Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
மூணாறில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை | என்.கணேஷ்ராஜ் | மூணாறு | 2024-01-29 21:07:00 |
மூணாறு: மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகே ஞாயிறு இரவு வந்த யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது. இதனால் தொழிலாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியிலே எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு காலனிகளை அமைத்து தந்துள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு அருகிலேயே வனப்பகுதி அமைந்துள்ளதால் யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி, புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. குறிப்பாக ஒற்றை காட்டுயானை அடிக்கடி இப்பகுதியில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பகுதியான எக்கோ பாய்ண்ட் பகுதிக்கு இந்த யானை வந்ததால் கடைக்காரர்கள் கடைகளை தார்பாயினால் மூடிவிட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்று விட்டனர். இருப்பினும் அங்கு விற்க வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழம், மக்காச்சோளம், பப்பாளி போன்ற பழங்களின் வாசனைக்கு கவரப்பட்டு துதிக்கையை நுழைத்து பழங்களை சாப்பிட்டது. பின்பு வனத்துறையினர் இந்த யானையை விரட்டினர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு குண்டுமலை அப்பர் டிவிஷன் பகுதிக்கு வந்த இந்த யானை தொழிலாளர்கள் குடியிருப்புகளின் தகர கொட்டகைகளை அடித்து கீழே தள்ளியது. அருகில் உள்ள தோட்டத்தில் வாழைகளை உண்ண நுழைந்ததால் வாழைமரங்கள் பெருமளவில் சேதமடைந்தன. தொழிலாளர்களின் வீட்டுக்கு அருகே விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ், கேரட் மற்றும் தோட்டப்பயிர்களை உண்ணும் நோக்கில் யானைகள் சமீபகாலமாக அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன.
இதனால் குடியிருப்புகள் சேதமாவதுடன், உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு அருகில் பயிரிட்டு வந்த காய்கறி விவசாயத்தை கைவிடத் தொடங்கி உள்ளனர்.தொழிலாளர்கள் கூறுகையில், வனத்துறையினர் யானையை விரட்டுவதுடன் பணியை முடித்துக் கொள்கின்றனர். மின்வேலி, அகழி போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். யானை நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
|
பிப்.1 முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 20:52:00 |
சென்னை: மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்.1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்.1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தனியார் நிறுவனத்தின் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு @ கோவை | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-01-29 20:37:00 |
கோவை: தனியார் நிறுவனத்தின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் செயலியில் உறுப்பினர்களாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால், உறுப்பினர் ஆகலாம், யூடியூப்பில் வீடியோ அனுப்பி வைக்கப்படும். அந்த வீடியோவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால், முதலீடு செய்த பணத்தின் அடிப்படையில் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அதற்காக செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அச்செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை பதிவு செய்தனர். பணமும் செலுத்தினார்கள்.
இந்நிலையில், இந்நிறுவனம் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் பணத்தை பெற்று, அதில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகப்படியான லாபத்தொகையை எப்படி கொடுக்க முடியும், இது மோசடி என கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையிடம் சிலர் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர். இந்நிறுவனத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் அவர்கள், நிறுவனத்தின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய காவல்துறையினரிடம் வலியுத்துவதற்காக இன்று (ஜன.29) காலையில் வாகனங்கள் மூலம்10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீலாம்பூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகே குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகர துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யநாதன் மற்றும் அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர் : அப்போது, அங்கு குவிந்திருந்த உறுப்பினர்கள், இந்நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே பகுதியில் திரண்டதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின.
இதற்கிடையே, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த உறுப்பினர்கள் கூறும்போது,‘‘நாங்கள் பணம் செலுத்தி உள்ள நிறுவனத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். எங்களுக்கு அனுப்பப்படும் வீடியோவில் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நாங்கள் அளிக்கும் பதிலை பொறுத்தும், நாங்கள் முதலீடு செய்த பணத்தை பொறுத்தும் ஒரு வீடியோவுக்கு ரூ.5 முதல் ரூ.1,800 வரை பணம் கிடைக்கும். கடந்த ஒரு வருடமாக எங்களுக்கு பணம் கிடைத்து வருகிறது. இதுவரை யாரிடமும் மோசடி செய்யவில்லை. சிலர் தவறான புகார் அளித்துள்ளனர். அதன் பேரில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும்’’ என்றனர்.
தொடர்ந்து விசாரணை : இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது,‘‘கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தில் அடிப்படை உறுப்பினராக ரூ.360, சில்வர் உறுப்பினருக்கு ரூ.3,060, கோல்டு உறுப்பினருக்கு ரூ.60 அயிரத்து 660, கிரவுண் உறுப்பினருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 260 செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப தொகையும், சிறப்பு பரிசு தொகையும் அளிக்கப்படும். இதில் உறுப்பினர்களாகும் நபர்களுக்கு வீடியோ அனுப்பப்பட்டு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது அவர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகையின் அடிப்படையில் பணமும், சில வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த தொகை எதில் இருந்து வழங்கப்படும் என்றும், சில மாத்திரைகள் கொடுக்கப்படுவதால், அவை மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் உறுதிசெய்யப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது,’’ என்றனர்.
.
|
ப்ரீமியம் ஆளுநருக்கு மீடியா மேனியா முதல் மஸ்க்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட் வரை | செய்தி தெறிப்புகள் 10 @ ஜன.29, 2024 | செய்திப்பிரிவு | சாடல் | 2024-01-29 19:54:00 |
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு 'மீடியா மேனியா' - தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடல்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது; தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவால், அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
தருமபுரி | சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு | எஸ்.செந்தில் | அரூர் | 2024-01-29 19:16:00 |
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வனப்பகுதியில் சாலை வசதி கோரி மலைக் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கலசபாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, பொய்க்குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் அமைந்துள்ளன. சுமார் 4500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் தங்களது மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுவழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் இப்பாதைகளில் இரண்டு இடங்களில் காட்டறுகள் ஓடுவதால் போக்குவரத்து அப்போது முற்றிலும் பாதிக்கப்படும் நிலை நிலவி வருகின்றது.
தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கடந்த முறை தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தினர். அப்போது அரசு சார்பில் விரைவில் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைப்பு பணிகள் நடக்கவில்லை. இதனிடையே சாலை வசதிக்கோரி கலசப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை 11.15 மணிக்கு தொடங்கிய சாலை மறியலால் சேலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மறியல் குறித்து தகவலறிந்து வந்த, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் டிஎஸ்பி ஜெகன்நாதன், வட்டாட்சியர் வள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரவளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தம்மாள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். இருப்பினும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனிடையே பிற்பகல் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்ற போலீசார் முயற்சித்தனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பிற்பகல் 3.15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. மறியல் முடிவுற்ற நிலையில் அதன்பின்னர் போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.
|
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு 'மீடியா மேனியா' - தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 18:30:00 |
சென்னை: "ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்" என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவால், அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?
கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - சாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது. அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?
அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.
'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர். சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா? என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா? என்றால் இல்லை. குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா? என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் உதவியாக இருக்கிறாரா? என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.
"ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பாஜக தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பதவிக்காலம் முடிந்தும் துணைவேந்தர் பங்களாவை காலி செய்யாத குர்மீத் சிங்: போராட்டம் நடத்த மத்திய பல்கலை. சங்கங்கள் முடிவு | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2024-01-29 17:59:00 |
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் குர்மீத் சிங், 2017-ம் ஆண்டு நவ. 29-ம் தேதி பொறுப்பேற்றார். 2022-ம்ஆண்டு நவ.23-ம் தேதி இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது.
புதிய துணைவேந்தரை நியமிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் செயற்குழுவில் உள்ள இருவரின் பெயர்களை பரிந்துரைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இச்சூழலில் குர்மீத்சிங்கின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
இக்காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தரவரிசை கடுமையாக சரிந்தது. மேலும் பலவிதகுற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப் பட்டன.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் புதிய கல்விக்கொள்கையை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சூழலில் பேராசிரியர் குர்மீத் சிங்கின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் 2023 நவ.23-ம்தேதி முடிவடைந்தது. அவருக்கு, மத்திய அரசு பதவி நீட்டிப்பை அளிக்கவில்லை.
பேராசிரியர் குர்மீத் சிங் தனது பதவியில் இருந்து விலகியவுடன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கே. தரணிக்கரசுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது பொறுப்பு துணைவேந்தராக தரணிக்கரசு செயல்பட்டு வருகிறார்.
பதவிக்காலம் முடிந்து இரண்டு மாதங்களாகியும் முன்னாள் துணைவேந்தர் குர்மீத் சிங் அவர் தங்கியிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களாவை காலி செய்யாமல் தொடர்ந்துதங்கியுள்ளதற்கு பல்கலைக்கழக சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பங்களா முன்பு போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளன.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (puta), பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியாளர் நலச்சங்கம் (puntswa) மற்றும்புதுச்சேரி பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கம் (pusc/ stewa) ஆகியவை தரப்பில் இருந்து தற்போதைய துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பல்கலைக்கழகத்தின் அசையும், அசையாத சொத்துகளை தற்போதைய துணைவேந்தர் கையில் எடுத்து, பல்கலைக்கழக வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பதவிக்காலம் முடிந்த துணைவேந்தர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
துணைவேந்தர் பங்களா என்பது பணியாளர் களைக் கொண்ட முழு வசதியுடன் கூடிய தங்குமிடம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளுக்கான நிதி, மின்கட்டணம் ஆகியவை பல்கலைக்கழக கருவூலத்தில் இருந்து செலுத் தப்படுகிறது.
ஏற்கெனவே, இதற்கு முன் டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய குர்மீத் சிங், அங்கு இதுபோல தங்கியிருந்த வகையில் ரூ. 23 லட்சம் வரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இங்கு பங்களாவை காலி செய்யாமல் இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் வாகனங்களையும், ஓட்டுநர்களையும் போக்குவரத்து பிரிவினர் அவருக்கு தொடர்ந்து வழங்கியதற்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ‘அவுட்சோர்ஸ்’ மூலம் ஓட்டுநர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பதவிக்காலம் முடிந்தும் துணைவேந்தர் பங்களாவில் தங்கியிருப்பது மிக உயர்ந்த பதவியை வகித்த ஒருவர் செய்யும் தகுதியற்ற செயல். தற்போதைய நிர்வாகமும் அதற்கு எதிராக செயல்படாமல் உள்ளது.
அவர் காலி செய்யாவிட்டால், அந்த பங்களா முன்பு போராட்டம் நடத்துவோம். இதைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் தந்துள்ளோம்'' என்று தெரிவித்தனர்.
|
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வருகை - பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் | க.ரமேஷ் | கடலூர் | 2024-01-29 17:48:00 |
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரியில் இருந்து இன்று(ஜன.29) காலை சுமார் 9 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடும்பத்தினருடன் தனி ஹெலிகாப்டரில் சிதம்பரம் அண்ணாமலைநகர் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்க தளத்திற்கு வந்தார். தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜூம் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஜக்தீப் தன்கர் கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். குடியரசு துணைத்தலைவர் கோயில் வாயிலிருந்து கோயிலில் உள்ள 21 படி வரை பேட்டரி வாகனத்தில் சென்றார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் சென்றனர். பின்னர் கோயில் கனக சபை மீது ஏறி அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலுக்குச் சென்றும் சாமி தரிசனம் செய்தனர். குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேலும், முக்கிய சாலை பகுதியில் பொதுமக்களை போலீஸார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. புவனகிரி எல்லையம்மன் கோயிலுக்கு ஜக்தீப் தன்கர் செல்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் மதியம் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
|
''ரஜினி, கமல், விஜய் உட்பட அனைவரிடமும் ஆதரவு கேட்போம்'' - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 17:29:00 |
சென்னை: "வரும் மக்களவைத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரவரது விருப்பம்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழக பாஜக சார்பில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தென்சென்னை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. ஏற்கெனவே, பாஜக தேர்தல் பணிகளைத் துவக்கிவிட்டது. இந்த தேர்தல் அலுவலகம், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான மிக முக்கியமான மையமாக இருக்கும். இந்த தேர்தல் அலுவலகங்கள், பாஜகவின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும்.
இண்டியா கூட்டணியில் மிக முக்கியமாக பங்கு வகித்த நிதீஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். கடந்த பத்து நாட்களில் இந்த கூட்டணியில் இருந்தவர்கள் எல்லாம் எப்படி பிரிந்து செல்கின்றனர், என்பதை பார்த்து வருகிறோம். எந்த மாநிலத்தில் யாரைத் தொடர்பு கொள்வது, யாருடன் கூட்டணி அமைப்பது என்று தேசிய தலைமை கவனித்து வருகிறது. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்ன செய்துள்ளது என்பதை விளக்கி பாஜக பிரச்சாரம் செய்யும். தமிழகத்தில் கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும் வரை அதுதொடர்பாக நாங்கள் எதுவும் பேசுவதற்கு இல்லை.
இண்டியா கூட்டணி சுயநலத்துக்காக தொடங்கப்பட்ட கூட்டணி என்று ஆரம்பம் முதலே கூறிவந்தோம். இந்த கூட்டணி நிலைக்காது என்பதை மீண்டும் மீண்டும் கூறி வந்தோம். அக்கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லை. இதனால், அந்த கூட்டணி சிதறிக் கொண்டு இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஒவ்வொருநாளும் புதிய உறவுகளை, புதிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. வரும் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரவரது விருப்பம்" என்று கூறினார்.
|
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல் | எஸ்.கே.ரமேஷ் | கிருஷ்ணகிரி | 2024-01-29 17:24:00 |
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மகாராஜாகடையைச் சேர்ந்தவர் விவசாயி சாம்பசிவம்(55). இவர் இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூவகவுண்டன் ஏரி அருகிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகள் தாக்கியதில் சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, சாம்பசிவத்தின் சடலத்துடன், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மகாராஜாகடை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் வனத்துறையினரும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ''இந்த பகுதியில் சுற்றி திரியும் யானைகளை விரட்ட, போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினர்.
வனத்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போதும் அப்பகுதி மக்கள் ''ஏற்கெனவே கூறினோம், அப்படி இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை'' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர், ''இனி யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறோம்'' என்று உறுதியளித்ததையடுத்து, 9 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் பகல் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
2 ஆண்டுகளில் 5 பேர் உயிரிழப்பு: இதுகுறித்து மகாராஜாகடை கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி கூறும்போது, ''வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் தொடர்மழையால் நீர்நிலைகள் நிரம்பி செழிப்பாக உள்ளது. இதனால் இவ்வழியே ஆந்திரப் பிரதேச வனத்தை நோக்கிச் செல்லும் யானைகள் கூட்டம், அடிக்கடி பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நாரலப்பள்ளி ஊராட்சியில் மட்டும் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்றார்
|
''பணம் சம்பாதிக்க இங்கு வரவில்லை'' - ஊழல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு டாக்டர் தமிழிசை கோபம் | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-01-29 17:13:00 |
புதுச்சேரி: இலவச லேப்டாப் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதில் துணைநிலை ஆளுநருக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ள துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், "பணத்தை பற்றி பேசினால் கோபம் வரும் - மருத்துவராக சம்பாதித்து விட்டுதான் இங்கு வந்துள்ளேன். சம்பாதிக்க இங்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. கலந்துரையாடல் நிகழ்வில் மாணவர்களுடன் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரதமருடனான கலந்துரையாடல் காரணமாக மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் கூடுதல் தைரியத்தைப் பெற்றுள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்." என தெரிவித்தார்.
கேள்வி: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் ஆளுநருக்கும் தொடர்புள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனரே?
பதில்: இதெல்லாம் சும்மா. எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது. அவர்களை என்னிடம் வந்து கேட்க சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நல்லது செய்துள்ளோம். என்னை பொருத்தவரை எந்த தொடர்பும் இல்லை. பணத்தை பற்றி பேசினால் எனக்கு கோபம் வரும். மருத்துவராக இருந்து சம்பாதித்து விட்டுதான் இங்கு வந்துள்ளேன். சம்பாதிக்க இங்கு வரவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது.
கேள்வி: புதுச்சேரியில் ஆளுநர் போட்டியிடுவாரா என எதிர்க்கட்சித்தலைவர் சவால் விட்டுள்ளாரே?
பதில்: அவர் சவால் விட்டுக்கொண்டே இருக்கட்டும். பார்க்கலாம்.
கேள்வி: அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன்கூட இல்லை. காவலர் ஒருவருக்கு தரையில் படுக்கவைத்து சிகிச்சை தருகிறார்களே?
பதில்: அனைத்து நோயாளிகளுக்கும் சமமாக சிகிச்சை தரப்படுவது அவசியம். விசாரிக்கிறேன்.
கேள்வி: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறும் நிலையில் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி பூரண மதுவிலக்கை அமல்படுத்துமா?
பதில்: இக்கேள்வியை பாஜக தலைவரிடம் கேளுங்கள்.
|
தண்டவாளத்தை தாண்டாதே! - ஆவடி, திருவள்ளூர் கிராஸிங்கில் ரயில் மோதி கடந்தாண்டு 105 பேர் உயிரிழப்பு | இரா.நாகராஜன் | திருவள்ளூர் | 2024-01-29 17:07:00 |
திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல்நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் ரயில்களில் மோதி 105 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களை பயன்படுத்தவேண்டும் என ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை–அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலைய பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்கள், விபத்துகள் உள்ளிட்டவைகள் தொடர்பான வழக்குகளை சென்னை- பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில்வே காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை ரயில்களில் மோதி நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள்தான்.
இந்நிலையில், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் கவனக்குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால் 105 பேர், ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களை சேர்ந்த போலீஸார் தெரிவித்ததாவது:
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், அம்பத்தூர் ரயில் நிலையம் முதல், பட்டாபிராம் இ-டிப்போ வரை உள்ள சுமார் 15 கி.மீ. தூர பகுதிகள் ஆவடி ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன. அதேபோல், நெமிலிச்சேரி ரயில் நிலையம் முதல், கடம்பத்தூர் ரயில் நிலையம் வரை உள்ள 21 கி.மீ. தூர ரயில்வே பகுதிகள் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன.
