Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:47:00 |
சென்னை: பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட காக்கி சீருடை அணியும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் நினைக்கிறார்கள். ஒரு சாமானிய மனிதர்நினைத்தால்தான் அரசியல் சுத்தமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பெய்யும் மழையின்போது கொளத்தூர் மக்கள் 8 நாட்கள் தண்ணீருக்கு உள்ளேயே இருக்கிறார்கள். மழை பெய்தால் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. குண்டும் குழியுமான சாலைகளாக இருக்கிறது. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சென்னையில் போதுமானதாக இல்லை.
மோடியை போன்ற சாமானிய மனிதர் ஆட்சிக்கு வரும்போது, இந்தியாவும் வளரும், ஓவ்வொருமாநிலமும் வளரும். 10 ஆண்டுஆட்சியில் ஒரு குண்டூசியை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக்கூட மோடி அரசு மீது வைக்க முடியாது.
இந்தியாவில் பாஜக எம்பிக்கள் உள்ள தலைநகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 3 தொகுதிகளில் திமுக குடும்ப ஆட்சி மட்டுமே நடப்பதால், அவர்களுக்கு சாமானிய மனிதனின் வலி தெரிவது இல்லை.
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது. திமுக ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவு நிதி தமிழகத்துக்கு கொடுத்தாலும், அது சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நிதியாக மாறுவதில்லை. தமிழக மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். எனவே, பாஜகவின் தொலைநோக்கு பார்வை உடைய எம்.பி.க்கள் தமிழகத்துக்கு வேண்டும்.
மற்ற ஊர்களில் வெளியூர் செல்வதற்கு பேருந்து ஏறுவோம். ஆனால், சென்னைக்காரர்கள் வெளியூர் செல்வதற்கு, வெளியூருக்கு போய்தான் பேருந்து ஏறவேண்டும். சென்னையில் வாழ மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முழுமையாக சென்னை மாநகரை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். உலகத்தரம் வாய்ந்த சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்றால் மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: அண்ணாமலையின் நடைபயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை மேற்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஜெ.டில்லிபாபுதலைமையில், திரு.வி.க. நகர்பேருந்து நிலையம் அருகே கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, இமயா கக்கன், மாநில செயலாளர்கள் அகரம் கோபி, மோகன் காந்தி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
‘மத்திய அரசிடம் நிதி பெற இணைந்து குரல் கொடுங்கள்’ - பேரவையில் பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:40:00 |
சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசிடம் நிதி பெறஎங்களுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தொடர்பானஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:
மோனோ ரயிலுக்கு ஆதரவாக கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதை செயல்படுத்த ஆட்சியில் இருந்த வரை நீங்கள் முனைப்பு காட்டவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கி, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
நான் முதல்வர் ஆனது முதல் பிரதமரை சந்தித்த போதெல்லாம், மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறேன். 6 நாட்களுக்கு முன்புகூட பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கான மத்திய அரசின் நிதியை இதுவரை தராததால், மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனில் இருந்தும் மட்டுமே முழு தொகையும் செலவிடப்பட்டுள்ளது.
இதுவரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் இப்போதாவது பேசுவது ஆறுதல் தருகிறது. மத்திய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து அவர் குரல் கொடுக்க வேண்டும்.
முக்கிய கோரிக்கைகள்: அதேபோல, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா, நிதி ஒதுக்கப்பட்டதா என்ற விவரங்களை அவர் கேட்டுள்ளார். தங்கள் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கியகோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்புமாறு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடந்த 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் எழுதினேன்.
ரூ.11,132 கோடி: அதன் அடிப்படையில் பெறப்பட்ட பணிகள், எனது தலைமையில் கடந்த 2023 அக்டோபர் 7-ம்தேதி நடந்த உயர்நிலை குழுகூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதிவழங்கப்பட்டது. அதில் 582 பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, அதில், 63 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடந்து வருகின்றன. மற்ற பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் தனது தொகுதி தொடர்பாக அளித்ததில்,நடப்பு ஆண்டில் 5 கோரிக்கைகள் எடுக்கப்பட்டு, அதில் 3 கோரிக்கைக்கு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஒருபணி முடிக்கப்பட்டு, 2 பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய 2 பணிகளுக்கு அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
|
‘மக்களுடன் முதல்வர்’ திட்ட விழா | 1,598 பேருக்கு பணி நியமன ஆணை: நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:30:00 |
சென்னை: ‘மக்களுடன் முதல்வர’ திட்டத்தின்கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில்,1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலர்களைத் தேடிச்சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்றுகுறை கேட்டுத் தீர்த்து வைக்க விரும்பினார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை கோவையில் கடந்தாண்டு டிச.18-ல் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசால் 13 அரசுத் துறைகள் மூலம் மக்களுக்குப் வழங்கப்படும் சேவைகள் அடிப்படையில், அந்தத் துறை அதிகாரிகளுடன் இத்திட்டத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 35 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணி, கால்நடைப் பராமரிப்பு, நீர்வளம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 பேருக்கு பணி நியமனஆணைகளையும் வழங்குகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
|
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை | செய்திப்பிரிவு | பழநி | 2024-02-16 06:25:00 |
பழநி: பழநி அருகே 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டுள்ளது. பழநி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர்கள் தங்கம், ராஜேஸ்வரி தலைமையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந்தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, காட்டாறாக சிலகி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற்றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட்டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணையின் சிதைந்துபோன இடிபாடுகளில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடுகிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக்குளத்திலும் கலப்பதால் அப்பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துகிறது.
ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம்இந்த தடுப்பணையில் அமைக்கப்பட்ட மதகுகள் மூலம் 3 குளங்களையும் நிரப்பிவிட்டு, இறுதியாக சண்முகநதியில் கலக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட்டாற்று வெள்ளம் தடுப்பணையையும், மதகுகளையும் உடைத்தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்தமானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10-ம்நூற்றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப்பணை கி.பி.10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.
இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது. அணையின் மேற்புறம் காரைப் பூச்சு உள்ளது. பூச்சு விலகாமல் இருக்கவும், கரையின் மேற்புறப் பிடிமானத்துக்காகவும் இரும்பைக் காய்ச்சி ஊற்றிய தடயம் தென்படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம்.
இந்த தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
|
ரயில் ஓட்டுநர்கள் சென்னையில் உண்ணாவிரதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:20:00 |
சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் (ரயில் ஓட்டுநர்கள்) சங்கம் சார்பில், சென்னை, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 5 கோட்டங்களில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை போராட்டத்தில் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
பவானி ஆற்றில் உயிரிழப்பு குறித்த சர்ச்சை வீடியோ: இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-16 06:17:00 |
கோவை: பவானி ஆற்றில் உயிரிழப்பு குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக, நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் பாக்யராஜ் சில தினங்களுக்கு முன் தனதுஎக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், "மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல. ஆற்றில் குளிப்பவர்களை நீருக்குள் இருக்கும் சில மர்ம நபர்கள் காலைப் பிடித்து இழுத்து மூழ்கடித்து, பாறை இடுக்கில் அவர்களது உடலை சொருகிவிடுகிறார்கள். பின்னர், பணத்தைப் பெற்றுக் கொண்டு, சில மணி நேரங்கள் தேடி உடலை மீட்டுத் தருகின்றனர். பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்ட அறிக்கையில், "இதுபோன்ற தகவல்கள் தவறானவை. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டுச் சங்கச் செயலர் மஸ்தான் என்பவர், மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் நேற்றுமுன்தினம் அளித்த மனுவில்கூறியிருப்பதாவது:
இயக்குநர் பாக்யராஜ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றைச் சுற்றியிருப்பவர்களை பற்றிப் பேசியுள்ளார். இவர் தெரிவித்த பொய்யான செய்தி, தமிழகம் முழுவதும்பரவி விட்டது. பாக்யராஜ் குறிப்பிட்டதுபோல, இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக போலீஸார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அவர் குறிப்பிட்டதுபோல பவானி ஆற்றில் செய்யவும் முடியாது.
மேட்டுப்பாளையம் பகுதி மக்களில் சிலர், காசுக்காக கொலை செய்கிறார்கள் என்று அவதூறு பரப்புவதாக அவரது தகவல் அமைந்துள்ளது. பவானி ஆற்றில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மீட்புப் பணிகளுக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்கிறார்கள். அந்தப் பணிகளில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாக்யராஜின் பேச்சு உள்ளது. எனவே, வதந்தி பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
|
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 3 மாதங்களில் 6,500 கடைகளுக்கு ‘சீல்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:15:00 |
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமைசென்னை நந்தனத்தில் நடத்தின.இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் இளைஞர்கள் நல விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது:
புற்றுநோய் பரிசோதனை திட்டம்: தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்படுத்துதல், அவற்றால் ஏற்படும் புற்றுநோய்பாதிப்புகளை தடுத்தல் போன்றபணிகள் நடந்து வருகின்றன.ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில் 54 லட்சம்பேருக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, தோல்பதனிடுதல், சாய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நான்கரை லட்சம் பேருக்கு புற்றுநோய்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்படுவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
தலைமை தேர்தல் ஆணையர் பிப்.23-ல் சென்னையில் ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:12:00 |
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பிப்.23ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறது. இரண்டு நாட்கள் இந்த குழுவினர் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், காலை 11.30முதல் பிற்பகல் 1 மணிவரை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி, அவர்களின் பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுகின்றனர். தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலிவாயிலாகவும் அந்தந்த மாவட்ட தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
மறுநாள் 24-ம் தேதி காலை, 9 முதல் 11 மணிவரை தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்கள் மாநிலங்களின் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை, வருமான வரி, வருவாய் புலனாய்வு, போதைப் பொருள் தடு்ப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, அன்று மாலையே டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
|
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:08:00 |
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்நாடு முழுவதும் 29,009 பள்ளிகள்இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
முதல் நாளில் ஒவியம் உட்படகலை மற்றும் தொழிற் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு மையத்தில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. செல்போன் உட்பட மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், மாணவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் 23-ம்தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வை சுமார்39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும். இவ்வாறு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
முதல்வரின் பதில் உரையை கவனித்திருந்தால் ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கான உத்தி தெரிந்திருக்கும்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ரகுபதி பதில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:07:00 |
சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேரவையிலும், நேற்றுபேரவைக்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதும், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை விவரம், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்தி உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல்வேறு கருத்துகளைத் தெரி வித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ரகுபதி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு நிர்வாகம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கையை பொதுப் பார்வைக்கு வைக்கவேண்டியதில்லை என்பது முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா? நீட் தேர்வு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் போன்ற குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளப் பாதிப்பு செலவினவிவரத்தை ஒரு மாதத்துக்குள்ளாக எப்படித் தர முடியும்? பல பணிகள் தொடர் செலவினமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, செலவு எவ்வளவு என்று முதல்வராக இருந்த ஒருவர் கேட்கிறார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதில் உரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம். தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக குறைந்துவிட்டது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழகம் 3-வது இடத்துக்கு உயர்த்தப்பட்டது. இப்படி பட்டியல் போட்டு முதல்வர் சொல்லியிருக்கிறார். இவைதான் உத்திகள்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அதிமுக எம்.பி.க்கள்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் பல நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
காவிரிக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உங்களிடம் கோரிக்கை வைத்தபோது, ‘‘ஆந்திரா பிரச்சினை வேறு. நமது கோரிக்கை வேறு’’ என பாஜகவுக்கு ஆதரவாகத்தானே பதில் சொன்னீர்கள்?
மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்றிய விவரத்தை 2022-ம்ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி இருக்கிறது. படிப்படியாக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்.
சேது சமுத்திரத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்றவை மத்தியஅரசின் கட்டுப்பாட்டியில் உள்ளவை. அங்கு இண்டியா கூட்டணி அமைந்தால்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
|
நீர்நிலையில் கட்டிடம் கட்டுவது தொடர்கிறது: பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வேதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:06:00 |
சென்னை: மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னையில் நீர்நிலைப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் நிலை தொடர்ந்து வருவதாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். கேர் எர்த் டிரஸ்ட் மற்றும் நாட்வெஸ்ட் குழு சார்பில் ‘சென்னையில் காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சிக்கலுக்கான செயல் திட்டம்’என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
கேர் எர்த் டிரஸ்ட் மூத்த ஆலோசகர் எஸ்.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கின் செயல் திட்டத்தை சிறப்பு விருந்தினர்களான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் என்.கிருஷ்ணகுமார் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர்.
கருத்தரங்கில் கிருஷ்ணகுமார் பேசும்போது,‘‘காலநிலை மாற்றத்தால் சென்னையில் அடுத்த 20, 30 ஆண்டுகளில் பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். குறிப்பாக தண்ணீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. கோடை காலங்களில் அதிக வெப்பமும், மழைக் காலங்களில் அதிக மழையும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”என்றார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது: நகரங்களில் அதிக மக்கள் வசிப்பதால் நீர்மேலாண்மை முக்கியமானது. நீர் மேலாண்மையை வைத்துதான் ஒரு சிறந்த நகரத்தை அடையாளப்படுத்த முடியும். சென்னையின் நீர்நிலைகளான கூவம், அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்தி குடிநீர் ஆதாரங்களாக மாற்ற வேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் 30 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்டது. அதில் பூங்காஅமைப்பதால் ஆயிரக்கணக்கான மரங்களை வைக்க முடியும். மேலும் மக்கள் கூடும் இடமாகவும், மக்களின் மன அழுத்தத்தை போக்கும் இடமாகவும் அந்த பூங்கா அமையும்.
மக்கள்தொகை பெருக்கம் காரணமாக சென்னையில் ஏரி நிலங்களில் வீடு கட்டக்கூடிய சூழல் தற்போதும் நிலவி வருகிறது. அதேபோல, சில கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்துக்காக அகதிகளாக மக்கள் இடம்பெயர்கின்றனர். இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
|
கிராமப்புறங்களில் அரசு சார்பில் கடந்த 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் சீரமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:04:00 |
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: நான் முதல்வராக பொறுப்பேற்ற 33 மாதங்களில் பல்வேறு சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-வது இடத்தில் இருப்பது, தேசிய வளர்ச்சி 7.24 சதவீதமாக உள்ள நிலையில் தமிழக வளர்ச்சி 8.19 சதவீதமாக இருப்பது, தேசிய அளவில் பணவீக்கம் 6.65 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 5.97 சதவீதமாக இருப்பது, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலம், மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதல் இடம், தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு முன்னேறியது, கல்வியில் 2-வது இடம், புத்தாக்க தொழில்களில் முதல் இடம், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாக சொல்வது ஆகியவை இந்த ஆட்சியின் 10 சாதனைகள்.
கிராமப்புற மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை, அடுத்த 2 ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், சீரமைக்கவும் ரூ.2,000 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். பெண்கள் 445 கோடி முறை இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள், நகைக்கடன் தள்ளுபடியில் 13.12 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியில் 1 லட்சம் பேர், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு 4.81 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
இதுமட்டுமின்றி, கடந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான மக்களுக்கு ரூ.6,569.75 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளேன்.
இப்படி தமிழகத்தில் ஒவ்வொருவர் இல்லம்தோறும் உதவி செய்வதுதான் திமுக ஆட்சி. ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றி வருகிறோம். மகளிர் உரிமை தொகை, விடியல் பேருந்து திட்டம் மூலம், பெண்களின் சமூக பங்களிப்பு 40-ல் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதவித் தொகை தருவதால் 34 சதவீத மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி, அதன் வழித்தடத்தில் நாம் இயங்குவதால்தான், தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது.
மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளை அதிகம் விவரிக்க விரும்பவில்லை. மாநில முதல்வர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
நாம் சந்தித்த 2 பெரிய இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண தொகை தரவில்லை. 2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்கள் தரப்படுவது இல்லை. தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோக கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ பாராட்டியதாக பெருமிதம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசும்போது, “இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் மட்டுமின்றி, உலகளாவிய பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டை பெறும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைவிட, 2023-ம் ஆண்டு வெள்ள பாதிப்பை திமுக அரசு சிறப்பாக கையாண்டது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பாராட்டியது.
‘கேலோ இந்தியா - சாதித்துக் காட்டிய தமிழ்நாடு’ என்று எழுதியது ‘இந்து தமிழ் திசை’. இப்படி முன்னணி பத்திரிகைகள் பலவும் பாராட்டியுள்ளன” என்று பல்வேறு தமிழ், ஆங்கில நாளிதழ்களின் செய்திகளையும் குறிப்பிட்டு பேசினார்.
|
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா? - ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 06:03:00 |
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் உடல்தகுதி குறித்த 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை என்பதுசம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம் தொடர்பானது என்பதால், அந்த விவரங்களை தாக்கல் செய்யும்படி கோர முடியாது.
ஒருவேளை வேட்பாளர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றால்கூட அதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ‘‘தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதியின் உடல் தகுதி மற்றும் உடல்நிலையை தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. சாதாரண குடிமக்கள் மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை கோரும்போது, வேட்பாளர்களிடம் ஏன் அதை கோரக்கூடாது’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘வேட்பாளர்களுக்கு என்னென்ன நோய்கள் உள்ளது என்பது குறித்து தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அதேநேரம், அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள் உடல் தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றுவதற்கான உடல்தகுதியை பெற்றுள்ளனரா என்பது குறித்து சான்றை பெற்று தாக்கல் செய்யலாம்’’ என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா என்பது குறித்து தேர்தல்ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
|
விடுதலை புலிகள் இயக்கத் தொடர்பு குறித்து விசாரணை: என்ஐஏ-விடம் 1,500 வீடியோக்களை ஒப்படைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:59:00 |
சென்னை: என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர்கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகனிடம் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் யூடியூப் சேனலில் வெளியிட்ட சுமார் 1,500 வீடியோக்களை என்ஐஏஅதிகாரிகளிடம் ஒப்டைத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022-ம் ஆண்டு துப்பாக்கி,தோட்டாக்களுடன் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேர்கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கைதான 2 பேருடன் நாம் தமிழர்கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 6 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.
சிம் கார்டு, பென் டிரைவ்: இந்த சோதனையில் ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தின்தலைவர் பிரபாகரன் தொடர்பானசட்ட விரோதமான புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்பட்டது.
தொடர்பு இல்லை: இந்த 6 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ்சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன்நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணை முடிந்துவெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘`நான் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நான் நடத்திவரும் ‘சாட்டை’ யூடியூப் சேனலின் ஓட்டுமொத்த வீடியோ பதிவுகளை கேட்டனர். 1,500 வீடியோக்களை ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்து கொடுத்துள்ளேன். ஓமலூரில் கைதானவர்களுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆயுத போராட்டம், ஆயுத புரட்சியை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை'’ என்றார்.
சட்ட விரோத நிதி: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் நிதி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
|
“எனது கேள்விக்கு முதல்வர் உரையில் பதில் இல்லை” - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:57:00 |
சென்னை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய திட்டங்கள் என்ன என்பது உள்ளிட்ட எனது கேள்விகளுக்கு முதல்வர் உரையில் எந்த பதிலும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அதிமுக சார்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தேன். அவற்றுக்கு முதல்வரின் உரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. நான் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, எந்தெந்த தேதியில் அரசாணை வெளியிடப்பட்டது, எத்தனை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன்.
அதேநேரம், திமுக அரசு அமைந்து 33 மாதங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள், அவற்றின் அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களின் பட்டியல், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் முழுமையாக தீர்வு காணப்பட்ட மனுக்கள், மிக்ஜாம் புயல், தென்மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஆகியவற்றின்போது ஏற்பட்ட செலவினம் உள்பட நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் இல்லை.
மேலும், 520-க்கும் மேற்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய்யை முதல்வரும், அமைச்சர்களும் சொல்கின்றனர்.
காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதுவரை அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என கூறிவிட்டு, வீட்டு வரி,மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். திமுக ஆட்சிஅமைந்த பிறகு என்ன புதிய திட்டங்களைக் கொண்டு வந்தனர். அதனால் மக்கள் என்ன பயன்பெற்ற னர் என தெரிவிக்கப்படவில்லை. நிதி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெற வேண்டியதுதானே, அதற்கு நாடாளுமன்றத்தில் என்ன குரல் கொடுத்தீர்கள். மேகேதாட்டு விவகாரத்தில் ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறார்கள்.
தற்போது பாஜகவை எதிர்க் கிறோம் என முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரை, கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதகமானவற்றை ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்ப்போம். எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள்தான். திமுகவைப்போல பதவிக்கும் அதிகாரத்துக்கு அடிமையாக இருந்தது கிடையாது. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.
|
சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:56:00 |
சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மறு நிர்ணயம் செய்ய பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு செயல்பாட்டில் உள்ளது.
கடந்த 2023-24 தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழகத்தில் சொத்துகளுக்கான மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதால், வழிகாட்டி மதிப்பீட்டையும் உயர்த்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதுஎன்றும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்யகாலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017-ம் ஆண்டு ஜூன்8 வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதிய வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த 2023 ஏப்.1 முதல் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு மார்ச் 30-ல் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த சுற்றறிக்கையை எதிர்த்து கிரெடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்கான விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகளைப் பெற்று, ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அதன்பிறகே புதிய வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய முடியும். ஆனால், இந்த சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றறிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இது தொடர்பாக கிரெடாய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
|
தேர்தல் பத்திரங்கள் ரத்து தீர்ப்பால் கட்சிகள் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:52:00 |
சென்னை: தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் கட்சிகள் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பை வரவேற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்யும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதுடன், அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேர்தல் பத்திரம் மூலம்நிதி பெறாத கட்சி அதிமுக மட்டும்தான். தேர்தல் நிதி பத்திரம் போன்றவற்றை தடுத்தால்தான் எங்களைப் போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். இவர்கள் கொள்ளையடிப்பது மட்டுமின்றி, பத்திரம் மூலமாகவும் நிதியைத் திரட்டி எங்களைப் போன்றவர்களை ஒடுக்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் 2018 முதல் 2022 வரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9,208 கோடி. இதில் பாஜக மட்டுமே ரூ.5,270 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை மனதார வரவேற்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தேர்தல் பத்திரத் திட்டம் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் எந்தஅரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை தெரியவரும். இவ்வழக்கில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி, அடுத்து வரும் பொதுத்தேர்தலில் அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டமாகும்.
திக தலைவர் கி.வீரமணி: தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், பாஜகவின் தேர்தல் வெற்றி, வித்தைகளின் ரகசியம் வெளிச்சத்துக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்கும். நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என்றும் பெருமை கொள்கிறோம். தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை கொண்ட பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி.
தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை: உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைவழங்கியுள்ளது. மக்களின் வரிப்பணம் எந்தெந்த தொழிற்சாலைகளின் கடன் தள்ளுபடிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்கிற உண்மை வெளியே வரப் போகிறது. இந்த சிறப்புமிக்க தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
|
வார கடைசி நாட்களையொட்டி இன்று 750 சிறப்பு பேருந்துகள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:47:00 |
சென்னை: இறுதிநாட்களையொட்டி, இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் சனி (பிப்.17), ஞாயிறு(பிப்.18) விடுமுறை நாட்கள் என்பதாலும், திங்கள்கிழமை முகூர்த்த நாள் என்பதாலும் இன்று (பிப்.16) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு இடங்களுக்கு: இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள 9,679 பேர் முன்பதிவுசெய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதைக்கருத்தில்கொண்டு, தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணா மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகை,வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளூரு ஆகிய இடங்களுக்கும் இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்புபேருந்துகளும், பெங்களூரு விலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 750 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அலுவலர்கள்: மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்துநிலையங்களிலும் போதிய அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
|
கூட்டு மதிப்பு அடிப்படையிலான பதிவால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு பாதிப்பில்லை: பதிவுத் துறை செயலர் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:45:00 |
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு மதிப்பு அடிப்படையில் பதிவு செய்வதால், வாங்குவோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறையால் கடந்தாண்டு டிச.1-ம் தேதி முதல், அடுக்குமாடி குடியிருப்புகள் கிரையப் பதிவுகள் தொடர்பாக, கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து பதிவுத்துறை செயலர் வெளியிட்ட விளக்கம்:
கடந்தாண்டு டிச.1-ம் தேதிக்கு முன்வரை, அடுக்குமாடி குடியிருப்புகளின் பிரிக்கப்படாத அடிமனை பாகம் மட்டும் தனி கிரையஆவணமாகவும், கட்டுமான உடன்படிக்கை தனி ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டு வந்தது.
பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பை பிரிக்கப்படாத பாகஅடிமனை மற்றும் அதன் மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடம் இரண்டையும் சேர்த்தே கிரையம் பெற்றாலும், கட்டிடத்தின் கிரையத்துக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் 9 சதவீதத்தைத் தவிர்க்கும் ஒரே நோக்கில் அவர்கள் வாங்கும் கட்டிடம் கிரைய ஆவணமாக பதியப்படாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகவும், பிரிக்கப்படாத பாக அடிமனை மட்டும் கிரைய ஆவணமாகவும் தனித்தனியாக பதியப்பட்டு வந்தது.
இத்தகைய இரட்டைப் பதிவின்காரணமாக கட்டிடத்தைப் பொறுத்து அதனை வாங்குபவர்களுக்கு முழுமையாக சட்டப்பூர்வ உரிமை கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், கூட்டு மதிப்பு நடைமுறை அமலுக்கு வந்த டிச.1-ம் தேதிக்கு முன், பதிவான பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிடங்களைப் பொறுத்தவரை அவை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படவில்லை.
இதனால் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியிருந்தாலும், கட்டிடங்களைப் பொறுத்து சட்டப்பூர்வமான முழுமையான உரிமைவாங்கியவர்களுக்கு இல்லாமலேயே இருந்து வருகிறது.
கட்டுமான உடன்படிக்கை ஆவணத்தை மட்டும் முன் ஆவணமாகக் கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பை மறுகிரையம் செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு பதிவுத்துறையில் கடைபிடிக்கப்பட்டு வந்ததால் இதனை சாதகமாக்கிக் கொண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வைமற்றும் பதிவுக் கட்டணத்தைக் குறைத்து செலுத்தும் ஒரே நோக்கில் கட்டிடத்துக்கு கிரைய ஆவணம் செய்யப்படாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகவே கட்டுமான நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்து கூட்டு மதிப்பு நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள கூட்டு மதிப்பு நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முதன்முதலில் கட்டுமான நிறுவனங்களால்தான் தமிழக பதிவுத் துறைக்கு வைக்கப்பட்டது.
டிச.1 முதல் நடைமுறை: எனவேதான் பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடத்துக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே கிரைய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை டிச.1-ம் தேதி முதல் கொண்டுவரப்பட்டது.
இந்த நடைமுறையால், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கு பிரிக்கப்படாத பாக அடிமனை மற்றும் கட்டிடம் இரண்டின் மீதும் சட்டப்பூர்வ உரிமைகிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு மதிப்பானது அந்தந்த பகுதிகளில் உள்ள நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் முழுமையான விசாரணைக்குப் பின்னரே நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. இப்பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால் அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுவதாக பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின், கடந்த பிப்.13-ம் தேதி வரைகூட்டு மதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் 1,988 கட்டுமான குடியிருப்பு விக்கிரைய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்படுமா? - சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என முதல்வர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:40:00 |
சென்னை: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பேரவையில் முதல்வர் நேற்றுதனது பதிலுரையில் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்’ என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.
|
தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: சட்டப் பேரவையில் அமைச்சர் பிடிஆர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:35:00 |
சென்னை: தமிழகத்தின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்தும், மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான வசதிகள் குறித்தும் மேட்டுப்பாளையம் அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்:
கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம், காரமடையில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. எல்காட் நிறுவனம் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இதில் உருவாக்கியுள்ளது. இதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் இடத்தேவையைப் பூர்த்தி செய்ய 2.66 லட்சம் சதுர அடி பரப்பில், தகவல் தொழில்நுட்ப கட்டிட கட்டுமானப் பணிகள் ரூ.114.16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, காரமடையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கெனவே துறையின் அமைச்சராக இருந்தவர், 2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இன்றைய நிலையில், வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறை தகவல் தொழில்நுட்பத் துறைதான். உற்பத்தித் துறையில் முதலீடு செய்தாலும், நிலம் ஒதுக்கவும், கட்டிடம் கட்டவும் 2 ஆண்டுகளாவது ஆகும். ஆனால், ஐடி துறையில் கட்டிடம், இணைய இணைப்பு இருந்தால் உடனே வேலை வாய்ப்பு உருவாகும். அதற்காகத்தான் இந்த துறைக்கு ஊக்கமளிக்க முதல்வர் கூறியுள்ளார்.
சராசரியாக ஆண்டுக்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் சதுர அடி அலுவலக கட்டிடம் கட்டப்பட அல்லது குத்தகை எடுக்கப்படக் கூடிய சென்னை மாநகரில், கடந்தாண்டு சாதனையாக 1.10 லட்சம் சதுரடிக்கான கட்டிடம் ஐடி துறைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
அதே வழியில், எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் திருச்சி, கோயம்புத்தூர், சென்னையில் 3 கட்டிடங்கள் கட்டினார்கள். ஆனால், சென்னை, கோவைக்கு சுற்றுச்சூழல் அனுமதியே வாங்கவில்லை. இதனால் தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் திறக்க முடியாமல் நீதிமன்ற வழக்கில் உள்ளது. கோவையில் அபூர்வமான வளர்ச்சியும், அலுவலக கட்டிடங்களுக்கான அதிகபட்ச தேவையும் உள்ளது. ஆனால், 2.50 லட்சம் சதுரடியில் கட்டிடத்தை கட்டி முடித்துத் திறக்க முடியாமல் உள்ளோம்.
இந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் உள்ள திறமையைப் பயன்படுத்த வரும் தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களைக் கட்டி வருகின்றன. எல்காட் மூலமும் நாம் இட வசதி செய்து தருகிறோம். கோவையில் கட்டிடம் திறக்கப்பட்டால், வேலைவாய்ப்பு உருவாகும். இதுதவிர, அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் எல்காட் பூங்காவோ, எல்காட் டவரோ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
வெள்ள பாதிப்பு, பேரிடர் பாதிப்பு வரும் இடங்களில் அதிக பணி இருக்கக் கூடாது. அதேபோல் ஓர் இடத்தில் 10 ஆயிரம் பேருக்கு பணி என்பதைப் பிரித்து 2 இடங்களுக்கு மாற்றுதல் செய்வது என்பது தற்போது நடைபெறுகிறது. மனித வளம் உள்ள இடங்களில் ஈர்ப்பு உள்ளது. இந்தியாவில் 17 சதவீதம் பொறியாளர்கள் தமிழகத்தில் இருந்துதான் வருகின்றனர். தற்போது சென்னையை விட்டு எப்படி நிறுவனங்கள் கோவையை பார்க்கிறார்களோ அதேபோல், பெங்களூரு மற்றும் ஐதராபாத்திலிருந்து சென்னை, கோவை அல்லது மதுரைக்கு வருகின்றனர்.
இதுதவிர, அனைத்து நாடுகளுக்கும் சென்று ஐடி துறையில் தமிழகத்தில் உள்ள மனித ஆற்றலைக் கூறி முதலீடு செய்ய வரும்படி அழைக்கிறோம். சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். கோவைக்கு இன்னும் பல நிறுவனங்களையும் அழைப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் காலி பெட்டிகள் தடம்புரண்டன | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 05:25:00 |
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி எண்ணெய் கிடங்கிலிருந்து பெட்ரோல் நிரப்பு வதற்காக, காலி சரக்கு ரயில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்போது, எதிர்பாராதவிதாக ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென ரயில் பாதையில் இருந்து விலகி பலத்த சத்தத்துடன் கீழே இறங்கி தடம் புரண்டன.
இதையடுத்து, ரயிலை உடனடியாக நிறுத்தி, சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து ரயில்வே அதிகாரிகளும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணயில் ஈடுபட்டனர்.
இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின்பாலம் இடையே உள்ள பணிமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் டீசல் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டது. இதில், ரயிலின் 3 சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. பணிமனையில் இருந்து இன்ஜினை வெளியே கொண்டு வந்த போது ரயில் இன்ஜின் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதனால், பணிமனையில் இருந்து அடுத்தடுத்து ரயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. பணிமனையில் தடம் புரண்ட இன்ஜின் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. சென்ட்ரல் அருகே அடுத்தடுத்து, நடந்த இரண்டு சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
|
53 ஏக்கர் நிலத்தை மீட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம் | செய்திப்பிரிவு | செங்கல்பட்டு | 2024-02-16 05:19:00 |
செங்கல்பட்டு: தனியார் ரிசார்ட் இயக்குநர் உள்ளிட்டோரால் அபகரிக்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை மீட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கை ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்கள் 20 குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய தலா ஒரு நபருக்கு 2.5 ஏக்கர் வீதமும், வீட்டுமனையாக தலா 10 சென்ட் இடமும் பொது பயன்பாட்டுக்கு ஒரு ஏக்கரும் என மொத்தம் 53 ஏக்கர் நிலம் 1967-ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தனியார் ரிசார்ட் இயக்குநர் உள்ளிட்ட நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து 2007-ம் ஆண்டு நீதியரசர் கே. பி.சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேற்படி விசாரணை ஆணையம் சாட்சியங்களையும் ஆவணங்களையும் விசாரணை செய்து விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் இந்த நிலங்களுக்கு அருகாமையில் உள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்டுள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 2014-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி முடித்து வைக்கப்பட்ட நிலையில் நிலங்களின் ஆவணங்களில் பெயர் மற்றும் நிலவகை மாற்றம் செய்து தமிழக அரசு உடனடியாக நிலமிழந்த சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிலத்தைப் பிரித்து வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத்சிங்தாஸ், திருப்போரூர் வட்ட செயலாளர் எம்.செல்வம், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைசெயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக செங்கல்பட்டு ராட்டினங் கிணறு பகுதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
|
தமிழகத்தில் இன்று 9 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 04:47:00 |
சென்னை: தமிழகத்தில் இன்று 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவவாய்ப்பு உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்சவெப்பநிலை வழக்கத்தைவிட4 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 73 டிகிரி முதல் 90 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
பிப். 15-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி, நாமக்கல்லில் 96 டிகிரி, மதுரையில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாராணசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்றின் விளைவு தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள், சர்வதேசசுற்றுச்சூழல் இதழில் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
‘சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும்மாதங்களில் அனல் காற்றின்தாக்கம் அதிகமாக இருக்கும்.அதிக சராசரி வெப்பநிலையானது ஒரு வருடத்தில் 97% நாட்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவில் பல நகரங்களில் மார்ச் முதல் ஜூன் வரை அனல் காற்றின் தாக்கம் இருக்கும். சில நகரங்களில் இது ஜூலை வரை நீடிக்கும்’ என்று அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
|
நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வெற்றி | செய்திப்பிரிவு | திருநெல்வேலி | 2024-02-16 04:10:00 |
திருநெல்வேலி: கத்தரிக்கோல் குத்தி படுகாயமடைந்த 11 வயது சிறுவனுக்கு,திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, மதுரைக்கு அடுத்த படியாக மிகப்பெரிய மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இருதயவியல், சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல் என அனைத்து துறைகளும் இங்கு செயல்படும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சமீபத்தில் நடைபெற்ற 2 சிறப்பான சிகிச்சைகள் குறித்து, இக்கல்லூரி முதல்வர்டாக்டர் ரேவதி பாலன் கூறியதாவது: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவனின் மார்பில், எதிர்பாராத விதமாக கத்தரிக்கோல் குத்தி படுகாயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். 30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை பணிகள்தொடங்கப்பட்டு, 3 மணி நேரம்சிகிச்சை நடைபெற்றது. சிறுவனுக்கு இருதயத்தின் தமணியில் ஓட்டை விழுந்திருந்த தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் பள்ளிக்கு செல்லும் அளவில் உடல்நலம் தேறி உள்ளார்.
மற்றொரு சிகிச்சை: மேலும், மற்றொரு சாதனையாக மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவனுக்கு, குடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக கணையம் பகுதியில் சீழ் வைத்ததால், கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்குஅறுவை சிகிச்சை செய்யாமல், மருத்துவமனையில் உள்ள நவீன உபகரணங்கள் மூலம், என்டாஸ்கோபி முறையில் ஸ்டென்ட் பொருத்தி 15 நிமிடங்களில் சீழ் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவமனையின் இருதய மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் உடனிருந்தனர்.
|
திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும்: வைகைச்செல்வன் நம்பிக்கை | செய்திப்பிரிவு | காரைக்குடி | 2024-02-16 04:08:00 |
காரைக்குடி: திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு மரபுப்படி இருக்கை வழங்கப்பட்டது. இதன் மூலம் எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம். கூட்டணி சேர பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நல்ல தகவல் விரை வில் அறிவிக்கப்படும். தமிழகம் கஞ்சா மாநிலமாக மாறி வருகிறது. கொலை, கொள்ளைகள் எல்லை மீறி நடந்து வருகின்றன.
சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டார். சொத்து, வீட்டு வரி உயர்வு, குடிநீர், பால், பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும். தமிழக பட்ஜெட் உரை முன்னுக்குப் பின் முரணான உரை. பொய் மூட்டையை கட்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
|
செம்படமுத்தூர் கிராமத்தில் குரங்குகளிடம் இருந்து தோட்ட பயிர்களை காக்க ‘போராடும்’ விவசாயிகள் | எஸ்.கே.ரமேஷ் | கிருஷ்ணகிரி | 2024-02-16 04:02:00 |
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகள் கூட்டம் தோட்டப் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் ஊராட்சியில் எஸ்.மோட்டூர், மொட்டுபாறை, தோணிகுட்டை, குட்டகொல்லை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
தென்பெண்ணை ஆறு: இக்கிராமங்களை ஒட்டி தென்பெண்ணை ஆறு செல்கிறது. இதனால், இங்கு தென்னை, வாழை, நெல், ராகி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விளை நிலங்களில் உள்ள பயிர்களைக் குரங்குகள் கூட்டம் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பழங்களை குறிவைக்கும் நிலை - இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: செம்படமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. அவை தென்னை தோட்டங்களில் புகுந்து இளநீரைப் பறித்து, கீழே வீசி சேதப்படுத்தி வருகின்றன. தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில், பூக்களைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கொய்யா, பப்பாளி தோட்டங்களில் புகுந்து காய், பிஞ்சு உள்ளிட்டவற்றை உதிர்த்துவிட்டுச் செல்கின்றன. இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
விவசாயிகளுக்குச் சவால்: ஏற்கெனவே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், தற்போது, குரங்குகள் கூட்டத்தால் விளை பொருட்களைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக விளை நிலங்களில் இரவு, பகலாகக் காவல் இருக்கும் நிலையுள்ளது. இதே போல, ஊருக்குள் வலம் வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் தானியங்களை சூறையாடிச் செல்கின்றன.
இதனால், வீட்டிலும், விளை நிலத்திலும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையுள்ளது. இதனிடையே, கோடைக் காலம் தொடங்கவுள்ளதால், காப்புக்காடுகளில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், வரும் நாட்களில் வனவிலங்குகள் அதிக அளவில் விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.
