Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
“மகளிர் இடஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது” - கனிமொழி பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’ | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-15 00:04:00 |
சென்னை: "பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள்." என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய கனிமொழி, "2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரில் திமுக ஆதரவாடு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவர எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், மகளிர் மசோதாவை கொண்டு வந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறது பாஜக.
பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதே பாஜக, குஜராத்தில் செய்த அட்டூழியங்களால் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை மறக்கமுடியாது. மதக் கலவரங்கள், காழ்ப்புணர்வு அரசியல், வெறுப்பு அரசியல் என அனைத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். 'தலித் என்பதால் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறேன்.' என அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடினார்கள். குடியரசுத் தலைவராக இருக்கட்டும், வீராங்கனைகளாக இருக்கட்டும், அமைச்சராக இருக்கட்டும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையைதான் பாஜக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்களே வேலைக்கு சென்றார்கள். இன்று அது எட்டு சதவீதமாக குறைந்துள்ளது. கல்வி இல்லை, எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்ற நிலையைதான் பாஜக பெண்களுக்கு உருவாக்கியுள்ளது.
பெண்கள் 50 சதவீத வாக்குகளை வைத்துள்ளார்கள். ஆனால், திட்டங்கள் எதிலும் பெண்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. நாங்கள் யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்" என்று பேசி முடித்தார்.
|
“பாஜகவை ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும்” - ஸ்டாலின் பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’ | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 21:59:00 |
சென்னை: “பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆற்றிய உரை: “பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் நம்முடைய தங்கை கனிமொழி. கர்ஜனை மொழியாக - கனல் மொழியாக இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கி வருவதைப் பார்க்கும்போது, திமுக தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் நான் மிகுந்த பெருமை அடைந்து வருகிறேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்றத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல, இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்துள்ளது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரை ‘சென்னை சங்கமம்’ நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி, இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இதுதான் வித்தியாசம்.
இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி வருகை தந்துள்ளார்கள். ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக!’ என்று 1980-ஆம் ஆண்டு இந்திரா காந்தியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன கருணாநிதி, 2004-ஆம் ஆண்டில், ‘இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!’ என்று வரவேற்றுச் சொன்னார். கருணாநிதி சொன்னதைப் போலவே நாம் நாற்பதுக்கு நாற்பது வெல்ல, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது தனக்காக காத்திருந்த பிரதமர் பதவியை மறுத்து இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீரப் பெண்மணி என நின்றவர் சோனியா காந்தி.
அப்போது சோனியா காந்திதான் ஆட்சிக்குத் தலைமை வகித்து பிரதமராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் கருணாநிதி என்பது வரலாறு. கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து அவர் ஓய்விடத்துக்குச் சென்றபோது, சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அவர், ‘கருணாநிதியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. என் மீது அவர் எப்போதுமே மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டிருந்ததை நான் எப்போதுமே மறக்க இயலாது. அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்’ அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி. அவரும் - இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தியும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தன்னிகரில்லா மெஹபூபா முப்தி ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். சுப்ரியா சுலே எழுந்தாலே நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் அஞ்சி நடுங்குவார்கள். பிஹாரில் இருந்து அருமை நண்பர் நிதிஷ்குமாரின் குரலை எதிரொலிக்க லெஷி சிங் வந்திருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எண்ணத்தைச் சொல்வதற்கு டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் வந்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அருமை நண்பர் அகிலேஷ் யாதவ் மனைவியுமான டிம்பிள் யாதவ், அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் ஜூஹி சிங் வருகை தந்துள்ளார்கள்.
மேற்கு வங்கப் பெண் சிங்கம் மமதா பானர்ஜியின் பிரதிநிதியாக சுஷ்மிதா தேவ் வருகை தந்துள்ளார். இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதியாக சுபாஷினி அலியும், ஆனி ராஜாவும் இடம்பெற்றுள்ளார்கள். எனவே இந்த மேடையே இந்தியா கூட்டணியாக காட்சியளிக்கிறது. மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019 தேர்தல் முதலே நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல ஒன்றுபட்ட கூட்டணி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் நமக்கிடையேயான சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால், நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தியான பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். இங்கே வருகை தந்துள்ள சகோதரிகள் இந்தச் செய்தியை உங்கள் கட்சித் தலைவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிப்பது என்பது, இந்தியாவில் இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை! மகளிர் உரிமையைக் காக்க மாநாடு கூட்டி இருக்கிறார் கனிமொழி. மகளிர் உரிமை மட்டுமா? பாஜக ஆட்சியில் அனைத்து மக்களது உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு நாம் பார்க்கும் நாடாளுமன்ற அமைப்பு முறை இருக்குமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி இருக்குமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது.
ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் மோடி . அது நடந்தால், ஒரே மனிதர் என்ற எதேச்சாதிகாரத்துக்கு அது வழிவகுக்கும். எனவேதான் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாகத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வந்ததைப் போல ஏமாற்றுகிறார்கள். இங்கு உரையாற்றிய அத்தனை பேரும் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். எனவே நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். அப்படித்தான் எல்லோருக்கும் எண்ணம் வருகிறது.
‘நடைபெற இருக்கும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று இந்த சட்டம் சொல்லி இருந்தால் பிரதமர் நரேந்திர மோடியை நாமெல்லாம் பாராட்டலாம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு - என்று சொல்கிறார்கள். பழைய படங்களில் “என் கையில் உள்ளதை நான் தரவேண்டுமானால் ஏழு மலையைச் சுற்றி வா! ஏழு கடலைச் சுற்றி வா!” என்று பூதம் சொல்வதாகக் கதை சொல்வார்கள் அல்லவா? அது போன்ற கப்சா சட்டத்தை மோடி நிறைவேற்றி விட்டு, பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டதாக பிரதமர் சொல்லிக் கொள்கிறார்.
2029-ஆம் ஆண்டுதான் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034-ஆம் ஆண்டு கூட ஆகலாம் என்றும் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். 1996-ஆம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த நிபந்தனைகளை நாம் விதிக்கவில்லை. 2010-ஆம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோதும் இது மாதிரியான நிபந்தனைகளை விதிக்கவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் அவர்கள் உண்மையான அக்கறையுடன் இதனை கொண்டு வரவில்லை.
மகளிர் எந்த உரிமைகளையும் பெற்றுவிடக் கூடாது, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இந்த மேடையில் இருக்கிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அவரே பேசுகிறபோது சொன்னார், பிரதமர் ராஜீவ் காந்தி தான், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உறுதி செய்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு வழங்கியவர் கருணாநிதி. இப்போது உள்ளாட்சியில் 50 விழுக்காட்டில் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க. கொண்டு வந்த சட்டத்தில், இன்னொரு முக்கியமான விஷயம், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் - சிறுபான்மையின பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் ஏழை எளிய - விளிம்பு நிலை மக்களின் குரல் சட்டமன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலித்துவிடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது.
இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதனை நாம் சுட்டிக் காட்டினால், ஒரு அரிய கருத்தைப் பிரதமர் அள்ளி விடுகிறார். அதாவது, பெண்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறோமாம். சாதிரீதியாக, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீடு நாம் கேட்கிறோம் என்றால், சாதிரீதியாகப் பிரிப்பதற்காகவா கேட்கிறோம் என்பதல்ல.
அனைத்து மகளிரும் எல்லாவித உரிமைகளும் பெற்றவர்களாக உயர வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்துவிட்டால் - அடுத்தடுத்து சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இதுதான் நமக்கு இருக்க வேண்டிய உறுதி. ராகுல் காந்தி சமூகநீதிக் குரலைத் தான் தொடர்ந்து எதிரொலித்து வருகிறார். இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டுமல்ல - கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது.
சமூகநீதி - மதச்சார்பின்மை - மாநில சுயாட்சி - கூட்டாட்சிக் கருத்தியல் அனைவருக்குமான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல - அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஒரு ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணுக்கு நிதி உதவி செய்யும் ஒரு அற்புதமான திட்டம், இப்போது மகளிர் உரிமைத் தொகை – கடந்த மாதம் 15-ஆம் தேதி, 14-ஆம் தேதி இரவே சென்று சேர்ந்துவிட்டது. இந்த மாதம் 14-ஆம் தேதி இரவே வந்து சேரப்போகிறது. எனவே மாதாமாதம் ஆயிரம் ரூபாய். உதவித் தொகை அல்ல, பெண்களே… அது உங்களுக்கு இருக்கும் உரிமைத் தொகை. மறந்து விடாதீர்கள்.
பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் - இப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டும் நமது திராவிட மாடல் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும் நாளே, மகளிர் உரிமை பெற்ற நாளாக அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கும் இந்த மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கும் என்னுடைய அருமை தங்கை கனிமொழிக்கும் – அவருக்கு துணை நின்ற மகளிரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள். INDIA கூட்டணி வெல்க!” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
|
“40 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயார்” - பிரேமலதா விஜயகாந்த் | இ.மணிகண்டன் | அருப்புக்கோட்டை | 2023-10-14 18:44:00 |
அருப்புக்கோட்டை: “40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்னதானத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் கட்சி தொடக்க நாளை முன்னிட்டு பூர்விக கிராமம் என்பதால் இங்கு 51 அடி உயரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்துள்ளேன். எங்களது பூர்விக கிராமத்தில் புரட்டாசி 40ஆவது சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளேன். இங்கு கட்சியின் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. மேலும், இங்கு உள்ள எனது மாமனாரின் சொந்த இடத்தில் ஊர் மக்களுக்காக மண்டபம் ஒன்றை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கும்.
தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி, யார் வேட்பாளர், எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்ற அறிவிப்பை ஜனவரியில் அதிகாரபூர்வமாக கேப்டன் அறிவிப்பார். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஜனவரியில் தேர்தல் குறித்து கேப்டன் அறிவிப்பார். 40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.
கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க முடியவில்லை. காவிரி பிரச்சினையில் உரிமையை பெற முடியவில்லை. லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது. சாலைகள் சரியில்லை, விவசாயம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இந்த கடமை உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை. தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு தான் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை திமுகவிலும் அதிமுகவிலும் கொடுக்கப்படவில்லை. உரிமைக்காக போராட்டம் நடத்தினால் காவல் துறை மூலம் குண்டுக் கட்டாக தூக்கி இந்த அரசு அவர்களை அப்புறப் படுத்துகிறது. எங்கு இருக்கிறது பெண் உரிமை? உரிமைக்காக போராடுபவர்களுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். ஹிட்லர் போல் ஆட்சி நடத்தக் கூடாது.
டாஸ்மாக் விற்பனைக்கு அரசு டார்கெட் விதிக்கிறது. தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அமைச்சர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெகத்ரட்சகன் வீட்டில் கட்டு கட்டாக பணம், நகைகள், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் சம்பாதிக்க அரசியலை ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள். அடுத்த தேர்தலுக்கான அரசியல்தான் செய்கிறார்களே தவிர, அடுத்த தலைமுறைக்கான அரசியலை யாரும் செய்வதில்லை.
இஸ்ரேலில் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தேமுதிக சார்பில் மாநாடு நடத்த உள்ளோம். பொதுக்குழு, செயற்குழு கூட்டமும் நடத்த உள்ளோம். அதில் விஜயகாந்த் கலந்து கொள்வார்” எனத் தெரிவித்தார்.
|
ப்ரீமியம் நாகை - இலங்கை பயணிகள் கப்பல் முதல் கவலைக்குரிய காசா நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.14, 2023 | செய்திப்பிரிவு | துவக்கம் | 2023-10-14 17:40:00 |
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர். இலங்கையில் இருந்து நாகைக்கு வர ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
“சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்” - நாராயணசாமி | அ.முன்னடியான் | புதுச்சேரி | 2023-10-14 17:07:00 |
புதுச்சேரி: “சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது ராஜினாமாவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க ஆளுநரிடம் பரிந்துரை கொடுத்தார். அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது.
இதையறிந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திர பிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல், அவரை டிஸ்மிஸ் செய்யவும், அந்த இடத்தில் திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் பரிந்துரையை ஆளுநர் தமிழிசை மூலம் முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சரகத்துக்கு அனுப்பினார்.
சந்திர பிரியங்கா தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம். அதற்கு ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு சந்திர பிரியங்கா அமைச்சர் செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். அதை அவரிடம் கூறினேன். 6 மாதமாக அவர் திறமையாக செயல்படாததால் பதவி நீக்கம் செய்ய கோப்பை முதல்வர் கொடுத்தார், உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்வர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்வருக்கும், ஆளுநருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்வர் கொடுத்த கடிதம் போன்றவற்றை ஆளுநர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டதற்கு எதிரானது, முரண்பாடானது. முதல்வர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகு அதுதொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாணத்துக்கு எதிரானது.
ஆகவே, தார்மிக பொறுப்பேற்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே முதல்வர் அவரை பதவிநீக்கம் செய்துவிட்டார் என்று கூறுகிறார்.
ஆனால், இது சம்பந்தமாக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். நான் சாதிரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளேன். ஆண் வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்து என்னால் செயல்பட முடியவில்லை என்று மன உளைச்சலுடன் தன்னுடைய கடித்ததில் எழுதியிருக்கிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதுபோன்ற கடிதத்துக்கு புதுச்சேரி அரசில் இருந்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதில் முதல்வர் ரங்கசாமி தான் முதல் குற்றவாளி. பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் பொதுப் பணித்துறை ஊழல் பகிரங்கமாக வெளியே வருகிறது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2650 கோடி கடன் வாங்கி அதை வைத்து சாலைகள், வாய்க்கால் கட்டும் திட்டங்களை செய்து வருகின்றனர். இதில் 30 சதவீத கமிஷன் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பங்கு போட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பகிரங்க ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை” என்று நாராயணசாமி தெரிவித்தார்.
|
“கோயில் என்பது அரசியல் செய்யும் இடம் அல்ல” - திருச்செந்தூர் அர்ச்சகர் வழக்கில் ஐகோர்ட் கருத்து | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-14 16:15:00 |
மதுரை: ‘அரசியல் லாபத்துக்காக கோயிலை பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கர்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கடந்த மாதம் திருச்செந்தூர் கோயில் புனரமைப்பு பணிகள் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு, முருகன் கோயில் ராஜகோபுரத்தில் பதிக்கப்பட்டுள்ள பழமையான கருங்கற்கள் எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டைல்ஸ் கற்கள் பதிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
இதையடுத்து சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு அறநிலையத் துறைக்கு எதிராக அவதூறு பரப்பியதாக என்னை அர்ச்சகர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். என்னை இடை நீக்கம் செய்வதற்கு முன்பு என்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. பணியிடை நீக்கத்தால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நான் ஏற்கெனவே தெரிவித்த கருத்து தவறு என நான் பதிவிட்டுள்ளேன். அந்தப் பதிவு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பணியிடை நீக்கத்தை ரத்து செய்தும், அதுவரை உத்தரவை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ் வாதிடுகையில், "மனுதாரர் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார். அதை வைத்து எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார். கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து கொண்டே சமூக வலைதளங்களில் கோயில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்" என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல. கோயில் குறித்த தவறான பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்கும். மனுதாரரின் செயலை மன்னிக்க முடியாது. கோயிலில் பணிபுரிந்து கொண்டே எப்படி அந்த கோயிலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்ப முடியும்? அரசியல் லாபத்துக்கு கோயிலை பயன்படுத்துவதா? மனுதாரர் பணியிடை நீக்கத்து தடை விதிக்க முடியாது. மனு குறித்து அறநிலையத் துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
|
இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழக அரசு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 15:22:00 |
சென்னை: இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இஸ்ரேல் போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஆணைகினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புதுடெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 14.10.2023 மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோயம்பத்தூர் முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 06.00 மணிக்கு புது டெல்லி வந்தடைந்தனர்.
புது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். மேலும் அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 16 தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த 12 தமிழர்களையும், கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுவரை, இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்குக: ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 14:15:00 |
சென்னை: தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி படுகையின் பிற மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால், 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் கருகியுள்ள நிலையில், கூடுதலாக மூன்றரை லட்சம் ஏக்கரில் விளைச்சலும் குறைந்திருப்பது காவிரிப் படுகை உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை இல்லாத அளவில் உழவர்கள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் கிடைக்காததாலும் காவிரிப் படுகை உழவர்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டனர்.