இவ்விரு காவல் நிலைய எல்லைக்குள், திருமுல்லைவாயல், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, புட்லூர், திருவள்ளூர் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைகளில் தண்டவாளத்தை கவனக் குறைவோடுகடப்பது போன்ற செயல்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆவடி ரயில்வே காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-ம் ஆண்டுரயில்களில் மோதி 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக் குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால் 48 ஆண்கள், 12 பெண்கள் என, 60 பேர் உயிரிழந்துள்ளனர்; இரு ஆண்கள் ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணித்த போது, தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் ரயில்களில் மோதி 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக் குறைவோடு ரயில் தண்டவாளங்களை கடந்ததால், 40 ஆண்கள், 5 பெண்கள் என, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததந்தை, 2 மகள்கள் என 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்கள், ஒரு பெண் என 6 பேர் ரயில்களில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
மொபைலில் பேசியபடியே... ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கணிசமானவை, மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஹெட்போன் மூலம் திரைப்பட பாடல்களை கேட்டுக்கொண்டும் ரயில் தண்டவாளங்களை கடந்ததால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, எங்கள் எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் நாள்தோறும் ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியும் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. இனியாவது, ரயில்வே தண்டவாளங்களை கடக்க சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
|
மழைநீர் வடிகால் இல்லாததால் மேடவாக்கம் மக்கள் அவதி: புதிய சாலைகளும் கடும் பாதிப்பு | கி.கணேஷ் | சென்னை | 2024-01-29 17:05:00 |
சென்னை: சென்னையின் புறநகரில் வளர்ந்து வரும் பகுதிகளில் மேடவாக்கமும் ஒன்று. மேடவாக்கம் அருகில் உள்ள பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால் மேடவாக்கம் ஊராட்சி பகுதியாகும். தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்புக்கு தயாராக உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.
அதிகளவில் தனி குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட இப்பகுதியில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஊராட்சியாக இருப்பதால், இப்பகுதியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படவில்லை. மழைநீர் வடிகால்களும் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலம் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் குடியிருப்புகள், தனி வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதை காண முடியும்.
குறிப்பாக, மேடவாக்கம் பகுதியின் பிரதான குடியிருப்பு பகுதியான பாபுநகரில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேடவாக்கம் பாபு நகரை பொறுத்தவரை 4 பிரதான சாலைகள் உள்ளன. மேடவாக்கம்–மாம்பாக்கம் பிரதான சாலையில் இருந்து தொடங்கும் இந்த 4 சாலைகளில் முதல் 3 சாலைகளுக்கு இணைப்பு சாலைகள் உண்டு. 4-வது சாலை மட்டும் இணைப்பின்றி துண்டிக்கப்பட்டு உள்ளது.இந்த 4 சாலைகளிலும் மழைநீர் வடிகால்கள் இல்லை.
இதனால், மழைக்காலங்களில் மாம்பாக்கம் பிரதான சாலையில் இருந்து வரும் மழைநீர், இந்த 4 சாலைகள் வழியாக பின்புறம் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கிச்செல்லும்.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போதும், மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலையில் இருந்து வந்த மழை நீர், பாபுநகர் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து சாலையிலேயே வழிந்தோடியது. சாலையின் இறுதியில், 3-வது பிரதான சாலைகளுக்கான இணைப்பு சாலையில் உள்ள கால்வாயில் சென்று சேர்ந்தது. அந்த கால்வாய் இந்த மழைநீரை தாங்கும் அளவுக்கு இல்லாததால், இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதில், 4-வது பிரதான சாலை பாதியில் நிற்பதால், சாலையின் இறுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அதிகளவில் நீர் தேங்கியதால், இந்த சாலையின் இறுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த கதவு வழியாக, பின்புறம் உள்ள ராஜா நகருக்கு செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறும்போது, ‘‘எங்கள் சாலை மாம்பாக்கம்- மேடவாக்கம் சாலையை விட தாழ்வாக இருப்பதால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மழைநீர் அதிகளவில் வரும்போது, சாலையின் இறுதியில் உள்ளவீட்டின் உரிமையாளர், மனிதாபிமானத்துடன் தனது வீட்டு சுற்றுச்சுவரில் உள்ள கதவை திறந்து தண்ணீர் வெளியேற அனுமதிக்கிறார். அவர் அனுமதிக்காவிட்டால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும்.
இந்நிலையில், தற்போது 4-வது பிரதான சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். தற்போது 3 மற்றும் 4-வது பிரதான சாலைகளை இணைக்கும் சாலைகளில் ஒன்றில்சாலை போடுவதற்கு பதில் கல் பதித்துள்ளனர். இதேபோல், அனைத்து சாலைகளையும் மாற்றி, கால்வாய் அமைத்தால் எங்கள் பிரச்சினை தீரும்’’ என்றனர்.
இதுதவிர, மேடவாக்கத்தில் வேளச்சேரி–தாம்பரம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மாம்பாக்கம்–மேடவாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள், பாபுநகர் 1-வது அல்லது 3-வது பிரதான சாலைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
இந்த வாகனங்கள், பாபுநகர், நீலா நகர் வழியாகவேளச்சேரி- தாம்பரம் சாலையை அடைகின்றன. அரசுப் பேருந்து தவிர்த்து மற்ற கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் இந்த சாலைகளை பயன்படுத்துகின்றன. தண்ணீர், கழிவுநீர் லாரிகளும் இதில் செல்வதால், சாலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சாலைகள் கடந்த மழைக்கு முன்னதாக சீரமைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பாபுநகர் 3-வது பிரதான சாலை புதிதாக போடப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில், தற்போது முதல் 3 சாலைகளிலும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி அப்பகுதிகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன.
இதுகுறித்து, பாபுநகரைச் சேரந்த தனியார் நிறுவன பணியாளர் தர் கூறும்போது, ‘‘பாபுநகர் 1 மற்றும் 3-வது சாலைகளில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் அதிகளவில் பயணிப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்த சூழலில் சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
முதல் சாலையின் இறுதிப் பகுதியில் மழைநீர் தேங்கி அந்த பகுதியும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. இதுதவிர, 1,2,3 சாலைகளை இணைக்கும் 2 குறுக்கு இணைப்பு சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. வாகனங்களை திருப்பிவிடுவதற்கான நடவடிக்கையை எடுத்த போக்குவரத்து காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘ரூ.3 கோடி செலவழித்து பாபுநகரில் சாலை மற்றும் நீலாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. தற்போது சாலை மீண்டும் பழுதுபட்டுள்ள நிலையில், தற்காலிகமாக சீரமைத்துள்ளோம்.
அடுத்த கட்டமாக நிதி வந்ததும் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். மேடவாக்கம் ஊராட்சியை, தாம்பரம் மாநகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியாக மாறும்போது, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
|
பிரதமர் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி @ மதுரை | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2024-01-29 16:37:00 |
மதுரை: பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 2019-ம் ஆண்டு ஜன. 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். தற்போது அடுத்த (2024) மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.
அவ்வப்போது மத்திய, மாநில அமைச் சர்களால் கட்டுமானப் பணி தொடர்பாக அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றன. ஆனால், 5 ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது.
அண்மையில் மெயின் டெண்டருக்கு முந்தைய ‘ப்ரீ டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கையும் வேகம் பெறவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு கடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.
தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளை மதுரைக்கு மாற்ற வாடகை கட்டிடத்தை அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி மதிப்பீடு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த மதிப்பீடாக ரூ.1977.8 கோடி முடிவு செய்யப்பட்டு, அதில் 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜெய்கா நிறுவனமும், 18 சதவீதத் தொகையான ரூ.350.1 கோடியை மத்திய அரசும் வழங்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த ஆண்டு திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை ஜல்லிக்கட்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் மதுரைக்கு அறிவித்த கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், மதுரைக்கு மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறது. அது உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாததைச் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசை முதல்வர் குறை கூறினாலும், தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநில அரசு என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து விண்ணப்பித்து பல்வேறு தகவல்களைப் பெற்று வரும் சமூக ஆர்வலர் தென்காசி பாண்டியராஜா கூறியதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானப் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மட்டும் அறிவிப்போடு நிற்கிறது. நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது ப்ரீ டெண்டர் வெளியிடப்பட்டு அந்த நடவடிக்கையும் விரைவுபடுத்தப்படவில்லை. இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பின்புதான் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுமா? அல்லது தேர்தலை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு கட்டுமானப் பணியைத் தொடங்குமா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
தவறான சிகிச்சை - மூணாறில் பெண் தொழிலாளி போராட்டம் | என்.கணேஷ்ராஜ் | மூணாறு | 2024-01-29 16:35:00 |
மூணாறு: தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளி பேராட்டத்தில் ஈடுபட்டார்.
கேரள மாநிலம் மூணாறு அருகே தேவி குளத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜ் மனைவி செல்வமணி ( 44 ) தேயிலை தோட்ட தொழிலாளி. உடல்நலக் கோளாறு ஏற்பட்ட இவருக்கு கடந்த ஆண்டு தேயிலை தோட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. சிறுநீர் வெளியேறுவதற்காக குழாய் சிலவாரங்களில் அகற்றப்பட்டது. அதன் பிறகும் சிறுநீர் பிரச்னை தொடர்ந்தது. இந்நிலையில் தவறான சிகிச்சையால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி மூணாறு காந்தி சிலை முன்பு செல்வமணி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து இவரது அவர் கூறுகையில், "வயிறு வலி பிரச்சினைக்காக சென்றேன். கர்ப்பப்பையில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அதனை அகற்றினர். இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. தேயிலை தோட்ட எஸ்டேட் நிறுவனம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தவறான சிகிச்சையால் தற்போது நடமாட கூட முடியாத நிலை உள்ளது" என்றார். காவல் துறையினரும், தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளி மற்றும் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
|
குமுளியில் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகள் பணி நீக்கம்: இடுக்கி ஆட்சியர் அதிரடி | என்.கணேஷ்ராஜ் | குமுளி | 2024-01-29 15:37:00 |
குமுளி: குமுளியில் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாத மகன், மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்ட எல்லை அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளி அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கிமீ. தொலைவில் அட்டப்பள்ளம் அருகே லட்சமேடு பகுதியில் வசித்து வந்தவர் அன்னக்குட்டி மேத்யூ(72). கணவர் இறந்த நிலையில் இவர் தனியே வசித்து வந்தார். இவரது மகன் சஜூமோன்(55), கேரளா கூட்டுறவு வங்கியில் வசூல் முகவராகவும், மகள் சிஜூ(52) ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராகவும் பணிபுரிந்தனர். திருமணமாகி தனித்தனியே அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்னக்குட்டியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட இருவரும் தங்களது தாயை கவனிக்கவில்லை. இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மயங்கியே கிடந்தார் அன்னக்குட்டி. தகவல் கொடுத்தும் இருவரும் வராததால் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி, உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் கடந்த வாரம் குமுளி அரசு மருத்துவமனையிலும், பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். இருப்பினும் கடந்த 24-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கு செய்யக்கூட வரவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் குமுளிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அட்டப்பள்ளத்தில் உள்ள அன்னக்குட்டியின் உடன் செயின்ட்தாமஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. போலீஸார் மற்றும் பொதுமக்கள் இறுதி சடங்குகளில் பங்கேற்றனர். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையிலும், இறந்தபோதும் கூட பிள்ளைகள் வராதது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
|
நேரமின்மை காரணமாக ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் ரத்து: மாவட்ட நிர்வாகம் தகவல் | கே.சுரேஷ் | புதுக்கோட்டை | 2024-01-29 15:29:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல் சுற்றுலா தலத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இடையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை இன்று பிற்பகல் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டைக்கு வருகை தருவிருந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியாவயல் முக்கத்தில் ஏராளமானோர் கருப்புக்கொடி காட்டத் திரண்டனர்.
அப்போது, ஆளுநரை திரும்பிப் போக வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட , கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி அரசியல்வாதி போன்று செயல்படுகிறார். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை அவதூறாக பேசி வருகிறார். சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவதாகக் கூறி, கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஆகையால், இண்டியா கூட்டணி சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆளுநரின் பயணம் ரத்து: போராட்டங்களுக்கு மத்தியில் சித்தன்னவாசல் செல்லவிருந்த ஆளுநர் ரவியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காகவும், நேரமின்மை காரணமாக ஆளுநரின் வருகை ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-01-29 15:17:00 |
சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்கு முரணாக, உரிய அனுமதியை பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி, மீன்வளத்துறை உதவி இயக்குநர், கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டப்படி, கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும். மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பண்ணைகள், உரிய அனுமதிகளைப் பெறாமல் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியின்றி செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேபோல, சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக ஆறு வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக அரசுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சு @ மதுரை | சுப.ஜனநாயகச் செல்வம் | மதுரை | 2024-01-29 15:12:00 |
மதுரை: மதுரை கலைஞர் நுற்றாண்டு நூலகத்தில் இன்று (திங்கள்கிழமை) பள்ளிக் கல்வித்துறை சார்பில் 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா வரவேற்றார்.
இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தவொரு துறை வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் மனித வளத்தை உருவாக்கும் பெரும் பங்கு பள்ளிக் கல்வித்துறைக்கு உண்டு.
பள்ளிக்கல்வித் துறையின் ஓர் அங்கமாக தொடக்கக் கல்வி இயக்ககம் உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக செயல்படுபவர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
தமிழகத்திலுள்ள 414 ஒன்றியங்களில் 851 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதில் நடப்பாண்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடந்தது. அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் பணியிடங்களில் தங்களது பொறுப்புணர்ந்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை மாவட்டக்கல்வி அலுவலர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியருக்கு அமைச்சர் பாராட்டு: மதுரையில் அழகர்கோவில் சாலையிலுள்ள கோர்ட்யார்ட் ஹோட்டலில் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி வளர்ச்சி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்கொடையாளர்களை பாராட்டி கவுரவித்தார்.
அதன்படி, மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த கனரா வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தானமாக வழங்கினார். அவரது செயலை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரின் குடியரசு தின சிறப்பு விருது வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நில தானம் வழங்கிய ஆயி என்ற பூரணத்திற்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
அதேபோல், மதுரை மாநகராட்சி பள்ளி வளர்ச்சிக்கு ரூ.1.10 கோடி நிதியளித்த அப்பள வியாபாரி ராஜேந்திரன் என்பவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். அதேபோல், பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் நிதியளித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இன்று தனியார் பள்ளி இயக்ககத்தின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, சிவகங்கை. ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரியப் பள்ளிகள் என மொத்தம் 12,631 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஏறத்தாழ 57 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.
தமிழக அரசுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என்ற பாகுபாடும் இல்லை. ஒட்டுமொத்தமாக மாணவர்கள் நலன்தான் முக்கியம். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருப்பதற்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியே காரணம். கல்வி வளர்ச்சியில் அரசுப் பள்ளிகளின் பங்களிப்பைப்போல், தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை மண்டலம் வாரியாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மண்டலங்களில் 1,488 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மதுரை, தேனி, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 437 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். இவ்விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
|
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கோகுல இந்திரா உட்பட 2 பேரை தயார்படுத்தும் அதிமுக | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-01-29 14:51:00 |
சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அல்லது முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மகன் கருணாகரனை நிறுத்த அதிமுக தலைமை அவர்களைத் தயார்படுத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தங்களது கூட்டணிக்கு வரும் என அதிமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சில கட்சிகளின் நிலையில் மாற்றம் ஏற்படலாம். எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராவிட்டால் அதிமுக தனித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் சிரமம் ஏற்படும். இதனால், தற்போதே 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், கூட்டணி பலம் இல்லை, தேர்தலில் நிற்க பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதால் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனினும் செலவழிக்கக் கூடிய செல்வாக்கு மிக்க நபர்களை நிறுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை மூத்த முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகன் கருணாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் இளங்கோ, ஒன்றியச் செயலாளர்கள் சேவியர்தாஸ், கோபி போன்றோர் விரும்புகின்றனர்.
எனினும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அமைச்சர் பாஸ்கரனின் மகன் கருணாகரன் ஆகியோரை தவிர மற்றவர்களுக்கு தேர்தல் செலவு செய்வதில் கட்சித் தலைமை உதவ வேண்டி இருக்கும். இதனால் கோகுல இந்திரா அல்லது கருணாகரனை தயார்ப்படுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இருவரிடமும் தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருவதால், ஒரு தொகுதிக்கு ரூ.20 கோடி முதல் ரூ.40 கோடி வரை தேவைப்படும். இந்த முறை வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் உதவ கட்சித் தலைமை தயாராக இல்லை. மேலும், போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், செலவழிக்கக் கூடிய வலிமை உள்ளவர்களை நிறுத்த, அவர்களிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கூறினர்.
|
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 14:45:00 |
சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவது தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்தியது.
மக்களவைத் தேர்தல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில் அதிமுக சார்பில் மக்களவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இக்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, எந்தெந்தக் கட்சிகளைப் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடா்பாக தொகுதிப் பங்கீட்டு குழுவினா் ஆலோசித்தனர். அதன்படி, விரைவில் அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் அதிமுகவின் விளம்பரக் குழு, பிரச்சாரக் குழுவைச் சேர்ந்தவர்களும் மக்களவைத் தேர்தலை சந்திப்பு தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளது. இதற்காக அந்தக் குழுவினரின் சுற்றுப்பயண விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுப்பயணங்களை மாற்றி அமைத்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
|
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 14:05:00 |
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (29.01.2024) மற்றும் 30.01.2024 அன்றும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (29.01.2024) மற்றும் 30.01.2024 அன்றும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. 31.01.2024 முதல் 02.02.2024 வரை: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.02.2024 மற்றும் 04.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: 29.01.2024 மற்றும் 30.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 29.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 30.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற 100-க்கும் மேற்பட்டோர் கைது | கே.சுரேஷ் | புதுக்கோட்டை | 2024-01-29 13:45:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (ஜன.29) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இடையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை இன்று பிற்பகல் பார்வையிட உள்ளார். இந்நிலையில், புதுக்கோட்டைக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியாவயல் முக்கத்தில் ஏராளமானோர் கருப்புக்கொடி காட்டத் திரண்டனர்.
அப்போது, ஆளுநரை திரும்பிப் போக வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட , கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி அரசியல்வாதி போன்று செயல்படுகிறார். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை அவதூறாக பேசி வருகிறார். சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவதாகக் கூறி, கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஆகையால், இண்டியா கூட்டணி சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
|
ஸ்பெயின் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச் உடன் சந்திப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 13:16:00 |
சென்னை: டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். நேற்று அவரை சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
அதன்படி ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இதற்கிடையே, டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அரசுமுறை பயணமாக ஸ்பெயின் செல்லும்போது நோவக் ஜோக்கோவிச்சை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஜோக்கோவிச் உடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு பதிவில், "ஸ்பெய்ன் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெய்னுக்கான இந்திய தூதர் தினேஷ் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்படும் முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் முயற்சியில் 2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்.
பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ தொடங்கியுள்ளன. ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன்.
இதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு, மனிதவளம் போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.
இந்த பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது எடுக்கப்படும்." எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|
பொன்முடி வழக்கு | இடைக்கால தடைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு; லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-01-29 12:58:00 |
புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.29) நடந்தது. அப்போது, மார்ச் 4-ம் தேதிக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
பொன்முடி சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “பொன்முடி அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவர். தேர்தல் வேறு நெருங்குகிறது என்பதால் அவருக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என முறையீடு செய்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “அவசரம் வேண்டாம். மேல்முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கட்டும். அவர்கள் பதிலளிக்கும் வரை தண்டனையை நிறுத்திவைக்க போவதில்லை” என்று கூறி இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் வழக்கை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னணி: உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன.
எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.
|
அபுதாபி நிறுவனத்துக்கு தாரைவார்க்கப்படும் கோயம்பேடு நிலம்? - தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 12:34:00 |
சென்னை: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
சென்னை மாநகரின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து வரும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழக அரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம் தான் என்று கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதை நான் கண்டித்த உடன் அதை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் போது கோயம்பேடு பேருந்து நிலையம் அபுதாபி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும். இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டைவிட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவதற்கு ஏராளமான நியாயங்கள் உள்ளன. இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான பூங்காக்கள் பெருமளவில் உள்ளன. டெல்லியின் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும், லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் 880 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது திறக்கப்படும் போது ஆசியாவின் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும். பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவில் நியூயார்க் சென்ட்ரல் பூங்கா 843 ஏக்கரிலும், லண்டன் ஹைட் பூங்கா 350 ஏக்கரிலும் அமைந்துள்ளன.
ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை. சென்னையின் பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பியப் பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மிகச்சிறந்த தேர்வாகும்.
பூங்காக்கள் எனப்படுபவை அழகுக்கான இடங்கள் மட்டுமல்ல. அவை தான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும், மனிதர்கள் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கும் ஆலைகளாகவும் திகழ்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்தும், போக்குவரத்துக்கான வாகனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களை உள்ளிழுத்து, ஆக்சிஜன் வாயுவை வழங்க சென்னையில் அதிக எண்ணிக்கையில் பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
|
உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு சர்ச்சை | யுஜிசி நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 11:58:00 |
சென்னை: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும், பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்திருக்கிறது. இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள விளக்கங்கள் வரவேற்கத்தக்கவை.
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை முதன்முதலில் கண்டித்த நான், பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதே குரல் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு அதன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. மத்திய அரசும் விளக்கமளித்தது. அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன்?. அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். இந்த சர்ச்சையில் விளக்கமளித்துள்ள மத்திய அரசின் கல்வி அமைச்சகம், ’’மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நிலையிலான அனைத்துப் பணியிடங்களுக்கும் 2019-ம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறது. அப்படியானால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது ஏன்?.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தெரிந்திருந்தும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை வெளியிட்டது ஏன்?. அதன் மீது கடந்த ஒரு மாதமாக கருத்துகள் கேட்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்?. ஒருவேளை எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காவிட்டால், வரைவு விதிகள் இறுதி விதிகளாக மாற்றப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யபட்டிருக்குமா, இல்லையா?.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது. அத்தகைய செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
|
அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணிப்பு | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-01-29 10:54:00 |
சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார்.
பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்ற மொத்தம் 40, 414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர் தரவரிசையில் இடம் பெற்ற 184 பேர் என 348 பேருக்கு நேரடியாக படங்கள் வழங்கப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் வீ. காமகோடி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. விழாவில் பங்கேற்பதாகச் சொல்லிவிட்டு அமைச்சர் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் vs தமிழக அரசு: ஏற்கெனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு பூசல்கள் நிலவுகின்றன. நீட் உள்ளிட்ட மசோதாக்களில் கையிப்பம் இடாதது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. இந்நிலையில், நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று கடந்த 23-ம் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இது புதிய சர்ச்சையாக விடிந்தது.
காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தியை அவமதிக்கவில்லை என அதற்கு ஆளுநர் விளக்கம் தந்திருந்தார்.
இந்தச் சூழலில் நாளை (30-ம் தேதி) காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து வன்மை கலந்த நோக்கத்துடன் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் பல்வேறு வகையிலும் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ஆளுநர் தலைமையேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்திருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
|
உதகையில் உறைபனி | குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு: கடும் குளிரால் மக்கள் அவதி | ஆர்.டி.சிவசங்கர் | உதகை | 2024-01-29 09:31:00 |
உதகை: உதகையில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், இன்று (ஜன.29) காலை 0.8 டிகிரி செல்சியஸாக தட்பவெப்ப நிலை குறைந்துள்ளது. கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும். ஆரம்பத்தில் நீர்பனிப்பொழிவாகவும், அதன் பின்னர் உறைபனி பொழிவு தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும்.
இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும்.புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும்.
இந்நிலையில் நவம்பர் இறுதி வாரத்தில் பனிப்பொழிவு தொடங்கியது. அதன் பின் டிசம்பரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயல் போன்றவைகளால் உறைபனி பொழிவு தள்ளி போய், இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி பொழிவு இருந்து வருகிறது. உறைபனி பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவில் இன்று (ஜன.29) காலை தட்பவெப்ப நிலை 0.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.
தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை சென்றது. கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருகத் துவங்கியுள்ளன. பனிப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உதகை மரவியல் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்கும் வகையில் தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
|
மக்களின் எண்ணத்தை நிதிஷ்குமார் பிரதிபலிக்கிறார்: ஜி.கே.வாசன் கருத்து | செய்திப்பிரிவு | ஈரோடு | 2024-01-29 07:41:00 |
ஈரோடு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடகமாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
பிப்ரவரி மாத இறுதியில் தமாகா செயற்குழு கூடி, தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும். இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்கிறது.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அனுபவம் மிக்க மூத்த தலைவர். அந்த மாநில மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் எந்த தடையும் இல்லை. திமுக இளைஞரணி மாநாடு, பணபலம், விளம்பரத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இது மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இவ்வாறு வாசன் கூறினார். மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
கதர் துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது: காதி ஆணையத் தலைவர் பாராட்டு | செய்திப்பிரிவு | ராமேசுவரம் | 2024-01-29 07:36:00 |
ராமேசுவரம்: காதி மற்றும் கிராமத் தொழில்ஆணையம் சார்பில் கதர் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்றது.
ஆணையத்தின் மாநில இயக்குநர் சுரேஷ், மதுரைக் கோட்ட மேலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து தேசிய காதிமற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் பேசியதாவது:
கடந்த 9 ஆண்டுகளில் கதர்மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் வணிகம் ரூ.1.34 லட்சம்கோடியைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கதர் துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கதர்,கிராமத் தொழில்கள் மூலம் தமிழகத்தில் ரூ.262 கோடிக்கு உற்பத்தியும், ரூ.466 கோடிக்குவிற்பனையும் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 14,396 கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
|
கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை சந்தித்த ஆளுநர்: கருப்பு கொடி காட்ட முயன்ற எம்.பி. உள்ளிட்ட 200 பேர் கைது | செய்திப்பிரிவு | நாகப்பட்டினம் | 2024-01-29 07:17:00 |
நாகப்பட்டினம்: கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நாகப்பட்டினம் வந்தார். தொடர்ந்து, கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு, கீழ்வெண்மணியில் 1968-ல் நடந்த படுகொலை யின்போது, துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்து, உயிர்பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் தியாகி ஜி.பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரிடம் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தியாகி ஜி.பழனிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உடல்நிலை சரியில்லாதபோதும், இந்த சந்திப்பு மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, கண்ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆளுநரை சந்தித்தேன்.
நிலச்சுவான்தாரர்களால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள்தான் இந்தப் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தேன். அவற்றை ஆளுநர் விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
பின்னர், ஆளுநர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாங்கண்ணி சென்றார். அங்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்த ஆளுநர், தொடர்ந்து நாகை நம்பியார் நகரில் உள்ள புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, அப்பகுதி மீனவச் சிறுவர்கள் மலர் தூவி ஆளுநரை வரவேற்றனர்.
இதையடுத்து, பொரவச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், பெருங்கடம்பனூரில் கட்டப்பட்டுள்ள 25 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கருப்புக் கொடி... ஆளுநர் வருகையை கண்டித்து, கீழ்வெண்மணி வீரத் தியாகிகளின் 25-வது ஆண்டு நினைவுவளைவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் தலைமையில், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடியேந்தி திரளாக வந்தனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகை செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து திருவாரூர் விளமலில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, பகல் 1.40 மணிக்கு நாகை புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், ஆளுநர் வருகையைக் கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் அருகே நாகை எம்.பி. செல்வராஜ் தலைமையில் பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்ட வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, எம்.பி.செல்வராஜ் உட்பட 200 பேரைக் கைது செய்தனர்.
|
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக 3-வது நாளாக திமுக ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:49:00 |
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் தொடர்பாக 3-வது நாளாக திமுக ஆலோசனை நடத்தியது.
மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ம் தேதி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கடந்த 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் கோவை, சேலம், நீலகிரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, தருமபுரி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றிவாய்ப்பு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினை, போட்டிகளை விட்டுவிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பிப்ரவரி 5-ம் தேதி வரை தொகுதி வாரியாக ஆலோசனை நடைபெற உள்ளது.
|
பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட அனைத்து கருவிகளும் இயங்கின: பிஎஸ்-4 இயந்திரத்தில் ‘போயம்’ சோதனை வெற்றி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:45:00 |
சென்னை: பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திரத்தில் அனுப்பப்பட்டிருந்த கருவிகள் திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை மேற்கொள்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்டவை குறித்து இந்த செயற்கைக் கோள் 5 ஆண்டுகள் ஆய்வு செய்ய உள்ளது.
இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM - PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்-4 இயந்திரம் 350 கி.மீ. உயரத்துக்கு கீழே கொண்டுவரப்பட்டு ஆய்வு பணிகள் நடத்தப்பட்டன. இதற்காக அந்த இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 9 சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த கருவிகள் அனைத்தும் வெற்றிகரமாக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்-4 இயந்திரம் புவியின் குறைந்த தாழ்வட்டப் பாதைக்கு கொண்டு வரப்பட்டது. 23 நாட்களில் 400 முறை அந்த கலன் குறிப்பிட்ட தாழ்வட்டப் பாதையை சுற்றி வந்துள்ளது. அதில் உள்ள அனைத்து கருவிகளும் திட்டமிட்டபடி இயங்கி வருவதுடன் பல்வேறு தரவுகளையும் அளித்து வருகின்றன.
இந்த பணிகள் அடுத்த 73 நாட்கள் தொடரும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு ஆய்வு திட்டங்களுக்கு இந்த தரவுகளும், போயம்-3 மூலம் அனுப்பப்பட்ட ஆய்வு கருவிகளின் செயல்பாடுகளும் உறுதுணையாக இருக்கும். 3 மாதங்களுக்கு பிறகு பிஎஸ்-4 இயந்திரம் மீண்டும் புவியின் வளிமண்டல பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். இதன்மூலம் விண்வெளி கழிவுகள் எதுவும் இல்லாத திட்டமாக பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் ஏவுதல் அமையும். இதுவரை 3 முறை போயம் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு 21 கருவிகள் அனுப்பப்பட்டன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிஎஸ்-4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் கருவி மூலம் விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
|
டாஸ்மாக் மதுபானங்கள் விலை பிப்.1 முதல் உயர்கிறது: ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரிக்கும் என தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:38:00 |
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
பொதுவாக, டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள்தான் சுமார் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. இதில் குவார்ட்டர் பாட்டில் ரூ.130, ஆஃப் பாட்டில் ரூ.260, ஃபுல் பாட்டில் ரூ.520 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு: அதேபோல, பிரீமியம் வகையில் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.40, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80 மற்றும் அனைத்து பீர் வகைகளும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
வரி உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என மதுபான ஆலை நிறுவனங்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலாகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதுதொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் ஏற்கெனவே ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
|
மாற்றுத் திறனாளிகள் நலனை பெரிதும் பாதுகாக்கும் பிரதமர் மோடி: தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் புகழாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:20:00 |
சென்னை: நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தெரிவித்தார்.
சென்னை மகாகவி பாரதி நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆர்எஸ்எஸ் மாற்றுத் திறனாளிகள் பிரிவான ‘சக்ஷம்’ அமைப்பின் 5-வது மாநிலமாநாடு நேற்று நடந்தது. இதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன், மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மாணவர் இல்ல செயலர் சத்ய ஞானானந்தா மகராஜ் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வட்டியில்லா கடன் வழங்கி வரும் பத்மநாபன், 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள தொழில் முனைவோர் அறிவுராஜா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் என சாதனை படைத்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
பின்னர், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் குறைபாடு மட்டுமே உள்ளது. ஆனால், மனக் குறைபாடு இல்லை. மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கிறது.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தார். மாற்றுத் திறனாளிகள் நலன் காக்கும் தலைவராக அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற முன்னாள் பதிவாளர் அருள், ஜிப்மர் மருத்துவமனை முன்னாள் குழந்தைகள் நல மருத்துவ பேராசிரியர் நளினி பார்த்தசாரதி, சிறப்புஒலிம்பிக் பாரத் போர்டு துணை தலைவர் சித்ரா ஷா, டிடிஏ நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.சேது, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் அரவிந்த், சக்ஷம் அமைப்பின் தேசிய தலைவர் கோவிந்தராஜன், மாநிலத் தலைவர் சபாஷ் ராஜ், செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|
மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:19:00 |
சென்னை: மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராகவும், உயர்கல்வித்துறை துணை செயலாளர் கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மின்னணு கழகத்தின் செயல் இயக்குநர் எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் (நிர்வாகம்) வி.ஆர்.சுப்புலட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.குமரவேல்பாண்டியன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணை செயலாளராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாகத்துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
|
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் அதிகமுறை பயணித்த 40 பேருக்கு பரிசு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:18:00 |
சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, 2024-ம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பேரை அடையாளம் கண்டு பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், கடந்த டிச.15 முதல் ஜன.14-ம் தேதி வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் பெனுதர் பர்ஹி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
|
செங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் ஆப்பிரிக்க நத்தைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | செய்திப்பிரிவு | வில்லியம்பாக்கம் | 2024-01-29 06:14:00 |
வில்லியம்பாக்கம்: செங்கையில் சில பகுதிகளில் கொத்துக்கொத்தாக காணப்படும் ஆப்பிரிக்க நத்தைகள், மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர், திம்மாவரம், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தற்போது வாழை, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டைஉள்ளிட்ட தோட்டப் பயிர்களை விதைத்துள்ளனர்.
இதனிடையே பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மழைக்குப் பின் புதுவிதமான ஆப்பிரிக்க நத்தைகள் திடீரென்றுவாழை, புடலங்காய், பழ மிளகாய், பீர்க்கங்காய், பாகற்காய், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை செடிகளின் மீது ஏறி, இலைகளை கடித்துத் தின்று வருகின்றன.
விளைச்சல் பாதிப்பு: செடிகள் பூத்துக் காய் பிடித்து முற்றுவதற்குள்ளாகவே செடிகளில் ஏராளமான ஆப்பிரிக்க நத்தைகள் புகுந்து, விளைந்து நிற்கும் பயிர்களைச் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நத்தைகளை தினமும் அப்புறப்படுத்தினாலும் அவற்றை அழிக்க முடியவில்லை.
இரவில் விளைச்சலைச் சேதப்படுத்தும் இந்த நத்தைகள் பகலில் சூரிய ஒளி பட்டதும் மறைவான பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இவற்றை தேடிப்பிடித்து அழிப்பதே விவசாயிகளுக்கு பெரும் வேலையாகிவிட்டது. தோட்டப் பயிர்களிலிருந்த ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நெல் பயிரிலும் ஊடுருவி, நெற்பயிரில் உள்ள பச்சையத்தையும் உண்ணத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக வேளாண்மை, தோட்டக்கலைத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அலுவலர்களும் பார்வையிட்டனர். ஆனால் தீர்வை ஏற்படுத்தவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை, வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மேலும், விவசாயிகள் எங்களிடம் நந்தை தொடர்பாக எந்த புகாரும் தெரிவிக்கவில்லை” என்றனர்.
|
ஆம்னி பேருந்துகளின் பயணச்சீட்டை கூடுதல் விலைக்கு விற்றால் குற்றவியல் நடவடிக்கை: சிஎம்டிஏ உறுப்பினர் எச்சரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:12:00 |
சென்னை: கிளாம்பாக்கம் நிலையத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணச்சீட்டை கூடுதல் விலைக்கு விற்கும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிஎம்டிஏ உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடந்த 24-ம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப் பட்டு வருகின்றன.
இங்கு ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், முன்பதிவு மையங்கள் தவிர விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வில், அனுமதியின்றி ஆம்னி பேருந்துகள் பயணச்சீட்டை விற்பனை செய்த நபர்களிடமிருந்து பயணச்சீட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, நிலையத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ. பார்த்தீபன் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், "ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்தியேக முன்பதிவு கவுன்ட்டர்கள் மூலமாகவோ மட்டுமே, பயணச்சீட்டுகள் முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் மூலமாக பயணச்சீட்டு புத்தகங்கள் வைத்து பேருந்து நிலையங்களில் முன்பதிவு செய்யப்படுவதில்லை. அத்தகைய இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக பயணிகளுக்கு இப்பேருந்து முனையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:10:00 |
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் நேற்று முதல் (28-ம் தேதி) ஒருவார காலத்துக்கு அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தி உள்ளனர்.
பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ்சாலை சந்திப்பில் திரும்பவேண்டும். அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித்ரோடு - ஒயிட்ஸ் சாலைசந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பில் இருந்துபட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ்சாலை சந்திப்பு வரை வழக்கம்போல் ராயப் பேட்டை மணிக்கூண்டுக்கு சென்றடையும்.
|
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிஆர்இயு தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:09:00 |
சென்னை: ரயில்வே தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிஆர்இயு சார்பில் தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள 100 மையங்களில் கடந்த ஜன.19 முதல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை ரயில்வே கோட்டத்தில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பொன்னேரி, நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை, பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸ், பேசின்பாலம் பணிமனை, தண்டையார்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் பழைய பென்சன் திட்டத்தில் உள்ள நன்மை, புதிய பென்சன் திட்டத்தில் உள்ள தீமை, தனியார் மயத்தால் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விளக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மூர்மார்க்கெட் வளாகம் முன்பு, பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகின்றனர். தனியார் மயம், இந்திய ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணத்தை எட்டாமல் செய்துவிடும். பயணச்சீட்டுக்கு கொடுக்கப்படும் மானியங்களை தனியார்மயம் ஒழித்துவிடும். எனவே, தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நாளை (30-ம்தேதி) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றனர்.
|
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | பவர்ஹவுஸ் பூந்தமல்லி வழித்தடத்தில் பணிகள் தீவிரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:08:00 |
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் உயர்மட்டப்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் அமைக்க வேண்டிய 811 தூண்களில் தற்போதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரையான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 நிலையங்களில் 13 நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மெட்ரோநிலையங்களுக்கான நுழைவாயில், வெளியேறும் பகுதி அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த குறிப்பிட்ட பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, வரும்2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை பணி: 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான "பிளமிக்கோ" கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி பணியைத் தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான "கழுகு" தனது பணியை கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
இது, கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட்கிளப்பை வரும் 2026 அக்டோபரில் அடைய உள்ளது.
