‘300, 400 இடங்களைபிடிப்போம்' என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள இடத்தையும் அவர் விட்டுவிட்டார். தமிழகத்தில் அவர்கள் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது. சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்ட போது தமிழக அரசு ரூ.37,000 கோடி நிவாரண நிதி கேட்டது. அமித்ஷா, ‘உடனடியாக வழங்குவோம்' என்று தெரிவித்ததோடு சரி, ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற, உதவி செய்ய நேரம் ஒதுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. யாராவது வருவார்களா என்று அதிமுக-வினர் கடை விரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணியைப் பிரிக்கலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித் தாலும் முறியடிப்போம். கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் கூடுதல் இடம் கேட்டிருக் கிறோம். தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளோம். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரும் என்று கூறுகின்றனர். எப்போது தேர்தல் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மாநிலங்களுக்கான உரிமையை பாதுகாக்க, மோடி அரசை கண்டித்து கேரள முதல்வர் தலைமையில் டெல்லியில் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகள் பங்கேற்கின்றன. கூட்டணிக்காக அனைத்து பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவை எதிர்ப்பவர் களை வருமான வரித் துறையை வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தேர்தல் ஆணைய கமிஷன் அமைக்கும் முறையை மோடி அரசு மாற்றியுள்ளது. 90 சதவீத நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சீட்டு முறைதான் உள்ளது என்று தெரிவித்தார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ராம மூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறும் ஓபிஎஸ் யாரை ஏமாற்ற நினைக்கிறார்?” - கே.பி.முனுசாமி
செய்திப்பிரிவு
சேலம்
2024-02-07 04:04:00
சேலம்: மக்களவைத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகக் கூறும் ஓபிஎஸ், யாரை ஏமாற்ற நினைக்கிறார் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக எஸ்டி பிரிவு மாநில செயலாளர் பாபண்ணா, தளி தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர், அவரவர் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நேற்று சேலம் வந்தனர். அவர்கள் சேலம் நெடுஞ் சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து, தங்களை அதிமுக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக-வினர் பலர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அரசியலில் அனுபவம் கொண்டவர். நிச்சயமாக அவர் கூறியது போல அவர் மெகா கூட்டணி அமைப்பார். தேர்தலில் வெற்றியும் பெறுவார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து, ஊடகங்களுக்கு தேவையான தகவலை மட்டும் கூறுவோம். மற்றவற்றை நடவடிக்கை வாயிலாக வெளிப்படுத்துவோம். ஓபிஎஸ், 2 முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதாவின் கருணையால் இந்த இடத்துக்கு வந்தவர். அப்படியிருந்தும் கூட, சொந்த புத்தியில் கருத்து சொல்கிறார். உச்ச நீதிமன்றம் தொடங்கி, அனைத்து நீதிமன்றங்களும் பழனிசாமி தான் அதிமுக பொதுச் செயலாளர், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டன. இதன் பின்னரும், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறும் ஓபிஎஸ், யாரை ஏமாற்ற நினைக்கிறார், என்றார்.
தண்டவாளத்தை கடக்க தவிக்கும் ராட்டின கிணறு மக்கள்: 7 ஆண்டாக கிடப்பில் கிடக்கும் சுரங்கப்பாதை பணி
பெ.ஜேம்ஸ்குமார்
செங்கல்பட்டு
2024-02-07 03:30:00
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராட்டின கிணறு பகுதியில் அமைந்துள்ள செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வழித்தடத்தில், கடவுப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இது அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ரயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல மேம்பாலமும் மற்றும் பாதசாரிகள் கடந்துசெல்ல சுரங்கப் பாதையும் கட்ட 2012-ம்ஆண்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்நிலையில், சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு 2017-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 60 சதவீதம் பணிகளை ரயில்வே நிர்வாகம் முடித்தது. இன்னும் முக்கிய பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கவில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் தரப்பில் பணிகளை தொடங்காமல் உள்ளனர். இதன் காரணமாக மேலமையூர், வல்லம், அம்மணம்பாக்கம், பட்ரவாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தண்டவாளத்தை கடந்து தினமும் சென்று வருகின்றனர். சுரங்கப்பாதை பணி முடியாததால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர், வேலைக்குசெல்வோர் தண்டவாளத்தை கடந்து, ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் இரு சர்வீஸ் சாலைகளையும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சுரங்கப் பாதையை சீரமைத்து வாகனங்கள் சென்று வரநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ௮ண்மையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை எனில், போராட்டம் நடத்தப்படும் என ௮க்கட்சியினர் எச்சரித்துள்ளனர். ஆனால் இது சாத்தியம் இல்லை என்றும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே சுரங்கப்பாதை கட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முனிசெல்வம் கூறியது: சுரங்கப்பாதை என்பது எங்களுடைய பகுதிக்கு அவசியமான தேவையாக உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணி முடியாததால், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வல்லம், தேனூர், பட்டரைவாக்கம், குன்னவாக்கம், அம்மணம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், ஆபத்தான முறையில் தினசரி ரயில் தண்டவாளத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர். சிலர், 5 கிமீ துாரம் சுற்றி சென்று ரயில்வே மேம்பாலத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர். மேலும், சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. கிடப்பில் போட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இது குறித்து பலமுறை எம்.பி., அமைச்சரிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை, இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது: முதலில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிலம் ஆர்ஜிதம் செய்வதில் நிதி அதிகம் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ரயில்வே தண்டவாளத்துக்கு இடையே மறைமலை நகர் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே சுரங்கப் பாதை பணி தொடர்ந்து நடைபெறும். இந்த குழாயை மாற்றியமைப்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் குடிநீர் வாரியத்துக்கு ரூ.25 லட்சம் செலுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் இந்த பணி தொடங்கப்படும். குடிநீர் குழாயை மாற்றியமைத்தால் மட்டுமே ரயில்வே நிர்வாகம்பணியை தொடங்கும். தற்போது வரைரயில்வே நிர்வாகம், 37 மீட்டர் வரை பணியைமுடித்து விட்டனர். இன்னும், 23 மீட்டர் மீதம்உள்ளது. மேலும், ரூ.1.5 கோடி மதிப்பீட்டில்நெடுஞ்சாலைத்துறை தன்னுடைய பணியை தொடங்கும் என்றனர்.
கொங்கு மண்டல ரயில் வசதிகளுக்கு கோரிக்கை: மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு
ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
2024-02-06 23:07:00
புதுடெல்லி: கொங்கு மண்டலப் பகுதிக்காக பல்வேறு தடங்களில் ரயில் வசதிகள் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, பாஜகவின் மகளிர் அணிப் பிரிவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான வானதி, தனது மனுவில் குறிப்பிட்ட முக்கிய சாரம்சம் பின்வருமாறு: கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். இதற்காக பொதுமக்களிடம் இருந்து மிக அதிகமாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. எனவே, கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் பிறகு புறப்புடும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன்மூலம், கோவை மேற்குப்பகுதி வாசிகள், கேரளாவுடன் இணைந்திருக்க வசதியாக இருக்கும். இந்த இணைப்பு பட்டியலில் கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், மற்றும் பாலக்காடு ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன. மேலும், எட்டு வரிசைகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலால், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையிலான சுற்றுலாத் தடமும் பெருகும். தற்போது கோவை - திருவனந்தபுரத்திற்கு இடையே அன்றாடம் பல அரசு பேருந்துகளுடன் 82 தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்று வருகின்றன. இதன் பயணிகளை மத்திய ரயில்வே துறையின் வந்தே பாரத் தன்பக்கம் கவரும் வாய்ப்புகளும் உள்ளன. கோவை - பெங்களூரு தடத்தில் கடந்த ஜனவரி 1 முதல் வந்தே பாரத் இயக்கப்பட்டது. இதற்காக, மேற்குப்பகுதி வாசிகள் மத்திய அரசிற்கு தம் நன்றிகளை தெரிவிக்கின்றனர். எனினும், இந்த ரயில் கோவையிலிருந்து புறப்படும் நேரம் 5.00 மணி என்பதை ஒரு மணி நேரம் தாமதாக 6.00 மணி என மாற்ற வேண்டும். ஏனெனில், இந்த விடியல் நேரத்தில் வந்தே பாரத்தை பிடிப்பது அதன் பயணிகளுக்கு சிரமாக உள்ளது. இந்த ரயிலின் பயணமானது, மொத்தம் 6 மணி நேரமாக உள்ளது. ஆனால், இதற்கான ரயில்வே அட்டவணையில் 6 மணி 30 நிமிடங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்த ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இவை 2009-ல் சுமார் 13 வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. எனத் தெரிவித்துள்ளார். பாஜக-வின் முக்கிய பொறுப்பில் உள்ள வானதியின் கோரிக்கை மனுவை பொறுமையாக படித்துப் பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதி அளித்துள்ளார்.
கெலவரப்பள்ளி அணை நீர்த் தேக்க பகுதியில் பட்டப்பகலில் மண் திருட்டு - விவசாயிகள் புகார்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-06 21:46:00
ஓசூர்: கெலவரப்பள்ளி அணையில் நீர் தேக்கப்பகுதியில் பட்டப்பகலில் நடக்கும் மண் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைப்பு பணிக்காக அணையிலிருந்து மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு கடந்த 6 மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர் தேக்க பகுதியில் தண்ணீரியின்றி வறண்டு மேய்சல் நிலமாக உள்ளது. இந்நிலையில், நீர் தேக்க பகுதியின் பக்கவாட்டில் சிலர் இரவு பகலாக பொக்லைன் மூலம் வண்டல் மண்ணை அகற்றிவிட்டு 10 முதல் 15 அடி அழத்தில் உள்ள மணல் மற்றும் நொரம்பு மண்களை வெட்டி எடுத்து செங்கல் சூளைகளுக்கும், வீட்டுமனை நிலங்களை சமம் செய்வதற்கும் கொண்டு செல்கின்றனர். இது போன்று சட்டவிரோதமாக மண் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, “கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைப்புகாக மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டு தண்ணீரியின்றி வறண்டுள்ளதை பயன்படுத்தி சிலர் மேலே உள்ள வண்டல் மண்களை அகற்றிவிட்டு, அதற்குள் இருக்கும் மணல் மற்றும் நொரம்பு மண்களை பொக்லைன் மூலம் வெட்டி டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியில் கொண்டு செல்கின்றனர். இது குறித்து மண் வெட்டி கடத்துபவர்களிடம் கேட்டால் ஆவலப்பள்ளிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு அமைச்சர் வர உள்ளதால் பழுதான சாலையில் மண் கொட்டி சமம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அணை பகுதியில் மண் எடுத்து அதனை டிராக்டர் மூலம் கொண்டு சென்று சமம் செய்யும் பணி பெயரளவுக்கு நடக்கிறது. இதனை பயன்படுத்தி டிப்பரில் மண் எங்கே கொண்டு செல்கிறார்கள் என தெரியவில்லை, சட்டவவிரோத மண் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர். இது குறித்து கெலவரப்பள்ளி விஏஓ வெங்கடேஷ்யிடம் கேட்ட போது, “அப்படி எதுவும் எனக்கு தெரியாது. அந்த இடம் சென்னசந்திரம் விஏஓவிற்கு சேருகிறது. அவரிடம் கேளுங்கள்” என கூறினார். இதனையடுத்து சென்னசந்திரம் விஏஒ முருகனிடம் கேட்ட போது, “அந்த எல்லை எனக்கு வருவதில்லை, ஆவலப்பள்ளிக்கு வருகிறது. மண் எடுப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறினார். இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மண் எடுக்க இது வரை அனுமதி அளிக்கவில்லை. ஆனால் எனக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனுதி அளித்துள்ளனரா என தெரியவில்லை” என கூறினார். அணைப்பகுதியில் பட்டம் பகலில் மண் வெட்டி கடத்தி செல்வது குறித்து அதிகாரிகள் கண்டும் காணமல் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மத, சாதிப் பிரச்சினையைத் தூண்டி, அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” - கனிமொழி @ குமரி
எல்.மோகன்
நாகர்கோவில்
2024-02-06 21:18:00
நாகர்கோவில்: “ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோயிலில் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய என 6 திமுக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் பரிந்துரையை கோரிக்கைகளை வழங்கினர். குமரி மாவட்ட கோதையாறு பாசன திட்டக்குழு தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, தேவதாஸ் உட்பட திரளானோர் கனிமொழி எம்பியிடம் அளித்த கோரிக்கை மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர் நாடியான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் தூர்வாரப்படாமலே கிடக்கின்றன. இதனால் நீர்பிடிப்பு தன்மை குறைந்துள்ளது. எனவே இந்த அணைகளை முழுமையாக தூர்வாரி புனரமைக்க வேண்டும். கடல் நீர் உட்புகுவதை தடுத்து, நீர்நிலைகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, கடற்கரையோர ஏவிஎம் சானலை புனரமைத்து படகு போக்குவரத்து ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 4500 குளங்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்க வேண்டும். கேரளாவை போன்று அரசே தேங்காயை கொள்முதல் செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து அவற்றை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசியது: “இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல மக்களைப் பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து மக்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. மக்கள் சந்திக்கக் கூடிய அன்றாட பிரச்சினைகளான வேலைவாய்ப்பு பிரச்சினை, விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது, மீனவர்களுடைய உரிமைகளை ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுவது ஆகியவை மறக்கடிக்கப்பட்டு, மதக் கலவரத்தையோ, சாதிப் பிரச்சினையையோ தூண்டி, அதில் அரசியல் செய்யலாம் என நினைக்கிறது பாஜக. இதனை சரியாக புரிந்துகொண்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த அமைக்கப்பட்டதுதான் இந்த தேர்தல் குழு. மத்தியில் ஆட்சி நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்துக்கான உழைப்பை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்றார். நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், திமுக மகளிரணி செயலாளரும்,முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் பாமக பொருளாளர் உள்பட 21 பேர் விடுதலை
அ.கோபால கிருஷ்ணன்
ஸ்ரீவில்லிபுத்தூர்
2024-02-06 20:48:00
ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்பட 21 பேரை விடுதலை செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அய்யனார் காலணி, கவிதா நகர் பகுதி மக்கள் 3 முறை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2017 மே 5-ம் தேதி பாமக மாநில துணை தலைவர் திலகபாமா தலைமையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, மதுபாட்டில்களை உடைத்து கடைக்கு தீ வைக்கப்பட்டது. இது குறித்து அரசு சொத்தை சேதப்படுத்தியதாக திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் 14 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது பாமக மாநில பொருளாளராக உள்ள திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்பட 21 பேரை விடுதலை செய்து நீதிபதி ஜெயகுமார் உத்தரவிட்டார்.