பழ வகை மரங்கள் வேண்டும்: எனவே, காப்புக்காடுகளில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், குரங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும் காப்புக்காடுகளில் பழவகை மரங்களை அதிகளவில் வனத்துறை நடவு செய்து, பராமரித்து வளர்க்க வேண்டும். மேலும், செம்படமுத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் சுற்றித் திரியும் குரங்குகளைக் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
பல்லடம் அருகே பிப்.27-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாதப்பூரில் கால்கோள் விழா | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-02-16 04:00:00 |
திருப்பூர்: பல்லடம் அருகே பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டத்துக்கான மேடை அமைப்பதற்கான கால்கோள் பணி நேற்று தொடங்கியது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 234 தொகுதிகளையும் நிறைவு செய்யும் வகையில், யாத்திரையின் நிறைவு விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். பொதுக் கூட்டத்துக்கான அரங்கம், மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா, மாதப்பூர் அருகே நேற்று நடைபெற்றது.
மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர் கனக சபாபதி உட்பட பலர் பங்கேற்றனர். பூஜைகளுக்கு பிறகு கால் கோள் நடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கூறும் போது, ‘‘வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு, ஓர் அரசியல் புரட்சி ஏற்படுத்தும் மாநாடாக அமையும். சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தில் பாஜகவின் எழுச்சியை காண்பிக்கக் கூடிய மாநாடாக இது இருக்கும். மாற்று கட்சியினர் மட்டுமின்றி அதிருப்தியில் உள்ள திமுகவினரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 25-ம் தேதி திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது வரும் 27-ம் தேதி மோடி கலந்து கொள்ளூம் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது” என்றார்.
|
‘திமுகவுக்கும் தி.மலை மக்களுக்கும் பேரிழப்பு’ - முன்னாள் எம்.பி வேணுகோபால் மறைவுக்கு முதல்வர் இரங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 21:24:00 |
சென்னை: "அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான வேணுகோபாலின் மறைவு திமுகவுக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும்" என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி வேணுகோபால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.இன, மான, மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.
வேணுகோபால் 40 ஆண்டுகள் மாவட்ட அவைத்தலைவராக இருந்தவர். 2019-ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தைத் தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன்.அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான வேணுகோபாலின் மறைவு திமுகவுக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.முன்னதாக, திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி த.வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.15) காலமானார். அவருக்கு வயது 87. | முழுமையாக வாசிக்க > தி.மலை முன்னாள் எம்.பி த.வேணுகோபால் காலமானார்
|
தி.மலை முன்னாள் எம்.பி த.வேணுகோபால் காலமானார் | இரா.தினேஷ்குமார் | திருவண்ணாமலை | 2024-02-15 20:47:00 |
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி த.வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.15) காலமானார். அவருக்கு வயது 87.
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் த.வேணுகோபால். வயது 87. இவரது மனைவி உத்திரம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இளம்வயதில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். காட்டாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் 1996, 1998, 1999, 2004-ல் நடைபெற்ற தேர்தலில் திருப்பத்தூர் (தொகுதி சீரமைப்புக்கு முன்பு) மக்களவைத் தொகுதியில் இருந்தும், 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி (திமுக சார்பில் போட்டியிட்டு) பெற்று தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
8 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர், 18 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து திமுகவில் வரலாற்று சாதனை படைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார். வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், கட்சி பணியில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக பழகி வந்தார். இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் குல சத்திரிய வள்ளலாள மகாராஜ மடாலய சங்கத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த த.வேணுகோபாலின் உடல்நிலை கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை உணர்ந்த த.வேணுகோபால், தன்னுடைய உயிர், தான் வாழ்ந்த வீட்டில் இருந்து பிரிய வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நேற்று (பிப்.14) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சொந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். அவரது நாடித் துடிப்பு மெல்ல மெல்ல குறைந்து, இன்று பிற்பகல் 2.25 மணியளவில் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு, அவருடைய சொந்த இடத்தில் நாளை (16-ம் தேதி) பிற்பகலில் நடைபெற உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேணுகோபால் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு: 9 பேர் மீது வழக்குப் பதிவு @ திருச்சி | ஜி.செல்லமுத்து | திருச்சி | 2024-02-15 20:30:00 |
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, தொடக்க கல்வித் துறை துணை இயக்குநர் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வாங்குவது வழக்கம்.
இதுபோன்ற சமயங்களில் இதற்கான நிதியை பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவுக்கு விடுவித்து, மத்திய அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 2019-2020 கல்வியாண்டில், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட சில பள்ளிகளில், மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அறிவியல் ஆய்வக உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள் வாங்கியதிலும், முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீஸார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் தலா ரூ. 8 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதிலும், 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனடிப்படையில், ஆய்வாளர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அப்போதையை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் என 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக இருந்த, அறிவழகன், சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காணக்கினியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஊனையூர் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சற்குணன், இனாம்குளத்தூர் பள்ளி தலைமையாசிரியர் எல்.கே.அகிலா, துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியரும், உதவி ஆசிரியருமான டி.டெய்சிராணி, வேம்பனூர் பள்ளி தலைமையாசிரியர் ஜெ.ஜெய்சிங், அழககவுண்டன்பட்டி பள்ளி தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் ஆகியோர் அடங்குவர்.
இதில், சாந்தி தொடக்கல்வித்துறை இணை இயக்குநராகவும், அறிவழகன் விழுப்புரம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 20:09:00 |
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (53) இன்று (பிப்.15) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
|
குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-15 19:03:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்கக் கூடாது. விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாதது ஆகிவிடும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத் துறை தரப்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.
அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி, பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
|
மதுரையில் 4 வழிச் சாலையாக மாறும் நெல்பேட்டை - விமான நிலைய சாலை: மாற்று திட்டத்துக்கு ஒப்புதல் | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-15 19:01:00 |
மதுரை: மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம் வரை உள்ள சாலையில் அமைக்கப்பட இருந்த பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டநிலையில், இரு வழிச்சாலையாக உள்ள இந்த சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
மதுரைக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மீனாட்சியம்மன் கோயில், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், உயர் நீதிமன்றம், கல்வி நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அதுபோல், மதுரையை சேர்ந்த தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் விமானங்கள் மூலம் பிற நகரங்களுக்கு செல்கிறார்கள். உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை விமானநிலையத்திற்கு அதிகமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
விமானப் பயணிகள் பெரும்பாலும், நெல்பேட்டை-அவனியாபுரம் சாலை வழியாகதான் பெருங்குடி விமான நிலையத்திற்கு செல்கிறார்கள். ஆனால், இந்த சாலை இரு வழிச்சாலையாக குறுகலாக உள்ளதால் விமானப் பயணிகள், முன்கூட்டியே வீடுகளில் இருந்து புறப்பட்டாலும் விமானங்களை சில நேரங்களில் பிடிக்க முடியவில்லை. அதுபோல் வெளிநாடுகள், நகரங்களில் இருந்து விமானங்களில் வந்திருங்குவோர் நெல்பேட்டை, தெற்குவாசல் போக்குவரத்து நெரிசலை தாண்டி நகரத்திற்குள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் நெல்பேட்டையில் இருந்து வில்லாபுரம் வழியாக அவனியாபுரம் வரை 5 கி.மீ., பறக்கும் பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தது.
நில ஆர்ஜிதம் செய்து பறக்கும் மேம்பாலம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் நெல்பேட்டை, தெற்குவாசல், அவனியாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பையையும் மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால், திடீரென்று இந்த பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது, மதுரை விமான நிலையம் மற்றும் நகர வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறை பறக்கும் பாலத்திற்கு பதிலாக நெல்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள இருவழிச்சாலையை நான்குவழிச்சாலை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனால், நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்கான முன் ஏற்பாடு பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நான்கு வெளி வீதிகளில் புதிய மேம்பாலங்கள், உயரமான கட்டிடங்கள் எதுவும் தற்போது கட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. நாங்கள் திட்டமிட்ட பறக்கும்பாலம் நெல்பேட்டை-விமான நிலையம் பறக்கும் பாலம், தெற்கு வெளி வீதி, கீழ வெளி வீதி வழியாக செல்கிறது. அதனால், நாங்கள் இந்த இடங்களில் பறக்கும் பாலம் அமைக்க முடியவில்லை. இந்த பகுதி சாலைகளில்தான் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் பாலம் அவசியமாக தேவைப்படுகிறது.
வில்லாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு பிறகு விமான நிலையத்திற்கு பறக்கும் பாலம் தேவையில்லை. அதனால், ஒட்டுமொத்தமாக பறக்கும் பாலம் திட்டத்தை கைவிட்டு நில ஆர்ஜிதம் செய்து தற்போது இரு வழிச்சாலையாக உள்ள நெல்பேட்டை-ஏர்போர்ட் சாலையை நான்கு வழிச்சாலையாக போட உள்ளோம். தற்போது திட்ட மதிப்பீடு, நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கை, வரைப்படம் தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் விரைவாக தொடங்கிவிடும். நான்கு வழிச்சாலை அமைந்தாலே விமான நிலையத்திற்கு தாமதமில்லாமல் மக்கள் சென்று வரலாம்’’ என்றனர்.
|
“செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரத்தை உருவாக்கவில்லை” - அமலாக்கத் துறை வாதம் @ ஐகோர்ட் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-15 18:42:00 |
சென்னை: “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020-ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க தயாராக உள்ளோம்” என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.
“போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்பி- எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை.
முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் அவர் இப்போதும் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கெனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020-ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது.
வருமான வரி செலுத்தி விட்டால் மட்டும் போதாது. 10 ஆண்டுகள் 68 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறப்பட்டுள்ளது. அது ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் என்பது ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மட்டும் அல்ல. மீதமுள்ள தொகை மறைக்கப்பட்டுள்ளது.
30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க அமலாக்க துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. எனவே, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
|
‘பித்தலாட்ட’ பாஜகவின் முகத்திரை கிழிப்பு: ஜவாஹிருல்லா கருத்து @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 17:51:00 |
சென்னை: “ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளுக்கு வரும் நிதி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அமைவதற்கு இந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ஜனநாயகத்தை இத்தீர்ப்பு தலைநிமிர வைத்துள்ளது” என்று தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திட 2018-ல் மத்திய அரசு "தேர்தல் பத்திரங்கள்" என்ற பெயரில் ஒரு பித்தலாட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்கள் "எஸ்பிஐ" வங்கிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனிநபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
ஒரு நபர் (அல்லது) நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்டவிரோத சட்டத்தை இயற்றி, புனிதபடுத்தப்பட்ட பித்தலாட்டம்தான் இந்த "தேர்தல் பத்திரம்" திட்டம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனிநபர் நிறுவனங்கள் யார் என்று விவரங்கள் பொதுமக்களுக்கு நன்கொடையாகப் பெரும் அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கப்படாது.
இதன் அடிப்படையில், பாஜக, சட்டப்பூர்வமான லஞ்சம் பெறும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டத்தினைப் பயன்படுத்தி, 2018-ம் ஆண்டு முதல் கடந்த நிதியாண்டு வரை, சுமார் 6,564 கோடி ரூபாய் பணத்தை "சட்டப்பூர்வமாகச் சுருட்டி உள்ளது". இது ஓர் அப்பட்டமான, சட்டப்பூர்வ ஊழல் ஆகும்.
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அரசைக் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும், மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு (1) ஆகியவற்றை மீறும் வகையில் இந்த திட்டம் உள்ளதாகவும், கருப்புப் பணத்தைத் தடுக்கத் தேர்தல் பத்திரங்கள் அனுமதிக்கிறோம் என்ற பாஜக அரசு சொல்லும் பொய்கள் ஏற்கத்தக்கது அல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி இருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்துக்கு வழி வகுக்கும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டுஎனவும் தெரிவித்த நீதிபதிகள், "தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது" எனக் கூறி அதனை ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது, மிக்க மன மகிழ்வைத் தந்துள்ளது.
ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளுக்கு வரும் நிதி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அமைவதற்கு இந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ஜனநாயகத்தை இத்தீர்ப்பு தலைநிமிர வைத்துள்ளது.ஊழலுக்கு எதிராக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் பாஜகவின் பெரிய மிகப் பெரிய ஊழல் இது. அதிகாரம் அவர்கள் கைகளில் இருக்கும் வரை, இத்தகைய பித்தலாட்டச் செயல்களை அரங்கேற்றத் துளியும் தயங்காத பாசிச சக்திகளின் முகத்திரையை இந்திய நீதித்துறை கிழித்தெறிந்து இருக்கிறது. வெளிப்படைத் தன்மையில்லாத பிஎம் கேர் நிதிக்கும் இதேபோல் ஒரு தீர்ப்பு வர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு” என்று அவர் கூறியுள்ளார்.
|
உத்தமபாளையம் புறவழிச் சாலையில் விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளால் சிதைந்த பாதுகாப்பு கம்பங்கள் | என்.கணேஷ்ராஜ் | உத்தமபாளையம் | 2024-02-15 17:45:00 |
உத்தமபாளையம்: உத்தமபாளையம் புறவழிச் சாலையில் திருப்பங்களில் வேகத்தை குறைத்து பயணிப்பது, வளைவுகளில் முந்தக்கூடாது போன்ற விதிமுறைகளை வாகனஓட்டிகள் மீறி வருகின்றனர். இதனால் ரப்பரினால் ஆன பாதுகாப்பு கம்பங்கள் வெகுவாய் சேதமாகி விட்டன.
திண்டுக்கல்-குமுளி இருவழிச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட ஊர்களுக்குள் செல்லாமல் புறவழிச்சாலையிலே பயணிக்கும் வசதி கிடைத்தது. நகர நெரிசல் இல்லாததால் இச்சாலையில் வாகனங்களின் வேகமும் வெகுவாய் அதிகரித்தது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக வளைவுகளில் வாகனங்கள் எதிரெதிரே மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் 3 அடி உயர ரப்பர் கம்பங்கள்(ஸ்பிரிங் போஸ்ட்) சாலையின் நடுவில் பொருத்தப்பட்டன. திருப்பங்களில் வரும் போது வலதுபுறம் வாகனங்கள் சென்று விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வைத்த சில வாரங்களிலே வாகனங்கள் மோதி இந்த இவை சேதமாகிவிட்டன.
இது குறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், "மையத்தடுப்பு குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் இந்நிலை ஏற்படுகிறது" என்றனர்.
போக்குவரத்துப் போலீஸார் கூறுகையில், "வளைவுகளில் வாகனங்கள் முந்தும் போது இந்த தடுப்பான்கள் சரிவர தெரியாது. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் இதில் மோதி விடுகின்றன. வளைவில் முந்தக்கூடாது, திருப்பங்களில் வேகத்தை சற்று குறைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. ரப்பர் என்பதால் வாகனங்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை” என்றனர்.
|
“சிஸ்டம் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும்!” - முதல்வர் ஸ்டாலின் @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 17:11:00 |
சென்னை: தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், "இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது தனது எக்ஸ் தள பதிவில், "தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் முறை உள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன” என்று தெரிவித்தது.
|
வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-15 16:59:00 |
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன், 30 நாட்களுக்கு முந்தைய வேட்பாளரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம். எனவே, அந்த விவரங்களை கேட்க முடியாது. மேலும், இது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும் எனில், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், “நான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது?” என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்த சான்றை பெறலாம்” என யோசனை தெரிவித்தனர்.பின்னர், உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
|
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-15 16:44:00 |
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம், பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
|
“தோலுரிக்கப்பட்ட பாஜகவின் சதிகார அரசியல்” - முத்தரசன் @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 16:28:00 |
சென்னை: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் கொண்டாடி வரவேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக மத்திய அரசு 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக வழங்கியுள்ள தீர்ப்பு, நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்கும்.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக் களவாணியாக செயல்படும் பாஜக மக்கள் வாக்குரிமையை தேர்தல் சந்தையில் வாங்கும் பண்டமாக மாற்றி சிறுமைப்படுத்தி வந்ததை உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் யார், யார், எந்தெந்த கட்சிகள், எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பதை பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பாஜகவின் சதிகார அரசியலை தோலுரித்து தோரணம் கட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடி மகிழ தக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
|
“இன்று நாங்களும் பாஜகவை எதிர்க்கிறோம் என முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டார்” - இபிஎஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 16:23:00 |
சென்னை: பாஜகவுக்கு எதிராக பேசிவருவதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, "பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார்" என்று சட்டப்பேரவை முடிந்த பின் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி மேலும் பேசுகையில், "ஆளுநர் உரை மீது அதிமுக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வரின் பதிலுரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆளுநர் உரை மீது நேற்று நான் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான் முதல்வராக இருக்கும் அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பானது.
ஆனால், 42 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனது ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பல பிரச்சினைகள் நடந்தன. பிரச்சினைகள் ஏற்படும்போது சரி, திட்டங்கள் அறிவிக்கப்படும்போது சரி அதெற்கென குழு அமைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளன.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் எந்தக் குழுக்கள் முழுமையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அறிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றோம். அதற்கும் முதல்வரின் பதிலுரையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை. இப்படி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, நிக்ஜாம் புயல், நான் முதல்வன் திட்டம், தென் மாவட்ட கனமழை என எது குறித்து கேட்டாலும் பதிலுரையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை
கர்நாடகாவில் இருந்து காவிரியில் முறையாக தண்ணீர் பெறாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் உயர்வு தொடர்பாக கேட்டதற்கு பதில் இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் வெளியிட்டது. இவற்றில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கு சென்றாலும் 95% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பேசிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இனியாவது உதயநிதி ஸ்டாலின் இதை கண்டுபிடிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். படிக்காதவர்களையும், படித்தவர்களையும் ஏமாற்றுகிற அரசு திமுக அரசுதான்.
சட்டமன்றத்தில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புவதில்லை. சென்னையில் மாற்றுத்திறனாளிகள் கைது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன். ஆனால், அமைச்சர் எழுந்து இதற்கு பதில் சொல்வதற்கு பதில் ஏதேதோ சொல்லி கைவிட்டுவிட்டார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்தபிறகு என்ன திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் மக்களை கடனாளியாக்கிவிட்டது என்று திமுக குற்றம் சாட்டியது. அதுவே திமுக ஆட்சி அமைந்த இந்த 33 மாதங்களில் ரூ.2,47,000 கோடி வாங்கியிருக்கிறார்கள். எனினும் எந்த புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. மக்கள் எந்த பயனும் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கினார்கள்.
அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகளாக தீர்க்க முடியாத காவிரி நதி நீர் பிரச்சினையை சட்ட போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றோம். தீர்ப்பு பெற்றாலும் நடைமுறைப்படுத்த காலதாமதம் ஆனது. அப்போது கூட்டணியில் அதிமுக இருந்தாலும் எங்களது எம்பிக்கள் 37 பேர் மூலம் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து வரலாறு படைத்தது. இதுமாதிரி ஏதேனும் ஒன்றாவது திமுக செய்ததா?
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லைதானே. அப்படியானால் கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால்தான் நிதி வாங்க முடியும். உங்களுக்குதான் 39 எம்பிக்கள் உள்ளனர். எங்களிடம் இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஓடிவிட்டார். காவிரி விவகாரத்தில் திமுக ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்று தெரியவில்லை.
இண்டியா கூட்டணியில் வேறு இருக்கிறீர்கள். கூட்டணி கட்சிகள் சேர்ந்து மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதிக்கு எத்தனை முறை திமுக குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா" என்றார் இபிஎஸ்.
தொடர்ந்து உங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், "யாருக்கு இந்த அரசை கொடுத்தார்கள். உங்களுக்கு (திமுகவுக்கு) தான் அரசை கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தான் செய்ய வேண்டும்" என்றார்.
