Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
சென்னை ரயில்வே கோட்டத்தில் 13 ரயில் நிலையங்களில் விரைவில் நடைமேம்பாலம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:12:00 |
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 13 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, 10 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு, நடைமேம்பாலம் அமைத்தல் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாக செல்ல நடைமேம்பாலம் பேருதவியாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை எழும்பூர் - விழுப்புரம், அரக்கோணம் - ஜோலார்பேட்டை, அரக்கோணம் - ரேணிகுண்டா, அரக்கோணம் - செங்கல்பட்டு இந்ததடத்தில் ரூ.55 கோடி மதிப்பில் 24 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இவற்றில், வியாசர்பாடி ஜீவா நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
10 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.இவற்றை மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ளரயில் நிலையங்களில் நடைமேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
இதுதவிர, அம்ரித் பாரத் நிலையங்கள் திட்டத்தின் கீழ், ஜோலார்பேட்டை, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், அம்பத்தூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.83 கோடி மதிப்பில் 12 மீட்டர் அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
|
கோடை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20% வரை அதிகரிக்க திட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:11:00 |
சென்னை: கோடை காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆவின் ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் ரூ.45 கோடி வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது: வரும் கோடைகாலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். கோடைகாலத்தில் ஆவின் ஐஸ் கிரீம்க்கு தேவை அதிக அளவில் இருக்கிறது.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் சென்னை அம்பத்தூர், சேலம், மதுரையில் ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலைகள்உள்ளன. இங்கு ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், மோர் உள்ளிட்ட பால் பொருட்களை அதிக அளவு தயாரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். ஐஸ் கிரீம் வைக்கும் குளிரூட்டும் சாதனங்களை தயார் செய்ய உள்ளோம்.
இதுதவிர, இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் மோர் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
|
மக்களவை தேர்தலையொட்டி பாஜக மேலாண்மை குழு பயிலரங்கம்: அண்ணாமலை பங்கேற்பு | செய்திப்பிரிவு | காட்டாங்கொளத்தூர் | 2024-02-12 06:10:00 |
காட்டாங்கொளத்தூர்: மக்களவை தேர்தல் 2024 குறித்த தமிழ்நாடு பாஜக மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலை.யில் நடைபெற்றது.
இதில் ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக 5 முறை ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.
முதல்வருக்கு 65 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 36 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜகவை சேர்ந்த நாங்கள் செய்த நலத்திட்டங்களைக் கூறிமக்களைச் சந்திக்கிறோம். ஆனால்,திமுகவினர் வடக்கு, தெற்கு என்ற பிரிவினை வாதத்தை முன்னிறுத்தி மக்களைச் சந்திக்கிறார்கள். நான் பாதயாத்திரை சென்று மக்களைச் சந்தித்த வகையில் அனைத்து மக்களும் மோடிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.
மீண்டும் மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இருப்பினும் நாம் ஓய்ந்து விடக்கூடாது. நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 450 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும்பான்மையோடு மோடியை பிரதமராக அமர வைக்கவேண்டும். அதேபோல் பாதயாத்திரை இறுதிநாளன்று 20 லட்சம் பேர் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நாளை முதல் தேர்தல் வேலையைத் தொடங்க வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று இங்கிருந்து 40 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
|
பணிப் பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை: சென்னை பல்கலை. தற்காலிகப் பேராசிரியர்கள் புகார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:08:00 |
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று அங்கு பணிபுரியும் தற்காலிகப் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி மையம் வாயிலாக 19 இளநிலை, 21 முதுநிலை, 21 பட்டயம் மற்றும் 17 சான்றிதழ்கள் என மொத்தம் 78 வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.
இவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவது வழக்கமாகும். அதன்படி சென்னைபல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துவிட்டு தற்காலிகப் பேராசிரியர்களாக பலர் நீண்டகாலமாக பணிபுரிகின்றனர்.
ஆனால், அவர்களுக்கான பணிப்பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக தற்காலிக பேராசிரியர்களுக்கு ஊதியம்கூட 3 மாதத்துக்கு ஒருமுறையே அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் தற்காலிக பேராசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார் கடிதம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.சத்தியசீலன் கூறும்போது, ‘‘கடந்த ஒராண்டு காலமாகஎங்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது.
இது எங்களை மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ஊதியத்தை மாதந்தோறும் வங்கியில் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பணி பாதுகாப்பு வழங்கும் பொருட்டு அடையாள அட்டை, அனுபவச் சான்று போன்றவற்றை வழங்க வேண்டும். யுஜிசி வழிகாட்டுதலின்படி ஊதியம் (ரூ.50,000), மருத்துவ விடுப்பு ஆகியவை வழங்க வேண்டும். நீண்டகாலம் தற்காலிகமாக பணிபுரிவோரை நிரந்தரப்படுத்த வேண்டும்’’ என்றார்.
|
பிஎன்எஸ் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற கனரக வாகன ஓட்டுநர் கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:07:00 |
சென்னை: பாரதிய நியாய சங்கீதா (பிஎன்எஸ்) என்ற புதிய சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரூ.7 லட்சம் அபராதம்: ஒட்டுநர் கவனக்குறைவு காரணமாக மரணம் ஏற்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது உருவாக்கப்பட்ட பாரதிய நியாய சங்கீதா (பிஎன்எஸ்) சட்டத்தின்படி, ஓட்டுநர் மரண விபத்தை ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் தண்டனையும், விபத்து நடந்த இடத்திலிருந்து ஓட்டுநர் தப்பித்து சென்றால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கெதிராக வடமாநிலஒட்டுநர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து ஒன்றிய அரசு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழல் எங்களுக்கு மனவேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கத்தில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:00:00 |
சென்னை: அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு: சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல, கல்லூரி சாலை,ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்திசாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையலாம். இது ஒருவழிபாதையாக செயல்படும்.
இதேபோல, அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்ஜிஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லலாம். (மாற்றுப் பாதை ஒருவழி பாதை).
அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல, டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகவோ, அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை சாலை, ஜி.என்.செட்டி சாலை வழியாகவோ அண்ணா மேம்பாலம் செல்லலாம்.
இதேபோல, பிற உட்புற சாலைகளிலும் தேவைக்கு ஏற்பபோக்குவரத்து மாற்றம் செய்யப்படும். பிப்ரவரி 11-ம் தேதி (நேற்று) முதல் ஒரு வாரத்துக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
இன்று தேமுதிக கொடிநாள் | தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:59:00 |
சென்னை: தேமுதிகவின் கொடிநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கட்சிக் கொடியேற்றுவதுடன், முகாம்கள் அமைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்.12-ம் தேதி தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடிநாளாகும்.
ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, உணவு, உடை மற்றும் லஞ்சம்-ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி போன்ற புரட்சிகரமான கொள்கைகளை, கொடியை அறிமுகப்படுத்திய அன்று கட்சி நிறுவனர் விஜயகாந்த் உறுதி செய்தார்.
நமது தலைவர் இல்லாத முதல் கொடிநாளில், அனைத்து மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், கிராமப்புற கிளைகளில் பழைய கொடிகளை அகற்றி, புதிய கொடியை ஏற்ற வேண்டும். கொடிகள் இல்லாத இடத்தில் புதிய கொடிகளை அமைத்து, அங்கு விஜயகாந்த் படத்தை வைத்து, நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைத்து, புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி, அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக தேமுதிகவை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
|
கனிமொழி எம்.பி.யிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தீண்டாமை சுவரை இடித்து அகற்றிய வருவாய் துறையினர் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-02-12 05:52:00 |
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவூரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் கனிமொழி எம்.பி.யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த சுவரை வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர்கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர், பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டனர்.
அப்போது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஊராட்சிக்கு உள்பட்டதேவேந்திர நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அருகேஉள்ள குடியிருப்பு பகுதியினர், நாங்கள் பயன்படுத்தக் கூடாதுஎன்பதற்காக ஊராட்சி சாலைகளை மறைத்து, தீண்டாமைச் சுவர் அமைத்துள்ளனர். சுவரை அகற்றக் கோரி முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர்உள்ளிட்டோரிடம் மனு கொடுத்ததன் பேரில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுவரை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்ற எம்.பி. கனிமொழி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனடியாக தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் சேவூர் போலீஸார் முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தீண்டாமைச் சுவரை இடித்துஅகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள சுவர் இன்று இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: மத்திய அமைச்சர் முருகன் விமர்சனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:47:00 |
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக அரசு தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தெரிவிக்கிறீர்கள் என டி.ஆர்.பாலுவை சொன்ன ஒரே காரணத்துக்காக அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதுவரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல், சுமூகமாக நடந்தது. ஆனால், சென்னையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சில காரணங்களை கூறி அனுமதி மறுத்திருக்கின்றனர். அதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து, பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
|
செல்போன் செயலியில் முதலீடு செய்ய புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-12 05:46:00 |
கோவை: கோவையில் செல்போன் செயலிமுதலீடு விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய வாடிக்கையாளர்கள் இணைய முடியாத வகையில் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் செயலியைப் பதிவு செய்து, அதில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப) வருவாய் ஈட்டலாம் என அறிவிக்கப்பட்டது.
இதை நம்பிய ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியது தெரியவந்தது.
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து விதிகளை மீறி முதலீடுதிரட்டியது தொடர்பாக, தனியார் நிறுவன இயக்குநர் சக்தி ஆனந்தன்மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, செயலியில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர், அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த பலர் கோவை மாநகர காவல் ஆணையரகத்துக்கு வந்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சக்தி ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகேபோராட்டம் நடத்தப் போவதாகத் தகவல் பரவியதால், அங்கு நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, தனியார் நிறுவனத்தின் செயலி முடங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், புதிய வாடிக்கையாளர்கள் இணைய முடியாத வகையில்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும்,ஏற்கெனவே முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து வருவாய் கிடைக்குமா என்ற கேள்வியும் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.
|
டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வெற்றி துரைசாமி குடும்பத்திடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:40:00 |
சென்னை: டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக வெற்றி துரைசாமி குடும்பத்தினரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமியை காணவில்லை. கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்தக் கறை, திசுக்களை இமாச்சல் போலீஸார் சேகரித்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அது வெற்றி துரைசாமியின் ரத்தக் கறைதானா என்பதை உறுதிசெய்ய, அவரது குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டனர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெற்றி துரைசாமி குடும்பத்தினரிடம் நேற்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் மற்றும் இமாச்சலில் சட்லெஜ் ஆற்றில் கிடைத்த திசுக்களின் டிஎன்ஏ ஒப்பீடு செய்யப்பட்ட பிறகே, அது வெற்றி துரைசாமியின் ரத்தக் கறை, திசுக்களா என்பது தெரியவரும்.
|
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வலுக்கும் போராட்டங்கள்: 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்த மக்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:32:00 |
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளான பயணிகள் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கடந்த டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வார இறுதி நாளையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்து நிரம்பி வழிந்ததால், முன்பதிவு செய்யாதவர்களை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் பேருந்துகளுக்காக பயணிகள் பல மணி நேரம் காத்து நின்றனர்.
நேரம் அதிகரிக்க பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருந்த நிலையில், நள்ளிரவில் பேருந்துகள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும் விடியவிடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனால் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து முடங்கிய நிலையில், அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி, கூடுதல் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மறுபுறம் பேருந்துகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலரும் நடைமேடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் படுத்து உறங்கினர்.
இதையடுத்து 10-ம் தேதி கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணி வரை பேருந்துகள் நிரம்பி காணப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பேருந்துகள் குறைந்த நிலையில், மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்தது. உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் நெடுஞ்சாலையில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையிலும் அநேக மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சிவசங்கரிடமும், அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்வதாக பயணிகள் குற்றம்சாட்டினர். கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வலியுறுத்தினர்.
கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டபோது பிரச்சினைகள் எதையும் சந்திக்கவில்லை என்றும், தற்போது மாறிமாறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் எனவும் கூறினர். மேலும், கிளாம்பாக்கத்தில் உணவகங்கள் குறைவாக இருப்பதோடு விலையும் அதிகமாக உள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, வழக்கமான நாட்களில் 1,097 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 9,10 தேதிகளில் முறையே 1,592, 1,746 பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பிப்.9-ம் தேதி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. பொதுவாகவே இரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
நள்ளிரவு நேரத்தில் வருவோர் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை என செய்தி பரப்புகின்றனர். இவ்வாறு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
|
மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது: சென்னை பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:29:00 |
சென்னை: மோசமான ஆட்சி நடப்பதால் தமிழகம் சீரழிந்து கொண்டிருப்பதாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 200-வது சட்டப்பேரவை தொகுதியாக துறைமுகம் தொகுதியில் நடைபயண பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார்.
அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மக்களவை தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவருமான தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கூட்டணி குறித்து ஆலோசனை: இதைத் தொடர்ந்து விமான நிலையத்திலேயே பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் தங்கசாலைக்கு ஜெ.பி.நட்டா வந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள ராமர் கோயிலில் நட்டா சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:
தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு என்றுமே தனி பாசம் உண்டு. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழகத்தை பற்றியும், தமிழின் பெருமைகள் பற்றியும் பேசுவது பிரதமர் மோடியின் வழக்கம். எல்லாவற்றையும் விட மக்களவை வளாகத்தில் தமிழகத்தின் பெருமை சொல்லும் செங்கோலை நிறுவி அளவில்லா சிறப்பை சேர்த்திருக்கிறார். தொன்மை வாய்ந்த கலாசாரம், மொழி பண்பாட்டை கொண்ட தமிழகத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி என்றும் மறந்ததில்லை. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் மிக மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது. ஜனநாயகம் குறித்த அடிப்படை அறிவு இல்லை. பொதுக்கூட்டத்துக்கு வரும்போது கவனித்தேன். மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டன. இதுவா தமிழகத்தின் கலாச்சாரம்?
தமிழகத்தின் பாரம்பரியத்தை மதிக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும் காலம் வந்துவிட்டது. திமுகவின் விளக்குகள் அணைக்கப்படும். இதையொட்டியே ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது. ஊழல்வாதிகள் தண்டிப்படுகின்றனர். 500 ஆண்டுகால போராட்டத்துக்கு விடை கொடுத்து அயோத்தியில் உலகம் வியக்கும் வண்ணம் ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறாக நாடு முழுவதும் மோடி அலை வீசி வருகிறது. மறுபுறம் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் வாரிசு அரசியல் மட்டும்தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “பிரதமர் மோடியின் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது யாத்திரையின் நோக்கம். இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பாஜக எம்பிக்கள் இருக்கின்றனர். அதேபோல, சென்னை நகரமும் பாஜக பக்கம் வரவேண்டும்” என்றார்.
|
கார் சிலிண்டர் வெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்தது என்ஐஏ | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 05:24:00 |
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவழக்கில் மேலும் 4 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து தீவிரவாத தொடர்புடைய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் 2022 அக்.23-ல் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் உள்ள தனியார் அரபிக் கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச் சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், சென்னை பிரிவு என்ஐஏ அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக கோவை, சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல்வேறு பயங்கரவாத செயல்கள் உள்பட பல்வேறு சட்ட விரோத மற்றும் தேச விரோத செயல்கள் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் என்ஐஏ தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஜமீல் பாஷா உமரி, மவுலவி ஹுசைன் ஃபைசி, இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும், சோதனையின்போது ஏராளமான மின்னணு சாதனங்கள், பொருட்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். 6 லேப்டாப், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி (மெமரி) கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவை இதில் அடங்கும்.
மதராஸ் அரபிக் கல்லூரி, கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடைய 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அரபு மொழி வகுப்புகளின் வேடத்தில், தீவிரவாதிகளின் கொள்கைகளைப் பிரசங்கம் செய்வதன் மூலமும் வன்முறை ஜிஹாதை ஊக்குவிப்பதன் மூலமும் ஏமாறக்கூடிய இளைஞர்களை ரகசியமாக தீவிரவாதிகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடக தளங்கள், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செல்போன் மூலமும் தீவிரமயமாக்கல் ஆன்லைனில் நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளர்கள் வகுப்புகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர்.
2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 குற்றவாளிகள் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், 2019-ல் இலங்கை கொழும்பில் 250-க்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்ற நபரை தற்போது விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் புகழ்ந்துள்ளனர்.
மேலும், ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்கும், வளர்ப்பதற்கும் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் சென்னை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள். மேலும், பயங்கரவாத தொடர்பு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
|
ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 04:45:00 |
சென்னை: தெற்கு ரயில்வேயில் விபத்துகளை தடுக்கும் வகையில், சிக்னல்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துகள் நேரிட்டன. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலி மின்சாரரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த டிசம்பரில் செங்கல்பட்டுஅருகே சரக்கு ரயிலின் 9 பெடடிகள் தடம்புரண்டதில், தண்டவாளம் சேதமடைந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த இரு ரயில் விபத்துகளை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பணிகள்நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, ரயில் மோதலை தடுக்கும் கவாச் முறை நிறுவுவது, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மனித தவறுகளை தவிர்க்க, தண்டவாளங்களை அமைக்கும் பணியில்இயந்திரங்களைப் பயன்படுத்துதல், வெல்டிங் பயன்பாட்டைக் குறைக்க, நீண்ட தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன.