“திமுகவினரின் மருத்துவக் கல்லூரிகளில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட் தருவார்களா?” - அண்ணாமலை
இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை
2024-02-06 20:07:00
திருவண்ணாமலை: “திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் திமுக தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட் கொடுத்தால் நீட் தேர்வு வேண்டாம் என நானும் சொல்கிறேன்” என தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று (பிப். 5) இரவு நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தர் அவர்களால் பாடல் பெற்ற திருத்தலம் செய்யாறு வேதபுரீஸ்வரர் திருகோயில். பிற கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சூரிய வெளிச்சம் விழும். ஆனால், வேதபுரீஸ்வரர் கோயிலில் தினசரி சூரிய வெளிச்சம் விழக்கூடிய பிரசித்த பெற்ற கோயில். கருடன் பூஜை செய்ததால் பட்டீஸ்வரர் ஆலயமும் உள்ளன. ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டி, உலக புகழ்பெற்றதாகும். மக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீட்டை பிரதமர் மோடி கடந்தாண்டு வழங்கி உள்ளார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, ஆசையை தூண்ட வேண்டும் என்ற வசனம் வரும். அதுபோல் மக்களிடம் ஆசையை தூண்டிவிட்டு, திமுக அரசு ஏமாற்றுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் கல்லூரி கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, கல்வி கடனை தள்ளுபடி செய்தால் ரூ.16,500 கோடியை தமிழக அரசு கொடுக்க வேண்டும். அரசாங்கத்திடம் ரூ.2 கோடி பணமில்லை. கடன் வாங்கி ஆட்சி நடத்துகின்றனர். ரூ.8.23 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.69 கோடி கடனை திமுக அரசு வாங்கி உள்ளது. செய்வதற்கு பணமும் இல்லை, மனமும் இல்லை என்பதை தெரிந்தே, மக்களின் ஆசையை தூண்டி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில், இதே வாக்குறுதியை அளித்துள்ளனர். ஒரே வாக்குறுதியை இரண்டு முறை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் , 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஏமாற்றி உள்ளனர். ஏழை மாணவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு மட்டுமே சாத்தியம் என நமக்கு தெரியும். 2-வது முறையாக ஓரே பொய்யை 2 முறை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். நீர் தேர்வை ரத்து செய்வதாக கூறி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி சேலம் திமுக இளைஞரனி மாநாட்டில் குப்பையில் போட்டுள்ளனர். செய்யாறு விவசாயி மகன் கவிபிரியா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கல்வியில் மூலமாக முன்னேற வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். எளிதாக எதுவும் கிடைக்காது. கடின உழைப்பை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும், காலமும் நமக்கு இருக்கிறது. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அமைச்சர்களில் கே.என்.நேரு பிளஸ் 2, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் 8-ம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தோல்வி, அன்பரசன் பிளஸ் 1, அனிதா ராதாகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு, சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பிளஸ் 2, காந்தி பத்தாம் வகுப்பு, மூர்த்தி பிளஸ் 2, சேகர் பாபு பத்தாம் வகுப்பு, செஞ்சி மஸ்தான் 8-ம் வகுப்பு படித்துள்ளனர். குறைவாக படித்துள்ளதை தவறாக பேசவில்லை. குறைவாக படித்த மேதைகள் உள்ளனர். படிப்பை பற்றி தெரியாதவர்கள் எதற்காக நீட் தேர்வை பற்றி பேச வேண்டும் என்பதை குறையாக பேச வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த கல்லூரிக்கு சென்றார், எந்த கல்லூரியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார் என யாருக்கும் தெரியாது. அரசியலில் தூய்மை, நேர்மை என்றால் என்வென்று தெரியாதவர்கள் நீட்டை எதிர்த்து பேசுகின்றனர். திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரியில் திமுக தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக மருத்துவ படிப்பை கொடுப்போம் என சொல்லுங்கள், நானும் நீட் தேர்வு வேண்டாம் என சொல்கிறேன். இவர்களது கல்லூரிகளில் ஒரு இடத்தை ரூ.1 கோடி, ரூ.2 கோடிக்கு விற்க வேண்டும் என்பதற்காக நீட் வேண்டாம், நீட் ஒழிப்பு, நீட் எதிர்ப்பு என்ற நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர். உயர் நீதிமன்றத்தில் முறையீடு: செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு விளை நிலங்களை கொடுக்க முடியாது என கூறி 200 நாட்களுக்கு மேலாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 1947-க்கு பிறகு, இந்திய வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட முதல் அரசு, திமுக அரசு. பாஜக தெரிவித்த கண்டனத்தை தொடர்ந்து குண்டர் சட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார். விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளை நீக்க, உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்யும் என்ற வாக்குறுதியை என் மண், என் மக்கள் யாத்திரையில் உறுதி அளிக்கின்றோம். செய்யாறில் புதிய வேளாண்மை கல்லூரி தொடங்கவும் உத்தரவாதம் அளிக்கிறோம். 2024-ல் பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி, 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும்” என்றார்.
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி @ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-06 18:40:00
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.இருவரும் வரும் பிப்ரவரி 9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் “பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்" என்று வாதிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், “எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டிஎஸ்பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில், ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும். வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே, போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர்” என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு செவ்வாயக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
26+ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: தமிழக அரசு உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 18:23:00
சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும் என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று ஆற்றிய உரையில், அண்ணாவின் 113-வது பிறந்த நாளான 15.9.2021 அன்று நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்திட இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஆயுள்தண்டனை பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களின் தண்டனைகளை குறைத்து, அவர்களை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட 11.1.2022 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, கடலூர் மத்திய சிறையிலிருந்து 4 கைதிகளும், கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும், என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவிகாபுரத்தை புறக்கணித்த அண்ணாமலை: ராட்சத மாலையுடன் காத்திருந்த பாஜகவினர் ஏமாற்றம்
செய்திப்பிரிவு
திருவண்ணாமலை
2024-02-06 17:41:00
திருவண்ணாமலை: தேவிகாபுரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புறக்கணித்ததால், அவரை வரவேற்க ராட்சத மாலையுடன் காத்திருந்த பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் ஆரணியில் நேற்று முன்தினம் மாலை மேற்கொண்டார். போளூரில் இருந்து தேவிகாபுரம் வழியாக ஆரணி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட மாலையுடன் பாஜகவினர் வரவேற்க காத்திருந்தனர். அண்ணாமலையை வரவேற்று சாலையில் இருபுறங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்ட மாலையை எளிதாக தூக்க முடியாது என்பதால் ‘பொக்லைன்’ இயந்திரத்தில் மாலை கொண்டு வரப்பட்டன. இதேபோல், பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், போளூரில் யாத்திரையை முடித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேவிகாபுரம் வழியாக செல்லாமல் மாற்று வழித்தடத்தில் ஆரணிக்கு சென்றுவிட்டார். இதனால், தேவிகாபுரத்தில் ராட்சத மாலையுடன் காத்திருந்த பாஜகவினர் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர். அண்ணாமலையை வரவேற்க டிஜிட்டர் பேனர் மற்றும் மாலையுடன் காத்திருந்த தொண்டர்களின் பணம் விரையமானது. இதனால், அவர்கள் விரக்தி அடைந்தனர். காலநேரம் கருதி, தேவிகாபுரம் வழியாக செல்ல முடியாத நிலை அண்ணாமலைக்கு ஏற்பட்டதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேவிகாபுரத்தில் வரவேற்பு நிகழ்வு குறித்த பயணம் திட்டம் தொடர்பாக அண்ணாமலையின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது” - எல்.முருகன் பதிலடி @ டி.ஆர்.பாலு செயல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 17:33:00
சென்னை: "பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல" என்று தன்னைப் பார்த்து எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர் என பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு: “திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுகவைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூக நீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின்போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே ‘சமூக நீதி’ எனும் தேர்தல் அறிக்கை. பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது. சமூக நீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் திமுகவின் முகமூடியை, வருகின்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பார்த்து “நீங்கள் எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்” என்று திமுக எம்.பி. டிஆர் பாலு மக்களவையில் பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிமித்தமாக பாஜகவினர் மக்களவையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். | விரிவாக வாசிக்க > “குறுக்கிடாதீர்கள்... நீங்கள் தகுதியற்றவர்...” - எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலுவும், பாஜக கொந்தளிப்பும் @ மக்களவை இதனிடையே, “நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைப் பார்த்து ‘அன்ஃபிட்’ என்று கூறுகிறார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள், எல்.முருகனுடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். அதன் விவரம் > எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை காட்டம்
எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை காட்டம்
செய்திப்பிரிவு
ராணிப்பேட்டை
2024-02-06 16:43:00
ராணிப்பேட்டை: மத்திய இணை அமைச்சர் முருகனிடம், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, மத்திய இணை அமைச்சர் முருகனை, டி.ஆர்.பாலு கடுமையாக சாடியது கவனிக்கத்தக்கது. ராணிப்பேட்டையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ரொம்ப வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறைச் சார்ந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து அன்ஃபிட் என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார். ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இவ்வாறு கூறியிருக்கிறார். உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா? எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார். ஒட்டுமொத்த அருந்ததிய சமுதாயத்தை தவறாக பேசியுள்ளார். எனவே, இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் மூன்று பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவா சமூக நீதி? ஆனால், மத்திய பாஜக அரசில் மொத்தமுள்ள 75 பேரில் 12 பேர் பட்டியலின சமூகத்தினர், 8 பழங்குடியினர் என 20 பேர் அங்கம் வகிக்கிறார்கள். எது சமுக நீதி?" என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பார்த்து “நீங்கள் எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்” என்று திமுக எம்.பி. டிஆர் பாலு மக்களவையில் பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிமித்தமாக பாஜகவினர் மக்களவையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். > வாசிக்க > “குறுக்கிடாதீர்கள்... நீங்கள் தகுதியற்றவர்...” - எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலுவும், பாஜக கொந்தளிப்பும் @ மக்களவை
நகரம் என்ற வரையறைக்குள் இல்லாத நிலையில் வரி விதிப்புக்காக பேரூராட்சி அந்தஸ்து @ நீலகிரி