பாஜகவுக்கு எதிராக பேசத் தொடங்கியதுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, "பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார். அதிமுக பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதமாக இருந்தால் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்" என்று தெரிவித்தார்.
அதேபோல் தேர்தல் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியவர், "இங்கிருக்கும் திமுக கூடதான் நன்கொடை வாங்கியுள்ளது. வாங்காத ஒரே கட்சி அதிமுகதான். நன்கொடை வாங்கியவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்த திட்டங்களுக்கு இதுபோன்று தடை விதித்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். அதிமுக இந்த தீர்ப்பை வரவேற்கிறது" என்றார்.
|
தருமபுரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு | எஸ்.ராஜா செல்லம் | தருமபுரி | 2024-02-15 15:01:00 |
தருமபுரி: தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் புளியமரத்தில் புளி உலுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயவேல் (65). இவர் இன்று காலை நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாகம் அருகே உள்ள தனியார் வளாகத்தில் இருந்த புளியமரத்தில் இருந்த புளிகளை உலுக்கி அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
சுமார் 30 அடி உயர மரத்தின் உச்சிப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கை நழுவியதால் ஜெயவேல் கீழே விழுந்தார். அதில் பலத்த அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதியமான்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் பிப்.22-ல் தாக்கல் | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-02-15 14:41:00 |
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஒரு நாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வருவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2024 - 25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: “புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான முன்னளி மானிய திட்ட முன்வரைவு (vote on Account) பேரவையில் முதல்வர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். கூடுதல் நிதிக்கான செலவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட்தான். 2023-24ம் நிதியாண்டுக்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
|
புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம்: ஆளுநர் தமிழிசையால் தாமதம் என பேரவைத் தலைவர் தகவல் | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-02-15 14:28:00 |
புதுச்சேரி: “புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பு 5 மாதங்களாக ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார். தற்போதைய பேரவைக் கட்டடம் ஓராண்டுதான் தாக்குப் பிடிக்கும் வகையில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தனது அலுவலகத்தை மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி பேரவைத் தலைவர் அறை தற்போதைய சட்டப்பேரவை கட்டடத்தின் தரைத்தளத்தில் முதல்வர் அலுவலகம் அருகே இருந்தது. தற்போது புதிய கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பழைய சட்டப்பேரவை வளாகம் பழுதடைந்து வருவதால் புதிய சட்டப்பேரவை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பணிகள் செயல்பாடு இன்றியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டதற்கு, "புதுவையில் தற்போது இயங்கி வரும் சட்டப்பேரவை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தகுதி வாய்ந்ததாக இல்லை. பேரவையின் முன்பகுதி நிலத்தில் இறங்குகிறது. பராமரித்துதான் கூட்டத்தை நடத்துகிறோம். இதனால் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்பும் முழுமையாக பராமரித்து, அதன் பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது. அதோடு சட்டப்பேரவையின் நிலையை கருத்தில் கொண்டுதான் நான் தரைத்தளத்தில் இல்லாமல், புதிய கட்டிடத்தின் 4-வது மாடியில் பேரவைத் தலைவர் அலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளோம்.
புதிய சட்டமன்றத்துக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர். விளக்கம் தந்து, இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஆளுநர் தமிழிசை ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களாக ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எங்கள் பணியை முடித்து விட்டோம். துணை நிலை ஆளுநர் ஒப்புதல்தான் பாக்கியுள்ளது. அதற்கான காரணத்தை ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். மத்திய அரசு தெரிவித்ததை நிறைவேற்றி உள்ளோம். அளவீடுகளில்தான் ஆளுநருக்கு சந்தேகம் உள்ளதாக தெரிகிறது.
எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வடிவமைத்தோம். அதிலும் சந்தேகம் கேட்டுள்ளார். இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. இந்த பழைய கட்டிடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப் பிடிக்கும். முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன். இதனால் விரைவில் புதிய சட்டப்பேரவைக்கு பூமி பூஜை நடத்துவோம்" என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.
|
“பாஜக நிதி குவிப்பதற்கு தடை” - தமிழக காங். @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 14:22:00 |
சென்னை: “தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2017-18-ஆம் ஆண்டு மத்திய பாஜக. அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் நன்கொடை மூலம் வழங்கினாலும், அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ எவரும் அறிந்துகொள்ள முடியாது. இது முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்றதாக இருப்பதாகவும், ஆளும் மத்திய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அரசு ரீதியாக செய்கிற உதவிகளுக்கு சன்மானமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி குவித்து வருகிறது என கடுமையான குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வந்தன.
இதன்படி 2018 முதல் 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9,208 கோடி. இதில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,270 கோடி நிதியாக பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 57 சதவிகிதமாகும். அதேபோல, 2022-23-ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திர நன்கொடையாக ரூபாய் 2120 கோடி பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 61 சதவிகிதமாகும்.
ஆனால், காங்கிரஸ் கட்சி ரூபாய் 171 கோடிதான் பெற முடிந்தது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாக தேர்தல் அரசியலில் பா.ஜ.க., தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகளை குவித்து வருவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது, இதன்மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் இன்று ஆணை பிறப்பித்துள்ளனர்.
மத்திய அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த அனைத்து சட்ட திருத்தங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தேர்தல் அரசியலில் வெளிப்படைத்தன்மையும், சமநிலைத் தன்மையையும் உருவாக்குகிற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேர்தல்கள் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
|
“ஆளுநரின் சிறுபிள்ளைத்தன செயலுக்கு பயந்துவிட மாட்டோம்” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 14:11:00 |
சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார். இது எங்களை அல்ல, நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெரியார், அண்ணா, கருணாநிதிதான் எங்களை எந்நாளும் வழி நடத்திக் கொண்டிருக்கும் இயங்கு சக்திகள். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று பெருமையை அடைய பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்துக் கொடுத்த வழித்தடமே காரணம். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
திராவிட மாடல் ஆட்சி: திராவிட இயக்கத்தினால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல. கொள்கையை செயல்படுத்தும் களம் என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் அண்ணாவும் கருணாநிதியும். ‘இன்னாருக்கு மட்டுமே இன்னது’ என்பதை மாற்றி 'எல்லாருக்கும் எல்லாம்’ என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் பெரியார். அதில் ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன கால சிந்தனையுடன் இணைத்து திராவிட மாடல் ஆட்சியை உங்களின் பேராதரவுடன் ‘நான்’ நடத்தி வருகிறேன்.
‘நான்’ என்றால் தனிப்பட்ட நான் அல்ல. அப்படி எப்போதும் நான் கருதியது கிடையாது. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று பொறுப்பேற்கும்போது அந்தச் சொல்லை உச்சரித்தது நான்தான். உச்சரிக்க வைத்தவர்கள் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள். அந்த தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன். பெரியார், அண்ணாவின் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சிக்காக என் மனசாட்சியின்படி நான் செயல்பட்டு வருகிறேன்.
ஆளுநருக்கு கண்டனம்: ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துக் கொடுப்பதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரே என்று கருதும் வகையில் நடந்து கொண்டார். இது எங்களை அல்ல, நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் செயல் அல்லவா?
ஆளுநர் மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் சட்டத்தை மீறி தான் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா? எங்களைப் பொறுத்தவரை இதைப்போன்று எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். ‘தடைக் கற்கள் உண்டு என்றால், அதை உடைக்கும் தோள்களும் உண்டு’. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளார். பாசிசத்தை எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கும் நாம் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயலைக் கண்டு பயந்துவிட மாட்டோம்.
திமுக அரசின் சாதனைகள்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் கர்ப்பக் கிரகத்தில் சமத்துவம் நுழைய தொடங்கி விட்டது. எல்லாருக்கும் எல்லாம் என்று நோக்கத்தில் திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. என்னுடைய கையில் முதல்வர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகின்றன. இவை முன்னேற்ற மாதங்கள், சாதனை மாதங்கள். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஒன்பது விழுக்காடு பங்கை தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.
ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி 7.24% ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19% ஆக உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் 6.65 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.9% குறைந்திருக்கிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து நம் எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருகிறது அல்லவா?
நம் இன எதிரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை காட்டுகிறார்கள். கோபத்தை வெளிப்படுத்துவதில் அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கும் ஆளுநரும் விதிவிலக்கு அல்ல. அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருக்கிறார் என்பதற்காக அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் முதல்வன் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1.15 கோடி பெண்கள் பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதற்கான அடையாளங்களாக திமுக அரசின் பல்வேறு சாதனைகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற தடத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு உரிமை தொகை, விடியல் பேருந்து திட்டத்தின் மூலமாக பெண்களின் பொருளாதார சமூக நிலை உயர்கிறது. தன்னம்பிக்கையின் தற்சார்பு நிலையை அவர்கள் அடைகிறார்கள். பெண்களின் சமூக பங்களிப்பு 40 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்ந்து விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகியவைகளின் அனைத்து துறை வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கி ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திமுக ஆட்சியானது நடைபெற்று வருகிறது.
மத்திய அரசுக்கு கண்டனம்: அதனால்தான் இந்தியாவின் முன்னனி பத்திரிகை மட்டுமல்லாமல், உலகளாவிய பத்திரிகைகளும் பாராட்டி வருகின்றன. இவை அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்க தேவையில்லை, விரும்பமும் இல்லை.
நாம் இரண்டு இயற்கைப் பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக்கூட மத்திய அரசு நிவாரணத் தொகை தரவில்லை. 30.6.2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை நிறுத்திவிட்டார்கள், இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்களை தருவதில்லை,
தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சித் தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில உரிமைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எங்களோடு இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுக்க வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
|
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 11:53:00 |
சென்னை: அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் செய்திருக்கின்றனர். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று அவர்கள் சாலை மறியல் மேற்கொண்டனர். இரு நாட்களிலும் மறியல் மேற்கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை அன்று மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து 50 கி.மீக்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டை என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்துள்ளனர். இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்கள் ஆகும்.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அவர்கள் போராடி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் அவர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் அவர்கள் மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
விருதுநகர் தொகுதியில் பாஜகவில் சீட் கேட்டு 3 பேர் கடும் போட்டி! | இ.மணிகண்டன் | விருதுநகர் | 2024-02-15 11:49:00 |
விருதுநகர்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனுக்கு போட்டியாக 2 பேர் களமிறங்கி யுள்ளனர். இதனால் யாருக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அமமுக சார்பில் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழித் தேவன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனிய சாமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் களமிறங்க பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனின் ஆதரவாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வாக்காளர் களிடம் துண்டு பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர்.
அதே நேரம், விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தனது அண்ணன் ஜவஹருக்கு வாய்ப்பு கேட்டு கட்சி மேலிடத்தை அணுகியுள்ளார். அதற்கேற்ப அண்மையில் நடை பெற்ற கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் ஜவஹர் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரனும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை அகமுடையார், தாய் மறவர் என்பதால் முக்குலத் தோர் வாக்கை சேகரிக்கும் திட்டத்தில் களப்பணியைத் தொடங்கியுள்ளார்.
அதோடு, இவரது தந்தை காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தேவேந்திர குல வேளாளரை பொதுப் பட்டியலில் சேர்க்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தவர் வேதா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கட்சியில் இம்முறை யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் 3 அணிகளாக பாஜகவினர் காத்தி ருக்கின்றனர்.
|
திமுகவில் சிவகங்கை தொகுதிக்கு காய் நகர்த்தும் கரு.பழனியப்பன்! | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-02-15 11:48:00 |
சிவகங்கை: அமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை தொகுதியில் சீட் பெற திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியாவது சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த ஜன.29-ம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதே நேரம், இந்த முறை கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏகள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோர் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் சிவகங்கை தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இத்தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கும் பட்சத்தில், எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா உள்ளிட்டோர் முயன்று வருகின்றனர். அதேபோல் செய்தி தொடர்பு மாநில இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ராமநாதபுரம் அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
அந்த வரிசையில் காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனும் சிவகங்கை தொகுதியை குறி வைத்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் கருப்பு, சிவப்பு வேட்டி கட்டாத திமுக-காரர் என்று அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியிடம் உள்ள நெருக்கத்தில் எப்படியும் சிவகங்கை தொகுதியில் சீட் வாங்கி விடலாம் என கரு.பழனியப்பன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
|
திருச்சி | தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு | ஜி.செல்லமுத்து | துறையூர் | 2024-02-15 11:25:00 |
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கல்லூரி மாணவர்கள், தாங்கள் பயிலும் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறையூர் அருகே கண்ணனூரில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று இக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி பேராசிரியருமான முகிலன் என்பவர் மேடை அருகே நின்று கொண்டிருந்த மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.
அதை மதிக்காத அந்த மாணவர் அங்கிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பணிகள் முடிந்து மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து பேராசிரியர் முகிலன் வெளியே சென்றபொழுது அந்த மாணவர் மதுபோதையில் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேராசிரியர் முகிலன், அந்த மாணவனின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், இரவு 8 மணி அளவில் தனது சக நண்பர்கள் மற்றும் அடையாளம் தெரியாத முதலாம் ஆண்டு மாணவர் உள்ளிட்ட நான்கு பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து கல்லூரி வாசலில் வீசி விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த ஜம்புநாதபுரம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முன்பு மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
“காவிரி - குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” - ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 11:17:00 |
சென்னை: தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும், காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும், காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டுவரும் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொண்டுவரும் விவசாயிகளிடம் ரூ. 40 முதல் ரூ. 50, ரூ. 60 என வசூலிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விவசாயிகள் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தில் விவசாயம் செய்கின்ற வேளையில் பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சிரமம் ஏற்படுகின்றது. எனவே தமிழக அரசு, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருக்கவும், நெல்லை எடைபோடும்போது எடை சரியாக இருக்கவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, காவிரி குண்டாறு திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்து, நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் காவிரி குண்டாறு திட்டத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள். தேர்தல் வாக்குறுதி 75 ல் தெரிவித்தபடி ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ. 2,500 என்பதையும் ஒரு டன் கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,000 என்பதையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
குறிப்பாக தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் தெரிவித்தபடி கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதி 56-ல் தெரிவித்தபடி பனைத்தொழிலை மேம்படுத்த பனை வெல்லத்தை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதே போல தேர்தல் வாக்குறுதி 57-ல் தெரிவித்தபடி தனி ஒரு விவசாயியின் விளைநிலம் பாதிக்கப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். எனவே தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருப்பதற்கும், தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயம் சம்பந்தமாக தெரிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
“பயங்கரவாதத்தின் வேர், மூளை எங்கிருந்தாலும் பாஜக அழிக்கும்” - அண்ணாமலை உறுதி | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-15 08:13:00 |
கோவை: பயங்கரவாதம் எங்கு இருந்தாலும், அதை பாஜக அழிக்கும் என கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், வி.ஹெச்.பி மாநில செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களின் புகைப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. கோவை உக்கடத்தில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடந்த தாக்குதலை திமுகவினர் சிலிண்டர் வெடிப்பு என்றார்கள். கோவை பாதுகாப்பாக இருக்க வேண்டும். வரும் மக்களவை தேர்தல் கோவையின் பாதுகாப்புக்கான தேர்தல். தமிழகத்தில் மக்களுக்காக சேவை செய்கிறோம் என்று கூறும் கட்சிகள் ஒரே குரலில் குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் வரும் தேர்தலில் வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.புரத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும். கோவையை பாதுகாக்க என்.ஐ.ஏ. 2-வது அலுவலகம் கோவைக்கு கொண்டுவரப்படும். பயங்கரவாத வேர், மூளை எங்கு இருந்தாலும் அதை பாஜக அழிக்கும். 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு, கோவையை 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது. 2022-ம் ஆண்டு தாக்குதல் 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு மோடி தேவை” என்றார்.
|
“அண்ணாமலை ஸ்லீப்பர் செல்” - துரை வைகோ | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:41:00 |
சென்னை: “அண்ணாமலை ஒரு ஸ்லீப்பர் செல்” என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல். காரணம் பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார்.
அதனால் தான் அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன்” என்றார். மேலும், தேர்தல் நேரத்தில் எவ்வாறு விழிப்புடண் கடமையாற்ற வேண்டும், பூத் கமிட்டிகளில் இருக்கும் தோழர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக விவரித்தார் துரை வைகோ.
|
ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு: முதல்வர் நிவாரண நிதியில் வழங்க பரிந்துரை | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-15 06:31:00 |
மதுரை: விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் முத்துமணிகண்டன்(30), கடந்த ஆண்டு மார்ச் 12-ல்தேனி அய்யம்பட்டியில் நடந்தஜல்லிக்கட்டுக்கு காளை உரிமையாளருடன் சென்றிருந்தார். ஜல்லிக்கட்டு முடிந்து வீடு திரும்ப வாகனத்துக்காகக் காத்திருந்தபோது, ஜல்லிக்கட்டு காளை முத்துமணிகண்டனை முட்டியது.
இதில் பலத்த காயமடைந்த முத்துமணிகண்டன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி அரசிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அதுவரை அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர், காளைக்குமட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது. காளை உரிமையாளருடன் வந்தபோது, மனுதாரரின் மகன் உயிரிழந்துள்ளார். எனவே, அவருக்கு காப்பீடு கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு நடத்துவது மாவட்டநிர்வாகம்தான். எனவே, போட்டியில் பங்கேற்கும் காளை, காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பார்க்க, காளையுடன் வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்துக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து காளைமுட்டி உயிரிழந்த இளைஞருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது? இது தொடர்பாக தேனி ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
|
‘நீங்க ரோடு ராஜாவா?’ - விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்ட போலீஸார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:30:00 |
சென்னை: சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப்படையாக வைத்தும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க உள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர்.
இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல்சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றொரு குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார்.
இரு போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிட்டுவிழா வேப்பேரியில் உள்ளசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த குறும்படங்களை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன், அவரது தாயார்மீனாகுமாரி ஆகியோர் இணைந்துவெளியிட்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஆர்.சுதாகர் பேசியதாவது:
ஹெல்மெட் அணியாத வாகனஓட்டிகள் மீது அபராத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதால், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சியாக ‘நீங்க ரோடு ராஜாவா?’என்ற பெயரில் எடுத்துள்ளோம். யாரேனும் சாலைகளில் தவறானபாதைகளில் சென்றால் அவர்களைசெல்போனில் படம் பிடியுங்கள். அதை@roadraja என்ற சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, ``என்னுடைய அப்பா,அம்மா காவல் துறையைச் சேர்ந்தவர்கள். நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தற்போது நான் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார், துணை ஆணையர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
|
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மார்ச் 28-ல் ஆஜராக உத்தரவு | செய்திப்பிரிவு | திருநெல்வேலி | 2024-02-15 06:29:00 |
திருநெல்வேலி: நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தும், அன்று வழக்கில் தொடர்புடைய 14 போலீஸாரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டார்.
|
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம்: மணல் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:20:00 |
சென்னை: தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அமலாக்கத் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி சோதனை நடத்தியது.
குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் வீடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ரூ.12.82 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.2.33 கோடி, ரூ.56.86 லட்சம் மதிப்பிலான நகைகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் சட்டவிரோதமாக அதிகப்படியான மணல் அள்ளியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குவாரிகளில் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன்ஆகியோரின் 35 வங்கிக் கணக்குகளிலிருந்த பணம் என மொத்தம் ரூ.130.60 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத் துறை கடந்த 2-ம் தேதி தற்காலிகமாக முடக்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை சிஐடி நகரில் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனுக்குச் சொந்தமான வீடு, அடையாறில் உள்ள அவரது உறவினர் அருண் வீட்டில் நேற்றுமதியம் திடீரென சோதனை நடத்தினர். முந்தைய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
|
முகச் சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட ரூ.2 லட்சத்துக்கான காசோலை: திருவள்ளூர் ஆட்சியர் வழங்கினார் | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2024-02-15 06:15:00 |
திருவள்ளூர்: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவுக்கு, அரசு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்டிக்கொள்ள ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியா(9)-க்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆக. 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து, தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு, சிறுமி டானியாவுக்கு, 2-ம் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களில் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று, நலம் விசாரித்தமுதல்வர், சிறுமிக்கு தேவையான உதவிகள் யாவும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி டானியாவின் குடும்பத்துக்கு, திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொள்ள அனுமதி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி டானியாவுக்கு, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்படி, அரசு மானியம் ரூ. 2.10 லட்சம் போக, வீடு கட்டிக் கொள்ள பயனாளியால் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.2 லட்சத்தை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
|
முத்தரப்பு உடன்படிக்கையால் மின்வாரியம் தனியார்மயமாகாது; மானியம் ரத்தாகாது: பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:08:00 |
சென்னை: முத்தரப்பு உடன்படிக்கையால், மின்வாரியம் தனியார்மயமாகும், மின்கட்டணம் உயரும், விவசாய மானியங்கள் ரத்தாகும் என்பன போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று, பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் சட்ட ஆலோசகர் முரளி கிருஷ்ணன், பாரதிய மின் பொறியாளர் கழக மாநில பொதுச்செயலாளர் நடராஜன், பாரதிய மின் அலுவலர் கழக பொதுச்செயலாளர் மணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2010 அக்.19-ம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 100-ன்அடிப்படையில் மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்து இம்மாதம் 12-ம் தேதி மின்வாரிய நிர்வாகம், தொழிற்சங்கங்கள்மற்றும் தமிழக அரசுக்குஇடையே முத்தரப்பு உடன்படிக்கை ஏற்பட்டது.
இந்த உடன்படிக்கை அடிப்படையில், மின்வாரியம் தனியார்மயமாகும், மின்வாரியத்தை விற்கப் போகிறார்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது, விவசாய மானியங்கள் ரத்தாகும் என பல்வேறு வதந்திகள் தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்படுகின்றன.
கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘காட்’ ஒப்பந்தத்தின் ஒரு பிரிவுதான் மின்வாரிய மறுசீரமைப்பு. அதன் அடிப்படையில், கடந்த2003-ல் புதிய மின்சார சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அனைத்து மாநில மின்வாரியங்களும் கலைக்கப்பட்டு விநியோகம், உற்பத்தி என தனித்தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. இதன்படி, தமிழக மின்வாரியமும் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, தமிழ்நாடு மின்வாரியம் லிமிடெட் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன.
இதையடுத்து, 2010 அக்.19-ம் தேதி, அரசாணை எண்.100-ஐ வெளியிட்டு மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை உறுதி செய்துகொள்ளும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
கடந்த 14 வருடங்களாக முத்தரப்புஒப்பந்த உடன்படிக்கை நடைபெறாததால், தொழிலாளர்கள், அலுவலர்கள்,பொறியாளர்கள் எவ்வித பணிப்பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் தற்காலிக பணியாளர்களாகவே இருந்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் காரணமாக, அவர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது.
எனவே, மின்வாரியம் தனியார்மயமாகும், மின்கட்டணம் உயரும், விவசாய மானியங்கள் ரத்தாகும் என்பன போன்ற தவறான தகவலை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோடம்பாக்கத்தில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்: குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீஸார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:04:00 |
சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திடீரென ஒன்றுதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ள பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனத் தேர்விலிருந்து முழுமையாகவிலக்களித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும். ஊக்கத் தொகையை 1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்: சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியலால் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த கோடம்பாக்கம் போலீஸார் நிகழ்விடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சாலையில் அமர்ந்திருந்தவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, ``கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை. நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீஸார், அழைத்துச்சென்று பூந்தமல்லி அருகே வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் அதிகாலையில் இறக்கிவிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் போராட்டம் நடத்தியபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராயப்பேட்டை மருத்துவமனையில் எங்களைச் சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறை வேற்றுவதாக நேரடியாக வாக்குறுதியாக அளித்தார். ஆனால், அவரே வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது வேதனையாக உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்றனர்.
|
கோயம்பேடு சந்தையின் சுற்றுச்சூழலை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 06:00:00 |
சென்னை: கோயம்பேடு சந்தையில் திடக்கழிவு மேலாண்மை மோசமான நிலையில் உள்ளது. கடைக்காரர்கள் குப்பையை நடந்து செல்லும் வழிகளில் கொட்டி வருகின்றனர். அதனால் அவற்றை முறையாக அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அப்பகுதியின் தூய்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் காய்கறிக் கழிவுகள்ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால், அவற்றை உண்பதற்காக ஏராளமான கால்நடைகளும் வளாகத்தில் சுற்றித் திரிகின்றன.
அங்குள்ள,குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதனால் மாநகராட்சியின்குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட திடக்கழிவுகள் மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசும்போது, "ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை வளாகங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும்.
இதற்கான திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ரூ.25 கோடியில் செயல்படுத்தும்" என்று அறிவித்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோயம்பேடு சந்தை மலர், காய், கனி, உணவு தானிய கிடங்கு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வளாகத்தை தூய்மையான பகுதியாக மாற்றுவது தொடர்பாக கருத்துகளை இந்துமதி கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், சிறுமொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று,‘‘சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். சந்தைக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மின்சாரம்மற்றும் சந்தையில் தினமும் உருவாகும் 200 டன் குப்பையிலிருந்து தயாரித்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.
|
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார் | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-02-15 05:59:00 |
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கடந்த ஆண்டு நவ. 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார். திட்டத் தொடக்க விழா, திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது. கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கரோனாவுக்குப் பின்னர் வீட்டில்இருந்து பயிலும் சூழல் ஏற்பட்டதால், மாணவர்கள் செல்போன், மடிக்கணினியை பயன்படுத்தி படித்தனர். எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.
கடந்த ஆண்டை பிரதமர் மோடி சிறுதானிய ஆண்டாக அறிவித்து, தொடர்ந்து சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறுதானியங்களை அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கருதி, இந்ததிட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
மேலும், மடிக்கணினி மற்றும் புத்தகங்களை எடுத்துச் செல்லும் வகையில் ‘பேக்’ வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பேரவைத் தலைவர் செல்வம்,கல்வித் துறைச் செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
86 ஆயிரம் மாணவர்கள்: இந்த திட்டத்தில், அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் 2 நாட்கள் தினை,கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கெட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படுகின்றன. 486 பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
|
ஆளுநர் உரையல்ல.. பேரவை தலைவர் உரை: செல்வப்பெருந்தகை கருத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:51:00 |
சென்னை: ஆளுநர் உரையாற்றாமல் அதை எப்படி ஆளுநர் உரை என்று சொல்ல முடியும். இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரை என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம்:
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஆளுநர் உரையாற்றாமல் அதை எப்படி ஆளுநர் உரை என்று சொல்ல முடியும். இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரை.
பேரவை தலைவர் மு.அப்பாவு: அது முடிந்துபோன கதை.
செல்வப்பெருந்தகை: இது எனது கருத்து, எங்கள் கட்சியின் கருத்து. பேரவை தலைவரின் உரையை வாழ்த்தி பேச மகிழ்ச்சி அடைகிறோம்.
கே.பி.முனுசாமி (அதிமுக): ‘இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரைதான்’ என்பதை பேரவை தலைவரான நீங்கள் ஏற்கிறீர்களா.
அப்பாவு: அது அவரது கருத்து. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பு என்றுதான் நான் கூறியுள்ளேன்.
கே.பி.முனுசாமி: பேரவை தலைவர் கூறிய பிறகும்கூட, ‘இது ஆளுநர் உரை அல்ல’ என்று தனது கட்சியையும் சேர்த்து உறுப்பினர் கூறியுள்ளார். இதை பேரவை தலைவர் ஏற்கிறாரா?
அப்பாவு: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் செல்வப்பெருந்தகை பேசலாம்.
செல்வப்பெருந்தகை: உறுப்பினருக்கு இன்னும் பழைய பாசம் போகவில்லை என்று நினைக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
|
தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டுமா? - பாஜக உறுப்பினருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:44:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தை திமுக உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத் தார்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது: எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): திமுகவும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உறுதியாக எதிர்க்கின்றன. காலை உணவுத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சொந்த பட்டா உள்ள நிலத்தில் பள்ளிவாசல், தேவாலயம் கட்டுவதற்கு சில முட்டுக்கட்டைகள் உள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செவிலியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். போராடிகொண்டிருக்கிற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும்.
மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மக்களை மதரீதியாகபிளவுபடுத்தி, அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. அச்சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியாது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. சமீபத்தில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு பக்கமும், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கழிவுப்பொருட்கள் கலந்துள்ளன. தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குளங்களையும் குறைந்தபட்சம் மூன்று அடி தூர்வார வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: புயல், மழை சீரமைப்பு பணிகளுக்கு தென்மாவட்டங்களுக்கு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுஉள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வருவதற்கு எவ்வளவு பேருந்து கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கு கொடுக்க வேண்டியுள்ளது. பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டுக்கு சென்றோம். இப்போது, கிளாம்பாக்கத்துக்கு சென்றுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம். இது மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப ஏற்படும் சூழ்நிலை. இதைத் தவிர்க்க முடியாது. தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்றிவிட்டால், குறைவான நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம். போக்குவரத்து நெரிசல் உட்பட அனைத்தையும் தடுக்க முடியும்.
போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்: தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற நல்ல யோசனை சொல்கிறீர்கள். அப்படியே, தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
அமைச்சர் துரைமுருகன்: தலைநகரை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனால், இங்கேயே இருக்கட்டும்.
நயினார் நாகேந்திரன்: திருச்சியை தலைநகராக ஆக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கோரிக்கை.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: எம்ஜிஆர் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நினைத்தால் மாற்றியிருக்கலாம்.
நயினார் நாகேந்திரன்: மழை பெய்தால் நாடாளுமன்றத்தில் ஒழுகுகிறது என்று போக்குவரத்துறை அமைச்சர் சொல்கிறார். அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லத் தயாராக இருக்கிறேன்.
அமைச்சர் சா.சி.சிவசங்கர்: பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. அதைத்தான் கூறினேன்.
நயினார் நாகேந்திரன்: ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் மத்திய அரசு தருகிறது என்று உறுப்பினர்கள் சொல்கின்றனர். அதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சி எவ்வளவு கொடுத்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் அப்பாவு: இதற்கான பதிலை நிதியமைச்சர் பேசும்போது சொல்வார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
|
அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு பிப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:37:00 |
சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் பிப்.29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, வீட்டு வசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக். 20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த, 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் இம்மாதம் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதிவாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொருளாதார கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-02-15 05:36:00 |
புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடும்போது, நாட்டின் 36 சதவீத தாமிர உற்பத்தியை பூர்த்தி செய்தது. 2014-2018 காலகட்டத்தில் ரூ.13,500 கோடி வரி செலுத்தியுள்ளது. தினமும் 1,200 டன், ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளன" என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், "சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, நீரி, ஐஐடி, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிபுணர்கள் மற்றும் பிரபலமான சுற்றச்சூழல் நிபுணர் அடங்கியகுழுவை அமைத்து ஆராயலாம்.அந்தக் குழு, இந்த நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கலாமா என்றும், முந்தைய உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏனென்றால், இந்த நிறுவனம்தாமிர உற்பத்தியுடன் தொடர்புடையது. நாட்டின் பொருளாதாரத்துடன் பங்களிப்பது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "இது தொடர்பாக தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட பிறகே, எந்த முடிவுக்கும் வர வேண்டும். பல்வேறு விதிமீறல்களில் இந்த ஆலைநிர்வாகம் ஈடுபட்டது என்பதால்தான், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆலை எந்த உத்தரவையும் மதிப்பதில்லை. அமல்படுத்துவதும் இல்லை" என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலனுடன் சம்பந்தப்பட்டது. இதைபொருளாதாரக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. பாதிப்பு ஏற்பட்டதால்தான் மூடப்பட்டது" என காரசாரமாக வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், "இந்த ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம். அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கலாம். மேலும், தமிழக அரசின் எதிர்ப்புகளையும், கருத்துகளையும் புறந்தள்ளிவிட முடியாது. அதேநேரம், நாட்டுக்குதாமிரம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, வேதாந்தா நிறுவனம் தனது தரப்பு வாதத்தையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் சிறு குறிப்பாக தாக்கல் செய்யலாம்" என்று கூறி, விசாரணையை இன்றைக்கு (பிப். 15) தள்ளிவைத்தனர்.
|
செய்தித் துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:30:00 |
சென்னை: தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை துணை செயலராகவும் வைத்திநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு, திருச்சி மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தார்.
|
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:18:00 |
சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
உள்துறை சிறப்பு செயலராக இருந்த ஏ.சுகந்தி, மாநில மனிதஉரிமைகள் ஆணைய செயலராகவும், நில நிர்வாக இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உள்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி, வணிகவரித்துறை (நிர்வாகம்) இணை ஆணையராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவன செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) செயல் இயக்குநர்வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆகவும்,சென்னை வணிகவரி (நுண்ணறிவு)இணை ஆணையர் வீர் பிரதாப்சிங், ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் நீக்கம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:14:00 |
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதை பராமரிக்க உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சட்டத்தை நீக்குவதற்கான சட்ட முன்வடிவு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, 2 சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஊராட்சிகள் சட்டத்திருத்த முன்வடிவை, அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். இதற்கான நோக்க காரண விளக்க உரையில், ‘‘6-வது மாநில ஆணையமானது வீட்டு வரி என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். மற்ற வகை கட்டிடங்களுக்கு அல்ல என்ற தவறான கருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு வீட்டு வரி என்ற பெயரிட்டு முறையை, சொத்து வரி என்று மாற்றம் செய்ய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை தொடர்பான சட்ட முன்வடிவை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிமுகம் செய்தார். இதற்கான நோக்க காரண உரையில், ‘‘கடந்த 2020-ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியமைக்கவும், பராமரிக்கவும், அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்டகால ஏற்பாடுகளாக ஓர் அறக்கட்டளையை நிறுவுவதற்காக இயற்றப்பட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், போயஸ் தோட்ட நிலம் மற்றும் கட்டிடத்தை கையகப்படுத்தி மறைந்த முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளான, மனுதாரர்களிடம் வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டவாறு, அக்கட்டிடத்தின் சாவி சட்டப்பூர்வ வாரிசுகளிடம் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே, அந்த சட்டத்தை நீக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு இந்த சட்ட முன்வடிவு வகை செய்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகம் செய்யப்பட்டன.
|
பிப்.24-ல் ஜெயலலிதா பிறந்தநாள் விழா | தமிழகம் முழுவதும் அதிமுக 5 நாள் பொதுக்கூட்டம்: சேலம் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:12:00 |
சென்னை: அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சேலத்தில் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, பிப்.24-ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் தொகுதி கொண்டலாம்பட்டியில் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் (பழனிசாமி) பங்கேற்று உரையாற்றுகிறேன். கட்சி எம்எல்ஏக்களும், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார்கள்.
மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழை பாதிப்புக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது? - இபிஎஸ் கேள்வி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 05:03:00 |
சென்னை: மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழை பாதிப்புக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: மாநில உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டுவோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதற்கு என்ன உத்திகளை வைத்துள்ளீர்கள். இதற்கான திட்டங்கள் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாய மேம்பாட்டுக்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மிக்ஜாம் புயல் மழை வெள்ளம், தென்மாவட்டங்களில் அதிகனமழை பாதிப்பு சேதத்துக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று அறிவிக்க வேண்டும்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: 2021-22-ம் ஆண்டில் நீண்டகால நிரந்தர வெள்ள தடுப்புக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.100 கோடியில் பணிகள் நடந்தன. 2022-23-ம் ஆண்டில் இந்த பகுதியில் ரூ.436 கோடியில் பணிகள் நடைபெற்றன. 2023-24-ம் ஆண்டில் ரூ.231 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேறியுள்ளன. கூடுதலாக மாநில பேரிடர் நிதியில் கடலூர், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு ரூ.118 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
பழனிசாமி: மிக்ஜாம் புயல் சேதத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தைதான் நான் கேட்டேன். மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவு செய்யலாம். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். அதற்காக தான் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன்.
கர்நாடகாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை முறையாகப் பெறாத காரணத்தால், சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன. காலம் தாழ்த்தி தண்ணீரை திறந்ததால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை முழுமையாக கணக்கிட்டு, ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 ஆதார விலையாக வழங்கப்படும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக வழங்கப்படும் என்று தெரிவித்தீர்கள். இதுவரை வழங்கவில்லை.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி: உங்கள் ஆட்சியில் சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.1,960 தான் வழங்கப்பட்டது. தற்போது ரூ.2,310 தருகிறோம். பொது ரகத்துக்கு ரூ.1,945 இருந்தது. இன்றைக்கு ரூ.2,265 கொடுக்கிறோம். நீங்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி, சொல்லாத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 இந்த அரசு வழங்கும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
|
பேரவையில் ஓபிஎஸ்-க்கு பின்வரிசையில் இடம்: இபிஎஸ் அருகில் அமர்ந்தார் உதயகுமார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-15 04:59:00 |
சென்னை: சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அருகில், ஆர்.பி.உதயகுமார் அமர்ந்தார். அந்தஇடத்தில் ஏற்கெனவே அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தேர்வானது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருஅணிகளாக பிரிந்தனர். இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆன நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அதிமுக சார்பில்எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓபிஎஸ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு அருகில் உள்ள துணைதலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றுபேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக தரப்பு நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தி வந்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் பேரவை தலைவராக இருந்த பி.தனபால் இதேபோன்ற சூழலில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேரவைத் தலைவர் அப்பாவு, இருக்கை விவகாரம் என் முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்து வந்தார்.
இந்த சூழலில், கடந்த 13-ம்தேதி சட்டப்பேரவையில் பேரவைதலைவரிடம், இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் கோரிக்கை: அப்போது பேசிய முதல்வர், ‘‘பேரவை தலைவர் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, நேற்று பேரவையில் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சி முதல் வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அருகே ஓபிஎஸ் இருந்த இருக்கையில், துணை தலைவராக தேர்வான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் இருக்கைக்கு பின்னால் 2-வது வரிசையில், முதல் இடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் பால் மனோஜ் பாண்டியன் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், ஓபிஎஸ் இருக்கைக்கு பின்புறம் ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த 3-வது வரிசையில் மனோஜ் பாண்டியனுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்த இந்து முன்னணியினர்! | செய்திப்பிரிவு | காரைக்குடி | 2024-02-15 04:04:00 |
காரைக்குடி: காரைக்குடியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர், நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
காதலர் தினம் கொண்டாடுவதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காதலர் தினத்தையொட்டி காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். நகரத் தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ஜெயக் குமார், சுரேஷ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
ஒரு யூனிட்டுக்கு 75 பைசா வரை - புதுச்சேரியில் வீட்டு மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த கடும் எதிர்ப்பு | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-02-15 04:02:00 |
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்த, நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரூ. 500 கோடி வரை உள்ள மின் கட்டண பாக்கிக்கும், கட்டண உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று மின் துறை தலைவர் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையிலும் ஆண்டு தோறும் மின் கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 2024 - 25-ம் ஆண்டுக்கு மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள பிஎம்எஸ் அரங்கில் நேற்று நடந்தது.
