Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சிவசங்கர் வேதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 06:15:00 |
சென்னை: நாட்டிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, இயக்க ஊர்திகள் துறை சார்பில் சென்னை,சேப்பாக்கத்தில் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு நடைபயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலைப் போக்குவரத்து நிறுவன ஓட்டுநர்கள், நேருயுவ கேந்தரா தன்னார்வ இளைஞர்கள், சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரிமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணியானது அரசு விருந்தினர் மாளிகை தொடங்கி, தீவுத்திடல் வரை நடைபெற்றது.
இதில் அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்று, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம், குடை ஆகியவற்றை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கி, சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்தியாவில் ஏற்படும் சாலைவிபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் 19 முதல் 32 வயதுக்குட்பட்டே இருக்கின்றனர்.
அதேநேரம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும் சாலை விபத்துக்கான மிகப்பெரிய காரணம் எனவும் ஆய்வில் தெரிகிறது. எனவே இதைத் தடுப்பது தொடர்பான கருத்துகளை முன்வைத்து பேரணி நடைபெற்றது.
முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் கடந்த 2 ஆண்டுகளாக விபத்துகள் சற்று குறைந்திருந்தாலும், முற்றிலும் இல்லாத நிலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பின்இருக்கையில் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனதொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பேரணியில், போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், சாலை பாதுகாப்பு காவல்துறை துணைத் தலைவர் எஸ்.மல்லிகா, போக்குவரத்து இணை ஆணையர் ஏ.ஏ.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
குதிரை ஏற்றப் போட்டி ஏற்பாடுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி: காவல் ஆணையரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 06:12:00 |
சென்னை: சென்னை காவல்துறை சார்பில் முதல் குதிரை ஏற்றப்போட்டி பிப்.23 முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் நேற்று வழங்கினார்.
சென்னை குதிரைப்படை 1780-ம் ஆண்டு, சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, அவரதுபாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1800-ம்ஆண்டு முதல் இப்படையில் உள்ளகுதிரைகள் சென்னை காவல் கண்காணிப்பாளர் வால்டர் கிராண்டால் சென்னை காவல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதன் பிறகு 1926-ம் ஆண்டுமுதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.
பிப்.23-ல் போட்டி தொடக்கம்: சென்னை காவல்துறை, குதிரைப்படைபிரிவை மேம்படுத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல் குதிரையேற்ற போட்டியை பிப்.23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில், குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக, சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரி டம் வழங்கினார்.
|
செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பு: முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் மாளிகை அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 06:07:00 |
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போதைய திமுக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராகஇருந்தவர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஜூன்13-ம் தேதி அமலாக்கத் துறையினர்கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்தது. இந்த சூழலில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் உடனடியாக அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டதில் இருந்து கடந்த 8 மாதங்களாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடியும், ஜாமீன் வழங்கப்படவில்லை. தவிர, அவரது நீதிமன்ற காவலும்19-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த ஜனவரி 30-ம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘‘கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அப்படி இருக்க, எந்த அடிப்படையில் அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘‘ஒரு அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கஆளுநருக்கு அதிகாரம் இல்லை.செந்தில் பாலாஜி இலாகாஇல்லாத அமைச்சராக தொடர தடை இல்லை’’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவிசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழலில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதிகடிதம் எழுதினார். ‘‘தங்கள் தலைமையின்கீழ் ஓர் அமைச்சராக, தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்அப்பாவி, உண்மை நிலைபெறசட்டப்பூர்வமாக தொடர்ந்துபோராடுவேன். தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அதில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது. அதை ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின்கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம் விவகாரம்; போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் - அமலாக்கத்துறை விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 06:04:00 |
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இயங்கிவந்த பின்னி மில் வளாகத்தில் உள்ள 14.16 ஏக்கர் நிலம்கடந்த 2015-ம் ஆண்டு விற்கப்பட்டது. இந்த நிலத்தை சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமார், பெரம்பூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சர்மா ஆகியோர் இணைந்து ரூ.450 கோடிக்கு வாங்கினர்.
இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்டுவதற்கும் அனுமதி பெறுவதற்கும், அங்குஏற்பட்ட இடர்பாடுகளை நீக்குவதற்கும் நிறுவனத்தினர் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரம்லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த லஞ்ச பணம்கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, மறுநாள் 5 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கில்தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி திடீர் சோதனை நடத்தியது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த லஞ்ச விவகாரத்தில் லஞ்சஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணைநடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாகசட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்களை திரட்டும் வகையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் முக்கிய ஆவணங்கள், வணிக ஆவணங்கள், அசையும்மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில்அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல்வாதிகள், அரசுஉயர் அதிகாரிகளுக்கு லஞ்சம்கொடுக்கப்பட்டதன் மூலம் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
தீவிர விசாரணையில், இந்ததிட்டத்துக்கான நிதியை திரட்டுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் பணபரிமாற்றத்தை யாரும் கண்டறிய முடியாத அளவுக்கு சிக்கலானதாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறு கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமல்லாமல் மதுபானவியாபாரத்துக்கும், சட்டவிரோதநடவடிக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
ரூ.280 கோடி: இத்திட்டத்துக்காக சட்டவிரோதமாக ரூ.280 கோடியை மெரீட்டியஸ் (Mauritius route) பரிமாற்றம் மூலம்பெற்றுள்ளனர். இந்த நிதி மூலமாகவே அந்த இடத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில் நீலகண்டன் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அனைத்து பண பரிமாற்றங்களும் நீலகண்டன் ஏற்பாட்டின் பேரிலேயே நடந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-14 05:54:00 |
திருச்சி: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் நேற்றுமறியலில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டு வருகின்றனர். ஆனால், அவர்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
அப்போது, "ஜனநாயக நாட்டில்விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எந்தப் பகுதியிலும் போராடலாம் என அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கிறது" என்று தெரிவித்த விவசாயிகள், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சில விவசாயிகள் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கோஷமெழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, கீழே இறங்கச் செய்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 66 பேரை போலீஸார் கைது செய்தனர்.
|
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை திரும்ப தூதரகம் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 05:51:00 |
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் ஆயுள் தண்டனைகைதிகளாக இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை உடனிருந்து கவனிக்க வேண்டியிருப்பதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக்கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் உள்ளசாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தைஇலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணங்கள் ஏற்கெனவே மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதாகவும், அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் பிப். 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
|
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: பிப். 25-ல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் | செய்திப்பிரிவு | தூத்துக்குடி | 2024-02-14 05:48:00 |
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் மின்சாரகார் தொழிற்சாலைக்கு முதல்வர்ஸ்டாலின் வரும் 25-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் கடந்த மாதம்உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நிறுவனங்கள், ரூ.26 ஆயிரம் கோடிமுதலீடு செய்ய தமிழக அரசுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
நிறுவனம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை தூத்துக்குடி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில், சிப்காட் இயக்குநர் செந்தில் ராஜ், தொழில் வழிகாட்டும் அமைப்பு தலைமைநிர்வாக அதிகாரி விஷ்ணு ஆகியோர் தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.
|
டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 05:38:00 |
சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவில் 30 போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தோடு இணைந்து கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் வருகை மற்றும் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஆயுதப்படை போலீஸார் குறித்து கண்காணிக்கும் அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணையர் அலுவலகத்திலும்.. ஏற்கெனவே இதேபோன்று வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
|
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 05:26:00 |
சென்னை: ‘ஒரே நாள் ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 2 அரசினர் தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்படுகின்றன.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வலியுறுத்தியும் இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் இன்று முன்மொழியப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
|
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன் | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-02-14 05:21:00 |
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முருகன் தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜன.29-ம் தேதிமுதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால், அவரைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்கக் கோரி, தலைமைச் செயலர், திருச்சி ஆட்சியர், காவல்ஆணையருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் நஸிமுநிஷா, முருகனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் லண்டன் செல்வதற்கான பாஸ்போர்ட் எடுக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து, முருகன் 14 நாட்கள் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார்.
|
தமிழகத்தில் ரூ.19,100 கோடி மதிப்பில் புதிதாக 13 குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 05:16:00 |
சென்னை: தமிழகத்தில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:
ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் கிள்ளியூர் தொகுதி வழியாக கன்னியாகுமரிக்கு செல்கிறது. இந்தக் குழாய் பழுதடைந்து உடைந்துள்ளதால், விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு: தமிழகத்தில் 60 இடங்களில் குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் உள்ளேயும், வெளியிலும் சிமென்ட் பூச்சுடன் கூடிய இரும்புக் குழாய்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கி, தேவைப்படின் உங்கள் பகுதிக்கு முன்னுரிமை அளித்து குழாய்கள் பதிக்கப்படும்.
துரை சந்திரசேகர் (திமுக): கொள்ளிடத்தில் 35 இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தடுப்பணை அமைத்தால், அப்பகுதியில் நீராதாரத்தைப் பாதுகாக்கலாம்.
அமைச்சர் கே.என்.நேரு: முதல்வருடனும், நீர்வளத் துறை அமைச்சருடனும் இதுகுறித்து பேசியுள்ளோம். ஆயிரம் இடங்களுக்கு மேல் தடுப்பணை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரியிலும், கொள்ளிடத்தில் 244 இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க, தடுப்பணை கட்ட வேண்டும். இந்த திட்டம் அரசின் கவனத்தில் உள்ளது. நிதிநிலைக்கேற்ப திட்டம் நிறைவேற்றப்படும்.
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): கோவையின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினசரி 72 மில்லியன் லிட்டருக்கு பதில் 38 மில்லியன் லிட்டரே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் 25 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, சிறுவாணி அணையில் இருந்து கேரள அரசு 35 மில்லியன் லிட்டர் குறைவாக நீர் வழங்குவதாக கூறுகின்றனர். கேரள அரசிடம் பேசி, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: சிறுவாணியில் இருந்து கேரள அரசு 83 மில்லியன் லிட்டருக்குப் பதில், 38 மில்லியன் லிட்டரே தருகின்றனர். மழையில்லாத காரணத்தால் ஆழியாறில் இருந்து குறைவாக தண்ணீர் வருவதால், நாங்கள் சிறுவாணியில் தண்ணீர் தரவில்லை என்றனர்.
கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலாளர் மூலம் கேரள முதல்வரிடம் பேசி, தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கோவை எம்.பி. நடராஜனிடம் கூறியுள்ளோம். அவரும் கேரள முதல்வருடன் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுவாணி தண்ணீரை பெறும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. பில்லூர் 3-வது திட்டத்தில் 110 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தினமும் 300 மில்லியன் லிட்டர் தரும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, கோவை நகருக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படும்.
சதாசிவம்(பாமக) : மேட்டூர் தொகுதியில் தனி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: திமுக ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குடிநீர் வாரியம் சார்பில் ரூ.7,148 கோடியில் 58 புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 15,156 கோடியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மறு சீரமைப்புத் திட்டங்கள் ரூ.1,658 கோடியில் நடைபெற்று வருகின்றன. புதிதாக ரூ.19,110 கோடியில் 13 திட்டங்கள் ஆய்வில் உள்ளன. 4.35 கோடி மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், மேலும், 3 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
அவைக்குறிப்பில் நீக்கியதை வெளியிட்டதாக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை: பேரவை காங்கிரஸ் தலைவர் கொண்டு வந்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 05:10:00 |
சென்னை: சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கொண்டு வந்துள்ளார். இது, பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழக அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையின் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் அமர்ந்தார். இதன்பிறகு, அந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
பின்னர், அரசால் அளிக்கப்பட்ட தமிழ், ஆங்கில உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்பதற்கான தீர்மானத்தை பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தபோது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இந்த சூழலில், பேரவையில் ஆளுநர் பேசியது தொடர்பான வீடியோ, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியானது.
இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று காலை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். ‘ஆளுநர் தனது பேச்சின்போது தெரிவித்த சில கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது அவையின் உரிமை மீறல். எனவே, இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய செல்வப் பெருந்தகை, “ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைபடிக்க வந்தபோது, பேரவைத் தலைவராகிய நீங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். அவர் பேசிய கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில், நீக்கப்பட்ட காட்சிகள் ஆளுநரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன” என்றார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, “ஆளுநர் தொடர்பாக நீங்கள் கொடுத்த கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது” என்றார்.
|
உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-14 04:56:00 |
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதி, உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் புலியூர் என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீபதி (23). தமிழ்வழி கல்வியில் படித்த இவர், பின்னர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். படிக்கும்போதே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் வெங்கட்ராமன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் ஸ்ரீபதி பங்கேற்றார். தேர்வு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால், மிகுந்த சிரமத்துடன் தேர்வில் பங்கேற்றார். இந்த நிலையில், தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், ஸ்ரீபதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், இளம் வயதில் உயர்ந்த நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என திமுக கொண்டுவந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வானதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும், கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல் தமிழகத்தில் வலம்வரும் சிலருக்கு, ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் சிறந்த பதில். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் ஸ்ரீபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 6 மாத பயிற்சிக்கு பிறகு அவர் நீதிபதியாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் சென்னையில் தகனம்: ஆளுநர்கள், முதல்வர், தலைவர்கள் அஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 04:41:00 |
சென்னை: இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி (45). வனவிலங்குகளை படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்.
விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு சென்ற கார், நீரில் மூழ்கியது.
இதில், படுகாயம் அடைந்த நண்பர் கோபிநாத் மீட்கப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்ளூர் கார் ஓட்டுநர் தன்ஜின் மற்றும் வெற்றி இருவரையும் காணவில்லை. பின்னர், ஆற்றில் இருந்து தன்ஜின் உடல் மீட்கப்பட்டது.
சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணி 9-வது நாளாக நீடித்தது. நேற்று முன்தினம் பிற்பகல் விபத்து நடந்த இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சட்லெஜ் ஆற்றில், பாறையின் அடியில் சிக்கியிருந்த உடல் ஒன்றை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டனர்.
பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெற்றி எப்படியும் உயிருடன் வந்துவிடுவார் என்று சைதை துரைசாமி உட்பட குடும்பத்தினர் அனைவரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வெற்றிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நடிகர் அஜித் அஞ்சலி: வெற்றியின் உடல் தனி விமான மூலம் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக சுமார் 40 நிமிடம் வைக்கப்பட்டது. அங்கு, நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி, அதிமுகவினர், காவல் துறை அதிகாரிகள், உறவினர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பாமக தலைவர் அன்புமணி, ரவீந்திரநாத் எம்.பி. வி.கே.சசிகலா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். வெற்றியின் உடல் தி.நகர் கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.
|
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை: பேரவைத் தலைவருக்கு முதல்வர் பரிந்துரை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 04:35:00 |
சென்னை: சட்டப்பேரவையில் தங்கள் கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவருக்கு பரிந்துரைத்ததால், ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படும் சூழல் எழுந்துள்ளது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும். இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் கட்சியின் துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கித் தரும் பிரச்சினை குறித்து அவையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீங்களும் பேரவைத் தலைவரின் உரிமை என்று பதிலளித்து, ஏற்கெனவே இதே அவையில் பேரவைத் தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ, அதை அடிக்கடி நீங்களும் சுட்டிக்காட்டி பதில் கூறி வருகிறீர்கள். இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து பேரவைத்தலைவர் மு.அப்பாவு, “முதல்வர் கூறியதை ஏற்று, தக்க முடிவை நான் எடுக்கிறேன்” என்றார்.
|
முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 04:29:00 |
சென்னை: முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் 2-ம் நாள் நிகழ்வுகள் நேற்று தொடங்கின. முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல் (வாணியம்பாடி), ஏ.தெய்வநாயகம் (மதுரை மத்தி), எம்.தங்கவேல் (முசிறி), துரை ராமசாமி (வெள்ளக்கோவில்), கு.க.செல்வம் (ஆயிரம்விளக்கு), எஸ்.ராஜசேகரன் (ஆலங்குடி) ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
தொடர்ந்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் எஸ்.வெங்கிடரமணன், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் எம்.எம்.ராஜேந்திரன், தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை பேரவை தலைவர் வாசித்தார். முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களின் மறைவுக்கு பேரவை இரங்கல் தெரிவிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
|
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 30,000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் மறியல் | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2024-02-14 04:06:00 |
விழுப்புரம்: லாரிகளில் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களின் கூலி பிரச்சினையால் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, தற்போது சுற்று வட்டார விவசாயிகளால் அதிகஅளவில் நெல் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படு கின்றன. திருவண்ணாமலை உள் ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயி கள் இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு தங்களது விளைபொருட்களை விற்க வருகின்றனர். ஆனால் இங்கே இடப் பற்றாக்குறை நிலவுகிறது. மத்திய அரசின் ‘ஈநாம்’ திட்டத்தில் எடை போட்டு, தரம் பிரித்து விலை போடுவதில் ஏற்படும் காலதாமதம், பின்னர் விவசாயிகளின் சாக்குபையில் இருந்து வியாபாரிகளின் சாக்கு பையில் நெல்லை மாற்றுவதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றால் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது.
ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம்முதல் 30 ஆயிரம் வரை நெல்மூட்டைகள் வரத்து உள்ளன. இதன் காரணமாக கமிட்டி நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கிடையே, நெல் ரகங்களை வியாபாரிகளின் கோணிப் பையில் மாற்றி, லாரிகளில் ஏற்றும் தொழி லாளர்கள் தங்களது ஒப்பந்த கூலியை முன்னர் அறிவித்தபடி உயர்த்த வேண்டும் என அறிவித்து, இங்கு வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் எடுத்து வந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கமிட்டி மைதானத்திலும், குடோன்களிலும் தேக்கம் அடைந் துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக நெல் மூட்டைகளுக்கு விலைபோடு வார்கள் என காத்திருந்த விவசாயிகள், நேற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இத்தகவல் அறிந்த செஞ்சி போலீஸார் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை ஆகியோர் அங்கு வந்து,விவசாயிகளை சமாதானப் படுத்தி, விற்பனைக் கூட அலுவலகத்தின் உள்ளே விவசாயிகளை அழைத்துச் சென்றனர்.