செய்திப்பிரிவு
உதகை
2024-02-06 15:32:00
உதகை: தமிழ்நாட்டிலுள்ள மிகச் சிறிய பின்தங்கிய மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்று. பழங்குடியினர் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 7 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாவட்டத்தில், 1996-ம் ஆண்டுக்கு முன்பு 31 பேரூராட்சிகள் இருந்தன. அந்த பேரூராட்சிகள் நலிவடைந்த நிலையில் இருந்ததால், 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி 11 பேரூராட்சிகளாக குறைக்கப்பட்டன. மீதமுள்ள பேரூராட்சிகள் இன்றுவரை ஊராட்சிகளாக இருந்து வருகின்றன. தற்போது, கேத்தி, சோலூர், ஜெகதளா, உலிக்கல், கோத்தகிரி, நடுவட்டம், தேவர்சோலை, பிக்கட்டி, கீழ்குந்தா, ஓவேலி, அதிகரட்டி ஆகிய 11 பேரூராட்சிகள் உள்ளன. போதுமான வருவாய் இன்றி இந்த 11 பேரூராட்சிகளும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. பேரூராட்சியாக இருப்பதற்கு தாலுகா தலைமை இடம், பதிவுத் துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை இருக்கும் பகுதியாகவோ, சிறப்புமிக்க நகரமாகவோ இருக்கலாம். வழிபாட்டு தலங்களாக இருக்கலாம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருக்கலாம். சந்தைகள், பேருந்து நிலையங்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை வளர்ந்து வருகிற நகரங்கள் என்ற வகையில், நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடைப்பட்ட உள்ளாட்சி அமைப்பாக, இந்தியாவிலேயே முதன்முதலாக பேரூராட்சிகளை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆனால், நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில் பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சிறு, குறு தேயிலை விவசாயிகள், மலை காய்கறி விவசாயிகள், விவசாயக் கூலிகள், தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்ற ஒரு மாவட்டம். இங்கு 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், இங்கு இருக்கக்கூடிய11 பேரூராட்சிகளும், அரசு வகுத்துள்ள நகரம் என்ற வரையறைக்குள்வரவில்லை. ஆனால், மக்கள்தொகையின் அடிப்படையிலேயே பேரூராட்சிகளாக உள்ளன என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த பேரூராட்சிகள் இன்று வரைக்கும் பேரூராட்சிகளாக இருப்பதற்கான காரணம், அந்த பேரூராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களின்பணி பாதுகாப்புக்காக மட்டுமே. மேலும்,10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் இருந்தால்தான், அங்கு பேரூராட்சிகளின் துணை இயக்குநர் அலுவலகம் அமையும் என்பதால், 11 பேரூராட்சிகள் அமையுமாறு பார்த்துக் கொண்டுள்ளனர் என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவரும், அதிகரட்டி பேரூராட்சி உறுப்பினருமான சு.மனோகரன் கூறும்போது, ஊராட்சிகளைவிட வீட்டு வரி, தொழில் வரி, விளம்பர வரி, குடிநீர் வரி, சொத்து வரி என்று அனைத்தும் பேரூராட்சிகளில் அதிகம். அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதி உதவியுடன் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தேசிய ரூபன் திட்டம், ஜல்சக்தி என்ற நீர் ஆற்றல் திட்டம், ஜல்ஜீவன் என்ற குடிநீர் திட்டம் உள்ளிட்டவை பேரூராட்சிகளில் இல்லை. 1999-ம் ஆண்டு அரசாணையின்படி, நலிவடைந்த பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற கூறிய அரசின் முடிவுக்கு செயல் அலுவலர்கள் ஒத்துழைக்காமல், அங்கிருந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறியாமையை பயன்படுத்தி, சில பேரூராட்சிகளில்தீர்மானம் நிறை வேற்றப் படாமலும், சிலவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு அனுப்பாமலும் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. பேரூராட்சிகளாக வைத்திருப்பதால் இங்கு வாழும் மக்களுடைய வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பெரும் வரிச்சுமைக்குமக்கள் ஆளாகி இருக்கின்றனர். வாழ்வாதாரம் இல்லாததால் கடன் சுமைக்கு ஆளா கின்றனர். ஆகவே, அரசு இதை கவனத்தில் கொண்டு, 11 பேரூராட்சிகளில் நலிவடைந்த பேரூராட்சிகள் எவை என்று கண்டறிந்து அவற்றை ஊராட்சிகளாக மாற்றுவதற்கான ஓர் அரசாணையை பிறப்பிக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளையும் சிற்றூராட்சிகளாக மாற்றி, மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம் தகவல் @ உயர் நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-06 15:11:00
சென்னை: அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது அதுபோன்ற நிலை அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நேரில் ஆஜராகி ‘உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் நடைபெற்றதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்’ என குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, அது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. சின்னம் தொடர்பான விவகாரத்தில்தான் தலையிட முடியும்’ என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை. உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என உத்தரவிட்டார். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வண்டலூர் பூங்கா தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்குமா? - 11 ஆண்டு கோரிக்கை மீது முதல்வர் கவனம் செலுத்த வேண்டுகோள்
பெ.ஜேம்ஸ்குமார்
வண்டலூர்
2024-02-06 15:02:00
வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் 11 ஆண்டுகால கோரிக்கை மீது அரசு தனி கவனம் செலுத்தவும், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில், 170 வகைகளை சேர்ந்த, 1,977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர். பூங்காவில், 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதத்துக்கு, 26 நாட்கள் பணி வழங்கப்பட்டு, தினசரி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படுவது நாடு முழுவதும் வழக்கமாக உள்ளது. அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களில், 10 ஆண்டுகள் முதல், 15 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு பணிநிரந்தம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழக அரசு பணிநிரந்தரம் வழங்க மறுத்திருப்பது மட்டுமின்றி, இனி எந்தக் காலத்திலும் அவர்கள் பணிநிரந்தரம் அல்லது பணிப் பாதுகாப்பு கோர முடியாத அளவுக்கு அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வண்டலூர் பூங்கா அடிப்படை பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், உழைப்போர் உரிமை இயக்க சங்கம் ஆகிய 3 சங்கங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென போராடி வருகின்றன. உழைப்போர் உரிமை இயக்க சங்கத்தின் மாநில செயலாளர் எ.கோபால் கூறியது: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பெண்கள் உட்பட, 192 பேர் தினக்கூலி பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூங்காவில், விலங்கு காப்பாளர், கழிவறை பராமரிப்பாளர், பூங்கா பராமரிப்பாளர், இரவு காவலர்கள் உட்பட, பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்கள், தங்களை ௮ரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், 192 தினக்கூலி தொழிலாளர்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்த 46 பேரை 2019-ம் ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பூங்கா நிர்வாகம் கருத்துரு அனுப்பியது. ஆனால் அரசு இதனை ஏற்கவில்லை. இதனிடையே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும், 2023-ம் ஆண்டு, 86 பேர் அடங்கிய பட்டியலை பூங்கா நிர்வாகம் கருத்துருவாக அனுப்பியது. மீண்டும் அரசு ஏற்கவில்லை. பூங்கா நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியும் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது தொழிலாளர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி ௮வர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி மக்களவை தேர்தலுக்கு முன் இதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பூங்கா ஊழியர்களின் சம்பள விவரம் கேட்கப்படுகிறது. ஆனால், இந்த விவரம் பூங்கா நிர்வாகத்திடம் இல்லை. காரணம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இவர்கள் பணிபுரிவதால் சம்பள விவர தகவல்கள் இல்லை. கடைசியாக, 1991-ம் ஆண்டு, 72 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதேபோல், 1995-ம் ஆண்டு 52 பேர், 1999-ம் ஆண்டு 44 பேர், 2007-ல் 23 பேர், 2010-ல் 20 பேர்,2013-ல் 14 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதன்பின், 11ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசு ஊழியராக இருந்தால் சம்பள உயர்வு கிடைக்கும். அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். ஒப்பந்த ஊழியராக இருந்தால் சம்பளம் மட்டும்தான் கிடைக்கும். அதுவும் தினம் ரூ.439 கிடைக்கும். பணிக்கு வரவில்லை எனில் அதுவும் இல்லை. பூங்கா தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய ஆவணங்கள் தயாரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், முதல்வர் தலையிட்டு பிரச்சினைக்குநிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், வண்டலூர் பூங்கா தலைவர் பி.கே.ராஜேந்திரன் கூறியது: வண்டலூர் பூங்காவில் விலங்கு காப்பாளர்கள், பூங்கா பராமரிப்பாளர்கள், கழிவறை பராமரிப்பாளர்கள், இரவு காவலர்கள் என மொத்தம் 159 நிரந்தர பணியிடங்கள் உள்ளன. இதில், 62 பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது,94 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்காலிக தொழிலாளர்கள், 10 ஆண்டு கடந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். பூங்கா நிர்வாகம் கருத்துரு அனுப்பியும் அரசு பணி நிரந்தரம் செய்வதில் காலதாமதம் செய்கிறது. இதில் பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதனால் முதல்வர் கவனத்தை ஈர்க்க வேண்டிய நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள், துறை அமைச்சர், துறை செயலாளர் ஆகியோரிடம் நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. புதிய பணியிடங்களை நாங்கள் கேட்கவில்லை. காலி பணியிடங்களை நிரப்பவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கிறோம். ஏழைத் தொழிலாளரின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
‘கிளாம்பாக்கத்தில் இருந்து ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை தேவை’ - மக்கள் கோரிக்கை
செய்திப்பிரிவு
வண்டலூர்
2024-02-06 15:00:00
வண்டலூர்: வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகளின் நலன் கருதி மினி பேருந்து சேவை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழ் உங்கள் குரலில் வண்டலூரை சேர்ந்த சரவணன் என்பவர் தொலைபேசி வாயிலாக புகார் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பேருந்து நிலையத்துக்கு நேரடியாக ரயில் நிலைய வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், ரயிலில் பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் அவதி அடைகின்றனர். அருகில் உள்ள மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்குள் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், சிலர் இது தெரியாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுகின்றனர். அங்கிருந்து ரயிலிலும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியூரில் இருந்து வந்த கட்டணத்தைவிட ஆட்டோவுக்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், கிளாம்பாக்கத்துக்கு அருகில் உள்ள ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை வசதியை மாநகரப் போக்குவரத்து கழகம் ஏற்படுத்த வேண்டும். கிளாம்பாக்கம் தொடங்கியது முதல் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்க துறை அதிகாரியின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி: திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு
பி.டி.ரவிச்சந்திரன்
திண்டுக்கல்
2024-02-06 14:57:00
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக நீதிபதி மோகனா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி மோகனா முன்னிலையில் இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் அனுராதா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். அமலாக்கத் துறை அதிகாரியின் வழக்கறிஞர் செல்வம், ஜாமீன் தர உத்தரவிடலாம் என முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து (இன்று) உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கை தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அங்கித் திவாரியின் ஜாமீன் மனு நீதிபதி மோகனா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மெரினாவில் மெல்லிசை இசைத்து அசத்தும் பெண் காவலர்கள்!