இணை ஒழுங்கு முறை மின்சார ஆணைய தலைவர் அலோக் டண்டன், உறுப்பினர் ஜோதி பிரசாத் ஆகியோர் பொது மக்களிடம் கருத்து கேட்டனர். கூட்டம் தொடங்கியவுடன், புதுவை மின்துறை தலைவர் சண்முகம் உத்தேச மின் கட்டண விவரம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க வை.பாலா, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முருகானந்தம், நுகர்வோர் குரல் சுப்பராயன், சமூக சேவகர் கோபால், மாணவர் பெற்றோர் ஆசிரியர் சங்க நாராயணசாமி உட்பட பலர் பேசினர்.
இதில், மின் கட்டண ரசீதில் பலவிதமான பெயர்களில் பணம் வசூலிக்கப்படுகிறது. 94 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.300 கட்டணம் வந்துள்ளது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வருகிறது? மின் கட்டணத்தில் பராமரிப்பு என்ற வகையில் தொகை வசூலிக்கப்படுகிறது. வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. என்று கூறி கண்துடைப்புக்காக இக்கூட்டம் நடத்துவதாக பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் மாணவர் சங்க பாலா பேசுகையில், புதுச்சேரியில் எவ்வளவு தொகை மின் துறையில் நிலுவையில் வைக்கப் பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தொடக்கத்தில் நிலுவைத் தொகைக்கும் இக்கூட்டத்துக்கும் தொடர்பில்லை என்று மின்துறை தலைவர் சண்முகம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில், அரசு துறைகள் ரூ. 300 கோடியும், நுகர்வோர் ரூ. 200 கோடியும் நிலுவையில் வைத்துள்ளனர். நுகர்வோர் நிலுவைத்தொகை அடுத்த பில்லுக்குள் வசூலாகிவிடும். அரசு நிலுவைத்தொகையால் மக்களுக்கு பாதிப்பில்லை என்றுகுறிப்பிட்டார். ஆனால் அது தவறாக குறிப்பிடுவதாக தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மின் திருட்டு தொடர்பாக, எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பேசுகையில், பிற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது? புதுவையில் நடப்பாண்டில் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் துறையின் நிதி பற்றாக்குறையை கணக்கீட்டு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்தச் சுமை புதுவை மக்கள் மீது திணிக்கப்படுகிறது. புதுவை மின் துறையை தனியார்மயமாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தை யாருக்காக உயர்த்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
விரைவில் முடிவு: வழக்கமாக கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு பின்னர் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள்.இதன் அடிப்படையில் மின் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. புதுச்சேரி மின் துறை உயர்த்தி கேட்கும் மின் கட்டணமே, புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக மின் கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருகிறது. தற்போது மின் துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், மின் கட்டணம் அதிகரிக்கவுள்ளது.
|
ஓசூர் மாநகராட்சி திம்மசந்திரத்தில் அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ பொதுமக்கள் | செய்திப்பிரிவு | ஓசூர் | 2024-02-15 04:00:00 |
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட திம்மசந்திரம் பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய் வசதியின்றி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஓசூர் நகரைச் சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்ந்த நிலையில், பல வார்டுகளில் சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், திம்மசந்திரம் ஊராட்சி பகுதியிலிருந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஓசூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்டு 8-வது வார்டு பகுதியில் இக்குடியிருப்புகள் இடம் பெற்றுள்ளன. இங்கு எந்த அடிப்படை வசதியும் இதுவரை மாநகராட்சி மூலம் செய்து கொடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்பு பகுதிகள் திம்மசந்திரம் ஊராட்சியின் கட்டுப் பாட்டில் இருந்த போது, எங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்தன. தற்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் அடிப்படை வசதியில் பின் தங்கியுள்ளது. குறிப்பாகச் சாக்கடை கழிவு நீர் கால்வாய் இல்லாததால் குடியிருப்புகளிலிருந்து வெளி யேறும் கழிவு நீர் தெருக்களில் வழிந் தோடுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுகிறது.
கடந்த 6 மாதங்களாகச் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. தெரு விளக்கு எரிவதில்லை, மேலும், தெருக்களைப் பிரித்து தெருக்களுக்கு பெயர்கள் வைக்கவில்லை. இதனால், மலைக் கிராமத்தில் வசிப்பதைப் போன்று உணர்ந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
மதுரை கல்வி அதிகாரி ‘திடீர்’ இடமாற்றம்: மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-14 22:38:00 |
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரி, பொறுப்பேற்ற 2 நாட்களிலேயே உடல்நிலை சரியில்லை, பதவி உயர்வு வேண்டாம் எனக்கூறி ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவே திரும்பி சென்ற சம்பவம், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட அளவில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செயல்படுகிறார். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அதிகரிக்கவும் மாவட்ட அளவில் அரசுத் தேர்வுகளை நடத்தும் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக வருவாய்க் கோட்ட அளவில் கல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதுபோல், மாநகராட்சி பள்ளிகளை நிர்வகிக்க, தனியாக கல்வி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கீழ், மாநகராட்சி பள்ளிகளை நிர்வகிப்பார்.
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி அதிகாரியாக மாரிமுத்து, பதவி வகித்து வந்தார். இவர், திடீரென்று சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக சென்றார். இவருக்கு பதிலாக மதுரை சருகுவலையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஷ்வரி, மாகநராட்சி பள்ளிகள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்று கடந்த 2 நாட்களாக மாநகராட்சி பள்ளிகள் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென்று இவர், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனக்கு கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வேண்டாம் எனக்கூறி மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், ஏற்கெனவே, தான் பணிபுரிந்த சருகுவலையப்பட்டி பள்ளி தலைமை ஆரியராகவே திரும்பி சென்றார். இச்சம்பவம், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது உமா மகேஷ்வரிக்குப் பதிலாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரியாக மதுரை ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று உடனடியாக மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பதவி விலகிய உமா மகேஷ்வரி ஒரிரு மாதங்களில் ஒய்வு பெற உள்ளார். எனவே, அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் பொறுப்பேற்ற 2 நாளில் சென்றுவிட்டார். இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தற்போது புதிய மாநகராட்சி கல்வி அதிகாரியாக ரகுபதியை நியமனம் செய்துள்ளார், ’’ என்றார்.
|
சம்பளம், ஓய்வூதியம் கேட்டு மதுரை காமராசர் பல்கலை.யில் பேராசிரியர்கள் போராட்டம் | என். சன்னாசி | மதுரை | 2024-02-14 21:31:00 |
மதுரை: சம்பளம், ஓய்வூதியம் கேட்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சில மாதங்களாகவே முறையாக சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. தாமதமாக வழங்கினாலும், கடந்த 2 மாதத்துக்கான சம்பளம், ஓய்வூதியம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 2 நாளாகவே 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்கலைகழக வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு பல்கலை நிர்வாக அலுவலர் சங்க உதவி தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் முத்தையா முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து அலுவலகங்களும், அறைகளும் பூட்டப்பட்டன. பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய விடைத் தாள்களை திருத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வெகு நேரமாக காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
|
வாங்கிய கடன் தீரவும், கொடுத்த கடன் வந்து சேரவும் வேண்டி உண்டியலில் பக்தரின் கடிதம் @ தருமபுரி | எஸ்.ராஜா செல்லம் | தருமபுரி | 2024-02-14 21:06:00 |
தருமபுரி: தனது கடன்கள் விரைவில் அடைய வேண்டும், வரவேண்டிய தொகை விரைந்து வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் தருமபுரி பக்தர் ஒருவர் எழுதி உண்டியலில் சேர்த்த கடிதம் உண்டியல் எண்ணிக்கையின்போது தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்தக் கோயிலில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா முடிந்த பின்னர் உண்டியல்களில் பக்தர்களால் சேர்க்கப்பட்ட தொகை எண்ணப்படுவது வழக்கம்.
அண்மையில் தைப்பூசத் தேர்த் திருவிழா முடிவுற்ற நிலையில் இன்று(பிப்.4) உண்டியல்கள் தொகை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சங்கர், கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் சேகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடந்தது. உண்டியல்களில் இருந்த ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 777 ரொக்கம், 4 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கணக்கிடப்பட்டு கோயிலுக்கான வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுதவிர, உண்டியலில் பக்தர் ஒருவர் சேர்த்திருந்த கடிதம் ஒன்றும் இருந்தது. தான் யார் என்ற விபரம் குறிப்பிடப்படாமல் இருந்த இந்த கடிதத்தில், பலருக்கு தான் தர வேண்டிய கடன் தொகையை பெயருடன் எழுதி(மொத்தம் ரூ.1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம்), அந்தக் கடன் அனைத்தும் விரைவாக அடைய வேண்டும் என்றும், தனக்கு சிலரிடம் இருந்து வர வேண்டிய தொகையான ரூ.10 கோடியே 10 லட்சம் விரைந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தின் இறுதியில், கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளையும் எழுதி, ‘கடன் அடைய வேண்டும் முருகா’ என்று கோரிக்கை வைத்துள்ளார். கவனம் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்ட இந்த கடிதம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
புகார் அளிக்க வருவோரின் மனமாற்றத்துக்காக காவல் நிலையத்தில் நூலகம் திறப்பு @ தஞ்சை | சி.எஸ். ஆறுமுகம் | தஞ்சாவூர் | 2024-02-14 20:48:00 |
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வருபவர்களின் மனமாற்றத்துக்காக அண்மையில் அறிவகம் எனும் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் இந்தக் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வருபவர்களின் மனமாற்றத்துக்காகவும், பல்வேறு பிரச்சினைக்களுக்காக இங்கு வரும் மாணவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், காவல் ஆய்வாளர் ரமேஷ், அறிவகம் என்னும் நூலகத்தை, காவல் நிலையத்துக்குள் அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி காவல் நிலையத்துக்குள் 3 பீரோக்கள் முழுவதும் பல்வேறு வகையான நூல்களை வைத்து அறிவகம் எனும் நூலகத்தைக் கடந்த மாதம் ஜன.26-ம் தேதி திறந்தார்.இந்த நூலகத்தைப் பற்றித் தகவலறிந்த, தஞ்சாவூர் எஸ்பி ஆசீஸ்ராவத், அந்த காவல் நிலையத்துக்கு வந்து, காவல் ஆய்வாளர் ரமேஷை, பாராட்டி வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இது தொடர்பாகக் காவல் ஆய்வாளர் ரமேஷ் கூறியது: “காவல் நிலையத்துக்கு பல்வேறு பிரச்சினைகளுக்காக வரும் புகார்தாரர்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்களிடம் அமைதியாகப் பேசி. சிறிது நேரம் அமர வைத்தால், அந்த நேரத்தில் அவர்கள் அந்த அறிவகம் என்னும் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களது மனநிலை மாறி, சகஜ நிலைக்கு திரும்புவார்கள்.
சிறிய பிரச்சினைக்காக, காவல் நிலையத்துக்கு வருவதால், அவர்களுக்குள் ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கவே , இந்த அறிவகத்தை அமைத்துள்ளோம். மேலும், நூலகம் எனப் பெயர் வைத்தால் சராசரியாக பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதனால் அறிவுப்பூர்வமாகப் பெயர் இருந்தால், இங்கு வருபவர்கள் அதில் உள்ள புத்தகங்களை வாசிப்பார்கள் என்ற காரணத்தால் இந்தப் பெயரை வைத்துள்ளேன்.
இந்த அறிவகத்தில், சமூக ஆர்வலர்கள், இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்பவர்கள் வழங்கிய புத்தகங்கள் மற்றும் இங்கு புகாரளிக்க வந்து சுமூகமான நிலைக்குத் திரும்பியவர்கள் வழங்கிய புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், புராணக்கதைகள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன.தற்போது போட்டித் தேர்வாளர்கள், இங்கு படித்து வருகின்றனர். இந்தப் புத்தகங்களை, காவல் நிலையத்தில் டோக்கன் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு கொண்டுச் சென்று படித்து விட்டு, மீண்டும் இங்கு வந்து வழங்கலாம்.
காவல் நிலையத்துக்கு வருபவர்கள், புகாரளிப்பதோடு, அவர்களுக்கான மன நிலையை மாற்றும் விதமாக செயல்படும் இந்த அறிவகத்தில் தினந்தோறும் சிலர் படித்து வரும் நிலையில், திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருவது மகிழச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
|
வீராணம் ஏரியின் நீர் மட்டம் சரிந்தது: சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படுறதா? | க.ரமேஷ் | கடலூர் | 2024-02-14 20:18:00 |
கடலூர்: வீராணம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும்.
ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசனம் பொறுகிறது. தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டதாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
இன்றைய (பிப்.14) நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடி உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 48 கன அடியும், பாசனத்துக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல தண்ணீர் திறந்தால் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியின் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தும் நிலை ஏற்படும். ஏரிக்கு தண்ணீர் வரும் 9 அடி உள்ள கீழணையில் 2.7 அடி குறைந்த அளவே தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
“பாஜகவில் எந்த ஆதரவும் கிட்டாததால் அதிமுகவில் இணைந்தேன்” - கவுதமி விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 18:55:00 |
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தன்னை அதிமுகவில் இன்று இணைத்துக் கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி இன்று சந்தித்தார். எடப்பாடி முன்னிலையில், கவுதமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகினார்.
ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை கவுதமியும் அதிமுகவில் தற்போது இணைந்துள்ளார்.
முன்னதாக கவுதமி பாஜகவில் இருந்து விலகியபோது ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார். அதில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்கட்சியில் இணைந்தேன். என்னுடைய வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், அந்தப் பணிக்கு நான் கவுரவம் செய்து வந்தேன்.
இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் உள்ளன. கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது.
என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் 37 ஆண்டுகாலம் இருந்துள்ளேன். என்னுடைய இந்த வயதில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன். நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார்.
என்னுடைய பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி அழகப்பன் என்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு அணுகினார். அப்போது நான் என்னுடைய இரு பெற்றோரையும் இழந்த ஆதரவற்றவளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு அக்கறையான மூத்த நபர் போல அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் நுழைத்துக் கொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சூழலில் நான் என்னுடைய சில நிலங்களை விற்பதற்கான ஆவணங்கள் தொடர்பாக அவரை நம்பினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது குறித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன்.
நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்கும்விதமாக. எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் நம் நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றினேன். என்னுடைய முதலமைச்சர், என்னுடைய காவல் துறை, என்னுடைய நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல புகார்களையும் அளித்தேன். ஆனால் அந்த நடைமுறை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதை அறிந்தேன்.
2021 தமிழக சட்டசபை தேர்தலின்போது, பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களிக்கப்பட்டது. ராஜபாளையம் மக்களுக்காகவும், பாஜகவை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தவும் வேண்டியும் நான் என்னை அர்ப்பணித்து பணியாற்றினேன். எனினும், அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் ரத்தானது. ஆனாலும், நான் கட்சிக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்தேன்.
எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். ஆனால் இப்போதும் என்னுடைய முதலமைச்சர், என் காவல்துறை, என் நீதித்துறை ஆகியோர் எனக்கான நீதியை எனக்கு பெற்று தருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மிகப் பெரிய வலி மற்றும் வேதனையுடனும், அதே நேரம் கடும் உறுதியுடனும் இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்” என்று கூறியிருந்தார்.
|
ப்ரீமியம் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முதல் விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.14, 2024 | செய்திப்பிரிவு | தீர்மானங்கள் | 2024-02-14 18:31:00 |
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானங்கள்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று... ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
‘சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்’, ‘ஆவணங்களில் திருத்தம்’... - செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் வாதங்கள் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-14 18:29:00 |
சென்னை: “தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்குத் தப்பிவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு: செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
‘சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்’ இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை தொடங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது. செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என்ற ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. எனவே, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
ஆவணங்களில் திருத்தம் - இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். ஆனால், வழக்கு விசாரணையே தொடங்காத தற்போதைய நிலையில் அப்பாவி எனக் கூற முடியாது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போதுதான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கிவிட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின்போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின்போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை கணக்கு: அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது? ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா? பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது என அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது.
ஜாமீன் மறுக்கக்கூடாது - பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு - தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதத்தை நிறைவு செய்தார்.
அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்துதான் பெறப்பட்டன” என்றார். இதையடுத்து அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நாளை (பிப்.15) பிற்பகலுக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.
|
“விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க போர்க்களத்தை விட கொடுமையான சூழல்” - முதல்வர் ஸ்டாலின் காட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 17:03:00 |
சென்னை: “மத்திய பாஜக அரசு தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல் சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்" என்று திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களு்ககு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுகவின் கொள்கை பலமும், தொண்டர்களாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பாஜகவை கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் திமுகவை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திமுக எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்.
அரசியல் கருத்துகளை, கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ, நேர்மையோ இல்லாத மத்திய பாஜக அரசு, தன் வசப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என நினைத்து வன்மத்துடன் செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத்திலும் தனது கைப்பாவையாக உள்ள ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என நினைத்து, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத்தன்மையுடன் செயல்பட்டு, தங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையில் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நாடெங்கும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கான முதல்படியாக பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாட்களில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுகவின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது.உரிமை முழக்கக் கூட்டம் உங்களில் ஒருவனான என் பெயரில் அமைந்திருந்தாலும், ஒலிக்கப் போவது தொண்டர்களாம் உங்களின் குரல்தான்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல்சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்.
தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பாஜக அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. மத்திய பாஜக அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திமுகவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அதிமுக.
பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு முழுமையாகத் துணை நின்ற இயக்கம் திமுக. சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது அதிமுக.
நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழகத்தில் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு, மாநிலங்களின் வரி வருவாயைப் பறிக்கும் ஜிஎஸ்டி, மின்னுற்பத்தியையும் விநியோகத்தையும் சீரழிக்கும் உதய் மின்திட்டம் என மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத மாநிலக் குரோத திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தந்து, உரிமைகளை அடகு வைத்து, கஜானாவைக் கொள்ளையடித்து ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து கொண்டவர்கள்தான் அதிமுகவின் பழனிசாமியும் அவரது அமைச்சரவைக் கூட்டாளிகளும்.
பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நின்று ஆதரித்த அதிமுகதான் இப்போது பாஜக சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கும் இந்திய அளவிலும் பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அதிமுக மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை கட்சித் தொண்டர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.
பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துபோனதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கத்தான் திமுகவின் உரிமை மீட்கும் முழக்கம் ஒலிக்கவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகளுக்கும் பி.எல்.ஏ-2 எனப்படும் பாகமுகவர்களை நியமித்து, பூத் கமிட்டிகளை அமைத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 10 பேர் என்ற அளவில் ஏறத்தாழ 6 லட்சத்து 80 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களாம் முன்கள வீரர்களைக் கொண்டுள்ள இயக்கம் திமுக. அவர்களுக்கு களப்பயிற்சியும் இணையதளப் பயிற்சியும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வியூகத்தைக் கற்றுத்தரும் வகையில் கட்சி முன்னணியினரின் சிறப்புரையுடன் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து, சரியான முறையில் திட்டமிட்டு, கழக உடன்பிறப்புகளுடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து கட்சியினருக்குப் பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பாஜக - அதிமுக மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ அமைந்திட வேண்டும். அதுதான், பாசிசத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிடுவதற்கான களத்தை அமைத்துத் தரும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
|
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்: அண்ணாமலை அடுக்கும் காரணங்கள் | இல.ராஜகோபால் | கோவை | 2024-02-14 16:04:00 |
கோவை: "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது காலத்தின் கட்டாயம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
"என் மண் என் மக்கள்" யாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் மாநிலத் தலைவர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிட உள்ளார் என கட்சி அறிவித்துள்ளது. அவர் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
1952-ல் நடந்த முதல் தேர்தலில் 469 உறுப்பினர்கள் தான் இருந்தனர். படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து 543 ஆக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. நாட்டில் நான்கு முறை நடந்த தேர்தல்களில் 1960-ம் ஆண்டுடன் முடியும் கால கட்டத்தில் இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ பயன்படுத்தி காங்கிரஸ் அரசு இரண்டு முறை மாநிலத்தின் ஆட்சியைக் கலைத்தது. இந்திரா காந்தி அதனை முழுமையாக பயன்படுத்த தொடங்கினார். இன்று வரை இந்த விதியை 91 முறைக்கு மேல் பயன்படுத்தியுள்ளோம். இதில் இந்திரா காந்தி மட்டும் 50 முறை பயன்படுத்தி உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை, அடிப்படையில் முதல் 20 ஆண்டுகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையைதான் பின்பற்றி வந்தோம்.