‘விளைபொருட்களை எடுத்து வர வேண்டாம்’: வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்கள் இடையேயான கூலி உயர்வு பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டும் வரை, விவசாயிகள் நெல் உள்ளிட்ட தங்களது விளைப் பொருட்களை செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்துவர வேண்டாம் என்று அந்த விற்பனைக் கூடத்தின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலைமை சீரானதும் விற்பனைக்கூடம் இயங்குவது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
‘ஒரு மகன் போனாலும் பல மகன்களும், மகள்களும் எனக்கு இருக்கிறார்கள்’ - சைதை துரைசாமி உருக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 23:36:00 |
சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது மகனை தகனம் செய்த பிறகு மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார். “இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியில், அரசின் உயர் பதவியில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளனர். எனது ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக் கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அரசுப் பணியில் அமர வைப்பதும் எனது லட்சியம். இதனை எனது மகன் மரணத்தில் நான் உறுதி ஏற்கிறேன். அதை நோக்கி பயணித்து, சக மனிதனுக்காக வாழ்ந்து, என மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்த சேவையை அபிவிருத்தி செய்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
நான் மனம் கலங்க மாட்டேன். காரணம், இத்தனை மகன்களை, மகள்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதனால் இன்னும் வலிமையோடு பயணிப்பேன். அதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பாதையில் நான் பயணிப்பேன் என சூளுரைக்கிறேன்” என அவர் தெரிவித்தார். இந்த பயணத்துக்கு போக வேண்டாம் என சொன்னதாகவும். 'இதுவே கடைசி' என வெற்றி துரைசாமி சொல்லிவிட்டு சென்றதாகவும் சைதை துரைசாமி தெரிவித்தார்.
|
சேலம் பெரியார் பல்கலை.யில் ஆட்சி பேரவைக் குழு கூட்டத்தில் இருந்து பேராசிரியர்கள் வெளிநடப்பு | வி.சீனிவாசன் | சென்னை | 2024-02-13 21:29:00 |
சென்னை: தமிழக அரசு முதன்மை செயலர் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்து 4 நாட்கள் கடந்தும் பல்கலைக்கழக பதிவாளரை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாததைக் கண்டித்து பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் இருந்து பேராசிரியர்கள் வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழுக் கூட்டம் இன்று துணை வேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிப் பேரவைக் குழுக் கூட்டத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்திட தமிழக அரசு முதன்மை செயலர் பரிந்துரைத்து நான்கு நாட்கள் கடந்தும், அரசின் உத்தரவை செயல்படுத்தாமல், இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யாமல், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்தது குறித்து பேராசிரியர்கள் பலரும் ஆட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினர்.
தொடர்ந்து, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியமென்ன என்றும், பொருளே இல்லாமல் ஆட்சி பேரவை கூட்டம் நடத்துவதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் இருப்பதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் பதில் அளித்து பேசாமல் மவுனம் காத்தார். ஆசிரியர்களின் தொடர்ச்சியான கேள்விக்கு பின்னர், அரசின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்றும், மைனாரிட்டியாக உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று துணைவேந்தர் ஜெகநாதன் ஆட்சி பேரவை குழு கூட்டத்தில் பதில் அளித்து பேசினார்.
துணைவேந்தரின் பதிலை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பை சேர்ந்த ஆட்சிப் பேரவை குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தரை கண்டித்தும், அவசர கதியில் தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்படுத்தும் வகையில் நடத்துகின்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பி கூட்ட அரங்குக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் கூட்ட அரங்குக்குள் சென்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் விதிமுறைகளை மீறி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி கூட்ட அரங்குக்குள் சென்ற போது, துணைவேந்தருக்கும் பேராரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை செய்தி சேகரித்தபடி இருந்த செய்தியாளர்களை துணைவேந்தர் ஜெகநாதன் கூட்ட அரங்கத்தில் இருந்து வெளி்யேற்றி கதவை மூடியதுடன், செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாரை அழைத்தார். இதனால், அங்கு செய்தியாளர்கள் துணை வேந்தரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பேராசிரியர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, பேரவை கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு, துணைவேந்தர் ஜெகநாதன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
|
மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் மீண்டும் இடமாற்றம்: அதிகாரிகள் குழப்பம் @ மதுரை | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-13 21:03:00 |
மதுரை: மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு, மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுவதின் பின்னணியை அறிய முடியாமல் மாநகராட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடு நிர்வாகப் பணிகளும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளராக இருந்தவர் அரசு. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக செல்வாக்குடன் இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மேயராக இந்திராணி பொறுப்பேற்றப்பிறகு திடீரென்று இவர், கோவை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அரசு, மேயர் தரப்பினருக்கு நம்பிக்கைக்குரியவராகவும், அவரது ஆதரவாளராகவும் இருந்து வந்தார். அப்படியிருந்தும் அவர் மாற்றப்பட்டது அவருக்கு மட்டுமில்லாது மாநகராட்சி வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்பிறகு அவர் கோவையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு வருவதற்கு பல்வேறு வகைகளில் முயற்சி செய்தார். மேயர் இந்திராணி தரப்பு ஆதரவுடன் மீண்டும் மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக மாறுதலாகி வந்தார். அதோடு கண்காணிப்பு பொறியாளர் பதவி உயர்வும் அவரை தேடி வந்தது. அரசும் பழைய உற்சாகத்தோடு மாநராட்சி பொறியியல் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால், திடீரென்று அவருக்கு மேல் தலைமை பொறியாளராக ரூபன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதனால், கண்காணிப்பு பொறியாளர் அரசுவால் முன்புபோல் செல்வாக்குடன் செயல்பட முடியாமல் விரக்தியடைந்தார். ஆனால், மாநகர பொறியாளர் அலுவலகத்தின் பிரதான அறையில் அரசே இருந்து வந்தார். ரூபன் தலைமை பொறியாளராக இருந்தாலும் அவர் அமர்ந்து பணிபுரிய அறை கிடைக்காமல் இருந்து வந்தார். அதன்பிறகு ரூபனுக்கு மாநகராட்சி இரண்டாவது தளத்திலே ஓரமாக ஒரு மூலையில் தனி அறை தயார் செய்து கொடுக்கப்பட்டது. தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் இவருக்கும் இடையேயான பணிப்போர் நிடீத்தநிலையில் தற்போது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு திடீரென்று வேலூர் மாநகராட்சி நகர பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு பதிலாக மதுரை மாநகராட்சி நகர் பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வண்டியூர் கண்மாய் பகுதியில் ரூ. 48 கோடி, ரூ.440 கோடியில் வைகை கரை பாதாளசாக்கடை திட்டம் போன்ற திட்டப்பணிகளை அரசு கவனித்து வந்தார். தற்போது அரசு சென்றுவிட்டதால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையாளர் மாற்றப்பட்ட அடுத்த சில நாளில் மாநகர கண்காணிப்பு பொறியாளர் அரசும் இடமாற்றப்பட்டுள்ளதால் மாநகராட்சி அலுவலகத்தில் குழப்பமும், அதிகாரிகள் மத்தியில் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கண்காணிப்பு பொறியாளர் அரசுக்கு ‘செக்’ வைக்கும் வகையிலே அவருக்கு மேல் ரூபன் என்பவரை தலைமைப்பொறியாளராக அமைச்சர் நேரு தரப்பினர் நியமித்தனர். இதனால், அரசு மனவருதத்தத்திலே செயல்பட்டு வந்தநிலையில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேயர் தரப்புக்கும், நேரு தரப்புக்கும் நடக்கும் மோதலில், அரசு பலிகடாக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியில் தற்போது யார் எதற்காக இடமாற்றப்படுகிறார்கள் என்ற அரசியல் பின்னணி தெரியாமல் மற்ற மாநகராட்சி அதிகாரிகள் குழப்பமடைந்து உள்ளனர். வளர்ச்சிப்பணிகளும், நிர்வாகப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.
|
வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 20:45:00 |
சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வெற்றி துரைசாமி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், அவரது உடல் நேற்று (பிப்.12) மீட்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
|
சென்னையில் ‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் இதுவரை 6,178 ஆதரவற்றோர் மீட்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 20:27:00 |
சென்னை: இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் மொத்தம் 6,178 வீடற்ற ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,427 நபர்களை காப்பகங்களில் தங்க வைத்தும். 960 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து கைக்கப்பட்டுள்ளனர் என்று சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையில் காவல்கரங்கள் உதவி மையம் கடந்த 21.04.2011 அன்று 9444717100 என்ற எண்ணில் (24×7) "மனிதம் போற்றுவோம்" மற்றும் "மனித நேயம் காப்போம்" என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நயர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்ணர்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் மொத்தம் 6,178 வீடற்ற ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,427 நபர்களை காப்பகங்களில் தங்க வைத்தும். 960 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து கைக்கப்பட்டுள்ளனர், 587 நபர்கள மன நல மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அரசு மருத்துமைனையில் 204 நபர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். மேலும் உரிமை கோரப்படாத 3,205 இறந்த அனாதை உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய முறையில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம் மூலம் உதவி செய்து பெரும்பங்காற்றி வருகிறது.
சென்னை பெருநர காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 1,41,488 உணவு பொட்டலங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, ஆதரவற்ற நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கக் கோரிய மனு தள்ளுபடி | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-13 20:25:00 |
மதுரை: தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காஞ்சிபுரம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரியளவில் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.
சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரித்து தொழிற்சாலைகளை தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. அதே நேரத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவது, தென் மாவட்டங்களில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்களை கொண்டு வருவது போன்ற விவகாரங்கள் அரசின் கொள்கை சார்ந்தது.
எங்கு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பதை தமிழக அரசும், முதலீட்டாளர்களும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என உத்தரவிட்டனர்.
|
மேலூர் ஒருபோக பாசனத்துக்கு 120 நாட்கள் நீர் திறப்பு: அரசு உறுதி @ உயர் நீதிமன்றம் | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-13 19:55:00 |
மதுரை: “மேலூர் ஒருபோக பாசனத்துக்கு வைகை, பெரியாறு பாசன கால்வாயிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்” என உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘மேலூர் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது வைகை அணை. இந்த அணையிலிருந்து மேலூர் பகுதி விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் வழங்க வேண்டும். வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த கணக்குபடி 120 நாள் தண்ணீர் வழங்க முடியும்.
ஆனால், மேலூர் பகுதி விவசாயத்துக்கு 90 நாள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் 33 நாள் கடந்துவிட்டது. 120 நாள் தண்ணீர் தராவிட்டால் போதிய விளைச்சல் கிடைக்காது. விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். அதிகாரிகள் தன்னிச்சையாக தண்ணீர் திறப்பை 120 நாளிலிருந்து 90 நாளாக குறைத்துள்ளனர். எனவே, வைகை அணையிலிருந்து மேலூர் பகுதிக்கு 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிட்டனர். பெரியார் வைகை வடி நிலப் பிரிவு செயற்பொறியாளர் (நீர்வள அமைப்பு) சிவபிரபாகர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசு 14.11.2023-ல் பிறப்பித்த அரசாணைப்படி 15.11.2023 முதல் 10 நாட்களுக்கு பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் திருமங்கலம் ஒரு போக சாகுபடிக்கு குடிநீர் திறக்கப்பட்டது.
பெரியாறு பிரதான கால்வாய் வழியாக 85,563 ஏக்கருக்கும், திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக 19,439 ஏக்கருக்கும் 90 நாட்களுக்கு நீர்வளத் துறையின் அசாணைப்படி 19.12.2023-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 100 நாட்களுக்கு தண்ணீர் திறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைகை மற்றும் பெரியாறு அணைகளில் 18.03.2024 நிலவரப்படி நீர் இருப்பை பொறுத்து மொத்தம் 120 நாட்களுக்கு ஒரு போக சாகுபடி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
|
“நிதி நிலை சரியில்லை... அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 18:57:00 |
சென்னை: நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழி நடக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக; 023 ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.அரசுப் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019-ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தக் காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளரின் பணிவரன்முறை செய்யப்படுவதைக் கருத்தில் கொள்ளாமல் பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு (பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, லோக்கோமோட்டர் குறைபாடு) போக்குவரத்துப்படி ரூ.2,500- ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழக அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்துக்கு சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த விவரத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243-னை நடைமுறை படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில், அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான மாநில அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது. எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்
விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது.எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|
ப்ரீமியம் ஹரியாணாவில் பதற்றம் முதல் கவனம் ஈர்த்த ஸ்ரீபதி வரை! - செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.13, 2024 | செய்திப்பிரிவு | தடியடி | 2024-02-13 18:31:00 |
ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி: ஹரியாணா எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள் மீது தடியடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்தனர். ஹரியாணாவின் கானவுரி என்ற இடத்தில் போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-13 18:18:00 |
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம்தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது. எனவே, வழக்குத் தொடர அவர்தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டையும் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுப் பதிவுக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார். இன்னும் காலம் கடந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநரின் அனுமதி பெறலாம். விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடவில்லை. வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை.
ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம். அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
|
வெயிலில் தாகத்தை தீர்க்க குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனை @ ஓசூர் | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2024-02-13 18:15:00 |
ஓசூர்: ஓசூரில் கோடை வெயிலில் தாகம் தீர்க்க குழாய் பொருத்திய மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாட்டம் - ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருளை தேடிச் செல்கின்றனர். கோடை காலங்களில் முன்பு எல்லாம், மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நாகரிக வளர்ச்சியால் குளிர்சாதனப் பெட்டியில் கிடைக்கும் அதிக குளிர்ச்சியான நீரால் மண்பானையின் மோகம் நாளடைவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது உணவு பழக்க வழக்கத்தால், சிறுவயதிலியே பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கம் மீண்டும் சிறுதானியம் போன்ற பழைய உணவு பழக்கத்தை தேடிச் செல்கின்றனர். அதேபோல் நம் பாரம்பரிய மண்பானையில் வெயில் காலங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த முறையில் வெயில் காலம் தொடங்கிய நிலையில் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் குழாய் பொருத்திய மண் பானைகளை விற்பனை செய்வதை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, ''முன்பெல்லாம் பொதுமக்கள் மத்தியில் மண்பானைக்கு போதிய வரவேற்பு இல்லை. ஆண்டுதோறும் பொங்கல் சீசனில் மட்டும் மண்பானைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது. ஆனால், தற்போது கோடை காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கேடு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மேலும், மண்பானை தண்ணீரை குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சி என்பது குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் சீசனுக்கு பிறகு கோடை சீசனில், வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மண்பானைகளை தண்ணீர் ஊற்றி வைக்க வாங்கிச் செல்கின்றனர். இதனால் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் மண்பானையில் குழாய் பொருத்தி விற்பனை செய்வதால் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை ரூ.250-முதல் ரூ. 400 விரை விற்பனை செய்கிறது. குழாய் பொருத்திய மண்பானைகளை பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.
|
‘மின் கட்டணம் உயரும் அபாயம்’ - மின்வாரியத்தை 3 நிறுவனங்களாக பிரிக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 16:56:00 |
சென்னை: மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொது மக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசால் 2003-ஆம் ஆண்டு மின்சார சட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களாக செயல்படும் மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் நோக்கோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவுகளை அமல்படுத்துவதை பொறுத்தே மத்திய அரசின் நீண்ட கால கடன் மற்றும் வட்டியில்லா கடன் மாநில அரசுகளுக்கு வழங்குவதை முன்நிபந்தனையாக்கியது.
இப்பின்னணியில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் என்ற கம்பெனியாக மாற்றி அதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) என்ற இரு கம்பெனிகளை புதிதாக உருவாக்கியது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை இவ்வாறு 3 கம்பெனிகளாக பிரிவினை செய்தது மின் வாரியத்தை மேலும் பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கு போதுமான கவனம் செலுத்தாத நிலையிலும், மின்சாரத்தை அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாலும் மின்சார வாரியத்திற்கான கடன் தொகை அதிகரித்துவிட்டது. தற்போது, மின்சார வாரியத்திற்கு ரூபாய் 1.67 லட்சம் கோடி வரை கடன் உள்ளதாக தெரிகிறது.
ஒன்றிய அரசு மின்சார வாரியத்தை மேலும் மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்படுத்த வலியுறுத்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
இந்நிலையில், கடன் தொகையை சரிசெய்வது என்ற பெயரால் தற்போது தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மூன்று கம்பெனிகளாக அதாவது, உற்பத்தி (அனல்), பசுமை மின்சாரம், மின் விநியோகம் என்ற முறையில் பிரிவினை செய்து அரசாணை 6 மற்றும் 7-ஐ வெளியிட்டுள்ளது. TANGEDCO-வின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் இந்த மூன்று கம்பெனிகளின் கீழ் கொண்டு வர தீர்மானித்துள்ளது.