இதற்கிடையில், பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி "பிகாக்" என்ற இயந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது, இந்த இயந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
|
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:07:00 |
சென்னை: ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், அஞ்சல்துறை சார்பில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிக்கான சுங்க அனுமதியை ஆன்லைன் மூலமாக, இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் ஏற்றுமதி சேவை மையம் 2022 டிசம்பர் முதல் செயல்படுத்தி வருகிறது.
வணிக ஏற்றுமதியாளர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, எந்தத் தடையும் இல்லாமல் ஏற்றுமதி ஆர்டரைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக வட்ட அஞ்சல் அலுவலகம் சார்பில், கண்காணிப்பாளர் அலுவலகம், வெளிநாட்டு அஞ்சல், சென்னை- 600 001 என்ற முகவரியில் இந்த ஏற்றுமதி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் (மெயில் மற்றும் வணிக மேம்பாடு) தேவி திறந்து வைத்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
சிறிய அளவிலான தொழில்முனைவோர், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை குறித்து வழிகாட்டுவது, ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு மிகவும் நியாயமான விலையில் அனுப்பவும், நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் உதவுவதே இந்த சேவை மையத்தின் நோக்கமாகும்.
மேலும், இந்த மையத்தின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், சுய உதவிக் குழுவினர், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ‘ஆன்-லைன்’ மற்றும் நேரடியாக பயிற்சிகளை நடத்தி ஏற்றுமதியாளர்களின் திறனை மேம்படுத்துவர்.
அத்துடன், இந்த சேவை மையம், ஏற்றுமதியாளர்களின் பதிவுக்குப் பிந்தைய தேவைகளுக்கான கண்காணிப்புப் பிரிவாக செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும், சுங்கத் துறை கோரும் ஆவணங்களை ஆன்லைன் மூலம் அப்லோடு செய்யவும் இந்த மையம் உதவி செய்யும்.
|
சென்னை அரசு மருத்துவமனையில் சாந்தனுக்கு தீவிர சிகிச்சை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:05:00 |
சென்னை: கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம்ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த 24-ம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு (சிரோஸிஸ்) மற்றும் பிற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
|
இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழு கூட்டம் சென்னையில் தொடக்கம்: இன்றும், நாளையும் நடைபெறுகிறது | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:04:00 |
சென்னை: இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமையகத்தில் நேற்று தொடங்கியது.
தேசிய குழு கூட்டத்தின் முதல் நிகழ்வாக சங்கத்தின் கொடியை முன்னாள் எம்.பி. நாகேந்திரநாத் ஓஜா ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை சங்கத்தின் அகில இந்திய தலைவர் நா.பெரியசாமி தலைமையேற்று வழி நடத்தினார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், கேரள மாநில முன்னாள் அமைச்சர் இஸ்மாயில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் சீ. தினேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய அரசியல் நிலை மற்றும் விவசாய தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து நாகேந்திரநாத் ஓஜா விரிவாக எடுத்துரைத்தார். முதல் நாள் கூட்ட அமர்வின் நிறைவில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.பாஸ்கர் நன்றி கூறினார்.
இன்று அரசியல் நிகழ்வுகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.
தொடர்ந்து அரசியல் தீர்மானம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, நாளைய தினம் தீர்மானங்களும், முடிவுகளும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மத்திய பிரதேசம், பிஹார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
|
டெல்டா, தென் மாவட்டங்களில் ஜன. 31 முதல் மழை பெய்ய வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 06:00:00 |
சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 31-ம்தேதி முதல் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜன. 29, 30) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வரும் 31 முதல் பிப். 2-ம் தேதி வரை தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். பிப். 3-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இரவு அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 05:57:00 |
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய விண்ணப்பதாரர்கள் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் இடங்களை நிரப்புவதற்கான யுஜிசியின் பரிந்துரைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவின் “சப் கா விகாஸ்” (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.
ஏற்கெனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவனமயப்படுத்துகிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து பாமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக் குழு கருத்து கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து, இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட உள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தகுதியானவர்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் பல்வேறு சதிகளை செய்து வெளியேற்றுகின்றன.
இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் நடைமுறைக்கு வந்தால், அதை பயன்படுத்தி, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படும். சமூகநீதிக்கு எதிரான பல்கலை. மானியக்குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்ப பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 05:54:00 |
சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடனான பயிற்சி முகாம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது.
பயிற்சி முகாமுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில விவசாய அணித் தலைவரும், தமிழக விஸ்வகர்மா திட்டத்தின் பொறுப்பாளருமான ஜி.கே.நாகராஜன் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, மத்திய அரசின் விஸ்வர்மா திட்டத்தை, ஏழைமக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது, அந்த திட்டத்தில் அவர்களை எப்படி இணைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொறுப்பாளர்களுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப் வழங்கினார்.
இது தொடர்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது: பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டுசெல்வதையும் இந்த திட்டம்நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் நோக்கமாகும்.
18 வகையான தொழில்கள்: அந்தவகையில், இந்த திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தயாரிப்பவர் மற்றும் தைப்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறுவார்கள்.
அதன்படி, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன்கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி,இந்த திட்டத்தில் அவர்களை இணைத்து பயன்பெற செய்வார்கள். இது தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
|
சென்னை | காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 05:50:00 |
சென்னை: காசிமேட்டில் மீன்களை வாங்க அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர். இதனால், மீன் விற்பனை நேற்று களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக மீன்வாங்க கூட்டம் அலை மோதும். இந்நிலையில், குடியரசு தினம், தைப்பூசம் என கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும்மேற்பட்ட படகுகள் கரை திரும் பின. மீனவர்களுக்கு கடலில் அதிகளவு மீன்கள் கிடைத்ததால், மீன் விற்பனை களைகட்டியது.
காசிமேடு சந்தையில் மீன் விற்பனைக்காக ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங்கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது.
இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறும்போது, ‘விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன்களை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. வஞ்சிரம் கிலோ ரூ. 800 முதல் ரூ.1000-ம், வவ்வால் வெள்ளை நிறம் ரூ.600-ம், சிறிய வவ்வால் ரூ.500-ம், கொடுவா ரூ.600-ம், சங்கரா ரூ.500-ம், பாறை ரூ.500-ம், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது தலா ரூ.300-ம், நவரை, கானாங்கத்தை, நெத்திலி தலா ரூ.200-க்கும் விற்பனையானது என்றனர்.
|
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு | செய்திப்பிரிவு | ராமேசுவரம் | 2024-01-29 05:46:00 |
ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
ராமேசுவரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண் டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என்றுஎச்சரித்ததுடன், 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்த விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.
|
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-29 05:42:00 |
சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால் பிப்.9-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தனர்.
அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில தேர்தல் குழுவினருடன் தனித்தனியே பேசி, கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது, காங்கிரஸ் குறைந்தபட்சம் 3 தனி தொகுதிகளில் போட்டியிட வேண்டும். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என்று பல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர், காங்கிரஸின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர்.
திமுக தொகுதி பங்கீட்டு குழுதலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டதாகவும், புதுச்சேரி உட்பட7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது:
கே.எஸ்.அழகிரி: அகில இந்தியகாங்கிரஸ் தலைவர்கள் திமுகநிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினர். முகுல்வாஸ்னிக் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிகவும்திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகு விரைவில் பேசுவோம்.
முகுல் வாஸ்னிக்: மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கான முதல் கூட்டம் நடந்துள்ளது. புதுச்சேரி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடந்தது. இதில் மக்களாட்சிக்கு ஆபத்தானவற்றை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசித்தோம். தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் பேச இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் நடந்துவரும் நிகழ்வுகளை நாங்கள் எளிதில் கடந்து செல்கிறோம். இறுதியில், இண்டியா கூட்டணி வலுவாக உருவெடுக்கும். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது: திமுக - காங்கிரஸ் இடையேஆரம்பகட்ட பேச்சுவார்த்தைதான் நடந்துள்ளது. மக்களவை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். திமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் எங்களிடம் இடம்தான் இல்லை.
நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையில் இருந்திருக்கிறார். கூட்டணிக்காக சகித்துக்கொண்டு இருந்தோம். இண்டியா கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
“இண்டியா கூட்டணி நீடிக்காது” - சீமான் கருத்து | செய்திப்பிரிவு | தூத்துக்குடி | 2024-01-29 04:12:00 |
தூத்துக்குடி: கொள்கை முரண்பாடு உள்ளவர்கள் சேர்ந்துள்ளதால் இந்தியா கூட்டணி நீடிக் காது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்தும், தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி வாரியாக முக்கிய பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். முதல்வர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது. இந்தியா கூட்டணி தொடர்ந்து நீடிக்காது. பாஜக கூட்டணியில் ஒத்த கருத்து உள்ளவர்கள் இணைகிறார்கள். இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொள்கை முரண் உள்ளவர்கள் சேர்ந்து ள்ளனர். நம்மிடம் உள்ள வரிக்கும், வளத்துக்கும் தான் பாஜக நம்மை வைத்திருக்கிறது. கங்கை படுகையில் மீத்தேன் இருக்கிறது. ஆனால் அங்கு தோண்டவில்லை.
விஜய் அரசியலுக்கு வருவார்: விஜய் அரசியலுக்கு வருவார், 2026-ல் கண்டிப்பாக அரசியலில் போட்டியிடுவார். நாட்டில் இந்தியாவின் முதல் குடிமகனுக்கே தீண்டாமை இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை.
உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம். உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்படத் தேவை இல்லை. பெரும்பாலான துறைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக வெல்வதை என்னால் தடுக்க முடியாது. என் கோட்டைக்குள் நுழைய முடியாமல் வாள் வைத்து போர் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், ஹுமாயூன் , சாட்டை துரைமுருகன், பாக்கியராசன். மண்டல பொறுப்பாளர் ராஜசேகர், மாவட்ட செயலா ளர்கள் வேல் ராஜ், பாண்டி , சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர்.
|
“தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது” - ஓபிஎஸ் உறுதி | செய்திப்பிரிவு | கரூர் | 2024-01-29 04:10:00 |
கரூர்: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழு சார்பில் கரூரில் நேற்று மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியது: அதிமுக தொடங்கிய போது சட்ட விதிகளை உருவாக்கிய எம்ஜிஆர், பொதுச் செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலம் தான் தேர்வு செய்ய வேண்டும் என விதியை உருவாக்கிவைத்தார். இவ்விதியை திருத்திபொதுச் செயலாளரான பழனிசாமி, அப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொண்டர்கள் அவரை தூக்கி எறிவார்கள்.
பழனிசாமி பொறுப் பேற்ற பிறகு நடந்த 9 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி மட்டுமே அடைந்து வருகிறது. பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றாக சேர வேண்டும். ஒன்றிணைந்து மக்களை சந்தித்தால் வெற்றி நிச்சயம் என மக்கள் சொல்கின்றனர். திமுகவுக்கு மிக கெட்டபெயர் உள்ளது. தனது சுயநலத்தால் இயக்கத்தை பாழ்படுத்தி வருகிறார் பழனிசாமி. எனக்குதனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது. மக்களவைத் தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
|
“தமிழர் பண்பாட்டை சிதைக்க முயற்சி நடக்கிறது” - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | திண்டுக்கல் | 2024-01-29 04:08:00 |
திண்டுக்கல்: திருவள்ளுவர், திருக்குறளை விழுங்க நினைப்பதன் மூலம் தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றை சிதைக்க முயற்சி நடக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதன் தொடக்கமாக பேகம்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்பு மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. மாநாட்டில் திருக்குறள் காட்சியகம், திருக்குறள் அறி ஞர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டு அமைப்பாளர் கழராம்பன் வரவேற்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: உலகில் அனைவருக்கும் பொதுவான திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மாற்ற முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப் படுகிறது. புத்த மதத்தைத் தழுவிய அம்பேத்கரை இந்து மதத்தின் காவலர் என்று கூறுகின்றனர். திருக்குறள், புத்தர் மற்றும் அம்பேத்கரை விழுங்கி செரிக்கப் பார்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
திருவள்ளுவர், திருக்குறளை விழுங்க நினைப்பதன் மூலம் தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றை சிதைக்க முயற்சி நடக்கிறது. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று பேசினார். திரைப்பட இயக்குநர் வி.சேகர், திண்டுக்கல் மேயர் இளமதி, திருவள்ளுவர் இலக்கியப் பேரவை தலைவர் முருகய்யா, செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
|
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் உயிரிழப்பு - சக கைதிகள் போராட்டம் | செய்திப்பிரிவு | திருச்சி | 2024-01-29 04:06:00 |
திருச்சி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி ( 74 ). இலங்கை தமிழரான இவர் மீது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இவர், வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதையறிந்த சக கைதிகள், கிருஷ்ணமூர்த்தி உயிரிழக்க அவருக்கு மருந்து, மாத்திரைகள் முறையாக அளிக்காததே காரணம் என குற்றம் சாட்டி, உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அங்கு வந்து, கிருஷ்ண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, சக கைதிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பின்னர், கிருஷ்ண மூர்த்தி உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பிறகு இன்று அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.
|
“ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு தடை நீங்க மோடிதான் காரணம்” - அண்ணாமலை | செய்திப்பிரிவு | கோவை | 2024-01-29 04:02:00 |
கோவை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளுக்கான தடை நீங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிகளுக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிரண்டி விளையாட்டு என்றார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் இணைத்தனர். அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகள் தடை செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பாஜக அரசு காளையை நீக்கியது.
மத்திய பாஜக அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தற்போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற காரணம் பிரதமர் மோடி தான். இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சினையே நிதிஷ்குமார் வெளியேற காரணம். இந்நிகழ்வு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இண்டியா கூட்டணிக்கு இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் 10 ஆயிரத்து 321 பேருக்கு தான் வேலை தந்துள்ளனர். பல்லடத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு செயல் இழந்துள்ளது. கேரள ஆளுநர் தர்ணா செய்த பின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநர் எது பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள். ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிப்பது நல்ல அரசியல் அல்ல.
இந்தியாவில் அதிக வெளி நாடு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். விஜய் உட்பட யாரும் அரசியலுக்கு வரலாம். பல கோயில் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
“சந்தர்ப்பவாதத்தின் அடையாளம் நிதிஷ் குமார்” - தமிமுன் அன்சாரி விமர்சனம் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-01-29 04:00:00 |
திருப்பூர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு, திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க திருப்பூர் வந்த கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, ‘‘பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மாறி இருக்கிறார். நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த நிதிஷ் குமார் 18 மாதங்களுக்கு முன்பு, எந்த கூட்டணியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தாரோ, அரசியல் சுயலாபத்துக்காக மீண்டும் அதே கூட்டணியில் இணைந்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளம்தான்.
பிஹார் மக்கள் அவரையும், அவர் சார்ந்த கூட்டணியையும் தனிமைப்படுத்த வேண்டும். மக்களின் ஆன்மிக நம்பிக்கையான அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியல் செய்கிறது. மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி பிப்.10-ம் தேதி திருச்சியில் நடத்தப்பட உள்ள மாபெரும் சிறை முற்றுகை போராட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்படும்” என்றார்.
|
“தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்” - எல்.முருகன் @ நாமக்கல் | கி.பார்த்திபன் | நாமக்கல் | 2024-01-28 23:47:00 |
நாமக்கல்: மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த பேச்சு, நாமக்கல் நகர பாஜக சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு பின் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை 109-வது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சமுதாய பணிகளை பாராட்டி, மத்திய அரசின் மூலம் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு விருது பெற்றவர்களை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்ரப்பன் என்பவர் அழிந்து வரும் நாட்டுப்புற பாடல்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றதைப் பாராட்டியும், பல்வேறு சமூக நலப்பணிகளை செய்த மறைந்த நடிகர் விஜயகாந்தை பாராட்டியும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இண்டியா கூட்டணி: இண்டியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை குழப்பும் கூட்டணி என்று ஏற்கெனவே கூறப்பட்டது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தற்போது பிஹாரில் நிதிஷ்குமாரும் கூட்டணியை மாற்றியுள்ளார்.
கேரளாவில் கமயூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் எப்போதும் போட்டியிட முடியாது. மேலும், தமிழகத்திலும் இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றன. உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்திலும் அதிக பெரும்பான்மை பலம் பெற்று விளங்குகிறது. தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் தற்போது உள்ளனர். புதுச்சேரியில் ஒரு பாஜக ராஜ்யசபா எம்.பி உள்ளார். தற்போது தமிழகத்தில் அதிகமான பொதுமக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி வருகின்றனர்.
வரும் மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும். அகில இந்திய அளவில் பாஜக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்திய பிரதமராவது உறுதி செய்யப்பட்டதாகும் என அவர் கூறினார். அப்போது நகர பாஜக தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
|
“அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை” - குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் @ புதுச்சேரி | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-01-28 22:59:00 |
புதுச்சேரி: அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை என பல்கலைக்கழக மாணவர்களிடம் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் வந்தடைந்தார்.
அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு, ‘பாரதம் @ 2047’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் இன்று இரவு கலந்துரையாடி பேசியதாவது:
“இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார மிக்க நாடாக வளர்ந்துவிடும். பிரதமரின் வலிமையான வழிகாட்டுதலில் அனைத்து துறைகளிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்களை கொண்டது இந்தியா, உலகத்துக்கு வழிகாட்டக்கூடிய வகையில் வளர்ந்து வருகிறது.
குறிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை விட 4 மடங்கு அதிகமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். 100 மில்லியன் கேஸ் இணைப்பு, 500 மில்லியன் வங்கி கணக்கு துவக்கம் போன்றவற்றை இந்த பத்தாண்டுகளில் நாம் செய்துள்ளோம்.
110 மில்லியன் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 முறை நிதி உதவி கொடுக்கிறோம். அரசியலில் வாரிசு, ஊழல் என ஒரு தலை பட்சமாக சிக்கியிருந்தோம். வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயல்படுகிறது. உலக அளவில் முக்கியத்துவம் மிக்க நாடாக திகழ்கிறோம். இப்போது உலக நாடுகள் நம்மிடம் உதவி கேட்கிறார்கள். அனைத்தும் சமம் என்கிற கொள்கையில் தற்போது செயல்படுகிறோம். கடந்த காலங்களில் சட்டத்துக்கு மேல் என இருந்தனர். தற்போது அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்கிற நிலைக்கு வந்துள்ளோம்.