குறுவை சாகுபடி தொடங்கிய காலத்திலிருந்தே தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே காவிரி நீர் சென்றடையவில்லை. அதனால், சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகி உழவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததி தான். இது தவிர இன்னொரு வகையிலும் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தான் புதிதாக தெரியவந்திருக்கும் செய்தி ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 96,215 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிவடைந்திருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் கிடைத்த நெல் விளைச்சல் குறித்து ஆய்வு செய்த போது தான், விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 2.4 டன் நெல் கிடைக்கும். கடந்த ஆண்டு அதே அளவு தான் விளைச்சல் கிடைத்தது. ஆனால், இந்த முறை சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1.69 டன் என்ற அளவிலேயே உள்ளது. தண்ணீர் சென்று சேராத சில கடைமடை பாசனப் பகுதிகளில் 1.02 என்ற அளவில் தான் மகசூல் கிடைத்துள்ளது. பிற காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் இதைவிட மோசமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் குறைந்ததற்கு முதன்மையான காரணம் மேட்டூர் அணையிலிருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாதது தான். மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி முதல் 18,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டால் தான், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாகவும், பின்னர் 8000 கன அடி, 6500 கன அடி, 3500 கன அடி என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விட்டது. நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் தான் விளைச்சல் குறைந்ததுள்ளது. விளைச்சல் குறைந்ததால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் குறுவை சாகுபடியின் முடிவை ஆய்வு செய்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தான் உழவர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய 7 ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் கடுமையான இழப்பை மட்டுமே சந்தித்துள்ளனர். நடப்பாண்டிலும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் கருகியது, மீதமுள்ள பகுதிகளில் மகசூல் குறைந்தது என உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடிக்காக செய்யப்பட்ட செலவைக் கூட அவர்களால் எடுக்க முடியாது என்பதால், இந்த ஆண்டு உழவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
எனவே, தண்ணீர் இல்லாதால் கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன், தண்ணீர் இல்லாததால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கும், பாதிப்பின் அளவுக்கு ஏற்ற வகையில் அதிக அளவாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
|
மழை வந்தாலும் 50 ஆயிரம் பேர் அமரலாம்: மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 13:48:00 |
சென்னை: மழை வந்தாலும்கூட 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் மகளிர் உரிமை மாநாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு மகத்தான அளவில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்ட வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் உள்ள அகில இந்திய மகளிர் தலைவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
மழை வந்தாலும் 50 ஆயிரம் மகளிர் அமர்ந்து மாநாட்டின் கருத்துகளை கேட்கிற வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மழை இல்லையென்றால் மாநாட்டு பந்தலின் வெளியில் இன்னும் கூடுதலாக 15 ஆயிரம் இருக்கைகள் போடுவதற்கு தயார்நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரு லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த மாநாட்டில் எந்தெந்தக் கட்சிகளின் மகளிர் தலைவர்கள் வருகிறார்களோ, அவர்களின் கட்சிக் கொடிகள் 50 அடி உயரம் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 50 அடி உயரக் கம்பங்கள் 50 எண்ணிக்கையில் இந்த மாநாட்டு பந்தலைச் சுற்றிப் போடப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால், கலைஞருடனானத் தேசியத் தலைவர்கள் தொடர்பு, அவர்களுடைய சமுதாய பங்களிப்பு போன்ற பல்வேறு செய்திகளை விளக்குகிற வகையில் 400க்கும் மேற்பட்ட பதாகைகள் மாநாட்டு பந்தலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் இரண்டரை ஆண்டுகால சாதனைகள், குறிப்பாக மகளிர் திட்டங்கள் குறித்தான சாதனைகள் பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 95 சதவிகிதம் மகளிரே பங்கேற்கும் மாநாடு என்பதால் 50 எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள், 5 எண்ணிக்கையில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வருகிற மகளிர் தலைவர்களுக்கு மேடையிலேயே பசுமை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசியத் தலைவர்களுக்கு சிறுதானிய பலகாரங்கள் மாலையில் வழங்கப்பட இருக்கிறது. இங்கு அமைக்கப்பட்டிருக்கிற 50 ஆயிரம் இருக்கைகளிலும் ஒரு பழச்சாறு பாக்கெட், தண்ணீர் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் பத்து இடங்களில் ஆயிரமாயிரம் லிட்டர் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு பசுமையாக வரவேற்க வகையில் வருகிற வழியெங்கும் 3 ஆயிரம் வாழைமரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு வருகை தர ஐந்து வழிகள் இருக்கின்றன. இந்த ஐந்து வழிகளிலும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டுத் திடலின் பின்புறம் ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஒய்.எம்.சி.ஏ.,வுக்குச் சொந்தமான 6 இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சற்றேரக்குறைய 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, விளக்கு வசதிகள் கூட செய்யப்பட்டிருக்கிறது.
வெளியூரிலிருந்து வருகிற வாகனங்கள் லோட்டஸ் காலனி வழியாக வந்து, அங்கிலிருந்து ஒரு 200 மீட்டர் நடந்து வந்தால் மாநாட்டு பந்தலை வந்தடையலாம். அதேபோல் கிண்டி அண்ணா சாலையில் இருந்து வருபவர்கள் தாடண்டர் நகர் மைதானத்தில் டிபன்ஸ் சாலை வழியாக வந்து 200 மீட்டர் நடந்து வந்தால் மாநாட்டுப் பந்தலை அடையலாம்.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்களின் வாகனங்கள் மாநாட்டு பந்தலுக்கு இடப்புறம் தனியே ஒரு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு மாநாட்டு பந்தலை அடையலாம். மாண்புமிகு அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு மேடையின் வலதுபுறம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாட்டு மேடையில் முதல்வர் உள்ளிட்ட 10 பேருக்கும் மேடையின் அருகிலேயே வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் எந்தவித சிரமும் இன்றி பங்கேற்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு சரியாக 5 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அதற்கு முன்னர் ஒரு மணிநேரம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாடகர்கள் மாலதி, சின்னப்பொண்ணு, மகழினி மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்" என்று தெரிவித்தார்.
|
மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 12:22:00 |
சென்னை: மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று தனது சமூக வலைதளங்களில், "திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணலை எடுத்துச் சென்ற வாகனங்களை பிடித்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், சரக்குந்தை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இதுவரை அவர்களை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பல இடங்களில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். ஈடு செய்ய முடியாத இயற்கை வளமான மணல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதும், அதைத் தடுக்க எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படாததும் மிகவும் வருத்தமளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டது, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்தியது ஆகியவற்றுக்கு அடுத்து பழனி அருகே நிகழ்ந்துள்ள கொலை முயற்சி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும். முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரப்பட்டதைப் போன்று, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விரைவாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் மணல் கொள்ளைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
|
உதிரும் கான்கிரீட் பூச்சு, வலுவிழந்த சுவர்கள்... - பர்கூர் அருகே தொகுப்பு வீடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் அச்சம் | எஸ்.கே.ரமேஷ் | கிருஷ்ணகிரி | 2023-10-14 11:24:00 |
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிரும் நிலையில், வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது ஒப்பதவாடி கிராமம். தமிழக எல்லை மற்றும் ஆந்திர மாநிலத்தை ஒட்டி இக்கிராமம் உள்ளது. இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே பழங்குடியின மக்கள் (இருளர் இன) வசித்து வருகின்றனர்.
இவர்கள் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் ஆகியவற்றைச் சேகரித்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு கடந்த 1989-ம் ஆண்டு அரசு சார்பில் 35 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது, இதில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால், வீடுகளில் சுவர்களில் விரிசல் விழுந்து வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக, வீடுகளின் மேற்கூரைகள் 95 சதவீதம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. மேலும், மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் கொட்டும் நிலையுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள இந்த வீடுகளில் அச்சத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வசிக்கும் மக்கள், தொகுப்பு வீடுகளை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு வீடுகளை கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் உள்ளிட்ட சில பெண்கள் கூறியதாவது: சேதமான தொகுப்பு வீட்டில் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வசித்து வருகிறோம். வீட்டின் சுவர்களில் விரிசலும், சாய்தளமாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையில் மழைநீர் கசிந்து திடமற்ற நிலையில் உள்ளன. இதனால், பெரும்பாலும் தெருக்களில் தான் உறங்க வேண்டிய நிலையுள்ளது.
மழைக் காலங்களில் வழியின்றி வீட்டுக்குள் இருப்போம். அதுவும் மழை நிற்கும் வரை உறங்க மாட்டோம். மேற் கூரை கான்கிரீட் பூச்சு அடிக்கடி உதிர்வதால், வீட்டின் உள்ளே அமர்ந்து சாப்பிடக் கூட முடியாது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்வதில்லை. இதனால், இந்த தண்ணீரைப் பருகினால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டித்தரக்கோரி, கடந்த 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அன்று இரவு பெய்த மழையில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எங்கள் நிலையை அறிந்து புதிய வீடு கட்ட கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆட்சியர் ஆய்வு செய்து எங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: கட்டணம் எவ்வளவு? | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2023-10-14 09:09:00 |
புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.
சிங்களம், தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர்: கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா - இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை - இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.
இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்" என்று கூறினார். இந்தியா - இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.
Ferry services between India and Sri Lanka will enhance connectivity, promote trade and reinforce the longstanding bonds between our nations. https://t.co/VH6O0Bc4sa
கட்டணம் எவ்வளவு? நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாகும். தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.
150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.
பயண நேரம்: நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.
|
நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான் காட்டம் | செய்திப்பிரிவு | திருப்பத்தூர் | 2023-10-14 06:30:00 |
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானமாகும்.
காவிரி தண்ணீரை வைத்து கர்நாடக மாநிலம் அரசியல் செய்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால், ஒரு யூனிட் மின்சாரமும் இல்லை என்ற நிலை வர வேண்டும். இதை திமுக கேட்காது, பேசவும் செய்யாது. ஒரு நாட்டில் உள்ள எல்லா வளங்களும் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற நிலை வந்தால் தான் தேசப்பற்று பெருகும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இப்போதுள்ள சூழ்நிலையில் செயல் அரசியல், சேவை அரசியல் எல்லாம் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே இங்குள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன’’ என்றார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் செயல் அரசியல், சேவை அரசியல் எல்லாம் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே இங்குள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன.
|
பண்ருட்டி அருகே அழகுபெருமாள் குப்பம் ஊராட்சியில் காணாமல் போன குளம் கண்டெடுப்பு | செய்திப்பிரிவு | கடலூர் | 2023-10-14 06:15:00 |
கடலூர்: பண்ருட்டி அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சியில் மண்ட குளம் எனும் குளம் இருந்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளால் அந்த குளம் காணாமல் போயிருந்தது. குளம் இருந்த இடமே தெரியாமல் மண் மேடாக மாறி இருந்தது.
காணாமல் போன அந்தக் குளத்தை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என கிராம பொதுமக்கள், அண்மையில் ஊராட்சிமன்ற தலைவர் விஜயலட்சுமி பிரகாஷிடம் மனு அளித்தனர். கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று காணாமல் போன அந்தக் குளம் இருந்த இடத்தை கண்டுபிடிக்க அளவீடு செய்யப்பட்டது.
அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீராகுமாரி மற்றும் அதிகாரிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அந்தக் குளத்தை தூர்வாரிட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குளம் கொண்டு வரப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.
|
தேவர் நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்க கூடாது: நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் மனு | செய்திப்பிரிவு | ராமநாதபுரம் | 2023-10-14 06:10:00 |
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அக்.30 தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனிடம் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் மனு அளித்தார்.
கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. தேவர் ஒரு ஆன்மிகத் தலைவர் என்பதால் அவரது நினைவாலயத்துக்கு வரும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் தேவர் சிலைக்கு மலர் வளையம் வைக்கக் கூடாது என நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் அங்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனிடம் காந்திமீனாள் நடராஜன் சார்பில் அதன் நிர்வாகிகள் பழனி, அழகுராஜா, ராமமூர்த்தி ஆகியோர் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தேவர் ஒரு ஆன்மிக தலைவர். அவரது குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடும் தருணத்தில் பசும்பொன்னுக்கும் வருவோர் அவரது நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது. மலர் மாலை மட்டும் அணிவித்து வணங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இக்கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
|
200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா கருத்து | செய்திப்பிரிவு | திண்டுக்கல் | 2023-10-14 06:08:00 |
திண்டுக்கல்: 200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் இலக்கியக்களச் செயலாளர் க.மணி வண்ணன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசியதாவது: மின்சாரம் வந்த காலம், காரல் மார்க்ஸ் தத்துவம் வந்த காலத்தில் வாழ்ந்தவர் வள்ளலார். அப்போது மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்ட வேண்டும் என்ற வள்ளலார் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தினார்.
1860-ல் இந்து மதம் இல்லை. சைவம், வைணவம் ஆகிய சம யங்களில் இருந்தும் வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் இருந்தும் வெளியே வந்தால்தான் பேரின்ப இறைவனை அடைய வழி கிடைக் கும் என்றார் வள்ளலார்.
முன்னோர்களிடத்தில் பணம், நிலம் இருந்தது. ஆனால், கல்வி இல்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கியது வேதாந்தம், சித்தாந்தம். இதை வழிமொழிந்தது சைவம், வைணவம். வறுமை, அறியாமையை அகற்ற வேண்டும் என விரும்பியவர். கல்வி இல்லாததால் வறுமை வந்ததை வள்ளலார் உணர்ந்தார்.
‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’, எல்லா ஆசை களையும் விட்டு விட்டு வந்தால் கடவுளை காண வழி உண்டு என்றார் வள்ளலார். சுத்த சமய சன்மார்க்க சங்கம் என்பது மதத்துக்காக அல்ல. இதில் கிறிஸ்தவர், இஸ்லா மியர்களும் சேரலாம். நான் எதிர்பார்ப்பது எல்லா உயிர்கள் மீதும் கருணை. இறைவன் மீது பற்று, பசியில்லா உலகம். பரஸ்பர நட்பு, ஜீவகாருண்யம் என்றார்.
பெரியாருக்கு முன்னரே வள்ளலார் வந்துவிட்டார். சாதி, மதம், ஆசாரம் ஆகியவற்றை ஒழிக்க எண்ணினார் வள்ளலார். காவியை விரட்ட நீலம் வந்தது, சிவப்பும், கருப்பும் வந்தது. நீலமும், சிவப்பும், கருப்பும் வெள்ளைக்கு கீழ் வந்தால் அரசியல் விளங்கும் என நான் நம்புகிறேன். வள்ளலார் கொடுத்த வெள்ளைக்கொடி தற்போது தேவை. எனவே இருநூறு ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் வள்ளலார் தேவைப்படுகிறார். இவ் வாறு ஆ.ராசா பேசினார்.
|
யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம்: சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 06:05:00 |
சென்னை: யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தற்போது விற்பனை முனைய இயந்திரம் மூலம், ஆதாருடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள்வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ரொக்கம் தவிர்த்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம்உரிய தொகையைச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த பல்வேறு கட்டங்களாகச் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 1700 நியாய விலைக்கடைகள் உட்பட தமிழகம் முழுவதும்9200-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூன்மாதமே இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இனி பொதுமக்கள் ரேஷன்கடைகளில் உள்ள க்யூஆர் குறியீட்டைதங்கள் கைபேசியில் ஸ்கேன் செய்துதொகையைச் செலுத்த முடியும்.
தற்போது, பொதுவான வங்கிக் கணக்கில் பொதுமக்கள் செலுத்தும் தொகை வரவு வைக்கப்படுவதால், தேவை அடிப்படையில் இதர கடைகளிலும் விரைவில் இந்த சேவைவிரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.
|
திருவள்ளூர் | சம்பா பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணிகள் தீவிரம்: இலக்கைவிட கூடுதலாக 2,500 ஏக்கர் சாகுபடி நடைபெற வாய்ப்பு | இரா.நாகராஜன் | திருவள்ளூர் | 2023-10-14 06:02:00 |
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கடந்த 50 நாட்களில் சுமார் 48,400 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது என, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய நெல் சாகுபடி பருவங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொர்ணவாரி பருவத்தில் 62,251 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடந்து வருகிறது. இதில், திருவள்ளூர், பூந்தமல்லி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட வட்டாரங்களில் இதுவரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வர உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுரேஷ் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கியது. நவம்பர் 15-ம் தேதிவரை இப்பணி நடைபெற உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 265 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடவு இயந்திரங்கள், விவசாயத் தொழிலாளர்கள் போதிய அளவில் இருப்பதால், கடந்த 50 நாட்களில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் சுமார் 48,400 ஏக்கர் பரப்பளவில் டி.கே.எம். 13, கோ ஆர் 51, பி.பி.டி 5204, எம்.டி.வி.1010 உள்ளிட்ட நெற்பயிர் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான யூரியா, உரம் போன்ற இடு பொருட்கள் போதிய அளவில் வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளன.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் இலக்கை விடக் கூடுதலாக 2,400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், டிசம்பரில் தொடங்கி, 2024 பிப்ரவரியில் முடியும் நெல் அறுவடையின்போது, சுமார் 1.80 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி: ரூ.15 கோடி நிதி வழங்கினார் அமைச்சர் உதயநிதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 06:00:00 |
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - 2023போட்டிக்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி உரிமைத் தொகை மற்றும் செயல்பாட்டுத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்திய மோட்டர் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ). தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், சென்னையில் ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’ போட்டி நடத்தப்படவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படும் மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.
சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - எஃப்-4 போட்டியில், இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னைமாநகரில் தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களான கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ரூ.7.20 லட்சம்மதிப்பில் செயற்கை கால்களுக்கான உபகரணங்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற WAKO உலகக் கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த எஸ்.பரத் விஷ்ணு, 5-ம் இடம் பெற்ற எம்.கோகுலகிருஷ்ணன் மற்றும் எஸ்.அஷ்வின் ஆகியோர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
கோயம்பேடு சந்தையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 05:40:00 |
சென்னை: மாநகராட்சி சார்பில் கோயம்பேடு சந்தையில் நேற்று நடைபெற்ற டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகியவை பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள காரணத்தால் அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு மலர் அங்காடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் மற்றும்பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பின்னர், உதயம் திரையரங்கு அருகில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று இருந்த கைவிடப்பட்ட வாகனத்தை அகற்றும் பணியை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவுமேலாண்மை) என்.மகேசன்,மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் எஸ்.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
|
தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 05:32:00 |
சென்னை: தமிழகம் என்ற இந்த மாநிலம்உள்ள மட்டும் தியாகி சங்கரலிங்கனார் நினைவுகூரப்படு வார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 13-ம் தேதி விருதுநகர் சங்கரலிங்கனார் நினைவு தினம். வீரத்தியாகியின் நினைவு நமக்கு உள்ளத்தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தைத் தருவதாக அமைய வேண்டும். ‘தியாகிக்குத் தலை வணங்குவோம். தியாகத்துக்குப் பணிபுரிவோம்’ என்றார் பேரறிஞர்அண்ணா. தமிழகம் என்ற இந்த மாநிலம் உள்ள மட்டும் தியாகி சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவுகூரப்படுவார். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு; 82 பொறுப்பாளர்கள் நியமனம்: பழனிசாமி அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 05:26:00 |
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
வாக்குச்சாவடி குழு அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.பி.முனுசாமி, திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு- நத்தம் விஸ்வநாதன், திருவள்ளூர் கிழக்கு - சி.பொன்னையன், திருப்பத்தூர் - மு.தம்பிதுரை, திருச்சி புறநகர் - செ.செம்மலை, மதுரை மாநகர் - பா.வளர்மதி, திருச்சி மாநகர் - எஸ்.கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கரூர் - எம்.சின்னசாமி, ராணிப்பேட்டை - சேவூர் ராமச்சந்திரன், திருவள்ளூர் கிழக்கு - டி.கே.எம்.சின்னையா, திருவள்ளூர் தெற்கு - இன்பதுரை, வேலூர் புறநகர் -செஞ்சி ராமச்சந்திரன், தென்காசி - அ.அன்வர் ராஜா, திருவண்ணாமலை வடக்கு - வாலாஜாபாத் பா.கணேசன், தருமபுரி- மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 82 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக இபிஎஸ்-க்கு எதிராக கோ-வாரன்டோ மனு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 05:16:00 |
சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கோ-வாரன்டோ மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகமுதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது கல்வித் தகுதி மற்றும் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதுபோன்ற விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாகத் தெரிவிக்காமல் மறைப்பது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தீவிரமான குற்றமாகும். அதுமட்டுமின்றி, நடத்தை விதிமீறலும் கூட.
அதேபோல, கடந்த 2016-17 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் தனது வருமானத்தையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைத்தால், அந்த மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்யலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பழனிசாமியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகளும் முறையாகப் பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே, அவர் எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி தொகுதி எம்எல்ஏ-வாகவும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், அவரை தகுதி நீக்கம் செய்து, அவர் இதுவரை பெற்றுள்ள ஊதியம் மற்றும் இதர அரசு சலுகைகளைத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
|
1,666 புதிய அரசு பேருந்துகளுக்கு ரூ.371 கோடியில் அடிச்சட்டங்கள் கொள்முதல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 05:10:00 |
சென்னை: போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வரின் உத்தரவின்படி, ரூ.371.16 கோடி மதிப்பில் 1,666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பாக விழுப்புரம் - 344, சேலம் - 84, கோயம்புத்தூர் - 263, கும்பகோணம் - 367, மதுரை - 350, திருநெல்வேலி - 242 என மொத்தமாக நகரம் மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்காக 1,650 அடிச்சட்டம் கொள்முதல் செய்யவும், மலைவாழ் மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூருக்கு பிரத்யேகமாக 16 அடிச்சட்டங்களும் என 1,666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இது முற்றிலும் தமிழக அரசு நிதியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளாகும். கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேர்வான நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2 மாதத்துக்குள் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகைக்குள் பெரும்பாலான பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்தகட்டமாக 552 பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் புதிய பேருந்துகள் வலம் வரும்” என்றனர்.
|
முதல்வரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த ஆய்வு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | செய்திப்பிரிவு | மதுரை | 2023-10-14 05:05:00 |
மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேசில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தினால், அதிக எண்ணிக்கையிலான சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்லும் சூழல் உருவாகும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு ப்ளீடர் திலக்குமார் வாதிடும்போது, "காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும்அமல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். தொடர்ந்து, இதைப் பதிவு செய்தநீதிபதிகள், மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
|
ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் சாட்சியம் | செய்திப்பிரிவு | பெரியகுளம் | 2023-10-14 05:01:00 |
பெரியகுளம்: கடந்த 2008-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கச் சென்றபோது ஜெயலலிதாவின் வாகனம் தாக்கப்பட்டது. கமுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் நேரடி சாட்சியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் உள்ளனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முக்கிய சாட்சியான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, காணொலி வாயிலாக சாட்சியம் அளித்தார்.
|
சென்னையில் 12 உதவி ஆணையர் உட்பட 37 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 04:59:00 |
சென்னை: சென்னையில் 12 உதவி ஆணையர் உட்பட தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 11-ம்தேதி 12 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 16 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 37 டிஎஸ்பிக்கள் தற்போது பணியிடம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நீலாங்கரை காவல் சரக உதவி ஆணையராக இருந்த சுதர்சன் தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், மணலியில் இருந்த தட்சிணாமூர்த்தி பூக்டைக்கும், தஞ்சையில் இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், செங்கல்பட்டிலிருந்த பரத், நீலாங்கரைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் மாற்றலாகி, அவர்கள் இடத்தில் புது அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
|
அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ் உட்பட 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடம் வீணாகும் நிலை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 04:55:00 |
சென்னை: தமிழகத்தில் 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை கடைசி தேதியை நீட்டித்து கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது.
இதேபோல, அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசு நடத்தி வருகிறது.
2023-24-ம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
இதில், அகில இந்திய கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 17 இடங்கள் (நிர்வாக ஒதுக்கீடு) என மொத்தம் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, அகில இந்திய கலந்தாய்வு முடிவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்கள், மாநில கலந்தாய்வு முடிவில் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 24 இடங்கள், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 204 இடங்கள் என மொத்தம் 279 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் முடிந்துவிட்டதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலியாக உள்ள இடங்கள் தமிழகத்துக்கு திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி முடிந்துவிட்டதால், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களையும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்கள், 279 பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய கடிதம்:
ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக, மாணவர்களுக்கும், பொதுவாக நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் உங்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
|
இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு; சோனியா, பிரியங்கா வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 04:50:00 |
சென்னை: திமுக மகளிரணி சார்பில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சென்னை வருகின்றனர். இதை முன்னிட்டு நடைபெறும் ஏற்பாடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்பி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதற்கிடையில், நேற்று இரவு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் காங்கிரஸ் தமிழகத் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருவரும் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று மாலை 5 மணிக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் மாநாட்டுக்கு வருகின்றனர்.
முன்னதாக, இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி சார்பில் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவிடத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் செல்லவும் இருவரும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் நாளை காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.
சோனியா, பிரியங்கா மற்றும் பல முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் சென்னை வருவதை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2-வது நாளாக அமலாக்க துறை சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 04:47:00 |
கோவை/சென்னை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரிச்சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றது தொடர்பாக மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2019-ல் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக சம்பாதித்த ரூ.910 கோடியை, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மார்ட்டின் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தியது. மேலும், பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இதேபோல, கடந்த மே மாதம்மீண்டும் மார்ட்டின் தொடர்புடையஇடங்களில் சோதனை நடத்தி, ரூ.456.86 கோடி சொத்துகளை முடக்கினர். இந்நிலையில், அமலாக்கத் துறையினர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் சோதனையைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகே உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரத்தில் உள்ளஅவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, சென்னையில் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன்வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ளஆதவ் அர்ஜுனின் அடுக்குமாடிக் குடியிருப்பு, திருவல்லிக்கேணியில் உள்ள நிறுவனம் மற்றும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்ட்டின் தொடர்புடைய இடம் ஆகியவற்றிலும் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை மார்ட்டின் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
|
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவை வந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயரதிகாரிகள் வரவேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 04:43:00 |
சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
போர் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து முதல் மீட்பு விமானம் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மீட்பு விமானம் நேற்று காலை டெல்லிக்கு வந்தது. அங்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களை வரவேற்றார். மீட்கப்பட்ட இந்தியர்களில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
கோவை, திருவாரூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த 21 தமிழர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் நேற்று வந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த 14 பேரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலாநிதி வீராசாமி எம்.பி. அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அவர்கள் சொந்த ஊர் செல்ல தமிழக அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வந்த 14 பேரில், 2 பேர் மாணவிகள், 12 பேர் மாணவர்கள். இஸ்ரேலில் ஒட்டுமொத்தமாக 114 பேர் இருப்பதாக அயலகத் தமிழர் நலத் துறையினர் கண்டறிந்துள்ளனர். துறையின் ஆணையர் அவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அனைவரையும் மீட்கும் முயற்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் வந்துள்ள மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அரசு சார்பில் உதவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறும்போது, “இஸ்ரேலில் உள்ள மற்ற தமிழர்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். 90 சதவீதம் பேர், உயர் கல்விக்காக சென்ற மாணவர்கள்தான். அனைவரும் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். போரால் தமிழர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதேநேரத்தில், இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் மட்டுமே தொடர்புகொண்டுள்ளனர். காசா, பாலஸ்தீனம் பகுதியில் இருந்து இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.
மாணவர்கள் கூறும்போது, “கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேலில் போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய நாளில் இருந்தே, எங்களை பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அந்த அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றினோம். இதற்கிடையில் தமிழக அரசு எங்களைத் தொடர்பு கொண்டு மீட்டது. நாங்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளோம். இஸ்ரேலில் மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு, நாங்கள் அங்கு சென்று படிப்பைத் தொடர்வோம். இஸ்ரேல் அரசும், பல்கலைக்கழகமும் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது. அங்கு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, பெற்றோர் பதட்டப்பட வேண்டாம்” என்றனர்.
கோவை ஆட்சியர் வரவேற்பு: இதேபோல, கோவை விமான நிலையம் வந்தடைந்த 7 பேரை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்டு வந்தமைக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
|
திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி: முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-14 00:21:00 |
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்
திருமதி @priyankagandhi ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. pic.twitter.com/rHhPn2VKS9
#WATCH | Congress MP Sonia Gandhi and Congress general secretary Priyanka Gandhi Vadra arrive in Chennai; received by Tamil Nadu CM MK Stalin and other party leaders
They will participate in the DMK Women's Rights Conference in Chennai tomorrow. pic.twitter.com/3dplHExuY2
|
ஒரே நாளில் ரூ.31.30 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 20:27:00 |
சென்னை: கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டம், கரூர், அருள்மிகு கல்யாண பசுபதீசுவர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள 7 ஏக்கர் 51 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் மாவட்ட உதவி ஆணையர் பி.ஜெயதேவி முன்னிலையில் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.22 கோடியாகும்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி அருள்மிகு கரிய பெருமாள் கரிய காளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.46 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அடுத்து ஈரோடு மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.7.60 கோடியாகும்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாஞ்சியம் கிராமம், அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் 82 சென்ட் நிலத்தினை 14 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்நிலத்தினை நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் வே.குமரேசன் தலைமையில், திருவாரூர் உதவி ஆணையர் ப.இராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.1.70 கோடியாகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.31.30 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அக்.16 முதல் தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு | செய்திப்பிரிவு | டெல்லி | 2023-10-13 19:46:00 |
டெல்லி: அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26-வது கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி செயற்பொறியாளர் ரம்யா மற்றும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக பில்லிகுண்டுலிருந்து கர்நாடகா வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், 16 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று வலியுறுத்துவோம். 8 நாட்களுக்கு தினசரி 3 ஆயிரம் கனஅடி நீர் தர வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4,666 கன அடிநீர் வழங்கினர். இதன்மூலம் நேற்று வரை 4.21 டிஎம்சி நீர் வந்துள்ளது. இன்னும் நமக்கு 0.454 டிஎம்சி வரவேண்டும்.
மேட்டூர் அணையை பொறுத்தவரை தற்போது 8 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தரப்படும். காவிரி தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பயந்து கர்நாடகா தண்ணீர் தந்தாலும், அங்குள்ள மக்களுக்காக அவர்களும் நாடகமாட வேண்டியுள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
|
‘பழநியில் மண் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை கொல்ல முயற்சி’ - போலீஸில் புகார் | ஆ.நல்லசிவன் | திண்டுக்கல் | 2023-10-13 18:34:00 |
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி கிழக்கு ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழநி அடுத்துள்ள கிழக்கு ஆயக்குடி கிராமம் பொன்னிமலை சித்தர் கோயில் அருகே இன்று (அக்.13) காலை சட்டவிரோதமாக மண் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் இலாகி பானு ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது, அந்த வழியாக மண் அள்ளி வந்த லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் மண் அள்ளுவதற்கான அனுமதிச்சீட்டை பயன்படுத்தி பொன்னிமலை பகுதியில் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக மண் அள்ளியதாக லாரியை ஆயக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, லாரியை பின் தொடர்ந்து சென்ற கிராம உதவியாளர் மீது லாரியின் பின்பக்க கதவை திறந்து மணலை கொட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றுள்ளனர். அதனை பார்த்த, பொதுமக்கள் மணலை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் பழநி - திண்டுக்கல் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். லாரியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற விஏஓ கருப்புசாமி, மேலக்கோட்டை விஏஓ பிரேம்குமார் ஆகியோரை முன்னோக்கி செல்ல விடாமல் லாரியை வைத்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பழநி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோயில் அருகே மண்ணை கொட்டி விட்டு லாரியுடன் தப்பிச் சென்றனர். மணல் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த பழநி கோட்டாட்சியர் சரவணன் மண் திருட்டு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பாக, விஏஓ கருப்புசாமி தலைமையில் விஏஓ.,க்கள் ஆயக்குடி போலீஸில் புகார் அளித்தனர்.
அதில் கருப்புசாமி, ‘சட்ட விரோதமாக மண் அள்ளி சென்ற லாரிக்கு பாதுகாப்பாக காரில் வந்த சிலர் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
|
சிறுபான்மை மாணவர்களுக்கான அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 17:45:00 |
சென்னை: சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு அமைந்திருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் பின்தங்கிய நிலையை போக்குவதற்காக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் மிக, மிக முக்கியமானது கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணங்கள் மற்றும் விடுதி செலவுகளுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வந்தது. பாஜக அரசாங்கம் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஃபெலோஷிப் கடந்தாண்டிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
அதேபோல, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் 1 முதல் 8ம் வகுப்பிற்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டது. வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்காக வழங்கப்படும் கடனுக்கான வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது. அதையும் பாஜக தலைமையிலான அரசாங்கம் கடந்தாண்டு நிறுத்தி விட்டது. இந்த திட்டங்களிலிருந்து சிறுபான்மை மாணவியருக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவி தொகை திட்டம். இந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தையும் கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இது வன்மத்தோடு சிறுபான்மை மாணவர்களின் கல்வியை குறிவைத்து பாஜக அரசினால் நடத்தப்படும் தாக்குதலாகும்.
இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என்று எதுவும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டே பாஜக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் இந்த கல்வி உதவித் தொகைகள் கல்வி நிலையங்கள் மூலம் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் கல்வி உதவித்தொகை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்கும் இருந்தது. சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்வதற்கு முன்பு பாஜக அரசாங்கம் எப்படி நேரடி பணப்பரிமாற்றம் என்று சொல்லி ஏமாற்றை ஆரம்பித்ததோ, அதேபோன்று சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையிலும் அத்தகைய நயவஞ்சகத்துடனேயே நடந்து கொள்கிறது.
இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின - பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இல்லாமல் செய்வதற்கான முன்னோட்டமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த நயவஞ்சக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக இயக்கங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென்றும், ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது என்று அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“சாமானிய மக்களை பாதிக்கும் வாகன வரி உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்” - தமாகா | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 17:09:00 |
சென்னை: "வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் வரியை அரசு அதிகரித்திருக்கக் கூடாது. தமிழக அரசின் வாகன வரி உயர்வு சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வாகன வரி வியர்வை அரசு கைவிட வேண்டும்" என்று தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் திறனற்ற திமுக அரசு ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் உதவி தொகையாக வழங்கிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உபயோகப்படும் அனைத்து பொருட்களின் விலைகளை உயர்த்தி அவர்களது வேதனையை வேடிக்கை பார்க்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சட்டசபையில் தமிழகத்தில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வாகன வரியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இரண்டு சதவீதம் வாகன வரி உயர்வு என்று மேலோட்டமாக அறிவித்து உள்ளார்கள். உண்மையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுகுறித்து விவரம் கேட்டபொழுது இருசக்கர வாகனங்களுக்கு 7,000 முதல் 8,000 ரூபாய் வரையிலும் கார் போன்ற வாகனங்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வாகன வரி உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.
ஏற்கெனவே டீசல், பெட்ரோல் விலையால் விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. இப்பொழுது திமுக அரசு அறிவித்துள்ள வாகன வரி உயர்வால் ஏழைகளின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து நிற்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கீழ் வாழும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.
சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக அமையும். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய வகை கார்களை தங்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு வரியை ஏற்றி இருப்பது, அதிக கட்டணம் வசூலிக்க காரணமாகிவிடும்.
வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது. எனவே ஆளும் தமிழக திமுக அரசு வேறு வகையில் வருமானத்தை ஈடுகட்ட முயற்சி எடுக்க வேண்டுமே தவிர வாகன வரி வியர்வை கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
|
விவசாயிகள் இழப்பீடு கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர் | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-13 16:41:00 |
மதுரை: கொள்ளிடம் ஆற்றில் பாலம், தடுப்பணை, கதவணை கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து, கடலூர், தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, மதகு, கதவணை உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களை வழங்கியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளது என்றார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
|
”எனக்கு எதிராக அவதூறு பரப்பியோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல் நிலையத்தில் செல்லூர் ராஜூ புகார் | என்.சன்னாசி | மதுரை | 2023-10-13 16:29:00 |
மதுரை: தன் மீது அவதூறு பரப்பிய சென்னை தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பணங்குடியைச் சேர்ந்த நவமணி வேதமாணிக்கம் தற்போது சென்னையில் உள்ளார். இவர், 1997-ல் அமெரிக்காவில் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்திய நிலையில், 2007-ல் சென்னைக்கு வந்து சென்னையிலும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்கும் டெண்டருக்கு விண்ணப்பித்தபோது, அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜூ கட்சிக்கென நிதி கேட்டு கொடுக்காததால் டெண்டர் கிடைக்காமல் தொழிலில் நஷ்டமடைந்ததாகவும், தற்போது சென்னையில் நவமணி தேவமாணிக்கம் கார் ஓட்டி வருதாகவும் சமீபத்தில் ஓரிரு ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பிய நவமணி வேதமாணிக்கம் மற்றும் செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக என்னை பற்றி ஓரிரு ஊடகம், பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் செய்தி வெளியிட்டு, எனது 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. எனது நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை கொச்சைபடுத்தும் நோக்கில் செய்திகள் வந்துள்ளது. இது என்னை பாதித்துள்ளது. என்னுடைய குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனது நண்பர்கள், கட்சி தலைவர்கள், எங்களது கட்சியின் பொதுச் செயலாளரே பதிலை கொடுக்க வேண்டும் என சொல்லும் வகையில் செய்தியின் வலிமை இருந்தது. நான் அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்தாலும், நிபுணர்கள், அதிகாரிகளின் குழு தான் கணினி மூலம் கொள்முதல் செய்ய முடிவெடுப்பர். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள்.
நான் கணினி நிபுணரும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும். சம்பந்தமின்றி என்னை பற்றி குறை சொல்லும் வகையில் பேட்டி (நவமணி) அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத்ததாக குற்றம் சொல்கிறார். அது முழுக்க, முழுக்க தவறு. மாநில கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்லவில்லை.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செய்தி வருவதால் இதன் பின்புலத்தில் யாரோ இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். அரசியல் காழ்புணர்ச்சியில் பழி வாங்கும் நோக்கில், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விசாரணையின் போது, எனது தரப்பு ஆவணங்களை சமர்பிக்கிறேன்" என செல்லூர் கே.ராஜூ கூறினார்.
|
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்வு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 16:18:00 |
சென்னை: அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி சமன் செய்து வழங்கிட தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சேலம், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்துக்கு மட்டும் 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமும், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்துக்கும், சேலம், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டத்துக்கும் 38% அகவிலைப்படி வழங்கப்பட்டது.
ஆனால் எஞ்சிய 21 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரே சீரான அகவிலைப்படி என்ற நிலை இல்லாமல் 38% குறைவான அகவிலைப்படி வழங்கப்பட்டது. எனவே ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே சீரான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற பால்வளத்துறை அமைச்சரின் உத்தரவின்படி அனைத்து மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தி சமன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான அகவிலைப்படி என்ற நிலை உருவாகி உள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் 1761 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். ஆண்டொன்றுக்கு 3,18,60,948 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போனஸ், ஊக்கத்தொகை, கால்நடைக் கடன், கால்நடை பராமரிப்பு கடன், கால்நடை கொட்டகைக் கடன், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், நிகர லாபத்தில் ஈவுத்தொகை வழங்குதல், மருத்துவ உதவி, அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கு அதிக விலை, பாலின் தரத்திற்கேற்ப பால் விலையை வழங்க உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குதல், பால் பணம் காலதாமதமின்றி பட்டுவாடா செய்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
நிரப்பப்படாத அகில இந்திய மருத்துவ இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 15:42:00 |
சென்னை: "அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் உள்ள இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய அரசு, 2023 செப்டம்பர் 30-ம் தேதிக்குள், நடப்பு கல்வியாண்டில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை (MBBS மற்றும் BDS) மருத்துவ சேர்க்கைக்காக, தமிழ்நாடு மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் (DGHS) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நான்கு சுற்று கவுன்சிலிங்கை முழுமையாக நிறைவு செய்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன, மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மாநில அரசால் நிரப்பப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 16 இடங்கள் DGHS இன் MCC இன் கவுன்சிலிங்கின் முடிவில் இன்னும் காலியாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் (மேலாண்மை ஒதுக்கீடு) காலியாக உள்ளன.
ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் சாதகமான பதிலைப் பெறுவோம் என்று நம்புகிறோம்" என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
|
14 மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் வழக்கு: விசாரணை அக்.16-க்கு ஒத்திவைப்பு | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-13 15:32:00 |
மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை அக்.16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
விஜயதசமி நாளான அக். 22-ல், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும், அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டியும் விஜயதசமி நாளான அக். 22-ல் ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணிந்து, இசை வாத்தியத்துடன் மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அந்தந்த காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி தரவில்லை.
கடந்த ஆண்டிலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் அனுமதி தரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு அனுமதி பெறப்பட்டது. எனவே, இந்தாண்டு ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். பின்னர் நீதிபதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தனித்தனியாக மனுக்களை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றலாம் என்றார்.
அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர், இந்த மனுக்களை இங்கேயே விசாரிக்கலாம். அக்.30-ல் தேவர் ஜெயந்தி நடைபெறுவதால் விசாரணையை அக்.31-க்கு ஒத்திவைக்கலாம் என்றனர்.
ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணையை அக்.16-ல் நடத்தலாம் என்றனர். இதனை அரசு வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை அக்.16, மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
|
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-13 14:34:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 8-வது முறையாகும்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், கடந்த செப்டம்பர் 29-ம் தேதியுடன் முடிவைடந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதைத்தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ம் தேதிவரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
|
ஆபரேஷன் அஜய் | நாடு திரும்பிய 214 இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 21 பேர்! | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 14:21:00 |
சென்னை: "ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் வந்த விமானத்தில் முதற்கட்டமாக 214 பேர் இந்தியா்கள் வந்துள்ளனர். இந்த 214 பேரில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் வந்துள்ளனர்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வரின் வேண்டுகோளினை ஏற்று அங்கிருப்பவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும் தற்போது இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அங்குள்ள தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்த நபர்களில் கோவை, திருவள்ளூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 12.10.2023 அன்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு புதுடெல்லி வந்தடைந்தனர்.
இந்த முயற்சியில், தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே, அந்தவகையில், புதுடெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லம் மூலம் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இவர்களுக்கு தமிழக அரசின் செலவில், விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 14 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு தற்போது வந்தடைந்துள்ளனர். இதில் ஒரு 7 பேர் கோவை விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த இந்த 14 பேரில், இருவர் மாணவிகள், 12 பேர் மாணவர்கள். கல்வி கற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றவர்கள். மூன்று மாதங்களுக்கு முன்னால் இஸ்ரேல் சென்றவர்கள்கூட இதில் உள்ளனர்.
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் வந்த விமானத்தில் முதற்கட்டமாக 214 பேர் இந்தியா்கள் வந்துள்ளனர். இந்த 214 பேரில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 114 பேர் இருப்பதாக அயலகத் தமிழர் துறையின் சார்பில் கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பவர்களுடன் அயலகத் தமிழர் துறையின் ஆணையர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். எனவே அவர்கள் அனைவரையும் மீட்கும் முயற்சி தமிழக அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்தடைந்த 14 தமிழர்களை தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் அயலகத் தமிழர் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர்.
|
காமாட்சியம்மன் கோயில் நிலத்தின் போலி கிரய பத்திரம் ரத்து- கோயில் நிர்வாகத்திடம் 64 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைப்பு | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-13 13:48:00 |
புதுச்சேரி: காமாட்சியம்மன் கோயில் நிலத்தின் போலி கிரயப் பத்திரத்தை ரத்து செய்துள்ள நிலையில் 64 ஆயிரம் சதுரஅடி நிலம் கோயில் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
புதுவை காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு புகார் வந்தது. டிஜிபி உத்தரவின் பேரில் எஸ்பி மோகன் குமார் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தை சென்னையை சேர்ந்த ரத்தின வேல், அவரின் மனைவி மோகன சுந்தரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரிந்தது. அம்மனைகளில் சிலவற்றை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட் வாங்கியதாகவும் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் முழுமையாக விசாரணை நடத்தி சார் பதிவாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில் தார் பாலாஜி உட்பட 17 பேரை கைது செய்தனர். நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோயில் நிலத்தை மனைப்பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து சொத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி போலீஸார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இதனை 6 வார காலத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணியை அரசின் வருவாய்துறை தொடக்கியது. மாவட்ட நிர்வாகம் கோயில் நிலத்தை எடுத்து கோயிலுக்கு ஒப்படைக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
அதன்படி போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோயிலிடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார். கோயில் நிலம் வீட்டு மனைகளாக்கி விற்ற பத்திரம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, கோயில் நிலத்தை மீண்டும் காமாட்சியம்மன் கோயில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ரெயின்போ நகரில் நடந்தது.
பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் நிர்வாகக் குழுவிடம் நிலத்தை முறைப்படி ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணனும் இந்நிகழ்வின் போது அங்கிருந்தார்.
ஒப்படைத்த பிறகு மாவட்டப் பதிவாளராக கந்தசாமி கூறுகையில், "இரண்டு சொத்துகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். அதற்கான சான்றுகளை பெற்றுள்ளோம். இரண்டு சர்வே நம்பர்கள். இது மொத்தம் 64 ஆயிரம் சதுர அடி. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அளவீடு செய்யப்பட்டு கோயில் சொத்தை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம்.
பெரும்பாலானவை காலியிடம் தான். சில இடங்களில் காலியிடம், முழு வீடு இருக்கு, ஒரு இடத்தில் பகுதி கட்டுமானம் இருக்கும். அங்கு நோட்டீஸ் தந்துள்ளோம். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சிபிசிஐடி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தோம். " என்று தெரிவித்தார்.
|
காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த விரிவான ஆய்வு: ஐகோர்ட்டில் அரசு தகவல் | கி.மகாராஜன் | மதுரை | 2023-10-13 13:24:00 |
மதுரை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், இத்திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,"மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த நான், மீனவ மக்களின் கல்வி, வளர்ச்சி மற்றும் வாழ்வாதரப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு செப்டம்பர் முதல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தபப்டுவது இல்லை.
இயற்கை சீற்றங்கள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளால் பல நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத சூழலில், கடலோர மீனவ மக்களின் பொருளாதார நிலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் உருவாகும் ஏழ்மை நிலை காரணமாக, மீனவ சமுதாயத்தைச் சேர்ந் குழந்தைகள் தங்களது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். எனவே, கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் சூழல் உருவாகும். எனவே, கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 15.09.2022 முதல் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
|
கொள்ளிடம் ஆறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை 3-வது நாளாக சோதனை | சி.எஸ். ஆறுமுகம் | தஞ்சாவூர் | 2023-10-13 12:55:00 |
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் மூன்றாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, அதிக அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதைக் கண்டறியும் நோக்கில் அமலாக்கத் துறையினர் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரிகள் மட்டுமின்றி குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் 11-ம் தேதி மாலை அமலாக்கத் துறையினர் ட்ரோன் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பலத்த காற்று வீசியதால் ட்ரோனை பறக்கவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், சோதனையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அமலாக்கத் துறையினர் புறப்பட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்.12) 2-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் மரூரிலும், முதன்முறையாக திருச்சென்னம்பூண்டி, புத்தூர் ஆகிய இடங்களிலும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் ட்ரோன் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலைமுதல் 3-வது நாளாக புத்தூர் குவாரியில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
விவசாயிகளைக் காக்க அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கிட வேண்டும்: ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 12:03:00 |
சென்னை: "சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு அவர்களின் துயரைத் துடைப்பதை விட, அதிகரிக்கும் வகையில் தான் உள்ளது. ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் உழவர்களுக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி, கடலூர், விழுப்புரம், மேற்கு மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை அனைத்து மாவட்டங்களிலும் இதே அளவில் தான் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இழப்பீடு உழவர்களால் செலுத்தப்பட்ட காப்பீட்டு பிரிமியத் தொகையை விட மிகவும் குறைவு ஆகும்.
நடப்பாண்டில் தான் உழவர்களுக்கு மிகக்குறைந்த தொகை காப்பீடாக வழங்கப்படுகிறது என்று கூற முடியாது. 2021-22 ஆம் ஆண்டிலும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மீதமுள்ள 10 விழுக்காட்டினரில் கூட பெரும்பான்மையினருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டது. இயற்கை சீற்றத்தால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பில் ஒரு பகுதியையாவது ஈடு செய்ய வேண்டும் என்பதற்காகவே பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், காப்பீட்டுக்காக செலுத்தப்படும் தொகை கூட உழவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.
தனியார் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் உழவர்களை பாதுகாப்பதை விட அவர்களை சுரண்டுவதில் தான் கவனம் செலுத்துகின்றன. அதற்கு 21.09.2023-ஆம் நாளிட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 24.45 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப் பட்டன. அதற்காக செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் ரூ.2319 கோடி ஆகும். இதில் ரூ.1375 கோடியை தமிழக அரசும், ரூ.824 கோடியை மத்திய அரசும், ரூ.120 கோடியை உழவர்களும் செலுத்தியிருக்கின்றனர்.
அதாவது ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.9,484 காப்பீடாக செலுத்தப்படுகிறது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை விட மும்மடங்கு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது மூன்றில் ஒரு பங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது என்பது தான் கணக்கு.