இவ்வாறு பிரிவினை செய்யப்பட்டால் மின்சாரத் துறை மென்மேலும் தனியார்மயமாவதற்கும் தனியார் நிறுவனங்கள் மிகுந்த ஆதாயம் அடைவதற்கும் வழிவகுக்கும். இதோடு, மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொது மக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
மேலும், இந்நடவடிக்கை தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நலன்களை பாதிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும். எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து இந்த அரசாணைகளை திரும்ப பெறுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
|
'ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி இல்லை' - தமிழக அரசு எச்சரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 15:58:00 |
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிடப்பட வேண்டும். பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி, இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே, இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்.9-ம் தேதியன்று ஒரு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக வழக்கு தொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16-ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே இதனை தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுப்படுத்தப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது. அதனை மீறுவதால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும். மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் தனது பிப்.1ம் தேதி அன்று பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவில் பத்தி எண் 17-ல் குறிப்பிட்டுள்ளவாறு கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த அறிய இயலும் என்பதாலும் அப்போது தான் அதற்கு ஏற்றவாறு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதையும் பொதுமக்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை: அன்புமணி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 15:20:00 |
சென்னை: “குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும். இதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்ற நலவாழ்வு செயல்பாட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற விவரங்களில், நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் மாதம் வரையிலான 34 மாதங்களில் 1448 குழந்தை மகப்பேறுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் மிக அதிகமாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 347 குழந்தை மகப்பேறுகளும், மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மானூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் முறையே 88, 44 குழந்தை மகப்பேறுகளும் நடைபெற்றுள்ளன என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தைகளே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நிச்சயமாக அதிர்ச்சியளிக்கும் ஒன்று தான். இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டு பிடித்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமை.
நெல்லை மாவட்டத்துடன் ஒப்பிடும் பொது தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், அதன் விளைவாக குழந்தை மகப்பேறுகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள், அதாவது ஆண்டுக்கு 3650 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், முழுமையாக தடுத்து நிறுத்துவதில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை; தமிழ்நாடு அரசும் அதில் தீவிரம் காட்டவில்லை.
குழந்தைத் திருமணங்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால், அதற்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துதல், புரிதல் இல்லாத காதல், குடும்பச் சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை தான் குழந்தைத் திருமணங்களுக்கான முக்கியக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து வைக்கின்றனர்; திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமலேயே ஏற்படும் காதல் ஆகியவை தான் குழந்தைத் திருமணத்திற்கான முக்கியக் காரணங்கள் என்று சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை புறக்கணித்து விட முடியாது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தான் குழந்தைத் திருமணங்களுக்கான முக்கியக் காரணம் ஆகும். இந்த மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர்.
உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. அதன் காரணமாகவே தங்களின் பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டு, வேலைக்கு செல்கின்றனர்.
இந்த மாவட்டங்களில் உள்ளூர் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமல் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.
குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும். இதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
|
சாந்தனுக்கு இலங்கை துணைத் தூதரகம் தற்காலிக பயண ஆவணம் வழங்கல்: தமிழக அரசு தகவல் @ ஐகோர்ட் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-13 14:57:00 |
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத் தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது. அந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. எனவே, தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
|
23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 14:29:00 |
சென்னை: "திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். சமூக நீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்னேறவேண் டும்வைய மேலே!” என்று பதிவிட்டுள்ளார்.
|
“அறிவாலயத்தின் தூணாக விளங்கியவர் ஜெயக்குமார்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 14:25:00 |
சென்னை: “அண்ணா அறிவாலயத்தின் தூணாக விளங்கியவர் ஜெயக்குமார்” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “அண்ணா அறிவாலயத்தின் தூணாக விளங்கிய அன்புக்குரிய ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன். தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்.
அறிவகத்தில் தொடங்கிய பயணம் அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம் எனத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் என உச்சம் பெற்றது. தலைமைக் கழகத்தை நாடி வந்த ஒவ்வொரு திமுகவினரும் அன்போடும் உரிமையோடும் உறவாடி ‘அறிவாலயம்’ ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர்.
அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் திருமணத்தை நடத்தி வைத்தேன்; அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன்; அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன்; அவரது குடும்பத்தில் ஒருவனாய் இருந்தேன். உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமாரை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது.
கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன். அறிவாலயம் ஜெயக்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், திமுகவினர் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன” - கிளாம்பாக்கம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 13:25:00 |
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.13) விவாதம் எழுந்தது. அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று கூறி விவாதத்துக்கு வித்திட்டார்.
செல்லூர் ராஜு கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கிளாம்பாக்கத்தை தேர்ந்தெடுத்தது அதிமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் 30 சதவீதத்தில் விட்டுச் சென்ற பணியை முழுமைப்படுத்தி இன்னும் கூடுதல் வசதிகள் உடன் திறக்கப்பட்டது. பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையத்தை மாற்றும்போது இதேபோன்றுதான் பிரச்சினைகள் எழுந்தன. ஒரு மாற்றம் ஏற்படும்போது அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் இருக்கும். ஆனால், கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை முழுவதுமாக மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் பிரச்சினைகளை எழுப்பவில்லை. பேருந்துகளில் பயணிக்காதவர்கள்தான் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் திமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் தற்போது 20 சதவீதம் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. வடசென்னை மக்களின் நலனுக்காக 20 சதவீதம் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் முழுவதுமாக செயல்பட துவங்கிவிட்டது." இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகள் அதிகம் உள்ளது. முதல்கட்டமாக திறந்துள்ள நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருப்பது இயல்பு. காலப்போக்கில் இதனை சரி செய்துவிடலாம். ஆனால், பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைத்ததை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களே தொடர்ந்து பேருந்து நிலையம் குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள். எனினும், பேருந்து நிலையத்துக்கு இன்னும் தேவைப்படுகின்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த 45 நாட்களில் சரி செய்துள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கிறது என்றால், யார் சொல்கிறார்களோ அவர்களை நேரடியாக பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறோம். குறைகளை தெரிவியுங்கள். அத்தனையும் இந்த அரசு சரி செய்யும்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்துவிட்டீர்கள். சிறு சிறு வசதிகளை சரி செய்து திறந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.” இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில், “அவசரப்பட்டு திறந்துவிட்டோம் என்கிறார்கள். அதிமுக ஆட்சி செய்ய தவறியதை திமுக ஆட்சி செய்துள்ளது. 2021 மார்ச் மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைய ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்குள் 30 சதவீத பணிகளே அதிமுக ஆட்சியில் முடிந்திருந்தது. ஆனால், மீதமுள்ள 70 சதவீத பணிகளை முடித்ததுடன், மேலும் ரூ.100 கோடிக்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளையும் திமுக ஆட்சி செய்தது” என்றார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சின்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர்.
மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “2020ல் கரோனா காலம். இதனால் ஓராண்டு காலம் எந்தப் பணியும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய பணிகளை முடிக்கவில்லை. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அதனை செய்தீர்கள். இப்போது கேட்பது சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதே. சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து திறந்திருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது.” என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், ”“சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
|
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 13:07:00 |
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக எதிர்க்கட்சித் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அதன்படி, இன்று அது குறித்து பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து இந்த அவையில் பேசி வருகிறார். ஆனால், இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பல முறை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துவிட்டார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் நான் கேட்டுக்கொள்வது, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைபடி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
|
வெற்றி துரைசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 12:03:00 |
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை.சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்
வெற்றி துரைசாமி மறைவு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், “ சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை.சா.துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45) உடல் நேற்று (12.02.2024) சட்லஜ் நதியில் எடுக்கப்பட்ட நெஞ்சை பிளக்கும் செய்தி அறிந்து வேதனையுற்றோம். வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலம், மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை படம் எடுக்க சென்ற நேரத்தில் கடந்த 04.02.2024 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வெற்றி துரைசாமி பயணித்த காருடன் சட்லஜ் நதியில் தூக்கியெறிப்பட்டார்.
கடந்து ஒன்பது நாட்களாக அவரது உடலை தேடி, நேற்று திங்கள் கிழமை கண்டெடுத்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக சைதை துரைசாமியும், அவரது குடும்பத்தினரும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தில் சொல்லொணா வேதனையில் மூழ்கி கிடந்தனர். அவர்களது துயரில் பங்கேற்று ஆற்றுப்படுத்த வார்த்தை இல்லை. காலம் தான் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
|
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 11:52:00 |
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துகொண்டு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று (பிப்.12) ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை தமிழக முதல்வரிடம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில்தான் இந்த ராஜினாமாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பின்னணி: அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 13-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
முதல் நாள் காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட சோதனை அடுத்த நாள் வரை நீடித்தது. இறுதியாக ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில வாரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்துவந்த செந்தில் பாலாஜி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகளை பெற்றுவந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். அவர் பொறுப்பு வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து தமிழக அரசு நிர்வாக ஆணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
|
“ஆளுநர் உரையின்போது நடைபெற்ற சம்பவம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம்” - ஜி.கே.வாசன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 11:12:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்துக்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான். நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம்.
தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டுக்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். ஆனால் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் தமிழக அரசு. குறிப்பாக தமிழக ஆளுநரை தமிழக அரசு பல சமயங்களில் அவரது எதிர்ப்புக்கு ஏற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டது தான்.
மேலும் தமிழக ஆளுநரின் பதவிக்கு உரிய மரியாதை, முறையான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு பாதகம் இருக்கக்கூடாது. நேற்றைய சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும் போது அதற்கு எவ்விதத்திலும் இடையூறு இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான விரும்பத்தகாத நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
தமிழக அரசு தமிழர்களுக்கான, தமிழ்நாட்டுக்கான வளர்ச்சிக்கு திட்டங்கள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து முறையாக செயல்பட வேண்டும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
விஜயகாந்த் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்: உறுப்பினர்கள் மவுன அஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 10:46:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து இரண்டு மணித் துளிகள் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பத்ம பூஷண் விருது: நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்த விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேவையில் இன்று.. சட்டப்பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்.13-ம்தேதி பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14-ம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 15-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (பிப்.23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
|
திமுகவுடன் விசிக, ஐயுஎம்எல், கொமதேக கட்சிகள் பேச்சு: கூடுதல் தொகுதிகள் தர கோரிக்கை | செய்திப்பிரிவு | பேச்சு | 2024-02-13 10:40:00 |
திமுகவுடன் விசிக, ஐயுஎம்எல், கொமதேக கட்சிகள் பேச்சு: கூடுதல் தொகுதிகள் தர கோரிக்கை திமுக நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டுக்கான குழுவுடன் விசிக, கொமதேக, ஐயுஎம்எல் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விசிக 4 தொகுதிகளையும், ஐயுஎம்எல் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடத்தையும் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுக சார்பில் அதன் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்டமாக கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் உள்ளன.
இந்த சூழலில், நேற்று கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை அதே தொகுதியுடன், கூடுதல் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக வெளிப்படையாக நடைபெற்று முடிந்துள்ளது. மீண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம். வெகு சீக்கிரம் தொகுதி பங்கீடு முடிவாகும் என்றார்.
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட 5 பேர் குழு, திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஆலோசனை நடத்தினர். இக்கட்சி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதே தொகுதியை மீண்டும் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து, காதர் மொய்தீன் கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டுள்ளோம். இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் தரவேண்டும் என்று கேட்டுள்ளோம். முதல்வரிடம் பேசி முடிவெடுப்பதாக திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர் என்றார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவை சந்தித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் 3 தனித்தொகுதி,1 பொதுத்தோகுதி என விசிகவுக்கு 4 தொகுதிகள் கேட்டுள்ளோம் திமுகவுக்கான நெருக்கடிகளை அவர்கள் தெரிவித்தனர். நாங்களும் எங்கள் தேவை எந்த பின்னணியில் இருந்து வருகிறது என்பதை எடுத்து கூறினோம்.
அடுத்த பேச்சுவார்த்தையில் கூட்டணி, விசிக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுப்போம். தேர்தல் சின்னம் குறித்து எந்த பிரச்சினையும், கேள்வி எழாது என்று நம்புகிறோம். 25 ஆண்டுகளாக செயல்படும் விசிகவின் தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார்.
விசிகவை பொறுத்தவரை, ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் எம்.பி.யாக உள்ளனர். இம்முறை, விசிகவின் பானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சி தீவிரமாக உள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, காஞ்சிபுரம், சிதம்பரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 4 தனித்தொகுதிகள், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்ஆகிய பொதுத்தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து இதில் 3 தனி, 1 பொதுத்தொகுதியை ஒதுக்கித் தரும்படி திமுகவிடம் விசிக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
‘அதிகாரப்பூர்வ கூட்டணிப் பேச்சு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை’ - பிரேமலதா | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-13 10:30:00 |
அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் நுழைய 4 வழிகள் மட்டுமே தற்போது உள்ளன.
அதன்படி அதிமுக, திமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது. அல்லது தனித்து போட்டியிடுவது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனித்து போட்டியிடலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் 2014-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது போல 14 சீட்டுகள் கொடுத்து மரியாதையுடன் வழி நடத்துபவர்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இது கட்சி தலைமையின் கருத்தோ, என்னுடைய கருத்தோ கிடையாது. மாவட்ட செயலாளர்களின் கருத்து மட்டுமே. அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட்டு, கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இது தேர்தல் அரசியல்.
இதில் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தலைமை ஏற்று இருக்கின்றனர். இக்கட்சிகள் தான் கூட்டணி பேச்சை முதலில் தொடங்க வேண்டும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் போது, தேமுதிகவின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தேமுதிகவுக்கும் ராஜ்யசபா சீட்டு கேட்க உரிமை இருக்கிறது. ஆனால் இதுவரை தேர்தலுக்கான அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.
|
கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் ஜி.கே.வாசனுக்குதான் - தமாகா செயற்குழுவில் தீர்மானம் | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-13 10:08:00 |
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை செயற்குழு தனக்கு வழங்கியிருப்பதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட வாரியாக கட்சியின் பலத்தை அறியும் வகையில் தமாகா செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் எதனுடன் இணைவது என்பது குறித்தும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் முழு அதிகாரம் கட்சியின் தலைவருக்கு அளிப்பது என பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி கட்சியின் முன்னணி தலைவர்களோடு கலந்தாலோசித்து கட்சியின் உறுதியான நிலைபாட்டை வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். தமிழகத்தில் ஆளுங்கட்சி கூட்டணியை தவிர்த்து, மற்ற கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
பாஜக-வாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் அதன் தலைவர்களோடு நல்ல பரிட்சயம் உண்டு. அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக தமாகா செயல்பட்டு வருகிறது. எங்களுடைய பலத்தை குறைத்துக்கொள்ளும் அளவுக்கு கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையை பெற மாட்டோம். தமாகாவின் லட்சியம் காமராஜர் ஆட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, துணைத் தலைவர்கள் ராமன், உடையப்பன், இளைஞரணி தலைவர் யுவராஜா, மகளிரணி தலைவி ராணி, மாணவரணி தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை: ஆளுநர் உரையில் திட்டவட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 07:07:00 |
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும், கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற இந்த மகத்தான வரிகள்தான்இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
சிறுபான்மையினருக்கு துணை: சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும்நாம் துணை நிற்போம். அந்த வகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
2021-ம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்போது, சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்துமாறு பிரதமரை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத் திறனாளி ஓய்வூதியம்: கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.1,500-ல்இருந்து ரூ.2,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும்உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
முதியோர்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டபெண்களுக்கான மாத ஓய்வூதியம்2023-ம் ஆண்டில் ரூ.1,000 இருந்துரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.845 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. 74,073 தகுதியுடைய பயனாளிகள் புதிதாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் குறுவை சாகுபடி பரப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவில் 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
முழுமையான வேளாண் வளர்ச்சியை எய்திட தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட இந்த ஆண்டில் ரூ.190 கோடி செலவில் 2,504 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டில் இருந்துஇதுவரை மொத்தம் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளால்வழங்கப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக இந்த அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டியால் வருவாய் இழப்பு: மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரங்களை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டபோது ஜிஎஸ்டி முறையின் முந்தைய காலத்துக்கு இணையான வருவாய் எட்டப்படும் வரை மாநிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும்என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மத்திய அரசு கடந்த 2022ஜுன் 30-ம் தேதியன்று ஜிஎஸ்டிஇழப்பீட்டு முறையை நிறுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம்கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் 2-ம்கட்டத் திட்டத்தில், மத்திய அரசும்,மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் சமபங்களிப்பு இருக்கும் என்றஅடிப்படையில் ரூ.63,246 கோடிமதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2021 ஆக.17-ம் தேதி திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும் இத்திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நியாயமற்ற அணுகுமுறையின் விளைவாக 2-ம் கட்டத்துக்கான முழு செலவினமும், மாநில அரசால் அதன் வரவு-செலவுத் திட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மாநில நிதிநிலையில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்துக்கான ஒப்புதலை விரைவில் அளிக்குமாறு வலி யுறுத்துகிறோம்.
மேகேதாட்டு அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே யான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்சினைகளில் நமது மாநில விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், நதிநீர் பங்கீட்டுக்கான அறிவியல் ரீதியான கணக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்துவலியுறுத்துவதோடு, காவிரியில் மேகேதாட்டு அணைகட்டுவதை தடுக்க தேவையான அனைத்துமுயற்சிகளையும் முன்னெடுப் போம்.
ரூ.37,906 கோடி பேரிடர் நிவாரணம்: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் வரலாறு காணாதஎதிர்பாராத மழைப் பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெரு மளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக தென்மாவட்டங்களுக்கு ரூ.18,214 கோடியும், சென்னை மற்றும்அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குரூ.19,692 கோடியும் நிதி தேவைப் படுகிறது.
மத்திய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும்; தமிழக சட்டப்பேரவை தலைவர் செய்தது தவறு: ஆளுநர் தமிழிசை கருத்து | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-02-13 07:02:00 |
புதுச்சேரி: தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தது சரியல்ல. இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது: தமிழகத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை தவறு. உரையின் தமிழாக்கத்தை அவர் வாசித்துள்ளார். முடிந்தவுடன் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அதுதான் முறை. அதற்குப் பிறகு சில கருத்துகளை அவர் கூறியிருக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதை ஆளுநர் எதிர்பார்த்திருந்தார். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
தெலங்கானாவில் ஆளுநர் உரையை தராததால், அந்தஆட்சியை வீட்டுக்கு அனுப்பிஉள்ளனர். இதை தமிழக பேரவைத் தலைவர், அமைச்சர் ரகுபதி ஆகியோர் உணர வேண்டும். தெலங்கானாவில் புதிய ஆட்சியில் 45 நாட்களில் இருஆளுநர் உரையை வாசித்துள்ளேன்.