தண்டவாளங்களில் விரிசல் ஏற்படாமல் இருக்க, வெல்டிங் குறைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், இன்ஜின்களில் உள்ள கட்டுப்பாட்டு சாதனங்கள் லோகோ பைலட்டுகளின் விழிப்புணர்வை மதிப்பிட உதவும். இதுதவிர, சாதாரண பெட்டிகளுக்கு மாற்றாக, எல்எச்பி என்ற நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தண்டவாளம் மேம்படுத்துதல் பணிக்கு 1,240 கோடியும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் பணிக்கு ரூ.510 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும்.
|
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 04:41:00 |
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (பிப். 12) வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இடைநிலை ஆசிரியர் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 04:33:00 |
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்கவிருந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (எஸ்எஸ்டிஏ) பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை வலியுறுத்தி கடந்த செப்டம்பரில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஊதியமுரண்பாடு தொடர்பாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவின்அறிக்கை 3 மாதத்தில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது 4 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், அரசு சார்பில் இதற்கான குழு அமைத்து ஓர்ஆண்டாகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(பிப்.12) முதல் டிபிஐ வளாகத்தில்எங்கள் இயக்கத்தின் சார்பாகதொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிர்வாக காரணங்களால் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
தரைப்பாலம் சீரமைக்கப்படாததால் ரேஷன் கடை செல்ல 25 கி.மீ. பயணிக்கும் கிராம மக்கள் @ சாத்தூர் | இ.மணிகண்டன் | சாத்தூர் | 2024-02-12 04:08:00 |
சாத்தூர்: சாத்தூர் அருகே வைப்பாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்பட வில்லை. இதனால், ஆற்றில் தண்ணீர் வரும்போது அச்சன்குளம் கிராம மக்கள் 25 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வரும் நிலை உள்ளது.
சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளம் - இரவார்பட்டி இடையே வைப்பாறு கடக்கிறது. இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே தரைப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி சேதம் அடைந்தது. அப்போது, முதல் தற்போது வரை பாலம் சீரமைக்கப்படவில்லை. இந்தத் தரைப் பாலம் வழியாகவே அச்சன்குளம் கிராமத்தில் உள்ள 126 குடும்பத்தினரும் ஆற்றைக் கடந்து சென்று இரவார் பட்டியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஆனால், ஆண்டுதோறும் வெம்பக்கோட்டை அணை யிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இந்தத் தரைப் பாலத்தைக் கடக்க முடி யாமலும், அவசரத் தேவைக்காகச் சென்று வர முடியாமலும் கிராம மக்கள் தவிக்கின்றனர். இதனால், ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது வேறு வழியின்றி அச்சன்குளம் கிராமத்தினர் சாத்தூர் அல்லது வெம்பக்கோட்டை வழியாக 25 கிமீ. தூரம் சுற்றிச் சென்று இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று வருகின்றனர்.
அண்மையில் பெய்த தொடர் மழையால் அணைகள் நிரம்பின. இதனால் வைப்பாற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் பெருக் கெடுத்துச் செல்கிறது. தற்போது வரை, அச்சன்குளம் கிராம மக்கள் 25 கி.மீ. தூரம் பயணம் செய்து இரவார்பட்டிக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இது குறித்து அச்சன்குளம் கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் வசிக்கும் பலரும் கூலித் தொழிலாளர்கள். பலர் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வருகிறோம். பெரும்பாலானோர் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசியை பயன்படுத்து கிறோம். அதோடு, வெம்பக் கோட்டைக்கு ஒரு பேருந்திலும், அங்கிருந்து இரவார்பட்டிக்கு மற்றொரு பேருந் திலும் செல்ல வேண்டியுள்ளது. மீண்டும், இதே போன்று திரும்பிவர வேண்டும். இதனால் ஒரு நாள் வேலைக்குச் செல்ல முடியாமல் ஊதியம் இழப்பு ஏற்படுகிறது.
சேதமடைந்த தரைப் பாலத்தைச் சரி செய்து தருமாறு பலமுறை அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர் களிடமும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அச்சன்குளம் - இரவார்பட்டி இடையே வைப்பாறு தரைப் பாலத்தை உடனடியாகச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
|
திருச்சி - சென்னை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் வசூல்: பயணிகள் அதிர்ச்சி | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-12 04:06:00 |
திருச்சி: விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அனைத்து அரசு பேருந்துகளும் முழு இருக்கைகள் நிரம்பிய நிலையிலேயே இயக்கப்பட்டன.
இதனால், திருச்சியில் இருந்து நேற்று சென்னைக்கு இயக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி, திருச்சி - சென்னை இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூ.1,610 வசூலிக்கப் பட வேண்டும். ஆனால் நேற்று திருச்சியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆம்னி பேருந்தில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப் பட்டது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் ஹரி ஹரன் கூறியது: விசேஷ மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் போது, பயணிகள் கூட்டம் அதிகரிப்பை காரணம் காட்டி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மிக மிக அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே இது போன்ற சமயங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் செயலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: சென்னைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கத்தில் பற்றாக் குறை ஏற்படும் போது, அவற்றை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுகிறது. இதை தடுக்க விடுமுறை நாட்களில் கூட, ஆங்காங்கே ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு சோதனையிடப் படுகிறது. இது போன்ற செயல்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
|
அரூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர், நிழற்கூட வசதி கூடுதலாக செய்து தர கோரிக்கை | எஸ்.செந்தில் | அரூர் | 2024-02-12 04:04:00 |
அரூர்: அரூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பயணிகள் அவதிப்படுவதை தவிர்க்க கூடுதலாக குடிநீர், நிழற்கூட வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கி நவீனப்படுத்தும் விதமாக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ரூ.3 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது புதிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக தற்காலிக பேருந்து நிலையம், வர்ண தீர்த்தம் முதல் டிஎஸ்பி அலுவலகம் வரை உள்ள சாலையின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் தற்காலிகப் பேருந்து நிலையப் பகுதியில், போதிய அளவிற்கு குடிநீர் மற்றும் நிழற்கூட வசதிகள் இல்லையென பொது மக்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பேரூராட்சி சார்பில் தற்காலிக கழிப் பறைகள் மற்றும் ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது.
இதனால் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் தற்காலிக பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் விலைக்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலை உள்ளது. தவிர கொளுத்தும் வெயில் காரணமாக அங்குள்ள கடைகளின் நிழலில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் கூடுதலாக நிழற்கூடங்கள்அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேருந்து பயணி ராஜேந்திரன் கூறுகையில், பொது மக்களின் வசதிக்காக ஓரிரு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் போதுமானதாக இல்லாததால் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. சுமார் 400 மீட்டர் தூரம் வரை பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் நிலையில் பயணிகளுக்கான போதிய நிழற்கூடம் இல்லை. கடைகளின் முன்பு நிழலுக்காக நிற்பதற்கும், கடைகளில் உள்ள குடிநீரை அருந்து வதற்கும் கடைக்காரர்கள் அனுமதிப்பதில்லை. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில் பயணிகளின் வசதிக்காக தேவையான வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டும், என்றார்.
|
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம் | செய்திப்பிரிவு | உடுமலை | 2024-02-12 04:00:00 |
உடுமலை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு பிஏபி பாசனத்தில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி, உப்பாறு பாசன விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருமூர்த்தி அணைக்குள் குடியேறும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்த நிலையில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் நேற்று 19-ம் நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவக் குமார் மற்றும் சில விவசாயிகள், அங்குள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலமணி நேர பேச்சு வார்த்தைக்குப் பின்னர் விவசாயிகள் சமாதானமடைந்து, செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தனர். பின்னர், காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
|
‘திமுக ஆட்சி மிக மோசமானது’ - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா @ சென்னை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 22:54:00 |
சென்னை: “தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்தது. “நான் இங்கு வந்தபோது சந்தை மூடப்பட்டு உள்ளது. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளன. அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் எனக்கு எமர்ஜென்சி நாட்களை நினைவூட்டுகிறது.
ஆனால், நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஆட்சியில் இருந்து வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. யாரையும் கடை திறக்கவோ, வெளியில் வரவோ போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுதான் ஜனநாயகமா?
தேசிய அளவில் தமிழகத்தில் பங்கு முக்கியமானது. பிரதமர் மோடிக்கு தமிழகம் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுபவர் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
தமிழகம் மோசமான தலைமையால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி மிக மோசமானது” என அவர் தெரிவித்தார்.
|
''தமிழகத்தில் மக்களின் 60% வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது'': ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு | இரா.தினேஷ்குமார் | திருவண்ணாமலை | 2024-02-11 19:12:00 |
திருவண்ணாமலை: தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தில் 40% மட்டுமே திட்டப் பணிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது; 60% வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று (பிப். 10) இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தியாவை வல்லாசு நாடாக பிரதமர் மோடி மாற்றி கொண்டிருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் 13-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அரிசி, கோதுமை ஆகியவற்றை வாங்கிய நிலையில் இருந்து, தற்போது உலக நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். ராணுவ தளவாடங்களில் சாதாரண எந்திர துப்பாக்கி முதல் நவீன துப்பாக்கி வரை, 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பிரமோஸ் ஏவுகனை பலநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ராணுவத்தை வலுப்படுத்துவது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றோடு, ஏழை எளிய மக்களின் வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள ஒரு பிரதமரை பெற்றுள்ளோம். 10 ஆண்டுகளாக ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார்.
500 ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை இருந்தது. இதற்காக பலர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, ராமர் கோயிலை அழகாக கட்டி முடித்து 500 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் வட மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் மோடியின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகள் முதல் 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நாடாளுமன்றத்தில் மோடி தெரிவித்துள்ளார். நல்லாட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதால், திமுக எளிதாக வெற்றி பெறும் என நினைக்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில், ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சி அமைக்காது என கருத்து கணிப்பில் கூறினர். ஆனால் 3 மாநிலங்களில் ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்துள்ளது. பிரதமர் மோடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதால் கருத்து கணிப்புகள் எடுபடாது. 2014-ல் நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது. அப்போது திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி இருந்தது. அப்போது 3.25 லட்சம் வாக்குகளை தாமரை சின்னம் பெற்றது.
10 ஆண்டுகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், கழிப்பறை கட்டிக் கொடுக்கும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்துக்கு வரும்போது தமிழக அரசின் திட்டங்களாக மாறிவிடுகின்றன. என் மண், என் மக்கள் யாத்திரையால், தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை பாஜக பெற்றுள்ளது. தமிழகத்தில் மாற்று சக்தியாகவும், இளைஞர்களின் நம்பிக்கையை பெற்று அண்ணாமலை வளர்ந்து வருகிறார். நேர்மையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற திட்டப் பணிகளில் 40 சதவீத நிதி மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. மக்களின் 60 சதவீத வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது. நல்லாட்சி அமைய வேண்டும் என அண்ணாமலை குரல் கொடுக்கின்றார். ஆரணி தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்." என்று ஏ.சி.சண்முகம் கூறினார்.
|
மதுரை | அரசியல் அழுத்தத்தால் மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம் - பாதிக்கப்படும் நிர்வாகப்பணிகள் | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-11 18:53:00 |
மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், அரசியல் அழுத்தம் காரணமாக திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 5 மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நிர்வாகப்பணிகள் ஸ்தம்பிக்கத் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மதுரை மாநகராட்சி அரசியல் முக்கியத்துவம் பெற்ற மாநகராட்சியாக திகழ்கிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் அரசியல் அழுத்தம், கவுன்சிலர்களுடைய நெருக்கடி, தொழில் அதிபர்களுடைய அரசியல் பின்னணி மற்றும் ஒத்துழைக்காத ஒப்பந்ததாரர்கள் போன்றவற்றை சமாளித்து நிர்வாகத்தை மேற்கொள்வது, இந்த மாநகராட்சி ஆணையாளராக வரக்கூடியவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனால், ஆணையாளராக இருப்பவர்கள், 6 மாதம் மதுரையில் பணிபுரிவதே அபூர்வமாக இருந்து வருகிறது.
கடைசியாக மதுரை மாநகராட்சியில் அதிக காலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்தவர் விசாகன். இவரது காலத்தில் மேயர், கவுன்சிலர்கள் இல்லாததால் இவரால் ஒரளவு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இவருக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் மாநகராட்சி ஆணையாளராக வந்தவர்கள் அதிக காலம் நீடிக்க முடியவில்லை. விசாகனுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் 6 மாதங்களிலயே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக வந்த சிம்ரன் ஜீத் சிங், பிரவீன் குமார் போன்றோரும் வந்த வேகத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஏன், எதற்கு இடமாற்றம் செய்யப்பட்டோம் என்று தெரியாமலேயே விரக்தியுடன் இவர்கள் சென்றனர்.
கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லி.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தற்போது இவரும் திடீரென்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக உள்ள தினேஷ்குமார், மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லி.மதுபாலன் ஆணையாளராக வந்து மூன்றரை மாதத்திலேயே தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 5 மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையாளர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் மாநகராட்சி நிர்வாகப்பணிகள், வளர்ச்சிப்பணிகள் ஒட்டு்மொத்தமாக ஸ்தம்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலனுக்கும், மேயர் இந்திராணிக்கும், கடந்த சில மாதங்களாக ஒத்துப்போகவில்லை. அதிருப்தியடைந்த மேயர் தரப்பினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர், கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதுபோல், மற்றொரு புறம் அமைச்சர் பி.மூர்த்தி தரப்பினருடனும் ஆணையாளர் லி.மதுபாலன் முரண்பட்டு நின்றார். புதிய லே அவுட்களுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததார்களை விரட்டி வேலை வாங்குவது, மாநகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் லி.மதுபாலன் ஆளும்தரப்பு அழுதத்திற்கும், தலையீட்டுக்கும் அடிப்பணியவில்லை. இதனால், இரு அமைச்சர்கள் தரப்பின் அரசியல் அழுத்தத்தின் காரணமாக ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் கார்த்திகேயன், சிம்ரன் ஜீத் சிங், பிரவீன்குமார் போன்றவர்களும் இதுபோல் மதுரை அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் சென்றனர். தற்போது அந்த பட்டியலில் லி.மதுபாலனும் சேர்ந்துள்ளார். லி.மதுபாலன் நேர்மையான அதிகாரி. அந்த நேர்மைதான், அவரது பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், மதுரை மாநகராட்சியில் யார் அதிகார மையம் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் அமைச்சர் பி.மூர்த்தி, மற்றொரு புறம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறார்கள். இதற்கிடையில் மேயர், கவுன்சிலர்களுடைய நெருக்கடியையும் சமாளித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். இதை சமாளித்துக் கொண்டுதான் இந்த 3 மாதத்தில் லி.மதுபாலன் மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மாநகராட்சி நிதி நெருக்கடி, பாதாளசாக்கடை பிரச்சினைகள், புதிய சாலைகள் போடுவதில் மந்தம், வருவாய் இனங்களை ஏலம் விடுவதில் அரசியல் தலையீடு போன்ற பல்வேறு சிக்கலான நிலையில் லி.மதுபாலன் பதவியேற்றார். மற்ற அதிகாரிகளை போல் அறையில் முடங்கிவிடாமல், நேரடியாக 100 வார்டுகளுக்கும் ஆய்வுக்கு சென்று, அந்த வார்டுகளின் முக்கிய பிரச்சினைகளையும், கவுன்சிலர்களையும் தெரிந்து கொண்டார். மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நேரடியாக வார்டுக்கு சென்று ஆய்வு செய்து, அதனை உடனுக்குடன் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதனால், கடந்த 3 மாதத்துக்கு முன்பிருந்த பாதாளசாக்கடை பிரச்சினைகளும், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் சம்பவங்களும் தற்போது ஒரளவு இல்லாமல் இருக்கிறது.
கடந்த அக்டோர் முதல் தற்போது வரை புதிதாக 1,885 வருவாய் இனங்களுக்கு சொத்து வரி விதித்தும், 2274 காலிமனைகளுக்கு வரி விதித்தும், புதிய 1,120 இனங்களுக்கு தொழில் வரி விதித்தும் மாநகராட்சி வருவாயை அதிகரிக்க உதவினார். அனுமதி பெறாமல் கட்டிய 107 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அரசியல் அழுத்தத்துக்கு அடிபணியாமல் 7 பெரிய கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைத்தார். புதிய சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை அழைத்து கூட்டம் நடத்தி, கிடப்பில் போடப்பட்ட புதிய சாலைகளை முடுக்கிவிட்டு, கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை 150 கி.மீ., தொலைவுக்குள் சாலைகளை முடிக்க நடவடிக்கை எடுத்தார். சாலைகளை போடாமல் ஏமாற்றிய ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
மாநகராட்சியின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கவனிப்பாரில்லாமல் கிடந்தது. இவர், பொறுப்பேற்றதும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்து, அந்த பேருந்து நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி தயிர் மார்க்கெட் மற்றும் சுப்பிரமணியபுரம் மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணி செய்யப்பட்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் பல மாதங்களாக ஆரம்ப கட்டநிலையிலே இருந்தன. இவர் வந்ததும், இந்த பணிகளை ஆய்வு செய்து ஒப்பந்ததாரரை விரட்டியதை அடுத்து, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
சாலைகளில் தூசி அதிகளவு காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் அடைந்தனர். டிராக்டெர் மற்றும் கிரேப் மாஸ்டர் இயந்திரங்களை பயன்படுத்தி தண்ணீர் தெளித்து சாலைகளில் தூசி பறப்பதை ஒரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். தற்போது லி.மதுபாலன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக வரக்கூடிய மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சியை பற்றி அறிந்து கொள்வதற்கே 3 மாதம் ஆகும். அதன்பிறகு அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழக அரசு ஒன்று ஆளும்கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் ஒத்துபோகக்கூடிய ஐஏஎஸ் அதிகாரியை மாநகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்க வேண்டும். இல்லையென்றால், ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள், ஆளும்கட்சியினர் தலையீடுவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
|
பொறுப்பாளராக வந்தவர் வேட்பாளராவாரா? - சிவகங்கையை குறி வைக்கும் பாஜக அர்ஜுனமூர்த்தி | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-02-11 17:00:00 |
சிவகங்கை: சிவகங்கை தொகுதியை குறி வைத்து அர்ஜுனமூர்த்தி காய் நகர்த்தி வருகிறார். காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக தரப்பும் சுறுசுறுப்பு காட்டி வருகிறது. அதேசமயத்தில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதை அக்கட்சியினர் மறுத்து வருகின்றனர்.
சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென்சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளதால், அத்தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கட்சித் தலைமை விட்டு கொடுக்காது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மக்களவை தொகுதி பொறுப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதே தொகுதியில் தனக்கு சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். இதற்காகவே அவர் தொகுதி பொறுப்பாளர் பதவியை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அவர், பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார். வேல் யாத்திரை, கொடி ஒழிப்புத் திட்டம் மூலம் சோலார் கொடி கம்பம், ஏழைகளை மேம்படுத்த வாழ்வாதார அடை காப்பகம் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
இதனால் கட்சி தலைமையோடு நெருக்கமாக இருந்த அவர், திடீரென நடிகர் ரஜினி கட்சி தொடங்க முடிவு செய்தபோது அங்கு சென்றார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் தனியாக இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை அர்ஜுனமூர்த்தி தொடங்கினார். பின்னர் அதையும் கலைத்துவிட்டு, மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சமூக ஊடகப் பிரிவு மாநில பார்வையாளர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி பொறுப்பாளராக இருக்கும் அவர், அத்தொகுதியில் போட்டியிட மறைமுகமாக சர்வே எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் வாக்கு தனக்கு கிடைக்கும் என கணக்குபோடும் அவர், அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். ஏற்கெனவே சிவகங்கை தொகுதியில் போட்டியிட மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி, மதுரை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் பி.எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி கூறியதாவது: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி, அண்ணாமலை மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போன்றவை மூலம் இந்த முறை தமிழகத்தில் 25 இடங்களை பாஜக கூட்டணி பெறும். சிவகங்கையிலும் பாஜகவே வெற்றி பெறும். சிவகங்கை தொகுதியில் 1873 பூத்களிலும் 13 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அதில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தது 30 வாக்குகளை கவர்ந்து வருகின்றனர். இதனால் பாஜகவுக்கு 7.30 லட்சம் வாக்குகள் கிடைக்கும். மேலும் அதிமுக பாஜகவிடம் இருந்து பிரிந்ததால், எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. சிவகங்கை ஆன்மிக பூமி. எனக்கு கட்சி சிவகங்கை தொகுதியில் நிற்க சீட் கொடுத்தால் நிற்பேன்.
|
வரும் 16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள்: துரைமுருகன் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 15:10:00 |
சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக திமுக சார்பில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சி முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கட்சி முன்னணியினர், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைவரின் குரலாக வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.
வரும் 16ம் தேதி, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். வரும் 17-ம் தேதி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், அரக்கோணம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், வரும் 18-ம் தேதி, திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம் மற்றும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அரபு கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மீதான என்.ஐ.ஏ சோதனை - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 14:53:00 |
சென்னை: அரபு கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதான என்.ஐ.ஏ சோதனைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உக்கடத்தில் 2022 அக். 23-அன்று கார் எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் இயங்கி வந்த அரபு மொழியை கற்றுக் கொடுக்கும் தனியார் அரபு கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில் புத்தகங்கள், மடக்கோலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் என்ஐஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.
தனியார் கல்லூரியில் அரபு மொழி பயின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரின் விவரங்களை வைத்துக் கொண்டு இந்த வழக்கில் அவ்வப்போது விசாரணை என்ற பெயரில் NIA அலுவலகம் அழைத்து விசாரிப்பதும், திடீரென ஒரே நாளில் பல ஊர்களில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்துவதுமாக தேவையற்ற பதட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து சிலரை கைது செய்துள்ளதோடு பலரிடமும் விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பாணை கொடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் அரபு மொழி பண்டிதர்கள் ஆவர். இஸ்லாமிய மத போதனை, அரபு மொழியை மாணவர்களுக்கு கற்று தந்ததை தவிர வேறு எவ்வித குற்றமும் இவர்கள் செய்யவில்லை. ஒரு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒரு கல்வி நிலையத்தில் படித்தால் அந்த கல்வி நிலையத்தையே பயங்கரவாத நிறுவனமாக சித்தரிப்பதும், ஆசிரியர்களையும், கல்வி நிறுவனத்தில் படித்த நூற்றுக் கணக்கான மாணவர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து விசாரணை நடத்துவதும்,பொய்யாக வழக்கில் சேர்ப்பதும் உலகில் எங்கும் நடக்காத மனித உரிமை மீறலாகும்.
இத்தகைய அராஜகத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) தொடர்ந்து செய்து வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற பதட்டங்களை ஏற்படுத்துவதையும், சிறுபான்மை மக்களையும், மோடி அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதையும் செயல்திட்டமாக வைத்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. இதே போன்று தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலரது வீடு, தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வழக்கம் போல மொபைல் போன்கள், புத்தகங்களை தவிர வேறு எதுவும் சோதனையில் கைப்பற்றபட்டதாக தெரியவில்லை.
பாஜக வை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஆளுமைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, என்.ஐ.ஏ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு துறைகளை வைத்து விசாரணை என்ற பெயரில் முடக்குவது நாட்டில் எதிர்கட்சிகளே இல்லாமலாக்கும் பாசிச செயல் திட்டத்தின் ஒரு பகுதி என மக்கள் கருதுகின்றனர். ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்கட்சிகளை முடக்கும் சர்வாதிகார போக்கை பாஜக கைவிட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை - தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் | சி.எஸ். ஆறுமுகம் | தஞ்சாவூர் | 2024-02-11 13:13:00 |
தஞ்சாவூர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை நடைபெற உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் - மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன்படி வேளாண் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதோடு, விளைபொருட்களுக்கு லாபகரமான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை இயற்ற மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதோடு, லாபகரமான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான சட்டமும் இயற்றப்படவில்லை.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அமைத்தர் பியூஸ் கோயல், பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அமைப்பின் நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அவர், 8 நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால், அவகாசம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை 3 மணிக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்று, சண்டிகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக ஒருங்கிணைப்பாளராக செல்கிறேன். புதுடெல்லியை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கி விட்டது. பேரணியில் அதிக அளவில் விவசாயிகள் திரண்டு இருப்பதால், விவசாயிகளுக்கு மதிப்பளித்து நல்ல தீர்வை மத்திய அரசு எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
|
சென்னை மெட்ரோ ரயில் பணி | அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 11:51:00 |
சென்னை: மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிக்காக இன்று முதல் (பிப்.11) அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலைகளில் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கீழ்கண்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பிப்.11 முதல் ஒரு வார காலத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
> சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கெனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
> இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்ஜிஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).
> அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி).
> வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு. G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.
மற்றபிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்துக்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 11:18:00 |
சென்னை: கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இன்று காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11.30, 11.40 நண்பகல் 12,00, 12.10, 12.20, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 11.00, பகல் 11.50, 12.30, 12.50, மதியம் 1.45, பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு இன்று மதியம் 1.00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.00, 12.15, 12.45 மதியம் 1.30, 1.45, பிற்பகல் 2.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப் படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு இன்று முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட உள்ளன. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
|
வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டி: ஏ.சி.சண்முகம் உறுதி | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-11 10:45:00 |
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய அளவில் கூட்டணியைப் பலப்படுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுகிறது. நாங்கள் 6 மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழகத்தில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை வெற்றி பெறும். மும்முனை போட்டியாக இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் மாற்றங்கள் வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
செல்போன் செயலி முதலீடு விவகாரம்: காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-11 07:23:00 |
கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அந்த செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால், தினமும் ரூ.1,000 வரை வருவாய் ஈட்டலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
இதை நம்பிய லட்சக்கணக்கானோர், அந்த செயலியில் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு முதலீடு பெற்றது தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சத்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது, மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த பலர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தங்களது நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆணையரிடம் முறையிட வேண்டும் என்று அவர்கள் போலிஸாரிடம் தெரிவித்தனர்.
ஆனால், காவல் ஆணையைர சந்திக்க முடியாததால், அலுவலக வளாகத்திலேய தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 180 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதற்கிடையே, தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக மேலும் பலர், ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப் பட்டனர். அப்போது தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக அங்கு வந்த சிலரை, போலீஸார் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
|
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முருகனை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு நளினி கடிதம் | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-11 07:02:00 |
திருச்சி: வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில்இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின் மனைவி நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ளசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.
இதில், சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல, முருகன், ராபர்ட் பயாஸ் ஆகியோர், தங்களை போலீஸார் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. எனவே, விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்,காவல் ஆணையர் என்.காமினி ஆகியோருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதிஉள்ளார்.
அதில், "நானும், எனது கணவர் முருகனும் கடந்த 11.11.2022-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். எனது கணவர் இலங்கைநாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.அவர் சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டாலும், காவல் துறைகட்டுப்பாட்டில்தான் உள்ளார்.அவர் முன்பு இருந்த வேலூர் சிறையைவிட, திருச்சி சிறப்புமுகாம் கொடுமையாக உள்ளது.
எனது கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால், உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, என் கணவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் நளினி தெரிவித்துள்ளார்.
|
அரக்கோணம் இச்சிபுத்தூர் ஊராட்சி தலைவர், செயலாளருக்கு எதிராக வழக்கு: ராணிப்பேட்டை ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:59:00 |
சென்னை: எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல், போலியாக கணக்கு காட்டிரூ.2.48 கோடி முறைகேடு செய்ததாக இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்த எம்.ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரக்கோணம் வட்டத்துக்கு உட்பட்ட இச்சிபுத்தூரில் மின் விளக்குகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தது, பம்பு செட் அமைத்துக் கொடுத்தது என, செய்யாத வேலைகளை செய்ததாக போலியாக கணக்கு காண்பித்து, ஊராட்சித் தலைவர் பத்மநாபன் மற்றும் ஊராட்சி செயலர் இப்ராஹிம் ஆகியோர் ரூ.2.48 கோடியை முறைகேடு செய்துள்ளனர். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அரசுப் பணத்தை முறைகேடு செய்த இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக ராமச்சந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, "எந்த வேலையும் செய்யாமல் போலியாக கணக்கு காண்பித்து ரூ.2.48 கோடியை முறைகேடு செய்துள்ளனர்" என்றுகூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும், மனுதாரரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
அதையடுத்து நீதிபதி, "இந்த வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
|
மத்திய அரசை கண்டித்து மீனவர் காங்கிரஸார் பாம்பனில் ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | ராமநாதபுரம் | 2024-02-11 06:54:00 |
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துதாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை என்றுபுகார் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு மற்றும் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கை அரசு இதுவரை தமிழக மீனவர்களின் 350 விசைப்படகுகளை அரசுடமையாக்கி உள்ளது. அவற்றில்250 படகுகள் சேதமடைந்துவிட்டன. ஆனாலும், மத்திய அரசு, இலங்கையைக் கண்டிக்கவில்லை. இது தொடர்ந்தால், காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
|
வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்: சர்வதேச கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-11 06:50:00 |
திருச்சி: விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
திருச்சி தேசியக் கல்லூரியில் `விளையாட்டில் மறுமலர்ச்சி' என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குமார்வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது:
விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. கீழ்நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது, அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரொக்க விருதுகளை வழங்குவதில் மாநில அரசுகள் போட்டியிடுகின்றன. அதேபோல, விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
வீரர்கள் நாட்டின் சொத்து: தற்போது, இந்தியா பதக்கங்கள் பெறுவதில் முன்னேறி வருகிறது. சமீபத்திய சர்வதேச நிகழ்வுகளில், இந்திய வீரர்கள் பல பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எனவே, விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்துகள். விளையாட்டு நமது பெருமை மட்டுமல்ல, தேச நலனுக்கும் உகந்தது.
‘பிட் இந்தியா’ திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறைக்கு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள திறமைசாலிகளைக் கண்டறிந்து, அவர்களைவளர்க்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
இந்த நிகழ்வில், ஒலிம்பியன் பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்க தீர்மான அறிக்கையை வாசித்தார்.
|
2040-ல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார்: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் நம்பிக்கை | செய்திப்பிரிவு | உதகை | 2024-02-11 06:44:00 |
உதகை: 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாசார்பில் மனிதனை நிலவுக்குஅனுப்பும் பணி நிறைவேற்றப்படும். 2040-ல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என சந்திரயான்-3 திட்டஇயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘விண்வெளியில் இந்தியா’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு விண்வெளி குறித்தும், சந்திரயான் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், விண்வெளி மற்றும் சந்திரயான் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வுமையம் (இஸ்ரோ) சார்பில் ரிமோட்சென்சிங், தகவல் தொடர்பு, வானிலை, ஜிபிஆர்எஸ், வழிகாட்டி, கடலியல் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. மேலும்,செவ்வாய் கிரகம், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும், அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். 2040-ல் நிலவில் இந்தியர் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சந்திரயான்-3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர்அடங்கியது. இதன் ஆயுட்காலம்ஒரு லூனார் நாளாகும். அதன்ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்துக்காக விண்ணில்செலுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறிஉள்ளது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு வீரமுத்துவேல் கூறினார்.
கருத்தரங்கில் நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
|
சிறைவாசிகள் முன்விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காதபோது நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:40:00 |
சென்னை: நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில் உயர் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள எஸ்.ஏ.பாஷா, சாகுல் ஹமீது, ஜாகீர்உசேன், விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி அவர்களது குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந் தனர்.
இந்த வழக்குகள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாநிலஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த 49 கைதிகளையும் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக முதல்வரின் பரிந்துரை, ஆளுநர் முன்பாக நிலுவையில் உள்ளது என தெரிவித் திருந்தார்.
அதையடுத்து உயர் நீதிமன்றம், சிலருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும், சிலருக்கு விடுப்பு வழங்கியும் உத்தரவிட்டது.
இதற்கிடையே உயர் நீதிமன்றஉத்தரவுப்படி ஏற்கெனவே விடுப்பில் உள்ள 10 பேர் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீண்டநாட்களாக சிறையில் உள்ள ஷம்மா உள்ளிட்ட இருவருடைய விடுப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி: அப்போது விடுப்பை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், நீண்டகாலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதுதொடர்பான பரிந்துரை ஆளுநர்முன்பாக நிலுவையில் உள்ளபோது, அவர்களை விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? என அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் கிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், இதுதொடர்பான கோப்புகள் ஆளுநர் முன்பாக மட்டுமே நிலுவையில் உள்ளது, தமிழகஅரசிடம் நிலுவையில் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள்,இதுதொடர்பாக விளக்கமளிக்க வும், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையி்ல் உள்ள வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், எனதமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
|
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:36:00 |
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாகஎந்த உரிமமும் வழங்கப்பட வில்லை என தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித் துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மார்க்ஸ் என்பவர் கடந்த 2019-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பெட்ரோலியத்துறைச் செயலாளர் மற்றும் மத்திய வேளாண் துறைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,‘‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குதமிழக அரசு உரிமம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பகுதிகளில் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.
தடை விதித்து சட்டம்: மேலும் தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டத்தை இயற்றியுள்ளதால், அந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட் டிருந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், காவிரிடெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுவரை எந்தபுதிய உரிமமும் வழங்கப்பட வில்லை என்றார். அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டுள்ளனர்.
|
பேருந்து பற்றாக்குறையால் கிளாம்பாக்கத்தில் பயணிகள் சாலை மறியல்: கொசுக்கடியில் விடியவிடிய நடைமேடைகளில் படுத்து உறங்கிய அவலம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:28:00 |
சென்னை: கிளாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, நெடுஞ்சாலைக்கு வந்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்படாத நிலையில், அவசர கதியில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, பயணிகளுக்கு படிப்படியாக வசதிகளை ஏற்படுத்தும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. இந்நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகியுள்ளது.
சென்னையில் இருந்து வார இறுதி நாட்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களுக்கும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் (வெள்ளி) மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்து நிரம்பிவருவதால், முன்பதிவு செய்யா தோரை ஏற்க மறுத்ததாக பயணி கள் குற்றம்சாட்டினர்.
நேரம் செல்லச் செல்ல பயணிகளின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், நள்ளிரவை நெருங்கும்போது நிலையமே பேருந்துகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேருந்துகளை சிறைபிடித்தும், சென்னை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அமர்ந்து விடியவிடிய சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சுமார் 2 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்குவந்தது. இதற்கிடையே போலீஸாருக்கும் பயணிகளுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருபுறம் பயணிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மறுபுறம் குழந்தைகள், பெண்கள் என பலர்நடைமேடைகளிலும், பேருந்து நிறுத் தங்களிலும் படுத்து உறங்கினர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, ‘‘திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம் என எந்த ஊருக்கும் பேருந்து சேவை இல்லை. நேரடியாக பேருந்து இல்லாவிட்டாலும் இணைப்பு பேருந்துகள்கூட இல்லை, முன்பதிவு முடிந்துவிட்டது என கூறுகின்றனர். உணவகத்திலும் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இங்கு கழிவறை தவிர்த்து எந்த வசதியும் இல்லை" என்றனர்.