ஆனால், 2022-23 ஆம் ஆண்டில் காப்பீட்டு பிரிமியமாக ரூ.2319 கோடி வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் சுமார் 20%, அதாவது ரூ.560 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கின்றன. மீதமுள்ள ரூ.1759 கோடியை பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றுக்கான லாபமாக சுருட்டிக் கொண்டன. 2022-23 ஆம் ஆண்டில் 24.25 லட்சம் ஏக்கர் சம்பா நெல் காப்பீடு செய்யப்பட்ட நிலையில், அவற்றில் சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.32,500 என்ற அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாது. ஆனால், தங்களுக்கு அளவுக்கு அதிகமாக லாபம் ஒதுக்கும் நிறுவனங்கள், உழவர்களை கண்ணீரில் ஆழ்த்துகின்றன.
2021-22 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், உழவர்களுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும் தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தின் அளவு மட்டும் ரூ.1932 கோடி ஆகும். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதே தவிர, உழவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களுக்கானது அல்ல.காப்பீட்டு நிறுவனங்களுக்கானது தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டம் என்பது அதை செயல்படுத்தும் நிறுவனங்களின் நலனுக்காக இருக்கக்கூடாது; உழவர்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்; அதன் மூலம் உழவர்களைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
|
விதிமுறைகளை பின்பற்றாமல் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கல் | கி.ஜெயகாந்தன் | ஓசூர் | 2023-10-13 09:14:00 |
ஓசூர்: வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் வியாபாரிகள் பட்டாசுகளை இருப்பு வைத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், தமிழக எல்லை யான ஜுஜுவாடியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. வரும் தீபாவளி பண்டிகை விற்பனையை மையமாக வைத்து இக்கடைகளுக்கு தற்போது, சிவகாசியிலிருந்து பட்டாசுகள் வாகனங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஓசூர் பகுதி பட்டாசுக் கடைகளில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதி மக்களும் பட்டாசுகள் வாங்க வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் அளவுக்கு அதிகமாகவும், பாதுகாப்பு விதிகளுக்கு மாறாகவும் பட்டாசுகளை இருப்பு வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் மற்றும் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில் நடந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பட்டாசுக் கடைகள் பின்பற்றுவதைக் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், உரிமம் பெற்ற பட்டாசுக் கடைக்காரர்கள் கடைகளில் கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைக்க முடியாததால், குடியிருப்பு பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மறைமுகமாக இருப்பு வைத்து வருவதாகவும், கரி மருந்துகளைப் பயன்படுத்தி அதிக சப்தம் எழுப்பும் வெடிகளைத் தயாரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் பட்டாசுக் கடைகள் அருகே பிளாஸ்டிக் ஷீட் மூலம் தடுப்புகள் அமைத்து கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அதிக வாகனப் போக்குவரத்து உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், சிலர் மறைமுகமாக குடியிருப்பு பகுதியில் வாடகை வீடுகளில் பட்டாசுகளை இருப்பு வைத்து வருகின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிப்பதோடு, உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகளில் வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதை ஜுஜுவாடி மற்றும் பாகலூர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா கூறும்போது, “ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள பட்டாசுக் கடைகளுக்கு ஏற்கெனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
ஓசூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ரெட்டி கூறியதாவது: அத்திப்பள்ளி பட்டாசுக் கடை தீ விபத்துக்குப் பின்னர் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கூட்டாக பட்டாசுக் கடைகளில் ஆய்வு செய்து வருகிறோம். நேற்று முன்தினம் கூகுள் மீட் மூலம் பட்டாசுக் கடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் இரு தினங்களுக்குள் ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்துப் பட்டாசுக் கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
|
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 08:06:00 |
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 26-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.
அதன்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (அக்.13) முதல் 26-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலியை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் பேரணி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:59:00 |
சென்னை: பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய ஊழியர்கள் நேற்று பேரணி நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின்நிலையக் கிளை சார்பில் நடைபெற்ற பேரணியானது, சிந்தாதிரிப்பேட்டை லேங்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கி ராஜரத்தினம் அரங்கம் அருகே நிறைவு பெற்றது. அங்கு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், எம்.சின்னதுரை எம்எல்ஏ, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
இது தொடர்பாக கே.விஜயன் கூறும்போது, ``மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வல்லூர் அனல்மின் நிலையத்தை நடத்தி வருகின்றன. இங்கு பணியாற்றும் 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. அரசால் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை விடக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
போராட்டத்தைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எரிசக்தித் துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரை சந்தித்துப் பேசினோம். அப்போது, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்'' என்றார்.
|
சுகாதாரத் துறைக்கு விருதுகள்: முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:54:00 |
சென்னை: தமிழக சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2021 முதல் தற்போது வரை பெற்ற விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதிநாட்டிலேயே அதிகபட்சமாக 22 தொற்றா நோய்களுக்கான 29,88,110 பரிசோதனைகள், அதிகஎண்ணிக்கையிலான 85,514 ஆரோக்கிய அமர்வுகளை நடத்தியது ஆகியவற்றுக்கு 2 விருதுகளை தமிழகம் பெற்றது. கடந்த 2022-ல்டெல்லியில் நடைபெற்ற உலக காசநோய் தினத்தில் காசநோய் பாதிப்பை 40 சதவீதம் குறைத்த நீலகிரி மாவட்டத்துக்கு வெள்ளிப்பதக்கம், 20 சதவீதம் குறைத்த விழுப்புரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாமக்கல், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெண்கல பதக்கமும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இதேபோல் பல அளவீடுகளில் தமிழகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் இருந்தனர்.
|
வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:43:00 |
சென்னை: வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் வாகனங்களுக்கான வரி உயர்வை அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, வரியை உயர்த்துவது சரியானதாக இருந்தாலும்கூட அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இந்த வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.
சரக்கு வாகனம், வாடகை வாகனம், பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி உயர்த்துவதால் அந்த உயர்வு மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையாக சேரும். சரக்கு மற்றும் வாடகை வாகனங்களுக்கு வரியை உயர்த்தும்போது அந்த வரி உயர்வை பலமடங்காக வாகனத்தின் வாடகையிலும், வியாபாரிகள் பொருள்களின் மீதும் விலையை உயர்த்துவார்கள். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல இருசக்கர வாகனங்களுக்கு வரியை உயர்த்துவது சரியான முடிவல்ல. இவ்வாறு அனைத்து வகை வாகனங்களுக்கும் வரியை உயர்த்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில சாலைகளை முறையாக பராமரிக்கிறதா என்றால் இல்லை. எனவே தமிழக அரசும், போக்குவரத்து துறையும் மக்களின் நலன் கருதி வாகனங்கள் வரி உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
|
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆசிரியர்கள் போராட்டம் ரத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:38:00 |
சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் இன்று (அக்.13) நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சென்னையில் அக்டோபர் 13-ம்தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதை அடுத்து டிட்டோஜாக் அமைப்பின் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து டிட்டோஜாக் நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நேற்று காலையில் ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடு இருப்பதாகவும், அதை சரிசெய்து கொண்டு அவர்கள் என்னை சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்விளக்கம் அளித்தார். அதன்பின் மாலை சென்னையில் உள்ளஅமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஆசிரியர் சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிடுவதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
இதுகுறித்து டிட்டோஜாக் நிர்வாகிகள் தாஸ், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘30 கோரிக்கைகளில் 11-யை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முக்கிய கோரிக்கையான எமிஸ் பதிவேற்றங்களை நவம்பர் 1-ம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்று(அக்.13) நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகேவிளக்கக் கூட்டம் நடைபெறும்’’ என்றனர்.
|
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத் துறை செயலர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:29:00 |
சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரத்து 785 பேர்உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடிபேசியதாவது;
உலகிலேயே ஸ்பெயின்தான் உடல் உறுப்பு மாற்றுஅறுவை சிகிச்சையில் முன்னோடிநாடாக திகழ்கிறது. இந்தியாவில் தமிழகம் உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் ஸ்பெயினாக திகழ்கிறது. தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரத்து 472 நன்கொடையாளர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழிப்பத்திரம் அளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
விடியல் என்ற செயலி: விடியல் என்ற செயலி மூலமாக இந்த அறுவை சிகிச்சைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் 128 நன்கொடையாளர்கள் மூலம் 733 பேர் பலன் அடைந்துள்ளனர். 53 பேருக்கு இதயமும், 84 பேருக்கு நுரையீரலும், 114 பேருக்கு கல்லீரலும், 228 பேருக்கு சிறுநீரகமும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
அரசு மரியாதை: தவிர தமிழகத்தில் 6 ஆயிரத்து 205 பேர் சிறுநீரகத்துக்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும், 75 பேர் இதயத்துக்காகவும், 62 பேர்நுரையீரலுக்காகவும் என மொத்தம்6 ஆயிரத்து 785 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.
|
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 07:00:00 |
சென்னை: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் 20-க்கும்மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 22 அரசு மற்றும் 50 அரசுஉதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் தனியாரால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள்கூட இல்லை என்பதை தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், மாற்றுத் திறன் படைத்தகுழந்தைகளுக்கான அரசுப்பள்ளிகளில், காலியாக இருக்கும் 38 சதவீத அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப, கடந்த2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்இருந்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதையும், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கைகள் உருவாக்குவது குறித்து, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மாநில ஆலோசனைக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாக, தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
உடனடியாக, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்காக, குறைந்தது ஒரு சிறப்புப் பள்ளி வீதம் திறக்க திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
சென்னையில் ஒரு வாரத்துக்குள் அனைத்து சாலை பணிகளும் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:17:00 |
சென்னை: பருவமழைக்கு முன்பாக இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள், சென்னைமாநகராட்சியின் கீழ் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, சேவைத்துறைகளின் சார்பில் 2 மாத காலங்களுக்கு சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதியதாக சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளாமல், ஏற்கெனவே சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழக மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பூந்தமல்லி பிரதான சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,877 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன. தினந்தோறும் சராசரியாக 70 சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழைக்கு முன்னதாக, இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப்பணிகளும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், சென்னைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
|
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.யில் காப்புரிமை மையம்: துணைவேந்தர் தொடங்கி வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:15:00 |
சென்னை: மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், அறிவுசார்ந்த காப்புரிமை மையத்தை துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் இந்தகருத்தரங்கத்தின் தொடக்க விழாவுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
சென்னை ஐஐடி முதல்வர் மனு சந்தானம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன், மத்திய அரசின் சென்னை காப்புரிமை மையத்தின் இணை கட்டுப்பாட்டு அலுவலர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கண்டுபிடிப்புகள்: இதில், மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிடும் வகையில், அறிவுசார்ந்த காப்புரிமை மையத்தை பல்கலை. துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றிடும் வகையில், இப்பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக அறிவுசார்ந்த காப்புரிமை மையம் (ஐபிஆர்) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள், மக்கள் நலம் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் அவை உரியமுறையில் காப்புரிமை பெறப்படுவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு அறிவுசார்ந்த காப்புரிமை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை, இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 700-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவுசார் காப்புரிமை, அதன் வகைகள் மற்றும் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது குறித்து மத்திய அரசின் காப்புரிமை மையத்தில் பணியாற்றும் 6 தொழில்நுட்ப வல்லுநர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
|
திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நாளை ‘மகளிர் உரிமை மாநாடு’ - முதல்வர் ஸ்டாலின், சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:10:00 |
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும்மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா, பிரியங்கா உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் ‘மகளிர்உரிமை மாநாடு’ நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நாளை (அக்.14) நடைபெற உள்ளது.
‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள்: இம்மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு: இதை முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளையும் திமுக மகளிரணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வருவதால், சென்னையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
|
தென்னை நார் தொழிற்சாலையை ஆரஞ்சு வகைப்படுத்திய உத்தரவு வாபஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:08:00 |
சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021-ம் ஆண்டுநவ.10-ம் தேதியிட்ட நடவடிக்கையின் மூலம், தென்னை நார் உடைத்தல், பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல் போன்ற பணிகளைமேற்கொள்ளும் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது.
இதற்கிடையே, தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பல்வேறு சங்கங்கள், மேற்கண்ட நடவடிக்கையை திரும்பப் பெற்று, தென்னை நார்தொழிற்சாலைகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பித்தன.
இதையடுத்து, தென்னை நார் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக எம்எஸ்எம்இ தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கும், தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்திய வாரியத்தின் நடவடிக்கை திரும்பப் பெறப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
|
சென்னை - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:05:00 |
சென்னை: ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு அக்.15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில்(16127) எர்ணாகுளம்-குருவாயூர் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் (அக்.13) 29-ம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று (அக்.13) முதல் அக்.30-ம் தேதி வரை புறப்படவேண்டிய விரைவு ரயில்(22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 06:02:00 |
சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (66), சமீபத்தில் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்திலும் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சு திணறலுடன், நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு இதய ரத்தநாள அடைப்பு இருந்தது தெரிய வந்தது. அதைதொடர்ந்து, அடைப்பை சரி செய்து, ‘ஸ்டெண்ட்’ பொருத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஹெச்.ராஜாவை, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது கணவர் சவுந்தரராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
|
கோபி அடுத்த வெள்ளாங்கோவிலில் ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை | செய்திப்பிரிவு | ஈரோடு | 2023-10-13 05:15:00 |
ஈரோடு: பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருமான ராமேஸ்வர முருகனின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியச் செயலராகப் பொறுப்பு வகிப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவரது சொந்த ஊர் ஈரோடுமாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். அங்கு அவரது பெற்றோர் சின்னசாமி-மங்கையர்க்கரசி வசித்து வருகின்றனர்.
சென்னையில் வசிக்கும் ராமேஸ்வர முருகன், அவ்வப்போது வெள்ளாங்கோவில் சென்று, பெற்றோரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார், வெள்ளாங்கோவில் சென்று, ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மாலை வரை சோதனை நீடித்தது.
ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவரது வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
ராமேஸ்வர முருகன் பள்ளிக்கல்வித் துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்தபோது, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
|
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு பாரம்பரிய புறப்பாடு: தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு | செய்திப்பிரிவு | நாகர்கோவில் | 2023-10-13 05:07:00 |
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பட்டுச் சென்றன. இரு மாநில போலீஸார் அணிவகுப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நடப்பாண்டு நவராத்திரி விழா வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிலைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இரு மாநில போலீஸாரும் அரண்மனை வாயிலில் அணிவகுத்து நின்றனர். மேலும், பத்மநாபபுரம் அரண்மனையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அரண்மனை நிர்வாகிகள் உடைவாளை எடுத்து, தொல்லியல் துறை இயக்குநர் தினேஷிடம் ஒப்படைத்தனர். அவர் கேரளதேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடமிருந்து குமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் உடைவாளைப் பெற்றுகொண்டார்.
நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட ஆட்சியர் தர், விஜய் வசந்த் எம்.பி., மற்றும் தமிழக, கேரள மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
போலீஸார் அணிவகுப்பு: இந்த ஊர்வலத்துக்கு தமிழக, கேரள போலீஸார் அணிவகுத்துச் சென்று, மரியாதை செலுத்தினர். பல்லக்குகளுக்கு முன்னதாக, மன்னரின் உடைவாள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, மலர்கள் தூவி சுவாமி சிலைகளை கேரளத்துக்கு வழியனுப்பி வைத்தனர்.
|
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு 19 ஆயிரம் கனஅடி நீர்வரத்து | செய்திப்பிரிவு | தருமபுரி | 2023-10-13 05:03:00 |
மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதுகடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்தசில நாட்களாக பரவலாக மழைபெய்து வருவதால், காவிரியின் துணை ஆறான பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் மழைபெய்ததால், பாலாறு, காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 122 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 10-ம் தேதி 163 கனஅடியாகவும், நேற்று முன்தினம் 2,528 கனஅடியாகவும், நேற்று காலை 9,345 கனஅடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று மாலை4 மணிக்கு விநாடிக்கு 18,974 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைநீர்மட்டம் உயரத் தொடங்கிஉள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியில் இருந்து 34.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டிஎம்சியில் இருந்து 9.34 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 9,500 கனஅடியாக அதிகரித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 10ஆயிரம் கனஅடியாகவும், மாலைவிநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே, காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடைவிதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
|
லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுகள்; பெங்களூரு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 04:52:00 |
சென்னை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பெங்களூரு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படம் 2014-ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையுடன், தமிழகத்தில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கூறியபடி படவெளியீட்டு உரிமையை தங்களுக்கு வழங்காமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையையும் முழுமையாக திருப்பித்தரவில்லை எனக்கூறி ஆட்பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹார், இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2015-ல் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரு போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம், 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்தது. ஆனால் பிரிவு 463-ன் கீழ் ஆதாரங்களை திரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று லதா ரஜினி காந்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லதா ரஜினிகாந்தும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அபிர்சந்த் நஹாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், 'லதா ரஜினிகாந்த் ஒன்று கீழமை நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென அந்த நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டால் மட்டும் லதா ரஜினிகாந்த் ஆஜரானால் போதும். மற்ற நேரங்களில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கின் தகுதிகள் குறித்து நாங்கள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே பெங்களூரு நீதிமன்றம் இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த பிரச்சினையை இருதரப்பும் சட்ட ரீதியாக மத்தியஸ்தம் மூலமாகவும் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றும் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
|
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 04:48:00 |
சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, 2019-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.
இதனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து மறுபுறம் விசாரணை மேற்கொண்டு, மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில், 2019 மற்றும் 2021-ல் மொத்தம் ரூ.277.59 கோடி, 2022-ல் ரூ.173.48 கோடி மதிப்புகளில், அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.
கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.456.86 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து கோவையில் மார்ட்டின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் மார்ட்டினின் வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
இதேபோல், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் மருமகன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மார்ட்டினின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்டினின் மகனுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மற்றும் சென்னையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸார், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
|
வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-13 04:33:00 |
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக, ‘தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும். தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்’ என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
அக்டோபர் 13 முதல் 27-ம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக, அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி 1977-ம்ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே 1984-ம் ஆண்டு அக்.5-ம்தேதி தொடங்கியுள்ளது. 1988, 1992 மற்றும் 2000-ல் மிகவும் தாமதமாக நவ.2-ம் தேதி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் வழக்கமான நாளாக அக்டோபர் 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கமான அளவிலேயே இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
|
பணியில் மெத்தனம் - பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் @ திருப்பத்தூர் | ந. சரவணன் | திருப்பத்தூர் | 2023-10-13 04:10:00 |
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியில் மெத்தனமாக இருந்த உமராபாத் பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. 19 காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் 22 காவல் நிலையங்கள் உள்ளன. போக்குவரத்து காவல் நிலையங்களை தவிர்த்து, 19 காவல் நிலையங்களில் 11 காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 930 காவலர்கள் பணியில் உள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்கெனவே திணறி வரும் நிலையில், பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கடந்த 4 நாட்களில் 3 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை. அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட 2 பேர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தாமல், கிராம பஞ்சாயத்தில் பேசி தீர்க்க காரணமாக இருந்ததாக கூறி வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் சாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
அவரது இடத்துக்கு நாட்றாம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மலருக்கு கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டது. இதற்கிடையே, பெண் காவல் ஆய்வாளர் மலர் மீது சென்னை ஐஜி அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராக மலர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவர் தனது பணிகளை சரிவர செய்யாமல், தனிப்பட்ட நபர்களுக்கு ஆதரவாகவும், வழக்கு விசாரணையை சரிவர மேற்கொள்ளாமல் மெத்தன போக்குடன் இருந்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சென்னை ஐஜி அலுவலகம் உத்தரவிட்டது. அடுத்தடுத்து 2 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சலசலப்பு அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
ஆம்பூர் அருகே பெண் கடத்தப்பட்ட வழக்கில் துரித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த உமராபாத் பெண் காவல் ஆய்வாளர் யுவராணி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் மேலும் பல காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் அடிப்பட்டு வருவதாகவும், அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கூறும் போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில், புகார்தாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, பெண் குழந்தைகள், பெண் கடத்தல், போக்சோ பாலியல் போன்ற புகார்கள் மீது காவல் துறையினர் பார பட்சம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு சர்ச்சையிலும் காவல் துறையினர் சிக்கக் கூடாது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கான தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.
இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் ஏற்கெனவே எச்சரித்துள்ளேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்க காரணம், அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை.
புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தாமல் மெத்தன போக்குடன் இருந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். எனவே, காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் வரும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் சமரசம் செய்யக்கூடாது. பஞ்சாயத்து பேசக்கூடாது. மீறினால் இது போன்ற நடவடிக்கை தொடரும்’’ என்றார்.
வேலூர் சரக டிஐஜியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் பீதியில் உள்ளனர்.
|
காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நினைக்கவில்லை: சீமான் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | கலவை | 2023-10-13 04:08:00 |
கலவை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு நினைக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகள், பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு நினைக்கவில்லை. தண்ணீரை கொடுக்கக்கூடாது என்பது கர்நாடகத்தின் அரசியல். அதனை பெற வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். பாஜக அரசியல் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானது.
அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவை தற்போது அரசியல் தலைவர்களின் கை விரல்களாக மாறியுள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனைகள் நடைபெறுகின்றன. இவை, அரசியல் பழிவாங்கும் நட வடிக்கையாகும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது.
கடந்த மாதம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து, தற்போது வட மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளேன். அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி வேட்பாளர்கள் தேர்வு நடை பெறும்’’என்றார்.
|
தமிழிசைக்கு பதிலடி: துறை சார்ந்த பணிகளை விவரித்து சந்திர பிரியங்கா வெளியிட்ட கடிதம் | செய்திப்பிரிவு | புதுச்சேரி | 2023-10-13 04:06:00 |
புதுச்சேரி: பணியில் திருப்தி இல்லாததால் தான் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், தனது துறை சார்ந்த பணிகளை விவரித்து 9 பக்க கடிதத்தை சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பான கடிதங்களை 3 நாட்களுக்கு முன் அவர் ஆளுநர், முதல்வர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, "முக்கியத் துறைகளை வைத்துள்ள சந்திர பிரியங்காவின் பணியில் திருப்தி இல்லை. அதனால், அவரை நீக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார். அந்த அதிருப்தியால்தான் அவர் நீக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்யவில்லை.
பல அமைச்சர்கள் என்னை சந்தித்தது போல் இவர் என்னை சந்தித்தது இல்லை. முதல்வர் அவரை சொந்தப் பெண்ணாக பார்த்த நிலையில், சாதி ரீதியான பிரச்சினை இருப்பதாக அவர் கூறுவது வருத்தம் தருகிறது" என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பதிலைத் தொடர்ந்து, சந்திர பிரியங்கா தான் இதுவரை செய்த பணிகளை துறைவாரியாக பட்டியலிட்டு, 9 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் (2021-23) எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்கும், அமைச்சராக என் செயல் பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருபவர்களின் கவனத்துக்கும் கொண்டு வர கடமைப் பட்டுள்ளேன்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் ஒய்-20 மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை, ‘புதுச்சேரி போக்குவரத்து அமைச் சர் சந்திர பிரியங்கா மிகச் சிறப் பாக செயல்பட்டு வருகிறார்’ என மேடையில் பாராட்டிப் பேசி சான்றளித்தார் என்பது இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது.
மேலும், புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்க உருவாக்கப்பட்ட ‘முதல்வர் விருது’ சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என தொழிலாளர் துறைக்குதரப்பட்டது. கடந்த சுதந்திர தினத்தில் முதல்வர் இவ்விருதை அளித்தார். இது சிறப்பான செயல் பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைகிறேன்,
காரைக்கால் மாவட்டத்துக்கு இதுவரை இல்லாத வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் சிறப்புக் கூறு நிதி ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 - 23 நிதியாண்டில் ஆதிதிரா விடர் சிறப்புக்கூறு நிதி புதுச்சேரியில் 90 சதவீதம் செலவீனம் செய்யப்பட்டது. காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்ட 2022 - 23 ஆண்டுக் கான இதற்கான நிதியில் 98 சதவீ தம் செலவீனம் மேற்கொண்டு துறை சிறப்பான சாதனை செய்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆதிதிராவி டர் துறையில் திட்ட ஒப்புதலுக்கான கோப்புகள் புதுச்சேரி, காரைக்கால் என தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டு வந்தன. நான் பதவியேற்ற பின்னர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இரு பிராந்தியங்களுக்கும் சேர்த்து ஒரே கோப்பில் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறும் வகை நடைமுறைப்படுத்தப்பட்டு நிர்வாகத் தாமதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டும் பிரத்தியேகமாக லைசென்ஸ் பெறும் வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ‘பிங்க் டே’ முறை அமல் படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் லைசென்ஸ் பெற்றுள்ளனர். இரண்டு இ-ஆட்டோக்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு துறை வாயிலாக இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த பண முடிப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய கலைமாமணி விருதுகள் 216 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த நேரு குழந்தைகள் விருது, கம்பன் புகழ் விருது, தொல்காப்பியர் இலக்கிய விருது ஆகிய விருதுகள் சமீபத்தில் 93 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன என்று தனது பணி தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் கருத்து மிகுந்த வேதனை அளிக்கிறது இந்த கடிதம் வெளியிட்டிருப்பது குறித்து சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எனக்கு அளிக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டேன். அதற்கான சான்றுகளைத்தான் இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.
ஆளுநர் பேசிய கருத்து மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. ‘பதவி வேண்டாம்’ என ராஜினாமா செய்துவிட்டேன். ஆனாலும் ஏன் எல்லோரும் இது போல பேசி வருகின்றனர் என புரியவில்லை. மிகுந்த மனக்கஷ்டத்தில் இருப்பதால் தற்போது கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
|
பழநி, கொடைக்கானலில் பரவலாக மழை: 4-வது முறையாக நிரம்பிய வரதமாநதி அணை | செய்திப்பிரிவு | கொடைக்கானல் | 2023-10-13 04:02:00 |
கொடைக்கானல்: பழநி, கொடைக்கானலில் விடிய விடிய மழை பெய்தது. வரதமாநதி அணை 4-வது முறையாக நேற்று நிரம்பி வழிந்தது.
பழநி, கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பழநியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதேபோல் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட மின்தடையால் கிராமங்கள் இருளில் மூழ்கின. தாண்டிக்குடி அருகேயுள்ள தடியன் குடிசை, கானல்காடு மலைக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில் பழமையான மரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக யாரும் செல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.
அந்த சாலையில் நேற்று காலை 9 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. தாண்டிக்குடி போலீஸாருடன், பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்பு போக்குவரத்து தொடங்கியது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மலைக் கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணி வரை கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 32 மி.மீ, பிரையன்ட் பூங்கா பகுதியில் 37.4 மி.மீ, பழநியில் 10 மி.மீ. மழை பதிவானது. கொடைக்கானலில் பெய்த மழையால் பழநியில் உள்ள பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் பழநி வரதமாநதி அணையில் (மொத்தம் 66.47 அடி) நீர்வரத்து அதிகரித்து, இந்த ஆண்டில் 4-வது முறையாக நேற்று நிரம்பி வழிந்தது.
|
தருமபுரியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - குடிநீரை காய்ச்சிப் பருக அறிவுறுத்தல் | செய்திப்பிரிவு | தருமபுரி | 2023-10-13 04:00:00 |
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்புக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை செயல்படும் சிறியதும், பெரியதுமான தனியார் மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக் காலம் என்பதாலும், குளிர்ச்சியான கால நிலை நிலவுவதாலும் தொற்று நோய்களான காய்ச்சல், சளி பாதிப்புகள் பலரையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மழைக் காலத்தில் வேகமெடுக்கக் கூடிய சில நோய்களை பரப்பும் வைரஸ்கள் சூழல் காரணமாக பல்கிப் பெருகுவதால் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த சிரமங்களை தவிர்க்க, குடிநீரை காய்ச்சிய பிறகே பருக வேண்டும். மேலும், முடிந்தவரை சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து முறைகளில் பயணிக்கும் போதும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல, நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு, இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதே முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே, முடிந்தவரை அதற்கு இடமளிக்காமல் சுற்றுப் புறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் சுயமாக சிகிச்சை பெறுவதை தவிர்த்து மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.
|
கடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து | செய்திப்பிரிவு | கடலூர் | 2023-10-13 00:50:00 |
கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல்.
தனியார் ரசாயன தொழிற்சாலையின் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அதிலிருந்து வெளியேறிய புகையினால் அப்பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது. துர்நாற்றம் வீசும் நிலையில் கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வேளாண் உற்பத்தி சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 90 நாடுகளில் வணிக ரீதியாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
#கடலூர் சிப்காட் டில் வெடி விபத்து #டாக்ரோஸ்
தற்போது #கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள டாக்ரோஸ் தொழிற்சாலையில் புதிதாக கட்டியுள்ள MPP பிளான்ட் இரண்டாவது தளத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு ரசாயன ரிக்டர் வெடித்தது இதன் காரணமாக அதிக அளவில் துர்நாற்றமும் pic.twitter.com/td1FW9COPk
|
“எழுத்தும் கருத்தும்...” - மதுரை புத்தகத் திருவிழாவில் பழனிவேல் தியாகராஜன் பேச்சு | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-12 23:01:00 |
மதுரை: ‘‘எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியனவற்றை உருவாக்கும் கருவிகள்’’ என்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. இந்த புத்தகத்திருவிழா வரும் 22ஆம் தேதி வரை நடக்கிறது. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை. பெரிய செல்வந்தராக இருந்து மறைந்தால் கூட நினைவு கூற ஆள் இருக்காது. ஆனால், திருவள்ளுவர் போன்ற எழுத்தாளர்கள் நீடித்து வரலாற்றில் யாரும் அழிக்க முடியாத பதிவை உருவாக்குவார்கள்.
யாருடைய எழுத்துக்கள் அப்படி நினைவில் இருக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும். பபாசி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கற்ற முறையில் இதனை நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி புதிய கருத்துகள் மற்றும் புதிய நோக்கங்களை உருவாக்க வேண்டும் எழுத்தும் கருத்தும் தான் சமூகத்தில் புதியவற்றை உருவாக்கும் கருவிகள் ஆகும்’’ என்றார்.
புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை குழந்தைகளுக்கான ‘சிறார் சினிமா’, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ‘கதை கதையாம் காரணமாம்’ போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அதேபோல, தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 5.00 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தினந்தோறும் மாலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ‘சிந்தனை அரங்கம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
|
மகப்பேறு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உறுதி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் | ஒய். ஆண்டனி செல்வராஜ் | மதுரை | 2023-10-12 21:35:00 |
மதுரை: தலைமைச் செயலகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் கர்ப்பணி பெண்கள், அடிக்கடி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பதாக சர்ச்சை எழுந்தது. கடைசியாக மூன்று கர்ப்பணி பெண்கள் உயிரிழந்ததாக நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
அவர்,நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் நுழைந்து விசாரிக்கவே, அதற்கு மருத்துவமனை மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகர்நல அலுவலர் வினோத், ஆட்சியர் சங்கீதா கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் விசாரணை மேற்கொண்டு, நகர்நல அலுவலர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்றும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமான அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘டீன்’ ரெத்தினவேலுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவர், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத் துறை செயலர் கவனத்துக்கு கொண்டு செல்லவே, சுகாதாரத்துறையை சேர்ந்த மூவர் குழு, நேரடியாக மதுரை வந்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்தவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்தவர்களிடம் விசாரித்தனர். அதிருப்தியடைந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது.
கடந்த ஒரு வாரமாக அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல் தமிழகம் முழுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் நிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.
அறுவை சிகிச்சை நிறுத்தினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டதால் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை செயலர் தலைமையிலான குழுவினர், தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் செந்தில், அதன் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மகப்பேறு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக உள்பட சில கோரிக்கைளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், சமுகமாக தீர்வு காணப்பட்டதாக கூறி உடனடியாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றனர்.
|
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 18,974 கன அடியாக உயர்வு | த.சக்திவேல் | மேட்டூர் | 2023-10-12 21:16:00 |
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,974 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. இதன் காரணமாக, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பாலாற்றில் நீ ர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நீர்வரத்து இன்றி வறண்ட காணப்பட்ட பாலாறு, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 122 கன அடியாக இருந்த நீர்வரத்து, 10ஆம் தேதி 163 கன அடியாகவும், 11ஆம் தேதி 2,528 கன அடியாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை 9,345 அதிகரித்தது. தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 18,974 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 31.31 அடியில் இருந்து 34.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டிஎம்சியில் இருந்து 9.34 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.
|
லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி, அமலாக்கத் துறை சோதனை @ கோவை | டி.ஜி.ரகுபதி | கோவை | 2023-10-12 20:57:00 |
கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (அக்.12) இணைந்து சோதனை நடத்தினர். அதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கோடிக் கணக்கில் பணம், தங்கம், வைரம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், லாட்டரி தொழிலில் கிடைத்த சுமார் ரூ.910 கோடியை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அவர் வாங்கி குவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மார்ட்டின் மற்றும் மேலும் சிலர் மீது வழக்குப் பதியப்பட்டது.