தமிழக அரசு எதையும் சரியாகச் செய்வதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் இதற்கு உதாரணம். எதுவாக இருந்தாலும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம், கேள்வியே கேட்கக்கூடாது என்பதுபோல மாநில அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
|
வேங்கைவயல் விவகாரம்: உண்மை கண்டறியும் சோதனை வழக்கு தள்ளுபடி | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2024-02-13 06:23:00 |
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான உண்மை கண்டறியும் சோதனை குறித்த வழக்கை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த 31 பேர் டிஎன்ஏசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 10 பேரை உண்மைகண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் சம்மன்அனுப்பினர். ஆனால், அனைவரும் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்தநீதிபதி ஜெயந்தி, 10 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரி மாற்றம்: வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பால்பாண்டிக்கு பதிலாக கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டியிடம் கேட்டபோது, ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தேன். ஆகையால், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, தஞ்சாவூர் சிபிசிஐடி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
|
மின்வாரிய அலட்சியத்தால் இரு கால்களை இழந்த இளைஞர் அரசு பணி கேட்டு ஆட்சியரிடம் மனு | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2024-02-13 06:18:00 |
விழுப்புரம்: மின்வாரியத்தின் அலட்சியத்தால், தனது இரு கால்களை இழந்த இளைஞர் விழுப்புரம் ஆட்சியரை சந்தித்து தனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பூபாலன் (18). இவர், கடந்த டிசம்பர் மாதம் 17-ம்தேதி காலை அதே ஊரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மொட்டை மாடியில் விழுந்தது.
இருண்டு விட்டதால் மறுநாள் (டிச.18) காலை பூபாலன் பள்ளியின் மொட்டைமாடிக்கு சென்றார். முன் இரவில் பெய்த மழைநீர் மொட்டை மாடியில் தேங்கி நின்றதால் வெற்றுக்காலுடன் சென்று பந்தை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது, தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின் கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கினார். சுமார்2 மணி நேரத்துக்கு பிறகு எழுந்தபோது அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கால்கள் மரத்து போனது போலாகி விட்டது.
அதன்பின் அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது இரு கால்களும் முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியையொட்டி தாழ்வாக சென்ற 22 கிலோ வோல்ட் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர் 24.6.2022மற்றும் 21.12.2022-ல் மின்வாரியத்துக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து 23.01.2023 அன்று 22 கிலோ வோல்ட் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் 11 மாதங்கள் வரைஇக்கம் பியை மாற்றி அமைக்காததால் இந்த விபத்து ஏற்பட்டது.
மின்வாரியத்தின் அலட்சியத்தால் இந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, நமது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சோழம்பூண்டியில் உள்ள பூபாலன் இல்லத்துக்கு விழுப்புரம் மின்வாரிய (விநியோகம்) செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் உதவிசெயற்பொறியாளர் அண்ணாதுரை, பூத்தமேடு இளநிலை மின்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் சென்று மின்வாரியம் சார்பில் இழப்பீடு தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே கால்கள் அகற்றப் பட்ட பூபாலன் தன் பெற்றோருடன் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலு வலத்துக்கு வந்து, ஆட்சியர் பழனி யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இரு கால்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை வீல் சேரில் வைத்து அழைத்து வந்திருந்தனர். உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால் அவரது தலையில் முடிகள் பொசுங்கி, அந்த இடத்தில் தழும்புகள் உருவாகியிருந்ததை காண முடிந்தது. ஆட்சியரிடம் அவர்அளித்திருந்த மனுவில், “இச்சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இரு கால்களும் எனக்கு அகற்றப்பட்டிருக்கின்றன.
எனக்கு அரசு வேலைக்கு பரிந்துரைப்பதோடு, இழப்பீட்டுத் தொகை தர ஆவண செய்ய வேண்டும். மேலும் செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
நான் பயன்படுத்தும் வகையில், என் வீட்டில் கழிப்பறை அமைத்து தர வேண்டும். மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டியும் தர வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
|
புதுவையில் விசேஷ நிகழ்வுகளிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிப்பு | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-02-13 06:17:00 |
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் வடமாநில இளைஞர்களால் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களை உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது அதில் இருந்த வர்ணங்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பஞ்சு மிட்டாய்களை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆய்வ கத்துக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனையில் பஞ்சுமிட்டாயில் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள் வர்ணத்துக்காக சேர்த் திருப்பது உறுதியானது.
இதையடுத்து, புதுவை மாநிலத்தில் பஞ்சு மிட்டாய்களை விற்கத் தடை விதித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இதற்கிடையே, திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் பஞ்சுமிட்டாய்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பஞ்சு மிட்டாய்களிலும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்ததால் அவற்றையும் தடைசெய்திருப்பதாக உணவுக்கட்டுப் பாட்டுத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
|
பிப்.15 வரை ஆளுநர் உரை மீதான விவாதம்; பிப்.19 முதல் 22 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 06:16:00 |
சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிப்.13-ம்தேதி பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14-ம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 15-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந்துவிடும்.
மீண்டும் பிப்.19-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகஅரசின் பட்ஜெட்டையும், 20-ம்தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்வார்கள். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதானவிவாதம் தொடங்கும். பிப்.22-ம்தேதி நிதி மற்றும் வேளாண் அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள்.
சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வந்ததும் பேரவை விதிகள் படி,தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்உரை மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும். சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவதுதான் மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது, ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அழைக்கவில்லை. தமிழகத்தில் சட்டத்தையும், மாண்பையும் மதிக்கிறோம்.
கொள்கை, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆளுநரைஅழைக்க வேண்டும் என்றமாண்பை தமிழக முதல்வர் கடைபிடிக்கிறார். எழுதிக் கொடுத்த உரை, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. நாகரீகமான உரை யைத்தான் அளித்துள்ளோம். ஆனால், ஆளுநர் முதல் பக்கத்தின்உரையை வாசித்துவிட்டு, இறுதியாக கடைசி பக்கத்துடன் நிறுத்தி விட்டார். அதன்பின் தன் கருத்தை கூறுகிறார்.
அரசியலமைப்புச் சட்டப்படி,மரபுப்படி பேரவை நடைபெறுகிறது. இதில் மரபை, விதிகளை மாற்றி விருப்பத்தை தெரிவிப்பது முறையல்ல. அதேபோல், அவைமாண்புப்படி, தேசிய கீதம் பாடும்வரையாவது இருந்திருக்க வேண்டும். ஆளுநரின் எண்ணம் என்பது முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்கிறார். ஆனால், தமிழகம் முழுவதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும். இந்த நடைமுறையையே நாம் பின்பற்றி வருகிறோம். இந்த நாட்டில் தமிழகத்தைவிட சிறந்த தேசப்பற்று, சுதந்திரப் போராட்ட தியாகிகள் எங்கிருக்கிறார்கள்?
ஆளுநரை நாங்கள் நேரில் சென்று அழைக்கும்போது, அரசுதயாரித்து அளித்த உரை குறித்துஅவர் எந்த தகவலும் அளிக்கவில்லை. அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எதையாவது மாற்ற வேண்டும் என்றால் முன்கூட்டியே தெரிவித்திருக்கலாம். அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று கூறி, நீக்காததால் இதை மட்டும் படிக்கிறேன் என்று கூறியிருக்கலாம். எழுதியிருப்பது ஒன்றுமே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது என்ன நியாயம்.
தேசிய கீதம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் கடிதம் அளித்துள்ளார். அப்போது பேரவை விதிகளைக் குறிப்பிட்டு, இப்படித்தான் செயல்படுவோம் என்று பதில் அளித்துள்ளோம். தமிழகத்தின் மரபை ஏன் மீற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
தமிழகத்து மக்களுக்கு பிஎம் கேர் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம்கோடியை ஆளுநர் வாங்கித்தர வேண்டும் என்ற எனது எண்ணத்தைத்தான் அவையில் தெரிவித் தேன். இவ்வாறு அவர் கூறினார்.
|
சென்னையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 06:15:00 |
சென்னை: அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் 10மாடிகள் கொண்ட எம்ஜிஎம் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிக்காக ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும்போது அப்பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதால், நேரக்கட்டுப்பாடு விதிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானப் பணிக்கு அனுமதி தரவில்லைஎன்றும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மருத்துவமனை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதிட்ட அனுமதி பெறாமல் கடந்தஆண்டு ஜூலை முதல் மருத்துவமனை நிர்வாகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என சிஎம்டிஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிஎம்டிஏ தரப்பில், ‘‘சட்டவிரோத கட்டுமானங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து தாமாக முன்வந்து இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணியின்போது ஏற்படும் ஒலிமாசுவை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா என்பது குறித்து தெரிவிக்காத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
|
மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்க திமுக முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 06:12:00 |
சென்னை: மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்க திமுக முயற்சி செய்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மக்களவை உறுப்பினர் வில்சன், கிறிஸ்தவர்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவியை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக எம்.பி. வில்சன், தமிழகத்தின் நலனுக்காக எந்த கடிதமும் எழுதவில்லை. மதத்தைப் பரப்ப வரும் வெளிநாட்டு உதவியை அனுமதிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்று தெரிந்தும், திமுக எம்.பி. வில்சன் இவ்வாறு கடிதம் எழுதுகிறார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட அமெரிக்க அறக்கட்டளை தந்த ரூ.13 கோடியை தென்னிந்திய திருச்சபை சுருட்டியது. இது தொடர்பான வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது. அரசின் உபயோகத்துக்காக கோயில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, கிறிஸ்தவர்களிடம் இருந்து எத்தனை இடங்களை கையகப்படுத்தியுள்ளது?
வில்சனின் விசுவாசம் கிறிஸ்தவர்களிடம் மேலோங்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம் மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்கும் முயற்சி. இரண்டாவது திமுகவுக்கு தேர்தலில் செலவு செய்ய, வாக்குக்கு பணம் கொடுக்க, திமுக வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள நிதியை கிறிஸ்தவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் கொண்டு வருவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு - கிருஷ்ணகிரியில் தீவிர கண்காணிப்பு | செய்திப்பிரிவு | ஓசூர் | 2024-02-13 06:10:00 |
கிருஷ்ணகிரி/ஓசூர்: ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்குக் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா என்பது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக மாநிலம் சிமோகா,உத்திரகனடா, சிக்மங்களூரு ஆகிய மாவட்டங்களில் 53 பேருக்கு அண்மையில் கியாசனூர் பாரஸ்ட்’ (குரங்கு காய்ச்சல்) நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நோயைப் பொறுத்தவரை காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது அண்மையில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்குப் பரவி அவ்வழியே மனிதர்களுக்கு இந்நோய் பரவும். மேலும், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.
இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 3 முதல் 8 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலானோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள்.
சிலருக்கு 2-ம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆடு,மாடு ஆகியவற்றிற்கு உன்னி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு இந்நோய் அறிகுறி உள்ளதா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை, வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கால்நடை பராமரிப்புத் துறையினரும் கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
|
தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிப்பு: சென்னை காவல் ஆணையர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 06:08:00 |
சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், போலீஸாரின் தளவாடங்கள், பொருட்கள் வைப்பதற்கு புதிய அறை அமைக்கப்பட்டது. மேலும், காவலர் நலன் உணவகம் குளிர்சாதன வசதியுடன் நவீனப்படுத்தபட்டது. இவற்றை சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
மேலும், சேதமடைந்த புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தின் நுழைவு வாயிலில் 152 மீட்டர்தூரத்துக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் கயல்விழி, துணை ஆணையர்கள் ஜெயகரன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில்காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றும் பணி 90சதவீதம் முடிவடைந்து விட்டது.பழைய பட்டியல் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பதற்றமானவை, பதற்றம்இல்லாதவை என்று வாக்குச்சாவடி புதிய பட்டியல் தயார்செய்யப்படும்.
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் ‘சைபர் க்ரைம்’ போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை பகிர முடியாது. தற்போது வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
ஆவடியில் நடைபெற்ற ‘ரோஜ்கார் மேளா’வில் 191 பேருக்கு பணி நியமன ஆணை: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வழங்கினார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 06:05:00 |
சென்னை: ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ்காவல் படை மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில், 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் எ. நாராயணசாமி வழங்கினார்.
நாடு முழுவதும் 12-வது வேலைவாய்ப்பு திருவிழா (ரோஜ்கார் மேளா) நேற்று நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் எ. நாராயணசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய ஆயுதக் காவல் படைகள், இந்தியக் கடலோரக் காவல் படை, பொதுத் துறை வங்கிகள், அஞ்சல் துறை, நிதித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் சேர 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைவாய்ப்பு திருவிழாவை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார். இன்று 12-வது நிகழ்ச்சி நாடுமுழுவதும் 46 இடங்களில் நடைபெறுகிறது.
இந்த அரசு நாட்டிலுள்ள ஏழைகள், இளைஞர்கள், மகளிர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் என அனைவரின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு அவர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் சுயமாகத் தொழில்தொடங்கி வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராகச் சமுதாயத்தில் உயர வழி வகுத்துள்ளது. புதிதாக பணி நியமன ஆணைகள் பெறும் இளைஞர்கள் கர்மயோகி தளத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெறுவார்கள். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
|
கோவை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையில் தொடரும் விபத்துகள் - ஓராண்டில் உயிரிழப்பு இரு மடங்கு | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-02-13 06:03:00 |
கோவை: கோவை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையில் தொடர் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் இருமடங்காக உயர்ந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, சென்னை, சேலம்மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், கோவை வழியாக கேரளாவுக்கு செல்வதற்கும், கேரளாவில் இருப்பவர்கள் கோவை வழியாக மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் பிரதான சாலையாக சேலம் - கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலை நீலாம்பூர் வரை ஆறு வழிச்சாலையாகவும், பின்னர் நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலையாகவும் உள்ளது. இந்த 26 கிலோ மீட்டர் தூர சாலை ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலை எனப்படுகிறது.
காவல் துறையின் புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த 2022-ம் ஆண்டு மாவட்டத்தில் 712 உயிரிழப்பு சாலை விபத்துகள் ஏற்பட்டு 787 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2023-ம் ஆண்டு 680 உயிரிழப்பு சாலை விபத்துகள் ஏற்பட்டு 711 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கண்ட ‘எல் அண்டு டி’பைபாஸ் சாலையில் மட்டும் 2022-ம்ஆண்டு 55 பேரும், 2023-ம் ஆண்டு 120 பேரும் உயிரிழந்துள்ளனர். ஒராண்டில் இருமடங்காக சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு கூறியதாவது: வாகனப் போக்குவரத்துக்கேற்ப ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலை அகலமாக இல்லாமல், குறுகியதாக உள்ளது. இவ்வழித்தடத்தில் ஈச்சனாரி, சிந்தாணிபுதூர் சந்திப்பு, இருகூர், நீலாம்பூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இச்சாலையில் சிந்தாமணிபுதூர், ராவத்தூர் பிரிவு, வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி பிரிவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகளே விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிவேக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துதல், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், ‘எல் அண்டு டி’ பைபாஸ் சாலையை விரிவுபடுத்துதல் ஆகியவையே விபத்துகளை தடுக்க உகந்த வழிகளாகும், என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும்போது,‘‘இச்சாலையில் விபத்துகளை தடுக்க சமீபத்தில் நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை சாலை பராமரிப்பு நிறுவனத்திடம் அளித்துள்ளோம்.
இச்சாலையில் உள்ள சந்திப்புப் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள், எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை அதில் தெரிவித்துள்ளோம். போலீஸாரின் ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது ‘எல் அண்டு டி’ ஒப்பந்த நிறுவனத்துக்கு சாலையை பராமரிக்க காலஅவகாசம் 2029-ம் ஆண்டு வரை உள்ளது.
தொடர் கோரிக்கையால், நீலாம்பூர் - மதுக்கரை வரையிலான 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ‘எல் அண்டுடி’ பைபாஸ் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அது நிலுவையில் உள்ளது. இச்சாலையை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
|
புதிதாக 4 ஆயிரம் பேருந்துகள் வாங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:57:00 |
சென்னை: சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத்தான் இயக்கி கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டினார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெண்டர் விடப்பட்டுள்ளது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுகவின் ஆட்சியில்புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டிஉள்ளார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.20-ம் தேதிதான் 100 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 99 புதிய பேருந்துகள் என புதிதாக 199 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதையடுத்து 4,000 பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, நடைமுறை முடிந்து விரைவில் அந்தப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. கரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் கரோனா காலம் முடிந்த பிறகு புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி தமிழக அரசின்நிதியில் 2 ஆயிரம் பேருந்துகளையும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இருந்து 2 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 100 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
எனவே குற்றம்சாட்டுவதற்கு முன்பாக அவருடைய காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் யோசித்து பார்க்க வேண்டும். அதேபோல ஆசியாவிலே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பழனிசாமி, வர தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும் அவரை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதைக் காட்ட தயாராக இருக்கிறோம்.
முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் உள்ள அவர்களது பணிமனைகளில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கிக் கொள்ளலாம் என்றுதான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்கலாம் என்று ஒரு தவறான கருத்து சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
|
முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை: வழக்கறிஞர் வாதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:50:00 |
சென்னை: கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக,அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை யினர் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச்மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாகநீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
அதன்படி இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது. அப்போது நீதிபதி, சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தது ஏன் என்றும், வழக்குப்பதிவு செய்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார் என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான டெல்லிமூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், இதுதொடர்பாக வழக்கு தொடரஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்குப்பதிலாக சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக தவறு என்பதால்வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என்றநிலையில், முறையான அனுமதியின்றி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்ற நேரத்தை மட்டுமின்றி, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கும் செயல்.