இ.ராமகிருஷ்ணன்
சென்னை
2024-02-06 14:45:00
சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெறும் பெண் காவலர்கள் இசைக்குழுவின் இன்னிசை சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும் போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பொது மக்களுடன் நல்லுறவை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் புதிதாக காவல் துறையின் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இசை விருந்து படைப்பதுபோல் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பாடல்களை இசைப்பதோடு, நடனமுடன் இசை வாத்தியங்களை பயன்படுத்தி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச நடைமுறை: இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ஏற்கெனவே லண்டன், டோக்கியோ, பாரிஸ் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அந்தந்த நாட்டு காவல் துறையினரின் இசை குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இசை நிகழ்ச்சி நடத்தும் மற்றொரு பெருநகர காவல்துறையாக சென்னை பெருநகர காவல்துறை உருவாகி உள்ளது. போலீஸாரின் இசை நிகழ்ச்சியை குடும்பத்துடன் நேரில் கேட்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணி கமலேஷ் கூறும்போது, ‘கூலி வேலை செய்து வருகிறேன். அதிகளவில் செலவு செய்து சினிமா, வணிக வளாகங்களுக்கு செல்ல போதிய பண வசதி இல்லை. கையில் குறைந்த அளவு பணம் இருந்தால்கூட போதும். மெரினா சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம். அதன் அடிப்படையிலேயே நான் மெரினா வந்துள்ளேன். தற்போது போலீஸார் நடத்திய இசை நிகழ்ச்சியை குடும்பத்தோடு பார்த்து ரசித்தேன். இது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது’ என்றார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘இந்தியாவில் முதன் முறையாக சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் இணைக்கப்பட்ட அனைத்து மகளிர் பேக் பைப்பர் இசைக்குழுவினர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். தற்போது நடத்தப்பட்டு வரும் இசை நிகழ்ச்சி, பொது மக்களுடனான உறவுகளை கட்டமைக்கவும், காவல் துறையினருக்கும் சமூகத்துக்கும் இடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவும். இந்த இசை நிகழ்ச்சியை பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகவே கண்டு களிக்கலாம் என்றார். சென்னை பெருநகர காவல் துறையின் பேண்டு மற்றும் பெண்கள் பேக் பைப்பர் இசை நிகழ்ச்சியை சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையர் கயல்விழி கண்காணித்து வருகிறார். நீங்களும் வாங்க... மெரினாவில் காவல் துறையின் இசை நிகழ்ச்சியை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என காவல்துறை அழைக்கிறது..!
“இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” - கே.எஸ். அழகிரி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 14:12:00
சென்னை: “மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்காதீர்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”மக்களவையில் திங்கள் கிழமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்து, சிறப்புப் புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி, இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். அதற்குத் துணையாக இருந்த அமித்ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். இத்தகைய பொறுப்புகளை இவர்கள் ஏற்றிருப்பது இந்தியாவுக்கே கேடு விளைவிக்கக் கூடியதாகும். அதைத் தான் இந்தியா இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வாதங்களைச் செய்து வருகிறார். ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியில் பண்டித நேரு, இந்திரா காந்தி ஆகியோரது பங்களிப்பை இத்தகைய அவதூறு பிரசாரங்களினால் மறைத்துவிட முடியாது. இந்தியாவின் பிரதமராக 1947 ஆகஸ்ட் 15 இல் நேரு பதவியேற்ற போது, அன்று நள்ளிரவில் அவர் ஆற்றிய உரை இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றைக்கும் மின்னிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரதமராக டெல்லி செங்கோட்டையில் 17 முறை தேசியக் கொடியை ஏற்றி அற்புதமான உரைகளை நிகழ்த்தியவர் பண்டித நேரு. அதில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நிகழ்த்திய உரையை பிரதமர் மோடி திரித்துப் பேசியிருக்கிறார். இந்த உரையில் பிரதமர் நேரு ‘ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் கடுமையான உழைப்பு தான். கடின உழைப்பு நமக்குப் புதிதல்ல, இதற்கு எதிரான சோம்பல் நமது இயல்பு அல்ல. அறிவாலும், கடின உழைப்பாலும் நாமும் முன்னேறலாம். உழைப்பில்லாமல் உயர்வில்லை” என்று பேசியதைத் திரித்துப் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல. இத்தகைய பேச்சுகளின் மூலம் நேருவின் புகழ் குறையாது. மாறாக, மோடியின் தரம் தான் குறையப் போகிறது. இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான். பிரதமர் பதவியை நேரு ஏற்பதற்கு முன்பாக 1943 இல் வங்காள பஞ்சத்தில் 30 லட்சம் இந்தியர்கள் மடிந்தனர். குண்டூசி கூட தயாரிக்க முடியாத அவலநிலையிலிருந்த இந்தியாவில் 1947 இல் பிரதமராக பதவியேற்றார். 17 ஆண்டுக் காலத்தில் ஒருநாளைக்கு காலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்த பண்டித நேரு மீது இத்தகைய கடுமையான விமர்சனத்தை மேற்கொள்வது மோடியின் கல் நெஞ்சத்தையே காட்டுகிறது. மாட்டு வண்டிகள் நிறைந்திருந்த நாட்டை அணுசக்தி நாடாகவும், விண்கலங்களை ஏவுகின்ற நாடாகவும் மாற்றிக் காட்டியவர் பண்டித நேரு. பஞ்சத்திலும், பட்டினியிலும் உழன்று கொண்டிருந்த நாட்டில் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கினார். 1954 இல் 740 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய அணையை பக்ராநங்கலில் கட்டி 15 லட்சம் ஏக்கர் நீர்ப்பாசனத்தைப் பெருக்கி, 13 லட்சம் டன் கோதுமை உற்பத்தியை செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்தியவர் பண்டித நேரு. எண்ணற்ற அணைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்று சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தொழிற்சாலைகளை பொதுத்துறையில் துவங்கினார். ரூர்கேலா, பிலாய், துர்காபூர் ஆகிய இடங்களில் உருக்கு ஆலைகளை நிறுவினார். பொதுத்துறை நிறுவனங்களை நவீன இந்தியாவின் கோயில்கள் என்று அழைத்து மகிழ்ச்சி அடைந்தார். நேரு வளர்த்த பொதுத்துறையை இன்றைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து பிரதமர் மோடி அழித்துக் கொண்டிருக்கிறார். 1960 இல் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் அங்லேஷ்வரில் முதல் முதலாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு அந்த சோதனையை நேரில் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தவர் பண்டித நேரு. அவரது கண்டுபிடிப்பு தான் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, எரிவாயு உற்பத்திக்கு வழிவகுத்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். அவர் தொடங்கிய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? 1959 இல் கிண்டியில் ஐ.ஐ.டி. தொடங்கி, கான்பூர், தில்லி என 5 ஐ.ஐ.டி. நிறுவனங்களை உருவாக்கியவர் பிரதமர் நேரு. அறிவியல் துறையில் வளர்ச்சியின் மூலம் பாபா அணு ஆராய்ச்சி மையம், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் என இந்தியாவை வளர்த்தெடுத்தவர் பண்டித நேரு. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியைக் காக்க 1951 இல் அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தவர். தீண்டாமை குற்றச் சட்டம், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியவர். வெளியுறவுக் கொள்கையில் வல்லரசுகளுக்கு எதிராக அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவர். பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் விண்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர். வெளிநாட்டுக் கொள்கையில் அரசியல் பேராண்மையோடு செயல்பட்டவர். இந்திய - சோவியத் நட்புறவு ஒப்பந்தம் கண்டவர், வங்கதேச வெற்றிக்காக வாஜ்பாய் அவர்களால் துர்காதேவி என்று அழைக்கப்பட்டவர். இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 1947 ஆகஸ்ட் 15, ஜனவரி 26, 1950 ஆகிய இரு நாட்களை தவிர, தொடர்ந்து 22 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டுக் கூற முடியுமா ? அத்தகைய தியாக வரலாறு இல்லாத பின்னணியில் வந்த பிரதமர் மோடி, இந்தியாவின் விடுதலைக்காகவும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தைச் சிதைத்து விட்டால் தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சியைத் தடுத்து விடலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், ராகுல் காந்தி மக்களோடு மக்களாக, மக்களுடன் உரையாடி, மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்கிற மாபெரும் ஒற்றுமை பயணத்தை நீதி கேட்டு மேற்கொண்டு வருகிறார்.எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்துச் செல்கிற பிரதமர் மோடி அவர்களே, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்துங்கள். மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்காதீர்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” - முதல்வர் ஸ்டாலின்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 13:12:00
சென்னை: மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டுக்கள். மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMs) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது., இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது. மூன்றாவதாக, மத்திய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும். நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழக அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் சுற்றுப்பயணம் நிறைவு: நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 12:18:00
சென்னை: ”நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்று இருந்தார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப். டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“வருமான வரி, அமலாக்கத் துறை வந்தால் கவலை இல்லை; வரவேற்கிறோம்” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
கே.சுரேஷ்
புதுக்கோட்டை
2024-02-06 11:52:00
புதுக்கோட்டை: “மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பாஜகவின் அண்ணாமலை கூறுவதைப் போன்று அமலாக்கத் துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்படப்போவதில்லை, வந்தால் வரவேற்கிறோம்” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்திருக்கிறார். சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று (பிப்.6) கூறியதாவது, “ஆளுநருக்கு நிறைய கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. சில கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். சில கோப்புகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை நடவடிக்கையில் திமுக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இதுபோன்று எடுத்ததில்லை. கோடநாடு கொலை வழக்கில் தடயவியல் ஆய்வாளர்கள் திருச்சியில் சோதனை நடத்தியதைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமைகளை செய்துள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். கோடநாடு வழக்கில் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு 36 மாதங்களாகியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருமே பாஜவின் கொத்தடிமைகள். இருவரும் தங்களது கட்சியை பாஜகவினரிடம் அடகு வைத்துவிட்டனர். இதைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை கோடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து விசாரித்துகொண்டு இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையினால்தான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பாஜகவின் அண்ணாமலை கூறுவதைப் போன்று அமலாக்கத் துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்படப்போவதில்லை, வந்தால் வரவேற்கிறோம்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மத்திய அரசுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை மதிமுக வரவேற்கிறது: வைகோ
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 11:06:00
சென்னை: மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள போராட்டத்தை மதிமுக வரவேற்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கேரளாவில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மீது மத்திய அரசு தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் 08.02.2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தினை நடத்த உள்ளது. தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புது டெல்லி என பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது. பாராட்டுகிறது. மதிமுக நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்." என வைகோ கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 10:51:00
சென்னை: ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு துரோகத்தைக் களையும் வகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (பிப்.06) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்துக்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத தமிழக அரசு, இப்போது அரசாணை 243 என்ற பெயரில் அவர்களின் மீது பேரிடியை இறக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 21 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையின்படி தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. அரசாணை 243இன் மூலம் ஒன்றிய அளவிலான முன்னுரிமை பறிக்கப்பட்டு, மாநில முன்னுரிமை திணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சொந்த ஒன்றியத்தில் பணியாற்றியவர்கள் தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்திற்கும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை 60% பெண்கள் தான் பணியாற்றுகின்றனர். கணவர் பணி செய்யும் இடம், குழந்தைகளின் கல்வி, குடும்பச் சூழல், சொந்த ஊரில் பணி செய்வதில் உள்ள வசதி உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் சொந்த ஒன்றியத்தில் பணி செய்வதையே விரும்புவார்கள்; வெளி மாவட்டத்திற்கு சென்று பணியாற்ற விரும்ப மாட்டார்கள். அதனால், அவர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். அதனால், இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்த ஒருவர், ஓய்வு பெறும் போது அதே நிலையிலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இது சமூக அநீதி. 243-ஆம் அரசாணையின்படி, 20 ஆண்டுகளாக இருந்த பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 243-ஆம் அரசாணையின்படி பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த/ பதவி உயர்வு பெற்ற நாள் தான் தகுதி காணும் நாளாக கணக்கில் கொள்ளப்படும். அதன்படி, பட்டதாரி ஆசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கும், பத்தாண்டுகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், அதன்பின் 6 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றியவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டால் மொத்தம் 16 ஆண்டுகள் பணியாற்றியவரை ஒதுக்கி விட்டு, 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு தான் பதவி உயர்வு வழங்கப்படும். இது என்ன நியாயம்? தமிழக அரசின் இந்த புதிய ஆணை பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனால், அதிகபட்சமாக 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் பயனடைவர். ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் இது ஒரு சிறப்பான அரசாணை என்று தமிழக அரசு பரப்புரை செய்து வருகிறது. ஆசிரியர்களின் பிரச்சினைகள் என்னவென்று கூட தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் தெரியவில்லை என்பதையே 243 ஆம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய விகிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடுமையான முரண்பாடுகளும், பாகுபாடுகளும் நிலவி வருகின்றன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான் அரசு ஊழியர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு துரோகத்தைக் களையும் வகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் சட்லெஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் மாயம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 09:25:00