தொழில் அதிபர் மார்ட்டின் தொடர்புடைய சுமார் ரூ.451 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது. பின்னர், கடந்த மே மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன், குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடத்தினர். கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள, வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்தது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. 4 இடங்களில் நடந்த சோதனையில், அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். சோதனையின்போது பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் விபரங்களை வெளியிடவில்லை.
|
கோவையில் ஆ.ராசா பினாமி நிறுவன இடங்களுக்கு சீல் வைப்பு: அமலாக்கத் துறை நடவடிக்கை | டி.ஜி.ரகுபதி | கோவை | 2023-10-12 20:33:00 |
கோவை: கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான பினாமி நிறுவனத்தின் இடங்களுக்கு அமலாக்கத் துறையினர் இன்று (அக்.12) சீல் வைத்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு காலக்கட்டத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சுற்றுச்சூழலுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அதில் ஆ.ராசா எம்.பி ஆதாயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், ஆ.ராசா கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு விதிகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதும் தெரியவந்தது. அதற்கு பிரதிபலனாக கடந்த 2007-ம் ஆண்டு ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு மிகப் பெரிய அளவில் கமிஷன் வந்திருப்பதும், அதன்பின் அந்த பினாமி நிறுவனத்தை தன்னுடைய குடும்பத்தார் பெயரில் ஆ.ராசா இணைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கமிஷன் தொகையை வைத்தே பினாமி நிறுவனம் பெயரில் கோவையில் பல கோடி மதிப்பிலான 47 ஏக்கர் நிலத்தை ஆ.ராசா வாங்கி இருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் குற்றச்சாட்டினர். இதைத் தொடர்ந்து கோவையில் வாங்கியிருந்த அந்த சொத்துகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் 2022 விதிகளின்படி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கைப்பற்றி உள்ளோம் என அமலாக்கத் துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இவ்வாறு கண்டறியப்பட்ட 47 ஏக்கர் இடத்துக்கு சீல் வைக்கும் பணியை அமலாக்கத் துறையினர் இன்று (அக்.12) மேற்கொண்டனர். இதற்காக 3 பேர் அடங்கிய அமலாக்கத் துறையினர், நில அளவைத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் கோவையில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வருவாய் கிராமத்துக்கு வந்தனர்.
நில அளவைத்துறை அதிகாரிகள் மூலம் அந்த இடங்கள் முழுவதும் அளவீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு சொந்தமாக அங்கு 15 இடங்களாக இருந்த ரூ.5.85 கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் இடத்துக்கு சீல் வைக்கப்படுவதாக அறிவித்து, அங்கிருந்த பலகையில் அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
|
கொடைக்கானலில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை 5 ஆண்டுகளாக அகற்றாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி | என். சன்னாசி | மதுரை | 2023-10-12 20:30:00 |
மதுரை: கொடைக்கானல் மலையில் கடந்த 2018-ல் கஜா புயலால் சாய்ந்த மரங்களை இத்தனை ஆண்டாக அகற்றாதது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 95 குடும்பங்கள் விவசாயம் செய்கின்றனர். இந்த இடத்திற்கு பட்டா கேட்டு 1989-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். பட்டா வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை பட்டா வழங்கவில்லை. வனப்பகுதியில் இருந்து எங்களை வெளியேற்ற அதிகாரிகள் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.
எங்களது பட்டா கோரிக்கையை நிராகரித்து திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு பெற்றோம். தற்போது 95 குடும்பமும் தலா 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கிறோம். ஏராளமான மரங்களை இப்பகுதிகளில் வளர்த்துள்ளோம்.இந்நிலையில் 2018-ம் ஆண்டில் கஜா புயலின்போது, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததோடு, பல வீடுகளும் இடிந்தன. எங்கள் இடங்களில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.
இம் மரங்களை வெட்டி லாரிகளில் கொண்டுச் செல்ல விடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதன்மூலம் பாதிப்புக்களை சந்திக்கிறோம். எனவே, கஜா புயலால் சாய்ந்த 1500 மரங்களை வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு: கடந்த 1950-ம் ஆண்டிலேயே வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகள் தமிழக அரசுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுதாரர் தெரிவிக்கும் 1500 மரங்களும் வனத்துறை சார்பில், நடப்பட்டு பராமரிக்கப்பட்டது என வனத்துறை தெரிவிக்கிறது.
இருந்தாலும், 2018-ம் ஆண்டில் கஜா புயலால் விழுந்த 1500 மரங்களை இத்தனை ஆண்டாக அங்கிருந்து அகற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இவ்விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் புயலால் விழுந்த மரங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றுவது குறித்து வழக்கில் அனைத்து தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி மரங்களை அகற்ற 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
|
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து: அமைச்சர் உடனான பேச்சுக்குப் பின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 20:06:00 |
சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான டிட்டோஜாக் அறிவித்துள்ளது.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
பின்னணி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.
இதையடுத்து டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஆசிரியர்கள் முன்வைத்த 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அதற்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்கவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கூறினர். இல்லையெனில் திட்டமிட்டபடி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின், இந்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் | எஸ்.ஸ்ரீனிவாசகன் | மதுரை | 2023-10-12 19:54:00 |
மதுரை: மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் தரப்பில் , மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில், அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேரணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படையினர் காக்கி பேன்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழித் தடத்தில் பேரணியாக செல்ல அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் விரைவில் பட்டியலிடப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
|
ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு | என்.சன்னாசி | மதுரை | 2023-10-12 18:20:00 |
மதுரை: வரிச்சியூர் செல்வம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு: கடந்த செப்டம்பர் மாதம் சுகந்தா என்பவர், கூலி வேலைக்காக வெளியூர் சென்ற தனது கணவர் புவனேஸ்வரன் வீடு திரும்பவில்லை என விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனுதாரர் குறித்து எந்தவித தகவலும் இடம் பெறவில்லை. ஆனால், காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் என்னை வழக்கில் சேர்த்து கைது செய்கிறார்கள்.
மேலும், 5 ஆண்டாக தன் மீது எவ்வித புதிய வழக்குகள் பதியவில்லை. ஆள் காணவில்லை என கூறும் வழக்கில் எனக்கும் எவ்வித சம்பந்தம் இன்றி என்னை வழக்கில் சேர்த்து கைதாகி தற்போது சிறையில் உள்ளதால், எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, காவல் துறை தரப்பில், மனுதாரர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் களைக்கப்பட்டு வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
|
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் வாகன வரி குறைவு: அமைச்சர் விளக்கம் | கி.பார்த்திபன் | நாமக்கல் | 2023-10-12 18:16:00 |
நாமக்கல்: மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவு தான் என நாமக்கல்லில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் பங்கேற்றுப் பேசியது: “லாரி உரிமையாளர்கள் தெரிவித்த ஸ்டிக்கர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழக்குகள் தொடர்பாக லாரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் காவல்துறை தலைவரிடம் நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். அதன்பின் 25 சதவீதம் அப்பிரச்சினை குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து காவல் துறை தலைவரிடம் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
திண்டுக்கல் - அரவக்குறிச்சி சாலையில் திருட்டு, வழிப்பறி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் லாரி உரிமையாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நம்முடைய பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு உயர்த்தும் நோக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் அமையும்போது லாரி தொழில் பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வாகன வரி விதிப்பு என்பது 15 முதல் 23 ஆண்டுகள் வரை உயர்த்தப்படாமல் இருந்தது. ஒரு பக்கம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள வரி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. எனினும், கர்நாடகாவில் வாகன வரி குறைவாக உள்ளதாக கூறப்ப்பட்டது. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் சான்று, பதிவுச்சான்று, தகுதிச்சான்று பெறுவது தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட குறைவுதான். 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் குறைவாகத்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்த்தப்படாது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார். தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். பேட்டரியில் இயங்கும் பேருந்துக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றார். இந்த நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் கு.பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
|
கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் அசம்பாவிதங்களை தடுக்க விரைவுப் பணி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் | என்.சன்னாசி | மதுரை | 2023-10-12 18:13:00 |
மதுரை: கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த தமிழ்நேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரிகால மன்னால் கட்டப்பட்ட கல்லணை பல்வேறு டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை மற்றும் கறம்பக்குடி கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் 58 கிலோ மீட்டர் முதல் 92 கிலோ மீட்டர் வரை புனரமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கல்லணை கால்வாய் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணியை உதவி செயற்பொறியாளர் புஷ்பராணி மேலும் உதவி பொறியாளர் ஆனந்த ராஜ் இருவரும் செயல்படுத்துகின்றனர்.
கல்லணை கால்வாய் ஆற்றுக்கரையோரம் உள்ள ஈச்சங்கோட்டை, பாச்சூர், அய்யம்பட்டி, முதலிப்பட்டி, ஊரணிபுரம், ஆண்டிப்பட்டி, சென்னிய விடுதி மற்றும் ராங்கியன் விடுதி உள்ளிட்ட 17 பகுதிகளில் கரையிலுள்ள தடுப்பு இரும்பு வேலி கம்பிகளை காணவில்லை. கல்லணை கால்வாய் ஆற்று கரையில் பல உயிர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது. இனிமேல் நடக்காமல் தடுக்க இரும்பு தடுப்பு வேலி கம்பிகளை உடனே அமைக்க வேண்டும், இரும்பு கம்பி வேலிகளை அமைக்க நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, அரசுத் தரப்பில் கல்லணை கால்வாயின் பிரதான வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். அதற்கு பின்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
|
தமிழகம் முழுவதும் பால குருகுலங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-12 17:51:00 |
சென்னை: தமிழகம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த பால குருகுலத்தில் தங்கியுள்ள 26 சிறுமிகள் உள்பட 38 குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை. குருகுலத்தில் மாற்றுத் திறனாளித் குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. குருகுலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள குழந்தைகளை குடும்பத்துடன் இணைக்க வாய்ப்பு இருந்தால் அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட அந்த குருகுலத்தின் உரிமம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 38 குழந்தைகள் மீட்கப்பட்டு சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது சிபிசிஐடி தரப்பில், குருகுலத்தின் நிர்வாகிக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குற்ற வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணித்து, குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மீட்கப்பட்ட 38 குழந்தைகளை ஒப்படைக்க கோரி குருகுலம் தாக்கல் செய்த வழக்கில், ஏற்கெனவே உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது என அரசுத் தரப்பில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, அந்த மனுவை முடித்து வைத்தனர்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் இல்லை என்பதை தெரிவிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
|
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? - மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-12 17:04:00 |
சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நவம்பர் 8-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தாக்கல் செய்த மனுவில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து காலியாக உள்ளன. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. எனவே, ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பி, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
|
“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” - புதுச்சேரி முதல்வர் | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-12 17:03:00 |
புதுச்சேரி: “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த எத்திட்டத்திலும் பயன் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. காலாப்பட்டின் மிகப்பெரிய குறை இதுதான். பிள்ளைச்சாவடி பகுதிகளில் 2 மீ வரை தண்ணீர் வருகிறது. காலாப்பட்டில் கல் கொட்ட ரூ.56 கோடி செலவிட திட்டமிட்டு விரைவில் பணிகள் முழுவதும் நடந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர் ஆலோசனை கேட்டு பணிகளைத் துவங்க உள்ளோம்.
எப்பயனும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டத்தில் 70 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டன. படிப்படியாக ஒவ்வொரு தொகுதி தோறும் கொடுத்து வருகிறோம். மாதந்தோறும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். கேஸ் சிலிண்டர் மானியம் சிவப்பு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.300-ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ.150-ம் பதிவு செய்த பயனாளிகளுக்கு 19,100 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். மேலும், பதிவு செய்து வரும் 40 ஆயிரம் பேருக்கு அடுத்தக்கட்டமாக செலுத்தவுள்ளோம். பதிவு செய்யதால் மொத்தம் 1.7 லட்சம் பேருக்கு தரப்படும். சிலிண்டர் மானியம் தர ரூ. 8 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்.
அதேபோல் 200 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தியுள்ளோம். விபத்து காப்பீடு திட்டம் தொடங்கி விட்டோம். அடுத்த மார்ச் மாதம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே நான்கு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அந்நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி தருவார். நல்ல குடிநீர் கிடைக்கும். கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக இத்திட்டத்தை துவக்கவுள்ளோம்.
அறிவித்து செயல்படுத்த வேண்டிய திட்டமாக லேப்டாப் தரும் திட்டம் இருந்தது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். இறுதி செய்யப்பட்டு விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு தர வேண்டும். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.
|
“கலைஞனுக்கு அழுத்தம் தரக் கூடாது...” - காவிரி போராட்டம் குறித்து சரத்குமார் கருத்து | செய்திப்பிரிவு | திருச்சி | 2023-10-12 16:56:00 |
திருச்சி: கர்நாடகாவைப் போல தமிழகத்தில் நடிகர்கள் போராடுவதில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வேண்டியதில்லை. கலைஞனுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைப்பவன் நான்” என்று கூறினார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய நடிகர் சரத்குமார், “தமிழகத்தில் விவசாய சாகுபடிக்கு நீர்வரத்து தேவை. உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் கர்நாடக மாநிலம் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கிறது. அங்கே சாதகமான அரசு இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை. ஒரு நாட்டுக்குள் இந்தப் பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை என்பதுதான் கேள்வி. இதில் மத்திய அரசு தலையீட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்கள். அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
அவரிடம், ‘காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் நடிகர்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லையே?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்க்க வேண்டியதில்லை. இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இன்று பான் இந்தியா திரைப்படங்கள் உருவாகி எல்லா துறையினரும் கலந்து நடிக்கிறார்கள். கலைஞனுக்கு அழுத்தம் தரக் கூடாது என நினைப்பவன் நான். மிகப் பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றம், மத்திய அரசு கைவிட்டு சூழல் பெரிதாகும்போது வேண்டுமானால் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்” என்றார்.
|
கதிர்காமத்தில் நோயாளிகள் தவிப்பு: மருத்துவமனை தரத்தை மேம்படுத்துவாரா புதுச்சேரி முதல்வர்? | செ.ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2023-10-12 16:12:00 |
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக ரங்கசாமி இருந்த போது, ரூ.850 கோடி மதிப்பீட்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடந்தன. அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, கடந்த 2008-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.
பின்னர் நிதி நெருக்கடி காரணமாக இந்தமருத்துவக் கல்லூரி கட்டும் பணி கைவிடப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வைத்திலிங்கம், சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இதற்கான திட்ட மதிப்பீடு குறைக்கப்பட்டு, இந்த அரசு மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற, மீண்டும் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதன் பின்னர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது. இது மருத்துவக் கல்லூரி என்பதால் இங்கு மிகவும் பெரிய மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. அதன் பின்னர் புதுவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. அதிநவீன மருத்துவக் கருவிகள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனைக் கூடமும் இங்கு கொண்டு செல்லப்பட்டது.
மொத்தம் 40 ஏக்கரில் செயல்படும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 180 எம்பிபிஎஸ் மருத்துவ மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 200 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 700 எம்டிஎஸ் ஊழியர்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அவசர சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட பல சிகிச்சைப் பிரிவுகள் இங்குள்ள மருத்துவமனையில் உள்ளன.
இங்கு நாள்தோறும் தமிழகம், புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 700-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் இங்கு நோயாளிகள் அதிகம் வந்தனர். தற்போது இங்கு தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை என்று நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
முதல்வரின் முக்கியத்துவம்: இந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முதல்வர் ரங்கசாமி அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் அதிக நிதியையும் ஒதுக்கி தருகிறார். ஆனால் இங்குஇருக்கும் அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தால் இந்த மருத்துவமனையின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "முதல்வர் ரங்கசாமியின் கனவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இது. தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளது. இங்கு பணி செய்யும் மருத்துவர்கள் சிலர் வெளியே தனியாக கிளீனிக் வைத்து நடத்து கின்றனர்.
இங்கு வரும் நோயாளிகளுக்கு வெளியில் வைத்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான ‘கேன்வாஸ் மையமாக இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மதியத்துக்கு பிறகு வந்து பார்த்தால் முக்கிய சிகிச்சை கிடைப்பதில்லை. சில மருந்து, மாத்திரைகளை வெளியே வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்" என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இங்கு பணி செய்த ஊழியர் முத்துக்குமார் என்பவர் மின்கசிவை சரி செய்ய முயற்சி செய்த போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகினார். உடனே அவர் இங்கேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், போதுமான சிகிச்சை வசதிகள் இல்லை என மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கு வேலை செய்யும் ஊழியர்களே சிகிச்சைக்காக வெளியே செல்லும் நிலை உள்ளது.