திருச்சி சென்ற பயணி ஒருவர்கூறும்போது, ‘‘பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தில் ஒரு சில திருச்சி செல்லும் பேருந்துகளே இருந்தன. முகூர்த்த நாள், வாரவிடுமுறை நாட்களில் அதிக கூட்டம் வரும் என தெரிந்தும் ஏன் அரசுமெத்தனமாக இருக்கிறது எனதெரியவில்லை. போதாக்குறைக்கு நடத்துநர், ஓட்டுநர்களின் தரக்குறைவான பேச்சுகள் வேறு. இரவு 9.30 மணிக்கு கிளாம்பாக்கம் வந்தடைந்த நான் ஒருவழியாக காலை 4.30 மணிக்குதான் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன்’’ என்றார்.
இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வார இறுதிநாட்களை யொட்டி, முன்பதிவு அடிப்படையில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. போதிய முன்பதிவு இல்லாத நிலையில், நள்ளிரவுநேரத்தில் பயணிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் பேருந்துசேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், மாநகர பேருந்துகள் மூலம் முடிந்த அளவு பயணிகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். மேலும், மதுராந்தகம் அருகே நடந்த விபத்து காரணமாக பேருந்துகள் சென்னையை அடைவதில் தாம தம் ஏற்பட்டது’’ என்றனர்.
|
அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு; பயணிகள் சிரமம்: இபிஎஸ், அண்ணாமலை குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:24:00 |
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்அவசர கதியில் திறக்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோயம்பேடு பேருந்து நிலையமும் அதன் சுற்றுப் பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்ல கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்து வசதி, மெட்ரோ ரயில் வசதி, ஷேர்ஆட்டோ, ஆட்டோ, சிற்றுந்து வசதிகள், உணவு விடுதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமையும் வகையில் எங்கள் ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று ஸ்டிக்கர் ஒட்டி அவசரகதியில் திமுக அரசு தைப் பொங்கலுக்கு முன்பே பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது. அங்கு அடிப்படை வசதிகளும் இல்லை. போதுமான பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
கடந்த 9-ம் தேதி இரவு தங்களதுகுழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமானபேருந்துகள் இயக்கப்படாத நிலையில், நேற்று காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்றனர். தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
எந்தவித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார்40 கி.மீ. தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றி, 40 நாட்களை கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
|
சென்னையில் அண்ணாமலை நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு: இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 06:19:00 |
சென்னை: சென்னை தங்கசாலையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார். அதேநேரம், சென்னையில் அண்ணாமலை நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், மக்களவைத் தேர்தலையொட்டியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என்மண்; என் மக்கள்’ எனும் பெயரில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்தின்போது மக்களைச் சந்திக்கும் அண்ணாமலை, திமுக - அதிமுகவை விமர்சிப்பதோடு, தமிழகத்துக்கு மத்திய அரசுகொண்டு வந்துள்ள திட்டங்களையும் எடுத்தக் கூறி மக்களவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் நடைபயணத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந் தது. நடைபயணத்தில் பாஜக தேசியதலைவர் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு நாகராஜன், மத்திய சென்னை மக்களவைதொகுதி அமைப்பாளர் வினோஜ்பி.செல்வம், மாவட்டத் தலைவர் கே.விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் கவனித்து வந்தனர்.
அதன்படி, அண்ணாமலை நேற்று 93-வது நாளாக உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். நடைபயணத்தில் பாஜக தேசிய தலைவர்ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருந்தனர்.
அமைந்தகரையில் அனுமதி மறுப்பு: நடைபயணத்தின் முடிவில், அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் திடலில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அண்ணாமலையின் நடைபயணத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். மேலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அமைந்தகரையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
அதேநேரம், பொதுக்கூட்டத்தை தங்கசாலையில் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஜெ.பி.நட்டா, அண்ணாமலை, எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நட்டாவுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு: பொதுக்கூட்டம் முடிந்த பின், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையே, நட்டாவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்துபேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து,மேலும் சில கட்சித் தலைவர்களும் நட்டாவை சந்திக்க வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.
|
சிவில் நீதிபதிகள் பதவி நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 05:57:00 |
சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சிசார்பில் கடந்த 2023 ஜூனில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த நவம்பரில் பிரதான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த ஜன.5-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதான தேர்வில் விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படவில்லை என குற்றம்சாட்டி, நேர்முகத் தேர்வுக்கு தடை கோரி பிரதான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு மனுவில், ‘சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற போட்டித் தேர்வு அமைப்புகள், தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகின்றன.
சிவில் நீதிபதிகளுக்கான... ஆனால், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு மட்டும் விடைத்தாள்களை வழங்க டிஎன்பிஎஸ்சி மறுக்கிறது. எங்களின் விடைத்தாளை வழங்க டிஎன்பிஎஸ்சி-க்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை நேர்முகத் தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
|
தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்கு ரூ.1,240 கோடி ஒதுக்கீடு; ரயில்களின் வேகம் 130 கி.மீ. வரை அதிகரிக்கும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 05:52:00 |
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர்,சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வரைரயில்கள் இயக்கப்படுகின்றன.
மொத்தம் 413.62 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இந்தப் பாதைகளில் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்குரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-ம் ஆண்டு நிதியாண்டுக்கு 10 சதவீதம் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. இதனால் பல்வேறு பணிகளை வேகப்படுத்த முடியும். குறிப்பாக, ரயில் தண்டவாளம் புதுப்பித்தல், மேம்படுத்தல், நவீனப்படுத்தல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலமாக, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
தெற்கு ரயில்வேயில் முக்கியவழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர் (286 கி.மீ. தொலைவு) மார்க்கத்தில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 2025-26-ம் நிதியாண்டில், சென்னை எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி (336.04 கி.மீ.) மார்க்கத்தில் மணிக்கு 130 கி.மீ.க்கு ரயில்வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி-திண்டுக்கல்-மதுரை-திருநெல்வேலி (311.11 கி.மீ.) மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் 2026-27-ம் நிதியாண்டில் மணிக்கு 130 கி.மீ. வரை ரயில் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பாலங்களை வலுப்படுத்தல், பாதைவளைவுகளை எளிதாக்குதல், தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைத்தல், சிக்னல்களை மேம்படுத்தல், உயர்மட்ட மின்பாதை மேம்படுத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது மூலமாக, ரயிலின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறையும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
|
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 05:46:00 |
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே 2022 அக். 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடத்தில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.
என்ஐஏ விசாரணை நடத்தி, இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் இயங்கி வந்த அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் தனியார் அரபிக் கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில், அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு விவகாரம் தொடர்பாக என்ஐஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக கோவை, சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடிசோதனை நடத்தினர். கோவைக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய 12 குழுவினர் நேற்று உக்கடம் அல் அமீன் காலனியில் ஹபிபுல்லா, அருள் நகரில் (அன்புநகர்) அபுதாகீர், என்.எஸ்.கார்டனில் பைசல் ரகுமான், அற்புதம் நகரில் சலாவுதீன், கரும்புக்கடை கிரீன் கார்டனில் அனீஷ்முகமது, ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனியில் கமீல், குனியமுத்தூர் ராஜூநகரில் சுதிர்முகமது, மதுக்கரை சீரபாளையத்தில் முகமது அலி ஜின்னா, போத்தனூர் அமீர்சாகிப் வீதியில் நாசர் ஆகியோரது வீடுகள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
மதியம் வரை நடைபெற்ற சோதனையில், வீட்டில் இருந்தவர்களிடம் கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், சென்னை பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை 5-வது தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா பாட்ஷா(40) வீட்டில் சோதனை நடத்தினர். இவர் மனித நேய மக்கள் கட்சி வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் இருக்கிறார். அதிகாலை 5.30 மணிக்கு சோதனையை தொடங்கிய அதிகாரிகள் 8 மணிக்கு சோதனையை நிறைவு செய்தனர்.
பல்லாவரம் சோமசுந்தரம் தெருவில் வசித்து வரும் பைக் டாஸ்சி ஓட்டுநரான நவீத்கான்(44) வீட்டில் 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த பட்டு புடவைகளுக்கு சாயம் பூசும் தொழில் செய்து வரும் ரியாஸ் அக்ரம்(68) வீட்டில் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் சுலைமான் என்பவரது வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பயன்படுத்திய செல்போன் கடந்த சில மாதங்களில் பல வெளிநாடு அழைப்புகளை பெற்ற நிலையில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் அஷரப் அலி(67) வீடு மற்றும் கடையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் 3 பேர் சோதனை நடத்தினர். பின்னர் அஷரப் அலி, அவரது மகன் இப்ராஹிம் அலி (27) ஆகியோரிடம் கோவை கார் வெடிப்பு தொடர்பாகவும், பாகிஸ்தானில் இருக்கும் உறவினர் ஒருவரை பார்க்க அவரது உறவினர்கள் அடிக்கடி சென்று வந்தது குறித்தும் விசாரித்துள்ளனர்.
மதுரையில் ஹாஜிமார் தெருவில் சாமியார் சந்தில் வசிக்கும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரான முகம்மது அப்துல் அஜிமின் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அவரது மொபைல் போன், சிம் கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி முகைதீன் நகரிலுள்ள ரஜத் தெருவில் வசித்து வரும் பக்ருதீன் அலி அகமது (35) வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். வங்கியின் மூலம் ஹவாலா பணப் பரிமாற்றம் எதுவும் நடந்ததா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் மொத்தம் 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப், வங்கி பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், சர்ச்சைக்குரிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட தனியார் அரபிக் கல்லூரியில் நேரடியாக படித்தவர்கள், ஆன்லைன் வாயிலாக படித்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதன் அடிப்படையிலும் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்: சென்னையில் 2-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 04:04:00 |
சென்னை: சென்னை பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 17 கால கட்டத்தில் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் தி.நகரில் உள்ள லேண்ட்மார்க் ஹவுசிங் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் உதய குமாரின் நுங்கம்பாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
அதே போல், புளியந் தோப்பில் உள்ள கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில்கேட் பாலியா, மனிஷ் பம்பர் ஆகியோரின் அலுவலகங்கள், வீடுகள், எம்ஜிஎம் கோல்ட் மதுபான ஆலை நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் வீடு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆடிட்டர் கணபதி வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த இடங்களில் 2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
|
கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் வசம் உள்ள 26 கிரவுண்ட் நிலத்தை 2 மாதத்தில் மீட்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-11 04:02:00 |
சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் வசம் உள்ள அரசுக்கு சொந்தமான 26 கிரவுண்ட் நிலத்தை 2 மாதங்களில் மீட்க சென்னை பெருநகர சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் கழகத்துக்கு ( டான்சி ) சொந்தமான 26 கிரவுண்ட் நிலத்தை, ஈகிள் பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் மாத வாடகை ரூ.12 ஆயிரத்து 36 என்ற அடிப்படையில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து பயன்படுத்தி வந்தது. இந்நிறுவனத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு வரை உரிமம் தரப்பட்ட நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஆய்வு செய்த தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அந்நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி விட்டது எனக் கூறி தொழிற்சாலைகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த நிலத்தை காலி செய்து ஒப்படைக்கும் படி டான்சி சார்பில் சென்னை பெருநகர சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டான்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை பெருநகர 7-வது சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தமிழ் செல்வி முன்பாக நடந்தது. அப்போது டான்சி தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். ரமன்லால் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஈகிள் பிளாஸ்டிக் நிறுவனம் பயன்படுத்தவில்லை.
அந்தநிறுவனத்தில் தற்போது 3 பேர்மட்டுமே பணிபுரி்ந்து வருகின்றனர். பிளாஸ்டிக் உற்பத்தி நடைபெறவில்லை’’ என வாதிட்டனர். இதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து நீதிபதி, ‘‘அதிகாரிகள் நடத்திய களஆய்வில் அந்நிறுவனத்தி்ல் 3 பேர் மட்டுமே பணி புரிகின்றனர் என்பதும், அந்நிறுவனம் தற்போது உற்பத்தியை நிறுத்திவிட்டதும் ஆதாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது. எனவே டான்சிக்கு சொந்தமான அந்த நிலத்தை அந்த நிறுவனம் 2 மாதங்களில் காலி செய்து ஒப்படைக்க வேண்டும். அரசும்அந்த நிலத்தை மீட்க சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’’ என உத்தரவிட்டுள்ளார்.
|
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் | த.சக்திவேல் | மேட்டூர் | 2024-02-10 20:56:00 |
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பொய்த்தது, கர்நாடக அரசு நீர் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் 10-ம் தேதி தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
எனவே, சம்பா பயிர்களை காப்பாற்ற, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். டெல்டா மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 3-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், கடந்த 4-ம் தேதி முதல் நேற்று மாலை வரை விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, ஆய்வு செய்தார். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நீர் திறப்பை நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்களை பாதுகாக்க, இன்று கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்படி, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மாலை 7 மணி முதல் விநாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனிடையே, அணையிலிருந்து பாசனத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, குடிநீர் தேவைக்காக, 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்மட்டம் தொடர் சரிவு: அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 25 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 58 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக இருந்ததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 3.9 அடியும், நீர் இருப்பு 3.28 டிஎம்சியும் சரிந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 66.52 அடியாகவும், நீர் இருப்பு 29.78 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.
|
“செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ் மொழி...” - முதல்வர் ஸ்டாலின் @ கணித்தமிழ் மாநாடு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 20:30:00 |
சென்னை: “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், “ஓலைச்சுவடிக் காலத்திலிருந்து இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரையிலும் அனைத்திலும் கோலோச்சி வரும் மொழியாக நமது அன்னைத் தமிழ் மொழி இருப்பது நமக்கெல்லாம் பெருமை. முன்னைப் பழமைக்கும் பழமையாய் - பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நம் தமிழ்மொழி இருப்பதைவிட நமக்கு வேறு பெருமை வேண்டுமா?
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியின் நிலையைக் குறித்து ஆராயவும் விவாதிக்கவும், புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவும், இளம் திறமையாளர்களை அடையாளம் காணவும், ‘பன்னாட்டு கணித்தமிழ் - 24’ என்கிற மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பிப்ரவரி 8,9,10 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழை, கணினிக் காலத்தில் மட்டுமல்ல, அடுத்து வரும் எந்தக் காலத்துக்கும் நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு ஆகும். பழம்பெருமை பேசிக் கொண்டு மட்டுமே இருப்பவர்கள் அல்ல நாம்; பழம்பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்நாளும் சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நாம்.
இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதில் மாநிலவாரியாகப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஐஏஎம்ஏஐ என்ற தொலைத்தொடர்பு ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது. பன்னாட்டுக் கணித்தமிழ் - 24 என்ற இந்த மாநாடு, ‘தமிழ் நெட் - 99’ என்ற மாநாட்டை நடத்திய கருணாநிதியின் நூற்றாண்டில் நடைபெறுவது மிகமிகச் சிறப்பானதாகும்.
1996-ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது தொடங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சிதான் கடந்த 30 ஆண்டுகள் அத்துறை மகத்தான வளர்ச்சியைப் பெறுவதற்குக் காரணமாகும். உலகம் முழுக்க தமிழக இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதி அடித்தளம் அமைத்தார்.
1999-ஆம் ஆண்டு Tamilnet-99 என்ற மாநாட்டின் மூலமாகத்தான் ‘தமிழ் 99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டது. தமிழக அரசால் அது அங்கீகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைக்கு அனைத்து தொழில் நுட்ப வடிவங்களிலும் தமிழைப் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு விதை போட்டவர் கருணாநிதி. அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
திமுக அரசின், தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு, கணினித் துறையை கருணாநிதி கையாண்ட விதம். அதே வழியில்தான் எனது தலைமையிலான அரசும் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டுக் கணித்தமிழ் -24 என்ற மாநாட்டையும் இதே தொலைநோக்குப் பார்வையுடன்தான் நடத்துகிறோம். ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தும் வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பம் வந்தாலும் அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். ‘தமிழை வளர்த்து தமிழனை உயர்த்துவோம்’ என்பதுதான் எமது அரசின் நோக்கம்.
எப்போது தோன்றியது என்று கண்டறியப்பட முடியாத தமிழ்மொழியை, எப்போதும் சிறப்புற வைக்க இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24 அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியளவும் அய்யமில்லை. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத பெருந்திட்டம் இந்த மாநாடு. மொழி காக்க உயிரையே கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதும் நமது வரலாறுதான்.
செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை ஆகிய தளங்களில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் கணினிப் பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்பதை அறிவித்தோம். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கடந்த அக்டோபர் மாதம் நான் அறிவிப்பை வெளியிட்டேன்.
பத்து நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் வருகை தந்துள்ளார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. நாற்பது காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் தமிழுக்காக நடைபெறுகின்றன என்பதே சிறப்பு. செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கைமொழிச் செயலாக்கம், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆற்றிவரும் தொண்டு என்பது எதிர்காலத் தமிழ்த் தொண்டாகும். இதற்குக் காரணமான தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைப் பாராட்டுகிறேன். வருங்காலத் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்க இருப்பதோடு, பல்லாயிரம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் அடிப்படையாய் விளங்கும் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான பணிகளை அவர் ஆற்றி வருகிறார்.