இந்த வழக்கில்ஐ.பெரியசாமியை விடுவித்துசிறப்பு நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. அதில்எந்த தவறும் இல்லை என வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.
|
குறிப்பிட்ட நேரத்துக்கு முன் தொடங்கி முடிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: செங்கை விவசாயிகள் அதிருப்தி | செய்திப்பிரிவு | செங்கல்பட்டு | 2024-02-13 05:45:00 |
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக வேளாண் பட்ஜெட் கருத்து கேட்புகூட்டம் நடைபெற்றது. இதில் கருத்து கேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக தொடங்கி முடிக்கப்பட்டதால் விவசாயிகள் கருத்து தெரிவிக்காமல் அதிருப்தி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த10-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக விவசாயிகளுக்கு 4:30 மணி அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே கூட்டம் தொடங்கப்பட்டு 4 மணிக்கு முடிக்கப்பட்டு விட்டது.
இதனால் பல விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக உள்ள சில விவசாயிகளை மட்டும் அழைத்து விரைவாக கூட்டத்தை முடித்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து விவசாயி தனசேகரன் கூறியதாவது: விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் தயாரிப்பது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு தயாரிக்கப்படவுள்ள பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் கருத்து கூட்டம் காணொலிகாட்சி வாயிலாக செங்கல்பட்டு ஆட்சியர் வளாகத்தில் பிப்.10-ம்தேதி நடைபெறுகிறது.
இதற்காக விவசாயிகளுக்கு 4:30 மணி அளவில்அனைத்து விவசாயிகளும் இந்தகூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் எங்களுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி மாவட்டத்தில் உள்ளபல்வேறு விவசாயிகள் 4 மணிக்கு கூட்டம் அரங்குக்கு வருகை தந்தனர். ஆனால், கூட்டம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் இதனால் எங்களுக்கு பெரும்அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டது.
அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் விவசாயிகள் மட்டும் அழைத்து இந்த கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டனர். காரணம் கேட்டால் முறையாகபதில் அளிக்க மறுக்கின்றனர்.
மாவட்டத்தில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது, ஏரிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது, நிரந்தரகொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், நிலத்தில் ட்ரோன்மூலம் மருந்து தெளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும், 100 நாள் வேலைதொழிலாளர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
எனவே அரசு வரும் பட்ஜெட்டில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும்பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
|
கைதிகள் பற்கள் உடைப்பு வழக்கில் சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-13 05:40:00 |
மதுரை: அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரரிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பையைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரு வழக்கு விசாரணைக்காக போலீஸார் என்னை அம்பை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் என்னை கடுமையாகத் தாக்கினர். ஏஎஸ்பி பல்வீர்சிங் எனது 4 பற்களை உடைத்தார். என்னைப்போல பல விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி உடைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. எனவே, அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10 முதல் 11-ம் தேதி வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஐ.ஜி. தரப்பில் எதிர்ப்பு... இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தென்மண்டல ஐ.ஜி. தரப்பில், "நெல்லை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 213 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் பாதுகாக்கப்படுகின்றன. கேமராக்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அம்பை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
|
திருநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு; 78 பேர் காயம் | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2024-02-13 05:30:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 78 பேர் காயமடைந்தனர்.
திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொடங்கிவைத்தார். தொடக்கத்தில் கோயில் காளைகளும் அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 737 காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் காளைகளின் உரிமையாளர்கள் 16 பேர் உட்பட 79 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பாஸ்கர்(30) உயிரிழந்தார். பாதுகாப்பு பணிகளை இலுப்பூர் போலீஸார் மேற்கொண்டனர்.
|
இமாச்சல பிரதேசத்தில் 9 நாள் தேடுதல் பணி நிறைவு: சட்லெஜ் ஆற்றிலிருந்து வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:28:00 |
சென்னை: இமாச்சல பிரதேச ஆற்றிலிருந்து சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முன்னாள்மேயர் சைதை துரைசாமியின்மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார்.
கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டிஇருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு சென்ற கார், நீரில் மூழ்கியது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நண்பர் கோபிநாத், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்ளூர் கார் ஓட்டுநர் தன்ஜின் மற்றும் வெற்றி இருவரை காணவில்லை. பின்னர், ஆற்றிலிருந்து தன்ஜின் உடல் மீட்கப்பட்டது.
சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் அம்மாநில போலீஸார், ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில், வெற்றியை தேடும் பணியில் 9-வது நாளாக நேற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். பிற்பகலில் விபத்து நடந்த சில கிலோ மீட்டர் தொலைவில் சட்லெஜ் ஆற்றில், பாறையின் அடியில் சிக்கியிருந்த உடல் ஒன்றை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டனர். பின்னர், அந்த உடல் வெற்றியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
வெற்றியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடலை சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெற்றிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் நேற்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
மகனை இழந்து வாடும் சைதை துரைசாமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சைதை துரைசாமிக்கு ஏற்பட்ட இழப்புக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை. மகனை இழந்து வாடும் சைதைதுரைசாமி குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: வேலூர் வள்ளலார் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் | செய்திப்பிரிவு | வேலூர் | 2024-02-13 05:27:00 |
வேலூர்: ‘இந்து தமிழ் திசை' செய்தியின் எதிரொலியை தொடர்ந்து வேலூர் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகேயிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
வேலூர் மாநகராட்சி சத்து வாச்சாரி வள்ளலார் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழே பகுதியில் தேநீர் கடை, சிற்றுண்டி கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளன. பகல் நேரங்களில் கூட்ட நெரிசலுடன் காணப்படும் இப்பகுதி மாலை 6 மணியை கடந்ததும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறிவிடுகிறது.
இப்பகுதியைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் இருந்தாலும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகாமையில் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதால் மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்குகின்றனர்.
இரவு 7 மணி ஆனதும், வெவ்வேறு பகுதியில் இருந்த வரும் மதுப்பிரியர்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே அமர்ந்தும் மதுபானம் அருந்துகின்றனர். மதுபானங்கள் காலியானதும், பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல் கின்றனர். மேலும் மதுவுடன், உணவு மற்றும் இறைச்சி கழிவு களை அங்கேயே வீசுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதைத்தடுக்க குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும், சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் பாதி முடிந்த நிலையில் மற்றொரு புறம் தேநீர் கடையால் (ஆவின்) சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன.
அந்த கடையை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் உத்தர விட்டும், அங்குள்ள தேநீர் கடையை அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பு கடைகளால் வள்ளலார் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த டிச.12-ம் தேதி படத்துடன் செய்தி வெளி யானது
இதைத்தொடர்ந்து, 2 மாதங்கள் கழித்து, வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல இளநிலை பொறியாளர் நிர்மலாதேவி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை தேநீர் கடை, அதனை யொட்டி உள்ள சிற்றுண்டி மற்றும் பெட்டிக்கடைகளை அகற்ற நட வடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சிற்றுண்டி கடையும், பெட்டிக் கடையும் அகற்றப்பட்ட நிலையில் தேநீர் கடைக் காரர், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை யடுத்து, அதிகாரிகள் அந்த கடையை அகற்றாமல் விட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது சத்துவாச்சாரி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி அங்கு திட்டமிட்டப்படி சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப் படும்’’ என்றனர்.
|
மின்வாரிய ஊழியருக்கான முத்தரப்பு ஒப்பந்தம்: 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:18:00 |
சென்னை: மின்வாரியம் 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன.
கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியம் மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின்வாரியத்தில் 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மின்வாரியம் தனி, தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்டஅனைத்தும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
இதற்காக, தமிழக அரசு, மின்வாரியம் மற்றும் தொழிற்சங்கம் இடையே முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியின் அழைப்பை ஏற்று,மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்மின்வாரியத்தில் உள்ள 27 சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 சங்க நிர்வாகிகள் கையெழுதிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் அதிமுக தொழிற்சங்கம், என்ஜினீயரிங் அசோசியேஷன், எம்ப்பிளாய்ஸ் ஃபெடரேசன், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சங்கம் மற்றும் சிஐடியு ஆகிய 5 சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக கையெத்திடவில்லை.
|
இலவச வேட்டி விவகாரத்தில் ரூ.60 கோடி முறைகேடு: பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:13:00 |
சென்னை: இலவச வேட்டி விவகாரத்தில் ரூ.60 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதனுடன் இலவச வேட்டி,சேலையும் வழங்கப்படுகிறது.அதன்படி அண்மையில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில்ரூ.60 கோடிவரை முறைகேடுநடந்திருப்பதாகக் கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜகமாநில தலைவர் அண்ணாமலை சார்பில், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று புகார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு பொங்கலுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்குவது தமிழக அரசுதொடர்ந்து செய்து வரும் பணி.இந்த வேட்டி, சேலை நெய்வதற்கு டெண்டர் விடும்போது அது எப்படி நெய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டியில் 100 சதவீதம் பருத்திநூல் இருப்பதற்கு பதிலாக78 சதவீதம் பாலியஸ்டர் நூல்பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் செல்வோம்: ஒரு கிலோ பருத்தி நூல்ரூ.320 விலை இருக்கும் நிலையில் பாலியஸ்டரின் விலையோ ரூ.160 மட்டுமே; வித்தியாசம் 160ரூபாய். ஒரு வேட்டி நெய்ய 200 கிராம் பருத்தி நூல் தேவை. எனவே, 1.68 கோடி வேட்டியில் ரூ.60 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்.
இதுமட்டும் அல்லாமல் பருத்தி நூலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.320. ஆனால்,வெளிச் சந்தையில் இதன் விலை ரூ.250 மட்டுமே. இதிலும் முரண்பாடு உள்ளது. இதிலும் முறைகேடு நடந்துள்ளது என்றார்.
|
திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் 1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு | செய்திப்பிரிவு | விருதுநகர் | 2024-02-13 05:06:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவராயனேந்தலில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கி.பி.11-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சு.ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ.சரத்ராம் ஆகியோர் திருச்சுழி பகுதியில் கள ஆய்வின்போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குரண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையங்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்டஇடங்களில் சமண சமயம் பரவிஇருந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது, மணவராயனேந்தலில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்தநிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிற்பத்தில் மகரத்தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார்.
அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன்காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.
சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல்மக்கள் குடியிருப்பாக இந்த ஊர்இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாகஇவை உள்ளன. எனவே, இந்தசிற்பத்தை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
|
பேரவைத் தலைவர் அவதூறு கருத்துகள் தெரிவித்தார்: ஆளுநர் வெளியேறியது குறித்து ராஜ்பவன் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 05:04:00 |
சென்னை: ஆளுநர் உரையில் பல பத்திகளில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்ததால் அதை வாசிக்கவில்லை என்றும், பேரவைத்தலைவர் ஆளுநர் மீது அவதூறு பேசியதால் அவையில் இருந்து அவர் வெளியேறியதாகவும் ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கியது. அரசால் அளிக்கப்பட்ட உரையின் முதல் பகுதியில் சில கருத்துகளை மட்டும்தெரிவித்துவிட்டு, 4 நிமிடங்களில் உரையை முடித்து ஆளுநர் அமர்ந்தார். தொடர்ந்து, ஆளுநர் உரையின்தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் அப்பாவு வாசித்து முடித்ததுடன், ஆளுநர் உரையாற்றியது குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
அதன்பின், பேரவை விதிகளை தளர்த்தி, அரசு அளித்த உரை மட்டுமே பேரவை குறிப்பில் இடம்பெறும் வகையிலான தீர்மானத்தை பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் வாசித்தார். அப்போது, அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுகள் தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசிடம் இருந்து வரைவு ஆளுநர் உரை, கடந்த பிப்.9-ம் தேதிராஜ்பவனுக்கு கிடைத்தது. அந்த உரையில், அதிகப்படியான பத்திகளில் உண்மையை விட்டு வெகுவாக விலகிய, தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, சில அறிவுரைகளுடன் ஆளுநர் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
குறிப்பாக, தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை தரும் வகையில்,ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஏற்கெனவே தமிழக முதல்வர் மற்றும் பேரவைத்தலைவருக்கு ஆளுநர் கடிதங்கள் எழுதியிருந்தார்.
மேலும், ஆளுநர் உரை என்பதுஅரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். பேரவை கூட்டப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்கள்,பாகுபாடான அரசியல் கருத்துகளை தெரிவிப்பதற்கான மன்றமாகஇருக்கக்கூடாது என கூறியிருந்தார்.
அறிவுரைகள் புறக்கணிப்பு: ஆனால், தமிழக அரசு ஆளுநரின் அறிவுரைகளை புறக்கணித்துவிட்டது. இந்நிலையில், ஆளுநர் பிப்.12-ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு தனது உரையை நிகழ்த்தினார். முதலில், பேரவைத்தலைவர், முதல்வர், பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, திருவள்ளுவரின், 738-வது திருக்குறள் அடங்கியமுதல் பத்தியை வாசித்தார். அதைத்தொடர்ந்து, அரசியலமைப்பின் சிறப்புகளைக் கருத்தில்கொண்டு, உரையின் ஏராளமான பத்திகளில், தவறாக வழிநடத்தும் தகவல்கள், கூற்றுகள் இருப்பதால், உரையைமுழுமையாக தன்னால் படிக்கஇயலாது என்பதை வெளிப்படுத்தினார். அதன்பின் பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தி, மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாக கூறி உரையை முடித்துக் கொண்டார்.
அதன்பின், பேரவைத்தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசித்துமுடித்ததும், பேரவை நிகழ்ச்சிநிரல்படி, தேசிய கீதத்துக்காக ஆளுநர்எழுந்தார். ஆனால், திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்குப் பதிலாக, பேரவைத்தலைவர் ஆளுநருக்கு எதிராக, அவர் நாதுராம் கோட்சே உள்ளிட்ட பலரை பின்பற்றுவதாக அவதூறு பேச்சைத் தொடர்ந்தார். பேரவைத் தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால், அவரது பதவியின் கவுரவத்தையும், பேரவையின் மாண்பையும் குறைத்து விட்டார்.
பேரவைத்தலைவர், ஆளுநர் மீது கடுமையான தாக்குதல்களை வெளிப்படுத்திய நிலையில், தனது பதவி மற்றும் பேரவையின் கண்ணியம் கருதி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-13 04:55:00 |
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.
அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றவழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிஅசோக் குமார் தொடர்புடையஇடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றதடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 13-ம்தேதி சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைநடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட சோதனை அடுத்த நாள் வரை நீடித்தது. இறுதியாக ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் இதயஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில வாரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் சென்னைபுழல் மத்திய சிறையில் நீதிமன்றகாவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்துவந்த செந்தில் பாலாஜி அடிக்கடிஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகளை பெற்றுவந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.அவர் பொறுப்பு வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறைஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது.
நீதிபதி கேள்வி.. இந்நிலையில் 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஜன.30-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடைநிலை ஊழியர் ஒருவர் குற்றவழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பின்னர் இந்த வழக்கு விசாரணை பிப்.14-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும்அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இவ்விவகாரம் குறித்து அரசு தரப்பிலோ அல்லது ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இரவு வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
வெற்றி துரைசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை சென்னையில் தகனம்: மனிதநேய அறக்கட்டளை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 23:55:00 |
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.13) பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்.04-ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது பூத உடல் நாளை பிப்.13 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி. நகர்) மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
வெற்றி துரைசாமி மறைவுக்கு டி.டி.வி தினகரன், ஜி.கே.வாசன் இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 23:23:00 |
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டி.டி.வி.தினகரன்: “இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்க பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்: “தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இளம் வயதிலேயே அவரது உயிரிழப்பு அவரது தந்தைக்கும், குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
|
வெற்றி துரைசாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 21:54:00 |
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
|
“சமூகப் பொறுப்பு மிக்கவர்” - வெற்றி துரைசாமிக்கு அன்புமணி புகழஞ்சலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 21:31:00 |
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி இறப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமியை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்று, அவரது காலத்திலிருந்து அரசியலில் இருந்து வரும் சைதை துரைசாமி கல்வி உள்ளிட்ட துறைகளில் ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார்.
தமிழகத்தின் எந்த மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் படித்து இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றி வருபவர் ஒருவர் இருப்பார். இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு சைதை துரைசாமி உதவியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகள் 10 பேராவது இருப்பார்கள். அந்த அளவுக்கு சைதை துரைசாமி சமூகப் பணிகளை செய்வதற்கு துணையாக இருந்தவர் வெற்றி துரைசாமி. சமூகப் பொறுப்புடன் கூடிய திரைப்பட இயக்குநராகவும் அவர் உருவெடுத்திருந்தார்.
தந்தையின் வழியில் சமூகப் பணியாற்றி வந்த வெற்றி துரைசாமி தொண்டு உலகத்திலும், பொது வாழ்விலும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டியவர். அதற்கான அனைத்து தகுதிகளும், திறமைகளும் அவருக்கு இருந்தன. ஆனால், அதற்கு முன்பாகவே இளம் வயதில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதை நம்பவே முடியவில்லை; இந்த செய்தியை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை.