மருத்துவமனையின் குறைபாடுகள் பற்றி ஆளுநர் தமிழிசையிடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கூட ஆளுநர் "அரசு மருத்துவர்கள் வெளியே சென்று சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிகை விடுத்தத்துடன் நிற்கிறது. இந்த நிர்வாக சீர்கேடு காரணமாக, நோயாளிகள் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். மாறாக அவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.
துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்: உள்நோயாளிகள் தரப்பில் கூறுகையில், “நோயாளிகள் வார்டுகளில் உள்ள கழிப்பறைகள் நாள்தோறும் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், மூக்கை பொத்திக்கொண்டே கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
சமீபத்தில், இங்கு 700-க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சரியாக பணிக்கு வருகின்றனர். அவர்களில் பலர் சரியாக பணி செய்கிறார்களா என்பதை முதலில் கண்காணிப்பது அவசியம்" என்கின்றனர்.
பெண் நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும்போது, தேவைப்படுவோருக்கு இசிஜி பரிசோதனைக்கு அனுப்புவது வழக்கம். இசிஜி அறை பெயரளவுக்கு துணியால் மறைக்கப்பட்ட ஒரு இடத்தில் உள்ளது. இது பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. அருகிலேயே ஊசி போட ஆண்கள் வரிசையாக நிற்கின்றனர்" என்கின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், "அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பின்புறம் புதர் போல காட்சியளிக்கிறது. மழைநேரங்களில் இந்தப் புதர்களில் இருந்து பாம்பு போன்ற விஷஜந்துகள் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்து விடுகின்றன.
மருத்துவமனை வளாகத்தின் ஓரப்பகுதிகளில் குப்பைகளை சரியாக அகற்றுவது இல்லை. தேங்கி கிடந்து, துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையின் பின்புறம் மற்றும் சவக்கிடக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
தங்க இடம் கிடைக்குமா? - உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் படும் பாடு அதிகம். அவர்கள் கூறுகையில், "நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்கள் தங்குவதற்கு என்று இடங்கள் எதுவும் கிடையாது. அரசு மருத்துவமனை என்றாலும் உடன் வந்தவர்கள் தங்க பெரிய வளாகம் ஒன்று கட்டப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை.
மருத்துவமனையின் முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடத்திலேயே தங்குகிறோம். இரவு நேரங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது" என்கின்றனர்.
மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எந்தெந்த துறைகளுக்கு எப்படிச் செல்வது என்பது பற்றிய அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி விவரங்களோ இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மேல்தளத்துக்கு செல்லும் சாய்தள பகுதிகள் பல மூடியே கிடக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 3.57 கோடி செலவில் உள் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ரூ. 67லட்சத்து 85 ஆயிரம் செலவில் மாணவர் விடுதி - ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் செலவில் மாணவிகள் விடுதி சீரமைக்கும் பணி ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அந்தப் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.
இதைத்தாண்டி, ஒட்டு மொத்தமாக வைக்கும் முறையீடு, மருத்துவமனையில் ஊழியர்கள் அனைவரும் பணியில் இருகின்றனரா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்
10 ஆண்டுகளாக நிரப்பப்படாத நிரந்தர செவிலியர் பணியிடங்கள்: இந்த மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அதிக பணிச்சுமையால் தவிப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் கூறுகையில், "30 உள்நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்தான் இருக்கிறோம். தற்போது 194 பேர் பணியில் உள்ளோம். இங்கு சர்ஜரி வார்டு 2, ஆப்ரேஷன் தியேட்டர் 1, அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளை கவனிக்கும் வார்டு 1, மெடிக்கல் வார்டு 2, பெண்கள் வார்டு 2, குழந்தைகள் வார்டு 2, ஐசியூ வார்டு 1, டயாலிசிஸ் வார்டு 1, எலும்பு சிகிச்சை வார்டு 1, புறநோயாளிகள் வார்டு 1, மனநோயாளிகள் வார்டு 1 என மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 18 செவிலிய அதிகாரிகள் பொறுப்பாளர்களாக உள்ளனர். வார்டுகளில் செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் அவசர விடுமுறையை கூட எடுக்க முடிவதில்லை.
10 ஆண்டுகளாக நிரந்தர செவிலிய அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு, தேவையான மருத்துவர்களை நியமிக்கிறார்கள். ஆனால் காலியாக உள்ள 200 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் பணிசுமை அதிகரித்துள்ளது" என்கின்றனர்.
|
காகர்லா உஷா மாற்றம்: பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளராக குமரகுருபரன் நியமனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 15:50:00 |
சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு: வணிக வரித்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான ஐஏஎஸ் அதிகாரி தீரஜ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலரான ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“சந்திர பிரியங்கா கூறும் காரணங்கள் ஒருபோதும் ஏற்க முடியாதவை” - புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் | அ.முன்னடியான் | புதுச்சேரி | 2023-10-12 15:28:00 |
புதுச்சேரி: “அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு, அவர் கூறியுள்ள காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
'என் மண் என் தேசம்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் வட்டாரத்துக்கு உட்பட்ட 39 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித அரிசி கலசமானது ஊர்வலமாக பாரதியார் பல்கலைக்கூடம் எடுத்து வரப்பட்டது. இதனை நேரு யுவகேந்திரா மூலம் தேசத்துக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் கலந்துகொண்டு புனித கலசங்களை வழங்கினார். இதில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. புதிய அமைச்சர் நியமனம் இலாகா மாற்றம் குறித்து முதல்வர் ரங்கசாமி முடிவு செய்வார்.
அமைச்சரவையில் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திர பிரியங்கா கூறும் காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சந்திர பிரியங்காவுக்கான முழு சுதந்திரத்தையும் முதல்வர் வழங்கினார்.
பாலினம் என்ற சொல்லே என்னை பொறுத்தவரையில் தவறானது. மூன்று முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆகவே, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் என்று அவர் கூறிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனை அவராகவே உருவாக்கி இருக்கின்றார். அதுபோன்று அவர் கூறியிருக்கக் கூடாது'' என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.
|
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன்ஜாமீன் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2023-10-12 15:03:00 |
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உத்தரவாத மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.த.செல்லபாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில், அரசின் செயல்பாட்டை விமர்சித்தேன். தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வேன் என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்தார்.
இந்த உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
|
காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ கருத்தரங்கு | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 14:17:00 |
சென்னை: கோடிகளை கொடுக்கும் சந்தன மரம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு பல்லடத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று காவேரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது: "தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பெரிய அளவில் நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி நிலத்தல் 50 சதவீத நிலம் மானாவாரி நிலமாகவே உள்ளது. இந்நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் பெற முடியும். சந்தனம், செம்மரம், கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டு வாகை, நாவல் போன்றவை மானாவாரி வளர்ப்புக்கு உகந்த மரங்களாகும். குறிப்பாக வறட்சியான நிலங்களில் சந்தனம் மற்றும் செம்மரம் நன்றாக வளர்கிறது, இம்மரங்களுக்கு அதிக நீர் தேவையில்லை. இம்மரங்கள் அதிக விலை மதிப்புடையவை என்பதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானம் நிச்சயம்.
கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்க உள்ளார்கள். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி R. சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் பங்கேற்க உள்ளார்கள். மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்குவார்கள்.
விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல், நதிகளின் நீர் ஆதாரம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளதால் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நட விவசாயிகளை ஊக்குவிக்குவிக்கிறது. இதுவரை ஈஷா ஏறக்குறைய 9 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 46 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் பலா சாகுபடி நுட்பங்கள், சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி போன்ற பயிற்சிகளையும் நடத்தியது.
சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள துரைசாமி ஐயா அவர்களின் சந்தனமரப் பண்ணையில் நடைபெற உள்ளது. மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும். காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்." இவ்வாறு அவர் கூறினார்.
|
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த நீலகிரி வரையாடு திட்டம்: சிறப்பு அம்சங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 13:55:00 |
சென்னை: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.12) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார்.
"வரையாடு" என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் "நீலகிரி வரையாடு" என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகளை "மவுண்டன் மோனார்க்" என்று அழைக்கிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில், நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பதினெண்மேல்கணக்கு நூல்களான நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி 1600-1700-இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து "குறத்தி மலை வளம் கூறல்" என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழகத்தில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துக்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு திட்டமானது, நீலகிரி வரையாடு பற்றிய எண்ணிக்கை, விநியோகம் மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குதல்; நீலகிரி வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்; நீலகிரி வரையாட்டுக்கு உள்ள அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல்; "நீலகிரி வரையாடு" இனங்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்கச் செய்தல்; நீலகிரி வரையாடு தினம் - 1975 இல் நீலகிரி வரையாடு பற்றிய முதல் ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஈ.ஆர்.சி டேவிதாரின் பிறந்த நாளான அக்டோபர் 7 ஆம் நாள் நீலகிரி வரையாடு தினமாக அவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
"நீலகிரி வரையாடு" உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல், வரையாடுகளின் வரம்பு முழுவதும் தரப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்துதல், நீலகிரி வரையாட்டினை மறு அறிமுகம் செய்தல் மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட வரையாடுகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், பணியாளர்களுக்கு கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், மேல் பவானியில் உள்ள சோலா புல்வெளியில் முன்னோடியான மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளுதல், சூழல் - சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் எல்லை போன்றவை குறித்த முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.
நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த திட்ட அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு முழு நேர முதல் திட்ட இயக்குனரையும் அரசு நியமித்து ஆணை வெளியிட்டு, பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு மூத்த விஞ்ஞானியையும் நியமனம் செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வீ. நாகநாதன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்ரமணியன், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் என்.ஜெயராஜ், நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த பிரவீன் சண்முகானந்தம் மற்றும் தனுபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
''தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு'' - என்கவுன்ட்டர் குறித்து ஆவடி காவல் ஆணையர் விளக்கம் | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2023-10-12 13:11:00 |
திருவள்ளூர்: குற்றவாளிகளான முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று, என்கவுன்ட்டர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். இந்நிலையில், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரெட்ஹில்ஸ் பகுதியில் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷ், இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படைக்கு இரண்டு குற்றவாளிகளும் இங்கு பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீஸார் இங்கு வந்தனர்.
குற்றவாளிகளிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தது. அந்த துப்பாக்கியால் குற்றவாளிகள் தனிப்படை போலீஸாரை நோக்கி சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காக காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் அவர்களை சுட்டதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷை போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இருவரது உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. குற்றவாளிகள் சுட்டதில் காயமடைந்த காவல்துறையினரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குற்றவாளி முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள் இருக்கின்றன. அவருடைய நெருங்கிய கூட்டாளிதான் சண்டை சதீஷ். இவர் மீது 5 கொலை வழக்குகள் இருக்கின்றன. இதுதவிர, பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவர்களின் முக்கியமான தொழில், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது. பணம் கொடுக்காதவர்களை மிரட்டி கொலை செய்வது. முத்து சரவணன் ஒரு கூலிப்படையின் தலைவர். இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் மற்றும் ரவுடி சதீஷ் என்று இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை தாக்கி தப்பிச் சென்றதை அடுத்து என்கவுன்ட்டரில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
|
''கோயில் விளைநில குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்'' - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 12:24:00 |
சென்னை: கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள், சில ஆண்டுகளாக குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, அந்த நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது. உழவர்களின் சூழலைப் புரிந்து அவர்களுக்கு உதவாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் பெயர்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அவற்றை அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு விவசாயம் செய்யப்படும் நிலங்களுக்கான குத்தகையாக அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லின் ஒரு பகுதியை வழங்குவார்கள். இது தான் காலம் காலமாக தொடர்ந்து வரும் நடைமுறை. இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.
கடந்த சில பத்தாண்டுகளில் ஒருசில ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள ஆண்டுகளில் கடுமையான வறட்சி மற்றும் அளவுக்கு அதிகமான மழையால் விவசாயம் சரி வர நடைபெறவில்லை. இன்னும் பல ஆண்டுகளில் இயற்கை சீற்றத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதனால் உழவர்களால் கோயில்களுக்கு குத்தகை நெல்லை வழங்க முடியவில்லை. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இழப்பால் தான் நெல்லை வழங்க முடியவில்லை. உரிய விளைச்சல் கிடைக்காத காலங்களில் உழவர்களால் குத்தகை வழங்க முடியாது என்பது தான் இயல்பு என்பதால், இயற்கைச் சீற்றக் காலங்களில் குத்தகை நெல் வழங்குவதை கோயில் நிர்வாகங்களே தாங்களாக முன்வந்து தள்ளுபடி செய்வது தான் இயற்கையான நீதியாக இருக்கும்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, குத்தகை நெல் செலுத்த முடியாத உழவர்களும், தங்களின் இயலாமையை காரணம் காட்டி, குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யுமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காத இந்து சமய அறநிலையத்துறையும், கோயில் நிர்வாகங்களும் குத்தகை நெல் பாக்கி வைத்துள்ள உழவர்களிடமிருந்து விளைநிலங்களை மீட்டு, பொது ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. கோயில் நிலங்களில் சாகுபடி செய்து, பேரிடர் காலங்களில் குத்தகை நெல்லை கூட அளக்க முடியாத நிலையில் உள்ள உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்டால் வாழ்வாதாரம் என்ன ஆகும்?
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில் மூன்றில் இரு பங்கு நிலங்கள், அதாவது 8 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள், கோயில் நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டால், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறமிருக்க, காவிரி பாசன மாவட்டங்களில் நெல் சாகுபடியிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதைக் கருதியாவது இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
உண்மையில் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களைக் காக்க வேண்டிய பெருங்கடமை திமுகவுக்கு உண்டு. கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திமுக மாநாட்டில், கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களின் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் இருமுறை ஆட்சிக்கு வந்த திமுக உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால், குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யத் தவறிவிட்டது. அது தான் உழவர்கள் எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களுக்கும் காரணமாகும்.
எனவே, கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு குத்தகை நெல் பாக்கி தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், குவிந்து கிடக்கும் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கோயில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை | வி.சுந்தர்ராஜ் | தஞ்சாவூர் | 2023-10-12 12:01:00 |
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.12) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதாகவும், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.அப்போது பலத்த காற்று வீச தொடங்கியதால், ட்ரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் பாதியில் ரத்து செய்து திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறை அலுவலர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்கின்றனர். இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
|
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன் | செய்திப்பிரிவு | சென்னை | 2023-10-12 11:47:00 |
சென்னை: "காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்துக்கு காவிரியில் அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்றார்.
அப்போது, நேற்றைய கூட்டத்திலும் தமிழகத்துக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தோம். என்ன காரணத்தால், 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 28.9.2023 முதல் அடுத்த 15 நாட்களுக்கு, 3000 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தனர். அது கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்டதால், 18 நாட்களில் 4,664 கனஅடி தண்ணீர் வந்தது.
நேற்று வரையில், தமிழகத்துக்கு 4.21 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. இன்னும் தமிழகத்துக்கு 0.4543 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது. எனவே, நாளைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க இருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த தண்ணீரை கா்நாடகா விட்டுக்கொண்டிருக்கிறது" என்றார்.
இன்னும் 110 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அணையை மீண்டும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போது 8 டிஎம்சிக்கு வந்துவிட்டது. இனிமேல் டெத் ஸ்டோரேஜ் வந்துவிடும். இனிமேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. காவிரியிலிருந்து 16,000 கனஅடி கொடுத்தால், அணையை திறக்க வாய்ப்பு இருக்கிறது. குடிதண்ணீருக்கு மட்டும் கொடுக்கப்படும்" என்றார்.
|
திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை | செய்திப்பிரிவு | திருவள்ளூர் | 2023-10-12 07:31:00 |
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
சோழவரம் - புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். கொலை வழக்கில் முத்து சரவணனை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்துள்ளனர். அப்போது காவலர்களை அவர் தாக்கியதாக தகவல். தொடர்ந்து தற்காப்பு ரீதியாக போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் முத்து சரவணன். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை - ஊரப்பாக்கம் அருகே இரண்டு ரவுடிகளை போலீஸார் என்கவுன்ட்டர் செய்திருந்தனர். நேற்று இரவு காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகாவை போலீஸார் மாமண்டூர் அருகே சுட்டுப் பிடித்தனர்.
|