சமத்துவம் இல்லாமல் சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியாது. குடியரசு தினவிழாவில் பெண்கள் சக்தியை பறைசாற்றும் வகையில் நடந்த நிகழ்ச்சி உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஆட்சியில் பெண்களின் பங்களிப்பு இருக்கும். 3-ல் ஒரு பங்கு பெண்கள் பங்களிப்பு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் இருக்கும். இன்று இந்தியா தளவாட பொருட்கள் உள்ளிட்ட முக்கிய சாதனங்களை நாமே தயாரிக்கிறோம். 4-வது நாடாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளோம். இன்னும் பல சாதனைகளை படைக்க இருக்கிறோம். மற்ற நாடுகள் நம்மை பார்த்து வியக்கிறார்கள், மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள். 2047-ம் ஆண்டில் இந்தியா சிறப்பான நிலையில் இருக்கும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதே நேரத்தில் அரசியல் எளிதானது அல்ல. கடுமையான முயற்சிகள் எடுத்துத்தான் வர வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு கடுமையான உழைப்பு இருக்க வேண்டும். நம்முடைய ஜனநாயக அமைப்பானது, ஊராட்சி, நகராட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என பல கட்டங்களாக உள்ளது. நிர்வாக முறை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் இளைஞர் பங்களிப்பு அவசியம், இதனைதான் பிரதமரும் விரும்புகிறார். அரசியல் அதிகாரத்தில் பெண்கள் பங்களிப்பை ஒப்பிடும்போது, 1990-களில் 17 எம்.பி-க்கள் எண்ணிக்கை தற்போது பல மடங்கு கூடியுள்ளது. இது பாலின சமத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதற்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. அனைத்து நிலைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராஜ்நிவாஸில் இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் விடுதியில் இரவு தங்கினார். நாளை காலை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சிதம்பரம் புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சிக்கு அழைத்தும் பல்கலைக்கழக விழா அரங்கில் அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்த செய்தியாளர்கள்: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையொட்டி அச்செய்தியை சேகரிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு காவல் துறை மூலம் நுழைவு அனுமதி சீட்டு தரப்பட்டது.
பஸ் பல்கலைக்கழகம் சென்றவுடன் விழா அரங்கு முன் வழியாக பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின் வழியாக செல்ல தெரிவித்தனர். அங்கு சென்றபோது,
குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்வுக்கு செய்தியாளர்கள், புகைப்படகாரர்கள், வீடியோகிராபர்கள் ஆகியோருக்கு அழைப்பு கொடுத்தும் அரங்கத்திற்குள் அனுமதியில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து செய்தியாளர்கள் உயர்மட்டம் வரை பேசியும் உள்ளே அனுமதிக்கவில்லை. விழா அரங்குக்கு அடுத்துள்ள கட்டிடத்தில் பத்திரிக்கையாளர் அமர அறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபோல் ஏதும் வசதி செய்து தரப்படவில்லை. இறுதியில் 10 பேரை மட்டும் அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்காமல் ஒட்டுமொத்த செய்தியாளர்களும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார்கள்.
|
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய ஒன்றிணைய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல் | என்.சன்னாசி | மதுரை | 2024-01-28 19:11:00 |
மதுரை: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய ஒன்றிணைய வேண்டும் என்று நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள எஸ்விஎன் கல்லூரி வளாகத்தில் அகில இந்திய நாடார் மகாஜன சங்க 72வது மாநாடு நேற்று தொடங்கியது. சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். 2வது நாளான இன்று நடந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: ''இந்த மாநாட்டில் பங்கேற்றது வாக்கு அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் பெரியார், காமராஜர் ஆகிய 2 தலைவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காமராஜரை சமுதாயத் தலைவராக பார்க்கக்கூடாது. அவர் தேசியத் தலைவர். தமிழக கல்விப் புரட்சிக்கு பாடுபட்டவர். 28 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கியவர். அவர் இல்லை எனில் தமிழகம் பின்னோக்கி சென்றிருக்கும். திருச்சி பெல், ஆவடி தொழிற்சாலை, சேலம் இரும்பு தொழிற்சாலை உள்ளிட்டவற்றை அன்றைக்கே கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தார்.
நாடார் சமூகத்தினருக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது என்ற நிலை மாறி, தற்போது அந்த சமூகத்தினரே கோயிலை நிர்வாகிக்கும் நிலை வந்துவிட்டது. நாம் ஒன்று சேர்ந்தால் நமது ஆட்சியை அமைக்கலாம். முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகளை நாம் கையாள முடியும். காமராஜரின் ஆட்சி மீண்டும் அமைக்கவேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ராமதாஸ் காமராஜரின் ஆட்சியில்தான் மருத்துவராக ஆனார். மருத்துவ சீட்டிற்கு ராமதாசிடம் ரூ.500 லஞ்சம் கேட்கப்பட்டது. ஆனால், அன்று அவரிடம் ரூ.50 கூட, இன்றி தனக்கு மருத்துவச் சீட்டு கிடைக்காது என, இருந்த நிலையில், காமராசருக்கு இது தெரிந்து லஞ்சம் கேட்டவரை நீக்கி, பிறகு அவருக்கு மருத்துவ சீட் கிடைக்க செய்தது என, பல வரலாறு உள்ளது.
ஜாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று அவசியம். 92 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் நடத்திய கணக்கெடுப்பு தற்போது தேவை இல்லை. அடிப்படை வசதி, தொழில் போன்ற 19 குறியீடுகள் மூலம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஷாப்பிங் மால்கள் அதிகரிக்கின்றன. நமது பகுதியில் கடை வைத்து மாத இறுதியில் கடன் கொடுக்கக்கூடிய நம்ம அண்ணாச்சி தான் நமக்கு தேவை. தமிழகத்தை நாம் ஆளக்கூடிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணையவேண்டும்'' இவ்வாறு கூறினார். மாநாட்டில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
|
''கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்'' - இபிஎஸ் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | தஞ்சாவூர் | 2024-01-28 19:05:00 |
தஞ்சாவூர்: கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரத்தநாடு பகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தொண்டர்கள் மத்தியில், அவர் பேசியது: "ஒரத்தநாடு என்றாலே, துரோகி இருக்கிற இடம் என்பதுதான் நினைவுக்கு வரும். அந்த துரோகியை வெல்வதற்காகத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறீர்கள். அதிமுக தலைமைக் கழகம் 2 கோடி தொண்டர்களுக்கு சொந்தமான சொத்து. நாம் எப்படி கோயிலுக்குச் சென்று தெய்வங்களை வழிபடுகிறோமோ, அதுபோல், அதிமுகவினருக்கு கோயிலாக இருப்பதுதான், சென்னையில் இருக்கும் அதிமுக கட்சி அலுவலகம். அதை அடித்து நொறுக்கலாமா? அது என்ன செய்தது?நமக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தலைமைக் கழகத்தை கோயிலாக வணங்கக்கூடிய தொண்டன் என்ன செய்தான்? நாம் வணங்கும் கோயிலை அடித்து நொறுக்கலாமா? இது மன்னிக்கக்கூடிய குற்றமா?" என்று பேசினார்.
முன்னதாக, வல்லம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "தமிழக முதல்வரின் மகனும், மருமகனும் ரூ.30,000 கோடி பணத்தை ஊழல் செய்துள்ளனர். அந்தப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில், கொள்ளையடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்துள்ளது. இவ்வாறு கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்" என்று பேசினார்.
|
திருப்பத்தூர் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு | ந. சரவணன் | திருப்பத்தூர் | 2024-01-28 18:36:00 |
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், சோழனூர் அருகே கல்யாண முருகன் கோயில் அருகே கற்கால மக்கள் தீட்டிய அழகிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப்பாறை ஓவியங்கள் என தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது, ''திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் சோழனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கும், ஏலகிரி மலைச்சரிவிற்கும் இடையில் 'கல்யாண முருகன் கோயில்' அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குக் கிழக்குப் புறமாக உள்ள சிறிய குன்றின் பக்கவாட்டில் அழகிய பாறை ஓவியங்களை கண்டெடுத்தோம்.
அந்த குன்றானது சிறிய குகை போன்ற அமைப்பில் உள்ளது. இந்த குன்றானது ஒழுங்கற்ற சொர சொரப்பான மேல்புறத்தைக் கொண்டிருப்பதால், அந்த கால மக்கள் தீயினை மூட்டிப் பாறையின் மேல்புறத்தைப் பெயர்த்தெடுத்த பிறகு, அங்கு சமப்பகுதியை உருவாக்கி மிக நேர்த்தியாக ஓவியங்களைத் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 6 அடி அகலமும் 12 அடி நீளமும் கொண்ட மையப்பகுதியில் ஓவியங்கள் பரவலாக வரையப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவை என்ன வென்றால், 13 மனித உருவங்கள் இதில் காணப்படுகின்றன.
அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் காணப்படுகின்றன. விலங்குகளும், மனிதர்களும் இங்குள்ள ஓவியங்களில் 6 மனித உருவங்கள் ஒரு கையில் ஆயுதங்களோடு விலங்கின் மீது அமர்ந்த நிலையில் மறுகையில் விலங்கின் கழுத்துப் பகுதியை பற்றிய நிலையில் சண்டைக்குப் புறப்படுவது போல வரையப்பட்டுள்ளன. சில ஓவியங்கள் நீளமான பெரிய ஆயுதத்தை கையில் ஏந்திய நிலையிலும், அமர்ந்துள்ள விலங்கின் உருவமும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன.
படகு போன்ற உருவம்: இங்குள்ள ஓவியங்களில் ஒன்றில் மனித உருவம் ஒன்று கையில் ஆயுதங்களோடு ஒரு படகு போன்ற அமைப்பில் பயணிப்பது போல வரையப்பட்டுள்ளது. வளைந்த நிலையில் அடர்த்தியாக வரையப்படுள்ளது ஆய்வுக்குரியதாகும். இங்குள்ள ஓவியங்கள் விவரிக்கும் செய்தி என்ன வென்றால் இனக்குழுக்களுக்குள் எழும் சண்டை நிகழ்வினை விவரிப்பதாகக் கொள்ளலாம். மேலும் பெரிய அளவிலான வேட்டை நிகழ்வினை அறிவிப்பதாகவும் கருத இடமுண்டு. அந்த கால மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் ஒப்பற்ற சான்றாக இவை அமைந்துள்ளன.
மேலும், இங்கு இன்னும் பல ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ஏறத்தாழ 3500 – 4000 ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களும் அவற்றின் காலக்கணிப்பும், தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றன.
பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். அக்கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கலாம்.
அந்த கால மனிதர்களின் உள்ளத்தில் தோன்றும் அக உணர்வுகள், அவர்களது வாழ்வியல் அனுபங்களை வெளிப்படுத்தும் ஊடகமே இப்பாறை ஓவியங்களாகும். பெருங்கற்காலச் சின்னங்கள் மற்றும் பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாக குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப்படுத்தி கோட்டுருவமாக தேவைக்குத் தகுந்தாற் போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. இந்த குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களை தாங்கியிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன.
உருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன், ஓவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. மேலும் வண்ணக் கலவையினைச் சுரண்டி எடுத்து வேதியியல் ஆய்வகங்களில் ஆய்வு செய்வதன் வாயிலாகவும் காலம் கணிக்கப்படுகின்றது. வெள்ளை நிறம், சுண்ணாம்பு கல் அல்லது வெள்ளைக் களிமண், வெப்பாலை என்ற மரத்தின் பால் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகின்றது. செங்காவி வண்ணம் செம்மண் மற்றும் இலைகளின் சாறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிக அளவில் வெள்ளை நிறமும் அதற்கு அடுத்த நிலையில் செங்காவி நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்கள் செங்காவி நிறத்தில் வரையப்பட்டவை. தமிழகத்தின் வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட போதும், திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திரபுரம், செல்லியம்மன் கொட்டாய் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இதுவரை வெண்மை நிறப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பாறை ஓவியங்கள் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகும்.
இதனைப் பாதுகாப்பதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறியச் செய்வதும் நமது முக்கிய கடமையாகும். திருப்பத்தூர் மாவட்டம், சோழனூரில் கண்டறியப்பட்ட இந்த அழகிய பாறை ஓவியம் உள்ள குகைகளில் நெருப்பு மூட்டி கறி உணவுகள் சமைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களால் இங்குள்ள பாறை ஓவியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆகவே மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் விரைவில் இப்பாறை ஓவியங்களைப் பாதுகாக்கவும், அவற்றை ஆவணப்படுத்த முன் வர வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.
|
'திருச்சி சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடம்' - சீமான் காட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 17:35:00 |
சென்னை: "சாந்தன் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ராபர்ட் பயசும், ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி இறப்புச்செய்தி திருச்சி சிறப்பு முகாமிலுள்ளவர்கள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் எங்கள் ரத்தமென சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது. சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஐயா கிருஷ்ணமூர்த்தி இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார். அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் மெத்தனப்போக்குமே அவரது உயிரைப் போக்கியிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.
ஏற்கெனவே, தம்பி சாந்தன் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி இறப்புச்செய்தி சிறப்பு முகாமிலுள்ள உறவுகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் எங்கள் ரத்தமென சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்? இன்றைக்கு ஐயா கிருஷ்ணமூர்த்தி! நாளைக்கு யார்? ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டுமென ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் அவர்களை மனித உரிமைகள் அற்ற நிலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு, பேரவலம்.
ஆகவே, தம்பிகள் சாந்தன், ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை சிறப்பு முகாமிலிருந்து உடனடியாக விடுவித்து, மாற்றிடத்தில் தங்க வைக்க வேண்டுமெனவும், விரும்பிய நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடிந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஈழச்சொந்தங்களையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது: அன்புமணி பேட்டி | என்.சன்னாசி | சென்னை | 2024-01-28 17:00:00 |
சென்னை: மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதை பார்க்கும்போது, வேண்டுமென்றே கர்நாடகா, தமிழகத்திடம் மோதுகிறது. தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ்நாடு அரசு தூங்குகிறதா அல்லது தூங்குவதுபோல் நடிக்கிறதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதைப்பொருட்களும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. இவற்றை தடுக்க, முதல்வர் கவனம் செலுத்தவேண்டும். மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனையை தடை செய்ய வேண்டும்.
சமீபத்தில் தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர் வெளிநாடு செல்வது என்பது ஒன்றும் புரியவில்லை. 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வரவேண்டும். சென்னையில் 65% தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் 12 சதவீத தொழிற்சாலைகளே உள்ளன. அயோத்தி ராமர் கோவிலை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என்பது தெரியாது. அது ஒரு கோயில் விழாவாகவே நான் பார்க்கிறேன்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாமக மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்போது எவுதும் சொல்ல முடியாது. மக்களவை தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. இன்னும் கல்யாணமே ஆகவில்லை அதற்குள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்கிறீர்கள்.'' இவ்வாறு அவர் கூறினார். பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
|
தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியல் இன்னும் தயாராகவில்லை: காங்கிரஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 15:59:00 |
சென்னை: தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை காங்கிரஸ் இன்னும் தயாரிக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் பட்டியல் ஆதாரமற்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க, கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் மூத்த அமைச்சர்கள் பலர் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகள் உள்பட 14 தொகுதிகளைக் கேட்டு 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. | முழுமையாக வாசிக்க > தமிழகத்தில் 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் திட்டம்: திமுகவுடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை
இதனிடையே, இன்று நடைபெறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே. இதில், தொகுதிகள் இடங்கள் என்று எதுவும் இறுதி செய்யப்படாது, என்று கூறப்படுகிறது.
|
அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் - அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 15:41:00 |
சென்னை: அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜன.28) சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி திருகோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிகப் பயணத்திற்கு முக்கியத்துவம் தருகின்ற வகையிலும், ஒரே நேரத்தில் பல்வேறு திருக்கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆடி மாதங்களில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதங்களில் வைணவ திருக்கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது.
சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் கடந்த ஆண்டு 200 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஆண்டு 300 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில் அதன் முதற்கட்ட பயணம் ஜனவரி 31-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.75 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.
முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் 207 மூத்த குடிமக்கள் இன்றைய தினம் புறப்படுகின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு போர்வை, சால்வை, துண்டு, பெட்சீட், குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகளை வழங்கியுள்ளோம். இந்த 6 ஆன்மிகப் பயண பேருந்துகளில் மூத்த குடிமக்களுடன் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.
அறுபடைவீடுகளுக்கும் ஒரே முறையில் தனிப்பட்ட ஒருவர் சென்று வருவது சற்று கடினமானதாக இருப்பதோடு, அதற்கான செலவினம் ரூ. 50 ஆயிரம் வரை ஆகும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 15,830 செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 1000 மூத்த குடிமக்களை அழைத்துச் சென்று வர ஆகும் செலவினம் ரூ.1,58,30,000 ஆகும். இந்த தொகையானது திருக்கோயிலின் நிதியிலிருந்து செலவிடப்படவில்லை. இதன் முழு செலவினத் தொகையினை அரசு மானியமாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆன்மிகப் பயணம் மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திட வாழ்த்துகளை தெரிவித்து, இறைவனை பிராத்திக்கின்றோம்.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் என்பது மிகச் சிறப்பான புதிய திட்டம் என்பதால் பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. குறைந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்து இன்று அனுப்பி உள்ளோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் மீது பக்தர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை புலப்படுத்துகிறது. அறுபடை வீடு ஆன்மிகப் பயணமானது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படை வீட்டிலிருந்து தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறப்பான தரிசனத்தை ஏற்படுத்தி தருவோம்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதற்கு இதுவரையில் எந்த விண்ணப்பமும் வரவில்லை. ஒரு சிலர் அக்கோயிலுக்கு செல்வதற்கான மார்க்கத்தை கேட்டபோது இந்து சமய அறநிலைத்துறை பயண மார்க்கத்தை அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றது. விண்ணப்பங்கள் வந்தால் அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். அதிமுகவினரின் சமீப கால பேட்டிகளை பார்த்தால் இன்றைக்கு ஒரு நிலை, நாளைக்கு ஒரு இல்லை என்று மாறி, மாறி பேட்டி அளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேட்டிக்கு தினந்தோறும் நாம் பதில் சொல்ல வேண்டும் என்றால் நாம் கூறுகின்ற பதிலே வித்தியாசப்படும் என்பதால் அவர்கள் போக்கிற்கு அவர்களை விட்டு விடுங்கள்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திருக்கோயில்களில் வழங்கப்படும் அர்ச்சனை, அபிசேக சீட்டுகள் உள்ள அனைத்து சேவைகளுக்கும் கணினிமயமாக்கப்பட்ட சீட்டுகளே வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு எத்தனை அபிஷேகங்கள் நடக்கிறது என்பதுவரை அனைத்தும் உடனுக்குடன் கணினியில் ஏற்றப்படுகின்றன. அதில் சிறு தவறு நடப்பதற்கும் வாய்ப்பில்லை. இருந்தாலும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இது குறித்த புகார் எழுந்தவுடன் மதுரை மண்டல இணை ஆணையர் மூலம் விசாரணை மேற்கொண்டோம். அவரும் விசாரணை செய்து, எந்த விதமான தவறும் நடைபெறவில்லை என்று கூறினார்" என தெரிவித்தார்.
|
தமிழகத்தில் 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் திட்டம்: திமுகவுடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 13:53:00 |
சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காங்கிரஸில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, மாநில அளவில் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் மாநிலதலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் உள்ளிட்ட 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு முதற்கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதிலிருந்து தங்களுக்கு 14 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை வைக்க இருக்கிறது. இந்தப்பட்டியலில், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன், மேலும் 12 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேவில், ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய 12 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
|
காவலர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பல்லடம் கோட்டம் - விழி பிதுங்கும் காவல் துறை | இரா.கார்த்திகேயன் | திருப்பூர் | 2024-01-28 13:30:00 |
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழில் சார்ந்த துணை நகரமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்கள். விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்கள், நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தி சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயம் என துணை தொழில் நகரமாக தன்னை நாளுக்கு நாள் தகவமைத்துக் கொண்டே இருக்கிறது பல்லடம். தொழில் எந்தளவுக்கு கோலோச்சுகிறதோ, அந்தளவுக்கு அதிரடியாக அவ்வப்போது குற்றங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
தமிழகத்தையே உறைய வைத்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது. கள்ளக்கிணறு பகுதியில் குடிபோதையில் தொடங்கிய தகராறு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காவு வாங்கிய சம்பவம் வாழ் நாளெல்லாம் பலரால் மறக்க முடியாத ஒரு ஆழமான வடுவாக அப்பகுதியில் மாறியது. சமீபத்தில் காதலித்து மணந்த பெண்ணை பல்லடம் போலீஸார் சமாதானம் செய்து, பெற்றோர் குடும்பத்துடன் அனுப்பி வைக்க, அந்த இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இதில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காம நாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரின் குற்றச்சாட்டை அலட்சியமாக கருதியதால், இன்றைக்கு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் தொழில் நகரில், குற்றங்களும் குறைந்தால் மட்டுமே தொடர்ந்து செழிப்பான வளர்ச்சியை எட்ட முடியும். குற்றங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் அந்த பகுதியில் இருந்து தொழில் வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒன்று.
பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.அண்ணா துரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய சட்டப்பேரவைத் தொகுதி பல்லடம் தான். ஆண்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 579 , பெண்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 196 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தமாக 3 லட்சத்து 92ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடமும், சுற்றியுள்ள கிராமங்களும் விரிவடைந்து கொண்டே இருப்பதால், இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கடந்த காலங்களை காட்டிலும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பல்லடம் காவல் எல்லை என்பது பரந்து விரிந்த பகுதியாகும். திருப்பூர் மாநகரின் நொச்சிபாளையம் பிரிவில் தொடங்கி காரணம்பேட்டை வரை உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எல்லை வரை பல்லடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி தான். பல கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதியாகும். கணபதி பாளையம், கரைப்புதூர், ஆறு முத்தாம் பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் லட்சக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் வரை தொழிலுக்காக வந்து இந்த பகுதியில் தங்கி உள்ளனர். தங்குபவர்களின் ஆவணங்களை நிறுவனங்களும், வாடகைக்கு வீடு தருபவர்களும், அந்தந்த ஊராட்சிகளும் முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
யார் வேண்டுமென்றாலும், எங்கும் தஞ்சம் அடையலாம் என்பது தான் யதார்த்த சூழ்நிலை. தொடர்ந்து நாளுக்கு நாள் வளரும் பல்லடம் நகரில் போலீஸாரின் எண்ணிக்கை என்று பார்த்தால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த எண்ணிக்கை இருந்ததோ அதே அளவில் தான் தற்போதும் உள்ளது. 50 முதல் 70 போலீஸார் வரை இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பெரும்பாலும் நாள்தோறும் பணிகளை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அதாவது விஐபி பாதுகாப்பு, கோயில்திருவிழா, அரசின் அன்றாட நிகழ்வுகள்,நீதிமன்ற வழக்கு பணிகள், போராட்டங்கள்என பல்வேறு பணிகள் போலீஸாருக்கு இருப்பதால், காவல் நிலைய பணிகளில் புகார்அளிக்க வருபவர்களின் புகார்களை உரிய முறையில் விசாரிப்பது தொடங்கி புகார்களை பெறுவது வரை பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
2 கூடுதல் காவல் நிலையங்கள்?: பருவாய், நொச்சிபாளையம், இச்சிபட்டி, கோடாங்கிபாளையம் செம்மிபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி காரணம்பேட்டையில் ஒரு காவல் நிலையமும்,கணபதி பாளையம், கரைப்புதூர், ஆறுமுத்தாம் பாளையம், அருள்புரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு அருள்புரத்தில் ஒரு காவல் நிலையமும் அமைத்து, போதிய போலீஸாரை நியமிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசும், முதல்வரும் செய்துதர வேண்டும். பல்லடம் மற்றும் காமநாயக்கன் பாளையம் ஆகிய இரு காவல் நிலையங்களிலும் தற்போது நேரடி ஆய்வாளர்கள் இல்லாத சூழ்நிலை தான் உள்ளது. குற்றங்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்லடம், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டியது உடனடி தேவையாகும்.
அதேபோல் பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் திறந்து வைத்தார். அதுவும் போதிய போலீஸார் இன்றி, பகல் நேரங்களிலேயே பூட்டிக் கிடக்கிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீஸார் பொது மக்களின் கண்ணில் பட்டாலே, குற்றங்கள் குறையும். அதேபோல் இரவு நேர ரோந்து பணியையும் தீவிரப் படுத்த வேண்டியது தற்போது தேவையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீஸார் கூறும் போது, “பல்லடம் காவல் எல்லை பரந்து விரிந்த பகுதிதான். ஆனால் அதற்கேற்ப போலீஸார் இல்லை. பணியில் இருப்பவர்களும் பல்வேறு மாற்று பணிகளுக்கு நியமிக்கப்படுவதால், தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருவது உண்மை. இதனால் தேவை என்கிறபோது கூட, விடுப்பு எடுக்க முடியாத நெருக்கடி காவலர்களுக்கு ஏற்படுகிறது” என்றனர்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறும்போது, “அருள்புரத்தில் புதிய காவல் நிலையம் தொடர்பாக, அரசுக்குகருத்துரு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பல்லடம் பகுதியில் போதிய போலீஸார் பணியில் உள்ளனர்” என்றார்.
|
''மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி'': யுஜிசி வரைவு விதிகளை திரும்பப்பெற ராமதாஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 12:40:00 |
சென்னை: "உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். அதற்கு மாறாக, தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகிவிடும். எனவே, இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்திருக்கிறது. இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும்.
ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எத்தகைய தருணங்களில் ரத்து செய்யலாம் என்பதற்கான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, ஏதேனும் ஒரு பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அப்பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அந்த இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் பணியிடம் "சி" மற்றும் "டி" பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், அது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக செயற்குழுவே எடுத்துக்கொள்ளலாம்; "ஏ" மற்றும் "பி" பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் அது குறித்து மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளில் கூறப்பட்டிருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளைக் கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடவுள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் இன்னும் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணிகளில் 1.39%, உதவிப் பேராசிரியர் பணிகளில் 16% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40% மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68% மட்டும் தான். பழங்குடியினரின் எண்ணிக்கை மூவர், அதாவது அரை விழுக்காடு தான். பேராசிரியர்கள் பணியிடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 308 பணியிடங்களில் ஒன்று மட்டுமே பழங்குடியினருக்கு கிடைத்துள்ளது. இது வெறும் 0.32% தான். இந்தியாவிலுள்ள மற்ற ஐஐடி, ஐஐஎம்களின் நிலையும் இத்தகையதாகவே காணப்படுகிறது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறமுடியாது. மாறாக, தகுதியானவர்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் பல்வேறு சதிகளைச் செய்து வெளியேற்றுகின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியானவர்களை வெளியேற்ற கிரீமிலேயர் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
எந்தவித சட்ட ஆதரவும் இல்லாமல் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மறுத்து வந்தன. இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் நடைமுறைக்கு வந்தால், அதைப் பயன்படுத்தி, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படும். சமூகநீதிக்கு எதிரான பல்கலை. மானியக்குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். அதற்கு மாறாக, தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகிவிடும். எனவே, இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களிடம் பணம் ‘வசூல்’ - விசாரணை நடத்த உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 12:23:00 |
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை பெறும் உறவினர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
“இந்து தமிழ் திசை” நாளிதழில் ஜன.24-ம் தேதி “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம் – பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை பெற ரூ.2,000, ரூ.3,000 வசூல் – கடன் வாங்கியாவது கொடுக்கும் ஏழை மக்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: மருத்துவக் குழுவினரின் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இறப்பவர்களுக்கு வழக்கு தொடர்பு இருந்தால், அவர்களின் உடல் கட்டாய பிரேதப் பரிசோதனை செய்த பிறகு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் படுகிறது. உறவினர்களிடம் நேரடியாக வழங்குவதில்லை. மருத்துவமனையில் ஊழல் புகார்கள் மற்றும் லஞ்சம் பெற முயற்சி செய்தால், லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தொடர்பு கொள்ள வசதியாக எல்லா இடங்களிலும் விஜிலன்ஸ் தொடர்பு எண் ஒட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தளத்திலும் ஆலோசனைப் பெட்டி சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் பெறப்படும் புகார் கடிதங்கள் மீது வாரம் தோறும் சனிக் கிழமைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. செய்தியில் குறிப்பிட்டவாறு எந்தவித புகாரும் இதுவரை பெறவில்லை. மருத்துவமனையில் இணை பேராசிரியர் தலைமையில் 3 உதவி பேராசிரியர்களுடன் விஜிலன்ஸ் கமிட்டி இயங்கி வருகிறது. இந்த குழுவின் உதவியுடன் இப்புகார் குறித்து முழு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
|
தூய்மை பணியாளர்களை கவுரவிப்பதாக அழைத்து அவமதிப்பு - விருதுநகர் நிர்வாகத்துக்கு உள்ளாட்சி பணியாளர்கள் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 11:31:00 |
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களை கவுரவிப்பதாக அழைத்து அலைக் கழிப்பு செய்து, அவமதித்ததாக மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி ) பொதுச்செயலாளர் ம.இராதா கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவுரவிப்பதற்காக தூய்மை பணியாளர், தூய்மை காவலர், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர், சுகாதார ஊக்குனர்கள் மற்றும் மகளிர் திட்ட தொழிலாளிகள் அனைவரையும் வரவழைத்துள்ளனர்.
ஆனால், அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கி விட்டு தொழிலாளர்களுக்கு திட்ட இயக்குநர் வழங்குவதாக தெரிவித்துள்ளார். திட்ட இயக்குனரோ தொழிலாளர்களை அவரது அலுவலகத்துக்கு வரச்சொல்லி உள்ளார். அவ்வாறு வந்த தொழிலாளர்களை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க வைத்துவிட்டு, கடைசியில் உதவி இயக்குநர் தணிக்கையை வைத்து சான்று மட்டும் வழங்கி அனுப்பியுள்ளார்.
தொழிலாளிகள் அவமதிப்பு: மக்கள் மத்தியில் விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வழங்க வேண்டிய கவுரவத்தை இதுபோன்று இழுத்தடிப்பு செய்து வழங்கியது தொழிலாளர்களை கவுரவிப்பது ஆகாது; மாறாக அவமதிக்கும் செயலாகும். சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவிக்க தேர்வு செய்யப்பட்ட தொழிலாளிகளை இவ்வாறு அவமதித்தது மேலாதிக்க மனநிலையை வெளிப்படுத்துவதோடு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படியும் தண்டனை தரத்தக்க குற்றமாகும்.
கடை நிலையில் பணிபுரியும் சமூகத்தின் கடை கோடியில் உள்ள இத்தொழிலாளர்களை கவுரவிக்கவில்லை என்றாலும் இது போன்று வரவழைத்து அலைக் கழிப்பு செய்து, அவர்களை அவமதிக்காமலாவது இருந்திருக்கலாம். இந்த செயலை தமிழக உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி ) வன்மையாக கண்டிக்கிறது. மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து கொள்ளும் வகையில், அவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
|
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக கடற்கரை - வேளச்சேரி வழித்தட நிலையங்களை மேம்படுத்த திட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 09:32:00 |
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவையை ஏற்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இத்தடத்தில் உள்ள நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்துவது தொடர்பாக ஐஐடி குழு விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
சென்னையில் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடம், பறக்கும் ரயில் வழித் தடம் என்ற பெயரில் இயங்கு கிறது. இந்த வழித் தடத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. கடற்கரை - வேளச்சேரி தடத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட மின்சாரரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி நடப்பதால், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதனிடையே, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில்சேவையை ஏற்று நடத்த சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில் இயக்கம் முதல் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பறக்கும் ரயில்நிலையங்களை மறுசீரமைப்பு செய்து, மெட்ரோ ரயில் நிலையம்போல மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பறக்கும் ரயில் தடத்தில் உள்ள நிலையங்களை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் ஆய்வு செய்யத் தொடங்கியது. முதல் கட்டமாக, திருவல்லிக்கேணி, திருமயிலை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி, திருமயிலை பறக்கும் ரயில் நிலையங்களில் சென்னை ஐஐடி குழு விரைவில் ஆய்வு மேற்கொண்டு, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இதில், வணிக வளர்ச்சி மற்றும் பயணிகள் வசதிகள் அடங்கும். அறிக்கையின் அடிப்படையில், அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த ஏஜென்சியை நியமிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஐஐடி ஆய்வில் சொத்து மேம்பாட்டுக்கான செலவை மதிப்பிடுவது மற்றும் தானியங்கி கட்டணவசூல், பார்க்கிங், சிசிடிவி கேமரா போன்ற பிற மேம்பாட்டு பணிகள் இடம் பெறும். பறக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணையாக மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்தில் கிடைக்கும்.
இதைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்வோம். அதில், பயணிகள் போக்குவரத்து, இரண்டாம் கட்டத்துடன் ஒருங்கிணைப்பு, தேவையான பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகள் வசதிகள் போன்ற விவரங்கள் இருக்கும். விரிவான திட்ட அறிக்கையுடன் நிதியுதவி பெற முயற்சி எடுப்போம்.
நாங்கள் ஏஜென்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, ஒவ்வொரு நிலையத்தையும் எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பதை அவர்கள் வரைவார்கள். இந்த நிலையங்களை மெட்ரோ ரயில் தரத்துக்கு கொண்டு வருவதே திட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்ற பிறகு, நிலையத்தை மேம்படுத்தும் பணிக்கு குறைந்தது ஒராண்டாவது ஆகும். அதுவரை ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
‘திமுக பைல்ஸ்’ பாகம் மூன்றின் 3-வது ஆடியோ | அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 07:34:00 |
சென்னை: திமுக பைல்ஸ் பாகம் மூன்றின் 3-வது ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் விரும்பியவர் களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் அண்ணாமலை, ‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை’ வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் இரண்டை’ வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ இதையடுத்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றின்’ 3-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வழக்கு குறித்து உரையாடல்: உரையாடலில், ஒரு வழக்கு விசாரணை கையாளப்படுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், வழக்கின் விவரம் ஆடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பதிவில் அண்ணாமலை, “2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள்ளோம். ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த கதைகள் மூலம் சிபிஐ விசாரணையை தடம் மாறச் செய்துள்ளனர். அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு, அனைத்து விஷயங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட 2 ஆடியோக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
காமராஜர் வழியில் கல்வியை வளர்த்தது அதிமுக ஆட்சி: நாடார் மகாஜன சங்க மாநாட்டில் இபிஎஸ் பெருமிதம் | செய்திப்பிரிவு | மதுரை | 2024-01-28 07:02:00 |
மதுரை: முன்னாள் முதல்வர் காமராஜர் வழியில் ஆட்சியை நடத்தி, தமிழகத்தை கல்வியில் அபார வளர்ச்சிபெறச் செய்தது அதிமுக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
அகில இந்திய நாடார் மகாஜன சங்கத்தின் 2 நாள் மாநில மாநாடு, மதுரை அருகேயுள்ள நாகமலை புதுக்கோட்டையில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியதாவது: காமராஜர் பற்றி பேச அதிமுகவுக்குத்தான் அதிக உரிமை உள்ளது. பெருந்தலைவர் என்ற பட்டம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், ஊராட்சி ஒன்றியத் தலைவரை பெருந்தலைவர் என்று அழைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் என்பதை, குழுத் தலைவர் என மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
மெர்க்கன்டைல் வங்கியை கபளீகரம் செய்ய சிலர் முயன்றனர். ஜெயலலிதா அவ்வங்கியை மீட்டெடுக்கப் பேருதவியாக இருந்தார். சிவந்தி ஆதித்தனுக்கு மணிமண்டபம் அமைத்து, நான் திறந்துவைத்தேன். வணிகம் செய்யும் சமூகத்தினருக்குப் பாதுகாப்பு அளித்தது அதிமுக ஆட்சிதான். ஆனால், இன்று வணிகர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர்.
காமராஜர் மதிய உணவுத் திட்டம் என்ற விதையை நட்டார். அதை மரமாக்கி எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார். ஜெயலலிதா சீருடை, புத்தகம், கணினிஉள்ளிட்டவை வழங்கி, ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
நான் முதல்வராக இருந்தபோது ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன. உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேறியது அதிமுக ஆட்சியில்தான். காமராஜர் வழியில் செயல்பட்டு, இந்த சாதனையைப் படைத்தோம். வரும் மக்களவைத் தேர்தலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.
மாநாட்டில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, திமுக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் பங்கேற்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
|
தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்து வருகிறது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2024-01-28 06:51:00 |
கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்து வருகிறது. இச்சூழலில், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது தேவையற்றது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, உளுந்தூர்பேட்டையில் நேற்று யாத்திரையைத் தொடங்கினார்.
அங்கு அவர் பேசும்போது, “நாளைய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு புதியக் கல்வி கொள்கையை கொண்டுவந்தது. இதை தமிழக அரசு எதிர்ப்பது தேவையற்றது.
இந்த கல்விக் கொள்கைக்குமாற்றாக, புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு கூறியது. ஆனால் 31 மாதங்களாகியும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 25ஆண்டுகளாக எதைப் படித்தோமோ, அதைத்தான் தற்போதும்படித்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ‘இருமொழிக் கொள்கை’ என்ற பெயரில், அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை பலமொழிகளை கற்க ஆர்வமாக இருந்தாலும், திமுக அரசு அதற்குதடையாக இருக்கிறது. தேவையின்றி புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன் 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றனர். ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10,323 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு என்பது கானல்நீராகி விட்டது.
பிரதமர் மோடியை எதிர்க்க ஸ்டாலின், உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்கள் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. பட்டியலின சமூக சிறுமி, திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டார். எனவே, திமுகவினரை மன்னிக்கக்கூடாது.