காங்கிரஸ் கட்சி 356 விதியை பயன்படுத்திய காரணத்தால் தேர்தல் நடத்தப்படும் சூழல் மாறத் தொடங்கியது. இன்று ஆண்டுக்கு 5 அல்லது 7 தேர்தல் நடத்தப்படுவதை காண முடிகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப் படுகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் பாகம் 2, 273 பக்கத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்திருப்பார். ஆட்சி இயந்திரம் ஸ்தம்பித்து நிற்பது தவிர்க்கப்படும் என குறிப்பிட்டிருப்பார். தமிழக முதல்வர், அவரது தந்தை எழுதிய புத்தகத்தை வாசிக்க வேண்டும். திமுக கட்சியின் கொள்கையாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை மறந்துவிட்டாரா என தெரியவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகும். ஒரு எம்.பி 20 லட்சம் பேருக்கு சேவை செய்ய முடியாது. அதே போல் ஒரு எம்எல்ஏ 1.85 லட்சத்தில் தொடங்கி 5 லட்சம் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. 1976-ல் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. 2001 வரை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தற்போது 2026 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் சிந்திக்காமல் இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளதாகவே பா.ஜ.க பார்க்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்பது பா.ஜ.கவின் நிலைபாடு. எந்த மாநிலத்துக்குகும் பாதிப்பு இல்லாமல் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதியை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டார். தொடர்ந்து அவர் அப்பணியை மேற்கொள்வார். 22-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு மேல் குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை விடுகின்றனர். இந்திய அரசின் ஆண்டு நிதி நிலை ரூ.45 லட்சம் கோடி. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றினால் ரூ.40 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கும்.
இது நடைமுறையில் எவ்வாறு சாத்தியப்படும். காங்கிரஸ் கட்சிக்கு இது குறித்து தெரியாதா. அவர்கள் ஆட்சி காலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது என்ன செய்து கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ராகுல் காந்தி எது வேண்டுமானாலும் பேசுவார். உண்மை நிலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார்.
|
பொன்முடிக்கு எதிரான வழக்கு: விசாரணை தேதிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-14 15:14:00 |
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களின் விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை என்பதற்கு பதிலாக மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை என மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இதனிடையே, இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28, 29 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13-ம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22-ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, பொன்முடி மீதான வழக்கை பிப்ரவரி 19 முதல் 22-ம் தேதி வரை விசாரிப்பதற்கு பதிலாக, மார்ச் 12 தேதி முதல் 15ம் தேதி வரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை தேதிகளை மாற்றி உத்தரவிட்டார்.
|
ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: முதல்வரை சந்தித்த பின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 14:51:00 |
சென்னை: நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்த நிலையில், அந்த போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், "பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திவிட்டன. இதை முதல்வரிடம் தெரியப்படுத்திய போது, "நான் தராமல் யார் தர போகிறார்கள். நிச்சயம் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், மிக விரைவில் நிதி நிலை சரி செய்த பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் உறுதியளித்தார்.
முதல்வரை சந்தித்ததன் அடிப்படையில் அவர் அளித்த உறுதியின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் எங்களது பொருளாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். 19-ம் தேதிக்கு பிறகு ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீண்டும் கூடி அடுத்தகட்ட முடிவை தெரிவிப்போம். முதல்வர், அமைச்சர்கள் எல்லோரிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தனர்.
|
மது ஆலைகள் மூடல் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை: பாமக‘நிழல் பட்ஜெட்’ 2024 முக்கிய அம்சங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 14:48:00 |
சென்னை: 'கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில்; அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை; குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு; மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55-லிருந்து 17ஆக குறைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட 150 அம்சங்களுடன் பாமக நிழல் நிதி நிலை அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:
1. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,28,971 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,51,514 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும்.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.3. 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.61,103 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.16,354 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.
பெரும் சரிவை நோக்கி தமிழக பொருளாதாரம் - 4. 2023-24ஆம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
5. 2023-24இல் தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1,81,182 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் வரை 13% வருவாய் குறைந்திருக்கிறது.
6. அதேபோல், தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ.2,22,848 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1.90 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
7. தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.37,540.45 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்திருப்பதால் 15% வரை உயரும்.
8. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,063.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை நெருங்கும் என்று தெரிகிறது.
9. 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSDP) ரூ.28.38 லட்சம் கோடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை.
10. 2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.32 லட்சம் கோடி என்ற இலக்கை எட்ட முடியாது.
11. 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024-25ஆம் ஆண்டில் தமிழகப் பொருளாதாரம் சற்று அதிக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
மொத்த கடன் ரூ-.14.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: 12. 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்க நிர்ணயித்திருந்த கடனின் அளவு ரூ.1.43 லட்சம் கோடியைவிட அதிகரிக்கும்.
13. 2024 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ-.7.26 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ-.8.34 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும்.
14. 2025 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, அரசின் நேரடிக் கடன் ரூ.9.39 லட்சம் கோடியாக இருக்கும்.
15. 2024-25ஆம் ஆண்டின் முடிவில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5.11 லட்சம் கோடியாக இருக்கும். அரசின் மொத்தக் கடன் ரூ.14.50 லட்சம் கோடியாக இருக்கும்.
16. 2024-25 முடிவில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.52 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும்.
17. 2024-25ல் நேரடிக் கடனுக்காக ரூ.75,120 கோடி, பொதுத்துறை நிறுவன கடனுக்காக ரூ.43,435 கோடி என மொத்தம் ரூ.1,18,555 கோடி வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும்.
சிக்கன நடவடிக்கைகள்: 18. 2024-25ல் அரசுத் துறைகளுக்கான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும்.
19. அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்ள, ஆடம்பர விடுதிகளில் தங்க தடை
20. அமைச்சர்கள், அதிகாரிகள் அரசுத் துறைகளுக்கு புதிய மகிழுந்துகள் வாங்க தடை
ரூ.2 லட்சம் கோடி வரியில்லாத வருவாய் ஈட்டத் திட்டம்
21. கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரி அல்லாத வருவாய் ரூ.18,940 கோடி மட்டுமே. 2024-25ஆம் ஆண்டில் இதை ரூ.2,00,180 கோடியாக உயர்த்த சிறப்புத் திட்டம்.
22. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.40,000 கோடியும் ஈட்டப்படும்.
23. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும்.
24. ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவதன் மூலம், வரியல்லாத வருவாயின் அளவு ரூ.2 லட்சம் கோடி என்ற அளவை எட்டும்.
அதிக இனிப்பு, கொழுப்பு பொருட்களுக்கு 30% கூடுதல் வரி
25. குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை, பீட்சா, பர்கர், சான்ட்விச், ஷவர்மா போன்ற அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு கொண்ட பொருட்களுக்கு 30% சுகாதார வரி விதிக்கப்படும்.
26. மயோனஸ் மீது 25% தமிழ்நாடு சுகாதார வரி விதிக்கப்படும்.
27. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
2024-25 சமூக நீதி சிறப்பாண்டு
28. 2024-25ஆம் ஆண்டு சமூக நீதி சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
29. தமிழ்நாட்டில் ஜூலை 25ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
30. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
31. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெறப்பட்டு, வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
32. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையிலான 35 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடப்படும்.
மதுவிலக்கு - போதை ஒழிப்பு
33. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.
34. மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.
35. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
36. குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம்
37. சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம். இனி ரூ.418க்கு சமையல் எரிவாயு கிடைக்கும்.
38. ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும்.
39. முதியோர் / ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
40. தமிழ்நாட்டில் 70 லட்சம் பேருக்கு முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு
41. குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.
42. குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
43. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும்.
44. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும்.
45. தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
46. மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.
2024-25ஆம் ஆண்டில் 2 லட்சம் பேருக்கு அரசு வேலை
47. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில், 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
48. தமிழக அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் அனைவருக்கும் பணி நிலைப்பும், காலமுறை ஊதியமும் வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீடு
49. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.
50. தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.
51. தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் உள்ள வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்களின் பட்டியல், முதலில் நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அந்த வரிசையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்
52. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
53. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.
டிஎன்பிஎஸ்சி: நிலையான தேர்வு அட்டவணை
54. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
55. ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி - 4 பணிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதத்தில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும்.
56. முதல் தொகுதி பணிகள் தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை
57. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:
1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000
2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000
3.12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000
4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000
5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
58. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.
59. அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.
60. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.
61. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது
62. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் (Citizenship (Amendment) Act, 2019) செயல்படுத்தப்படாது.
63. தமிழ்நாட்டில் இரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் வரை பணமும் வழங்கப்படும்.
64. தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும்
65. கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்ட பின், அது பூங்காவாக மாற்றப்படும்.
66. கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை
67. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடப்பாண்டில் தொடங்கும்.
68. சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். போரூர் - பூந்தமல்லி இடையே அடுத்தாண்டு போக்குவரத்துத் தொடங்கும்.
69. கோயம்புத்தூரில் 144 கி.மீ.க்கு ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது
70. தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களை நிர்வாக சீர்திருத்தத்தின் மூலமாக இலாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
71. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.
பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
72. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பறக்கும் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
73. தாம்பரம் - செங்கல்பட்டு ஆறுவழி உயர்மட்ட சாலை, மதுரவாயல் - திருப்பெரும்புதூர் உயர்மட்ட சாலை, மாதவரம் சந்திப்பு - வெளிவட்டச் சாலை, திருச்சி - துவாக்குடி உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு.
74. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
75. பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்
76. அளவுக்கு அதிகமான மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், மின் கட்டணம் குறைக்கப்படும்.
77. இரு மாதங்களுக்கு ஒருமுறைக்கு பதிலாக, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும்.
78. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும்.
79. காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
பள்ளிக்கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.32,000 கோடி
80. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
81. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 1000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும்.
82. பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
83. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.
மாநில கல்விக் கொள்கை
84. தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும்.
85. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
உயர்கல்வி
86. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
87. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
88. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.
மருத்துவத்துறைக்கு ரூ.48,000 கோடி
89. 2024-25ஆம் ஆண்டில் மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5%ஆக, அதாவது ரூ.48,000 கோடியாக உயர்த்தப்படும்.
90. மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
91. பொதுமக்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்.
92. அவசர ஊர்திகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 1,353-லிருந்து 2,000ஆக உயர்த்தப்படும்.
93. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
94. புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு
95. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.
96. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.
97. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்
98. தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
99. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.
100. நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
101. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
3. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.
வலிமையான லோக்அயுக்தா
102. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.
103. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
பொதுச் சேவை உரிமைச் சட்டம்
104. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
சட்டம் - ஒழுங்கு
105. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
106. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
மேகதாது அணை தடுக்கப்படும்
107. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும்.
108. மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய நீர்வள ஆணையத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
109. முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும்.
110. அடுத்த ஓராண்டில் அணையின் நீர்மட்டம் 152ஆக உயர்த்தப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி
111. 2024-25ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
112. பாட்டாளி மக்கள் கட்சியின் பதினேழாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.80,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.60,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
113. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
114. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
115. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும்.
பாசன திட்டங்களை செயல்படுத்த தனி ஆணையம்
116. தமிழ்நாட்டில் பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் நீர்ப்பாசனத் திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துவதற்காக 2024-25ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்ட சிறப்பாண்டாக அறிவிக்கப்படுகிறது.
117. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
118. நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும் 10 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
சாகுபடி பரப்பு 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்
119. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.
120. தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
அரிசி விலையைக் கட்டுப்படுத்த கிலோவுக்கு ரூ.15 மானியம்
121. தமிழ்நாட்டில் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உயர்வகை அரிசி, இரண்டாம் தரவகை பொன்னி அரிசி ஆகியவற்றை முறையே கிலோ ரூ.50, ரூ.45 என்ற விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
122. இந்த இருவகை அரிசிகளுக்கும் கிலோவுக்கு ரூ.15 வீதம் தமிழகஅரசு மானியம் வழங்கும்.
123. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,800 விலை கிடைக்கும்.
124. 2024-25 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும்.
125. அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்கும்.
வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு
126. வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகியவற்றில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு திரட்டும் நோக்குடன், வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு 06.04.2025ஆம் தேதி தஞ்சாவூரில் நடத்தப்படும்.
127. வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி திரட்டப்படும்.
128. வேளாண் துறையில் 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
129. சிறப்பாக செயல்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்.
130. மிகச் சிறப்பாக செயல்படும் 250 புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் அரசின் சார்பில் ரூ.1 கோடி வரை முதலீடு செய்யப்படும்.
மாவட்டத் தலைநகரங்களில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள்
131. வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சந்தை வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விளக்கும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள் 3 நாட்களுக்கு நடத்தப்படும்.
132. காவிரி - தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.
133. தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு - அவிநாசித் திட்டம், கொள்ளிடம் தடுப்பணைத் திட்டம் ஆகிய முப்பெரும் திட்டங்களுக்கு ஜூலையில் திறப்புவிழா நடத்தப்படும்.
134. மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் ஜூலையில் நிறைவடையும்.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் திரும்பப்பெறப்படும்
135. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டமசோதா (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) திரும்பப்பெறப்படும்.
136. திருவள்ளூர் வட்டத்தில் 1,703 ஏக்கர் பரப்பில் அறிவு நகரம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.
137. கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.
138. கோவளம் பகுதியில் செயல்படுத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் ரத்து செய்யப்படும்.
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: என்எல்சி சுரங்கங்களுக்குத் தடை
139. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும்.
140. என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.
141. 66,000 ஏக்கர் பரப்பளவில் வீராணம் - பாளையங்கோட்டை சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்பு சுரங்கத் திட்டம் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
142. அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்படும்.
143. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.
144. சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
காலநிலை செயல்திட்டம்
145. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் (TN Urban Areas Climate Action Plan) உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
பல்வேறு தரப்பினர் நலன்
146. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக கிரிமிலேயருக்கான வருவாய் வரம்பை தற்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.
147. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும்.
148. பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்துவதற்கான சட்டமுன்வரைவை விரைவாக நிறைவேற்றும்படி, மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்ளும்.
149. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.
150. 2024-25ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 120 தலைப்புகளில் 463 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தமிழக அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு பாமகவின் நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
''மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது ஏன்?'' - மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-02-14 13:38:00 |
புதுடெல்லி: "தமிழகத்தில் கூட்டணி இல்லை என்பதற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கிடையாது. கூட்டணி அமைக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன." என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய அமைச்சரும் ஆனார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளதையடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனது டெல்லி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணிபுரிவதற்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். இன்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வேன். தமிழகத்தில் கூட்டணி இல்லை என்பதற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கிடையாது. கூட்டணி அமைக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. கட்சி எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். நாளைக்கே தமிழகத்தில் போட்டியிட கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன்." என்றார்.
அப்போது, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எல்.முருகன், "இது என்னுடைய முடிவு அல்ல. பாஜக தேசிய தலைமை எடுத்த முடிவு. எங்களுக்கு எந்த பயமும் கிடையாது.
ஆ.ராசா, திமுகவை தமிழகத்தில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்பதே எங்களின் முதல் பொறுப்பு, கடமை எல்லாம். அதற்கான பணியை தமிழக பாஜகவும், அண்ணாமலையும் செய்துகொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் திமுக தமிழகத்தில் இருந்து காணாமல் போகும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வென்று வருவார்கள்" என்று தெரிவித்தார்.
|
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 13:10:00 |
சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று... ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
இரண்டு... மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார். முழுமையாக வாசிக்க > ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்ப்பது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம் @ பேரவை
தீர்மானம் 1 - “2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது”
என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று முதல் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
தீர்மானம் 2 - “ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்த இரண்டு தீர்மானங்களையும் மாண்புமிகு உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதிமுக, கொ.ம.தே.க., தவாக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவாக பேசிய கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன், "வடக்கே பல மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறீர்கள். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்?. நாங்கள் சந்தேகப்படுவது சரிதானே..." என்றார்.
அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில், "மாநில மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் இது" என்றார். மேலும், "மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் என்றார். முழுமையாக வாசிக்க > “தொகுதி மறுவரையறை குறித்த அரசின் கவலையை பாஜக புரிந்துகொள்கிறது” - வானதி சீனிவாசன் @ பேரவை
"முதல்வர் கொண்டுவந்த 2 தீர்மானங்களையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதாக உள்ளது" என்றார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா.
உறுப்பினர்களின் விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
|
பிப்.16-ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு: தமிழக காங்கிரஸ் ஆதரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 13:06:00 |
சென்னை: பாரத் பந்த் வெற்றிகரமாக தமிழகத்தில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் சாகுபடிக்கான அடக்க விலையோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தார் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் ஆட்சி 10 ஆண்டுகளை நோக்கி நிறைவுபெறப் போகிறது.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் வழங்குகிற வகையில் சட்டப் பாதுகாப்பு அளிக்காமல் மக்களவையில் அச்சட்டத்தை நிறைவேற்றினார். இதை எதிர்த்து பல்வேறு விவசாய அமைப்புகள் தலைநகர் டெல்லியில் ஓராண்டு காலம் கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.
அன்றைக்கு நடைபெறவிருந்த தேர்தலை மனதில் கொண்டு மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஹரியாணாவில் இருந்து நேற்று தலைநகரை நோக்கி 'டெல்லி சலோ' என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பேரணி புறப்பட்டது.
அந்த பேரணியை முடக்குகிற வகையில் உத்திரப் பிரதேசம், ஹரியாணா பாஜக அரசுகள் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் பேரணி செல்லவிடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், பின்னப்பட்ட இரும்பு வலைகள் ஆகியவற்றை பல இடங்களில் அமைத்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் மீறி பெருந்திரளான விவசாயிகள் பேரணியில் திரண்டதை சகித்துக் கொள்ளாத பாஜக அரசு, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மீது தடியடி நடத்தி பேரணியை சிதறடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் மூலம் காவல் துறையினரின் அடக்கு முறையை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளாக விளைபொருளுக்கு வழங்கப்படுகிற குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாயிகளின் விளைபொருள் கொள்முதலில் கார்பரேட்டுகளை அனுமதிக்கக் கூடாது, பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் , மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து மோடி அரசு விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. பாஜக அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் வருகிற பிப்ரவரி 16ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற 77 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகள் போராட்டம் என்பது தலைநகர் டெல்லியோடு முடிவடைந்து விடாமல் அங்கே போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. விவசாயிகள் பிரச்சினை என்பது நாட்டிலுள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களின் நலனை உள்ளடக்கியதாகும்.
எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளோடு கலந்து பேசி அன்றைய தினம் அனைவரும் பச்சை துண்டை அணிந்து பாரத் பந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, பொது மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டுகிறேன். பாரத் பந்த் வெற்றிகரமாக தமிழகத்தில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி கூறினார்.
|
“தொகுதி மறுவரையறை குறித்த அரசின் கவலையை பாஜக புரிந்துகொள்கிறது” - வானதி சீனிவாசன் @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 12:49:00 |
சென்னை: "மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானங்கள் கொண்டு வந்தார். இந்த தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "தென் மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய விதத்திலும் ஒரு சிறப்பான இடத்தை அடைந்துள்ளன.
வருங்காலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்போது நமக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. பாஜகவை பொறுத்தவரை இந்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை புரிந்துகொள்கிறது. நிச்சயமாக எந்த இடத்தில் என்ன நடவடிக்கை வேண்டுமோ, தமிழக பாஜக முழுமையாக அந்த தீர்மானத்தை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கும்." இவ்வாறு பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "தீர்மானத்தை ஆதரிக்கிறீர்கள், அப்படித்தானே" என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த வானதி, "ஆதரிக்கிறோம் என்ற வார்த்தை சபாநாயகருக்கு வேண்டும்" என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய வானதி, "தீர்மானத்தின் கவலையை புரிந்துகொள்கிறோம். அதில் அக்கறை எடுத்துக்கொள்கிறோம். வேண்டிய இடத்தில் நாங்கள் பேசுகிறோம் என எல்லாத்தையும் சொல்லிட்டேன்." என்றார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற இரண்டாவது தீர்மானத்தை பொறுத்தவரை உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 1952ல் இருந்து நடந்த பொதுத்தேர்தல்களை பார்த்தால், அன்று நடைபெற்ற தேர்தல் முறை சிறிது சிறிதாக காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்தது. இதையெல்லாம் நாம் கடந்துவந்தோம். மக்கள் தொகை, கால மாற்றம், தொழில்நுட்ப வசதி இவற்றுக்கேற்ப தேர்தல் நடைமுறைகள், தேர்தல் செலவினங்கள் இவற்றையெல்லாம் நாம் மாற்றிக்கொண்டிருக்கும் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற அவசியம் ஏன் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் ஒரு கற்பனை செய்துகொண்டு நாமாகவே அச்சத்துக்கு சென்று காலத்துக்கேற்ப நடக்க வேண்டிய மாறுதல்களை தடுப்பதாக இருக்கக் கூடாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து இப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு யார் வேண்டும் என்றாலும் யோசனை தெரிவிக்கலாம். அப்படி இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே நாடு, ஒரே தேர்தலில் சேர்க்கப்போவதாக இன்றைய தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் இணைத்துக் கொள்ள போவதாக எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை.
முழுவதுமாக நாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் எல்லாம் உண்மை தான். அவை தான் அதிலிருக்கும் சவால்கள். ஒவ்வோர் ஆண்டும் பல மாநில தேர்தல் நடக்கக்கூடிய இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை சீர்திருத்தமாக பார்க்க வேண்டுமே தவிர யாரோ ஒருவர் ஆட்சி வருவதற்காக நடத்தப்படும் தேர்தல் கிடையாது. அது தேவையில்லாத பயம். தேவையில்லாத பயத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் வருவதாக நாங்கள் நினைக்கிறோம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவருவதற்காக தனது ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களையும் தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இந்த தீர்மானம் அவசியமற்றது என பாஜக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.
|
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்ப்பது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம் @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 12:06:00 |
சென்னை:தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிராக தமிழக அரசின் தனித் தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார். பின்னர், சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தனித் தீர்மானங்களை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று... ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு... மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும்.
இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா?.
சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா. இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?. நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?. நாடாளுமன்ற தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுவதும் நடத்த தயாராக இல்லாத சூழல் தான் இப்போது இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?.
நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே இவற்றுக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதம் ஆகும். உள்ளாட்சி தேர்தல் முழுக்கமுழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அவற்றுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாக சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகும்.
மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் செயலுக்கு யாரும் பலியாகிவிட கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
தொகுதி மறுவரையறை: இரண்டாவதாக தொகுதி மறுவரையறையை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன். தொகுதி மறுவரையறை திட்டத்தில் தென் இந்திய மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிதுவத்தை குறைக்கக்கூடிய சூழ்ச்சி இருக்கிறது. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தமிழ்நாட்டின் மீது தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது.
அரசியல் விழிப்புணர்வு மிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான இந்த முயற்சி முளையிலேயே கிள்ளியெறியபட வேண்டும். இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170ம் பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது.
இதுவரை, 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1976ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிறகும், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற பேரவை இடங்கள் குறைக்கப்படுகின்றன.
அதாவது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்துக்கொண்ட மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது. இதனால் மக்கள் தொகை குறையும மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதிதுவம் குறையும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசை பெறும். அவற்றுக்கான பிரதிநிதிதுவம் அதிகமாகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்த்தாக வேண்டும். மக்கள் தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்கு குறையக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பில் 42வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதுபோலவே, அரசியலமைப்பு சட்டத்தில் 84வது திருத்தமும் செய்யப்பட்டது.
தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்படாது என்றும் 2026ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப் பேரவையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
1971ம் ஆண்டு தமிழ்நாடும், பிஹாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள் தொகையை கொண்டிருந்ததால் மக்களவையில் ஒரே அளவிலான தொகுதிகளை கொண்டிருந்தன. இன்று தமிழ்நாட்டு உடன் ஒப்பிடுகையில் பிஹாரில் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதைய மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை வட மாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்துவிடும். இதனை நினைத்து பார்த்தால் அச்சமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். 39 எம்பிக்கள் இருக்கும்போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும். தமிழ்நாடு கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும், சக்தியை இழக்கும் அதனால் உரிமையை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கிவிடும். எனவே, தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம். மக்கள் தொகையை குறைந்ததை காரணம் காட்டி தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனமடைய செய்யும்.
எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் வரை தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடர செய்வது சரியாகும். இதுபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள் தொகையை காரணம் காட்டி தென் மாநிலங்களுக்கு வரி வருவாயின் பங்கு குறைந்துவிட்டது.
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு. பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி, கூட்டரசு இது. இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தை விட உயர்ந்ததோ முக்கியமானதோ அல்ல. அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று மாநிலங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார அரசியல் பின்னணியை புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதார பண்பையே அது நாசமாக்கிவிடும். இதனால், கனல் வீசிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் வளர்ப்பது போல் ஆகிவிடும். இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சி தத்துவத்தையை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள கூடாது.
2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கைவிட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளனவோ அதே அளவில் இருக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகிறேன்.
தீர்மானம் 1 - "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது”
என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம் 2 - 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேற்காணும் இரண்டு தீர்மானங்களையும் மாண்புமிகு உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
|
பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு: ஓபிஎஸ் இருக்கை மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 10:02:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய (பிப்.13) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும். இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதனையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இந்த நிலையில், இன்று (பிப்.14) அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுவரை அந்த இடத்தில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாம் வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|
சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு யார் காரணம்? - சட்டப்பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 07:06:00 |
சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்.
அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, சென்னை மற்றும் மாநில அளவில் புயல் மற்றும் கனமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.
ஆனால், சென்னை பெருமழை பாதிப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாதது காரணம். வானிலை மையம் 5 நாட்களுக்கு முன்பாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்கவில்லை.
அமைச்சர் சேகர்பாபு: அதிமுக உறுப்பினர் சென்னையை சேர்ந்தவர் இல்லை என்பதால், அரசு மேற்கொண்ட பணிகள் அவருக்கு தெரியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே திட்டமிட்டு முதல்வர் தலைமையில் தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே இரவில் மூன்று மணி நேரத்தில் 33 செமீ மழை பெய்தது.
மூன்று நாட்களுக்குள் இந்த நிர்வாக திறமையுள்ள அரசால் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியது. 2016-ம்ஆண்டு இதேபோன்று பெருமழை பெய்தது. அதுவும் ஒருவாரம் பெய்த மழையின் அளவு 33 செமீதான். அப்போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 10 நாட்கள் ஆனது.
இந்த அரசு மூன்று நாட்களில் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதும், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.70 கோடி அளவுக்கு உணவுப் பொருட்களை கட்டணமில்லாமல் இந்த அரசு வழங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது. இந்த அரசை பாராட்டி, வரவுள்ள மக்களவைத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளையும் திமுகவுக்கு பரிசாக வழங்க சென்னை மக்கள் தயாராக உள்ளனர்.
ஆர்.பி.உதயகுமார்: 2011-ம் ஆண்டில் தானே புயலில் தொடங்கி வர்தா, கஜா, நிவர் புயல் மட்டுமின்றி சுனாமி வந்த வேகத்தைவிட, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க, மெரினா கடற்கரையில் நின்றுமக்களை காத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
கஜா புயல் வந்த போது, முதல்வராக இருந்த பழனிசாமி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 24 மணி நேரமும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து கொண்டே இருந்தார். சென்னையில் உள்ள அமைச்சர்கள் ஒரு சொட்டு தண்ணீர்கூட சென்னையில் தேங்காது என்று உறுதியளித்தனர். மக்கள் அதனை நம்பினார்கள்.
சேகர்பாபு: 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இன்றைய எதிர்க்கட்சி தலைவர், அன்றைய முதல்வர், சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மழைநீர் வடிகால் கட்டி முடித்துவிட்டோம். சென்னையை சிங்கப்பூராக மாற்றிவிட்டோம். எவ்வளவு மழை வந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நான் அப்படி ஒன்றும் பேசவில்லை. நன்றாக தெரிந்து கொண்டு அமைச்சர் பேச வேண்டும். 2,400 கிமீ மழைநீர் வடிகால் சீர்செய்ய, நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, 1,240 கிமீ மழைநீர் வடிகால் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், உங்கள் ஆட்சி வந்த பிறகு மீதமுள்ள பணிகளின்போது, 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது எனவும், எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என்று அமைச்சர்கள்தான் அறிவிப்பு கொடுத்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு: நீங்கள் ஆட்சியைவிட்டு இறங்கிய பின்னர் வந்த பெருமழையால் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, அவர்கள் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் ரூ.2,100 கோடிக்கான மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 20 செமீ அளவுக்கு மழை பெய்யும்போது தண்ணீர் எளிதாக வடிந்துவிடுகிறது.
ஒரேநாளில் அதிக அளவில் வந்ததால்தான் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீர் இரண்டே நாட்களில் வடிந்துவிட்டது. 20 செமீ அளவுக்கு மழை பெய்தால் சென்னையின் பெரும்பகுதியில் தண்ணீர் நிற்காது. கொசஸ்தலை ஆறு திட்டம் முடிந்துவிட்டால், கூடுதலாக 10 செமீ மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிடும். அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
உதயகுமார்: இதுவரை திமுக ஆட்சிக்காலத்தில் வெள்ள தடுப்புக்கு சென்னை மாநகராட்சிக்கு ஒரு பைசாகூட ஒதுக்கீடு செய்யவில்லை. தொலைநோக்கு சிந்தனையோடு வெள்ள தடுப்பு நிதியை ஏற்படுத்தியவர் முதல்வராக இருந்த பழனிசாமிதான். மழை வெள்ளத்தால் சென்னை உட்பட தென்மாவட்டங்கள் தத்தளித்தபோதும், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இன்னும் மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசாகூட வாங்க முடியவில்லை.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா வராவிட்டாலும்கூட, தமிழக அரசு தனது நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உட்பட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் 2015 டிசம்பரில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அந்த காயம் இருக்கும்.
பழனிசாமி: கஜா புயலால் தென்மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டபோது, அந்த சேதத்துக்கு இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கியது.
காவிரி பிரச்சினை தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காலதாமதம் செய்தபோது, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சூழலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்தினர். செம்பரம்பாக்கத்தில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அமைச்சர் சொல்கிறார்.
அந்த அமைச்சர் சென்னையில்தான் இருக்கிறார். 35 ஆயிரம் கன அடிதான் திறக்க முடியும். நீர்வளத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்ளுங்கள். தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு பேசுங்கள். அங்கு நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வெள்ள சேதம் ஏற்பட்டதுதான் உண்மை.
|
காதலர் தினத்தில் உள்ளூர் ரோஜா மலர்களுக்கு நேர்ந்த சோகம்: ஏற்றுமதியில் இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள் | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-02-14 06:25:00 |
மதுரை: புதிய ரகங்கள் இல்லாதது, தரம் குறைந்தரோஜாப் பூக்கள் உற்பத்தியால் வெளிநாட்டுஏற்றுமதியில் இந்தியாவை, ஆப்பிரிக்க நாடுகள் முந்தியுள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டு சந்தைகளிலும் ரோஜாக்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
திண்டுக்கல், ஓசூர், உதகை போன்ற இடங்களில் ரோஜாப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் 95 சதவீதம் ஓசூரிலும், மீதி 5 சதவீதம் மற்ற 2 இடங்களிலும் நடக்கிறது.
காதலர் தினத்தில் ரோஜாப் பூக்களுக்கு சர்வதேச சந்தைகள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை பெரும் வரவேற்பு கிடைக்கும். அதனால், ஓசூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்களுக்கு மேல் ஏற்றுமதியாகும். ஆனால், நடப்பாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாப் பூக்களுக்கு கடந்த காலங்களைப்போல பெரும் வரவேற்பு இல்லை.
இதுகுறித்து அகில இந்திய மலர்கள் உற்பத்தியாளர்கள் கவுன்சில் இயக்குநர் பாலசிவ பிரசாத் கூறியதாவது: சர்வதேச அளவில் நெதர்லாந்து, கொலம்பியா, கென்யா, எத்தியோப்பியா, கென்யா, ஈக்வேடார் மற்றும் சீனாவில் ரோஜா உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 50 முதல் 100 ஏக்கரில் ரோஜாப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நெதர்லாந்தில் ரோஜாப் பூக்களுக்கான சர்வதேச சந்தை உள்ளது. சீனாவின் புத்தாண்டு தினம் கடந்த 10-ம் தேதி நடந்தது. அங்கு உற்பத்தியாகும் பூக்கள், அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கே போதுமானதாக உள்ளதால், அவர்கள் பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மாட்டார்கள். தற்போது இந்தியாவில் புதிய ரகங்கள் இல்லாமை, தரம் குறைந்த உற்பத்தி போன்றவற்றால் வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்துள்ளது.
தற்போது விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஸ்டம்புடன் (நீண்ட காம்பு) கூடிய ரோஜாவை ரூ.10 முதல் ரூ.13-க்குவாங்கி, ரூ.60 முதல் ரூ.100 வரை தரத்துக்கு ஏற்ப விற்கிறார்கள். அதுவே ஏற்றுமதிதரத்துக்கு ரூ.16 முதல் ரூ.18 வரை கொடுக்கிறார்கள்.
இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பகுதிகளில் இருந்து 30 லட்சம் பூக்கள் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளது. ஓசூர் உள்பட தமிழகத்தில் முதல் தர ரோஜாக்கள் உற்பத்தியாவதில்லை.ரோஜாமலர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அந்த வரியை அரசு மீண்டும் ஏற்றுமதி செய்கிறவர்களுக்கு திருப்பி வழங்கும்நடைமுறை உள்ளது. ஆனால், இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாததால் மலர் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் ஏற்றுமதி செய்ய விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லை.
தமிழகத்தில் உற்பத்தியாகும் தாஜ்மகால் ரோஜா, 20 ஆண்டுகளுக்கு முன் வந்த ரகம். ஆனால், சர்வதேச அளவில் புதிதுபுதிதாக நிறைய வந்துவிட்டன. வெளிநாடுகளில் உற்பத்தியாகும் பூக்கள் 6 முதல் 7.4 செ.மீ. வரை நீளம் உள்ளது. ஆனால் நமது தாஜ்மகால் பூக்கள் 4½ செ.மீ. நீளத்தை தாண்டுவதில்லை. அதேபோல, நமது பூக்களின் காம்பு 50 முதல் 55 செ.மீ. வரை உள்ளது. ஆனால் வெளிநாட்டு ரக பூக்கள் 90 முதல் 100 செ.மீ. நீளம் கொண்டவையாக உள்ளன. மேலும், பூக்களின் தரமும், நிறமும் வெளிநாட்டு பூக்களில் சிறப்பாக உள்ளது. இவையும் ஏற்றுமதி குறைந்ததற்கு காரணங்களாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்கு தப்பி ஓட்டம் | செய்திப்பிரிவு | வண்டலூர் | 2024-02-14 06:20:00 |
வண்டலூர்: வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகையான 1,977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசமாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து, 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் ஆகியவை, ஜன.28-ம் தேதி, வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இதற்கு மாற்றாக, வண்டலூரில் இருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக் கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல்பூங்காவுக்கு நேற்று அனுப்பப்பட்டன.
புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனி கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் 5 அனுமன்குரங்குகள், பூங்கா மருத்துவமனை அருகே தனிக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் மேலும் 5 குரங்குகள் ரெஸ்கியூ மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பூங்கா மருத்துவமனை அருகே தனிக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 2 குரங்குகள் நேற்று காலை 8 மணியளவில் கூண்டிலிருந்து தப்பித்து காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. கூண்டிலிருந்து குரங்குகள் தப்பிச் சென்ற சம்பவம், பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாயமான குரங்குகளை பூங்கா ஊழியர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பூங்கா காட்டுப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பூங்காவைச் சுற்றி ஏராளமான காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி குரங்குகளைப் பிடிக்க தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
|
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், மலிவு உணவகம் தேவை: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை | செய்திப்பிரிவு | கிளாம்பாக்கம் | 2024-02-14 06:17:00 |
கிளாம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசின் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மலிவு விலை உணவகங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தநாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் ரயில்வே சந்திப்பு உள்ளதால்செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். செங்கல்பட்டிலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையும் வேண்டும்.
மீனம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி இப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தை மகேந்திரா சிட்டி வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு கூடுதல் ரயில் சேவை இயக்க வேண்டும். மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான செயலி சென்னை பேருந்து செயலியில் உள்ளது போன்று தமிழ்நாடு அனைத்து பேருந்துக்கான ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
|
வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-14 06:16:00 |
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு வெளியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது: இந்த அரசு எப்போதுமே அரசுஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது.கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், கடந்தாண்டு ஜூலை 1 முதல்மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்படுகிறது. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016,2017, 2019-ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத் தக் காலங்கள் மற்றும்தற்காலிகப்பணிநீக்க காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்யப்பட்டுள்ளது.
சிறப்புக் காலமுறை ஊதியத்தில்பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமி்ன்றி, ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு 2021-22-ம் ஆண்டில் ரூ.25கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.50 கோடியும் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்துக்கு சிறப்பு நிதியாகஅரசு வழங்கியுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய ரூ.25 கோடி சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567பேருக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். புதியஅரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை.
தமிழக அரசு ஊழியர்களின் பலகோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழகம் சந்தித்த 2 பெரும் இயற்கைப் பேரிடர்கள், எதிர்பாராத பெரும் செலவினங்கள், மத்திய அரசிடம் இருந்துநிதி பெறப்படாத நிலையில், மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், ஜிஎஸ்டி இழப்பீடு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிறுத்தம்போன்றவற்றால், மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அரசு வருவாயை பெருக்கி நிதிநிலையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
விரைவில் நிதிநிலை சீரடைந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன்பரிசீலிக்கும். அரசு ஊழியர்கள்ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது. எனவே இந்தச் சூழலில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த அறிவிப்பினைக் கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசின் வேண்டுகோளை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் 3 அமைச்சர்கள் இன்று (பிப்.13) நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் வெளியிட்ட பத்திரிகை செய்தியை ஜாக்டோ ஜியோ முற்றிலுமாக நிராகரிக்கிறது.
வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் அழைத்துப் பேசி வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக அரசின் முடிவினை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|