வெற்றி துரைசாமி தான் சைதை துரைசாமியின் உலகம். வெற்றியின் மறைவு சைதை துரைசாமிக்கு எந்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றியை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமிக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒருநாள்’ படத்தை வெற்றி துரைசாமி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
|
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 21:30:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் 2011 - 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தப்போது போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை, 2023-ம் ஆண்டு மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ஜூன் 13ம் தேதி 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து தமிழக அரசு நிர்வாக ஆணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக முதல்வருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
|
'ஆளுநர் உரையில் தமிழக அரசின் பொய்கள்' - பட்டியலிட்டு அண்ணாமலை விமர்சனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 20:54:00 |
சென்னை: "சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு, தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆளுநர் உரையில் இதுபோன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்தபின், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாஜகவுக்கு உள்ளது.
கடந்த காலங்களில்... - 2018-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின், "நான் தொடக்கத்திலேயே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது" . 2019 ஆம் ஆண்டு - மு.க.ஸ்டாலின், "ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதி தந்திருக்கக் கூடிய Failure பேப்பர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். எனவே, நாங்கள் அதை கண்டித்து, அவரது உரையை புறக்கணித்து, திமுக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்".
2020-ஆம் ஆண்டு - மு.க.ஸ்டாலின், "ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து, அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்". இதேபோல், 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தீர்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர்.
இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும், விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஓர் உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண். | முழுமையாக வாசிக்க > உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த அரசு - பேரவையில் நடந்தது என்ன?
ஆளுநர் உரையில், நாட்டிலேயே அந்நிதய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம், திமுக ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதை பலமுறை தமிழக பாஜக முன்வைத்தும் அதற்கு எந்த தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தவறான தகவல்: சமீபத்தில் நாங்கள் முன்வைத்த SGST refund குற்றச்சாட்டாக இருக்கட்டும், மின்சார கட்டணம் மற்றும் Demand Charge-ஐ உயர்த்தியதாக இருக்கட்டும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பும் நிலையாக இருக்கட்டும், திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளால் முதலீடுகள் குறைந்துகொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன்பின் அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை. இவ்வாறே உள்ளது தமிழக அரசின் செயல்பாடு.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் முன்னணி மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாடுகளில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்பதாவது திமுகவுக்கு தெரியுமா? உத்தரப்பிரதேசம்-33 லட்சம் கோடி ரூபாய், குஜராத்-26 லட்சம் கோடி ரூபாய், கர்நாடகம் -10 லட்சம் கோடி ரூபாய், இவ்வாறு இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை திமுக உணர வேண்டும்.
sink-ஆகுற சென்னை: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. இயற்கைப் பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுகள், என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம், சிங்கார சென்னையை sink-ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால், சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறியிருந்தனர். பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர்பாபு. அதன்பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன. மழைக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெற்றதாக கூறினார். 99 சதவீத பணிகள் நிறைவைடந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிக்ஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டதுதான் மிச்சம்.
இதுபோதாது என்று, தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு புதுடெல்லி சென்றவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம்.
20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எப்படி? - சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், 2017-18 ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, மாநிலங்களின் வரி வருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லை எனில், அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வழங்கும் என்று தெரிவித்திருந்தது. | முழுமையாக வாசிக்க > மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள்
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி விகிதம்,2013-14 -3%;2014-15 -7%;2015-16 -2%; 2016-17 -7% என்று இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்திய பின்னர், தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி விகிதம், 2018-19 -14%; 2019-20 -10%;2020-21 -12% (கரோனா காலக்கட்டம்); 2021-22 -16% ; 2022-23 -24% ஆக மாறியுள்ளது. 2017 ஆண் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது கரோனா காலக்கட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 14,336 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கியது மத்திய அரசு. சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆளுநர் உரையில் இதுபோன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
கஞ்சா தலைநகரமாக... - சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது. என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தாங்கள் தங்கியிருக்கும் மாளிகையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் கேட்டால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை நிலை புரியும். கோவை தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது.
ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியதை தவிர என்ன சாதனை செய்தது திமுக. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது அமைச்சர் உட்பட அனைவரும் திரைக்கு பின்னால் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும்தானே பார்த்தீர்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் விளையாட்டு அமைச்சர் உதயநிதி பேசிய பின்பும் மத நல்லிணக்கத்தைப் பற்றி பேச திமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது.
என்ன பெருமை உள்ளது? - மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கிவிட்டு, சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியதால் என்ன பெருமை உள்ளது? இப்படி கொடுத்த என்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சி மேடைகளில் மட்டும் 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை ஆளுநர் உரையில் சேர்க்காமல் விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.
புதுமைப் பெண் திட்டம் மூலமாக 2.73 லட்சம் பெண்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. முந்தைய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்த என்ன காரணம், என்று 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, புதுமைப்பெண் திட்டம் மூலமாக வருடத்துக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சரிபாதியைகூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்? - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 என்று சமீபத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 வாரங்களு்ககுப் பின்னர், அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இப்படி உண்மைக்குப் புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்தது தவறு. அது ஒருபுறம் இருக்க, முந்தைய திட்டத்தை கைவிட தமிழக முதல்வர் சொன்ன உத்தேச பயனாளிகளில் சரிபாதியைகூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்?
போஷன் திட்டத்தின் கீழ் ரூ.1,146 கோடி... - முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாட்டின் முதன்மை மாநிலம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது, காலை உணவும் போஷன் திட்டத்தில் வழங்க வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில், போஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி 1,146 கோடி ரூபாய்.
இந்தியாவில் பல மாநில அரசுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்கள். என்பதை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச அரிசியும், ஒரு வேளை உணவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கி வருவது அந்த தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளதையும் அறிய முடிகிறது.
நம்பிக்கை இல்லை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் -2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின்போது அரசு அறிமுகப்பட்டுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், கடந்த ஆண்டு பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் வீணாக்கியதை தமிழக பாஜக கண்டித்தது.
அதன்பின்னர், பட்டியல் சமுதாய மக்களுக்கு SCSP மூலமாக வரும் நிதியை சரியாக செலவிட ஒரு சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்படும் என்று திமுக அரசு சொல்லி சுமார் ஒரு ஆண்டாகிவிட்டது. இனியும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக தற்போது தெரிவித்துள்ள செயல் திட்டம் தடையின்றி செயல்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.
குலசேகரன் கமிஷன்:சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அறிக்கை சமர்ப்பிக்க தங்களுக்கு 6 மாத கால நீட்டிப்பு வேண்டும் என்று குலசேகரம் கமிசன் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இவ்வாறு இருக்கையில், மத்திய அரசிடம் இதுதொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி.
ஒரே ஒரு குறைதான் - தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை, சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. இந்த திட்டத்துக்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதும் திமுக ஆளுநர் உரையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கும், தமிழக அரசின் முயற்சியால் 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 243 மீனவர்களில் 242 விடுவிக்கப்பட்டதாக சொன்னபோது, மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதும்தான் நினைவுக்கு வந்தது. | முழுமையாக வாசிக்க > சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ராஜ்பவன் விளக்கம்
திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில், ஒரே ஒரு குறைதான். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சாதனை இந்த ஆளுநர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இது இடம்பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
|
உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த அரசு - பேரவையில் நடந்தது என்ன? | நிவேதா தனிமொழி | வெளிநடப்பு | 2024-02-12 20:05:00 |
2024-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டுவந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தன் உரையைத் தொடங்கினார் ஆளுநர். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மேலும், உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையைப் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இப்படியாக, வெறும் 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையை முடித்துக்கொண்டார். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதன்பின் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையைப் படித்தார். கடந்த முறை தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும் சேர்த்தும் வாசித்திருந்தார் ஆளுநர். இதனால், அவர் உரையை நீக்க தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசு. எனவே, ஆளுநர் அதற்கு எதிர்ப்புப் தெரிவித்து அவையைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் தமிழக உரையைப் புறக்கணித்துள்ளார்.
அதன்பின், அவைமுன்னவர் துரைமுருகன் தீர்மனத்தை வாசிக்கத் தொடங்கியதும் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அந்தத் தீர்மானத்தில், ‘ஆளுநர் ஒப்புதல் வழங்கிய உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்றப்படும். ஆளுநர் அவையில் பேசியது அவைக்குறிப்பில் நீக்கப்படும்” என சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேசிய கீதத்துடன் அவை நடவடிக்கை முடிந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”ஆளுநர் சொன்ன சொந்த கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும் முன்பு பேரவைத் தலைவரும் முதன்மைச் செயலாளரும் அவரை வரவேற்று ’காட் ஆஃப் ஹானர்’ (God of Honour) வழங்கும்போது முழுமையாக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. பின் அவர் சட்டசபைக்கு அழைத்து வரப்படுகிறார். பேரவை விதி 176(1)-ன் படி சட்டசபை தொடங்கும்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதம் பாடப்படும்.
நாங்கள் உரையைக் கொடுக்கும்போது, அதை ஏற்றுக் கொண்டார். அவையில் அதைப் புறக்கணிக்கிறார். குறிப்பிட்டு ஒரு கருத்தில் முரண்பாடு என்றால் பரவாயில்லை; மொத்த உரையும் முரண்பாடு என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இப்படியான மோதல் போக்கு காரணமாகத்தான் பல மாநிலங்களில் ஆளுநரைக் கூட சட்டப்பேரவைக்கு அழைப்பதில்லை. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் முதல்வராக இருந்தபோது, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மாண்பைக் கடைபிடிக்கிறோம். அதனால் கொள்கை வேறுபாடு இருந்தாலும் சட்டத்தின்படி ஆளுநர் அழைத்து சபையைத் தொடங்குகிறோம். ’பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்தின் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும்’ என எண்ணம் தமிழக மக்களுக்கு இருக்கிறது. இதை ஆளுநரின் உரையில் வைக்க முடியுமா? அதனால், அவையில் நான் குறிப்பிட்டுப் பேசினேன்” என விளக்கமளித்தார்.
ஆளுநர் உரை சட்டசபையில் நீக்கப்பட்ட நிலையில், ராஜ்பவன் செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், “கடந்த 9-ம் தேதி உரை சட்டப்பேரவை உரை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. அதில் பல கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பாக இருந்தது. மேலும், தமிழக அரசின் தனித்த அரசியல் கண்ணோட்டங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைத்தும் உரை திருப்பி அனுப்பப்பட்டது.
ஆனால், இந்தக் கோரிக்கைகளைத் தமிழக அரசு புறந்தள்ளியுள்ளது. பல பத்திகள் உண்மைக்குப் புறம்பாகவும், தார்மிக கருத்துகள் முரண்பாடாகவும் இருப்பதாகக் கூறி உரையைப் புறக்கணித்தார். இருப்பினும், சபாநாயகர் தமிழில் படிக்கும்போது அவையில் இருந்த ஆளுநரை கோட்சேவைப் பின்பற்றுவர் என சட்டப்பேரவை மாண்பை மீறும் வகையில் சபாநாயகர் பேசியதால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்” என விளக்க அளித்துள்ளது. முழுமையாக வாசிக்க > சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ராஜ்பவன் விளக்கம்
முன்னதாக, “சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பேசினார். | அதன் விவரம்: “சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல...” - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி
பின்னர், “ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதன் விவரம் > “பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை” - மரபு மீறல் புகார்களுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்
இதனிடையே, "தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: “தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
கடந்த மாதம் கேரளாவில் சட்டசபைக் கூட்டத்தில் வெறும் 2 நிமிடங்களில் தன் உரையை முடித்துக்கொண்டு வெளியேறினார் ஆளுநர் ஆரிப் முகமது கான். இந்த நிலையில், தமிழக ஆளுநரும் உரையைப் புறக்கணித்திருக்கிறார். தமிழக ஆளுநர் அரசின் சட்டசபை உரையைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.
முக்கிய அம்சங்கள்: மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள்
|
“ஆர்எஸ்எஸ் தொண்டராக ஆளுநர் ரவி செயல்படுவது வாடிக்கை” - கே.பாலகிருஷ்ணன் கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 17:59:00 |
சென்னை: "அரசமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024-ன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அவரின் சொந்தக் கருத்துக்களை கூற சட்டப்பேரவை இடமும் அல்ல. ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியகீதத்தை முதலில் பாட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தீர்வு இல்லை என்றும், உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன் என்றும் கூறி கேரள ஆளுநர் பாணியில் 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் பேரவை தலைவர், ஆளுநர் உரையை தமிழில் முழுவதும் வாசித்து நிறைவு செய்து விட்டு, தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு ஏற்கெனவே கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கும் போது, ஆளுநர் ரவி கிஞ்சிற்றும் நாகரீகம் இல்லாமல், கடந்த ஆண்டைப் போலவே, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறிச் சென்றது அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
தேசிய கீதத்தை ஆளுநர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது.தமிழகத்தின் மாண்பையும், சட்டமன்றத்தின் மரபையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழு உரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்று உடனடியாக அவை முன்னவர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக அமைந்தது.
அரசமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், ஆர்எஸ்எஸ்-ன் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழக விரோதப் போக்குக்கும் எதிராக தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
|
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-12 17:46:00 |
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஸ்தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, ‘விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 9ம் தேதி தாக்கல் செய்த மெமோவில், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தோம். ஆனால் அதனை பரீசிலிக்காமல், நீதிபதி இன்று தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.
எனவே விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் தீர்ப்பில் மனு தள்ளுபடி என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பை அறிவிக்காததால் ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்ய முடியும் எனக் கூறி, வழக்கு விசாரணையை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
|
“ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல் பேரவை உறுப்பினர்கள் அரசியல் நாகரிகம் காத்தனர்” - முத்தரசன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 17:45:00 |
சென்னை: “பேரவைத் தலைவர், முதல்வர், அவை முன்னவர் உள்ளிட்ட சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ‘ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல்’ அரசியல் நாகரிகத்தையும், தமிழர் பண்புகளையும் பாதுகாத்துள்ளனர்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டின் 2024-25 அரசின் இலக்கையும், அதனை அடைவதற்கான கொள்கை வழிகளை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது. கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு கடமையை நிராகரித்து, மரபுகளையும் அத்துமீறி தனது தாழ்ந்த தரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் பேரவைத் தலைவர், முதல்வர், அவை முன்னவர் உள்ளிட்ட சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல், அரசியல் நாகரிகத்தையும், தமிழர் பண்புகளையும் பாதுகாத்துள்ளனர்.
ஆளுநர் உரையில், 'தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றி இருப்பதை அடுக்கடுக்காக எடுத்துரைக்கிறது. வேலை வாய்ப்புக்கும் தொழில் வளர்ச்சிக்கு முதலீடு திரட்டுவதில் சாதனை படைத்திருப்பதை பெருமைபட எடுத்துக் கூறுகிறது. இணைய வழி தற்சார்புத் தொழிலாளர் நலவாரியம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேசமயம் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளிலும், நகராட்சிகளிலும் பணியாற்றும் ஒப்பந்த வெளியிடப் பணியாளர், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் நல வாரியம், ஆளுநர் உரையில் இடம்பெறும் என விவசாயத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் என்பதை அரசு கருத்தில் கொண்டு, முதல்வர் வழங்கும் தொகுப்புரையில் இடம்பெறும் என நம்புகிறோம். மொத்தத்தில் மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
|
“சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு அக்கறையும் தெளிவும் இல்லை” - ராமதாஸ் @ ஆளுநர் உரை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 17:12:00 |
சென்னை: ‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழகத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழக அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.
2024-ஆம் ஆண்டுக்கான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மரபுகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது உரையை படித்து கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். ஆளுநரின் உரையில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்தத் திட்டமும் இல்லை. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதமே கடிதம் எழுதியிருந்தார். அப்போதே அதை பாமக கடுமையாக விமர்சித்தது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த அதிகாரம் இருக்கும்போது, அதற்காக மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும், சமூக நீதியை காக்கும் விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் நான் குற்றஞ்சாட்டியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரை நானே நேரில் சந்தித்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும், அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கினேன். ஆனால், அதன்பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனியாவது தமிழக அரசு தெளிவு பெற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர், தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
பொதுவாக ஆளுநர் உரை என்பது ஒரு மாநில அரசு அடுத்து வரும் ஓராண்டில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த முன்னறிவிப்பு ஆவணம் ஆகும். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் பெயரில் படிக்கப்பட்ட உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பேசும் போதாவது சமூக நீதி, வேலைவாய்ப்பு, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
|
வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு @ இமாச்சல் | செய்திப்பிரிவு | இமாச்சல் | 2024-02-12 16:42:00 |
இமாச்சல்: இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமி காணாமல் போனார். கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வந்தது. இமாச்சலப் பிரதேச போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்கூபா டைவிங் வீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணியின்போது, பாறை இடுக்குகளில் சேகரிக்கப்பட்ட ரத்தக்கறை மற்றும் திசுக்களின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், ஸ்கூபா டைவிங் வீரர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உடற்கூராய்வுக்குப் பின்னர், வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
|
இறுதிச்சடங்கு செய்திட நீர்த் தொட்டி கோரி துண்டு, செம்புடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு @ மதுரை | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2024-02-12 16:37:00 |
மதுரை: இறுதிச்சடங்கு செய்வதற்கு குளியல்தொட்டி கோரி துண்டு, செம்புடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சமூக ஆர்வலர் கணேஷ்பாபு சட்டையின்றி துண்டு, செம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் சோதனை செய்து மனு அளிக்க அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில், 'வாடிப்பட்டி அருகே முள்ளிப்பள்ளத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு செய்வதற்கு உள்ளூரிலுள்ள வடக்குதெரு அய்யனார் கோயிலிலுள்ள குளியல் தொட்டியிலிருந்து நீர்மாலை எடுத்து வருவது வழக்கம். அந்தக் குளியல் தொட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக குளியல் தொட்டி கட்டுவதற்கு பழைய குளியல் தொட்டியை இடித்தனர்.