தமிழகத்திலேயே ஊழல்மிகுந்த நகராட்சி, உளுந்தூர்பேட்டை நகராட்சிதான். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, லஞ்சமில்லாத நிர்வாகம் தேவையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, திருக்கோவிலூர், விழுப்புரத்தில் யாத்திரை மேற்கொண்டார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அண்ணாமலை பேசும்போது, "35 அமைச்சர்கள் உள்ளதிமுக ஆட்சியில், 11 அமைச்சர்கள்மீது ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது பாஜக அதைத்தான் வலியுறுத்துகிறது.
மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே திருமாவளவன் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். வாரிசு அரசியலை உருவாக்கி, தொண்டர்களுக்கு துரோகம் செய்துவருகிறது திமுக. தமிழகத்தை காப்பாற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என்றார்.
|
‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடல் ஒலிக்க பவதாரிணியின் உடல் அடக்கம்: ஓபிஎஸ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி | என்.கணேஷ்ராஜ் | கூடலூர் | 2024-01-28 06:49:00 |
கூடலூர்: ‘மயில்போல பொண்ணு ஒன்னு, கிளிபோல பேச்சு ஒன்னு’ பாடல் ஒலிக்க இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனி அருகே நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47). திரைப்படப் பின்னணிப் பாடகியான இவர் 1984-ல் வெளியான `மை டியர்குட்டிச் சாத்தான்' படத்தில் குழந்தைப் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒன்னு’என்ற பாடலைப் பாடியதற்காக பவதாரிணிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, இளையராஜா வீட்டில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், தேனி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது.
தேனி லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு நேற்று காலை கொண்டு வரப்பட்ட பவதாரிணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு, மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
பவதாரிணியின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ரவீந்திரநாத், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் அமீர், நடிகர்கள் அரவிந்த், கிருஷ்ணா, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
பவதாரிணியின் உடலைப் பார்த்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதார். விமானம்மூலம் மதுரை வந்த இளையராஜா, பின்னர் காரில் நேற்று பிற்பகலில் லோயர்கேம்ப் வந்தார். கண்கலங்கியபடி இருந்த இளையராஜாவுக்கு, பாரதிராஜா ஆறுதல் கூறினார்.
எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.சரவணக்குமார், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், முருக்கோடை ராமர், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கில், ஓதுவார்கள் திருவாசகம் ஓதினர். தொடர்ந்து, பவதாரிணியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். அப்போது, ‘மயில் போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒன்னு’ என்ற பாடலை உறவினர்கள் அனைவரும் பாடியபடி சென்றனர்.
பின்னர், அந்த வளாகத்தில் உள்ள இளையராஜாவின் தாயார்மற்றும் மனைவியின் மணிமண்டபங்களுக்கு நடுவே, பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
|
சென்னையில் இருந்து கோவை, குமரிக்கு 2 சிறப்பு ரயில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 06:42:00 |
சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை - கன்னியாகுமரி, சென்னை -கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து ஜன. 29-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06042) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
இதுபோல, கன்னியாகுமரியில் இருந்து ஜன.28-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (06042)புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலைங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.29-ம் தேதி மதியம் 1.45 மணிக்குசிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, அதே நாள் இரவு 11.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
கோயம்புத்தூரில் இருந்து ஜன.28-ம் தேதி இரவு 11.30 மணிக்குசிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மக்களவை தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண்போம்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 06:40:00 |
சென்னை: திருத்தணி முதல் குமரி வரைகட்சியின் கட்டமைப்பு வலுப்பெற்றி ருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண தயாராவோம் என்று மதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறி வுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:
மதிமுக தொலைநோக்கு பார்வையில் எடுத்த முடிவு அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்தோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருந்து களம் காண இருக்கிறோம்.
திராவிட இயக்கத்தின் கூறு: கடந்த 30 ஆண்டுகாலமாக நாம் சந்திக்காத சோதனைகள், ஏளனங்கள் இல்லை. அவற்றையெல்லாம் உரமாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கற்றுத் தந்த அரசியலின்படி உறுதியுடன் பயணித்து வருகிறோம். கொள்கை கொடியை உயர்த்திப் பிடிக்கும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக மதிமுக தமிழக அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், மதிமுகவுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பு வலுப்பெற்று திருத்தணி முதல் குமரி வரை எழுச்சி பெற்றிருக்கிறது. தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் முடித்துவிட்டனர்.
பிப். 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் நிதி திரட்டும் பணிகளை முடிக்கும் வகையில் பிப்.11 முதல் நிதி அளிப்புக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
எனவே, குறிப்பிட்ட தேதிக்குள் நிதி திரட்டும் பணியை முடித்து தேர்தலில் மதிமுகவை வெற்றி கரமாக களம் காணச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
|
மாநில அரசு ப்ளீடராக பதவி வகித்த முத்துக்குமார் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம்: புதிய அரசு ப்ளீடராக எட்வின் பிரபாகர் நியமனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 06:38:00 |
சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிபொறுப்பேற்றதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு ப்ளீடராக பி.முத்துக்குமார் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் பதவி உயர்வில் தற்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக் கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சிறப்பு அரசு ப்ளீடராக பதவி வகித்த ஏ.எட்வின் பிரபாகர் பதவி உயர்வில் மாநிலஅரசு ப்ளீடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கூடுதல் தலைமை வழக்கறிஞ ராக நியமிக்கப்பட்டுள்ள பி.முத்துக்குமார், இதற்கு முன்பாக மாநில அரசு ப்ளீடராக பணியாற்றியபோது மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து அதை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசுக்காக ஆஜராகி அதை தள்ளுபடி செய்ய வைத்தது, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசுவிதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என பல வழக்குகளிலும், திறமையாக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
திமுக நிர்வாகிகள் பிரச்சினைகளை கைவிட்டு தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 06:32:00 |
சென்னை: மக்களவைத் தேர்தல் பணிகளைஒருங்கிணைக்கவும், மேற்பார் வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் மக்கள வைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், சரி செய்ய வேண்டிய பிரச்சினைகளை, திமுகவினரிடையே நிலவும் அதிருப்தி குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக குழுவினர் கேட்டனர்.
அதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின்பேசும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் சேலம் திமுக நிர்வாகிகளில் சிலர் அதிமுகவினருக்கு ஆதர வாக செயல்படுவதாக புகார் வருகிறது. சேலம் திமுகவில் சரியாகச்செயல்படாதவர்கள், மறைமுகமாக கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைக் கைவிட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் இந்தியாவுக்கேமுக்கியமான தேர்தல். தமிழகத்தைக் காக்க ஓரணியில் நின்று தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். வெறுப்பையும், வேற்றுமையையும் விதைப்பவர்களை விரட்ட இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம்’’ என்றார்.
தொடர்ந்து மாலையில் நீலகிரி,திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிப்.5-ம் தேதி வரை தொகுதிவாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பாஜக குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 06:17:00 |
சென்னை: மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்து மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்கு மகாத்மா காந்திபெரிய பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியாது. சுபாஷ் சந்திரபோஸ்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், சர்தார்வல்லபபாய் படேல்தான் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என எந்த வரலாற்றின் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்.
மகாத்மா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும், சுபாஷ் சந்திரபோஸுக்கும், வல்லபபாய் படேலுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதேபோல, 10 ஆண்டுகள் ஒரே சிறையில் செலவழித்த வரலாறும் உண்டு. ஆனால், பாஜகவிடம் சுதந்திரத்துக்காக சிறை சென்ற வரலாற்றுத் தலை வர்கள் யாரும் கிடையாது.
ராமர் கோயிலைதிறந்த காரணத்தால் மக்களவைத் தேர்தலில் பாஜகவெற்றி பெற்றுவிடும் என்று ஒரு காலத்திலும் நினைக்க வேண்டாம்.
ராகுல் காந்தி, ஒரு கொள்கைக்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டஎம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் கருத்து: இதனிடையே, தமிழகத்தில் ஏற்படும் சர்ச்சைகளின் மையமாக ஆளுநர் ரவி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இப்பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர் - அரசு இடையே ஏற்பட்டுள்ள விரிசல்தான் இதற்குக் காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளின் மையமாக தமிழக ஆளுநர் இருப்பது ஏன்? கவர்னர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
|
போட்டித் தேர்வு மையங்களின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 05:53:00 |
சென்னை: தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதாவது, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில்500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெறஉள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாதகாலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2024-ம் ஆண்டு ஜன-1ம் தேதி 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக ஜன.29-ம் தேதிமுதல் பிப்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துதெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால்நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாதமுதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள்தொடங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பொற்பனைக்கோட்டை முதல்கட்ட அகழாய்வு நிறைவு: கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடக்கம் | கே.சுரேஷ் | புதுக்கோட்டை | 2024-01-28 05:49:00 |
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுற்றது. அடுத்தகட்ட அகழாய்வு அரசின் அனுமதிக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககாலப் பகுதியாக விளங்கும் பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வந்தது. அரண்மனைத் திடல் என்று அழைக்கப்படும் கோட்டையின் மையத்திலும், கோட்டைச் சுவரின் வடக்குப் பகுதியிலும் 15 அடி நீளம், அகலத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
அகழாய்வுப் பணிக்கான இயக்குநர் தங்கதுரை தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டு வந்தனர். இதில், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், வட்ட வடிவிலான சுவர்,கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், பச்சைக் கல் மணிகள், படிகக் கல் மணிகள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனைக் கருவி, கெண்டி மூக்குகள், மெருகேற்றும் கற்கள், பெரில் மணிகள், மனைக் கல், முக்கோண வடிவ செங்கற் கட்டி, இரும்பு பொருட்கள், மஞ்சள் கல் மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் ஓடுகள், கூரை ஓடுகள்,துளையிடப்பட்ட பானை ஓடுகள், மேற்கத்திய நாட்டைச்சேர்ந்த ரவுலட் பானை ஓடுகள்கிடைத்துள்ளன. கோட்டைச் சுவரானது செங்கல் கட்டுமானத்தில் கட்டப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்ட அகழாய்வு முடிவுற்றது. சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட அகழாய்வுப் பணி, அரசின் அனுமதிக்குப் பின்னரே நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல்துறை அலுவலர்கள் கூறும்போது, “பொற்பனைக்கோட்டையுடன் சேர்த்து மொத்தம் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்வதற்கு அரசு அனுமதி அளித்தது. பொற்பனைக்கோட்டையில் தற்போதுமுதல்கட்ட அகழாய்வுப் பணிமுடிவடைந்துள்ளது. அகழாய்வின்போது ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் சில குழிகள் மட்டுமே மண்ணிட்டு மூடப்பட்டுள்ளன. கட்டுமானங்கள், தொல்பொருட்கள் கிடைத்துள்ள சில குழிகள் தார்ப்பாய் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அகழாய்வில் கிடைத்தபொருட்களை ஆவணப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அரசு அனுமதி அளிக்கும்போது, அடுத்தகட்ட அகழாய்வு தொடங்கும்” என்றனர்.
|
வானிலை முன்னறிவிப்பு | தென் மாவட்டங்களில் ஜன. 30, 31-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 05:46:00 |
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜன. 28, 29) வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் வரும் 30, 31-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.1, 2-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம்நிலவ வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
|
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 05:39:00 |
சென்னை: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாசபெருமாள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருவள்ளூர்மாவட்ட காவல் கணிகாணிப்பாளராகப் பணியாற்றிய பா.சீபாஸ் கல்யாண், பொருளாதாரக் குற்றப்பிரிவு (தெற்கு மண்டலம்) காவல்கண்காணிப்பாளராகவும், சென்னை கொளத்தூர் துணை காவல் ஆணையர் எஸ்.சக்திவேல்,சென்னை பாதுகாப்பு பிரிவு (எஸ்பிசிஐடி) காவல் காண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வு பிரிவுகாவல் காண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், கொளத்தூர் துணை காவல் ஆணையராகவும், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் பி.சாமிநாதன், லஞ்ச ஒழிப்பு (தெற்குசரகம்) காவல் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்பு (சென்னைவடக்கு சரகம்) காவல் கண்காணிப்பாளர் வி.ஷியாமளா தேவி, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்பு (தெற்கு சரகம்) காவல் கண்காணிப்பாளர் வி.சரவணக்குமார், லஞ்ச ஒழிப்பு (சென்னை வடக்கு சரகம்) காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருப்பூர் வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா, திருப்பூர் காவல்கண்காணிப்பாளராகவும், சென்னை அண்ணாநகர் துணை காவல் ஆணையர் ரோகித் நாதன்ராஜகோபால், கோவை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை காவல் ஆணையராகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் எம்.ராஜராஜன், திருப்பூர் வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும், மதுரை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் ஜி.எஸ்.அனிதா, நெல்லை தலைமையக துணை காவல் ஆணையராகவும் பதவி வகிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் தாக்குதல் சம்பவம்: திருப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தாக்குதலுக்கு முன்பாக, போலீஸிடம் தன்னை ஒரு கும்பல்நோட்டமிடுவதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேசபிரபு தெரிவித்த நிலையில், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பில் காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது திருப்பூர் காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் வடக்கு சட்டம் -ஒழுங்கு துணை ஆணையரை பணியிட மாற்றம் செய்து உள்துறைசெயலாளர் அமுதா உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
|
தமிழகத்துக்கு மேலும் புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்: பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 05:05:00 |
சென்னை: தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தவுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்பட்டார். அவர் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்கிறார். சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் முயற்சியில் 2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ தொடங்கியுள்ளன. ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். இதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு, மனிதவளம் போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன். இந்த பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
நாகர்கோவிலில் இன்று முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம் | செய்திப்பிரிவு | நாகர்கோவில் | 2024-01-28 04:14:00 |
நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும் ரயில்வே இருவழிப் பாதை பணியைத் தொடர்ந்து ஒழுகினசேரி மேம்பாலத்தை அகலப்படுத்தும் வகையில் புதிய மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் இன்று ( 28-ம் தேதி ) முதல் 20 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் வாகனங்கள் அனைத்தும், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலை வழியாக வடசேரி அசம்பு சாலைக்கு வந்து, நாகர்கோவில் செல்ல வேண்டும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் அனைத்தும், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக புத்தேரி நான்குவழிச் சாலை வழியாக, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் சென்று, அங்கிருந்து திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும்.
திருநெல்வேலி - தக்கலை இடையே இரு மார்க்கத்திலும் செல்லும் வாகனங்கள் அனைத்தும், ஒழுகினசேரி அப்டா சந்தையில் இருந்து புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு வழியாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலையில் செல்ல வேண்டும். இந்த போக்கு வரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பணிகள் வேகம் பெறுமா?: நாகர்கோவில் மாநகரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஒழுகினசேரி பாலம், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை நாகர்கோவிலுடன் இணைக்கும் முக்கிய பாலம் ஆகும். இந்தப் பாலத்தில் பணிகள் நடைபெறுவதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்கள் அனைத்தும் சுமார் 10 கி.மீ. வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அத்துடன், போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ள வடசேரி, புத்தேரி பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் அகலம் குறைந்தவை. கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள் இவை அல்ல. எனவே,புதிய பாலம் பணிகளை விரைந்து முடித்து, ஒழுகினசேரி பாலத்தை விரைவில் பயன் பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
|
கிராம சபைக் கூட்டங்களை கேலிக் கூத்தாக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி அலுவலர்கள்! | ந.முருகவேல் | விருத்தாசலம் | 2024-01-28 04:12:00 |
விருத்தாசலம்: ‘அடித்தட்டு மக்களின் அதிகார மையம்’ எனக் கருதப்படும் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்தது. தற்போது உலக தண்ணீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சித் தினமான நவம்பர் 1 ஆகிய நாட்களுக்கும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் தலைவரால் கூட்டப்படும் இக்கூட்டத்தில் கிராம தேவைகள், நிறைவேற்றப்பட்ட பணி தொடர்பான திட்ட அறிக்கையை அரசு அதிகாரி முன்னிலையில் பொது மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்பாக கூட்டம் குறித்த அறிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட்டு, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஜன-26 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஜன. 26-ல் நடைபெறும் கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள், பயனாளிகள் தேர்வு குறித்த விவரங்கள் ஒப்புதல் பெறுதல், குடிநீர் தேவை, தூய்மைப் பணி குறித்து விவாதிக்கப்படும். இதேபோன்று அக். 2-ல் நடைபெறும் கூட்டத்தில் வரவு செலவு தணிக்கை அறிக்கைகள் சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும்.
கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் போது தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 32 துறைசார் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் கூட்டத்தில் மட்டுமே 32 துறைசார் அலுவலர்களும் பங்கேற்கின்றனர். இதர கிராம சபைக் கூட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் அல்லது கல்வித் துறை அலுவலர் மட்டுமே பெயரளவுக்கு பங்கேற்கின்றனர். வார்டு உறுப்பினர்களில் சிலரும் கூட்டத்துக்கு வருவது கிடையாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து அமரச் செய்து, பெயரளவுக்கு தீர்மான புத்தகத்தை வாசித்து, தங்களுக்கு சாதகமாக கணக்கெழுதி, எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களிடம் கையெழுத்து பெறுவது தான் இதுவரை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களின் நிதர்சன நிலை. விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் தவிர மற்ற 9 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர் ஒருவரைக் கொண்டு பெயரளவுக்கு தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது சில இளைஞர்கள், ஊராட்சியில் நிலவும் குறைபாடுகள் குறித்து தலைவர் வேல்முருகனிடம் முறையிட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுங்கள் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து ஊராட்சித் தலைவர் புறப்பட்டுச் சென்றார். இது போன்று மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் குடிநீர் தெருவிளக்கு வசதி செய்து தரப்படவில்லை எனக் கூறி ஒரு பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கோடங்குடி ஊராட்சியிலும் பொதுப் பயன்பாட்டு இடத்தை பட்டா வழங்குவதில் இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்சினையால் அங்கும் ஒரு பிரிவினர் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்ட புறக்கணிப்புகள் நடைபெற்றுள்ளன. இதைத்தாண்டி முறையாக நடத்தப்பட்டதாக காட்டப்படும் கூட்டங்களிலும், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரும் பான்மையான மக்கள் பங்கேற்பதில்லை. அப்படியே பங்கேற்றாலும், அவர்கள், ‘கூட்டத்துக்கு வந்து கேள்வி எதுவும் கேட்கக் கூடாது’ என்ற நிபந்தனையோடு தான் அழைக்கப் படுகின்றனர்.