சென்னை: இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவரது நண்பர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை மாநகராட்சி மேயர், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. எம்ஜிஆரின் தீவிர ரசிகர் இவர். எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். இவர் மனிதநேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இவரது மகன் வெற்றி (45), அண்மையில் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். உடன், ஈரோட்டை சேர்ந்த நண்பர் கோபிநாத் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அப்போது சுமார் 50 அடி பள்ளத்தில் கார் உருண்டு சென்றுள்ளது. கார் நீரில் மூழ்கியதால் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சைதை துரைசாமி மகன் வெற்றியை காணவில்லை. அவரை தேடும் பணியில் அம்மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சைதை துரைசாமி, இமாச்சல பிரதேசம் விரைந்துள்ளார். வன உயிரினங்கள் மீது ஆர்வம்: வன உயிரினங்களை படம் எடுப்பதில் வெற்றி அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வப்போது வனப்பகுதிகளுக்கு சென்று, அங்கேயே தங்கி இருந்து படங்களை எடுத்து வருவது வழக்கம். அவர் எடுத்த படங்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். அவர், இமாச்சல பிரதேச பகுதியில் வாழும் பனிக் கரடிகளின் வாழ்வியலை புகைப்படமாக பதிவு செய்யவே அங்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திருமணம் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநரான அவர், கடந்த 2021-ம் ஆண்டு ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கிரைம் திரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், விபத்தில் மாயமாகி இருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைத் துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை: மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த பொது சுகாதாரத்துறை நடவடிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 09:14:00
சென்னை: ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாணவர்களுக்கு பொது சுகாதாரத்துறை பரிசோதனை செய்து வருகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கான ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆண்களில் 4-ல் ஒருவருக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 57 சதவீதத்தினருக்கு ரத்த சோகை: இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளிடம் ரத்தசோகை பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவாரை 8.7 லட்சம் மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 57 சதவீதத்தினர் ரத்த சோகை பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 2 சதவீத பெண்களுக்கு தீவிர பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 6.83 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 43 சதவீத பேருக்கு பாதிப்பும், ஒரு சதவீதத்தினருக்கு தீவிர பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்ட 11,253 பேருக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஊசி மூலமாக இரும்பு சத்து மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 2 நாள் ஆலோசனை: ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 09:09:00
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இன்று சென்னை வரும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலம்தோறும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னெற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வருமானவரித் துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை உள்ளிட்ட சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணிவரை ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிவாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அதன்பின் இரவு 9 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தயாராக இருக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கடிதம், மெயில், வாட்ஸ்அப்பிலும் தெரிவிக்கலாம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 09:03:00
சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் கடந்த ஜனவரி 18-ம் தேதி அமைக்கப்பட்டன. இதில், கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார் எம்.பி. மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் எழிலன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதலில், பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க இக்குழு முடிவெடுத்தது. அதன்படி, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தூத்துக்குடியில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி, மதுரை, சேலம், கோவையிலும் நடத்தப்பட உள்ளது. இது மட்டுமின்றி, பொதுமக்கள், வணிகர்கள், தொழில் துறையினரின் கருத்துகள், கோரிக்கைகள், பரிந்துரைகளை எழுத்து வடிவிலும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் அலுவலகத்துக்கு கடிதம் மூலமாகவோ, [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். அதுபோல, 08069556900 என்ற ஹாட்லைன் தொலைபேசி எண், எக்ஸ் தளத்தில் #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக், DMKManifesto2024 என்ற முகநூல் பக்கம், 9043299441 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக க்யூஆர்கோடு குறியீடும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள் கடந்த 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பலரும் தங்கள் கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இந்த வசதி பிப்ரவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு பெறப்படும் பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 08:51:00
சென்னை: மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் தமிழக பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தலைமை அலுவலகத்தை அண்ணாமலை நேற்று திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியாகவே மக்கள் பணிகளைச் செய்துள்ளோம். மத்தியில் நல்லாட்சி, தமிழகத்தில் திமுகவின் மோசமான ஆட்சி என காலம் கணிந்து வந்திருக்கிறது. பெரிய அரசியல் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இதேபோன்றதொரு சூழல் மீண்டும் கிடைக்காது. கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவருமே மக்களை பாஜகவின் பக்கம் கொண்டு வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும். மேலாண்மைக் குழு: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளராக மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர்களாக துணை தலைவர்கள் கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, எம்.நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் கீழ் 38 துணை அமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி பல்லடம் அருகே மாதப்பூரில் பிப்.25-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு 5 லட்சம் இருக்கை, 10 லட்சம் பங்கேற்பாளர்கள் என பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறோம். வேலூர் தொகுதி வேட்பாளர் பெயரை நான் அறிவிக்கவில்லை. ஏ.சி.சண்முகம் எவ்வாறு மக்கள் பணி செய்கிறார், வெற்றிபெற்ற கதிர் என்ன செய்திருக்கிறார் என்பதை மட்டுமே கூறினேன். தமிழகத்தில் அதிக எம்.பி.க்களையும் வாக்கு சதவீதத்தையும் பாஜக பெறும். கோயிலை வைத்து அரசியல் செய்யவில்லை. யாரையும் கூட்டணி பேசுமாறு பாஜக சொல்ல வில்லை. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அனைவருடனும் பரஸ்பர நட்பு கொண்டிருக்கிறார். ராமர் கோயில் நிகழ்ச்சிக்கு பிரதமர் சென்றாலும் தவறு, செல்லாவிட்டாலும் தவறு என்கிறார் திருமாவளவன். அமைச்சர் உதயநிதி, தமிழக கோயில் கும்பாபிஷேகங்களுக்கு ஏன் சங்கராசாரியார்களை அழைக்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா, எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன், லலிதா குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக போராடும்: கருத்து கேட்புக் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 08:43:00
சென்னை: அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மண்டல வாரியாக சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்டு, அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் சென்னை வானகரம் அடுத்த வேலப்பன்சாவடியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், வைகை செல்வன் ஆகியோர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். மனுக்களாகவும் அளித்தனர். விவசாயிகள் தரப்பில் பேசும்போது, “தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாய கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தனி நபர் பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும்” என்றனர். பின்னர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக போராடும். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரத்தில் 10-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பாஜக அரசை கண்டித்து நடப்பதாக கே.எஸ்.அழகிரி தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 08:32:00
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. கடந்த 3-ம் தேதி ராமேசுவரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 2 நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டதோடு, கடந்த ஆண்டும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 மீனவர்கள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜக அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்காததையும் கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், வரும் 10-ம் தேதி ராமேசுவரம், பாம்பன் பேருந்து நிலையம் முன்பு, மீனவ அமைப்புகளை இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விஜய்யை காண 2-ம் நாளாக திரண்ட ரசிகர்கள்: கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்; மக்கள் தவிப்பு
செய்திப்பிரிவு
புதுச்சேரி
2024-02-06 07:00:00
புதுச்சேரி: படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யைக் காண ரசிகர்கள் திரண்டதால், புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர். புதுச்சேரியில் முக்கிய பஞ்சாலையாக விளங்கிய ஏஎஃப்டி தற்போது மூடப்பட்டுள்ளது. இங்குபடப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்துக்காக புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் குவிந்தனர்: ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி தொடங்கி தலைவரான பிறகு நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக புதுச்சேரி வந்ததால் ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு நேற்று முன்தினம் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். அப்போது, விஜய் வேனில் ஏறி கை அசைத்தார். வேனில் நின்றவாறு ரசிகர்களுடன் செல்ஃபியையும், வீடியோவையும் எடுத்தார். இந்நிலையில், 2-ம் நாளாகநேற்றும் விஜய்யைப் பார்க்க ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு ரசிகர்கள்குவிந்தனர். அதைத்தொடர்ந்து வாயில் முன்பு பெரிய வேன் நிறுத்தப்பட்டு, அதில் ஏறி விஜய் தனதுரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அவரைப் பார்த்தவுடன் ரசிகர்கள் பூக்கள் வீசினர், பலூன்களைப் பறக்க விட்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் ஏஎஃப்டி சுவற்றின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை போலீஸார் தடியால் அடித்து தடுத்து நிறுத்தினர். ரசிகர்களைச் சந்தித்தபின் விஜய் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விட்டார். கடலூர் சாலையில் ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து செல்லும் மக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகே போக்குவரத்து சீரானது. முதல்வர் ரங்கசாமி வாழ்த்து: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய் கட்சி நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜய்யை, முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று சென்னையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
செய்திப்பிரிவு
திருநெல்வேலி
2024-02-06 06:45:00
திருநெல்வேலி: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதில் 9 இடங்களில் கண்ணாடிகள் சேதமடைந்தன. திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்தரயில் பிற்பகல் 1.50 மணிக்குசென்னை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும். கண்ணாடிகள் உடைப்பு: இந்நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் பிற்பகலில்புறப்பட்ட ரயில் இரவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மணியாச்சி ரயில் நிலையத்தை கடந்துவந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசி தாக்கினர். ரயில்வே போலீஸார் விசாரணை: இதில் ரயிலில் 9 இடங்களில் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி சந்திப்புக்கு ரயில் வந்தபின் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலுள்ள பிட்லைனுக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டு,சேதமடைந்த கண்ணாடிகளை மாற்றும் பணி இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நேற்று காலை வழக்கம்போல் ரயில் புறப்பட்டுச் சென்றது.
வேளாண் பயிர்கள் மதிப்புக்கூட்டலுக்கான கட்டமைப்பை மேம்படுத்த கடன் பெறும் திட்டம்: அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:30:00
சென்னை: பயிர் அறுவடைக்குப் பின்பு உள்ளமதிப்புக்கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன்பெறும் திட்டத்தை விவசாயிகள்பயன்படுத்திக் கொள்ளும்படி அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு பயிர் அறுவடைக்குப் பிறகு, விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்டவற்றுக்காக வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, வேளாண் கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் கடன் வசதி பெறும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21 -ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2032-33 வரை செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு,7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. கடன் தவணைத் தொகையை திருப்பி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ள 2ஆண்டுகள் உட்பட, அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாயக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர், கிராமப்புறஇளைஞர்கள், வேளாண் தொழில்முனைவோர், புதிதாக தொழில்தொடங்க முன்வரும் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சுயஉதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கட்டமைப்பு வசதிகள்: இத்திட்டத்தின் மூலம் மின்னணுசந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.agriinfra.dac.gov.in இணையதளத்தில் அறியலாம். மேலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் மாவட்ட தொழில் மையங்களையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் கல்லை நட்டு சுவாமி என கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:25:00
சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: சாலையோரத்தில் கல்லை நட்டு, துணியைப் போர்த்தி, பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது. சாலையில் நடப்பட்டுள்ள அந்த கல் சிலையா, இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இதற்காக இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதுஎன்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல். எனவே மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
‘எனக்கு வேண்டாம் போதை; நமக்கும் வேண்டாம் போதை' - 3,397 பேர் விழிப்புணர்வு வாசகம் உருவாக்கி உலக சாதனை
செய்திப்பிரிவு
ஆவடி
2024-02-06 06:20:00
ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ - மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை' என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர். ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ - மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், மாபெரும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடத்தியது. தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,397 மாணவ - மாணவி கள் பங்கேற்று, ‘எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி, உலக சாதனை புரிந்தனர். இந்த சாதனையை உலக சாதனையாக ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அங்கீகரித்தது. தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில், பள்ளி மாணவ - மாணவிகள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றனர். இந்நிகழ்வுகளின் போது, செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தென்மாநிலங்களை பொறுத்தவரை தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அதிக அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது, போதைப்பொருட்கள் புழக்கம் முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
ப்ரீமியம் லடாக்கிலிருந்து ஒரு ‘மனதின் குரல்’
வெ.சந்திரமோகன்
நன்மைகள்
2024-02-06 06:13:00
வழக்கமாகப் பிரதமர் மோடிதான், ‘மனதின் குர’லை வானொலி மூலமாக மக்களிடம் பகிர்ந்துகொள்வார். ஆனால், பிப்ரவரி 3 அன்று, ‘பிரதமர் மோடிக்கு லடாக் மக்களின் (இறுதி) மனதின் குரல்’ என்னும் தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் பேசியிருந்த அந்தக் காணொளியில், பிப்ரவரி 3 அன்று, லே பகுதியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, காஷ்மீர் அரசியல் கட்சிகள் இன்றைக்கும் போராடிவரும் நிலையில், ஆரம்பத்தில் இந்நடவடிக்கையை வரவேற்ற லடாக் மக்கள் - கடந்த சில ஆண்டுகளாகவே அதிருப்தியில் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்ட வணையின்கீழ் லடாக்கைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர். இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்: தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள் தடையற்ற வாசிப்பனுபவம் உங்களின் உறுதுணைக்கு நன்றி !
திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நிறைவு: வேறுபாடுகளை மறந்து கட்சியினர் பணியாற்ற அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:11:00
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் வகையில் 70 நாட்களும் வேறுபாடுகளை மறந்து பணியாற்றும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி ஒருங்கிணைப் புக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். திமுக சார்பில் நடந்துவந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் கடந்த ஜன.22-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, ஜன.21-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்கவும், தேர்தல் பணிகள் குறித்துஆலோசனை நடத்தவும் முடிவெடுத்தனர். இதையடுத்து, கடந்த ஜன.24-ம்தேதி முதல்அண்ணா அறிவாலயத் தில் தொடங்கிய ஆலோசனைக்கூட்டம் நேற்று நிறைவுற்றது. நேற்று வரையிலான கூட்டத்தில் 3,405 நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பெண்கள் 617 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில், 4 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் களநிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி தலைமையிலானகுழுவினர் ஆலாசனை நடத்தினர். அப்போது, கரூர் தொகுதியின் தற்போதைய எம்பியான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கு எதிராக திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதிகளை பொறுத்தவரை நிர்வாகிகளுக்குள் உள்ள சிக்கல்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அப்போதுகுழுவினர், கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் வரும் 70 நாட்களுக்கு இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளப்பக்கத்தில்,‘‘வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்வகையில் தேர்தல் பணியாற்றும்படி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டோம்’’ என தெரிவித்துள்ளார்.
அங்கித் திவாரி ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் இன்று உத்தரவு
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-06 06:10:00
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீது நீதிபதி இன்று உத்தரவு பிறப் பிக்கிறார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி மோகனா முன்னிலையில் இந்தமனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் அனுராதா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். அமலாக்கத் துறை அதிகாரியின் வழக் கறிஞர் செல்வம், ஜாமீன் தர உத்தரவிடலாம் என முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து செவ்வாய்கிழமை (இன்று) உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தார்.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:05:00
சென்னை: கடந்தாண்டு ஜனவரி வரையிலான காலத்தை ஒப்பிடும்போது இந்தாண்டு ஜனவரி வரை பதிவுத்துறையில் ரூ.952.86 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், கடந்த ஜனவரி மாதத்துக்கான பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த 2023-ம்ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தை ஒப்பிடும்போது, இந்தாண்டுஜனவரி வரையிலான காலத்தில் கூடுதலாக ரூ.952.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனவே, துணைப் பதிவுத்துறை தலைவர்கள் அனைவரும் பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடையும் வகையில்,சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய வேண்டும். பதிவுத்துறை செயலாளர் இழப்பினை வசூலிக்கவும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின்கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலித்து அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் அ.முகமது ஜாபர் சாதிக், வே.நல்லசிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெறும் வசதி: ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:04:00
சென்னை: கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்குமெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை பயணிக்கின்றனர். பயணிகள்எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை உட்பட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோக்கள் போன்றஇணைப்பு வாகன வசதி படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் வாட்ஸ்அப் செயலி உள்ளிட்ட பல்வேறு வகைககளில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட் டுள்ளது. இதன்தொடர்ச்சியாக கிரெடிட்,டெபிட் அட்டைகள், ஜிபே ஸ்கேனர்பயன்படுத்தி டிஜிட்டல் டிக்கெட்எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் உள்ள ஸ்கேனர்களில் இதற்கேற்பதொழில்நுட்ப மாற்றம் செய்யப்படும். அதில், வங்கி அட்டைகளை காண்பித்து புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்ட ணத்தை செலுத்தலாம். பயணத்துக்கான கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, ஜிபே முறையில், ஸ்கேனர் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். புதிய வசதிக்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சில மாவட்டங்களில் 10, 11 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:02:00
சென்னை: தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 10, 11 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. வரும் 10, 11 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி, கரூர் பரமத்தியில் 97 டிகிரி, மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி, நாடகம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 06:00:00
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நடைபெற்றது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ‘உலக புற்றுநோய் தினம்’ 2000-ம்ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பிப். 4-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் தினத்தையொட்டி, நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் தலைமையில் நடந்த பேரணியில் புற்றுநோய் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் கோபு, புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவர் கண்ணன், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் விஜயஸ்ரீ மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணி முடிவில் 2024-ம் ஆண்டுக்கான உலக புற்றுநோய் தின கருப்பொருள் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, புற்றுநோயை தடுப்பது, ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 05:50:00
சென்னை: கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த ஜன. 22-ம் தேதி கைதுசெய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும்நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, ‘‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கும் உரிமை உள்ளது. கச்சத்தீவு பகுதிகளை இந்தியாதான் இலங்கைக்கு தாரை வார்த்துள்ளது. அப்போது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை மதிப்பதில்லை. தற்போது 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமத்திய, மாநில அரசுகள் இணைந்த கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’’ என கோரினார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.250 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ‘‘கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்வதுதொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை’’ என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத் துள்ளனர்.
25 பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 05:43:00
சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அவை மூடப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழக உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிதிப் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ளது. பல்கலைக்கழகங் களைப் பொறுத்தவரை சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. சிலவற்றில் நிதி அதிகமாக உள்ளது. பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களில் பற்றாக்குறை உள்ளது. இவற்றை சரிசெய்துவிடலாம். உயர்கல்வியில் 50 சதவீதத்துக்கு மேல் தமிழகத்தில் சேர்க்கை உள்ளது. இந்திய அளவில் நாம் முதலிடம் வகிக்கிறோம். சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர், முதல்வருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாக ரீதியான கருத்துகள்: அரசு என்பது மக்களால் தேர்தல்மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் நியமிக்கப்பட்டவர். அவரை குறைகூற விரும்பவில்லை. பிப்.12-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. ஆளுநரை அழைத்துள்ளோம். ஆளுநரைப் பொறுத்தவரை அரசியல் ரீதியானவற்றைத் தவிர, நிர்வாக ரீதியான கருத்துகள் கூறினால் அவற்றை ஏற்கத் தயாராக உள்ளோம். பேராசிரியர் நியமனத்தை பொறுத்தவரை நிதி இருப்பை பொறுத்து நியமிக்கப்படுகின்றனர். தற்போதுகூட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்படுகின்றனர். அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் உள்ளன. அதேநேரம் நிதிநிலைமை குறித்தும் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 74 சதவீதம் சென்று விடுகிறது. இதற்கிடையே பேரிடர்களையும் அரசு சந்திக்க வேண்டியிருப்பதால், பிரச்சினைகள் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள். பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தமோசமான சூழலும் இல்லை. சில கல்லூரிகளை நடத்த முடியாமல் உள்ளனர். அதுதொடர்பாக 7 கல்லூரிகள் விண்ணப்பித் துள்ளனர். அதேபோல், அண்ணாபல்கலைக்கழகத்தின் விசாரணையில் மோசமான கல்லூரிகளாக 25 கல்லூரிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றையும் மூட வேண்டிய சூழல் உள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால் அவை ஏற்கப்படும். மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், முதல்வர் தலைமையில் இரண்டும் ஒப்பிடப் பட்டு முடிவெடுக்கப்படும். அரசின் முடிவே இறுதி: தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவில் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தாலும் அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, துறையின் செயலர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்: ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-06 05:20:00
சென்னை: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம். நீ்ங்களும் பிறந்த மண்ணான தமிழகத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஸ்பெயினில் உள்ள தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் இருக்கிறோமா, வெளிநாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கு இப்போதுதான் வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததுபோன்ற உணர்வை தரும் வரவேற்பை நீங்கள் அளித்துள்ளீர்கள். உங்கள் தாய் மண்ணான தமிழகத்துக்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு துணைநிற்க வேண்டும் என்றஅடிப்படையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார். சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு. அந்த அமைப்பு செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் நமது ஆட்சி உருவாகி இருக்கிறது. கருணாநிதி செய்யநினைத்ததை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். சமீபத்தில்கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம். உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாக தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்திருக்கிறோம். அது தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் பெருமைதான். பல்வேறு நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது பாசமும்,நேசமும் அன்பும் கொண்டு ஒவ்வொருவரும் அளித்த உபசரிப்பு நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர்: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜன. 27-ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். பிறகு நடைபெற்ற சந்திப்புகளின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவனத் தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா நிறுவனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன. ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை (பிப்.7) காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ள வழக்குகளை யார் விசாரிப்பது என்று தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்ச நீதிமன்றம்
செய்திப்பிரிவு
புதுடெல்லி
2024-02-06 05:14:00
புதுடெல்லி: இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்தும், விடுதலை செய்தும் பிறப்பித்த உத்தரவுகளையும், வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுகஅமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். ஏற்கெனவே முடிந்துபோன இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஷ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்: மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதற்கு என ஒரு வரைமுறை உள்ளது. அதை தனிநீதிபதி பின்பற்றவில்லை. தாமாக முன்வந்து வழக்கை எடுப்பது தொடர்பாக தலைமை நீதிபதியின் முன்அனுமதியை பெறுவதற்கு முன்பாகவே தனி நீதிபதிவிசாரணையை தொடங்கிவிட்டார். இதுதொடர்பான முன்அனுமதி கடிதத்தைதலைமை நீதிபதி பார்த்துவிட்டார் என்றுதான் பதிவுத் துறை பதில் அளித்துள்ளது. தலைமை நீதிபதியின் ஒப்புதல் கிடைக்கும் வரை தனி நீதிபதியால் ஏன் காத்திருக்க முடியவில்லை. நீதிபதிகள்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியே அவர்தானே. அப்படி இருக்க, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறுவது கட்டாயமா? அபிஷேக் மனு சிங்வி: ரோஸ்டர் நீதிபதிஎன்றாலும், எந்த வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என ஒதுக்கும் பொறுப்புதலைமை நீதிபதிக்குத்தான் உள்ளது.அதற்கான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றுதான் கூறுகிறோம். உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: இந்த வழக்குகளை தனி நீதிபதிதானாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். அபிஷேக் மனு சிங்வி: வழக்கை தாமாக முன்வந்து எடுத்த தனி நீதிபதி,தகவலுக்காக மட்டுமே தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். இதைத்தான் தலைமை நீதிபதி பார்த்து விட்டார் என பதிவாளர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதில் தனி நீதிபதி ஏன் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டும். ராகேஷ் திவேதி: கீழமை நீதிமன்றங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது என்றால், தலைமை நீதிபதி அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து, அதை தானே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுக்கு மாற்றலாம். நீதிபதிகள்: அப்படியென்றால் தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும். ஏனென்றால் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறும் முன்பாகவே தனி நீதிபதி விசாரணையை தொடங்கிவிட்டார் என்ற மனுதாரர்களின் வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியே இந்த வழக்குகளை விசாரி்க்கலாம். அல்லது எந்த நீதிபதியிடமும் ஒப்படைக்கலாம். இந்த உத்தரவு மற்ற வழக்குகளுக்கும் பொருந்தும். அதேநேரம் தனி நீதிபதி இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘‘இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொருத்து முடிவு செய்து கொள்ளலாம்’’ என்று கூறி விசாரணையை நாளைக்கு (பிப்.7) தள்ளி வைத்துள்ளார்.