கடந்த வாரம் எனது உறவினர் இறந்ததால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக நீர்மாலை எடுக்கச் சென்றனர். அப்போது குளியல் தொட்டி இல்லாமல் குடிநீர் குழாயில் நீர்மாலை எடுத்து வரவும், அவர்கள் குளிப்பதற்கு மக்கள் சிரமப்பட்டனர். எனவே, தாமதமின்றி குளியல் தொட்டி கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். அதேபோல் மேலும் பல கோரிக்கைகளையும் கணேஷ்பாபு ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
|
கால்நடை, வளர்ப்பு பிராணி வளர்க்க உரிமம் பெற வேண்டும்: மதுரை மாநகராட்சி உத்தரவு | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-12 16:31:00 |
மதுரை: மதுரை மாநகராட்சியில் மாடு, நாய், பன்றி, குதிரை போன்றவை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி, உரிமம் பெறுவதோடு சாலைகளில் அவற்றை சுற்றத்திரிய விட்டால் ரூ.2,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கால்நடைகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது. சாலைகளின் குறுக்கே அவை திடீரென்று புகுந்து விடுவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். சென்டர் மீடியம் இடைவெளியில் திடீரென்று புகும் மாடுகள், நாய்கள், பன்றிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து உயிர் பலியும், மீண்டும் முன்போல் இயங்க முடியாத அளவிற்கு கை, கால்களும் முடங்கும் பரிதாபங்களும் நடக்கிறது.
அதனால், மாநகராட்சி நிர்வாகம், கால்நடைகளை பிடித்து குறைந்தளவு தொகை அபராதம் விதித்துப் பார்த்தனர். அப்படியிருந்தும், கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியும் போக்கும் குறையவில்லை. அதனால், தற்போது அபராத தொகையை உயர்த்தியும், தொடர்ந்து சுற்றித்திரிய விட்டால் பொது ஏலம்விடவும், இனி வீடுகளில் கால்நடைகளை வளர்க்க வேண்டுமென்றால், மாநகராட்சியில் முறைப்படி உரிமைத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, மாடு, குதிரை, பன்றி போன்றவை சாலைகளில் சுற்றித்திரிந்தால் ஸ்பாட் பைன் அபராதம் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும். கன்று, கழுதை என்றால் ஸ்பாட் பை் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் அதுவே உரிமையாளர் யார் என்று தெரியாமல் முதல் முறையாக சுற்றித்திரிந்து பிடிப்படும் மாடு, குதிரை, பன்றிகள் மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்து, மாநகராட்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்டால் அதற்கு முன் அபராதம் முன்பு ரூ.1,500 இருந்தது.
தற்போது அந்த அபராதம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் முறை சாலைகளில் மாடு, குதிரை சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறை கன்று, கழுதையை அவிழ்த்துவிட்டால் அதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் சாலைகளில் சுற்றித்திரித்து 5 நாட்களுக்கு உரிமையாளர்களால் உரிமைக் கோரப்படாத மாடு, குதிரை, பன்றிகளுக்கு அபராதத் தொகை ரூ.20 ஆயிரம் விதிக்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளரால் பொது ஏலம் விடப்படும்.
இரண்டு முறைக்கு மேல் அல்லது 5 நாட்களுக்கு உரிமை கோரப்படாத கன்று, கழுதைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளரால் பொது ஏலம் விடப்படும். பிடிக்கப்படும் கால்நடைகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு பராமரிப்பு தொகையான நாள் ஒன்றிற்கு ரூ.300 வசூல் செய்யப்படும். பிடிக்கப்படும் கால்நடைகள், மாநகர விலங்கியல் நல அலுவலர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும். கால்நடைகளுகு்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் முறையாக வழங்கப்படும்.
கால்நடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை நகல் மற்றும் உறுமொழி (ரூ.10) பத்திரம் வழங்கி கால்நடைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி ஊழியர்கள், கால்நடைகளை பிடிக்கும் போது கால்நடை உரிமையாளர்கள் அல்லது பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்தால் மாநகராட்சி நகர் நல அலுவலரால் போலீஸில் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை வளர்க்க உரிமையாளர்கள் ஆண்டுதோறும் மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும்.
மாடுகளுக்கு ரூ.100, கன்று ரூ.50, குதிரை ரூ.150, கழுதை ரூ.150, நாய்கள் ரூ.100, பன்றி ரூ.100 உரிமம் தொகை செலுத்தி அதனை வளர்க்கலாம். உரிமம் பெறாத கால்நடைகளை வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை வளர்க்க குடியிருப்பு பகுதிகளில் தொழுவம் அமைக்கக் கூடாது. பொது இடங்களில் வைத்து பராமரிக்கக் கூடாது. கால்நடைகள் வெளியேற்றும் திடக் கிழவுகளை சொந்த வாகனம் அமைத்து அப்புறப் படுத்த வேண்டும், சாலைகளில் மட்டுமில்லாது தெருக்களில் அவிழ்த்துவிடப்படும் மாடு, குதிரை, பன்றி, கன்று, கழுதைகளுக்கு அபராதம் உண்டு. அவை ரூ.1,500 முல் ரூ,5 ஆயிரம் விதிக்கப்படும்" என்றனர்.
|
“ஆளுநரின் செயலால் பாஜகவை தமிழக மக்கள் வெறுப்பது அதிகரிக்கும்” - கே.எஸ்.அழகிரி கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 16:29:00 |
சென்னை: "ஆளுநர் மாளிகையிலிருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாளாகக் கருதப்பட வேண்டும். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும், கசப்புக்கும் ஆளாகியிருக்கிற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்கிற வகையில், தமிழகத்தில் பாஜகவை மக்கள் வெறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் இந்த நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்ற மரபின் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என். ரவி அழைக்கப்பட்டிருந்தார். ஆளுநர் உரையும், அவருக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், உரையாற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு வந்த அவர், தமது உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது மிகுந்த கண்டனத்துக்குரியது.
சட்டப்பேரவைக்கு அவரை அழைத்து வரும்போது தேசிய கீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உரை முடிந்து இறுதியில் தான் தேசியகீதம் பாடப்படும். அந்த மரபுக்கு மாறாக, தமிழக ஆளுநர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயலாகும்.
தமிழக ஆளுநரை பொறுத்தவரை நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சிக்கு எதிராக பல நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்திக் கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். மகாத்மா காந்தியில் தொடங்கி எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது நடவடிக்கைகளை பார்க்கிற போது, ஆளுநர் பதவிக்கே ஒரு அவமானச் சின்னமாக திகழ்கிறார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள் தான் தமிழகத்தின் நன்னாளாகக் கருதப்பட வேண்டும். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும், கசப்புக்கும் ஆளாகியிருக்கிற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்கிற வகையில், தமிழகத்தில் பாஜகவை மக்கள் வெறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏதோவொரு வகையில் ஆளுநரின் நடவடிக்கைகளினால் ஏற்படுகிற எதிர்ப்பில் தமிழக பாஜக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கடும் வெறுப்புதான் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
|
ரத்தத்தில் கடிதம்... - ஜோதிமணி மீண்டும் போட்டியிட கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு | க.ராதாகிருஷ்ணன் | கரூர் | 2024-02-12 16:22:00 |
கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிட எம்.பி. ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தற்போதைய, முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசினர். அவர்கள் அனைவரும் ‘கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரவேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.
முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனிடம் க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் ‘கரூர் எம்.பி தொகுதியை கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கு பெற்றுத் தரவேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என மாநில தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவரும், ஏஐசிசி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியன் பேசும்போது, “எம்.பி. ஜோதிமணி சரிவர நடந்து கொள்ளாததாலும், மரியாதை கொடுக்காததாலும் கட்சியில் இருந்து பலர் விலகி விட்டனர். தான் என்ற அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்; அதற்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம்” என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. இம்மாத இறுதியில் தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. கரூர் மக்களவை தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கி தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமான முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் கே.சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சியினரிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அனைவரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, அவருக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்க வேண்டாம் என அகில இந்திய, தமிழக தலைமையை கேட்டுக் கொள்வது. எம்.பி. ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் போக்கை வன்மையாக கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேங்க் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர வேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதி மணி சரிவர செயல்படாததால் இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி தலைமை யாரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம். நானும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்” என்றார்.
மாவட்ட துணைத் தலைவர் எம்.சின்னையன், க.பரமத்தி வட்டார துணைத் தலைவர் விசுவை செந்தில் குமார், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கீர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து கருத்தறிய கரூர் எம்.பி. ஜோதி மணியை தொடர்புக் கொண்டபோது, கூட்டம் நடப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தற்போது டூரில் உள்ளதால் பிறகு அழைக் கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
|
மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 15:43:00 |
சென்னை: மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அந்த உரையில், “கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம், இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது. 2022-23ஆம் ஆண்டில்,7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8:19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டை விட தமிழகத்தில் வேகமான வளர்ச்சி: அதே வேளையில்,சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. நாட்டைவிட தமிழகம் வேகமாக வளர்ச்சியடைவதோடு, அதே காலகட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மாநிலம் திறம்படச் செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
முதல் மாநிலமாக தமிழகம்: தமிழக முதல்வரின் சீரிய தலைமையின் கீழ், இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை தமிழகம் கண்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ளபெரும் முன்னேற்றத்தினால், 2021-22 ஆம் ஆண்டில் நான்காம் இடத்திலிருந்த நமது மாநிலம், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின் 2022ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
வலுவான பொருளாதாரம். சமூக இணக்கத் தன்மை மற்றும் மகத்தான மக்களாட்சி ஆகியவையே, நமது மாநிலம் தொடர்ந்து நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாகத் திகழ்வதற்கு வழிவகுக்கின்றன. கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு அதற்கு ஒரு சான்றாகும்.
தமிழகத்தின் தலைசிறந்த தொழில் சூழலமைப்பையும் அதன் எதிர்காலத்துக்கேற்ற வகையிலான மனிதவளத்தையும் உலகுக்குப் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள், முன்னணி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர்பங்கேற்ற இந்நிகழ்வு தமிழகத்தை உலகளவில் தலைமை நிலைக்கு உயர்த்துவதற்கு உகந்த தளமாக அமைந்தது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழக அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்நிகழ்வில் தமிழக முதல்வர் 1டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார். இந்த உயரிய இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு மேற்கொண்டு வருகிறது.
இயற்கைப் பேரிடர்கள்: நமது மாநிலம். கடந்த சில ஆண்டுகளில் பல பேரழிவுகளைச் சந்தித்தபோதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் எதிர்கொண்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறுகாணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளால் மாநிலம் அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 44 மணி நேரம் வரலாறு காணாத அளவில் தொடர்ந்து பெருமழை பெய்தது. வெள்ள நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முழு அரசு இயந்திரமும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, நிவாரணப் பணிகளை தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மேற்கொண்டது. திறமையான திட்டமிடல், மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் நீர் மேலாண்மை போன்றவற்றால் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
எனினும் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. அரசால் மேற்கொள்ளப்பட்ட துரித நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளின் விளைவாக பெரும்பாலான பகுதிகள் ஒரு சில நாட்களிலேயே இயல்புநிலைக்குத் திரும்பின. மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்து நமது மாநிலம் மீள்வதற்கு முன்னரே, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கணிசமான அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு, உடைமைகளும் சேதமடைந்தன.
மக்களின் துயர் நீக்கும் பொருட்டு, தமிழக முதல்வர், 1487 கோடி ரூபாய் செலவில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை அறிவித்தார். மேலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதும் சேதமடைந்த பகுதிகளில், பாதிக்கப்பட்ட 6.63 லட்சம் குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக தலா 6,000 ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த பகுதிகளிலுள்ள, பாதிக்கப்பட்ட சுமார் 14.31 லட்சம் குடும்பங்களுக்கு, தலா 1,00௦ ரூபாயும், 541 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு 18,214 கோடி ரூபாயும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19,692 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
இப்பேரழிவின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறோம். இயற்கைப் பேரிடர்களைத் திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் மாதங்களில் நமது மாநிலமும் அதன் பொருளாதாரமும், இந்த பாதிப்புகளிலிருந்து வலிமையுடன் மீண்டெழும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பெரும் நிதிச்சுமை நிலவும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களின் நிதி ஆதாரங்களைத் திரட்டும் திறனும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் பற்றாக்குறை: மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டபோது, சரக்கு மற்றும் சேவை வரிமுறையின் முந்தைய காலத்துக்கு இணையான வருவாய் எட்டப்படும் வரை மாநிலங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மத்திய அரசு 30.06.2022 அன்று சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியயன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது அதிருப்தி: இந்நிதி நெருக்கடிக்கு இடையே, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இத்திட்டத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் 50:50 என்ற விகிதத்தில் சமபங்களிப்பு இருக்கும் என்ற அடிப்படையில் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், 2021-22 ஆம் ஆண்டின் மத்திய வரவு-செலவுத் திட்ட உரையில் மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், 17.08.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும் இத்திட்டத்துக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கருத்துரு நிலுவையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,இதே காலகட்டத்தில் பிற மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மேலும் வருத்தத்தை அளிக்கின்றது. இந்த நியாயமற்ற அணுகுமுறையின் விளைவாக, இரண்டாம் கட்டத்துக்கான முழுச் செலவினமும் மாநில அரசால் அதன் வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால். மாநில நிதிநிலையில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்துக்கான ஒப்புதலை விரைவில் அளிக்குமாறு வலியுறுத்துகிறோம். இத்தகைய சவால்களுக்கு இடையேயும் மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்திடும் திறன்மிகு நிர்வாகத்தை வழங்கிட இந்த அரசு உறுதியாக உள்ளது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மக்களுடன் முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான அரசின் சாதனைகள் குறித்து ஆளுநர் உரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
|
சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ராஜ்பவன் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 15:34:00 |
சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று தமிழக சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை விவகாரத்தில் நிகழ்ந்தவை: ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கையை, அரசிடமிருந்து கடந்த 9-ம் தேதி ராஜ்பவன் பெற்றது. அதில், உண்மையற்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அப்போது, ஆளுநர் உரை விவகாரத்தில் என்னென்ன விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனையை ஆளுநர் வழங்கினார்.
முதலில், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
இரண்டாவதாக, ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டப்பட்டதற்கான காரணங்களை பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்குமான மன்றமாக இருக்கக் கூடாது.
ஆளுநர் இவ்வாறு ஆலோசனை அளித்திருந்தும், ஆளுநரின் ஆலோசனையை அரசு புறக்கணித்தது. இந்நிலையில், ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் அவையில் உரையாற்றினார். அவர் தனது உரையில், சபாநாயகர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738-வது குறளுடன் முதல் பத்தியை படித்தார். அதன்பிறகு ஆளுநர், தவறான தகவல்கள் மற்றும் கூற்றுகளுடன் ஏராளமான பத்திகள் இருந்ததால் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையை படிக்க தன்னால் இயலவில்லை என்பதை வெளிப்படுத்தினார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காக இந்த சட்டப்பேரவை அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார்.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார். நாதுராம் கோட்சே மற்றும் பலரை ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். சபாநாயகர், ஆளுநருக்கு எதிராகக் கடுமையாகத் தாக்கியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்" என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, “சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பேசினார். | அதன் விவரம்: “சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல...” - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி
பின்னர், “ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதன் விவரம் > “பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை” - மரபு மீறல் புகார்களுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்
இதனிடையே, "தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: “தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
|
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ராம.சீனிவாசனுக்காக பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக! | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-12 14:59:00 |
மதுரை: பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராம.சீனிவாசன் போட்டியிடுவதாக கூறி பாஜகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி முடிவாகாத நிலையில் தேர்தல் தயாரிப்பு, தேர்தல் அலுவலகம் திறப்பு, நிர்வாகிகள் ஆலோசனை என தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளை விட பாஜக ஒரு படி முன்னேறி தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் விருதுநகர் தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகளை தொகுதியில் நடத்தி வந்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய நிர்வாகிகளை விருதுநகருக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் என்ற பிட் நோட்டீஸ்களை அச்சடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பாஜக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் தலைமையில் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு பிரதமர் மோடியின் பத்தாண்டு சாதனைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
அதில், ‘திருமங்கலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, கிராமங்கள் தோறும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் அளித்தது, ரூ.5 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அளித்தது, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியது, வீடு கட்டும் திட்டத்துக்கு மானியமாக ரூ.2.67 லட்சம் அளித்தது, விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2,000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது, கிராமச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளுடன் இணைத்தது, பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் சென்று தடையை நீக்கியது, தேவேந்திரர் அரசாணை பெற்றுத் தந்தது’ உள்ளிட்ட சாதனைகள் அச்சடிப்பட்டிருந்தது.
இதனிடையே, விருதுநகர் தொகுதி முழுவதும் ராம.சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்படும் என ஊடகப் பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் கூறினார்.
|
“ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை” - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 14:26:00 |
சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக் குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பது என்பது ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை மட்டுமின்றி, ஆளுநர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியல் அமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும் கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.
ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராகப் பொது வெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன்மூலம் இங்கே சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இத்தகைய போக்குள்ள ஆளுநர், தொடர்ந்து தமிழகத்தில் இருப்பதே தமிழக மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே ஆளுநர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே ஆளுநர் செயல்படுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் மத்திய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் மத்திய அரசு பயன்படுத்துகிறது.
மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்க வேண்டும் என ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் கூறியுள்ளார்.
|
“சட்டப்பேரவையில் நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஆளுநர் ரவி” - காங். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 14:12:00 |
சென்னை: “ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்” என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநர் அவைக்கு வந்த உடன் தமிழிலேயே பேச முயற்சி செய்தார். அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. பிரதமர் மோடி எப்படி திருக்குறளை படிக்கிறாரோ அதேபோல தவறான உச்சரிப்புடன் தமிழில் பேசினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதை மிகப் பெரிய குறையாக சொன்னார்.