உலகளவிலான தம்முடைய அனுபவங்களால் இத்துறையின் வளர்ச்சிக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், நடத்தி வரும் மாநாடுகள் அவர் செயல்திறனைப் பறைசாற்றுகின்றன. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவராகவும், அரசின் முதன்மைச் செயலாளராகவும் இருக்கும் உதயச்சந்திரனுக்கு இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புக்காக எனது பாராட்டுகள். தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று - உலகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள், வல்லுநர்கள் அனைவர்க்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தமிழில் தொழில்நுட்பச் சேவைகள் அனைத்தும் கிடைக்கத் தமிழக அரசும் ஆவன செய்யும். உலகளாவிய நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்ற மொழிகளில் வெளியாகி, தமிழுக்குக் காலதாமதமாக வருகிறது. இந்த இடைவெளியை குறைத்தாக வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருட்கள் வரும்போதே தமிழுக்கும் வந்தாக வேண்டும்.அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த வளத்தையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வழங்கும்.
இளைய தலைமுறையினர் அனைத்துத் தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும். தமிழர்களும், தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்பவர்களும் இணைய வழியாகத் தமிழ்ப் பாடங்களைப் படிக்க வேண்டும்.
தமிழ் ஆர்வத்தை, தமிழ் அறிவாக அனைவரும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், தமிழ்மொழி கற்பிப்பு, ஆய்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தொல்லியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருசேரப் பற்றி நிற்போம். துறைதோறும் தமிழ்த் தொண்டு ஆற்றுவோம். தமிழைப் புத்தொளி பெற வைப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
|
பிப்.15-ல் அடையாள வேலை நிறுத்தம்; 26 முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2024-02-10 19:53:00 |
மதுரை: தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மதுரையில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.
கடந்த 1.04.2003-க்குப் பின் அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 30 சதவீத காலிப் பணியிடங்களை உனடியாக நிரப்ப எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனையொட்டி ஜன.30-ல் மறியல் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதுரையில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ் ஆகியோர் தலைமையில் வகித்தனர்.
முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஓ.சுரேஷ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் கி.முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ப.குமார் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி பிப்.15-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து பிப்.26-ல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
|
“மத்திய அரசின் பாரபட்சத்தால் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இடையூறு” - கனிமொழி எம்.பி | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-02-10 19:23:00 |
கோவை: “மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. கோவை புறக்கணிக்கப்படவில்லை” என கனிமொழி எம்.பி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி,திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று (பிப்.10) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர், விவசாய அமைப்பினர், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அவர்களின் மனுக்களை பெற்றனர். இதில், தொழில்துறையினர், விவசாயிகள், மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: “கோவை மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பினர் குறிப்பாக சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கரோனா உள்ளிட்டவற்றால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டி.யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் அமைப்பினர் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாக தங்களது கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. கோவை புறக்கணிக்கப்படவில்லை. பல தொழிற்சாலைகளுக்கு கோவை மையமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் இங்கு தொழில் கூடங்களை உருவாக்கினார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், முதலீடுகளை கொண்டுவரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிக்கையில் என்ன வரும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். அதில் என்னென்ன வரும் என்பது என்னால் தெரிவிக்க முடியாது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாத அளவுக்கு நீட் என்கிற ஒரு தேர்வை வைத்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் படிப்பதற்கு, இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலம் தோறும் மாவட்ட தோறும் கல்லூரி வேண்டுமென திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
இந்த கல்லூரிகள் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அந்த கல்லூரியில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது. அதை விமர்சிக்க முடியாதவர்கள் ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்கள்” என்று கூறினார். இந்நிகழ்வின் போது, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உதவிய கனிமொழி: கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கனிமொழி எம்.பி, கார் மூலம் திருப்பூர் நோக்கி இன்று மதியம் சென்று கொண்டிருந்தார். கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, அவ்வழியாக தனியார் கல்லூரி மாணவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மயங்கிக் கிடந்தார். அவரை கனிமொழி எம்.பி மீட்டு, வாகனம் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
|
கும்பகோணம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கியதாக புகார் | சி.எஸ். ஆறுமுகம் | கும்பகோணம் | 2024-02-10 19:17:00 |
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுந்தரபெருமாள் கோயில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியிலிருந்தவர், ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் வட்டம், தாராசுரம், கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விஜய் (55). ரத்தக் கொதிப்பு நோயாளியான இவர், கடந்த 9-ம் தேதி சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு சென்று ரத்தக் கொதிப்புக்கான மாத்திரைகள் வாங்கி வந்துள்ளார். இன்று (பிப்.10) காலை மாத்திரைகளை உட்கொள்ள, அந்த மாத்திரையின் அட்டவணையைப் பார்த்த போது, அது 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியான மாத்திரை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், அந்த மாத்திரைகளை சாப்பிடாமல், இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகாரளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் கூறியது: “கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தக் கொதிப்பு இருப்பதாக தெரிவித்ததையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக அதற் உண்டான மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தேன்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளியின் வீட்டிற்கே மாத்திரைகள் வரும் என்று கூறி 2 மாதங்கள் மாத்திரைகள் வீட்டிற்கு வந்து வழங்கினார்கள். பின்னர் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், நீங்கள் அருகில் உள்ள பட்டீஸ்வரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றனர்.
ஆனால், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மாத்திரைகள் இல்லை என்றும், ஆன்லைன் சிக்னலில் பிரச்சினை என்பதால் நீங்கள் சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதன்படி கடந்த சில மாதங்களாக சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு சென்று ரத்தக்கொதிப்பு நோய்க்கான மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அங்கு சென்று வாங்கிய மாத்திரையின் அட்டையில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகாரளிக்கவுள்ளேன்.
எனவே, அங்குள்ள மாத்திரைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பணியிலிருக்கும் மருத்துவ பணியாளர்கள் கவனத்துடன் காலாவதி தேதியைப் பார்த்து மாத்திரைகளை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்” எனத் தெரிவித்தார். தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கலைவாணி கூறியது, “இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
|
மதுரை ஹாஜிமார் தெருவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2024-02-10 17:39:00 |
மதுரை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் இன்று ஹாஜிமார் தெருவிலுள்ள வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அவரது செல்போன், சிம்கார்டுகள், புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் அஜிம். இவர் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர். இவரது வீட்டுக்கு இன்று அதிகாலையில் 6 மணியளவில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர். அப்போது அவரது வீடு பூட்டியிருந்ததால் காலை 7.30 மணிக்குமேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள அவரது சகோதரரின் வீட்டில் இருந்ததால் என்ஐஏ அதிகாரிகள் அங்கு சென்று சோதனையை செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக முகம்மது அப்துல் அஜிமிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவரிடம் முந்தைய வழக்குகள், சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தினர். செல்போன், சிம்கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்து சென்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தபோது திடீர்நகர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர் மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் 2019ல் பாபர் மசூதி சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து ஹாஜிமார்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் அயாஸ் கூறுகையில், ''எம்.பி தேர்தல் நெருங்குவதால் என்ஐஏ அதிகாரிகள் சமூகப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களை குறிவைத்து சோதனை நடத்துகின்றனர். ஊடகங்களில் தான் சோதனை குறித்து தெரிந்துகொண்டோம். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறித்து ஜமாத்திடம் தெரிவித்தால் விசாரணைக்கு ஒத்துழைப்போம். என்ஐஏ இஸ்லாமிய இளைஞர்களுக்கு அதிகளவிற்கு தொந்தரவு அளிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோல் இளைஞர்களை தேடித்தேடி விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர்'' என்றார்.
|
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சொதப்பல்கள்: இபிஎஸ் பட்டியல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 16:27:00 |
சென்னை: அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, அதிமுக ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையம் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டது. நாளடைவில் கோயம்பேடு பேருந்து நிலையமும் அதன் சுற்றுப் பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. எனவே, அதிமுக அரசு கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்திலிருந்தும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக அதிமுக ஆட்சியில் மாதவரம் பேருந்து நிலையம் செயல்படத் துவங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும்போல் இதர மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி செயல்பட்டு வந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்ல கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளது போன்று சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கு நகரப் பேருந்து வசதி, மெட்ரோ ரயில் வசதி, வாடகை ஷேர் ஆட்டோ, ஆட்டோ, சீருந்து வசதிகள், உணவு விடுதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமையும் வகையில் எங்கள் ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று ஸ்டிக்கர் ஒட்டி அவசர கதியில் இந்த திமுக அரசு தைப் பொங்கலுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது. சென்னையில் வசித்து வரும் வெளிமாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலைக் கொண்டாட தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வார்கள். இந்த ஆண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நகரப் பேருந்து மற்றும் மெட்ரோ இரயில் வசதி இல்லாமல், பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கே சென்றடைய முடியவில்லை.
ஓரளவு வசதி படைத்தவர்கள் பெரும் செலவில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை சீருந்து மூலமாக கிளாம்பாக்கத்தைச் சென்றடைந்த நிலையில் அங்கும் போதுமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமத்திற்குள்ளாயினர். பலர் தைப் பொங்கலுக்கு தங்கள் ஊர்களுக்குக்கூட செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் உணவக வசதி, பணம் எடுக்கும் ஏடிஎம் மிஷின் வசதி, டீ, காபி, பால் விற்பனை நிலையங்கள், தண்ணீர் வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல், அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோபத்தை திமுக அரசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகளை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் சுட்டிக் காட்டி பேட்டி அளித்துள்ளேன்.
சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்து நகரப் பேருந்து வசதி இல்லாமல், மெட்ரோ ரயில் வசதியுமின்றி, தனியார் வாடகை வாகனங்களுங்களுக்கு அதிக அளவு வாடகை கொடுத்து தங்களது குழந்தைகளுடனும், உடமைகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடையும் பயணிகள், தாங்கள் அனுபவித்த கடும் சிரமங்களை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளனர். இதை, திமுக அரசும், அதிகாரிகளும் பொருட்படுத்தவில்லையோ என்று பொதுமக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர்.
பொதுவாக, பயணிகள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வதைத்தான் பெரும் சிரமமாக கருதுவார்கள். ஆனால், சென்னைவாசிகளை அவர்களது இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடைவதையே பெரும் சிரமமாகக் கருத வைத்துவிட்டது இந்த நிர்வாகத் திறமையற்ற திமுக அரசும், அதன் பொம்மை முதலமைச்சரும். நேற்று முன்தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அதிக அளவு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பேட்டி அளித்திருந்தார்.
அவரது பேட்டியை நம்பி, நேற்று (9.2.2024) இரவு தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், இன்று (10.2.2024) காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்ற காட்சிகளையும், தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகளையும், குறிப்பாக திருச்சிக்குச் செல்லும் பயணிகள் சாலை மறியல் செய்த காட்சிகளையும் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டி உள்ளன.
மக்கள் ஓரளவுக்குத்தான் பொறுமை காப்பார்கள். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று முதுமொழி ஒன்று உண்டு. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
|
“தேர்தல் முடிந்ததும் பாஜகவில் ஓபிஎஸ் இணைந்து விடுவார்” - ஜெயக்குமார் கணிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 15:34:00 |
சென்னை: "தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸ்ஸின் குரல் இருக்கிறது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸின் குரல் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. பாஜக இல்லாத ஒரு ஒரு மகத்தான கூட்டணி அதிமுக சார்பில் அமையும்.
இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில், அனைத்தையும் பொறுத்திருந்து பாருங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால், திமுக அரசு, அதற்கு மூடுவிழா செய்துவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை வழங்கினார்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தேர்தலை தனித்து சந்தித்து இருக்கிறார்கள், அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். கூட்டணி அமைத்துதான் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது. அதற்காக கூட்டணி இல்லை என்று சொல்ல வேண்டாம். இன்னும் நாட்கள் இருக்கின்றன.
எங்களுடைய தனித்தன்மையை பல கட்டங்களில் நிரூபித்து இருக்கிறோம். பாஜவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலையை எடுத்து விட்டோம். தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். எங்களை நோக்கிதான் கட்சிகள் வரும்” என்றார் ஜெயக்குமார்.
|
“100 நாள் வேலை திட்டத்தில் 6 மாத ஊதிய நிலுவைக்கு திமுக ஆட்சியே காரணம்” - வானதி சீனிவாசன் | கி.பார்த்திபன் | ஈரோடு | 2024-02-10 15:28:00 |
ஈரோடு: “பெண்களின் வாக்குகள் தற்போது பாஜகவுக்கு அதிகளவு உள்ளது” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர் மக்களவை தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு டி.என்.பாளையத்தில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ரதி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா மத்திய அரசு வழங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே காங்கிரஸ் ஆட்சி காலமாக இருந்தால் அவர்கள் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.
2024-ல் மீண்டும் மோடி பிரதமர் ஆவார். பெண்களின் வாக்குகள் தற்போது பாஜகவுக்கு அதிகளவு உள்ளது. வெளிநாடுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலங்களும் செய்யக்கூடியது. ஆனால், இங்கு உள்ள முதல்வர் தமிழகத்தில் உள்ள பணக்காரர்களை இங்கிருந்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமே முதலீடுகளை பெறுகிறார்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில் கடந்த 6 மாதமாக ஊதியம் வராததற்கு, தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சிதான் காரணம். வேலை செய்பவர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் வங்கி ஆதார் எண்களை சரியாக வழங்காமல் தமிழக அரசு வேலை சரிவர வேலை செய்யவில்லை.
தமிழகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறி மாநில அரசு நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற கொங்கு மாவட்டங்களில் பெறப்படும் வரி மற்ற மாவட்டங்களுக்கு வழங்குவது ஏன்? அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் நிதியை தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்காதாது ஏன்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு முதற்கட்ட நிவாரண தொகையை மத்திய அரசு கொடுத்து விட்டது. தமிழக அரசு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. அது மத்திய குழு ஆய்வு பரிசீலனையில் உள்ளதால் பரிசீலனை முடிந்து விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும்" என்றார் வானதி சீனிவாசன்.
அப்போது, "கோவையில் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் வெற்றி பெறுவாரா?" என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "முதலில் அவர் களத்துக்கு வரட்டும். பிறகு பார்ப்போம்" என்றார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் முன்னிலையில் மாற்று கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். முன்னதாக, பாஜக மகளிர் அணி மாநில துணைத் தலைவர் வித்யா ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி தலைவர் உமாரதிராஜன், மாநில மகளிர் அணி செயலாளர்கள் மோகனப்பிரியா, சுதாமணி சதாசிவம், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
“மோடி மீண்டும் பிரதமராக ஓபிஎஸ் விரும்புகிறார்” - அண்ணாமலை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 14:30:00 |
சென்னை: “பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மற்ற கட்சிகளின் உட்கட்சி பிரச்சினைகளில் பாஜக எப்போதும் தலையிடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். சென்னையில் நாங்கள் கெட்ட பெயர் வாங்க விரும்பவில்லை. ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாளை சென்னை வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
எல். முருகன் நாடாளுமன்றத்தில் பதில் கூறும்போது, அதை ஏற்பதும் ஏற்காததும் டி.ஆர்.பாலுவின் விருப்பம். டி.ஆர்.பாலு தலைமைச் செயலாளரை பார்த்துவிட்டு வெளியே வந்து “நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அண்ணன் டி.ஆர்.பாலு பேசிய விஷயம், அவருடைய உடல் மொழி, அதாவது எல்.முருகனைப் பார்த்து, இந்த அரங்கத்தில் இருப்பதற்கே உனக்கு தகுதி இல்லை என்று கூறுகிறார். அவர் “அன்ஃபிட்” என்று கூறினால் நாங்கள் அதை எந்தக் கோணத்தில் எடுத்துக் கொள்வது? அப்போது சமூக நீதி இல்லையா? முருகனிடம் காழ்ப்புணர்ச்சியோடு டி.ஆர்.பாலு நடந்து கொண்டது சரியா?” என்றார் அண்ணாமலை.
|
“மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக நிதி ஆதாரங்களை பெருக்கி வருகிறது” - கே.எஸ்.அழகிரி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 13:55:00 |
சென்னை: மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மக்களவையில் ஆணவத்தோடு பேசியிருக்கிறார் என்றும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில் உரையாற்றி இருக்கிறார். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒத்து ஊதியிருக்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள், பணமதிப்பு நீக்கம் செய்தால் கருப்பு பணம், கள்ளப் பணம் ஒழியும் என்று கூறினார்கள். இதனால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் நிலை தான் ஏற்பட்டது. வரலாறு காணாத கரோனாவை எதிர்கொள்ள மருத்துவ துறையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், சொந்தமாக தடுப்பூசி தயாரிக்க முடியாத அவலநிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரை இழந்தார்கள்.
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு இருமடங்கு விலை வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றாததற்கு பரிகாரமாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியிருக்கிறார். எத்தனை விருதுகள் வழங்கினாலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகள் போராட்டத்தினால் திரும்பப் பெற்று விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு செய்த துரோகத்தை ஈடுகட்ட முடியாது.