வருவாய்த் துறையினரின் அலட்சியத்தால் குறைகேட்பு கூட்டத்தில் குவியும் மனுக்கள்: கலங்கி நிற்கும் கடலூர் மாவட்ட மக்கள்
ந.முருகவேல்
விருத்தாசலம்
2024-02-06 04:49:00
விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையினரின் அலட்சியப் போக்கால், வாராந்திர குறை கேட்பு கூட்டத்தில் மனுக்கள் குவிந்து வருவதாக ஆட்சியர் அலுவலக மனுப்பிரிவு அலுவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நேற்று கூட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட் டோர் மனு அளித்தனர். அவர்களிடம் மனுக் களைப் பெற்ற ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து உரிய தீர்வு காண வலியுறுத்தினார். இது ஒரு வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், மங்கலம்பேட்டையை அடுத்தவிசலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி (82) என்பவர், திமுக துண்டு, கரை வேட்டியுடன் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, கூச்சலிட் டவாறே குறை கேட்பு கூட்டம் நடந்த இடத்தில் இருந்து வெளியே வந்தார். அவரை அங்கிருந்த பெண் காவலர், ‘கூச்சலிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முதியவர், “இதே போல் இழுத்தடிக்கப்பட்டால் உனக்கு தெரியும்” என்று ஆவேசமாக கூறினார். அந்த முதியவரிடம் பேச்சு கொடுக்க, அவர்கூறுகையில், “ நாங்கள் 3 பேர் உடன் பிறந்த வர்கள். எனது பாரம்பரிய சொத்துகளை, உடன்பிறந்த சகோதர்களுடன் பங்கிட்டுக் கொண்டேன். அதை மூவருக்கும் சரிசமமாக அளந்து விட வேண்டிய நில அளவையர் பன்னீர்செல்வமும், கிராம உதவியாளர் தென்னரசுவும், எனது பங்குக்கு உரிய இடத்தை மட்டும்குறைத்து அளவிட்டனர். நான் கட்டணம் செலுத்தி அளவிட்டு பிரிக்கக் கோரியிருந்த நிலையில் எனக்கான பங்கை குறைத்து அள விட்டனர். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்த நிலையில், மறுநாள் அதிகாலை யிலேயே நில அளவையரும், கிராம உதவி யாளரும் பதிவேட்டில் திருத்தம் செய்து பதில் கொடுத்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். நில அளவையரும், கிராம உதவியாளரும் செய்யும் தில்லுமுல்லுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று தெவித்தார். இதே போல மனு அளிக்க வந்த பாரதாஎன்ற பெண், தனது கைப்பையை வீசியெறிந்தவாறு அறையை விட்டு வெளியேறினார். அவரிடம், ‘ஏன் இதுபோன்று ஆசேவசப்படு கிறீர்கள்?’ என்று கேட்டபோது, “எனது பட்டா இடத்தில், கட்டியிருக்கும் வீட்டுக்கு எனது கணவரின் சகோதரர்கள் வாடகைக் கேட்டு பிரச்சினை செய்கின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நியா யம் கிடைக்கவில்லை. திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தபோது, ‘அங்கு மனுவை கொடு, பின்னர் இங்கே சீல்போடு, பின்னர் ரசீது வரும். அப்புறம் தான் ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்’ என்கின் றனர். தொழுதூரில் இருந்து மூன்றரை மணி நேரம் பயணித்து வந்துள்ளேன். எப்போது மனுகொடுத்து எப்போது செல்வது? என்ற ஆவேசத் தில் தான் கை பையை வீசியெறிந்தேன்” என்றார். இதற்கிடையே, பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்சிலர் குறை கேட்புக் கூட்டத்தை விட்டு ஆவேசமாக வெளியே வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த பண்ருட்டி துணை வட்டாட் சியர், அவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு, “உங்களுக்கான இலவச வீட்டு மனைப்பட்டா தொடர்பாக பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாருங்கள் அங்கே பேசி முடிவு செய்யலாம்” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள், “பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம். நடவடிக்கை இல்லை. அதனால் தான் இங்கு வந்தோம். இப்போது மீண்டும், ‘அங்கு வாருங்கள் பார்த்துக் கொள் ளலாம்’ என்றால் எப்படி? மாறிமாறி அலைக்கழிக்கிறீர்கள்! ஆனால், எங்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. அதேநேரத்தில் வசதி படைத்தவர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்யும் புறம்போக்கு இடங்களைவிரைவாக பட்டா போட்டு கொடுக்கிறீர்கள். அது மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். மனுதாரர்கள் ஆவேசமாக வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மனுவை பதிவுசெய்யும் அலுவலர்களிடம் கேட்டபோது, “அரசும் பல்வேறு வகைகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தீர்வுகாண முயல்கிறது. கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையி னரின் அலட்சியத்தால் மனுக்கள் மீதான நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகிறது. ஆட்சியர், பதில் கேட்டால், தவறான தகவலைக் கூறி, அவரையும் சமாதானம் செய்யும் போக்கு தொடர்கிறது. இது தொடரும் வரையில் இந்த குறைகேட்புக் கூட்டத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர். ‘ஊர்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மனுக்கள் பெறுவதும், வாரந்தோறும் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தி மனுக்கள் பெறுவதும் பெரிய விஷயமில்லை. அந்த மனுக்கள் மீதான முறையான தீர்வுகளை அளிப்பது அவசியம்’ என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.
பட்டா நிலத்தில் சிலை நிறுவ அரசு அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-06 04:08:00
மதுரை: தனியார் பட்டா நிலத்தில் சிலை நிறுவ அரசிடம் அனுமதி பெற தேவையில்லை, என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் முஷ்டக்குறிச் சியைச் சேர்ந்த வேல் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: முஷ்டக்குறிச்சியில் எனக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அதில் முத்துராமலிங்கத் தேவரின் வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரி, ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆட்சியர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும், என் கோரிக்கை இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் பட்டா நிலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவு: பட்டா நிலத்தில் விடுதலைப் போராட்ட வீரரின் சிலையை நிறுவ அரசிடமோ, உள்ளாட்சி அமைப்புகளிடமோ அனுமதி பெற தேவையில்லை. பட்டா வைத்திருப்பவருக்கு அந்த நிலத்தின் மீது உரிமை உள்ளது. சட்டப்படியான அல்லது பொது சட்டப் படியான உரிமையை நிர்வாக அறிவுறுத்தல் அல்லது அரசு உத்தரவுகள் மூலம் கட்டுப் படுத்தவோ, பறிக்கவோ முடியாது. பொது வழிபாட்டுக்கான மத கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். சிலைகள் அமைப்பதற்கு சட்டப்படியான விதிகள் எதுவும் இல்லை. தனி நபர் நினைவாக ஒரு சிலையை அமைப்பதை தடுக்கவோ, தலையிடவோ முடியாது. இதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. எனவே, மனுதாரருக்கு அவரது பட்டா நிலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை திறக்க சுதந்திரம் உள்ளது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது: பொன்னையன் கருத்து
செய்திப்பிரிவு
வேலூர்
2024-02-06 04:06:00
வேலூர்: சூரியன் மாலையில் உதித்தாலும், சந்திரன் உலகில் இல்லாமல் போனாலும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் சார்ந்த பிரதிநிதிகள் உடனான தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வளர்மதி, வைகைச் செல்வன் மற்றும் வேலூர் மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சேவூர் ராமச் சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியம், எஸ்.ராமச் சந்திரன் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 அதிமுக மாவட்டச் செயலாளர் பங்கேற்றனர். கூட்டத்தில், பல்வேறு சங்கத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும் போது, ‘‘கடந்த 2000-ம் ஆண்டில் பெரும் கோட்டீஸ்வரர்கள் எண்ணிக்கை 9-ஆக இருந்த நிலையில் 2023- ல் அது 187 ஆக அதிகரித்துள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகை 144 கோடிக்கு மேலே உள்ள 10 சதவீத பேரிடம் நாட்டின் 80 சதவீத சொத்துக்கள் உள்ளன. மீத முள்ள 72 கோடி மக்களிடம் வெறும் 6 சதவீத சொத்துக்கள் மட்டுமே உள்ளன. அதே சமயம், மேலே உள்ள வர்கள் 4 சதவீத அளவுக்கும் மட்டுமே வரி செலுத்தும் நிலையில், கீழே உள்ள சாதாரண மக்கள் தான் 64 சதவீத அளவுக்கும் வரி செலுத்துபவராக உள்ளனர். இத்தகைய ஏற்றத் தாழ்வு நிலை மாற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் இலவசமாக்கப் பட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்’’ என்றார். பின்னர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘இரண்டரை கோடி தொண்டர்கள் இபிஎஸ் பின்னால் இருக்கிறார்கள். கடலில் மூழ்கிவிட்ட ஓபிஎஸ் சொல்வதை எல்லாம் பொருட் படுத்தாதீர்கள். நீதிமன்றமே இரட்டை இலை இபிஎஸுக்கு என்று கூறிவிட்டது. அதில், ஓபிஎஸ் எப்படி போட்டியிட முடியும். சூரியன் மாலையில் உதித்தாலும், சந்திரன் உலகில் இல்லாமல் போனாலும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது. அவ்வளவு தான் டாடா பாய், பாய். அதிமுக, பாஜகவை இணைக்க ஜி.கே.வாசன் முயற்சி செய்வது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அப்படிப்பட்ட எந்த பேச்சுகளும் இல்லை. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி: ஓபிஎஸ் நம்பிக்கை
செய்திப்பிரிவு
புதுக்கோட்டை
2024-02-06 04:04:00
புதுக்கோட்டை: வரும் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியது: பாஜக கூட்டணியில் இருந்து பழனிசாமி விலகிய பின், அவரை நம்பி எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க இதுவரை முன் வரவில்லை. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுவினர், யாராவது வருவார்களா என்று வாசலைப் பார்த்து சோகத்தில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பல கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் கோடநாடு கொலை வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக திமுக அரசு-டன் பழனிசாமி மறைமுகமாக கூட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த, பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்கும் எங்களது லட்சியம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் தேர்தல் மக்களவைத் தேர்தல் என்பதால் தேசியக் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி. சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடக்கும் போது தான் எங்களுடைய தலைமையில் கூட்டணி இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி தந்ததால் மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும். சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தலில் உறுதியாக எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்தச் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பிப்.10-ம் தேதி கோவை வருகை
செய்திப்பிரிவு
கோவை
2024-02-06 04:00:00
கோவை: மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் ( கோவை மாநகர் ), தொ.அ.ரவி ( கோவை வடக்கு ), தளபதி முருகேசன் ( கோவை தெற்கு ) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில், குழு உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்பிக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் எழிலரசன், கோவி.செழியன், எழிலன்‌ நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் வரும் 10-ம் தேதி கோவை வருகின்றனர். பீளமேடு, அவிநாசி சாலையில் உள்ள விஜய்‌ எலான்சா ஹோட்டல் அரங்கில், தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு‌ நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பெறவுள்ளனர். 10-ம்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கோவை மாநகர் மாவட்டத்துக்குட்பட்டவர்கள், காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் கோவை வடக்கு மாவட்டத்துக்குட்பட்டவர்கள், மதியம் 12 மணி முதல் 1 மணிவரை கோவை‌ தெற்கு மாவட்டத்துக்குட்பட்டவர்களிடம் கோரிக்கைகள் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகளை கையாள தனி அதிகாரி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
கி.மகாராஜன்
மதுரை
2024-02-05 22:05:00
மதுரை: கஞ்சா வழக்குகளை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்காக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் நாகூர்கனி. இவர் 2018-ல் கஞ்சா கடத்தல் வழக்கில் போலீஸார் பறிமுதல் செய்த ஜீப்பை திரும்ப ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்தியாவில் தமிழகத்தில் முதன் முறையாக மாநில அளவில் விசாரணை அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் போதை பொருள் வழக்குகளை விசாரிக்கவும், கண்காணிக்கவும் 7 ஏடிஎஸ்பிக்கள், 11 உதவி ஆணையர்கள், 30 டிஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதிகள் தண்டனை பெறுகிறார்களா? விடுதலை செய்யப்படுகிறாரகளா என்பதை தொடர்ந்து கண்காணிப்பாளர்கள். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, உச்ச நீதிமன்ற கடந்த 2013 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. வேறு எந்த மாநிலங்களில் இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள். மேலும் அதிகாரிகள் இந்த வழக்கை எவ்வாறு கையாள உள்ளார்கள்? என்ன சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது? என உத்தரவிட்டு குறித்து விரிவான அறிக்கையை பிப்ரவரி 12 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
“போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டாம்” - வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வேண்டுகோள்
கி.மகாராஜன்
மதுரை
2024-02-05 21:35:00
மதுரை: “போலி வழக்கறிஞர்களை உண்மையான வழக்கறிஞர்கள் ஊக்குவிக்கக்கூடாது” என மேகாலயா தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசியதாவது: “10 ஆண்டு நீதிபதி பணியில் 4 ஆண்டுகள் மதுரையில் பணிபுரிந்துள்ளேன். நீதிமன்ற நடவடிக்கையில் நான் யாருக்கும் பாகுபாடு பார்த்ததில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் மனம் புண்படி பேசியிருந்தால், அது வேலை நிமித்தமாகவே பேசியிருப்பேன். தனிப்பட்ட முறையில் இருக்காது. அப்படி தவறு இருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நீதி பரிபாலனத்துக்கு முக்கியமானது சமரசம். அதை பல வழக்குகளில் செய்துள்ளேன். அவ்வாறு செய்வதால் வழக்குகள் முடிவுக்கு வரும். ஒரு வழக்கு 5, 10 ஆண்டுகளாக நடக்கும் போது அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். சமரச தீர்வுக்கு பிறகு வழக்கு நீதிமன்றம் வந்தால் விரைவில் முடியும். படிப்படியாக தான் முன்னேற வேண்டும். வழக்காடிகளை ஏமாற்றக்கூடாது. ஏமாற்றுவது துரோகம். போதுமான நீதிபதிகள் இல்லை, வழக்குகள் நிலுவையில் உள்ளது என்கின்றனர். உரிமையியல் நீதிபதிகள் பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இளம் வழக்கறிஞர்கள் உரிமையியல் நீதிபதிகள் பணித் தேர்வுகளில் வெற்றிப்பெற்று நீதிபதிகளாக வரலாம். இதனால் மதுரை இளம் வழக்கறிஞர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது. நிறைய போலி வழக்கறிஞர்கள் உள்ளனர். தமிழகத்தில் 35 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல வழக்கறிஞர்களுக்கான வாய்ப்புகளை போலி வழக்கறிஞர்கள் கெடுத்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்தாவிட்டால் போலி வழக்கறிஞர்களின் கீழ் பணிபுரியும் நிலை நல்ல வழக்கறிஞர்களுக்கு ஏற்படும். இதனால் போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டாம்” என்றார். விழாவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் ஜெ.அழகுராம்ஜோதி, பி.ஆண்டிராஜ், ஜெ.ஆனந்தவள்ளி எம்.கே.சுரேஷ், வி.ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஆயிரம் கே.செல்வகுமார், டி.அன்பரசு, பி.கிருஷ்ணவேணி, ஆர்.வெங்கடேசன், வி.எஸ்.கார்த்தி ஆகியோர் பேசினர். நீதிபதிகள், பதிவாளர்கள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
மதுரையில் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலம் வழங்கிய வங்கி ஊழியர்!