அதையும் மீறி சிலர் கேள்வி எழுப்பினால், அவர்கள் மீது தனிப்பட்ட பகையாக மாறி விடுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட துணை தலைவர் ஆகியோரின் மோசடிகளை ஆராய அனுப்பி வைக்கப்படும் அரசு சார் அலுவலர்களோ, தலைவரின் உபசரிப்போடு அங்கிருந்து கிளம்பி விடுவதும் தொடர்கிறது. கிராம சபைக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு எந்த ஒரு மாவட்டத்திலும் அதற்கென முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே.
அண்மையில் ஒரு கிராம சபைக் கூட்டத்தில் இயற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சில நற்செயல்கள் நிகழும் நிலையில், இதை அனைத்துப் பகுதி மக்களும் அறிந்து அதற்கேற்ப கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்வார்களேயானால் வெற்றுச் சம்பிரதாயமாக நடைபெறும் இந்த கிராமசபைக் கூட்டங்கள் சாதனை நிகழ்த்தும் சபையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
|
தொப்பூர் கணவாயில் தொடரும் உயிரிழப்புகள் - சாலை சீரமைப்பை விரைந்து தொடங்க கோரிக்கை | செய்திப்பிரிவு | தருமபுரி | 2024-01-28 04:08:00 |
தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேட்டில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கியவாறும், சவால் மிக்க வளைவுகளுடனும் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், உறுப்பு மற்றும் பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த 24-ம் தேதி மாலை தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் பகுதியில் 3 லாரிகள், 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தின் போது வாகனங்கள் தீப்பற்றியதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இந்த இரட்டைப் பாலம் அருகே வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற 12 கார்கள், ஒரு சிறிய சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், கார்களில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர் என 4 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்விரு விபத்து சம்பவங்களில் வாகனங்கள் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த பெரும் விபத்துகள் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். மேலும், இந்த விபத்துகளால் பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தொப்பூர் கணவாய் பகுதி சாலையில் நிலவும் கட்டமைப்பு குறைபாடுகளை களையும் வகையில் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டுமென நீண்ட காலமாக ஓட்டுநர் தரப்பு, மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், 24-ம் தேதி கோர விபத்து நடந்த நிலையில், மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சாலையில் 6.6 கிலோ மீட்டர் நீளத்தை ரூ.775 கோடியில் சீரமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. இதற்கான ஒப்பந்ததாரரை விரைந்து தேர்வு செய்து நிதியை விடுவித்து பணியை தொடங்க வேண்டும். மேலும், பணியை விரைந்து முடிக்கச் செய்து பாதுகாப்பான சாலையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.
மாநிலங்களை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், ‘தொப்பூர் கணவாய் பகுதியில் 24-ம் தேதி ஏற்பட்டது விபத்து உயிரிழப்புகள் இல்லை. அப்பகுதியின் சாலை சீரமைப்பு தொடர்பாக நிலவிவரும் அரசுகளின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த கொலை அது’ என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
|
“ஆளுநர் வந்து சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை” - கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் தகவல் | செய்திப்பிரிவு | நாகப்பட்டினம் | 2024-01-28 04:06:00 |
நாகப்பட்டினம்: ஆளுநர் வந்து என்னை சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை என கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ( ஜன.28 ) நாகை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அதன் ஒருபகுதியாக, 1968-ம் ஆண்டு கீழ்வெண்மணி படுகொலையின் போது, துப்பாக்கி குண்டுப்பட்டு, உயிர் பிழைத்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர், தியாகி ஜி.பழனிவேலை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தியாகி ஜி.பழனிவேல் ( 71 ) கூறும் போது, “வர்க்கப் போராட்டத்தில் நிலக்கிழார்களுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன். அந்த போராட்டத்தின் போது, ஆதிக்க சக்திகளால் வெட்டப்பட்டு, குண்டடிப்பட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் வந்து சந்திக்காதவர்கள், தற்போது அரசியல் ஆதாயத்துக்காக ஆளுநர் வந்து சந்திக்க உள்ளார். ஆளுநர் என்னை வந்து சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை” என தெரிவித்தார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வி.மாரிமுத்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். எனவே, நாகை மாவட்டத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புக் கொடி காட்டப்படும். அங்குள்ள வீடுகள், பனை மரங்கள், சாலையோரங்களில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
பெருங்குடியில் மழைநீர் வடிகால் பணியின்போது ராட்சத குழாய் உடைந்து பெருக்கெடுத்த குடிநீர் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 04:04:00 |
சென்னை: பெருங்குடி பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடந்த போது, ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் பீறிட்டு வெளியேறிய நீரால் குடியிருப்பு பகுதி சேதமடைந்ததுடன், அப்பகுதியில் இருந்த மின் மாற்றியும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 184-வது வார்டு பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், வீர பாண்டிய கட்டபொம்மன் தெருவில் நேற்று முன்தினம் மாலைமாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது 800 மி.மீ விட்டம் கொண்ட ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, அந்தக் குழாயில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறியது.
இதனால் அருகில் இருந்த குடியிருப்பின் சுற்றுச் சுவர் சாய்ந்தது. அங்கிருந்த மின் மாற்றியிலும் தண்ணீ்ர பட்டு வெடி சத்தம்ஏற்பட்டு, குடியிருப்பு மீது மின்மாற்றி சாய்ந்தது. சாலைகளில்குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.இதனால் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த குடி நீர் வாரிய பணியாளர்கள் நீர் வெளியேறுவதை தடுத்தனர்.
நீர் பீறிட்டு வெளியேறியதால், சாலை மற்றும் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் ராட்த பள்ளம் ஏற்பட்டது. அதனால் அந்த சாலையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் உடைந்த ராட்சத குழாயை சீரமைக்கும் பணியில் சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலைக்குள் குழாய் சீரமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
லிப்டில் சிக்கிய மேற்குவங்க கால்பந்து வீராங்கனைகள் மீட்பு @ சென்னை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 04:02:00 |
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில வீராங்கனைகள் 23 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வீராங்கனைகள் ஓட்டலில் இருந்து, போட்டி நடைபெற இருக்கும் மைதானத்துக்கு நேற்று மதியம் புறப்பட்டனர். ஓட்டல் லிப்டில் ஏறிய 10 வீராங்கனைகள், தரை தளத்துக்கு வந்தனர்.
அப்போது, திடீரென பாரம் தாங்காமல், முதலாவது தளத்தில் லிப்ட் சிக்கிக் கொண்டது. இதில், உள்ளே சிக்கிக் கொண்ட 10 வீராங்கனைகளும் லிப்ட் திறக்க போராடினர். ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு, வீராங்கனைகளின் சப்தம் கேட்டு ஓடி வந்த ஓட்டல் ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்டீபன் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வீராங்கனைகளை மீட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
|
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையிட போவதாக பரவிய தகவலால் பரபரப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-28 04:00:00 |
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்த இருப்பதாக பரவிய தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 4 நுழைவு வாயில்களும் நேற்று காலை இழுத்து மூடிய போலீஸார், பொது மக்களின் அடையாள அட்டையை ஆய்வு செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். இது குறித்து விசாரித்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் ஓசன் குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ரூ.450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.33 லட்சம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து, காவல் ஆணையர் அலுவலகம் தரப்பில் ‘எந்த நுழைவாயிலும் மூடப்படவில்லை, குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாகவும், இது வழக்கமான நடைமுறைதான்’ எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு வழக்கம் போல் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டன. காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக வெளியான தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
|
6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-27 23:18:00 |
சென்னை: சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த ஆர். பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக இருந்த கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக இருந்த கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த வி.ஆர்.சுப்புலட்சுமி தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக இருந்துவந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முதலில் கூறியவர் கருணாநிதிதான்” - அண்ணாமலை | எஸ். நீலவண்ணன் | விழுப்புரம் | 2024-01-27 21:33:00 |
விழுப்புரம்: “கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் 273-ம் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக குரல் கொடுத்துள்ளார். இன்று பாஜக அதைத்தான் சொல்கிறது” என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘என் மண், என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியது: “தமிழகத்தில், மக்களுக்கு ஒரு அரசியல், ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியல் என்று இரண்டுவிதமான அரசியல் உள்ளது.
ஆளுகின்றவர்களின் குழந்தைகள் 3 மொழிகள் கூட படிப்பார்கள். ஆனால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழிகள் மட்டும்தான் படிக்க முடியும். அரசு தொடர்புடையை அனைத்து விஷயமும் மக்களுக்கு சேவை செய்யாமல் ஊழல் செய்து கொண்டுள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள இந்த ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே இந்த அவலம். இலாகா இல்லாத அமைச்சர்களுக்கு மாத மாதம் ரூ 1.05 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 சதவீதம் உள் உற்பத்தி நடைகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் உள் உற்பத்தி 2.6 சதவீதமாகும். மனித வளர்ச்சி என்று எடுத்துகொண்டால் கடைசி இடத்தில் அரியலூர், அடுத்து பெரம்பலூர், மூன்றாவது தேனி, நான்காவது விழுப்புரம் 0.561 சதவீதமாகும். தமிழகத்தில் முழுமையாக அரசியலை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய அரசை திட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இக்கட்சிகள் நடத்திய மாநாட்டில் மத்திய அரசை எதிர்த்தே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். விசிக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை கொண்டுவரக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் 273 ம் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக குரல் கொடுத்துள்ளார். இன்று பாஜக அதைத்தான் சொல்கிறது. 16-வது நிதிகுழுவில் மாநில நிதி பகிர்வை அதிகரிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் 2004-ல் 30.5 சதவீதம் மாநில நிதி பகிர்வாக இருந்தது. 2014-ல் 32 சதவீதமாக உயர்த்தினர். மோடி ஆட்சியில் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டியல் இன மக்கள் உயர்வுக்காக மத்திய அரசு 2022-23-ம் ரூ.16,422 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இதில் 10,446 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினர். மத்திய அரசில் பட்டியல் இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் உட்பட 76 அமைச்சர்களில் 12 பேர் அதாவது 16 சதவீதம் பட்டியல் இன அமைச்சர்கள் உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 3 பேர் பட்டியல் இனத்தவர் அமைச்சர்கள் உள்ளனர். அதாவது 10 சதவீதம் உள்ளனர். திருமாவளவனுக்கு பகலிலேயே கண் தெரியாது. வேங்கைவயல் விவகாரம், சென்னையில் திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர் சிறுமியை கொடுமைப்படுத்தியதையும், இந்தியாவிலேயே அதிக பட்டியல் இன மக்களுக்கு கொடுமை நடைபெறுவதையும், இரட்டை குவளை முறை, கோயிலுக்கு விட மறுப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கவேண்டும்.
ஆனால் இவர் மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறியாக உள்ளார். திமுக வாரிசு அரசியலை உருவாக்கி தொண்டர்களுக்கு துரோகம் செய்துவருகிறது. குடும்ப ஆட்சி ஜனநாயகத்தை கரையான் போல அரித்துவிடும். தமிழகத்தை காப்பாற்றவேண்டிய கடமை உள்ளது. இந்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி தரம் குறித்து நடத்திய ஆய்வில் தமிழகத்தில் தென்னிந்தியாவில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் நீட் தேர்வை சொல்வார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 10 மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 4 பேர், அகில இந்திய அளவில் 50 பேரில் 10 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரதமருக்கு உலகில் 18 விருதுகள் கொடுக்கப்படுள்ளது. அதில் 8 விருதுகள் இஸ்லாமிய நாடுகள் கொடுத்துள்ளது. அவர்களுக்கு தெரியாததா? மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழக முதல்வர் கட்டமைத்துவருகிறார். மோடியை எதிர்ப்பவர்கள் தனக்கென்று அடையாளம் இலலாமல் தன் அப்பாவின் அடையாளத்துடன் இருப்பவர்கள்தான்.
பொன்முடிமீது 3 வழக்குகள் நடைபெற்றுவருகிறது. அதில் ஒரு வழக்குக்கு தீர்ப்பு வந்துள்ளது. அவர் தப்பவே முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் 3.50 லட்சம் பேருக்கு அரசுப்பணி கிடைக்கும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. தற்போது கடந்த 30 மாத திமுக ஆட்சியில் 1.75 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்கவேண்டும். ஆனால் 10,321 பேருக்கு மட்டுமே அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் ( தேர்தல் அறிவிப்பு) வந்துவிடும்” இவ்வாறு அவர் கூறினார். இந்த யாத்திரையில் மாநிலத்துணைத்தலைவர் ஏஜி சம்பத், மாவட்டத்தலைவர் விஏடி கலிவரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
“முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறேன்” - ஸ்பெயின் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-27 21:04:00 |
சென்னை: “இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறைபயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: “அனைவரின் ஆதரவோடு, அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்.
பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதேபோல, 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்கா-வை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டுக் குழுமம், கோயம்புத்தூரில் தன்னுடைய திட்டத்தை துவங்கியிருக்கிறது. ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை
மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.
இந்த பயணத்தின்போது, ரோகா (ROCA) மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், Invest Spain எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே, உங்க அனைவரின் வாழ்த்துக்களோடு இந்த பயணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
|
“நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்” - சீமான் கருத்து | அ.அருள்தாசன் | திருநெல்வேலி | 2024-01-27 20:38:00 |
திருநெல்வேலி: “நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஓர் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருநெல்வேலி, தென்காசியில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி, கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதை பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை. என் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதை கொள்ளை அடிப்பது திராவிடம். அதை தடுக்காமல் இருக்கிறது பாஜக. தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை பாஜக சொல்லட்டும்.
இந்திய பொருளாதாரம் சீரழிந்துள்ளது. திமுக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தி தெரியாது போடா என்றும் ஆளுங்கட்சி ஆனவுடன் இந்தி தெரியும் வாடா என தெரிவிப்பதுதான் திமுகவின் கொள்கை. தற்போது கேலோ விளையாட்டு போட்டிக்குகூட தமிழில் பெயர் வைக்க முடியாமல்தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டு துறை அமைச்சரையும் சந்திக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஓர் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன்(சீமான்) மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என அவர் நினைத்திருப்பார். தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்ப புள்ளியே அதுதான்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் கையெழுத்தை மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்கள். இந்த கையெழுத்தை குடியரசு தலைவர், பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் வழங்கப்படவில்லை. விளையாட்டு துறை நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது கூட அவரிடம் வழங்கி இருக்கலாம். அப்போதும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று ஏன் பாரத பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கவில்லை. பொழுதுபோக்குக்காக திமுக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். மாநாட்டில் காண்பிப்பது மட்டும்தான் அவர்கள் வேலை. நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இது ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டப் பேரவை தேர்தலில்தான் போட்டியிடுவேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
|
மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை - ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-01-27 20:23:00 |
சென்னை: மகாத்மா காந்தியை தான் அவமதிக்கவில்லை என்றும் அவர் மீது உயர்ந்த மதிப்பை தான் கொண்டிருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதையுடன் பேசியதாக கடந்த 3-4 நாட்களாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. நான் கூறியதில் உண்மையைத் தவிர வேறில்லை. மகாத்மா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். அவரது போதனைகளை எனது வாழ்வின் லட்சியங்களாகக் கொண்டிருக்கிறேன்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி நான் பேசிய பேச்சின் சில பகுதிகளை மட்டும் எடுத்து சில ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாக மாற்றி இருக்கின்றன. நாட்டின் சுதந்திரத்துக்காக நேதாஜி அளித்த பங்களிப்புக்காக அவர் போதுமான அளவு பாராட்டு பெறவில்லை என்பதை நான் மிகவும் விளக்கமாக பேசினேன். நேதாஜியின் உந்துதலின் பின்னணியில் 1946 பிப்ரவரியில் ராயல் இந்திய கப்பற்படையிலும், விமானப் படையிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் எவ்வாறு 1947ல் இந்திய சுதந்திரத்துக்கு தூண்டுகோலாக விளங்கின என்பதை விவரிக்க முயன்றேன்.
இந்த கிளர்ச்சிக்குப் பிறகுதான், சீருடையில் இருக்கும் இந்தியர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்ற பதற்றம் பிரட்டனுக்கு ஏற்பட்டது. இந்த கிளர்ச்சி 1946, பிப்ரவரியில் நடைபெற்றது. 1946, மார்ச்சில் தாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கிறார்கள். அதன் தொர்ச்சியாகவே அரசியல் சாசன அவை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பிரிட்டன் அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். பிரிட்டனுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவம் நிகழ்த்திய போர் மற்றும் கப்பற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் நேதாஜி.
1942, ஆகஸ்ட்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடக்ககால வெற்றிக்குப் பிறகு அதன் தீவிரத்தை இழந்தது. முஸ்லிம் லீக்கின் பிடிவாதமான இந்திய பிரிவினை காரணமாக தேசிய சுதந்திர இயக்கத்தில் உள்மோதல்கள் ஏற்பட்டு, அதனை எவ்வாறு கையாள்வது என்பதிலேயே காங்கிரசின் சக்தி செலவிடப்பட்டது. இந்த சூழலில், பிட்டீஷ் இன்னும்கூட சில ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்க முடியும். ஆனால், நேதாஜியின் ராணுவப் புரட்சி மற்றும் அது ஏற்படுத்திய ராணுவ கிளர்ச்சி காரணமாக அது தடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆவணங்களில் இருக்கும் உண்மைத் தகவல்கள். நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை. அவரது போதனைகள் எனது வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக விளங்கி வருபவை" என தெரிவித்துள்ளார்.
|
அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: கே.பி. முனுசாமி | எஸ்.கே.ரமேஷ் | கிருஷ்ணகிரி | 2024-01-27 18:02:00 |
கிருஷ்ணகிரி: அரசியல் வரலாறு தெரியாமல் பேசி வரும் அண்ணாமலையை, பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி. முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்க அலுவலக திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்த கே.பி. முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின்பு, அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தெரிவிக்கிறோம். தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தோ்தல் முடிந்த பின்பு தமிழக மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது, அவர் மாணவராக இருந்திருப்பார். வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த பாஜகவை, 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, தென் மாநிலத்திற்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா. அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய், அத்வானி இருவரையும், சென்னை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற அந்த அமைப்பு நாங்கள் உருவாக்கிக் கொடுத்தது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னை முன்னிலைப்படுத்தி, பாஜகவை பின்னுக்குத்தள்ளி அண்ணாமலை பேசி வருகிறார். அவருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. வாஜ்பாய் தலைமையில் பாஜக இருந்தபோது மோடி ஒரு தொண்டராகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்திருப்பார். வாஜ்பாயை வாழ்த்தி பேசி தான், மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. மோடியை மட்டுமே புகழ்ந்து பேசி ஆதாயம் தேடி வருகிறார். அண்ணாமலை பாஜக தலைவர்களை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்எல்ஏவின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஏதோ ஒரு சக்தி தடுத்துள்ளது. மற்றவர்களுக்காக ஆட்சி செய்வதால் தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனை கண்டித்து தான் அதிமுக சார்பில் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராமர் கோயிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது. அதற்குரிய தண்டனையை அந்த ராமபிரான் வழங்குவார். இவ்வாறு அவர் பேசினார்.
|