இந்தியாவின் பொருளாதாரத்தை 2025 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர், அதாவது ரூபாய் 400 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்திக் காட்டுவேன் என்று பிரதமர் மோடி உரத்தக் குரலில் உறுதிபடக் கூறினார். ஆனால், இன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த இலக்கை 2027 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போட்டிருக்கிறார். அந்த இலக்கை அடைய வேண்டுமானால் தற்போதைய வளர்ச்சியை விட இருமடங்கு வளர்ச்சியை அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை என்பது இன்றைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014இல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.62. தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 83 ஆக சரிந்துள்ளது. இதன்படி ரூபாய் மதிப்பு 40 சதவிகிதம் குறைந்துள்ளது. 2014 இல் வங்கியில் ரூபாய் 100 செலுத்தியிருந்தால் அதன் மதிப்பு இன்றைக்கு ரூபாய் 60 ஆக குறைந்துள்ளது.
பாஜக ஆட்சியில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 31 டிசம்பர் 2023 நிலவரப்படி மத்திய பாஜக அரசின் மொத்த கடன் ரூபாய் 172 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவிகிதம் ஆகும். 2014-க்கு முன் இந்தியாவை 67 ஆண்டுகளாக 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 2014 முதல் 2023 டிசம்பர் வரை ஒன்பதரை ஆண்டுகளில் 172 லட்சம் கோடி ரூபாயாக கடன் சுமை உயர்ந்திருக்கிறது.
இதன்படி கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு 117 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டு மக்களின் தலையில் தான் விழுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது, 2014க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது சராசரியாக ரூபாய் 43,000 கடன் இருந்தது. அது தற்போது ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சுமார் 3 மடங்கு ஒரு தனிநபர் மீதான கடன் அதிகரித்திருக்கிறது. பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பெரிய அளவில் பாஜக அரசால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி ஆட்சியை பொறுத்தவரை ஏழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை வைத்துள்ளனர். அதேநேரத்தில் 50 சதவிகிதத்தினர், அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது, 2023இல் 169ஆக உயர்ந்தது தான் மோடி ஆட்சியின் சாதனையாகும். அதேபோல, அதானி, அம்பானியின் சொத்து பல மடங்கு குவிந்திருக்கிறது. இதுகுறித்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்களின் பட்டியலின்படி கடந்த 8 ஆண்டுகளில் அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.
டிசம்பர் 2022 நிலவரப்படி அதானியின் சொத்து 8.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பிடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு 609-வது இடத்தில் இருந்தவர் இன்றைக்கு 13-வது இடத்திற்கு உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பினால் பாஜக தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது. 2018 முதல் 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூபாய் 9,200 கோடி. இதில் பாஜக பெற்ற நன்கொடை மட்டும் ரூபாய் 5272 கோடி. இது மொத்த நன்கொடையில் 52 சதவிகிதமாகும்.
பெரும் தொழிலதிபர்கள் எத்தனை கோடி நன்கொடை கொடுத்தாலும் அது பாஜகவுக்கும், நன்கொடை கொடுத்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எந்த தொழிலதிபர் எவ்வளவு நன்கொடை கொடுத்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இதைவிட ஒரு ஊழல் மோசடி வேறு என்ன இருக்க முடியும்? அதேபோல, 2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜக நிதி ஆதாரங்களை பெருக்கி வருகிறது. இதன்படி மார்ச் 2023 பாஜகவின் வங்கி கணக்கில் ரூபாய் 3596 கோடி டெபாசிட் தொகையாக வைத்திருக்கிறது. ஆனால், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருப்பதோ ரூபாய் 162 கோடி டெபாசிட் தொகை தான். இத்தகைய சமநிலையற்ற தன்மையில் ஆளுங்கட்சியான பாஜக.,வின் நிதி ஆதாரங்கள் இருக்கும் போது சுதந்திரமான, சுயேட்சையான தேர்தலை எப்படி எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியும் என்பதை தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றமாவது நீதி வழங்குமா என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி ஆட்சியில் நடைபெறுகிற ஊழலை மறைக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஆதாரமற்ற அவதூறுகளை மோடியும், நிர்மலா சீதாராமனும் மக்களவையில் கூறியிருக்கிறார்கள். டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டிலாவது அன்றைய பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட எந்த அமைச்சர்கள் மீதாவது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டதா ? நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்களா? சி.ஏ.ஜி.யின் அறிக்கையை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றி பெற்ற பாஜக ஆட்சியில் நடைபெற்ற 2ஜி வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பல மாதங்கள் காத்திருந்த பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தார். ஆனால், இன்றைக்கு சி.ஏ.ஜி. அறிக்கையின்படி நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய 2ஜி வழக்கில் சி.பி.ஐ. வழக்கு தொடர டாக்டர் மன்மோகன்சிங் அரசு பாரபட்சமில்லாமல் உத்தரவிட்டது. ஆனால், இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை ஊழல் பற்றி விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு உத்தமர் வேடம் போடுகிற பிரதமர் மோடி ஏன் உத்தரவிடவில்லை? காங்கிரஸ் ஆட்சி ஊழலுக்கு துணை போகாத நிலையில் இன்றைக்கு பாஜக ஆட்சி ஊழலுக்கு துணை போய்க் கொண்டிருப்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி. என குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாக கூறும் பிரதமர் மோடி அவர்களே, வறுமை ஒழிப்பு குறித்து ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின்படி 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றோடும் உறங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 2023 உலக பசி குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 107-வது இடத்தில் இருந்து இத்தகைய அவலநிலைக்கு இந்தியாவை கொண்டு சென்று சாதனை படைத்தவர் தான் பிரதமர் மோடி.
எனவே, மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.
|
கோவையில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-02-10 12:50:00 |
கோவை: கோவையில் 12 இடங்களில் என்ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோவை உக்கடத்தை அடுத்த, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தினர். கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் இடங்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் கல்லூரியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது, அக்கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆதரவு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு வழக்குப்பதிந்தனர். அதனடிப்படையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்தாண்டு சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக கோவையில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (பிப்.10) சோதனை நடத்தினர். இதற்காக திட்டமிட்டப்படி, என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இன்று காலை கோவைக்கு வந்தனர். கோவை அல் அமீன் காலனியில் ஹபிபுல்லா வீடு, அருள் நகரில் (அன்புநகர்) அபுதாகீர் வீடு, என்.எஸ்.கார்டனில் பைசல் ரகுமான் வீடு, அற்புதம் நகரில் சலாவுதீன் வீடு, கரும்புக்கடை கிரீன் கார்டனில் அனீஷ் முகமது வீடு, பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரத்தில் கமீல் வீடு, குனியமுத்தூர் ராஜூநகரில் சுதிர் முகமது வீடு, சீரபாளையம் மதுக்கரையில் முகமது அலி ஜின்னா வீடு, போத்தனூர் அமீர்சாகிப் வீதியில் நாசர் வீடு மற்றும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அரபிக் கல்லூரியில் நேரடியாக படித்தவர்கள், ஆன்லைன் வாயிலாக படித்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதன் அடிப்படையில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்தச் சோதனையில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
|
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 11:38:00 |
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எழுதியிருக்கும் கடிதத்தில், “மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் , 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் பிரதமர் உடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கின்றோம்.
மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும்.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது | ஜி.செல்லமுத்து | திருச்சி | 2024-02-10 11:29:00 |
திருச்சி: தமிழக ஆளுநரின் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மற்றும் கருமண்டபம் தேசிய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று காலை திருச்சி வருகை தர உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகவும், தெய்வப் புலவர் திருவள்ளுவரை கொச்சைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஆளுநர் செல்லும் திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
|
கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு?- திருச்சி பீமநகர் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை | ஜி.செல்லமுத்து | திருச்சி | 2024-02-10 11:11:00 |
திருச்சி: கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி பீமநகர் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் அஷரப் அலி. எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இன்று (பிப்.10) அதிகாலை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 3 பேர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
பின்னர் திருச்சி கீழரண் சாலையில் உள்ள அவரது கடையில் சோதனை நடத்தினர். கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும், இவருடைய உறவினர் பாகிஸ்தானில் இருந்ததாகவும், மற்ற உறவினர்கள் அங்கே சென்று அடிக்கடி அவரைப் பார்த்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
நான்கிற்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேர் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையால் திருச்சி பீமநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
|
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படவில்லை: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 09:29:00 |
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்றஅடிப்படையில் காஞ்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசுமருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தமிழகத்தில் திமுகஅரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரி களை தொடங்குவதற்கோ, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக நீடித்த எந்த ஆட்சியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததே இல்லை.இத்தகைய சூழலில் ஐந்தாண்டுஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்ற அவப்பெயரை நடப்பு திமுக அரசு சுமக்கப் போகிறது.
எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலையீடு கூடாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 09:21:00 |
சென்னை: கல்லூரிகள், பள்ளிகள் உட்பட கல்வி நிலையங்களில் அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்கக் கூடாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில உருது அகாடமி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழா, உருது மற்றும் தமிழ் மொழி அறிஞர்கள் கவுரவித்தல் மற்றும் கல்லூரி மாணவர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைபல்கலை. வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. மதச்சார்பற்ற கொள்கையில் திமுக எப்போதும் உறுதியாகவே உள்ளது. பண்பாடு, அரசியல் நாகரீகம் கொண்டது திராவிட இயக்கம். நாடு என்பது ஒரு சமுதாயத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானது இல்லை.
அதேபோல், தமிழகத்தின் உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் துணைவேந்தர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். உயர்கல்வியின் நிர்வாகம் சீராக அமைய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உட்பட கல்வி நிலையங்களில் அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் இருக்கக் கூடாது. துணைவேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் சாதி, மதம், பேதம் பார்க்காமல் அவரவர் பணிகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
|
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரிக்கை: மதுரை வழக்கறிஞரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 09:15:00 |
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி பிப்.28 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மதுரை வழக்கறிஞர் பகவத்சிங்குக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பகவத்சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கையாக கிடப்பில் இருந்து வருகிறது.
எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தரக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் கடந்த டிச.20 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு போலீஸாரிடம் அனுமதி கோரினேன். ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் வரை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே மனுதாரருக்கு அனுமதி மறுத்ததாகவும், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், இந்த போராட்டத்தில் தன்னுடன் விருப்பம் உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளதாகவும், தங்களது இந்த போராட்டத்தால் எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் கோரிக்கையில் எந்தவொரு சட்டவிரோதமும் இல்லை என்பதால் வழக்கமான நிபந்தனைகளுடன் பிப்.28 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மனுதாரருக்கு போலீஸார் அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
|
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு @ கோவை | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-10 09:03:00 |
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையிலான இந்த கண்காணிப்பு அமைப்பை, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையில் மனித - யானை மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் குடியிருப்புகள், நிலப் பயன்பாட்டு முறை, விவசாய நடைமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
மதுக்கரை வனச்சரக பகுதி: கோவை மாவட்டத்தில் 2021முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில் 9,028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன. இவ்வாறு வெளியேறும் யானைகள் மதுக்கரை வனச்சரக பகுதியில் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில் வழித்தடம் வனப் பகுதியை உள்ளடக்கியது. புதிய தொழில்நுட்பத்தில் மதுக்கரை வனச் சரகத்தில் 7 கிலோமீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் தண்டவாளப் பகுதிகளில், 12 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, உயர் ரக கேமராக்கள் மூலம், தண்டவாளத்தையொட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
எச்சரிக்கை சிக்னல்: இரவு நேரங்களில் தெர்மல் இமேஜ் மற்றும் பகல் நேரத்தில் கேமரா வீடியோ பதிவுகள் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 150 மீட்டரில் ஆரஞ்சு, 100 மீட்டரில் மஞ்சள், 50 மீட்டரில் சிவப்பு என வெவ்வேறு நிற எச்சரிக்கை சிக்னல்கள் பெறப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்து வனத் துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, ரயிலை மெதுவாக இயக்கிச் செல்ல முடியும். இதனால், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியும்.
மேலும், யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக பதிவுசெய்து, செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான தரவுகளைப் பெற முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேசும்போது, ‘‘ட்ரோன் மூலமும் யானைகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து, ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத் துறையை நவீனப்படுத்த ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட உள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, மாவட்ட வனப் பாதுகாவலர் என்.ஜெயராஜ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
|
தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்கும் பாஜக: விருதுநகர், திருச்சியில் இன்று தொடக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 08:50:00 |
சென்னை: தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பாஜக கேட்கவுள்ளது. முதற்கட்டமாக இப்பணி விருதுநகர், திருச்சியில் இன்று தொடங்குகிறது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்திலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி,தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்துக்கான சிறப்பு திட்டங்களை தேர்தல்அறிக்கையில் இடம்பெற வைப்பதற்கான பணிகளை பாஜகவும் தொடங்கியுள்ளது. இதற்காக, மக்களவை தேர்தல் மேலாண்மைக் குழுவை பாஜக நியமித்துள்ளது.
ஹெச்.ராஜா தலைமையில் குழு: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.பி எஸ்.கே.கார்வேந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைக் கேட்க உள்ளது.
முதல்கட்டமாக விருதுநகர் மற்றும் திருச்சியில் இன்று பொதுமக்களை இக்குழு சந்திக்கிறது. காலையில் விருதுநகரில் வணிகர்கள், குறு, சிறு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், பட்டாசு ஆலை நிறுவனங்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து கருத்துகளை கேட்கிறது.
மாலையில் திருச்சி செல்லும்இந்தக் குழு, விவசாயிகள், முன்னாள் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர், விவசாய சங்கங்களைச் சந்திக்கிறது. தேர்தல் அறிக்கையில் விவசாயம் தொடர்பான புதிய திட்டங்கள் இடம்பெற வைப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
12-ம் தேதி சென்னை: இதைத்தொடர்ந்து, வரும் 12-ம்தேதி சென்னையில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர். பொருளாதாரக் கொள்கை, வரி விதிப்புகள், ஸ்மார்ட் சிட்டிதிட்டங்கள், மழைநீர் வடிகால்வாய்,புதிய திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்பட சென்னைமக்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பில், கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்க இருப்பதாக பாஜக வினர் தெரிவித்தனர்.
|
“சீட்டு கேட்பதற்காகவே இருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் தான்!” - அண்ணாமலை | செய்திப்பிரிவு | பேசியதாவது | 2024-02-10 08:30:00 |
’தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்’ என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் நேற்று கும்மிடிப்பூண்டி வந்தார்.
அங்குள்ள ஜி.என்.டி., சாலையில் ரெட்டம்பேடு சந்திப்பு அருகே தொடங்கி பேருந்து நிலையம் எதிரே நிறைவு செய்தார். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடைபெற்ற இந்த யாத்திரையில், அண்ணாமலை பேசியதாவது: நம் தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி.
வளர்ச்சி என்று சொன்னால் மோடி, மீனவர்கள் நலன் என்று சொன்னால் மோடி. மீனவர்கள் நலனுக்காக முதன் முதலாக தனி அமைச்சரகத்தை கொண்டு வந்தவர் மோடி. கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளனர். நச்சு கழிவுகளை அகற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அக்கறையில்லாமல் ஒரு அரசு இருக்கிறது என்றால் அது திமுக அரசுதான். தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். சேவை செய்வது என்பது காங்கிரஸ் டி.என்.ஏ.வில் இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களின் கட்சியை பார்க்காமல் கவுரவம் கொடுப்பவர் மோடிதான். இவ்வாறு அவர் பேசினார்.
|
ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோயம்பேட்டில் பயணிகளை இறக்கி, ஏற்ற அனுமதி: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 08:27:00 |
சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஏற்கெனவே அறிவித்தபடி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்படும், எனக்கூறி வழித்தடங்கள் குறித்து இரு வரைபடங்களைத் தாக்கல் செய்தார்.
ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை சென்னை மாநகருக்குள் உள்ள தங்களின் பணிமனைகளில் இருந்து ஏற்றி, இறக்கி அனுமதிக்க வேண்டும், என கோரினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்டதே கேள்விக்குறியாகிவிடும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டுமென்பதற்காக அனைத்து புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போது ஆம்னி பேருந்துகளுக்காக முடிச்சூரி்ல் 5 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடனும் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஆம்னி பேருந்துகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றிஇறக்கலாம். அங்குள்ள கேரேஜ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், போரூர் மற்றும் சூரப்பேடு டோல் பிளாசா நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்பட கூடாது’என்று இடைக்கால உத்தரவிட்டு.விசாரணையை ஏப்.15-க்கு தள்ளி வைத்துள்ளார்.
|
மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்துக்கு சீல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 07:04:00 |
சென்னை: சென்னை மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மக்களவை தேர்தலையொட்டி பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் நேற்று முன்தினம் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தென் சென்னை மக்களவை பொறுப்பாளர் ராஜா தலைமையில், மயிலாப்பூர் தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அதனை இந்து சமய அறநிலைத்துறை சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
|
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா' விருது - ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைவர்கள் வாழ்த்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:34:00 |
சென்னை: விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்குபாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. சுயசார்பு பாரதத்தைக் கட்டமைக்க நமது தேசத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்காக சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம் இது. இந்தக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கத்தைக் கண்டு மனம் வருந்தி, நாட்டு மக்களுக்கு போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தற்போது உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்க எம்.எஸ்.சுவாமிநாதன் மிக முக்கியக் காரணம். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உண்டு. அவரது உழைப்புக்கும், தொண்டுக்கும் ‘பாரத ரத்னா’ விருது சிறந்த அங்கீகாரமாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த, இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்படுவது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையைஉருவாக்கிய விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஐஜேகே பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன்: இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, குறைந்த அளவு நீரைக்கொண்டு, அதிக மகசூலை ஈட்டக்கூடிய புதிய ரக உணவுப் பயிர்களை அறிமுகப்படுத்தி, பசுமை புரட்சி உண்டாக்கியவர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து, அவரது தன்னலமற்ற சேவையை உலகம் அறியச்செய்த மத்திய அரசுக்கு நன்றி.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான சவுமியா சாமிநாதன்: மறைந்த எனது தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றி. உணவு, ஊட்டச்சத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அவர் ஆற்றியபணிக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
|
பிறவியிலேயே நடக்க இயலாத லட்சத்தீவு சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை: மருத்துவர் நம்பிக்கை | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-10 06:30:00 |
திருச்சி: பிறவியிலேயே நடக்க இயலாத, லட்சத்தீவைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் எழுந்து நடப்பார் என்று அரசு மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஆண்ரோட் தீவில் ஏழை தொழிலாளியான செரிய கோயா- ஹாபி ஷா தம்பதியரின் இரண்டாவது மகன் முகமது துல்கர் (11). ஹாபி ஷா கருவுற்றிருந்தபோது, 7 மாதத்தில் 700 கிராம் எடையில் இந்தக் குழந்தை பிறந்தது. பல மாதங்கள் தீவிர சிசு சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறக்கும்போதே இரு கால்களும் பாதிக்கப்பட்டு, பின்னர் நடக்க முடியாமல் இருந்த இந்த சிறுவனுக்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், உரிய பலனளிக்கவில்லை. இதனால் சிறுவன் துல்கர் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தவித்துவந்தார்.