நாங்கள் சாமானியர்களாக கேட்கும் கேள்வி என்னவென்றால், தமிழகத்தில் மரபு எப்போதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம். இதைக் கூட புரிந்துகொள்ளாதவராக ஆளுநர் இருக்கிறார். அல்லது வேண்டுமென்றே சட்டமன்றத்தின் மாண்பை சிதைப்பதற்காக இப்படிப்பட்ட செயலை ஆளுநர் செய்திருக்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அவரின் ஒப்புதலோடுதான் ஆளுநர் உரை முடிவுக்கு வந்திருக்கிறது.
ஒப்புதல் பெறப்போகும்போதே இது எனக்கு பிடிக்கவில்லை, இதை நான் படிக்க மாட்டேன் என்று கூறியிருக்கலாம். ஆனால், ஒப்புதல் அளித்துவிட்டு இங்கே வந்து நாடகம் அரங்கேற்றம் செய்கிறார். தெலங்கானாவில் எப்படி ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்தினார்களோ அதேபோல இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற அவலங்களுக்கு முதல்வர் இடம் கொடுக்கக் கூடாது. ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார். அவரை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
|
“உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் நியாயமில்லை” - அன்புமணி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 13:50:00 |
சென்னை: "தமிழக அரசு - ஆளுநர் மோதல் தொடரக் கூடாது; தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஆளுநரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதேதான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுநர் அலுவலகத்துக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும். இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
|
“தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 13:41:00 |
சென்னை: "தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் ஆளுநர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “கேரள ஆளுநர் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார். தமிழக ஆளுநர் அரசின் உரையில் இருந்து ஒருவார்த்தை கூட பேசாமல், சொந்தமாக சில கருத்துகளை கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் நமது மரபு என்பதை கடந்தாண்டே சபாநாயகர் அப்பாவு விளக்கமாக எடுத்துச் சொல்லிவிட்டார்.
தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் ஆளுநர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தனக்கு எழுதிக்கொடுத்த உரையில் எதாவது சந்தேகம் இருந்தால் ஆளுநர் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டால் விளக்கம் சொல்ல தயாராக உள்ளோம். தமிழ்நாடு அனைத்திலும் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம், அதை தாங்கிக் கொள்கின்ற சக்தி ஆளுநருக்கு இல்லை என்பதைதான் இது காட்டுகிறது.
தமிழகம் இன்றைக்கு இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், படிக்க மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை வாசிக்க விருப்பமில்லாமல் பொய்யான கருத்துக்களை பரப்பியுள்ளார். அதனால் தான் இன்றைக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் எழுந்திருக்கிறது.
அரசு எழுதிக்கொடுத்த உரையை ஒப்புக்கொண்டுதான் வந்தார். மனசாட்சிக்கு விரோதமாக இருந்தால் வராமல் இருந்திருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஆளுநர் என்கிற அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று மதிப்பு கொடுக்க கூடிய முதல்வர் தமிழகத்தில் இருக்கிறார் என்கிற காரணத்தால் தான் இன்றைக்கு இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் நாம் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று சொன்ன ஆளுநர், சபாநாயகர் உரையை முழுமையாக படிக்கும்வரை அங்கேயே இருந்தார். எனினும், இன்னும் இரண்டு நிமிடம் பொறுத்திருக்காமல் தேசிய கீதத்தை மதிக்காமல், தனக்கான உரிய மரியாதையை ஏற்காமல் வேகமாக சென்றுவிட்டார். சபாநாயகர் குறிப்பிட்ட சவர்க்கர், கோட்சே வார்த்தைகள் அவைகுறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகரே தெரிவித்துவிட்டார்.
ஒன்றிய அரசுக்கு எதிரான அரசுகள் ஆட்சிபுரியும் மாநிலங்களை இதுமாதிரி ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அசிங்கப்படுத்துகிற சூழலை உருவாக்குகிறார்கள். ஆனால் மக்கள் அப்படிச் செய்ய விட மாட்டார்கள். எங்களை யார் அசிங்கப்படுத்த நினைக்கிறார்களோ அவர்களை மக்கள் அசிங்கப்படுத்துவார்கள்.
முன்பு, தெலங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் செய்தது. நாங்களும் நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். ஆனால், ‘ஆளுநருக்கு மரியாதையை கொடுத்து அந்த உரையோடு தொடங்க வேண்டும். ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை உள்ளவர்கள்’ என்று தமிழக முதல்வர் சொன்னதன் காரணமாக ஆளுநர் உரையோடு தொடங்கப்பட்டது.
சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், ஆளுநர்கள் எல்லாம் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதுபடி தான் ஆளுநர் இயங்க முடியும். அவரால் சுயேட்சையாக இயங்க முடியாது.
அதிமுக ஆட்சியில், ஆளுநரின் உரையில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டிருக்கும். அதையெல்லாம் ஆளுநர் வாசித்திருப்பார். ஆனால் இந்த ஆட்சியின் ஆளுநர் உரையில் இந்த அரசாங்கம் என்றே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். முதல்வர் பெயரே மூன்று இடங்களில் தான் இருக்கும். அப்படியிருக்கிற இந்த உரையை படிக்க ஆளுநருக்கு மனமில்லை. நாங்கள் மரியாதையுடன் ஆளுநரை அழைத்தோம். ஆனால் ஆளுநர் அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை இன்றைய சட்டப்பேரவை நிகழ்வைக் கொண்டு ஆளுநர் தொடர்பான வழக்கில் எங்கள் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்பார்கள்.
அதிமுக ஆட்சிக்கு நடந்தபோது அவர்களுக்கு டெல்லி அன்று சாதகமாக இருந்தது. நினைத்ததை சாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும், ஒன்றிய அரசிற்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால், சாதகமான சூழ்நிலை இல்லை என்றாலும்கூட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநரோடு அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார், ஆனால் ஆளுநர் போக விரும்பவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்.
தமிழகத்தில் தான் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருகின்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் உருவாக்கி இருக்கின்றார் என்றால், அதற்கு இங்கு நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை தான் காரணம்” என்றார்.
|
“பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை” - மரபு மீறல் புகார்களுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 13:13:00 |
சென்னை: ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “பிப்.13,14 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெறும். பிப்.15ஆம் தேதி விவாதத்துக்கான பதிலுரை வழங்கப்படும். பிப்.19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், பிப்.20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து 21,22ஆம் தேதிகளில் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறும். 22ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்.
ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பேரவை விதி 176(1)ன் படி சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கும்போது, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அடுத்து ஆளுநர் உரை, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். ஆளுநரை அழைத்து சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள். ஆனால் கொள்கை, சித்தாந்த ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மரபை கடைபிடித்து வருகிறோம். ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியும் இல்லை.
ஆனால் ஆளுநர் முதல் பத்தியையும், கடைசி பத்தியையும் மட்டும் வாசித்துவிட்டு நிறுத்திவிட்டார். நாம் தமிழ்நாடு முழுவதுமே முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுகிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தை விட தேசப் பற்றாளர்களோ, சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களோ எங்கு இருக்கிறார்கள்? சிப்பாய் கழகம் வேலூரில் தான் நடந்தது.
ஆளுநர் உரையில் எந்தெந்த இடத்தில் குறைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதற்கு பதில், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என்றால் எப்படி? மிகப்பெரிய இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இங்கே ஒரு மரபு உள்ளது. அதை ஏன் மாற்ற வேண்டும்? என்று பேசினார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
|
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபியின் தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்றம் | எஸ். நீலவண்ணன் | விழுப்புரம் | 2024-02-12 13:03:00 |
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.20,500 அபராதமும், புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இருவரும் தனித் தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த பிப். 1-ம் தேதி முதல் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிமன்றம் அளித்த 5 நாட்கள் கால அவகாசத்தின் படி பிப். 7-ம் தேதி தனது வாதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அரசு தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து அரசு தரப்பு வாதம் தொடங்கியது.
அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அளித்த வாதத்துக்கு பதிலளிக்கும் விதமாக அரசு தரப்பு வாதத்தை முன்வைத்து நிறைவு செய்தார். இதையடுத்து பிப். 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (பிப்.12) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போல் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கீழமை நீதிமன்ற வழங்கிய தீர்ப்பையும் உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்துள்ளார்.
|
“ஆளுநர் மரபை மீறவில்லை; சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 12:58:00 |
சென்னை: "ஆளுநர் மரபை மீறவில்லை. சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்." என்று பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டமன்றத்துக்கு வெளியே, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “நாங்கள் முறைப்படிதான் நடந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டு, சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தி சபாநாயகர் சபையில் இல்லாத மரபுகளை செய்திருக்கிறார். புதிதாக அறிமுகம் செய்கிறார். சபாநாயகர் பேச்சை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்திருக்க முடியும். முறைப்படி நடக்கின்ற கூட்டம் என்பதால் வெளிநடப்பு செய்யவில்லை. எனினும், சவர்க்கர் மற்றும் கோட்சே பெயரை குறிப்பிட்டு பேசியதை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநர் ரவி மரபுப்படி நடந்துகொண்டார். சபாநாயகர் மரபை மீறி நடந்துகொண்டதால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறினார். நாங்களும் வெளிநடப்பு செய்திருக்க முடியும். ஆனால் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை. ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவைகுறிப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும், சபாநாயகருக்கு உரிமையுள்ள அவையில் அவர் சொல்வதே தீர்ப்பு என்பதால் ஆளுநர் பேச்சு இடம்பெறவில்லை.
அரசு தனது திட்டங்களையும், கொள்கைகளையும் அரசின் உரையாக எழுதி கொடுப்பதை ஆளுநர் வாசிக்க வேண்டும். அதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் உரையில் குறைகள் இருப்பின் அவற்றில் திருத்தம் செய்ய ஆளுநர் கூறுவார். ஆனால், ஆளுநர் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாததாலும், சபாநாயகர் சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தியதாலும், சபை மரபை மீறி நிதி தொடர்பான கோரிக்கை வைத்ததன் காரணமாக ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
அரசின் உரையை முழுமையாக வாசித்து முடித்தபின் தேவையில்லாத வார்த்தைகளை பேசியதால் தான் ஆளுநர் எழுந்து சென்றார். சபாநாயகர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் ஆளுநர் முழுவதுமாக இருந்திருப்பார். ஆளுநர் உரையில் வெள்ளம் குறித்து பேசியிருந்தும், உரை முடிந்த பின் தேவையில்லாமல் பேசியதால்தான் முரண்பாடு. எந்த மாநிலத்திலும், எந்த சபாநாயகரும் இப்படி நடந்துகொண்டதில்லை. ஆளுநர் மரபை மீறவில்லை. சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி பிரச்சினையை சரி செய்துவிட்டார்கள். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கேட்டது முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது. ஆளுநர் கேட்டதில் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார்.
|
“ஆளுநர் உரை ஊசிப் போன உணவுப் பண்டம்” - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 12:17:00 |
சென்னை: எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத திமுக அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை ஆளுநர் உரையில் வாரி இறைத்திருக்கின்றது. திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்வரும் ஆண்டில் ஆளும் அரசு என்னென்ன நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்க உள்ளது என்பதை சுருக்கமாக கூறுவதுதான் மரபு. ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில், எந்தவிதமான குறிப்பும் இல்லை. இந்த அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இல்லை. எனவே இந்த விடியா ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்த ஆளுநர் உரை உள்ளது. எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை வாரி இறைத்திருக்கின்றது.
எனது ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்வது மட்டுமல்லாமல். ஆளுநரைக் கொண்டு தடவிக் கொடுக்கச் செய்வது வெட்கக் கேடானது. சுருக்கமாக, திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம்” என்றார்.
பின்னர் ஆளுநர் 4 நிமிடத்திலேயே உரையை முடித்துக் கொண்டது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், “அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்சினை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் எதிர்க்கட்சி. சபாநாயகர் அப்பாவு பலமுறை சட்டப்பேரவை மரபுகளை கடைபிடிப்பதில்லை. இனியாவது அவற்றை சபாநாயகர் கடைபிடிப்பார் என்று நம்புகிறேன். அவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைபட்சமாக நடக்கின்றபோது, என்ன செய்வதென்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
|
தேசிய கீத சர்ச்சை | “தமிழக சட்டப்பேரவை எப்போதும் மரபுகளைப் பின்பற்றுகிறது” - ஆளுநருக்கு சபாநாயகர் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 11:58:00 |
சென்னை: தேசிய கீதம் குறித்து ஆளுநர் புகார் தெரிவித்த நிலையில் சட்டப்பேரவையின் மரபுகள் குறித்த சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
முன்னதாக, சில நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய ஆளுநர் ரவி, தனது உரையின்போது, "நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும்." என்றார்.
ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் தேசிய கீதம் குறித்து அவையில் ஒரு கருத்தை கூறினார். அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டே எனக்கு ஆளுநர் கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது.
இன்றைய நிகழ்வில் ஆளுநர் உரை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறைவேற்ற ஆளுநர் இன்று பேரவைக்கு வருகை தந்தார். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிவின்போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது என்பதை கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்றார். பின்னர், சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது.
|
“சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல...” - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 11:41:00 |
சென்னை: “சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “ஆளுநர் உரைக்கு முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. ஆளுநரை முறைப்படி அழைத்துவந்தோம். தமிழக அரசின் உரையை வாசிப்பதற்காக இந்த அவைக்கு ஆளுநர் வருகை தந்தார். வந்த இடத்தில் குறைவாக வாசித்தார். அதை குறையாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தேசிய கீதத்தை முதலில் பாடியிருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சொன்னார்கள். எல்லோருக்கும் நிறைய கருத்துக்கள் உண்டு. அவற்றையெல்லாம் பேசுவது மரபல்ல.
இந்த அரசு, முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாறுபட்ட கருத்துகள், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும். உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் தமிழக அரசின், முதல்வரின் பண்பு. அதில் மாற்றமில்லை. ஆளுநர், அவர் மனதில் இருப்பதை சொன்னார்.
ஆளுநரை நான் அன்போடு கேட்பது இது தான். எங்கள் மனதில் இருப்பது என்னவென்றால், "எவ்வளவோ பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் "PM care fund"-ல் உள்ளது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாமே. சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சை தொடர்ந்து ஆளுநர் உரையை பதிவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் கிளம்பும்போது, “தேசிய கீதம் இனிதான் பாடுவார்கள்” என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு. எனினும், ஆளுநர் நிற்காமல் அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
|
“அரசின் உரையுடன் உடன்படவில்லை” - தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன? | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 11:12:00 |
சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவையில் சில நிமிடங்கள் அவர் பேசிய விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் பேசிய அந்த சில நிமிடங்கள்.. அவை கூடியவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி. 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி” என்று கூறி தனது உரையை முடித்தார்.
அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்கும் நேரத்தில், உரையைப் புறக்கணித்த ஆளுநர் ரவி, அவையிலேயே இறுக்கத்துடன் அமர்ந்திருக்கிறார். அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு முன்னரே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
|
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி புறக்கணித்ததால் சலசலப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 10:32:00 |
சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை தொடங்கியது. அப்போது, தமிழில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது அவர், “தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உரையைப் புறக்கணித்தார். அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார்.
திருக்குறளுடன் தொடங்கினார்..பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. என்ற திருக்குறளை கூறி ஆளுந ரவி உரையை தொடங்கினார். பின்னர் தேசிய கீதம் குறித்த குற்றச்சாட்டை கூறி சில நிமிடங்களில் உரையை முடித்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிப்பாரா, புறக்கணிப்பாரா என முன் கூட்டிய விவாதங்கள் எழுந்த நிலையில் பரவலாக பேசப்பட்டது போலவே ஆளுநர் அரசு தயாரித்த உரையைப் புறக்கணித்துள்ளார்.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
இந்தச் சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது உறுதியானது. பேரவை தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் மாளிகைக்கு சென்று, பேரவை கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
|
ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:28:00 |
சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதநிலையில், அக்கட்சியின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி என்றழைக்கப்படும் மறைந்த மூத்த தலைவர் ம.சிங்கரவேலரின் 78-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான தொகுதி பங்கீடு என்பது இருக்காது. மாநிலங்களுக்கு ஏற்ப அது மாறுபடும். கட்சிகளுக்கு இடையே பரஸ்பர போட்டிகள் இருக்கும். இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது அல்ல. யார் வெற்றி பெறக்கூடாது என்பதே ஆகும்.
தமிழகத்தில், திமுக சார்பில் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. சில கட்சிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை இன்னும் நடக்கவில்லை. எனினும் வரும் 12, 13-ம் தேதிகளுக்கு பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விரைந்து உடன்பாடுகள் ஏற்படும். கூட்டணி பங்கீடுகளில் பெரியளவில் பிரதிவாதங்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை.
ஏற்கெனவே கட்சிகளுக்கு இடையே கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எளிய முறையில் உடன்பாடுகள் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவுஇல்லாத நிலையில், அக்கட்சியின் பாஜகதேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகைஎந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
|
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியின்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-12 06:15:00 |
சென்னை: கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மயிலாப்பூர் டிசில்வா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தயாள சுந்தரம் (44). மருத்துவரான இவரது மகன் ரியான் (11).இவர் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டியதால் பெற்றோர் ரியானை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் நடைபெற்றுவரும் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் சேர்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மைதானம் அருகே தரை வழியாக பாதுகாப்பற்ற முறையில் சென்றதாக கூறப்படும் ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் ரியான் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து சைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்து மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரியான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்துசைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவன் இறந்த ஒய்எம்சிஏ மைதானத்தில் வார இறுதி நாட்களில் பிரம்மாண்டமான முறையில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் தாக்கி ரியான் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
|