சுப. ஜனநாயகசெல்வம்
மதுரை
2024-02-05 21:07:00
மதுரை: மதுரை வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாள் தன் மகள் ஜனனியின் நினைவாக இன்று மீண்டும் 91 சென்ட் நிலத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் தானமாக வழங்கினார். மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த கனரா வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாள், யா.கொடிக்குளத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே வழங்கினார். வங்கி ஊழியரின் ஈகைச் செயலை பாராட்டி தமிழக முதல்வர் குடியரசு தினத்தன்று முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல், மதுரையில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் வகையில் கூடுதலாக 91 சென்ட் நிலத்தை தானமான இன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் இன்று அலுவலகத்தில் வழங்கினார். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.
“நீட் தேர்வு... 2 ஆண்டு 8 மாதம் நிறைவாகியும் விடிவு பிறக்கவில்லை” - இபிஎஸ் @ அரூர்
எஸ்.செந்தில்
அரூர்
2024-02-05 20:46:00
அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடந்தது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்தப் பயிற்சி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, பலரும் ஏளனமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் மக்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவோடு 4 வருடம் சிறப்பான பொற்கால ஆட்சியை கொடுத்தோம். பல்வேறு திட்டங்களை அளித்தோம். மருத்துவத் துறையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லுாரிகள் அமைத்து கொடுத்தோம். 7.5 உள் உதுக்கீடு கொண்டு வந்தோம்.அன்றைய எதிர்கட்சியாக இருந்த திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள். தற்போது 2 ஆண்டு 8 மாதம் நிறைவாகியும் விடிவு பிறக்கவில்லை.ரத்து செய்ய ரகசியம் இருக்கு என உதயநிதி கூறினார். அந்த ரகசியத்தை இதுவரை தெரிவிக்கவில்லை, ஆட்சிக்கு வந்ததும் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து பல லட்சம் கையெழுத்து மக்களிடம் பெற்றனர். அதையும் உருப்படியாக செய்யவில்லை. அண்மையில் சேலம் இளைஞரணி மாநாட்டு அரங்கில் நீட் ரத்துக்காக பெறப்பட்ட கையெழுத்தெல்லாம் சிதறி கிடந்து குப்பைத் தொட்டிக்கு போனதை காண முடிந்தது. கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்தவர்கள் வியக்கும் வகையில் ஆட்சிக் கொடுத்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. உள்ளாட்சித் துறையில் தேசிய அளவில் 140 விருதுகள் பெறப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு முன் நிலவி வந்த கடுமையான மின்வெட்டு அதனை நிர்வாகத் திறமையின் மூலம் படிப்படியாக குறைக்கப் பட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டது. பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறைகளின் வசம் உள்ள 40 ஆயிரம் ஏரிகள், குளம் குட்டைகள் தூர் வார குடிமராமத்து திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. தூர்வாரிய அந்த வண்டல் மண்ணையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள செய்தது அதிமுக அரசு . விவசாயிகளுக்காக அதிமுக அரசுக் கொண்டு வந்த பல்வேறுத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன" என்றார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, வேலுமணி, கே.சி.கருப்பண்ணன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் யசோதா மதிவாணன், தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திரசேகரன், செயலாளர் சேகர்,பொருளாளர் தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” - அண்ணாமலை @ வந்தவாசி
இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை
2024-02-05 20:21:00
திருவண்ணாமலை: “இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” என வந்தவாசியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று (பிப். 5) மாலை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “சரித்திரத்தை மாற்றிய ஊர், வந்தவாசி. 250 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு படைக்கும் ஆங்கிலேய படைக்கும் யுத்தம் நடைபெற்றது. வந்தவாசி போர் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று, நாடு முழுவதையும் ஆண்டனர். நாட்டை விட்டு பிரெஞ்ச் படையினர் வெளியேறினர். இதேபோல், ஆன்மிகமும் ஆழமாக உள்ள ஊராகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப் பெருமானுக்கு சிவன் காட்சிக் கொடுத்த தவளகிரீஸ்வரர் மலை உள்ளது. 120 அடி உயர கோபுரம் உள்ள பாண்டுரங்கர் கோயில் உள்ளது. வந்தவாசி ‘கோரை பாய்’ தமிழகத்தில் புகழ் பெற்றது. பாய் உற்பத்தியில் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேசூரில் நீர் மேலாண்மையை காப்பாற்றியதாக கல்வெட்டு உள்ளன. விவசாயத்துக்கு பெயர் பெற்ற ஊராகும். 3.50 லட்சம் அரசு வேலை எங்கே? - தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சாதி அரசியல், ஊழல் மற்றும் அடாவடியை மையப்படுத்தி 70 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நான்கும் மக்களுக்கு பிடிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 31 மாதங்களாக 10,400 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களின் வளர்ச்சிக்காக இல்லாமல், குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். அவரது மகன், மருமகன், அமைச்சர்களின் வளர்ச்சிக்காக மட்டும் ஆட்சி நடத்தப்படுகிறது. கொடுமையான வாழ்க்கையுடன் விவசாயிகள் வாழ்கின்றனர். செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் திட்டத்துக்கு மூன்று போகம் விளையக்கூடிய நிலங்களை கொடுக்க மறுத்த விவசாயிகளை திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. களத்தில் பாஜக இறங்க தயாரானதும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்து கைது செய்தது திமுக அரசு மட்டும்தான். ஊழல் மலிந்த திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளன. சாதாரண மக்களுக்கும் பத்ம விருது... - இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வலிமைக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக மீண்டும் பிரதமாக வர வேண்டும். உலகளவில் மிகப் பெரிய பொருளாதார நாடாக 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மோடியின் ஆட்சி, நேர்மையான ஆட்சி என பெயர் பெற்றுள்ளது. 2014, 2019-ல் பெரும்பான்மை இருந்தும், நாடாளுமன்ற சட்டத்தை இயற்றாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ராமர் கோயிலை பிரதமர் மோடி கட்டி உள்ளார். ஆங்கிலேயர்கள் மற்றும் முகாலயர்கள் ஆட்சியில் தொலைத்த நமது நாட்டின் கலாச்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதியும் கட்டப்பட உள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி, சமூக நிதியை நிலை நாட்டி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பணக்கார நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பத்ம விருதுகளை, சாதனை படைத்த சாதாராண மக்களுக்கும் வழங்கி கவுரவித்துள்ளார். ஏழை மக்களை நோக்கி மோடியின் ஆட்சி செல்கிறது. இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடி மட்டுமே. தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ்: கரூர், சிவகங்கையில் கூட்டம் நடத்தி ஜோதிமணிக்கும், கார்த்திக் சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். தொண்டர்கள் வெளியே சென்றுவிட்டனர், தலைவர்கள் மட்டும் காங்கிரசில் உள்ளனர். மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி பாஜக. மோடி கைகாட்டும் நபரிடம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியை கொடுங்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 39 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வந்தவாசியில் விஆர்எஸ் மற்றம் ஏபிஆர் நிதி நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் முதலீடு செய்தவர்களிடம் ஒப்படைக்க டிஜிபியிடம் மனு அளித்து பாஜக போராடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கும்” என்றார்.
தூத்துக்குடியில் முதலாவது சுற்றுப் பயணம்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் ஆர்வமுடன் மனு அளிப்பு
ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
2024-02-05 18:39:00
தூத்துக்குடி: திமுக தேர்தல் அறி்க்கை தயாரிப்புக் குழுவினர் பொதுமக்கள் கருத்துகளைக் கேட்கும் பணியை தொடங்கியுள்ளனர். முதலாவதாக இன்று தூத்துக்குடியில் வைத்து தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழுவினர் கேட்டறிந்தனர். தொழில் துறையினர், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பங்கேற்று திமுக குழுவினரிடம் மனு அளித்தனர். தேர்தல் அறிக்கை குழு: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகள், கோரிக்கைகளை கேட்டறிகின்றனர். அதன்படி இக்குழுவினர் முதல் சுற்றுப்பயணத்தை தூத்துக்குடியில் இன்று தொடங்கினர். கனிமொழி எம்பி தலைமையில் குழு உறுப்பினர்களான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி, டி.கே.எஸ்.இளங்கோவன் , தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் எம்எல்ஏ, எழிலரசன் எம்எல்ஏ, ராஜேஸ்குமார் எம்பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். முக்கிய கோரிக்கைகள்: இதில் தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், பெண்கள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அளித்தனர். தூத்துக்குடி துறைமுகம், விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். உப்பு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆகிய தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன இதில் முக்கியமான கோரிக்கைகளாகும். நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்கள், வசதிகள், கோரிக்கைகள் தொடர்பாக குழுவினரிடம் மனுக்களை அளித்தனர். விரைவாக அறிக்கை தயாரிப்பு: தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''திமுக தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் குழு முதன்முதலாக பணிகளை தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறையினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து மீனவர்கள், தென்னை விவசாயிகள், மிளகாய் விவசாயிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். விருதுநகரில் இருந்து பட்டாசு தொழிலில் உள்ளவர்கள், தூத்துக்குடி உப்பு தொழிலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இந்த கருத்துகளை எல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நல்ல அரசாக, மக்களை மதிக்க கூடிய அரசாக, மாநில உரிமைகளின் மீது நம்பிக்கை இருக்க கூடிய அரசாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர். தூத்துக்குடி, சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு கூட மத்திய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மக்கள், மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியோடுதான் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைவர் மட்டும் தான் அறிவிக்க முடியும். அதன்படி முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாளை (பிப்.6) கன்னியாகுமரியிலும், நாளை மறுநாள் (பிப்.7) மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சையிலும், 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும், 11-ம் தேதி திருப்பூரிலும், 21, 22, 23 தேதிகளில் சென்னையிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கின்றனர். இந்த கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு: அமர் பிரசாத் ரெட்டி முன்ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-05 18:20:00
சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் அது விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனவும் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், "இது ஒரு பொய் வழக்கு. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளைக்கூட மேற்கொள்ள கூட முடியவில்லை. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக இருந்தால், அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.7) ஒத்திவைத்தார்.