இந்நிலையில், பிறவியிலேயே பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து, குணமாக்கி வரும் திருச்சியைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணரும், அரசு மருத்துவருமான ஜான் விஸ்வநாத் குறித்து அறிந்த பெற்றோர், அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுவன் துல்கரை திருச்சிக்கு அழைத்து வந்து, மருத்துவர் ஜான் விஸ்வநாத்திடம் காண்பித்து, ஆலோசனை மேற்கொண்டனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், 3 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, ரங்கம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுவனை அனுமதித்தார்.
இதுகுறித்து மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறியது: சிறுவன் துல்கர் பிறவி மூட்டு இறுக்கம், பெருமூளை வாதம் தொடர்பான ‘ஸ்பாஸ்டிக் பாராப்லீஜியா’ என்ற பிறவி பாதிப்பு காரணமாக நிற்கவோ, நடக்கவோ முடியாமல் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு இடுப்பு மூட்டுகள், முழங்கால் மூட்டுகள், கணுக்கால் மூட்டுகள், பாதங்கள், கால்கள், தொடைகளில் தொடர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, டிச. 28, ஜன. 31 மற்றும் பிப்.6 ஆகிய நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் 3 முதல் 4 மணி நேரம் நடைபெற்றது.
இந்த தொடர் நவீன அறுவை சிகிச்சை என்பது, தசைநார் பரிமாற்றம், தசை சமநிலை மற்றும் மறுசீரமைப்பு மற்றும் முன்பாத மறுஅமைப்பு செயல்முறைகளை உள்ளடக்கியது. பல லட்சம் செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
அறுவை சிகிச்சை காயங்கள் ஆறியவுடன், தையல்கள் பிரிக்கப்பட்டு, இயன்முறை பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர், விரைவில் சிறுவன் எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த அறுவை சிகிச்சை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
3 கிலோவாட் வரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதில் விலக்கு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:25:00 |
சென்னை: வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் 3 கிலோவாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டு உள்ளது.
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் பல்வேறு திறனில் சூரியசக்தி மேற்கூரை (ரூஃப் டாப்சோலார்) எனப்படும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படுகிறது.
இதை அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதற்காக மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சாத்தியக்கூறு அறிக்கை பெறவேண்டும். இதற்கு மின்வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதிவழங்க மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 3 கிலோவாட் வரைமேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறுஅறிக்கை தேவையில்லை எனமின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரியசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்துவருகிறது. தற்போது, தமிழகத்தில்சூரியசக்தி மின்உற்பத்தித் திறன்7,372 மெகாவாட்டாக உள்ளது. இதில், 526 மெகாவாட் கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்நிலையங்கள் ஆகும்.
மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைத்து சூரியசக்தி மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, தாழ்வழுத்த மின்இணைப்பில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம்மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்த 3 கிலோவாட் வரையிலான சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றனர்.
|
கோடநாடு எஸ்டேட் வழக்கு விசாரணை பிப். 23-ம் தேதிக்கு தள்ளிவைப்பு | செய்திப்பிரிவு | உதகை | 2024-02-10 06:21:00 |
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, வரும் பிப். 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், கோடநாடு பங்களாவில் குற்றம் நடைபெற்ற இடத்தை, நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் விஜயன்,முனிரத்தினம் ஆகியோர் ஆஜராகினர். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் குற்றம் நடைபெற்ற இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்துஅரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தாக்கல் செய்வதற்காக, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைத் தன்மை குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம், மாவட்டஅமர்வு நீதிமன்ற நீதிபதி கேட்டறிந்தார்.
வழக்கு தொடர்பான தொலைத்தொடர்பு சாதனங்களின் அறிக்கைகள் நீதிமன்றத்துக்கு வந்தவுடன், அதன் நகல்களைப் பெற்றுக்கொண்டு, சிபிசிஐடி போலீஸார் தலைமையில் விசாரணை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, "கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில், பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பல்வேறு துறைகளின் ஆய்வு நடக்க இருப்பதால், குற்றம்நடைபெற்ற இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.
|
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-02-10 06:20:00 |
புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்பட்ட சூழலில், மக்களிடையே இந்த தகவல் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலைஆளுநர் தமிழிசை வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி உண்ணும் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில், நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஞ்சு மிட்டாயை வடஇந்தியாவில் இருந்து வந்த சிலர் விற்பனை செய்வது தெரியவந்தது.
அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள் என்று விசாரித்தபோது, சில கடைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த கடைகளில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்யவும், யாரெல்லாம் இந்த பஞ்சு மிட்டாய்களை விற்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை முறையாக அணுகி, தரச்சான்று பெற்று, பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம்.
அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் தமிழிசை அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
|
வரும் 13, 14 தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:19:00 |
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 12-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13, 14 தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
|
பள்ளிகளை சுற்றி போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க மாணவர்களை கொண்டு போக்குவரத்து போலீஸார் புது திட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:16:00 |
சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கும் வகையில் பள்ளிகளில் ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்' என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து போலீஸார் உருவாக்கி உள்ளனர்.
இதை, தி.நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை தொடங்கி வைத்தார். பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் போக்குவரத்து தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவதோடு, தேவைப்படும் நேரத்தில் பள்ளி வளாகங்களைச் சுற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள். இதன் மூலம் பள்ளி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. முதல் கட்டமாக இத்திட்டம் 4 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் நன்மைகள்: இத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பார்கள். பள்ளி திறக்கும்மற்றும் மூடும் நேரங்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள் தன்னார்வலர்களாக பணி செய்வதால் பள்ளி மண்டலங்கள் நெரிசலின்றி, விபத்து இன்றி பாதுகாப்பு மண்டலங்களாக மாறும். இந்த முயற்சி வெற்றி பெற்றவுடன், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப் போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: சென்னையில் பல பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் மேலும் சில அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து தொடர்பாக ஏற்கெனவே, 400 மாணவர்களுக்கு ஐஐடி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் விபத்துகளின் எண்ணிக்கை மேலும் குறையும் என்றார்.
|
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ல் ஆளுநர் உரையுடன் தொடக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:15:00 |
சென்னை: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.
பிப்.19-ல் பட்ஜெட் தாக்கல்: இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘சட்டப்பேரவை பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்’’ என்று அறிவித்தார். தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால், பேரவை அரங்கம் வண்ணம்பூசப்பட்டு, இருக்கைகள், மேஜைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
சட்டப்பேரவை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதி, ஆளுநர், பேரவைத் தலைவர் வருகை தரும் பகுதிகள், உறுப்பினர்கள் வரும் வாயில்கள், எதிர்க்கட்சி தலைவர் அறை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட இடங்களும் தயாராகி வருகின்றன.
மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், தமிழக பட்ஜெட்டும் விரைவாக தாக்கல் செய்யப்படுகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதம்: முன்னதாக, சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் உரையாற்றியதும், அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார். அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும். அந்த வகையில், அடுத்த 3 நாட்கள் வரை கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதும் அன்றே முடிவு செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
|
கராத்தே மாஸ்டருக்கு எதிராக பொய் புகார் அளிக்க வைத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:12:00 |
சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கராத்தே மாஸ்டருக்கு எதிராக பொய் புகார் அளிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூரில் கராத்தே வகுப்பு நடத்திவரும் கராத்தே மாஸ்டர் தர்மராஜன், தன்னிடம் கராத்தே பயிற்சிபெற வந்த சிறுமிகளுக்கு பாலியல்தொந்தரவு கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தர்மராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில் முன்விரோதம் காரணமாக சிலர் தனக்கு எதிராக அந்த சிறுமிகளைத் தூண்டிவிட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக பொய் புகார் அளித்ததாக வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அந்த 3 சிறுமிகளையும் பெற்றோருடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
பின்னர் அந்த சிறுமிகளிடம் தனது சேம்பரில் வைத்து வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்தசிறுமிகள் தங்களுக்கு தர்மராஜன்எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் அளிக்கவில்லை என்றும்,அரவிந்தன், பிரதீப் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் தர்மராஜனுக்கு எதிராக புகார் அளித்ததாகவும், அந்த புகாரில் என்னஎழுதப்பட்டு இருந்தது என்பதுகூடதங்களுக்குத் தெரியாது என்றும், வெற்று காகிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, கராத்தே மாஸ்டர் தர்மராஜனுக்கு எதிராக போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய அரவிந்தன், பிரதீப் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 22-ன்கீழ் 4 வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கபெரம்பலூர் அனைத்து மகளிர்போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நடந்த உண்மையைக்கூறி தர்மராஜனுக்கு ஏற்பட்டஇழுக்கை துடைத்த சிறுமிகளுக்கும் நீதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
|
போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கம்: கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:10:00 |
சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல்தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்பட்டு, வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறைஅமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் கடந்த ஜனவரி மாதத்துக்கான பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்மூர்த்தி பேசியதாவது:
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்ய வேண்டும்.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாக கோட்டங்களில் வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுத்து வரி வருவாயில் நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், துறையின் செயலர் பா.ஜோதி நிர்மலா சாமி, வணிகவரி ஆணையர் டி.ஜகந்நாதன், கூடுதல் ஆணையர் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்களில் விவிபேட் விழிப்புணர்வு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 06:04:00 |
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்களில் விவிபேட் கருவிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, விவிபேட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பொது இடங்கள்,கல்வி நிறுவனங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி, அதில் வாக்களிக்கும் கருவி, விவிபேட் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்து, அதை சரிபார்ப்பது எப்படி என அறிந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாநகராட்சி அதிகாரிகள் தீர்த்து வைக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சி.சுரேஷிடம் கேட்டபோது, ``கடந்த 25-ம்தேதி முதல் சென்னையின் 16சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேட்பு மனு தாக்கல் நாள் வரைவிழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
|
இலங்கையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் | செய்திப்பிரிவு | கூறியிருப்பதாவது | 2024-02-10 05:56:00 |
சென்னை
இலங்கை வசம் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினர் கடந்த 2023-ல் 243 தமிழக மீனவர்களை கைது செய்து, 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மீன்பிடி படகுகளை நாட்டுடமையாக்க இலங்கை அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2018-ல் இலங்கை அரசால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்பே நான் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன். எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை திரும்ப பெறவும், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் ஏதுவாக, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஜன.3-ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 2023 டிச.5-ம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் விடுவிக்க, உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
நோயாளி குணமடைய மருத்துவரைவிட செவிலியர்களின் பங்கு அதிகம்: முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-10 05:30:00 |
சென்னை: டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையின் 7-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் முப்பெரும் விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடுடாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவின்போது, டாக்டர் வி.எஸ்.நடராஜன் எழுதிய, வயதான நோயாளிகளை எப்படி கவனிப்பது என்பது குறித்த ‘Text Book on Geriatric Nursing’ என்கிற ஆங்கில புத்தகத்தை சுதா சேஷய்யன் வெளியிட்டார். துணை ஆசிரியர் கவுசல்யா சாரதி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அறக்கட்டளையின் சார்பில்முதியோர் பராமரிப்பாளர் ஆதரவு இயக்கத்தை, அதன் இணை நிறுவனர் ராஜசேகரன் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சுதா சேஷய்யன் பேசியதாவது: முதியோர்களுக்கான செவிலியர் சேவை என்பது சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை முதியவர்களுக்கு அளிக்க முடியாது. முதியோர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. சில நேரங்களில் முதியோர் பேசுவதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இவற்றை செவிலியர்கள் பக்குவமாக அணுகவேண்டியது அவசியம்.
நோயாளியின் உடல்நலம் முன்னேற்றத்துக்கு செவிலியர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு நோயாளி விரைவாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அதில் மருத்துவரைக் காட்டிலும் செவிலியர்களின் பங்கு அதிகம். மருத்துவர் மருந்து கொடுக்கலாம். சிகிச்சைக்கான செயல்முறைகளை விளக்கலாம். ஆனால் களத்தில் நின்று ஒவ்வொரு நொடியும் அவற்றை செயல்படுத்தக் கூடியவர்கள் செவிலியர்கள்தான்.
மருந்துகளைக் காட்டிலும் செவிலியர்களின் புத்துணர்ச்சியே முதியோர்களுக்கு முக்கியமானது. இவையே நோயாளிகளை விரைந்து குணமடையச் செய்யும். செவிலியர்கள் எப்படி நடந்து கொண்டால் நோயாளிகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இன்று வெளியிட்டபுத்தகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் பேசுகையில், “ஒவ்வொரு நோய்க்கும் செவிலியர்களின் அணுகுமுறை வேறுபட்டிருக்கும். இது தொடர்பாக புத்தகத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் செவிலியர்களுக்கு மட்டுமின்றி மாணவர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்” என்றார்.
|
மதுரையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டம் | என். சன்னாசி | மதுரை | 2024-02-09 21:53:00 |
மதுரை: மதுரையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கருத்துக்கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கை, புதிய திட்டங்கள் குறித்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
மதுரை காமராசர் சாலையிலுள்ள தமிழ்நாடு வர்த்தக சங்க கட்டிடத்தில் மதுரை மண்டலத்தைச் சார்ந்த மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, ஓஎஸ்.மணியன், வளர்மதி, விஜயபாஸ்கர், வைகைசெல்வன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வாங்கினர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தகம், வணிகர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சங்கம், தொழில் முதலீட்டாளர்கள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள் சங்கம், கைத்தறி, விசைத்தறி மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த சங்கங்களும், அமைப்புகளும் அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பான கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர்.
நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது தொகுதி சார்ந்த சங்கங்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். இங்கு வழங்கிய மனுக்கள் குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும், தங்களது கட்சி எம்பிக்கள் மூலமும் வலுவாக குரல் எழுப்பி நிறைவேற்ற முயற்சிப்போம் எனவும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட இளைஞர் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தென்மாவட்ட அதிமுக செயலாளர்கள், நிர்வாகிகள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
|
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் திமுக ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 20:45:00 |
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11 அன்று ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி சார்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.
ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது; இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
|
“பாஜகவுக்கு நெருக்கமான அன்புமணியே மருத்துவக் கல்லூரியை பெற்று தரட்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | ஜி.ராதாகிருஷ்ணன் | கரூர் | 2024-02-09 20:15:00 |
கரூர்: “திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம்” என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.77 கோடியில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பிப்.9) நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும், மருத்துவ கட்டிடங்களை துரிதமாக கட்டி தரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2022-ம் ஆண்டு ஜன.12-ம் தேதி வரை 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
கல்லூரிகள் தொடங்கியதற்கு பிறகு அவற்றுக்கு நிதி ஆதாரங்கள் தந்து ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 500, 600, 700 படுக்கைகள் கட்டி தரப்பட்டன. கிருஷ்ணகிரி, அரியலூர், விருதுநகர், திருவள்ளூர், நாமக்கல் 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.300, ரூ.400 கோடி வரை செலவிடப்பட் டுள்ளன. இன்னும் நாகப்பட்டினம், ஊட்டி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டி உள்ளது. மருத்துவக் கல்லூரி திறப்பது மட்டுமே மருத்துவத்துறையின் வேலையல்ல.
தமிழகத்தில் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில் 37 அரசு கல்லூரிகளாகும். கடந்த 2011-ம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகத்தில் பெரம்பலூர், புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15 முறைக்கு அதிகமாக டெல்லி சென்று மத்திய மருத்துவத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக்கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமான கட்சியாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம். மருத்துவக் கல்லூரி தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை ஆதாரங்களுடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), பி.ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந் தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
டெல்டா பகுதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து சனிக்கிழமை வரை தண்ணீர் திறப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 20:11:00 |
சென்னை: விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக நாளை (பிப்.10) வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொழிவு குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நதி நீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக்கோரி விவசாய பெருமக்களிடமிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் விவசாய பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீரை பிப்.3-ம் தேதி முதல் திறந்து விட தமிழக முதல்வரால் உத்திரவிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பிப்.3 அன்று 6000 கனஅடியும் பிப்.4 முதல் பிப்.9 வரை நாளொன்றுக்கு 5000 கனஅடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு கடைமடை வரை செல்வதற்கு ஏதுவாக கால நீட்டிப்பு செய்யுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது பிப்.10 வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-09 19:01:00 |
சென்னை: எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தங்கள் கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், ‘புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கினோம். மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது.
ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டோம்.
குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டிடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக, 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுவரைக்கும் கட்டிடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டோம். எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே, கட்டிடத்தை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
|
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா | “இளைய தலைமுறையினருக்கு ஊக்கம்” - சவுமியா சுவாமிநாதன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 18:02:00 |
சென்னை: "பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிந்தனை மற்றும் மனிதாபிமான பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க உதவும்" என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தந்தை பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியதற்கு இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலும் உலக அளவிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்க்க அறிவியலை முன்னேற்றுவதற்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிக்கு இது ஒரு பெரிய மரியாதை மற்றும் அங்கீகாரம். அவர் ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர் மற்றும் ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.
டாக்டர் சுவாமிநாதனின் வாழ்க்கை தன்னலமற்ற தன்மையையும் மனித குலத்துக்கான சேவையையும் உள்ளடக்கியது. சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் ஒரு கர்ம யோகியாகவும் இருந்தார். மேலும் அவர் தேடிய வெகுமதி கிராமப்புற மற்றும் பழங்குடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிந்தனை மற்றும் மனிதாபிமான பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.
|
“அரசு மருத்துவப் பணிக்கு தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது” - வேல்முருகன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 17:24:00 |
சென்னை: “அரசு மருத்துவப் பணிக்கு தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மறுக்கும் தமிழக அரசின் போக்கு சமூக நீதிக்கு எதிரானது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010-இல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில், 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டத்துக்குரியது.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து, பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே தமிழ் வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப்படவில்லை என்ற அடிப்படை கள யதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
தமிழக அரசின் அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இது தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. இந்தியாவிற்கே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக்கல்லூரிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் தவறே தவிர, மாணவர்களின் தவறல்ல. இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90 விழுக்காடு பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம். 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவப் பணி வழங்க மறுப்பது, வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் கொடுஞ் செயலாகும்.
எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கில வழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ப, எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
|
நில இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-09 17:04:00 |
சென்னை: 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்குப் பின்னர், எந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் தீர்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னர் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் ஏராளமான தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, நில உரிமையாளர்களுக்கு வழங்க சிறப்பு வட்டார வருவாய் அதிகாரிகளை நியமிக்கப்படுவர். இவர்கள் நிர்ணயம் செய்யும் தொகையைவிட, கூடுதல் இழப்பீட்டு கோருபவர்கள், நில உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அதாவது, சிறப்பு வட்டார வருவாய் அதிகாரி இழப்பீடு நிர்ணயித்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் இந்த மேல்முறையீட்டு மனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நில ஆர்ஜிதச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, 3 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு செய்து, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற்றது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம், 7 முதல் 9 ஆண்டுகள் வரை காலதாமதமாக நிலங்களுக்கு இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை பல்வேறு காலக்கட்டத்தில் முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இதை விசாரிக்கக் கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், 3 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று குறிப்பிட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அதை புறம்தள்ளிவிட்டு, இழப்பீட்டு தொகையை சென்னை முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோர் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘காலதாமதமாக மேல்முறையீடு செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. அதன்பின்னர். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, நிலத்துக்கு ஆட்சியர்கள் இழப்பீடு நிர்ணயம் செய்தது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்’’ எனக் கூறி முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
மேலும், இரு முன்னாள் ஆட்சியர்களும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 முன்னாள் ஆட்சியர்களும் தனி நீதிபதி முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 2 ஆட்சியர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மார்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மார்ச் 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த பின்னர், எந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த தீர்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னர் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர் என்ற விவரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
|
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 16:42:00 |
சென்னை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (பிப்.9) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கைக் கடற்கடையினரால் தமிழக மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பல தலைமுறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெருமளவில் பாதித்துள்ளது. மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், மீனவர்களுக்கு பொருளாதார பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கிட இலங்கை அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் வகையில், 2018-ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்னரே தான் எழுதியிருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை.
பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்துக்கு இன்றியமையாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர். முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், படகுகள் இதுபோன்று நாட்டுடையாக்கப்படுவது, மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது.
எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, மேற்படி சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றிட வேண்டும். கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 3-1-2024 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 5-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களையும் விடுவித்திடவும், உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் பராமரிப்பு நிலையம் மார்ச் மாதம் ஒப்படைப்பு: அரசு தகவல் @ ஐகோர்ட் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-09 15:38:00 |
சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 -ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு அதற்கான வரைபடத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தனியார் பேருந்துகள் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
|
திமுக அரசுக்கு எதிராக உள்ளூர் பிரச்சினைகளில் பாஜக தீவிரம் - அமைதி காக்கும் அதிமுக @ சிவகங்கை | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-02-09 15:31:00 |
சிவகங்கை: மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், உள்ளூர் பிரச்சினைகளில் திமுக அரசுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக அமைதி காத்து வருகிறது.
தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அதே பாணியை, சிவகங்கை மாவட்ட பாஜகவும் கடைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வப் போது கட்சி தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், கூட்டங்களை தவிர்த்து, உள்ளூர் பிரச்சினைகளுக்காக திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் உள்ளூர் அடிப்படை பிரச்சினை களுக்காக போராட்டம், காரைக்குடி சந்தைப் பேட்டையில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவிப்பு, ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக சிவகங்கை நகராட்சி அலுவலகம் முற்றுகை, ஏலதாரர்களுக்கு ஆதரவாக சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், காரைக்குடி அதிமுக பெண் கவுன்சிலரை அவதூறாகப் பேசியதாக திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவரை கண்டித்தும், சிவகங்கை அருகே வீரவலசை பகுதியில் தவறாக பட்டா கொடுத்ததாக அதிகாரிகளை கண்டித்தும் குரல் கொடுத்ததோடு, சுவரொட்டிகளும் ஒட்டினர். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஏராளமான போராட்டங்களை பாஜகவினர் நடத்தியுள்ளனர்.
ஆனால், கடந்த ஒரு மாதத்தில் சிவகங்கை நகராட்சிக்கு எதிராக ஒரேயொரு போராட்டத்தை மட்டுமே அதிமுக நடத்தியுள்ளது. மற்ற பிரச்சினைகளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக உள்ளூர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லை. அதேபோல், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதால், ஆளும்கட்சியை எதிர்க்க விரும்புவதில்லை. அதனால் நாங்கள் அதை கையிலெடுத் துள்ளோம். தமிழகம் முழுவதுமே உள்ளூர் பிரச்சினைகளுக்காக பாஜக குரல் கொடுத்து வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அது மேலும் தீவிரமாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த காலங் களை போல் இல்லாமல் தற்போது பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் திடீர் போராட்டத்துக்கு கூட பல நூறு பேர் கூடுகின்றனர். இதனால் திமுக அத்துமீறல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பலன் - முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சிப் பகிர்வு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 15:11:00 |
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது மனநிறைவு அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மனநிறைவு தரும் செய்தி. இந்த வெற்றிப் பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மனநிறைவு தரும் செய்தி!
இந்த வெற்றிப் பயணம் தொடரும்...
தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்!https://t.co/FKvU1Z8uMN pic.twitter.com/RRGaf25POH
நான்கு மாவட்டங்களில் இருந்து கலை - அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
|
சென்னையில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது; 3 பெண்கள் மீட்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 14:27:00 |
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னையில் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, K-6 டி.பி.சத்திரம் காவல நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.02.2024), கீழ்பாக்கம் கார்டன், பெரிய தெருவிலுள்ள அரோமா ஆயுர் கேர் சென்டர் என்ற மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சரவணன்(27), ராபின்(26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சரவணன் மற்றும் ராபின் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
|
“டிஜிட்டல் முறையில் அனுமதி வழங்கப்படுவதால் சிஎம்டிஏ பெரும் வளர்ச்சி கண்டுள்ளது” - அமைச்சர் சேகர் பாபு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 14:16:00 |
சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இணையவழி மூலமே பெறப்படுவதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு திட்ட அனுமதி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி செயல்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) இணையவழி சேவையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒற்றை சாளரமுறை அடிப்படையில் இணையவழி (Single Window Online Planning Permission Application System) திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, மே மாதம் 2022-ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொளி, திட்ட அனுமதி மென்பொருள் தடையில்லா சான்றிதழ் வழங்கும் 12 துறைகளான சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL), பொதுப்பணித்துறை (PWD), நீர்வள ஆதாரத்துறை (WRD), தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), எல்காட் நிறுவனம் (ELCOT), வனத்துறை (Forest), புவியியல் மற்றும் சுரங்கத் துறை (Geology & Mines), சிட்கோ (SIDCO), நெடுஞ்சாலைத்துறை (State Highways), தெற்கு ரயில்வே (Southern Railway), மாவட்ட நிர்வாகம் (Collectorates) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (DFRS) ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கூர்ந்தாய்வு செய்யப்படும் திட்ட அனுமதி சேவைகள் 17.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி மென்பொருள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) & நகராட்சி நிர்வாக இயக்குநரகம் (DMA) மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (RDPR) & பேரூராட்சிகள் இயக்ககம் (DTP) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் ஆகியவர்களுக்கு இணையதள திட்ட அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிப்பது, கையாளுவது சம்பந்தமாக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு, இந்த அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட பல்வேறு நேர்முக பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும். இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27%-ஆக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22%-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டிடங்களுக்கு (HRB) வழங்கப்படும் திட்ட அனுமதியைப் பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100--க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல உயரம் அல்லாத கட்டிடங்களுக்கான (NHRB) திட்ட அனுமதி விண்ணப்பங்கள் 2022-ஆம் ஆண்டு 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 605 திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இணையவழி மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29%- ஆகவும் மற்றும் திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை 24%-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணையவழி திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கான மென்பொருளில் தற்போதுள்ள செயல்முறையை (work-flow) எளிமையாக்க ரீ- இன்ஜினியரிங் (Re-Engineering) செய்ய உத்தேசித்துள்ளது. இதன் மூலம், திட்ட அனுமதி வழங்குவதற்கான கால அளவு 60-லிருந்து 30-ஆக குறையும், திட்ட அனுமதி வழங்கப்படும் எண்ணிக்கையும் உயரும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி செயல்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக” - அவிநாசி ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு | இரா.கார்த்திகேயன் | திருப்பூர் | 2024-02-09 13:47:00 |
திருப்பூர்: “அதிமுக மக்களிடத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் பொறாமையால் தான், இன்றைக்கு தீய சக்திகள் எம்ஜிஆரை விமர்சிக்கிறார்கள். எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரை, மிக மோசமாக விமர்சித்த நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து அவிநாசியில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான கே.பழனிசாமி, “தெய்வப்பிறவியான எம்.ஜி.ஆரை ஆ.ராசா எம்.பி. வேண்டுமேன்றே திட்டமிட்டு மிக மோசமாக பேசி உள்ளார். இந்த இயக்கத்தை நிறுவியவர். இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர் தான்.
அதிமுக மக்களிடத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் பொறாமையால் தான், இன்றைக்கு தீய சக்திகள் எம்ஜிஆரை விமர்சிக்கிறார்கள். எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி. ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்பார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் ராசா தாக்குப்பிடிக்கமுடியுமா? கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் இது. எம்ஜிஆரின் தொண்டர்கள் மனதால் காயம்பட்டுள்ளனர்.
கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்தபோது, அவருக்கு உதவுவதற்காக அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக ’எங்கள் தங்கம்’ என்ற படத்தில் சம்பளம் வாங்காமல், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடித்துக்கொடுத்தார்கள். அந்த படத்தின் மூலம் சம்பாதித்தது அந்த குடும்பம். கருணாநிதி கடனில் இருந்து தப்பித்ததாக முரசொலி மாறனே சொன்னதாக, முரசொலியில் வந்துள்ளது. எதிரியையும் வாழ வைத்தவர் எம்ஜிஆர். 1967-ம் ஆண்டு எம்.ஜிஆரால் திமுக ஆட்சிக்கு வந்தது. துரைமுருகனை வாழவைத்தவர் தான் எம்ஜிஆர். ஆனால், கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் ஆ.ராசா.
விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரிந்த கட்சி திமுக. ராசா உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் திருந்தாவிட்டால், மக்கள் உங்களை திருத்துவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்தில் தொடர்ந்து 30 ஆண்டு கால ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டது. நிறைய திட்டக்களை நிறைவேற்றி தந்தோம். உயர்கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை, நாம் நம்முடைய ஆட்சியிலேயே ஈட்டினோம்.
அதிகமான அரசு கல்லூரிகள், 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 சட்டக்கல்லூரிகள், வேளாண்மை, பொறியியல் என ஏராளமான கல்லூரிகளை திறந்து, அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்த அரசாங்கம் அதிமுக தான். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் 50 ஆண்டு காலம் போராடி வந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அதிமுக நிறைவேற்றியது. மாநில அரசு முழுமையாக நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் 10 சதவீத பணிகள் 2 ஆண்டுகாலம் 8 மாதங்களாக திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
6 மாதத்தில் முடித்திருக்கலாம். பவானியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை தடுத்து, இந்த திட்டத்தை என்றைக்கோ கொண்டு வந்திருக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை கொண்டுவந்தோம். அதுவும் ரத்து செய்த அரசாங்கம் தான் விடியா திமுக அரசாங்கம். திருப்பூர், கோவை, அவிநாசி என அத்தனை கூட்டுகுடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக. நான் கொண்டுவந்த 4-ம் குடிநீர் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை ஸ்டிக்கர் ஒட்டி திறக்க இருக்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது? அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பது திமுகவின் தற்போதைய வேலை. 3 மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.
கோவையில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டுவந்ததும் அதிமுக தான். திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக இன்றைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இன்றைக்கு திருப்பூர், கோவை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு தொழில் நலிவடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்துறையினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் திமுக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மக்கள், தொழிலாளர்கள் படும் துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில்நகரம், இன்றைக்கு மோசமாகிவிட்டது. விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஸ்பெயினுக்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் 11 நாட்கள் தங்கியிருந்தார். ஒப்பந்தம் போடப்பட்ட 3 நிறுவனங்களும் தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள். ஈரோடு, தூத்துக்குடி மற்றும் பெருந்துறை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என மு.க.ஸ்டாலின் இன்றைக்கு ஒரு நாடகம் போட்டுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். தாலிக்குதங்கம், விலையில்லா மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் திராவிட மாடல்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்த அரசு அதிமுகதான். புயல், வறட்சி என இரண்டு நேரங்களில் நிவாரணம் வழங்கியது அதிமுக. குளம், குட்டை, ஏரி அனைத்தையும் சீரமைக்க குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தது அதிமுக அரசாங்கம் தான். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம் குரல் கொடுத்து நியாயமான விலையை பெற்றுத்தந்தோம். ரேசன் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். ஆனால் நிறைவேறவில்லை. 3-ல் ஒருபகுதி பெண்களுக்கு தான் உரிமைத்தொகை இன்றைக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசா எம்.பி. போட்டியிடுவார். எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய ஆ.ராசா டெபாசிட் இழக்கச் செய்து, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை குவிக்க பாடுபடுவோம்” என தெரிவித்தார்.
|
தை அமாவாசை | முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்த மக்கள் | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2024-02-09 12:36:00 |
மதுரை: தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அதன்படி தை அமாவாசை, ஆடி மாத அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியமான நாட்களாகும். மாதந்தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று மாத அமாவாசைகளில் விரதமிருந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இன்று தை அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றில் பக்தர்கள் தமது மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து சூரியனை வழிபட்டனர். வைகை ஆற்றில் மதுரை பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல் பாலம் அடிவாரம் ஆகிய பகுதிகளில் அவர்கள் தர்ப்பணம் செய்தனர். அதேபோல், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில் ஆகியவற்றிலும் தர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். சோழவந்தான் வைகை கரையிலும், குருவித்துறை உள்பட பல்வேறு இடங்களிலும் தை அமாவாசை தர்ப்பணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம் வைகை ஆற்றிலும் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்தனர். இதில் புரோகிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து தர்ப்பணம் செய்து வைத்தனர்.
|
மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்துக - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-09 12:25:00 |
சென்னை: மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிப்ரவரி 2 ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார். இதன்படி தெற்கு ரயில்வேயில் சுமார் 10,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.
தெற்கு ரயில்வேயில், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் என மொத்தம் ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியங்கள் (Railway Recruitment Board) செயல்பட்டு வருகின்றன. முன்பு சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரைக் கோட்டக் காலியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது. இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.
மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீஃப் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபொழுதுதான் மொழிவாரி மாநிலங்களின் அடிப்படையில் ரயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்ளி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு ரயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரயில்வேயின் (East Coast Railway) கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு ரயில்வே தேர்வு வாரியம் உள்ளது. ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தில் ஏற்படும் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம்தான் நிரப்ப வேண்டும். இதற்கான உத்தரவினை மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|